Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனின் பக்கச்சார்பின்மை! எழுப்பும் கேள்விகள்

Featured Replies

விக்னேஸ்வரனின் பக்கச்சார்பின்மை! எழுப்பும் கேள்விகள்
 
vikkineswaran_001.jpg
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இதுவரையான தேர்தலில் நிரூபித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இப்போது வாக்குகளைப் பங்கு போடுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி போன்ற கட்சிகளும் களமிறங்கியிருக்கின்றன. எப்போதுமே, கொழும்புடன் இணக்க அரசியல் நடத்தி வந்த ஈ.பி.டி.பி.யும், அங்குமிங்குமாக நின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியும் இம்முறை தனித்து போட்டியிடுகின்றன.

இன்னொரு பக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க. போன்ற தேசியக் கட்சிகளும் வடக்கு தேர்தல் களத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறும் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.
இதுவரை காலமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே, பேசப்பட்டு வந்த தமிழ்த் தேசியவாதத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க. வேட்பாளர்களும் பேசுகின்ற நிலையைக் காண முடிகிறது. மொத்தத்தில் இம்முறை தேர்தல், சிக்கலான ஒரு களத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை ஒரு மிகப்பெரிய சக்தியாக பாராளுமன்றத்தில் மாற்றியமைக்கத் திட்டமிட்டிருந்தாலும், அதற்கு வடக்குத் தேர்தல் களம் சவாலான ஒன்றாகவே இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடுமையான சவால்கள் இருப்பது வெளிப்படையான விடயம்.

இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டு, ஒரு இலட்சத்து 32 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் நிலைப்பாடு தொடர்பான கேள்விகள் நீடித்து வந்திருந்தன.

அதற்குக் காரணம், தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அவர், அமெரிக்க, பிரித்தானிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

அதை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னரும், அவர் யாழ்ப்பாணம் திரும்பாமல், கொழும்பிலேயே தங்கியிருந்தார்.

உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் கொழும்பில் தங்கியிருந்தாலும், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான முடிவை எடுப்பதற்கே அவர் கொழும்பில் தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, திருகோணமலையில் நடத்திய முதலாவது பிரசாரக் கூட்டத்திலோ, கடந்த ஞாயிறன்று யாழ்ப்பாணத்தில் மருதனார்மடத்தில் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்விலோ, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருக்கவில்லை.

இது கூட்டமைப்புக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகளையும் எழுப்பத் தவறவில்லை. இந்தநிலையில் தான், கடந்த புதன்கிழமை முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.

அது பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அவரது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கையாக அமைந்திருந்தது. அதில் அவர் தாம் இந்த தேர்தலில் பக்கச்சார்பின்றிச் செயற்படவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடமாகாண முதலமைச்சராக தன்னைத் தேர்ந்தெடுத்திருப்பினும், அவர்களின் தேர்தல் களங்களில் பக்கச்சார்பாக இறங்கி அக்கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரித்துப் பேசுவது தனக்கழகல்ல என்று அவர் கூறியிருக்கிறார்.

அத்துடன் “நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.

அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்.

எனவே திறமையான, மக்களுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடக் கூடிய, விலைபோகாதவர்களை தெரிவு செய்யுங்கள்” என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால், வடக்கு மாகாண முதலமைச்சர் மீது மக்களுக்கு இருக்கின்ற மதிப்பும் நம்பிக்கையும், அவர் பிரசாரத்தில் ஈடுபட்டால் கூட்டமைப்புக்கு கூடுதல் சாதகமாக அமையும் என்ற கருத்து அவர்களிடத்தில் இருந்திருக்கும்.
ஆனால், அவர் நடுநிலை வகிக்க எடுத்துள்ள முடிவும், யாருக்காகவும் பிரசாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்ற நிலைப்பாடும், இவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்த முடிவையும் அறிக்கையையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் செய்யும் சக்திகள், குறிப்பாக, தமிழ்த் தேசிய முன்னணி போன்றன சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.

