Jump to content

வித்தியாசமான ருசியுடைய சில இறால் குழம்பு ரெசிபிக்கள்!!


Recommended Posts

பதியப்பட்டது
கடல் உணவுகளில் மீனிற்கு அடுத்தப்படியாக மிகவும் ஆரோக்கியமானது என்றால் அது இறால் தான். இந்த இறாலை பலவாறு சமைத்து சாப்பிடலாம்.
 
அதில் ஒன்று தான் இறால் குழம்பு. இந்தியாவில் இறால் குழம்பானது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி சமைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
 

இங்கு அப்படி சில வித்தியாசமான ருசியுடைய இறால் குழம்புகள் மற்றும் அதன் செய்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் எது பிடித்துள்ளதோ, அவற்றை விடுமுறை நாட்களில் சமைத்து ருசியுங்கள்.

செட்டிநாடு இறால் குழம்பு!!!
09-prawn-curry-300_zpshfnwohaz.jpg

 தேவையான பொருட்கள்:

இறால் - 400 கிராம்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

பூண்டு - 5 பல் (அரைத்தது)

பச்சை மிளகாய் - 5

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தேங்காய் - 1/2 கப் (துருவியது)

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் இறாலை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விடவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, 2-3 நிமிடம் வறுக்கவும்.

பிறகு சூடு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைக்கவும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு 2-3 நிமிடம் வறுக்கவும்.

பின் அதனை எடுத்து ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

தேங்காயை வறுத்த அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்,

பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு, 3-4 நிமிடம் வேக வைக்கவும்.

பின் அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள இறாலைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

தொடரும்
Posted
மல்வானி இறால் குழம்பு 
 

 

மல்வானி இறால் குழம்பு ஒரு மகாராஷ்டிரா ஸ்டைல் ரெசிபிக்களில் ஒன்று. இந்த மல்வானி ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் தேங்காயை அதிகம் பயன்படுத்துவது தான்.

01-1438416539-2-malvaniprawncurry_zpsvke

இப்போது அந்த மல்வானி இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்

புளிச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 3-4 பற்கள் (தட்டியது)

தேங்காய் பால் - 1 கப்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்ழுன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

 

மசாலாவிற்கு...

தேங்காய் - 1/2 கப் (துருவியது)

வெங்காயம் - 2 (நறுக்கியது)

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

பச்சை ஏலக்காய் - 2

பட்டை - 1

வரமிளகாய் - 2

கிராம்பு - 3

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் சிறிது உப்பு தூவி, பிரட்டி தனியாக வைத்து விட வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய், சோம்பு, மல்லி, வெந்தயம் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் வெங்காயம் மற்றும் தேங்காய சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, இறக்க வேண்டும்.

கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாகவும் மென்மையாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்த்தும், தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட்டு, இறாலை போட்டு, குறைவான தீயிலேயே 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் புளிச்சாற்றினை ஊற்றி, கரம் மசாலா தூவி கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மல்வானி இறால் குழம்பு ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/malvani-prawn-curry-recipe-004016.html

தொடரும்

Posted

இறாலில் கொலஸ்ரோல் அதிகம் என்று சனம் சொல்லுதே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 கடல் உணவுகளில் மீனிற்கு அடுத்தப்படியாக மிகவும் ஆரோக்கியமானது என்றால் அது இறால் தான்...

தவறு....

இறாலில் கொலஸ்ரோல் அதிகம் என்று சனம் சொல்லுதே?

உண்மை தான் நிழலி....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறாலில் கொலஸ்ரோல் இருந்தால் அதுக்கு இறால்தானே கவலைப் பட வேண்டும்...! தினமுமா சாப்பிடப் போறிங்கள், ஏதோ மாதத்தில் இரண்டொரு தடவை சும்மா ஜமாயுங்கோ...! :)

மறக்காமல் இறாலைக் கழுவும்போது அதன் முதுகில் இருக்கும் நூல் போன்ற வஸ்துவை அகற்றி விட்டு அப்படியே மூளோடும் , முன்அன்டனாவோடும் சேர்த்து பிரை பண்ணினால் சுப்பராக இருக்கும்..! :)

Posted

இறாலில் கொலஸ்ரோல் அதிகம் என்று சனம் சொல்லுதே?

இறாலில் கொலஸ்ரோல் அதிகம்தான்.

 கடல் உணவுகளில் மீனிற்கு அடுத்தப்படியாக மிகவும் ஆரோக்கியமானது என்றால் அது இறால் தான்...

தவறு....

 

உண்மை நானும் இந்த வரிகளை முதலில் நீக்கிவிட்டுதான் இங்கு பதிய யோசித்தேன்.

