Jump to content

பார்ப்பான மணிசங்கர் ஐயர்


Recommended Posts

பதியப்பட்டது

இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து, தமிழ் மண் யாழ்ப்பாணத்தில் தமிழர்களைப் பட்டினிச்சாவில் மடிய வைக்கும் இலங்கை ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தை எதிர்த்து தமிழ்நாட்டுத் தமிழ் மாநகர முதல்வர்கள் அனவரும் கட்சி வேறுபாடின்றி ராஜபக்ச தலைமை தாங்கும் மாநாட்டை ஒட்டு மொத்தமாக தவிர்த்துக் கொண்டார்கள். ஆயிரக் கணக்கான தமிழர்கள் ராஜபக்சவின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தி தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனரென இலங்கையின் சிங்களப் பத்திரிகைகள் எல்லாம் செய்தி வெளியிட்டதைப் பார்த்துப் பூரித்துப் போன ஈழத்தமிழர்களின் கண்களை உறுத்தியது வாயெல்லாம் பல்லாக மகிந்த ராஜபக்சவுடன் காட்சியளிக்கும் இந்தப் படம்.

ஈழத்தமிழர்களின் வாழ்வில் அமைதி நிலவ வேண்டும், ஈழத்தமிழர்களுக்கு இன்னல் விளைவிப்பவர்களை எதிர்ப்பதில் தமிழ்நாடு முழுவதும் சாதி, சமய, கட்சி வேறுபாடின்றி ஒன்று படுவோம் என முழுத் தமிழகமும் ஒன்று பட்டு நிற்கும் போது, ஒரேயொரு தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர், அதுவும் தமிழ்நாட்டில் தமிழ் கொஞ்சும், தமிழ் வளர்த்த, "கரவின்றி நன்மாமலர் கொண்டே இரவும் பகலுந் தொழுவார்கள் சிரமொன்றிய செஞ்சடையான்வாழ் வரமாமயிலாடுதுறையின்" தமிழர்களின் உறுப்பினர் மட்டும் மகிந்தவை வரவேற்கப் போகின்றாராம், மகிந்தவுடைய நட்பும், அவருடன் காட்சியளிக்கும் புகைப்படமும், தமிழர்களின் உணர்வை மதிப்பதை விட முக்கியமானதாக மணிசங்கரனின் சிந்தனைக்குப் புலப்பட்டுள்ளது.

இந்தச் செயலிலிருந்து அவர் உலகத் தமிழர்களுக்குக் கூற முயல்வதென்ன? நாங்கள் பார்ப்பனர்கள் தமிழர்களல்ல, உலகத் தமிழர்கள் எக்கேடு கெட்டாலும் எங்களுக்குக் கவலையில்லை, தமிழ் நாட்டிலிருந்து நான் பாராளுமன்றத்துக்குப் போனாலும் அந்தத் தொகுதியிலுள்ள தமிழர்கள் தமது உலகத்தமிழ்ச் சகோதரர்களின் மேல் வைத்துள்ள உணர்வுகளை மதிக்கப் போவதில்லை, தமிழ்நாடு முழுவதும் ஒன்றுபட்டு எதிர்த்தாலும் நாங்கள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் நமது நலன்களை, நம்மவாள் செய்வதைப் பார்த்துத் தான் செய்வோம். பார்ப்பன இந்து ராம், துக்ளக் சோ போன்றவர்கள் ஈழத்தமிழர்களை எதிர்த்து சிங்களவர்களுடன் சோரம் போவதை யாவரும் அறிவர்.

இவர் தன்னுடைய செயலால், இன்று சிங்களவர்கள் எல்லாம், தமிழ்நாடு முழுவதும் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கவில்லை, அவரை வரவேற்கப் போனதே தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் தான், அவருக்கு மகிந்தவுடன் தனிப்பட்ட நட்புண்டென்றெல்லாம் எழுத வைத்துத் முழுத்தமிழ்நாட்டுத் தமிழர்களும் காட்டிய எதிர்ப்பை பிசுபிசுக்க வைத்து விட்டார். அப்படியென்றால் தமிழர்களின் இக்கட்டான வேளையிலும் பார்ப்பனர்கள் தமது சொந்த நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு, தமிழர்களுடன் ஒன்று படாமல் தமது சொந்த நடவடிக்கையை மேற்கொண்டு தொடர்ந்து தமிழர்களின் முதுகில் குத்துவார்கள் என்பது தான் கருத்தா?