ஏற்கனவே, வடக்கு மாகாண முதலமைச்சரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது பக்கம் இழுக்க முயன்றது- அவரது அண்மைய வெளிநாட்டுப் பயணங்களின் போதும், அதற்கான முயற்சிகள் புலம்பெயர் சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிடிகொடுக்காமல் நழுவியிருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

இப்போது, அவர் நடுநிலை வகிக்கப் போவதாக எடுத்த முடிவு என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நடுநிலை வகிப்பதற்கா - அல்லது ஒட்டுமொத்த தேர்தலிலும் நடுநிலை வகிப்பதற்கா என்பதில் ஒரு மயக்கம் உள்ளது.

இது ஏற்படக் காரணம், அவரது அறிக்கையில், “கூட்டமைப்பினரால் வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக 2013 ஆம் ஆண்டில் பொதுவேட்பாளராக நான் நிறுத்தப்பட்டேன்.

நான் பதவிக்கு வந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் பல நான் பக்கச் சார்பற்று நடுநிலை வகிக்கவில்லையே என்று என் மீது குறைபட்டுக் கொண்டனர்.

நான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக என்னை விமர்சித்தனர்.

முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற முறையில் பக்கச்சார்பற்று நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், அவர் தமிழரசுக் கட்சியின் சார்பாக செயற்படுவதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டிய சம்பவத்தையே சுட்டி நிற்கிறது.

அதேவேளை, இதே அறிக்கையில், அவர் சட்டக்கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், ஏற்பட்ட நிலையையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து பக்கசார்பின்றி செயற்பட்டதை குறிப்பிட்டு, அதே முடிவையே தற்போதும் எடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

இது வேறுவிதமான அர்த்தத்தைக் கொடுக்கிறது.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவரது ஆதரவு இருக்கிறதா இல்லையா – வேறு கட்சியின் பொருத்தமான வேட்பாளர்களையும் தெரிவு செய்யுமாறு அவர் மக்களைக் கோருகிறாரா என்ற மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நடுநிலை எத்தகையது என்பதை இந்த அறிக்கையில் வெளிப்படுத்த தவறியிருக்கிறார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த விமர்சனங்களும், முரண்பாடுகளுமே முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்த முடிவை எடுக்கத் தூண்டியிருந்தால், அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் கூட்டமைப்பின் தலைவர்களே.

அதேவேளை, லண்டனில் நடந்த கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கருத்து முரண்பாடுகளை உயர்ந்த நிலை ஜனநாயகமாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அதனைச் சார்ந்து இந்த முடிவை எடுத்திருப்பார் என்றால், அது அவரது முரண்நிலையை வெளிப்படுத்தும்.

இன்னொரு பக்கத்தில், அவர் இந்த முடிவை எடுப்பதற்கு இலங்கைக்கு வெளியே உள்ள சக்திகள் கொடுத்த அழுத்தம் அல்லது ஏற்படுத்திய அச்சமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி மீது அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

அவ்வாறான நிலையில், தனது பெயரும் கெட்டுப்போய் விடும் என்ற அச்சமும் கூட அவருக்குள் தோன்றியிருக்க வாய்ப்புகள் உள்ளன அல்லது அவ்வாறான கருத்து அவருக்குள் தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.

எவ்வாறாயினும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீது புலம்பெயர் தமிழர்கள் இப்போது கூடுதல் நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், அவர் புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு முன்னரே, வடக்கு மாகாண மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார்.

இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னரே, புலம்பெயர் தேசங்களில் அவர் மீதான விமர்சனங்கள் குறைந்திருக்கின்றன.

அதற்கு முன்னர், அந்த தீர்மானத்தை இழுத்தடிப்பதாக விமர்சித்தவர்கள் இப்போது அவரை தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த தேர்தலில் நடுநிலை வகிக்க எடுத்துள்ள தீர்மானம், அவரது தனிப்பட்ட முடிவு.

அதுபோலவே, தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் மக்களுக்கேயுரியது.