Posted
மராத்தி ஸ்டைல் இறால் குழம்பு
 
 
 இதுவரை இறாலைக் கொண்டு பலவாறு சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை சுவைத்ததுண்டா? இல்லையெனில், இந்த வாரம் உங்கள் வீட்டில் மராத்தி ஸ்டைல் இறால் குழம்பை செய்து சுவைத்துப் பாருங்கள்.
11-marathi-prawn-curry_zpsxfewqh4b.jpg
இந்த குழம்பு மிகவும் காரமாக இல்லாமல் சற்று புளிப்பாக இருந்தாலும், வித்தியாசமான சுவையில் இருக்கும். 
 
தேவையான பொருட்கள்:
 
இறால் - 1/4 கிலோ
 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 
பச்சை மிளகாய் - 5 (அரைத்தது)
 
கறிவேப்பிலை - சிறிது
 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
 
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
 
தக்காளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
 
புளிச்சாறு - 1 கப்
 
துருவிய தேங்காய் - 1 கப்
 
கொத்தமல்லி - சிறிது
 
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
 
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
 
பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
 
இறாலின் நிறம் மாற ஆரம்பிக்கும் போது, அதில் தக்காளி சாறு சேர்த்து மீண்டும் குறைவான தீயில் 2-3 நிமிடம் வேக வைத்து, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
 
குழம்பானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் புளிச்சாறு சேர்த்து குறைவான தீயில் 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
 
இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, 2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், மராத்தி இறால் குழம்பு ரெடி!!!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரசர் உள்ள ஆக்கள் இறால் சாப்பிடக்கூடாது. குளிசை போட்டும் சொல்லுக்கேளாது...:grin: :innocent:

Posted
பூண்டு இறால் குழம்பு
 
 இந்த வாரம் பூண்டு இறால் குழம்பை முயற்சி செய்யுங்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இப்போது அந்த பூண்டு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

01-garlicprawncurry_zpsk0hnnhog.jpg

 தேவையான பொருட்கள்:

இறால் - 250 கிராம்

வெங்காயம் - 1 (நறுக்கியது)

பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 4 (நறுக்கியது)

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 1 நிமிடம் வேக வைத்து, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.

இறாலானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பூண்டு இறால் குழம்பு ரெடி!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொலஸ்ட்ரோல் இருக்குது, கொழுப்பு இருக்குது எண்டு 500, 600 வருசத்துக்கு மேல சாப்பிட்ட தேங்காய் பாலை கண பேர் இங்க தொடுறதே இல்லை.

உங்க, இப்ப சுப்பர் மார்க்கெட் எல்லாம் ப்ரெஷ் தேங்காய் பால் கொலஸ்ட்ரோல் எதுவும் இல்லா, உடலுக்கு நல்ல, தாவர உணவு எண்டு விக்கினம். 

அதெப்படி ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இருப்பது ஒரு சிறிய கிராமம். வீட்டில் சொதி வைப்பது வழமை. ஏழெட்டு வருடங்களுக்கு முன் பசுப்பால், பின்பு கிறீம் பால் இப்ப இரு வருடங்களாக இங்கு தேங்காய், ரின் தேங்காய்ப் பால், தேங்காய்ப் பூ பைக்கட் மரவள்ளிக் கிழங்கு, வாழைக்காய்  எல்லாம் எப்போதும் தாராளமாய் வாங்க முடியுது.(ஆபிரிக்கன் உபயம்). பிறகென்ன கோக்கனட் மில்க்கில்தான் சொதி கொதிக்குது...!  :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொலஸ்ட்ரோல் இருக்குது, கொழுப்பு இருக்குது எண்டு 500, 600 வருசத்துக்கு மேல சாப்பிட்ட தேங்காய் பாலை கண பேர் இங்க தொடுறதே இல்லை.

உங்க, இப்ப சுப்பர் மார்க்கெட் எல்லாம் ப்ரெஷ் தேங்காய் பால் கொலஸ்ட்ரோல் எதுவும் இல்லா, உடலுக்கு நல்ல, தாவர உணவு எண்டு விக்கினம். 

அதெப்படி ?

ஒருகாலத்திலை இருதய வருத்தத்தை பணக்கார வருத்தம் எண்டு சொன்னவையள். :)

இப்ப இது தலையிடி மாதிரி நோர்மல் வருத்தமாய் வந்துட்டுது. :(

உதுக்கு என்ன சொல்ல வாறியள்..:cool:

Posted
புதினா இறால் குழம்பு
 
 ஒரு புதுவிதமான ரெசிபியான புதினா இறால் குழம்பை செய்யலாம். இவை மிகவும் சுவையுடன் இருப்பதோடு, விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
24-mintprawncurry-600_zps1g35koei.jpg
சரி, இப்போது அந்த புதினா இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!
 
