Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன்! - டோனி பிளேயர் வாக்குறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன்! - டோனி பிளேயர் வாக்குறுதி Top News
[Tuesday 2015-08-25 07:00]
இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் காணப்படும் தவறான நிலைப்பாடுகளை களைய குரல் கொடுக்கப் போவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயார் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித் தானிய முன்னாள் பிரதமர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் காணப்படும் தவறான நிலைப்பாடுகளை களைய குரல் கொடுக்கப் போவதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயார் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித் தானிய முன்னாள் பிரதமர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே இதனைக் கூறியுள்ளார்.

  

ஓகஸ்ட் 17ம் திகதி தேர்தலை மிக அமைதியாகவும் நியாயமானதாகவும் நடத்தியமை குறித்தும் பிளேயர் ஜனாதிபதிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கி ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களையும் அவர் பாராட்டியுள்ளார்.

இதனை தவிர பிளேயர் மன்றத்தின் சர்வதேச வேலைத்திட்டங்களின் போது இலங்கையுடன் இணைந்து செயற்படுவது பற்றியும் பிளேயர், ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளார்.இலங்கையின் சுற்றுலாத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டியுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் அதன் முன்னேற்றத்திற்கு வழங்கக் கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

maithri-tony-250815-seithy%20%281%29.jpg

 

 

maithri-tony-250815-seithy%20%282%29.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு சிக்கல் வந்தால் வேறு யாருக்கெல்லாம் சிக்கல்கள் வருமோ, அவர்கள் எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள்.  help.gif

tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் இனப்படுகொலையையும் இவர் தான் சர்வதேச அளவில் மலினப்படுத்தியவர். இவர் ஈராக் மீது போதிய ஆதாரங்கள் இன்றி போலி அறிக்கையை வைச்சு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டை சுமந்து கொண்டு திரியுறவர். இவரின் இதனை விட வேற எதனை எதிர்பார்க்க முடியும். இருந்தாலும் புலம்பெயர் மக்கள் இவருடன் தனியான ஒரு சந்திப்பை நிகழ்த்தி தமிழ் மக்களின் பக்கமுள்ள நியாயங்களையும் இவர் அறியச் செய்வது நல்லது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நியாயமான விடுதலைப் போராட்டத்தை முன்னின்று தடைசெய்த பெருமைக்குரியவர்.:(

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்த 'சதாம் ஹுசைன்' என்ற சங்கை ஊதிக் கெடுத்த பெரும் அறிவாளி..!

மூன்றாவது உலகப் போருக்கு வித்திட்ட பெருமை.. இவரையும்.. ஜோர்ஜ் புஷ் ஐயும் சாரும்!

கடற் கொள்ளைக்காரர்களுக்கு 'விருது' அணிந்து பெருமை கொண்ட.. பிரித்தானிய சாம்ராச்சியத்தின் விமபங்களில் ஒன்று..!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.