மணிசங்கர ஐயர் அமைச்சர் என்ற முறையில் இலங்கை ஜனாதிபதியை வரவேற்கச் சென்றாரெனச் சிலர் பம்மாத்து விடலாம். எந்த நாட்டிலும் அமைச்சருக்கு இப்படியான வரவேற்புச் செயல்களை மறுக்கும் உரிமையுண்டு, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முதல் கடமை தன்னைத் தெரிவு செய்த அந்த தொகுதி மக்களின் கருத்துக்களைப் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவது தானே தவிர தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களையல்ல. அப்படியென்றால் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை தொகுதி மக்கள் ஈழத்தமிழர்களை எதிர்த்து, இலங்கை ஜனாதிபதியை ஆதரிப்பவர்களா? மயிலாடுதுறைத் தமிழர்களின் மனப்பாட்டை, அவர்கள் ஈழத்தமிழர்களின் நலன்களில் உள்ள அக்கறைக்கு எடுத்துக்காட்டாக மகிந்தவை வரவேற்பதை இவர் மறுத்திருக்க வேண்டாமா? தமிழ்நாட்டின் மத்திய அமைச்சர்கள் பலரும் இந்த வரவேற்பைத் தவிர்த்திருக்கும் போது பார்ப்பன மணிசங்கரன் மட்டும் சம்மதித்தன் மர்மம் என்ன?

எந்த நாட்டிலும் இன்னொரு நாட்டு ஜனாதிபதி வருகை செய்தால் பிரதமருக்கு முடியாது விட்டால் துணைப்பிரதமர் அல்லது வெளிநாட்டமைச்சர் அல்லது பாதுகாப்பு அமைச்சர் சென்று வரவேற்பது தான் வழக்கம், வெறும் இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை அமைச்சர் மணிசங்கர ஐயர் சென்று மகிந்த ராஜபக்சவை வரவேற்றார்.எதற்காகவென்றால் இந்த எதிர்ப்பில் தமிழ்நாடு ஒற்றுமையாக இல்லை, நானும் தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் தான் என்று காட்டுவதற்காக மணிசங்கர ஐயர் சென்றார். இவரும் தமிழ்நாட்டு எதிர்ப்பை ஒற்றுமையாகக் காட்டும் வகையில் இலங்கை ஜனாதிபதியை விமானநிலையத்தில் சென்று வரவேற்பதை மறுத்திருக்கலாமல்லவா?

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தமிழர்களின் முதுகில் மீணடும், மீண்டும் குத்துவது "ஒன்றும் மறியாமையுயர்ந்த வென்றியருளானவனூராம் மன்றன் மயிலாடு துறையாளும் சிவனுக்கே பொறுக்காது.

http://www.unarvukal.com/forum/index.php?s...ic=2606&hl=

  • Replies 88
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று மத்திய அமைச்சராக இருக்கும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர், ராஜபக்சவை வரவேற்றிருப்பதோடு தனது மகள் திருமணத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக மக்கள் ராஜபக்சவின் வருகையை எதிர்ப்பது மணிசங்கருக்குத் தெரியாதா? அவரின் ஆணவத்தை விடுதலைச் சிறுத்தைகள் கடுமையாக எதிர்க்கிறது.

http://www.eelampage.com/?cn=29954

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வரும் நாட்களில் இந்திய அரசிலிருந்து காய்களை நகர்த்தப் போகிறவர் இவர்தானோ?எப்பவோ செத்துப் போன பஞசாயத்தை தூசி தட்டி எடுத்துக் கொண்டுவாறார் தமிழ் நாட்டு அரசியல்வாதி.தமிழ் நாட்டில் இருந்து என்னதான் செய்யப் போகினம் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மணிசங்கருக்கு எதிராக் திருமாவளவனின் எதிர்ப்பு http://www.maalaisudar.com/2611/hed_news_5.shtml

Posted

மணிசங்கருக்கு எதிராக் திருமாவளவனின் எதிர்ப்பு http://www.maalaisudar.com/2611/hed_news_5.shtml

Mr.manisangara Iyar,he is not a RAWs agent.they reroute to wrongway to the RAW and indra congras too.Because parpaniers has cast ego(saathiverry)from subramaniyabarathies time.that is the reason he is again to us.but everybody had big blanket.that Ragive death.but Raw and most of the politition knows when?why?how?from who?Mr.rajivs death happened.all is politics.anyway firstday heading that is a news.second day you said the truth on the corner nobody can't see it. we will wait and see.........(I am sorry,because I am not ready to write in tamil now.very soon I will write in tamil)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மணிசங்க ஜயர் தொடர்ந்து தமிழின விடுதலைக் எதிராகச் செயற்பட்டு வரும் ஒருவர். இந்திய சார்பான இலங்கையில் நடக்கும் கூட்டங்களில் அவர் பல தடவை பங்குபற்றி, தன் தமிழின வெறுப்பைக் காட்டியுள்ளார்.

