Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோதபாயவின் மீது தாக்குதல் நடத்தப்படும் வரையில் மஹிந்த புலிகளுக்கு பணம் வழங்கினார் – ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச மீது தாக்குதல் நடத்தப்படும் வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


2006ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோதபாய ராஜபக்ஸ மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்படும் வரையில் பணம் வழங்கப்பட்டது என நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தெரிவித்துள்ளார்.


மஹிந்த ராஜபக்ஸ குடும்பம் மீது பிரபாகரன் கை வைக்க மாட்டார் எனக் கருதியே இவ்வாறு பணம் வழங்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மாவிலாற்றில் மக்கள் இறக்கும் போது மஹிந்தஅரசாங்கத்திற்கு அது பிரச்சினையாக இருக்கவில்லை எனவும், மாவிலாறு சம்பவம் யுத்தமாக வெடிக்கும் என மஹிந்த நினைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இறுதியில் ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, அதுரலிய ரதன தேரர் ஆகியோர் பிரயோகித்த கடும் அழுத்தம் காரணமாகவே புலிகளுடன் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


2005ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெரும் தொகைப் பணத்தை மஹிந்த வழங்கியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் வெற்றியை உறுதி செய்யுமாறு கோரி பணம் வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும், அதனை விடவும் கூடுதல் பணம்வழங்கினால் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதி செய்ய முடியும் எனவும் பிரபகாரன் தனக்கு தகவல் அனுப்பி பேரம் பேசியதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


எனினும் தாம் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாகவும், சுனாமி ராடா நிறுவனத்தின் ஊடாகவும் மஹிந்த ராஜபக்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2000 மில்லியன் பணம் வழங்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோல்வியடைவோம் என்று உறுதியாகியுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஸ இனவாதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.


வடக்கு கிழக்கு மாகாணங்களை பிளவடையச் செய்து தனியாட்சி வழங்க தாம் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக சுமத்தப்டும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122694/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி.....
அர்ஜூன், வாலி போன்றவர்களின்..... கண்களில், இன்னும்... படவில்லையா?
அவர்கள்.... வந்து, வாந்தி எடுக்க... நல்ல திரி அல்லவா?
ஏன்... இதை, தவற விட்டார்கள். 
சும்மா.... பம்மிக் கொண்டு, இருக்காமல்... நாலு கருத்தை, எழுதுங்கப்பு. Smiley :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ரணிலையும் தெரியும் மகிந்தவையும் தெரியும் புலிகளையும் தெரியும் புலிவாலுகளையும் தெரியும்! 2005 அதிபர் தேர்தலில் புலிகள் ரணிலை பழிவாங்குவதற்காககவும் மீண்டுமொரு யுத்த சூழலை உருவாக்குவதற்காகவுமே மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தார்கள். ஒரு முறையாவது நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக இருந்துவிடவேண்டும் என்ற ரணிலின் விருப்புக்கு மங்களம் பாடியவர்கள் புலிகளும் மகிந்தவும். அதற்காகவே ரணில் இவ்வாறு கூறுகின்றார். மகிந்தவிடம் கையேந்தி பணம் வாங்குமளவு புலிகளின் நிலைமை புலிவால்களைப்போல இருக்கவில்லை ஏ9 நெடுஞ்சாலையில் வரிவிதிப்பு மூலம் நாளாந்தம் பெருந்தொகையான பணம் கிடைத்தது. நாங்கள் சும்மா பதிவு போன்ற சில்லறைத்தனமான இணையத்தளங்கள் எழுதுவதைக் கண்டு பரவசப்பட்டு நிற்கும் ஆக்கள் இல்லை. அடியும் தெரியாது நுனியும் தெரியாது சரி அதைத்தான் விடுவம் தெரிந்தவர்கள் படித்தவர்களிடமாவது கேட்டுப்டாவது தெரிந்துகொள்லாமல் சும்மா விசிலையே எவ்வளவுகாலம் இவர்கள் அடித்துக் கொண்டுஇருக்கப் போகிறார்கள்.  விசில் குஞ்சுகள்!:grin:

புலத்தில் கொத்துரொட்டி விக்கிற கோஷ்ரியை சேர்ந்தவர் தான் தமிழ்சிறி போல அவர்களும் இவரைபோல தான் கதை அளப்பார்கள் .இவர்களை இயக்கிறவர்கள் வீட்டுக்குள் இருந்துகொண்டு தேசியமும் தமிழ்ஈழமும் தான் முச்சென்றால் இவர்கள் அதைகொண்டு புறா போல பறப்பார்கள்-இவர்களுக்கு விளங்கபடுத்த-

  • கருத்துக்கள உறவுகள்

 Gothabhaya.jpg gotabaya-blood.jpg%3Fw%3D545 news%5C2006%5C12%5Cimages%5CnewsGotabaya

ரணில் அண்ணை.... சொன்ன மாதிரி,
புலிகளின் தாக்குதலிருந்து, தப்பிய கோத்த பாயாவை, 
அண்ணன்காரன் மகிந்த, பாசத்துடன் கட்டிப் பிடிக்கும் காட்சிகள்.
இது.... நடிப்பா? நாடகமா?  ஸ்ரண்ட் காட்சிகளா.... என்பதை, அறிவுள்ள எவனும் புரிந்து கொள்வார்கள்.
புலி, குறி வைத்திருந்தால், ஒரு குறியும்.... இது வரை தப்பியதில்லை.
புலிகளின், பெயரைச்  சொல்லி.... வாழ வேண்டிய கட்டாயம், ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்ல, சர்வ தேசத்துக்கும் வந்துள்ளது.