 தேவையான பொருட்கள்:
 
இறால் - 200 கிராம்
 
புதினா - 1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது)
 
கொத்தமல்லி - 1/2 கட்டு (சுத்தம் செய்தது)
 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
 
வெங்காயம் - 2 (நறுக்கியது)
 
பூண்டு - 5 பற்கள்
 
பச்சை மிளகாய் - 1-2
 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
 
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
 
தேங்காய் பால் - 100 மி.லி
 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
 
உப்பு - தேவையான அளவு
 
எண்ணெய் - தேவையான அளவு
 
தண்ணீர் - 1 1/2 கப்
 
செய்முறை:
 
இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
 
பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
 
பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும்.
 
இப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/prawn-curry-with-mint-003086.html
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருகாலத்திலை இருதய வருத்தத்தை பணக்கார வருத்தம் எண்டு சொன்னவையள். :)

இப்ப இது தலையிடி மாதிரி நோர்மல் வருத்தமாய் வந்துட்டுது. :(

உதுக்கு என்ன சொல்ல வாறியள்..:cool:

முதலில ஆடு, கோழி ஊரில தீபாவளி, வருஷம் சாப்பாடு.  அதால சாதாரண ஆக்களுக்கு இருதய வருத்தம் இல்லை. எனக்குத் தெரிந்து அங்க கொலஸ்ட்ரோல் அறிவு குறைவாகவே இருந்தது. 

அங்க பணக்கார வருத்தம். இங்கே ? இங்கே கோழி, ஆடு என்று தினமும், தின்றால் வரும் தானே. பிறகு தேங்காயில பிழையைப் பிடிக்கிறது. 

இதய வருத்தத்தில் போனவரின் எட்டு செலவுக்கே தண்ணி, இறைச்சி அடிச்சு கவலையைக் கொண்டாடும் கூட்டம்.

உதுக்கு நாம என்னத்தை சொல்லுறது ?

 

Posted
இறால் குடைமிளகாய் குழம்பு
 
  பொதுவாக கடல் உணவுகளில் இறால் மிகவும் சுவையாக இருக்கும். இறாலுக்கு என்றே நிறைய பிரியர்கள் உள்ளனர். இத்தகைய இறாலை இதுவரை தனியாகத் தான் குழம்பு செய்திருப்போம்.
03-prawncapsicumcurry_zpstlrplpkp.jpg
ஆனால் இப்போது அவற்றை ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்திருக்கும் குடைமிளகாயுடன் சேர்த்து குழம்பு செய்யப் போகிறோம். அதிலும் சற்று வித்தியாசமாக, கோடையில் அதிகம் கிடைக்கும் மாங்காயையும் சேர்த்து செய்யலாம். சரி, அந்த சுவையான இறால் குடைமிளகாய் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:
 
இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
 
வெங்காயம் - 1 (நறுக்கியது)
 
பூண்டு - 8 பல் (நறுக்கியது)
 
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
 
தக்காளி - 1 (நறுக்கியது)
 
புளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
 
பச்சை மாங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
 
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
 
 பச்சை மிளகாய் - 2
 

-எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சற்று அதிகமாக எண்ணெய் ஊற்றி, இறாலைப் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும்.

பின்பு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து, 3 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

பிறகு தக்காளி, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் கலவை ஒன்று சேரும் வரை வதக்கவும். பின் புளி சாறு மற்றும் துருவிய மாங்காய் சேர்த்து, 3-4 நிமிடம் கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.

இறுதியில் குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள இறாலை சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க வைத்து, இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான இறால் குடைமிளகாய் குழம்பு ரெடி!!! இதனை சூடான சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/prawn-capsicum-curry-summer-002971.html

Posted
கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி
 
 இந்தியாவில் கொங்கன் ஸ்டைல் உணவுகள் மிகவும் பிரபலமானது. அத்தகையவற்றில் கடல் உணவுகளில் ஒன்றான இறாலை வைத்து செய்யப்படும் கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு மிகவும் சுவையானது. அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பை வீட்டிலேயே ஈஸியான முறையில் சமைக்கலாம்.
18-konkanprawnrecipe_zpsqwdw3vmi.jpg
இப்போது அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்:
 
இறால் - 1 கிலோ (சுத்தம் செய்து கழுவியது)
 
வெங்காயம் - 3 (பெரியது, நறுக்கியது)
 
தக்காளி - 3 (பெரியது, நறுக்கியது)
 
கொத்தமல்லி - 1 கட்டு (நறுக்கியது)
 
பூண்டு - 3 டீஸ்பூன் (நறுக்கியது)
 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 
புளி சாறு - 1 டீஸ்பூன்
 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 
கிராம்பு - 2
 
பட்டை- 1/2 இன்ச்
 
உப்பு - தேவையான அளவு
 
எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:
 
ஒரு சிறு பாத்திரத்தில் சுத்தமாக கழுவிய இறால், பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 15-30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
 
அடுத்து ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
 
பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து 5 நிமிடமோ அல்லது இறால் சுருங்கி, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.
 