-----------------

இங்கே, பார்ப்பான என்ற சொல்லை போடுவதை வன்மையாக வெறுக்கின்றேன். ஜெயக்காந்தன் பல தடவைகள் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், புலிகள் அழிய வேண்டும் என்றும் பல தடவை பேசியிருக்கின்றார். அதற்காக கம்னூசிய வெறியன் ஜெயக்காந்தன் என்று தலைப்பு போடுவீர்களா என்ன?

Posted

மணிசங்க ஜயர் தொடர்ந்து தமிழின விடுதலைக் எதிராகச் செயற்பட்டு வரும் ஒருவர். இந்திய சார்பான இலங்கையில் நடக்கும் கூட்டங்களில் அவர் பல தடவை பங்குபற்றி, தன் தமிழின வெறுப்பைக் காட்டியுள்ளார்.

-----------------

இங்கே, பார்ப்பான என்ற சொல்லை போடுவதை வன்மையாக வெறுக்கின்றேன். ஜெயக்காந்தன் பல தடவைகள் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், புலிகள் அழிய வேண்டும் என்றும் பல தடவை பேசியிருக்கின்றார். அதற்காக கம்னூசிய வெறியன் ஜெயக்காந்தன் என்று தலைப்பு போடுவீர்களா என்ன?

தூயவன், பார்ப்பனிய பயங்கரவாதம் எனும் பதம் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டு இடதுசாரிப்போக்கு கொண்டவர்களால் முன்வைக்க படுகிறது.நாள்தோறும் தொல்லை, நயவஞ்சகப்போக்கு, சூழ்ச்சி வலை இவ்வளவுக்கும் இடையில்தான் தமிழ் மக்கள் அரசியல் செய்து வருகிறார்கள்

ஈழத்து நிலைமையோடு தமிழ்நாட்டை இணைத்துப்பார்த்து குழப்பிகொள்ளாதீர்கள்.

அப்படி அழைப்பது அவர்களை ஒரு தனி இனமெனக்காட்டவே. மராட்டியன் கன்னடன், மலையாளி,தெலுங்கன்,தமிழன் என்று இங்கு இருக்கும்போது விடாப்பிடியாக தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொண்டு பிற தேசிய இனங்களை ஓடுக்குவதிலும் இவர்கள் முனைப்பாக இருப்பார்கள்.

ஒரு சுலபமான உதாரணம் தருகிறேன். தமிழ்நாட்டில்,ஏன் இந்தியாவில் ஈழப்பிரச்சினையில் நேர்மையான நிலைப்பாடுகொண்ட ஒரு பார்ப்பனரையாவது காட்டுங்கள் பார்ப்போம். சு.சாமி,சோ,ராம்,மணிசங்கரன் இப்படி அவர்கள் எல்லோரும் அவாள்களே.

இது சாதி வெறுப்பல்ல என் இனத்தை ஒடுக்கும் ஆதிக்க இனத்தை இனம் கண்டு கொண்டதால் வந்த சீற்றமே.

இந்த பார்ப்பன கும்பல்களால்தான் ஈழவிடுதலைக்கு எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டன எனக்கேட்டறியுங்கள். தன் இனம் அல்லலுறுதல் கண்டு அதற்காக குரல்கொடுத்த தமிழர்களை குரல்வளை நெரித்த கும்பல் எப்படி தமிழ்ச்சாதிக்குள் வரமுடியும்.

Posted

நன்றி செந்தில் இதுபற்றி உங்களைப் போன்றவர்கள் மேலும் எழுதுவது அவசியம்.எவ்வாறு ஈழப்பிரச்சினை பற்றி பல தமிழ் நாட்டுத் தமிழர்கள் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ, அவ்வாறே இந்தப் பார்ப்பனீயம் பற்றி பல ஈழத்தமிழர்கள் தெளிவில்லாமல் இருகிறார்கள்.இவர்கள் பார்ப்பனர்களை ஈழத்தில் இருக்கும் பிராம்ணர்களொடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் எதோ பெரியார் ஆரிய வெறியர் பார்ப்பன வெறியர் என்று தமிழ் நாட்டு பார்ப்பனர்கள் செய்யும் நாசுக்கான பிரச்சாரத்தை இலகுவில் நம்பி விடுகின்றனர்.