இந்தக் காரணங்களுக்கு அப்பால் அவர் இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள முடிவெடுத்திருந்தால், அது அவர் மீதான மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதைப்பதாகவே இருக்கும்.

விருப்பு வாக்கு மோதல்களுக்குள்- கட்சிசார் அரசியலுக்கு அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது என்பதே பலரதும் பொதுவான கருத்தாக உள்ளது.

ஏனென்றால், அந்தக் கூட்டமைப்பு தான், அவரை நீதித்துறை மாண்பில் இருந்து, மக்களாட்சியின் மாண்புக்குரிய ஒருவராக கொண்டு வந்து நிறுத்தியது.

கண்ணன்

விக்னேஸ்வரன் அவர்களுக்கு மண்பற்று அதிகமாக இருக்கு....

ஐயா அவர்களும் கூட்டமைப்பில கேட்டு வென்றார்.....ஆனால் கூட்டமைப்பில கேக்காமல் வெல்லமுடியாது என்று 18ம் திகதி புரியும் 

18ம் திகதி கூட்டமைப்பு வெற்றிபெறும் இடத்து ஐயா தான் விரும்பும் கட்சிக்கு தாவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இல்லாவிட்டால் ஊருக்கு போய்விடுங்கள் ஐயா

 

 

 

கூட்டமைப்பில் கேட்டால் தான் வெல்லலாம். மக்களை ஏமாற்றி வென்றபின்னர் பதவி சுகத்தை அனுபவிக்கும் சாதாரண  தமிழரசு அரசியல்வாதிகளை போல கம்மென்று  இருக்காமல் உண்மையை பேசலாமா விக்கிஐயா. நீங்க உண்மையை பேசி நேர்மையாக நடப்பதை விட ஊருக்கு போய்விடுங்கள் ஐயா

  • தொடங்கியவர்

ஐயா அவர்களுக்கு மண்பற்று அதிகமாக இருக்கு லேசில விட்டிடு போய்விட மாட்டார்....எப்புடியாவது சவ்வு மாதிரி இழுபடுவார்.....

கூட்டமைப்பில் கேட்டால் தான் வெல்லலாம். மக்களை ஏமாற்றி வென்றபின்னர் பதவி சுகத்தை அனுபவிக்கும் சாதாரண  தமிழரசு அரசியல்வாதிகளை போல கம்மென்று  இருக்காமல் உண்மையை பேசலாமா விக்கிஐயா. நீங்க உண்மையை பேசி நேர்மையாக நடப்பதை விட ஊருக்கு போய்விடுங்கள் ஐயா

Trinko உங்கள் வாதத்தில் உண்மைகள் பொதிந்துள்ளதை வெளிப்படையாக ஏற்றுகொள்கிறேன். இருந்தாலும் இடம் பொருள் நேரம் பார்த்து செயற்பட வேண்டியது தமிழர் கற்றுக்கொண்ட பாடம்.

சுமத்திரன் இன அழிப்பு எனும் சொல்லை எடுக்க சொல்லி இலங்கை அரசுக்கு ஆதரவாய் ஐ .நா வில் குத்தி முறிஞ்சு கொண்டபோது விக்கி ஐயா இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றினதையும் சுமது ஐ.நா வில் நடந்து கொண்ட முறைக்காக இலங்கை அரசால் ரகசியமாய் குடுக்கபட்ட பணத்தை விக்கி ஐயா பகிரங்கபடுத்தியதையும். கட்டுரை ஆசிரியர் தொட்டு சென்று இருந்தால் நன்றாக இருக்கும் எல்லோருக்கும் அவர் சொல்வது போல் மயக்கம் தெளிவடைந்து இருக்கும்.

  • தொடங்கியவர்

சுமத்திரன் இன அழிப்பு எனும் சொல்லை எடுக்க சொல்லி இலங்கை அரசுக்கு ஆதரவாய் ஐ .நா வில் குத்தி முறிஞ்சு கொண்டபோது விக்கி ஐயா இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றினதையும் சுமது ஐ.நா வில் நடந்து கொண்ட முறைக்காக இலங்கை அரசால் ரகசியமாய் குடுக்கபட்ட பணத்தை விக்கி ஐயா பகிரங்கபடுத்தியதையும். கட்டுரை ஆசிரியர் தொட்டு சென்று இருந்தால் நன்றாக இருக்கும் எல்லோருக்கும் அவர் சொல்வது போல் மயக்கம் தெளிவடைந்து இருக்கும்.

