Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டியை ஏற்க முடியாது! - என்கிறார் ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சமஷ்டியை ஏற்க முடியாது! - என்கிறார் ரணில் 
[Sunday 2015-08-16 09:00]
ஒஸ்லோ கூட்டறிக்கையை ஏற்கவோ, நிராகரிக்கவோ இல்லை, அது பேச்சுவார்த்தையில் ஆராய இணங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. தேர்தல் பிரச்சாரங்களின் முடிந்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஓய்வாக அலரி மாளிகையில் இருந்த போது த ஹிந்து அவரை செவ்வி கண்டது.
 
இதன் போது அவர், 1977 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமக்கு, 1977ஆம் ஆண்டைப்போன்றே இது முக்கியமான தேர்தல் என்று குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்சவின் சர்வதிகார ஆட்சியை தோற்கடித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான பொருளாதார அபிவிருத்திக்கான தேர்தலாக இது இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தவிர்ப்பதற்காகவே விகிதாசார பிரதிநிதித்துவமுறை தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவை பொறுத்தவரையில், வெற்றி பெற்றால் அவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்ற நிலை வெறுமனே அறிக்கைகளின் மூலமே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மஹிந்த பிரதமராக நியமிக்கப்படுவார் என்பது உள்ளக ஆவணம் மாத்திரமே என்றும் ரணில் குறிப்பிட்டார்.

தம்மை பொறுத்தவரை சமஸ்டித் தீர்வை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இதன்காரணமாகவே 13வது அரசியலமைப்பை கொண்டு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது குறுக்கிட்ட த ஹிந்து செய்தியாளர், 2002ஆம் ஆண்டு ஒஸ்லோ கூட்டறிக்கையில் ஐக்கிய இலங்கைக்குள் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் வடக்கு கிழக்கில் உள்ளக சுயநிர்ணயத்துக்கான அடிப்படையை ஏற்றுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டினார்.

ஓஸ்லோவில் மற்றைய தரப்பு முன்வைத்த இந்த யோசனையை தாம் முடியாது என்று கூறவில்லை. அத்துடன் ஏற்றுக்கொள்வதாகவும் கூறவில்லை. பேச்சுக்களின் போது அது தொடர்பில் ஆராயலாம் என்று கூறியிருந்ததாக ரணில் தெரிவித்தார்.

இந்த யோசனை உள்நாட்டில் வாக்குகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரணில், சிறிய நாடான இலங்கையில் கிராம மட்டத்திலேயே அதிகாரங்கள் பகிரப்படுவது சிறந்தது என்று குறிப்பிட்டார்.எனினும் இது பஞ்சாயத்து முறையில் இல்லாது சமூக தலைவர்களின் சமய தலைவர்களின் கொத்தணியிலான ‘கிராமராஜ்ய’ அதிகாரப்பகிர்வாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் இந்த ஏற்பாடு மாகாணசபைகளின் அதிகாரத்துடன் முரண்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை தொடர்பில் கலந்துரையாடல்கள் தொடர்வதாகவும் ரணில் தெரிவித்தார். எனினும் இந்த தாமதம் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கம் தமது பதிலை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளிகள் தொடர்பில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்போவதாக ரணில் தெரிவித்தார். அவர்களின் பிரதான தேவை கல்வி என்பது இனங்காணப்பட்டுள்ளதாகவும் ரணில் தெரிவித்தார்.இந்திய மீனவர் பிரச்சினையை பொறுத்தவரையில், இலங்கையின் கடல் பிராந்தியம் என்பதில் மாற்றம் இல்லை. எனினும் இழுவைப்படகுகளை நிறுத்த இந்தியா இணங்கினால் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் இலங்கையினால் நேரத்தை வழங்க முடியும் என்று ரணில் குறிப்பிட்டார்.

இதேவேளை மேற்கத்தைய நாடுகளுடன் சிறந்த உறவைக்கொண்டிருப்பதாக கூறிய ரணில், தமிழகத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=138300&category=TamilNews&language=tamil
 
  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டி மட்டுமல்ல.. தமிழர்கள் விரும்பத்தக்க.. ஒரு உருப்படியான தீர்வையும் ஏற்க வேண்டிய புறச் சூழலே இல்லை ரணில். இது தெரிஞ்சு தான் சிங்களப் பேரினக் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல் அமைந்திருக்கிறது. சம் சும் கும்பல் சொல்வது போல நிலைமை இல்லை. ரணில் வந்திட்டாலோ மகிந்த வந்திட்டாலோ.... அங்க ஒன்றும் ஆகாசத்தைப் பிச்சுக்கிட்டு வரப்போறதில்லை. :unsure::grin:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டி மட்டுமல்ல.. தமிழர்கள் விரும்பத்தக்க.. ஒரு உருப்படியான தீர்வையும் ஏற்க வேண்டிய புறச் சூழலே இல்லை ரணில். இது தெரிஞ்சு தான் சிங்களப் பேரினக் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல் அமைந்திருக்கிறது. சம் சும் கும்பல் சொல்வது போல நிலைமை இல்லை. ரணில் வந்திட்டாலோ மகிந்த வந்திட்டாலோ.... அங்க ஒன்றும் ஆகாசத்தைப் பிச்சுக்கிட்டு வரப்போறதில்லை. :unsure::grin:

பாருங்கள் பொது எதிரியும் தமிழினத்தின் இன்றைய  இறங்குநிலைக்கு அடித்தளமிட்டுவருமான  ரணிலின் திமிர்த்தனமான உரைகுறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை.  எந்த ஒரு கட்சியோ வேட்பாளரோ ரணிலை நோக்கி கண்டணத்தையாவது தெரிவிக்க முன்வராது தாயகத்திலாகட்டும் புலத்திலாகட்டும் துரோகிப்பட்டம் கொடுப்பதிலும்  தமிழருக்குள் பலப்பரீட்சை(கொள்கை?) செய்வதிலுமே கவனம் செலுத்துகின்ற சூழலில் தமிழினம் அகப்பட்டு நசிபடுகின்றது என்பதே உண்மையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் வந்தாலும், மகிந்த வந்தாலும் ஒன்றும் ஆகப் போவது இல்லை.

ஆனால் கஜே கஜே கம்பேனி வென்றால் ஒரு நாடு, இரு தேசம் என்பது வானத்தை பிரித்துக் கொண்டு நம் தலையில் வந்து விழும் அளவுக்குப் புறக்காரணிகள் குவிந்து கிடக்கிறன.

தமிழர்கள் கஜே குழுவை கேட்கவில்லை கூட்டமைப்பை தான் கேட்கிறோம் ...இனியாவது தமிழர்களின் நலன்களை அக்கறை கொள்ளுங்கள் ... அவன் இவனுக்கு கொம்பு சீவினது போதும் ....

ரணில் வந்தாலும், மகிந்த வந்தாலும் ஒன்றும் ஆகப் போவது இல்லை.

ஆனால் கஜே கஜே கம்பேனி வென்றால் ஒரு நாடு, இரு தேசம் என்பது வானத்தை பிரித்துக் கொண்டு நம் தலையில் வந்து விழும் அளவுக்குப் புறக்காரணிகள் குவிந்து கிடக்கிறன.

உங்கள் கூற்று பொய்பட போகின்றது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் இருவரராலும் ஒரு நிதர்சனமான கருத்தை இங்கே முன்வைக்க முடியாமல் போய் விட்டதா?

அல்லது மனநோயால் பாதிக்கப்பட்டு விட்டீர்களா?

எவர் வந்தாலும் தீர்வு வராது என்று அவர் நம்புகின்றார் 

இம்முறை ஒரு தீர்வு வரும் என்று நான் நம்புகின்றேன் 

இதில் எங்கே மனநோய் வருகின்றது 

முப்பது வருடங்கள் மன நோயால் செய்த கொலைகளை ஆதரித்த ஆட்களுக்கும் அதில் பங்கு இருக்கு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் உங்களிடம் பல திரிகளில் கேட்டுவிட்டேன்.

அந்த புலிகளின் முப்பது வருடங்களுக்கு முந்திய முப்பது வருட பாராளுமன்ற அரசியல் பேச்சுக்கள் சாதித்தது என்ன? 

ஆயுத வாசனையே இல்லாத அரசியல் சூழ்நிலையில் சாதிக்க முடியாததை ஆயுதம் வந்தும் சாதிக்கவில்லை.

ஆயுதம் மௌனித்த பின்னரும் சாதிக்க முடியவில்லை.

உங்களைப்போன்றோர் பைகளை நிரப்பியதை தவிர....

சாதிக்க முடியாமல் போனதுதான் எமது அரசியல் 

ஆனால்  வெறும் கொலை அரசியலை  செய்ததை ஆதரித்துவிட்டு  கருத்து வேறுபாட்டை மன நோயாக பார்க்கும் நிலை எப்படி வந்தது .

இங்கு யாருக்கு மன நோய் என்று கேட்கின்றேன் .

இன்னமும் ஒரு தீர்வில் நம்பிக்கை உள்ளவர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுகின்றோம் நம்பிக்கை இல்லாதவர்கள் விட்டுவிட்டு போகலாம் தானே .

  • கருத்துக்கள உறவுகள்

குசா விட்டு விட்டுப் போய்ட்டார்.

இனி இன்னொரு திரியில் வந்து முதல்ல இருந்து ஆரம்பிப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.