தமிழ் நாட்டில் பார்ப்பனீயத்தின் அடக்குமுறை அதன் அதிகாரம் எவ்வாறு இருந்தது இருக்கிறது அதற்கு எதிராக ஏன் பெரியார் போராடினார் என்பவற்றை மேலும் விரிவாக எழுதுங்கள்.

Posted

நீங்கள் அவரை இப்படியாக திட்டுவது சரியில்லை.

இங்கு அவருடைய வம்சத்தில் உதித்தவர்கள் நிறைய பேர் இருக்கினம் அவர்களுக்கும் ஆத்திரம் வரத்தான் செய்யும் என்று உங்களுக்குத் தெரியாதா?

பார்ப்பானிய பயங்கரவாதத்திற்கும் சிங்கள பேரினவாத பௌத்த பயங்கரவாதத்திற்க்கும் எந்தவிதமான வித்தியாசமுமில்லை - தமிழரின் அடையாளத்தை இன மொழி மத கலாச்சார ரீதியாக அழித் தொழிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்கள்.

Posted

அத்தோடு மகிந்தவையும் சரத் பொன்சேகாவையும் சிங்களவர் என்று கூறுவதையும் தயவு செய்து தவிருங்கள் ஏனெனில் எல்லாச் சிங்களவரும் தமிழருக்கு எதிரானவர்கள் கிடையாது.

சிங்களப்பேரினவாதம் என்பது தமிழ் இன வெறியர்களின் வெறி.எமக்கு உள்ள பிரச்சினை சில தனி மனிதர்களோடு மட்டுமே.

Posted

நாரதர் அவர்களே,

"சிங்களப்பேரினவாதம் என்பது தமிழ் இன வெறியர்களின் வெறி."

என்பது,

"சிங்களப்பேரினவாதம் என்பது சிங்கள இன வெறியர்களின் வெறி."

என்று வரவேண்டும் என நினைக்கிறேன்?

மேலும் உங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்கிறேன்.

சில சிங்களவர்கள் எம்மையும் விட மிகவும் நல்லவர்களாக அன்பானவர்களாக (அரசியல் பற்றிக் கதைக்காதவரை) இருப்பதை காண்கின்றேன். புலிகளும் இதனைப் புரிந்து கொண்டுதான் இப்போது செயற்படுகின்றனர். அவ்வாறே பல சிங்களவர்களின் மனங்களையும் வென்றுள்ளனர். உதாரணம் தேசமான்ய லலித் கொத்தலாவல அவர்கள். அவர்களுக்கு உள்ள பிரதான பிரச்சனை உண்மையான செய்திகள் அவர்களை சென்றடைவதில்லை. அணமையில் கூட ஒருவர் என்னிடம் கேட்டார் தமிழ்செல்வனுக்கும் பிரபாகரனுக்கும் சண்டையாம் என்று. ஏனெனில் அது திவயினவில் முன்பக்கச் செய்தியாக வந்திருந்ததாம்.

Posted

இல்லை சரியாகத் தான் எழுதி உள்ளேன்,

பார்ப்பனீயம் என்பது பெரியார் போன்ற சில ஆரிய இன வெறியர்களின்

கற்பனை என்பதைப்போல், சிங்கள பேரினவாதம் என்பதுவும் சில தமிழ் இன வெறியர்களின் கற்பனை.மகிந்த சரத் பொன்சேக போன்ற ஒரு சில சிங்களவர்கள் தமிழருக்கு எதிராக சில நடவடிக்கைகளில் இறங்கி இருக்கலாம் அதற்காக ஒட்டு மொத்த சிங்கள இனமுமே பேரின வாத நோக்கில் தமிழர்களை அடக்குகிறது என்று எவ்வாறு நீங்கள் கூற முடியும்?

சிங்கள இன வெரியின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபாகர்ன் ஒரு விடுதலை வீரனாகத் தெரியலாம், அதே போல் பார்ப்பனீயத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரியார் ஒரு விடுதலை வீரராகத் தெரியலாம் மற்றவர்களுக்கு எப்படி அப்படித் தெரியும்?

அடக்கு முறைக்கு உட்பட்ட மக்களுக்குத் தானே அடக்குபவன் யார் அதற்கு எதிராகக்குரல் கொடுப்பவன் யார் என்று தெரியும்? மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?