ஐயா உந்த தீர்மானத்தை நிறைவேட்டினதின் பிரதிபலிப்பே இன்று உங்களை அவருக்கு சார்பாக கதைக்க வைக்குது. இதே தீர்மானத்தை சிவாஜிலிங்கம் கொண்டுவரமுற்பட ஐயா மறுக்க..சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்கிக்கொண்டுஓடினது ஞாபகம் இல்லையா சிலந்தி?
அதுக்காக நான் சிவாஜிலிங்கம் திறம் எண்டுசொல்லவில்லை

கருணாவுக்கு விசில் அடித்துவிட்டு துரோகம் இழைத்தபின் தூற்டியமாதிரி என்னொருதரம் வராமல் பார்த்தாலே எல்லாம் சரிவரும்.

ஐயா கூறுகின்றார்...தான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவராம், ஒண்டும் தெரியாதாம், யாழ்பாணம் வந்தவுடன் எல்லாம் விளங்கிட்டுதாம்....பாவம் சின்ன பிள்ளை தானே.........    

அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர் போட்ட போடில் தமிழரசின் எல்லாப்பக்கதுக்கும் மயக்கம் பரவியுள்ளது தெரிகின்றது .

  • தொடங்கியவர்

தமிழர்களுக்காக உண்மையாக போராடுபவர்களுக்கு இந்த மயக்கத்தை விட கூட மயக்கம் கிடைத்தது வரலாறு....திருப்பி ஒருக்கா அவர் உதே விருப்புவாக்கை வாங்கிக்காட்டட்டும் பார்க்கலாம் .......

வெளுத்ததெல்லாம் பால் ஆகாது என்பாக

நான்கு பக்கமும் தமிழரசு வண்டியின்  அச்சாணியை பின்கதவால் வந்தவர் இரும்புக்கு எடுத்து வித்து போட்டார் அண்ணை.கூடும் மக்களை பார்க்க தெரியுது .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்காக உண்மையாக போராடுபவர்களுக்கு இந்த மயக்கத்தை விட கூட மயக்கம் கிடைத்தது வரலாறு....திருப்பி ஒருக்கா அவர் உதே விருப்புவாக்கை வாங்கிக்காட்டட்டும் பார்க்கலாம் .......

வெளுத்ததெல்லாம் பால் ஆகாது என்பா..

இது எல்லோருக்கும் பொருந்தும்

கூட்டமைப்பு உட்பட எவருமே முன்னைய வாக்ககளைப்பெறமுடியாது

அதேநேரம் கூடடமைப்புக்கு இறங்குமுகமும்

ததேமு க்கு ஏறுமுகமுகமும் இருக்கும் 

உண்மையை தரிசிக்க முயன்றால்..

இது தேவையற்றது

இதைத்தான் தொடர்ந்து எழுதிவருகின்றேன்

சொல்லி வருகின்றேன்..

ஆனால் தமிழரின விதி

இன்றைய கூட்டமைப்பின் தலைவர்கள் தமது கட்சியின் நலனையே முன்னிறுத்துகிறார்கள்..

  • தொடங்கியவர்

ததேமு க்கு ஏறுமுகமுகமும் இருக்கும்

அடுத்த தேர்தலில் அவர்களின் முழுமுகமும் தெரியும் என்பதில் சந்தேகமில்லை

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் அவர்களின் முழுமுகமும் தெரியும் என்பதில் சந்தேகமில்லை

எதிரியைவிட

முதுகில் குத்தும் துரோகியே பயங்கரமானவன் --  தேசியத்தலைவர்

 

இரட்டை நாக்கு

இரட்டை வாக்கு

எதிலும் லஞ்சம் காசு ...

