Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரியில் புதிதாக முளைத்தது பௌத்த வழிபாட்டுத் தலம்

Featured Replies

பூநகரியில் புதிதாக முளைத்தது பௌத்த வழிபாட்டுத் தலம்

AUG 04, 2015by VANNIin செய்திகள்

new-vihara-kili (1)கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 66-1 ஆவது படைப்பிரிவினால், புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

66-1ஆவது பிரிகேட் தலைமையகத்துக்கு அருகிலேயே, இந்த புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பௌத்த வழிபாட்டுத் தலத்தை 66ஆவது டிவிசனின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விக்கிரமரத்ன கடந்த மாதம் 29ஆம் நாள் திறந்து வைத்துள்ளார்.

66-1ஆவது பிரிகேட் தளபதி லெப்.கேணல் எக்கநாயக்கவின் உத்தரவின் பேரில், அந்தப்படைப்பிரிவில் உள்ள அதிகாரிகளின் நிதியுதவி மற்றும், படையினரின் மனித வள உதவியுடன் இந்த வழிபாட்டுத் தலம் அமைக்கப்பட்டுள்ளது.

new-vihara-kili (1)

new-vihara-kili (2)new-vihara-kili (3)new-vihara-kili (4)வடக்கில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், சிறியளவிலான பௌத்த விகாரைகள், வழிபாட்டுத்தலங்களை சிறிலங்கா படையினர் அதிகளவில் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.net/2015/08/04/news/8454

 

மைத்ரிக்கு வாக்கு போடுங்கோ மைத்ரிக்கு வாக்கு போடுங்கோ  சம்பந்தன் சுமந்திரனின் ராஜதந்திரம் நல்லா வேலை செய்யுது .

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கும்பல் தான் அப்படின்னா.. சிங்களவன் அடிக்கிறான் உதைக்கிறான் என்று அசைலம் அடிச்சிட்டு இப்ப ஊருக்குப் போய் வாறவை என்ன சொல்லினம் தெரியுமா... புத்தர் எங்கட ஆள் தானே. இருந்திட்டு போகட்டுமேன். சிங்களவங்களுக்கு முஸ்லீம்களோட தான் பிரச்சனையாம். இதுகள என்ன சொல்லுறது. எங்கட சனம் முஸ்லீம்களை விட மோசமா தொப்பி பிரட்டுங்கள். என்ன தொப்பி போடாமலே பிரட்டுதுகள் அதுதான் வித்தியாசம். :grin::unsure:

இந்த நிலைமையில சிங்களவன் மொத்த தீவையும் தன்ர ஆக்காமல் விடுவானே. புலிகள் சொன்ன சம பலம் என்பது என்னென்று பலருக்கு அப்ப விளங்கி இருக்காது இப்ப விளங்கும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் பூநகரியை இனி பூநகர எண்டு மாத்துவான்.....
அதுக்கு.....
சம்பந்தன் கோஷ்டியும் வாலுகளும் வாழ்த்துச்சொல்லி வரவேற்குங்கள்..... 
இதயத்தாலை இணைஞ்சாப்பிறகு மொழியென்ன தேசமென்ன கொள்கையென்ன????
பாசம் தானே முக்கியம்.....மன்னிக்கவும் பணமும் சுக போக வாழ்க்கையும்தானே முக்கியம்.

 

11145223_10154241935465752_2936076023409

போன வாரம் எனது வீட்டிற்கு அருகில் நடந்த நிகழ்சி இது .

புதிதாக முளைத்தது இந்து ஆலையம் என்று  டொராண்டோவில் செய்தி வரவில்லை 

 

  • கருத்துக்கள உறவுகள்

"பூநகர" பெயர் எனக்குப் பிடிக்கேல்லை "மல்சிரிபுர" எண்டு வச்சால் ஆத்தலா இருக்கும்!:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11145223_10154241935465752_2936076023409

போன வாரம் எனது வீட்டிற்கு அருகில் நடந்த நிகழ்சி இது .

புதிதாக முளைத்தது இந்து ஆலையம் என்று  டொராண்டோவில் செய்தி வரவில்லை 

 

பிறந்த மண் உரிமைக்கும் புலம்பெயர்ந்த மண் உரிமைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. கொஞ்சம் மனதார சிந்தித்திருந்தால் இந்த படத்தை போட்டு உங்கள் ஊத்தையை நீங்களே மணந்திருக்க மாட்டீர்கள்.

நாம் எமது மண் எமது உரிமை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது கேவலம் கெட்ட படங்களை இணைத்து நியாயம் தேடிக்கொண்டிருக்கின்றீர்கள். படித்தவர்கள் என்று தாங்களே செய்யும் வேலையா இது????

  • கருத்துக்கள உறவுகள்

11145223_10154241935465752_2936076023409

போன வாரம் எனது வீட்டிற்கு அருகில் நடந்த நிகழ்சி இது .

புதிதாக முளைத்தது இந்து ஆலையம் என்று  டொராண்டோவில் செய்தி வரவில்லை 

 

அர்ஜுன்.. பிரச்சனை என்னவெண்டால்.. அங்கெல்லாம் இந்துக்கள் வந்த பின்னர் தான் 'இந்து ஆலயம்' வருகின்றது!

ஆனால் நம்மட ஊர் வழிய மாறி நடக்குது!:unsure:

புத்தம் வந்த பின்னர் தான்.. பௌத்தர்கள் வருகின்றார்கள்!

அதனால் தான் இது செய்தி...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பூநகர" பெயர் எனக்குப் பிடிக்கேல்லை "மல்சிரிபுர" எண்டு வச்சால் ஆத்தலா இருக்கும்!:cool:

உங்களைப்போலை ஆக்களைத்தான் சிங்களவன் தேடித்திரியுறான்  :innocent: ....போங்கோ  நல்லவருமானம் வரும்....உந்த குளிருக்கை எவ்வளவுகாலம் நிண்டு மாரடிக்கப்போறியள்???? :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.