Posted

நாங்கள் எவ்வாறு தமிழ் நாட்டுத் தமிழர்களிடம் இருந்து சிங்கள பேரினவதத்திற்கு எதிரான எமது நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு கோருகிறோமோ, அதே போல் பார்ப்பனீயத்திற்கு எதிரான தமிழ் நாட்டுத் தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக நாம் இருக்க முடியாது.

பாக்கு நீரணைக்கு அங்காலும் இங்காலும் தமிழர்களை அடக்கும் எந்தச்ச் சித்தாந்தையும் எதிர்க்கும் உணர்வு இரு பக்கத்திலும் இருக்கும் தமிழருக்கும் வேண்டும்.தமிழர்களின் ஒன்று பட்ட செயற்பாடே எமக்கான விடுதலைப் பெற்றுத் தரும்.

பெரியாரும் பிராபகரனும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.(இது எனது கருத்து.)

ஒருவர் சிந்தனையாளர் மற்றவர் செயற்பாட்டாளர்.தமிழர்களின் துரதிஸ்ட்டம் இவர்கள் இருவரும் ஒரே காலத்தில் இருக்க வில்லை என்பதே.

அப்படி இருந்திருந்தால் உலகில் இன்று தமிழர்கள் எங்கோ சென்றிருப்பார்கள்.

Posted

தலைவரின் மாவீரர் உரை எதிர் பார்ததைப்போலவே போராட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கான அறைகூவலாக இருக்கிறது.அவர் புலத்தமிழர்களிடமும் தமிழ் நாட்டுத்தமிழர்களிடமும் போராட்டத்திற்க்கான எமது தொடர்ச்சியான ஆதரவைக் கோரி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாரதர் அண்ணா!

ஒரு இனத்தால் வஞ்சிக்கப்பட்டதற்காக தலைவர் சிங்கள மக்களும் வஞ்சிக்கபட வேண்டும் என்றும் நினைத்ததும் இல்லை செய்ததும் இல்லை. ஆனால் பெரியார் பிராமணத்துவம் செய்ய தப்பை, தானும் செய்ததன் மூலம், பிராமணிகளுக்கும் தனக்கும் இடையில் வேறுபாடில்லை என்று காட்டுகின்றார்.

எனவே, தலைவரை அந்த தெலுங்கனோடு ஒப்பீடு செய்து அவமானப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன். தலைவரின் உரையும், அதன் பின்னர் வரும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இத் தலைப்பில் தொடர்ந்து விவாதிப்பதில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருக்கின்றேன். இந்த நேரத்தில் தலைவரைச் சிறுமைப்படுத்த யாரோடும், இனவெறியர்களோடும் ஒப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Posted

நாரதர் அண்ணா!

ஒரு இனத்தால் வஞ்சிக்கப்பட்டதற்காக தலைவர் சிங்கள மக்களும் வஞ்சிக்கபட வேண்டும் என்றும் நினைத்ததும் இல்லை செய்ததும் இல்லை. ஆனால் பெரியார் பிராமணத்துவம் செய்ய தப்பை, தானும் செய்ததன் மூலம், பிராமணிகளுக்கும் தனக்கும் இடையில் வேறுபாடில்லை என்று காட்டுகின்றார்.

எனவே, தலைவரை அந்த தெலுங்கனோடு ஒப்பீடு செய்து அவமானப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன். தலைவரின் உரையும், அதன் பின்னர் வரும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, இத் தலைப்பில் தொடர்ந்து விவாதிப்பதில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருக்கின்றேன். இந்த நேரத்தில் தலைவரைச் சிறுமைப்படுத்த யாரோடும், இனவெறியர்களோடும் ஒப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அன்பின் தூயவன், நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்கு ஆதரவாக பேசுவதாக எண்ணி தரம் தாழ்ந்து போகதீர்கள். கருத்தாடுபவர்க்கு நிதானம் மிக முக்கியம். பெரியார் வழி வந்தவர்கள் இதைவிட ஏச்சையும் பேச்சையும் பார்த்தவர்கள் தான் சகோதரரே.