தெரிந்த பின் மனச்சாட்சியுள்ள தமிழரால் முடியாது...

அதற்காக ததேமு தான் தெரிவு என்றில்லை

காலம் எல்லாவற்றையும் கண்முன் காட்டும்.

 

  • தொடங்கியவர்

எதிரியைவிட

முதுகில் குத்தும் துரோகியே பயங்கரமானவன் --  தேசியத்தலைவர்

 

இரட்டை நாக்கு

இரட்டை வாக்கு

எதிலும் லஞ்சம் காசு ...

தெரிந்த பின் மனச்சாட்சியுள்ள தமிழரால் முடியாது...

அதற்காக ததேமு தான் தெரிவு என்றில்லை

காலம் எல்லாவற்றையும் கண்முன் காட்டும்.

 

நிச்சயமாக...

உங்களது முதல் கருத்துக்கே பச்சை குத்தினேன்...என்னசெய்வது எலக்சன் நேரம் பச்சை தீர்ந்துவிட்டது என்கிறார்கள்.

எதிரியைவிட

முதுகில் குத்தும் துரோகியே பயங்கரமானவன் --  தேசியத்தலைவர்

 

இரட்டை நாக்கு

இரட்டை வாக்கு

எதிலும் லஞ்சம் காசு ...

தெரிந்த பின் மனச்சாட்சியுள்ள தமிழரால் முடியாது...

அதற்காக ததேமு தான் தெரிவு என்றில்லை

காலம் எல்லாவற்றையும் கண்முன் காட்டும்.

 

சொல்லுக்கும் செயலுக்கும் முழு முரண்பாடு .

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுக்கும் செயலுக்கும் முழு முரண்பாடு .

கொஞ்சம் விளங்கப்படுத்தலாமா?

நாட்டில் எந்தச்செயலிலாவது இறங்கியிருந்தால் அது தெரிந்திருக்கும்..

 

ஆரம்பம் முதல் முடிவு மட்டும் முதுகில குத்தியதுதான் வரலாறு .

விளங்காத மாதிரி நடிப்பவர்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவது .

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் முதல் முடிவு மட்டும் முதுகில குத்தியதுதான் வரலாறு .

விளங்காத மாதிரி நடிப்பவர்களுக்கு எப்படி விளங்கப்படுத்துவது .

 

அண்ணை

நாலு பேருக்கு உதவும் என்றால் என்னவும் செய்யலாம் அண்ணை..

நன்றாக கவனிக்கவும் நமக்கு உதவும் என்றால் என்று எழுதவில்லை..

 

1981ம் ஆண்டிலிருந்ரது 2009வரை யார் முதுகில் குத்தியவர்கள் சொந்த இனத்திற்காக போரடும் மக்களை சந்திக்கவிரும்பாத தலைமைகள் நித்திரையில் கொலை சரணடைந்தவர்கலை எங்கள் வாய்களை கிழராதீர்கள்.......

முதலமைச்சர் ஜயா ஒரு முடிவோட தான் இருக்கிறார். :)

 

 

ஐயா கூறுகின்றார்...தான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவராம், ஒண்டும் தெரியாதாம், யாழ்பாணம் வந்தவுடன் எல்லாம் விளங்கிட்டுதாம்....பாவம் சின்ன பிள்ளை தானே.........    

இலண்டனில யாரோ உந்த கேள்வி கேக்க அவர் வடிவா சொன்னவர், தன்னுடைய சிந்தனையோட்டம் எப்படி மாறியது எண்டு? எதை நேரடியாக பார்த்து அனுபவிக்கே அதன் பாதிப்பு அதிகம் ?

Edited by யோக்கர்

  • தொடங்கியவர்

இலண்டனில யாரோ உந்த கேள்வி கேக்க அவர் வடிவா சொன்னவர், தன்னுடைய சிந்தனையோட்டம் எப்படி மாறியது எண்டு? எதை நேரடியாக பார்த்து அனுபவிக்கே அதன் பாதிப்பு அதிகம் ?

