Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெண்புறா நடாத்தும் அன்றும் இன்றும் என்றும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி 16ம் திகதி வீரகாவியமான கிட்டண்ணாவிற்கு ஜனவரி 14ம் திகதியில் அஞ்சலி கூட்டம் நடாத்த வேண்டியதன் அவசியம் என்ன..? அதுவும் சில நூறு மக்களையே உள்வாங்க கூடிய மண்டத்தில்.

யார் தலைகீழாக நின்றாலும் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெறும்.

http://www.pngalvizha.com

Edited by MEERA

  • Replies 117
  • Views 15k
  • Created
  • Last Reply

தனிப்பட்ட பிடிவாதத்திற்கும் வரட்டுக் கொளரவத்திற்கும் மாவீரர்களை அசிங்கப்படுத்தாதீர்கள். பலா அண்ணாவின் இறப்புக்கு முன்னரே அறிவித்து ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வை பலா அண்ணாவின் பெயரால் குறைபிடித்தீர்கள்.

இப்போ கிட்டண்ணாவின் பெயரால் நாடகம் ஆடுங்கள். இப்பிடியே தொடர்ந்தால் நிச்சயம் தமிழீழம் வெகு விரைவில் கிடைக்கும்.

வெண்புறா அமைப்பு ஒரு உதவி செய்யும் நிறுவனம். அது எப்படி எல்லாம் நிதி திரட்ட முடியுமோ திரட்டட்டும். அதற்காக அதை ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் கட்டுப்படுத்தி அதன் சேவைகளை குறைப்பது தவறானது.

அதன் களங்கமற்ற சேவையை பாராட்டுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரட்டப் படும் நிதியின் நோக்கம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது அல்லவா?

எனவே இந்த வழி பிடிக்காதவர்கள நிதியை சேர்ப்பிக்க பிடித்த வழியை நாடுங்கள்.

நிதிசேரும் வழியைத் தடுக்ககாது இருக்கட்டும் உங்கள் விசுவாசம்.

இத்தனை தேசிய சோகநிகழ்வுகளுக்கு பின்னர் இங்கே தமிழ் படங்கள் வெறும் கதிரைகளுக்காகத்தானே ஓடிக்கொண்டிருக்கிறது.

மதுக்கடைகள் எல்லாம் விற்பனை இல்லாமல் கண்ணீர் வடிக்கின்றனவாம்.

வெறுங்கை கதைக்கிற விசுவாசத்தை விட , பொருள் தரும் வகையின் உபயோகம் மேல அல்லவா?

பொருள் தேடுவதற்கு எந்த வழியையும் பின்பற்றுவதானால் பல வழிகள் இருக்கின்றன. அது தமிழ்ச் சமுதாயத்திற்கு ஒவ்வாத வழியாயிருந்தால் என்ன? பணம் வந்தால் சரிதானே.

உண்மைதான் இத்தகைய அருமையான களியாட்ட விழா நடக்கின்ற நாளில் தானா கிட்டண்ணாவிற்கு அஞ்சலி செய்ய வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு வாழ்வில் காணக் கிடைக்காத ஒரு அருமையான நிகழ்வைக் குழப்ப வேண்டும். வேண்டுமானால் அவருடைய நினைவை ஒரு கிழமை நாளில் (16ம் திகதி) நாலைந்து பேர் தனியாகக் கூடிக் கொண்டாடலாம் தானே.

இவர்கள் வேண்டும் என்றே செய்கிறார்கள். நீங்கள் உங்கள் விழாவை சிறப்பாகச் செய்யுங்கள்.

அடுத்த மாவீரர் தினத்தன்று நமீதா, சகீலா போன்றவர்களை கூட்டிவந்து ஒரு குத்தாட்டம் போடுங்கள். பணம் நல்ல காரியத்திற்குப் போனால் சரிதானே. (ஈழத் தமிழர்களிடம் சேர்க்கின்ற பணத்தில் களைஞர்களுக்குக் கொட்டிக் கொடுத்தது போக)

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் ஆன முடிச்சை இதைவிட அழகாக போடமுடியாதென நினைக்கிறேன்.