வாதிட வருமுன் கொஞ்சம் அவரை படித்துவிட்டு வாருங்கள். ஒற்றைக்கண்ணால் உலகை பார்க்கதீர்கள்

Posted

தூயவன் பெரியார் ஒரு கன்னடர் தெலுங்க்கர் இல்லை.இதை முன்னரும் களத்தில் ஒருவர் உங்களுக்குச் சுட்டிக்காட்டி இருந்தார். நீங்கள் எந்தக் கருத்தையும் உள்வாங்கியதாகாத் தெரியவில்லை.மீண்டும் மீண்டும் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று தான் கூறி வருகிறீர்கள்.பெரியாரும் பிராமணியத்தைத் தான் எதிர்ப்பதாக்கூறினாரே தவிர பிராமணர்களை அல்ல.

எமக்கு எவ்வாறு தலைவரை தரங்கெட்ட வகையில் எழுதினால் கோவம் வருகிறதோ அவ்வறே பெரியாரை நீங்கள் எழுதினால் தமிழ் நாட்டின் பல லட்ச்சம் தமிழருக்கும் கோவம் வரும் என்பதை புரிந்து நிதானமாக எழுதுங்கள்.பாக்கு நீரணையின் இரு மருங்கிலும் தமிழர்களை ஒன்று படுத்த நாம் பாடுபட்டு வருகிறோம்.இதனை உங்கள் அறிவிலித்தனத்தால் கெடுக்காதீர்கள்.

பெரியாரும் பிராபகரனும் எனக்கு ஒன்றே என்று தான் எழுதி உள்ளேன் எலோருக்கும் அல்ல.உங்களின் கருத்து வேறாக இருக்கலாம் அதற்காக எழுதுவதை நிதானமாக எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது புரிகின்றதா? நீரும், வேறு சிலரும் இங்கே இங்கு மதத்தைச் சிறுமைப்படுத்தும், மற்றவர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாக எத்தனை கட்டுரை இணைத்திருப்பீர் என்று. அப்போது மத நம்பிக்கையுள்ளவர்களுக்கு எப்படி வலிக்கும் என்று.

மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் என்று நினைத்திருந்தால் அந்த வேலையை நாரதர் செய்திருக்கமாட்டீர்கள். உங்களுக்கு மட்டுமே வலியிருக்கும் என்று நினைக்காதீர்கள்.

நாயிடு என்பது தெலுங்கர் தான் பாவிப்பதாக அறிந்திருக்கின்றென். கன்னடர்களுக்கு உரித்து என்று அறியவில்லை.

உங்களின் கொள்கையை, உங்களின் திராவிடத்தை நீங்கள் வளர்ப்பதை என்றைக்குமே இங்கு நான் எதிர்த்தது கிடையாது. ஆனால் இந்து மதத்தை பாசியம், பன்னாடை என்று வார்த்தை போட்டுக் கதைக்காதீர்கள் என்றால் நீங்கள் செவிமடுக்கவில்லை.

இப்போது வலிக்கும், நோகும் என்றால் யார் பொறுப்பு!

என்னைப் பொறுத்தவரைக்கும், பெரியார் மதிக்க கூடிய தலைவர் கிடையாது. அவரது அணுகு முறைகள் பிழை என்பதே என் கருத்து.

உங்களுக்கு இந்து மதம் மதிக்க கூடிய நிலையில் இருந்து விலத்துமாயின், தான் இந்த வெறியர்கள் பற்றிக் கதைத்து தான் ஆக வேண்டும். மற்றவர்களை விருப்பங்களை நீங்கள் மதிக்கும் வரை, தான் உங்களின் கொள்கைக்கு மதிப்பு!

இந்தப் பிரச்சனையை நீங்களாக வரவழைத்தது. இங்கே பாப்பாணர்கள் என்று நீங்கள் குத்தும் ஆட்களின் கட்டுரையை இது வரை காலமும் யாரும் போட்டதில்லையே! அவ்வாறே, திராவிடத்துவம் என்ற அதே சிந்தனையுடையவர்களின் கட்டுரையும் அவசியமற்றது என்றே கருதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமக்கு எவ்வாறு தலைவரை தரங்கெட்ட வகையில் எழுதினால் கோவம் வருகிறதோ அவ்வறே பெரியாரை நீங்கள் எழுதினால் தமிழ் நாட்டின் பல லட்ச்சம் தமிழருக்கும் கோவம் வரும் என்பதை புரிந்து நிதானமாக எழுதுங்கள்.பாக்கு நீரணையின் இரு மருங்கிலும் தமிழர்களை ஒன்று படுத்த நாம் பாடுபட்டு வருகிறோம்.இதனை உங்கள் அறிவிலித்தனத்தால் கெடுக்காதீர்கள்.