யோக்கர்,

விக்கியர் ஒரு சாதாரண பதவியில் இருந்தவர் அல்ல, அவர் யாழ்பாணம் வந்துதான் சிந்தனையோட்டம் மாறோனும் என்றால்; ஐனாவை அலேக்காக தூக்கிவந்து வன்னியில் வைத்தால் தான் யுத்தக்குற்றம் தொடர்பான சிந்தனையோட்டம் வெளிநாட்டுக்காரனுக்கு மாறும். ஏன் முழுச்சிங்களவனுக்கும் மாறும்.

இவர் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றங்களில் நீதிபதியாக கடமையாற்டியும் உள்ளார்

அவருக்கு வெளிநாட்டுச்சுற்றுலா போய் சிந்தனையோட்டம் மாறி நிண்டு பிதட்டுறார்.

அவரே ஒருஇடத்தில் கூறுகின்றார், 60 வயதிற்கு மேற்பட்ட கூட்டமைப்புக்காரர் பதவி விலகவேனுமன சரியான கருத்துத்தான், ஆனால் இவருக்கு எத்தனை வயது? 75

விக்கியருக்கு மிளகாய் அரைக்க மண்டைய குடுக்க நான் தயார் இல்லை....... நீங்களும் யோசிச்சு செய்யுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் உள்ளது விக்கியின் செயல். நேற்று வரை இலங்கை தமிழ் மக்களுக்கு யார் என்று தெரியாத விக்கியை முன்னிறுத்திய தமிழ் கூட்டமைப்புக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். அரசியலே தெரியாத ஒருவர் பின் நின்று என்ன தான் பெற போகிறார்களோ ஈழ மக்கள். ஏன் ஒருவர் கூட தமிழ் கூட்டமைப்பில் இருந்து முதல்வராகி இருக்க கூடாது. 

மேலும், ஒன்று பட்ட  இலங்கை நாட்டுக்குள் இருந்து என்று சொன்னாலே இலங்கை தமிழ்  மக்களின் தியாகத்தை கொச்சை படுத்துவது போல் தோன்றுகிறது தமிழக தமிழர்களாகிய என்னை போன்றோருக்கு. போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகின்றது. இது வரை ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாத நிலையில் தான் உள்ளார்கள் கூட்டமைப்பு தலைவர்கள். 

Edited by kanna123

  • தொடங்கியவர்

 

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் உள்ளது விக்கியின் செயல். நேற்று வரை இலங்கை தமிழ் மக்களுக்கு யார் என்று தெரியாத விக்கியை முன்னிறுத்திய தமிழ் கூட்டமைப்புக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். அரசியலே தெரியாத ஒருவர் பின் நின்று என்ன தான் பெற போகிறார்களோ ஈழ மக்கள். ஏன் ஒருவர் கூட தமிழ் கூட்டமைப்பில் இருந்து முதல்வராகி இருக்க கூடாது. 

மேலும், இலங்கை நாட்டுக்குள் இருந்து என்று சொன்னாலே இலங்கை மக்களின் தியாகத்தை கொச்சை படுத்துவது போல் தோன்றுகிறது தமிழக தமிழர்களாகிய என்னை போன்றோருக்கு. போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகின்றது. இது வரை ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாத நிலையில் தான் உள்ளார்கள் கூட்டமைப்பு தலைவர்கள். 

இத்தனை துன்பங்கள் கடந்துவந்தும் இவரின் கபடநாடகம் விளங்காமல் எம்மக்கள் இருப்பது கவலைக்குரியது.

இவர்மேல் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை.

நீதியரசர் நீதியை கொண்டுவருவார் என்று கூறி வானத்தில் போன பிசாசை ஏணி வைத்து வீட்டுக்குள் இறக்கிவைத்துள்ளனர். 

சரி கூட்டமைபில் உள்ள இவர், இவருக்கு கீழ் இருக்கும் 22பேரையும் இணைத்து கூட்டமைப்பின் கட்டமைப்பை திருத்தி எடுக்க முடியாதா? இல்லாதவிடத்தில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி சரியான கட்சியில் இணைந்து கொள்ளவேண்டும். 