பின் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி சேர்த்து, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Posted
இறால் மலாய் குழம்பு
 
 
 பலருக்கு இறால் மிகவும் பிடிக்கும். பெரும்பாலானோர் இறாலை வறுவல் போன்று செய்து சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதனை குழம்பு போன்று செய்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும். அதிலும் பெங்காலியில் பிரபலமான இறால் மலாய் குழம்பாக செய்து சாப்பிட்டால், அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
 
10-malaicurry_zpswsz54wqc.jpg
இங்கு அந்த இறால் மலாய் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
 
தேவையான பொருட்கள்:
 
இறால் - 1 கிலோ (சுத்தம் செய்தது)
 
வெங்காயம் - 1 + 1 (நறுக்கியது மற்றும் பேஸ்ட் செய்தது)
 
பூண்டு - 8 (பேஸ்ட் செய்தது)
 
பச்சை மிளகாய் - 2 + 6 (நீளமாக கீறியது மற்றும் பேஸ்ட் செய்தது)
 
தேங்காய் பால் - 1 கப்
 
கடுகு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 
உப்பு - தேவையான அளவு
 
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 
 
செய்முறை:
 
முதலில் சுத்தம் செய்யப்பட்ட இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயில் பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பிறகு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 
அடுத்து அதில் அரைத்து பேஸ்ட் செய்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
 
பின் கடுகு பேஸ்ட், சிறிது உப்பு சேர்தது கிளறி, மீண்டும் குறைவான தீயில் 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
 
இறுதியில் தேங்காய் பால் ஊற்றி, 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, பின் வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து, 7-8 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், இறால் மலாய் குழம்பு ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/prawn-malai-curry-006537.html
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறால் பண்ணையில வேலை போலக் கிடக்கு...!   ஆயினும் நல்ல பதிவுகள்...!!  :)

Posted

நன்றி இணைப்புக்கு சகோ! தொடருங்கள் :)

இறால் பண்ணையில வேலை போலக் கிடக்கு...!    

ஏன் இந்தக் கொலை வெறி சுவிக்கு?:grin: நீங்களும் இணையுங்கள் நல்ல றெசிப்பிகளை :0

சமையல் திரி இணைத்தால் பச்சை பரிசாக வழங்கப்படும் சகோ சுவி :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது மகிழ்ச்சியில் கூறியது மீனா!  இறால் றெசிப்பி ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் சுலபமாய் சமைக்கக் கூடியதாகவும் உள்ளது...!

  • 2 years later...
Posted
prawn pepper masala fry 1
96678f26f352ec7db2edf1c01cd462ab?s=112&d 

புதினா இறால் குழம்பு

தேவையான பொருட்கள்:

  • இறால் – -200 கிராம்
  • புதினா – -1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது)
  • கொத்துமல்லி – -1/2 கட்டு (சுத்தம் செய்தது)
  • இஞ்சி – -1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  • வெங்காயம் – -2 (நறுக்கியது)
  • பூண்டு – -5 பற்கள்
  • பச்சை மிளகாய் – -1-2
  • சீரகப் பொடி – -1/2 டீஸ்பூன்
  • மல்லித் தூள் – -1/2 டீஸ்பூன்
  • தேங்காய்ப் பால் – -100 மி.லி
  • எலுமிச்சைச் சாறு – -2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – -தேவையான அளவு
  • எண்ணெய் – -தேவையான அளவு
  • தண்ணீர் – -1 -1/2 கப்

செய்முறை:

  1. இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லிப் பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
    பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய்ப் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
  4. பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும்.
  5. இப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

http://koottanchoru.com/புதினா-இறால்-குழம்பு/

 

 

 

ஏர்வாடி இறால் சுக்கா

 

sl52698886.jpg

என்னென்ன தேவை?

இறால் - 200 கிராம்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 25 கிராம்,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு,
கறிவேப்பிலை - 1 கொத்து,
எண்ணெய் - 100 மி.லி.,
பச்சைமிளகாய் - 5,
சோம்பு தூள் - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 2 டீஸ்பூன்.

 

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பச்சைமிளகாய், இறால், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சோம்பு தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இறால் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

http://www.dinakaran.com

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.