பெரியாரும் பிராபகரனும் எனக்கு ஒன்றே என்று தான் எழுதி உள்ளேன் எலோருக்கும் அல்ல.உங்களின் கருத்து வேறாக இருக்கலாம் அதற்காக எழுதுவதை நிதானமாக எழுதுங்கள்.

அது அறிவீனம் என நினைக்கின்றீர்கள். நீங்கள் பாக்குநீரினைக்கு அப்பால் உள்ள தமிழர்களைத் தான் நினைக்கின்றீர்கள். நான் இந்திய சமுதாயம் முழுக்க ஆதரவாக வர வேண்டும் என நினைக்கின்றேன்.

ஆனால் பெரியாரின் கருத்துக்களுக்கு, இங்கே புகழராம் சூட்டினால், தமிழர்களை ஒன்றுபடுத்தலாம் என்று நீங்கள் நினைப்பது தவறாகும். சிந்தனையாளர்களாகவே இருந்து விட்ட திராவிடம், இதே சிந்தனையோடு தான் வாழ வேண்டி வரும்.

தமிழக மக்களாகவே தங்களுக்கு எழுச்சி வரவேண்டும் என்று சிந்திப்பதே சிறப்பானது. அவ்வாறு அவர்களாக எழுந்தால் ஆதரவளிக்க வேண்டியது எம் கடமை. ஆனால் நீங்கள் போய்த் தமிழ்நாடு பிரிய வேண்டும் என்றால் அது ஈழநாட்டின் விடுதலைக்கான காலத்தைக் கூட்டும் என்பதே உண்மை.

Posted

தூயவன் நான் எழுதாததை எழுதியதாகக் கூறியது முதலில் உண்மைக்குப் புறம்பானது.எங்கே நான் பன்னாடை என்கிற வார்த்தையை பாவித்துள்ளேன் என்று கூற முடியுமா?

மேலும் இந்துதுவாக் கொள்கைகள் ஏன் பாசிசம் ஆகக் கருதப்படுகின்றன என்பதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வெறுப்பில் எழுதுகிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.இவாறான எழுதுக்களால் தீர்வுகள் ஏற்படப் போவதில்லை. நீங்களும் கருதுக்களை உள்வாங்க்கப் போவதில்லை.

பெரியாரைத் தரங்கெட்ட வார்தைகளல திட்டிக் கொண்டு இந்தியா உங்கள் ஆதரவுக்கு வரும் என்ரு நீங்கள் கருதுவது இந்தியா பற்றிய உங்கள் புரிதல் எவ்வளவில் இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு. நீங்கள் எழுதுவது அவதூறுகள் எதுவும் எனக்கு வலிக்காது ,ஏனில் அது உங்கள் சிந்தனையின் எல்லை என்றே கருதுவேன்.இந்து மதத்தை விமர்சிப்பதுவும் ஒரு தலைவரை வசை பாடுவதும் ஒன்றல்ல.அவரின் கருதுக்களை கொள்கைகளை விமர்சிக்கலாம்.இந்து மதம் என்பது ஒரு கோட்பாடு ,அதனை அதன் கோட்பாடுகளின் அடிப்படையிலையே விமர்சிக்கப் பட்டது.அதற்காக அவதூறுகளை பதிலுக்கு எழுத வேண்டும் என்றால் எழுதிக் கொள்ளுங்கள்,அதன் மூலம் உங்கள் வலி தீரும் என்றால்.ஆனல் உங்கள் சிந்தனை வளரப் போவதில்லை.இந்து மதததின் வர்னச்சிரமத்தின் கோட்பாடுகள் இதனால் மீளப்போவதில்லை.

Posted

தமிழ் நாடு பிரிய வேண்டும் என்று நான் எங்கே எழுதி உள்ளேன்.எழுதாதவற்றை எழுதியதாக்கூறி பதில் எழுத வேண்டாம்.

Posted

தூயவன், பார்ப்பனிய பயங்கரவாதம் எனும் பதம் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டு இடதுசாரிப்போக்கு கொண்டவர்களால் முன்வைக்க படுகிறது.நாள்தோறும் தொல்லை, நயவஞ்சகப்போக்கு, சூழ்ச்சி வலை இவ்வளவுக்கும் இடையில்தான் தமிழ் மக்கள் அரசியல் செய்து வருகிறார்கள்

ஈழத்து நிலைமையோடு தமிழ்நாட்டை இணைத்துப்பார்த்து குழப்பிகொள்ளாதீர்கள்.