புலத்தில் கொத்துரொட்டி விக்கிற கோஷ்ரியை சேர்ந்தவர் தான் தமிழ்சிறி போல அவர்களும் இவரைபோல தான் கதை அளப்பார்கள் .இவர்களை இயக்கிறவர்கள் வீட்டுக்குள் இருந்துகொண்டு தேசியமும் தமிழ்ஈழமும் தான் முச்சென்றால் இவர்கள் அதைகொண்டு புறா போல பறப்பார்கள்-இவர்களுக்கு விளங்கபடுத்த-

முக்கியமான... பிரச்சினையை, விட்டு விட்டு.....
தமிழ் சிறி... கொத்து ரொட்டி சுட்டு வித்தவனா?  தோசை, இட்டலி, இடியப்பம் சுட்டு..... வித்தவனா?

என்ற, ஆராய்ச்சியில் இறங்குங்கோ... பீஸ்மர்.:grin:

Edited by தமிழ் சிறி

காசை வாங்குவது பின்னர் அவர்களுக்கே குண்டு வைப்பது .அது நெடுக சரிவாராது  என்பதை வரலாறு மீண்டும் ஒரு முறை நிரூபித்தது 

  • கருத்துக்கள உறவுகள்

காசை வாங்குவது பின்னர் அவர்களுக்கே குண்டு வைப்பது .அது நெடுக சரிவாராது  என்பதை வரலாறு மீண்டும் ஒரு முறை நிரூபித்தது 

 

M_Id_427983_front.jpg

சிறி லங்காவில்... அமைதியை நிலை நாட்ட வந்த, ராஜீவ் காந்தி, 
சமாதான ஒப்பந்தத்தில்... கை எழுத்து இட்டு, அதன்... "மை" காய முன்னரே..... 
துவக்குப் பிடியால், ராஜீவ் காந்தியின் பிடரி மண்டையில், ஓங்கி.... அடித்த, விஜேமுனி எனக்குப் பெரியவன். 

அந்த... இந்தியனின், அராஜகப் படையை.... விரட்டி அடிக்க 1800 இந்திய இராணுவத்தை மேல் லோகத்துக்கு அனுப்பவும்,
11,700 இந்திய ராணுவத்தை அங்கவீனர்களாக்கி,  சக்கர நாற்காலியில் சுழல வைக்கவும்...  பிரேமதாசவின் உதவி தேவைப்பட்டது.
அதனை செவ்வனே.... செய்தார்கள் புலிகள். 

இந்த இழப்பு, இந்தியா எதிர் பார்க்காதது. பாகிஸ்தான் போரில் கூட, இந்த இழப்பை சந்திக்காத அவமானத்தை ஏற்படுத்கியவர்கள் தான்.. புலிகள்.

போராடப் புறப்பட்ட.... நீங்கள், என்ன செய்தீர்கள், என்று சொன்னால், 
மிச்சத்தை.... நான், சொல்கிறேன்.:)

Edited by தமிழ் சிறி

அப்பாவி பொதுமக்களையும் ஆயிரம் ஆயிரம் போராளிகளையும் பலி கொடுத்துவிட்டு  எதிரியிடம் வெள்ளை கொடி பிடிப்பதிலும் பார்க்க ஒன்றும் செய்யாமல் இருந்திருக்கலாம் .:(

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி பொதுமக்களையும் ஆயிரம் ஆயிரம் போராளிகளையும் பலி கொடுத்துவிட்டு  எதிரியிடம் வெள்ளை கொடி பிடிப்பதிலும் பார்க்க ஒன்றும் செய்யாமல் இருந்திருக்கலாம் .:(

30 வருசம், புலிகள் தனிய நின்று, போராடிக் கொண்டிருக்கும் போது....
நீங்கள், சும்மா.... இருந்து, விட்டு.... இப்ப என்னத்துக்கு? யாரிடம்.... நியாயம் கேட்க வருகின்றீர்கள்.... அர்ஜுன்.
இப்படிக் கேட்க, உங்களுக்கு..... வெட்கமாக, இருக்கவில்லையா ?:shocked:

  • கருத்துக்கள உறவுகள்

பின்னங்கால் பிரடியில் அடிபட ஓடி வந்தவர்களும் மாலைதீவை பிடிக்கப் போனவர்களும் பேசாமல் இருந்திருக்கலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.