முழுதையும் உடைச்சுவிடவேணும் எண்டு சிங்களவன் சரியாக செயல்படுவது இங்க கனபேருக்கு விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் உள்ளது விக்கியின் செயல். நேற்று வரை இலங்கை தமிழ் மக்களுக்கு யார் என்று தெரியாத விக்கியை முன்னிறுத்திய தமிழ் கூட்டமைப்புக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். அரசியலே தெரியாத ஒருவர் பின் நின்று என்ன தான் பெற போகிறார்களோ ஈழ மக்கள். ஏன் ஒருவர் கூட தமிழ் கூட்டமைப்பில் இருந்து முதல்வராகி இருக்க கூடாது. 

மேலும், ஒன்று பட்ட  இலங்கை நாட்டுக்குள் இருந்து என்று சொன்னாலே இலங்கை தமிழ்  மக்களின் தியாகத்தை கொச்சை படுத்துவது போல் தோன்றுகிறது தமிழக தமிழர்களாகிய என்னை போன்றோருக்கு. போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகின்றது. இது வரை ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாத நிலையில் தான் உள்ளார்கள் கூட்டமைப்பு தலைவர்கள். 

 மாவை தான் வந்திருக்கணும்

மாவையால்  சிங்களத்துடன் ஒத்துப்போக அவரது வாய் விடாது என்பதால் 

கூட்டமைப்பு சிங்களத்துடன் தூது அனுப்ப இலகு வழி எனத்தெரிவு செய்யப்பட்டவரே விக்கி ஐயா..

 

ஆனால் இராமன் வேடத்தைப்போட்ட இராவணன் போல் அவரது நிலை..

தாம் சொல்கின்றபடி ஆடுவார் என எதிர் பார்த்தார்கள்

அவர் அங்கங்கே நடக்கும் இவர்களது ஊழல்கள் 

கட்சி  வளர்ப்புக்களுக்கு தலையாட்ட மறுப்பதுடன்

தமிழரின் நீண்டநாள் கனவுகள் பற்றி  இவர்களது சுயநல அரசியலையும் பேசுகின்றார்

பொறுக்குமா அரசியல்வாதிகளுக்கு............:(

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை

நாலு பேருக்கு உதவும் என்றால் என்னவும் செய்யலாம் அண்ணை..

நன்றாக கவனிக்கவும் நமக்கு உதவும் என்றால் என்று எழுதவில்லை..

 

இது ஒரு பிற்போக்குத்தனமான கருத்து! நாலு பேருக்கு உதவுவதற்காக நாலு பேரை கொல்வதாக வைத்துக் கொள்வோம், அந்த நாலு கொலைகளினால் நாற்பது பேர் பாதிக்கப்படக்கூடும் என்ற சிந்தனை இல்லாதது வருத்தமளிக்கின்றது. அதைவிட உதவி என்பதன் வரையறை பல்வேறு நிலைகளில் வேறுபடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பிற்போக்குத்தனமான கருத்து! நாலு பேருக்கு உதவுவதற்காக நாலு பேரை கொல்வதாக வைத்துக் கொள்வோம், அந்த நாலு கொலைகளினால் நாற்பது பேர் பாதிக்கப்படக்கூடும் என்ற சிந்தனை இல்லாதது வருத்தமளிக்கின்றது. அதைவிட உதவி என்பதன் வரையறை பல்வேறு நிலைகளில் வேறுபடும்.

நாலு பேருக்கு உதவலாம் என்றால்

எதற்கு கொலையை நினைக்கணும்???

மாற்றம் நமது பார்வையில் இல்லையென்றால்

பிற்போக்குத்தனம் அங்கு தான் ராசா இருக்கமுடியும்

நான் அதை நினைக்கவே இல்லை....

நாலு பேர் வாழ நாநூறு பேரை போட்ட கோஸ்டிகள் இவர்கள் .

அந்த நாலும் தான் இப்ப உலகம் முழுக்க வாலை ஆட்டுது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.