அப்படி அழைப்பது அவர்களை ஒரு தனி இனமெனக்காட்டவே. மராட்டியன் கன்னடன், மலையாளி,தெலுங்கன்,தமிழன் என்று இங்கு இருக்கும்போது விடாப்பிடியாக தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொண்டு பிற தேசிய இனங்களை ஓடுக்குவதிலும் இவர்கள் முனைப்பாக இருப்பார்கள்.

ஒரு சுலபமான உதாரணம் தருகிறேன். தமிழ்நாட்டில்,ஏன் இந்தியாவில் ஈழப்பிரச்சினையில் நேர்மையான நிலைப்பாடுகொண்ட ஒரு பார்ப்பனரையாவது காட்டுங்கள் பார்ப்போம். சு.சாமி,சோ,ராம்,மணிசங்கரன் இப்படி அவர்கள் எல்லோரும் அவாள்களே.

இது சாதி வெறுப்பல்ல என் இனத்தை ஒடுக்கும் ஆதிக்க இனத்தை இனம் கண்டு கொண்டதால் வந்த சீற்றமே.

இந்த பார்ப்பன கும்பல்களால்தான் ஈழவிடுதலைக்கு எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டன எனக்கேட்டறியுங்கள். தன் இனம் அல்லலுறுதல் கண்டு அதற்காக குரல்கொடுத்த தமிழர்களை குரல்வளை நெரித்த கும்பல் எப்படி தமிழ்ச்சாதிக்குள் வரமுடியும்.

கிருஷ்ணயய்யர் என்ற ஒரு முன்னாள் நீதிபதி பார்பணர் தான் இந்திய அமைதிபடையின் தவறுகளை வெளிபடையாக கண்டித்தார் என்ற நினைவு.

விகடன் என்ற பார்பண குழுமம் தான் வெளிபடையாக புலிகளின் குரலை தமிழ் நாட்டு மக்களுக்கு கொண்டு செல்கிறது.( விடுதலை எல்லாம் திக காரர்கள் படித்தால் தான் உண்டு)

இல கணேசன் என்ற பார்பணர் தான் தொடர்சியாக இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

சுப்ரமணிய சுவாமி புலிகளுக்கு எதிரானவர் தான். ஜெயலலிதா ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்கு வழங்கபட்ட கல்வி தொடர்பான சலுகைகள் நிறுத்து பட்ட போது அதை வழங்க சொல்லி நீதி மன்றம் சென்றார்.. வீரமணி வழக்கம் போல தனது கல்வி கூடங்கள் மூலமாக பணம் எப்படி சம்பாதிக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்த்தார்.

ஒரு இந்து ராம். சோ ராமசாமி, மணி சங்கர்க்காக ஒட்டு மொத்த பார்பணர்களையும் குறை சொல்வது வெறூப்புணர்சியை கிளப்புவது தான் உங்கள் நோக்கமா>

பெரியார் காலத்தில் இருந்த நிலையும் தமிழ் நாட்டில் தற்போது இல்லை.பெரியார் காலம் வேறு, தற்போதையை நிலல வேறு. தமிழ் நாட்டில் திராவிடர் கழகத்தை சிபிஐ வைத்து கண்டு பிடித்தால் தான் உண்டு. இதில் அங்கு பருப்பு வேகவில்லை என்று இலங்கை தமிழர்கள் பக்கம் கவனம் திரும்பி விட்டதோ?

பார்பானியம் தான் எதிரி பார்பணர்கள் எதிரி இல்லை என்று சொல்லி எந்த பார்பணரை பற்றி எழிதினாலும் படு கேவலமான வார்தைகளை போட்டு எழுதுவது தான் பெரியார் கற்று கொடுத்த சுய மரியாதையா?

மற்ற புலி எதிர்பாளர்களை சாதி போட்டு தாக்க வேண்டியது தானே. அங்க எல்லாம் சாதி சங்கம் வைத்து அடித்து துவைத்து விடுவார்களே. பார்பணர்கள் தானே எது சொன்னாலும் அடங்கி போகிறார்கள்.

எனக்கு பார்பண அடிவருடி என்ற பட்டம் உடனே கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்..

எனக்கும் சாதி போட்டு இத்தனை பத்தி எழுதவே கூசுகிறது., சாதி ஒழிப்பாளர்களான உங்களுக்கு எப்படி?

Posted

இல கணேசன் விடுதலைப்புலிகள் பற்றி கொண்டிருக்கும் கருத்து எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.