கோவில் பூஜைகளைக்கூட கோலாகலப் படுத்துவதற்க்கு ஏன் சில பிரமுகர்களை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கு. .( இதற்காக கண்டதுகளயும் கொண்டுவந்து கொட்டமுடியுமா?) இல்லை இதனால் இவர்கள் கடவுளிலும் மேலானவர்கள் என்றுதான் பொருளாகுமா?

நால்ல motivation ஐக் கொண்டுதான் எதயுமே சாதிக்கவேண்டி இருக்கின்றது.

எம்முடைய சொந்த நலனுக்கு மட்டுமேயான அந்த கல்வி நாட்க்களின் வகுப்புக்களை கூட என்சோம்பேறித்தனம் இலகுவாக பகிஸ்கரிக்கும் போது ஏனய நலன்களிற்கான செயற்பாடுகள் எப்படி எம் மனதை வெல்லப் போகிறது.

. பொதுநலம் ஒரு கூட்டம் வைத்தால் ஈர்ப்பதற்க்கு ஒரு குதூகல மருந்து கண்டிப்பாக தேவையாகிறது.

அந்தச்செலவு வீண்தானே என்று கணக்கும் பார்த்தால் இல்லாபமும் பூச்சியமாத்தான் இருக்கும்.

சேதாரத்தை விட தேறியலாபம் பெரிதாய் இருக்கிறதுதானே என்று திருப்தி கொள்ள வேண்டியதுதான்.

உந்தத் தெரு நாய்களாம் "தானும் ....தாம், தள்ளியும் ....தாம்" என்ற மாதிரி, இங்கு கனக்க நல்லா சவுண்ட் விடுங்கள்! காசுக்கு போனால் எஸ்கேப்!!

இன்றைய நிலையில் இங்கு "ரி.ஆர்.ஓ"இற்கு காசு சேர்க்கப் படும் பாடிருக்கே, பெரும்பாடு! ரீ.ஆர்.ஓவே சரியாக இங்கு இயங்க முடியாத நிலை. அவ்வாறிருக்க இப்படியொரு வழியில் நிதி சேர்ப்பதில் என்ன தவறு!! நாளை ஒரு பெரும் யுத்தம் வெடிக்குமாயின், ரீ.ஆர்.ஓவின்செயற்பாடுகள் பன்மடங்கு அதிகரிக்க வேண்டி வரும். அந்த நேரம் இங்குள்ள நிலமைகளும் இறுகலாம்!! அப்படியாயின் யார் நிதி கொடுப்பது? சும்மா எல்லாத்துக்கும் "முட்டையிலை மயிர் பிடுங்குவதை" நிறுத்தி விட்டு உருப்படியாக ஏதையும் செய்வோம்.

உது ஒருபுறம் கிடக்க ....

"ஆட்டை ஏன் மாட்டுக்குள் ..." மாதிரி இங்கு வெண்புறா நடாத்தும் நிகழ்ச்சி பற்றி இருக்க, ஏன் கிட்டண்ணாவின் நிகழ்வை இங்கு கொணர்ந்து செருகுகிறீர்கள்.

சில கேள்விகள் எழுப்பப்படுகிpன்ற போது அதற்கான பதில்களை வழங்கமுடியாத வ.பி ஒன்று நாய்களைப் பற்றிக் கதைக்கிறது.

எம் தமிழ் மக்களுக்காக போராட்டங்களில் கலந்து கொள்கின்ற கவிஞர் வைரமுத்து உட்பட்ட பல கலைஞர்கள் இருக்க இதுவரையில் எந்த ஒரு எழுச்சிப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர்கள் ஏன் அழைக்கிறீர்கள். இதற்காகப் பதில் சொல்லுங்கள்.

மீண்டும் சொல்கிறேன். வெண்புறாவிற்காகஇலவசமாக நிகழ்ச்சி செய்து தருவதற்கு ஏராளமான எங்கள் கலைஞர்கள் இருக்கிறார்களே. அவர்க்ள உங்கள் கண்ணில் படவில்லையா?

சரி மேடையிலே விடுதலைப் பாடல்களைப் பாட வருகின்ற கலைஞர்கள் தயாரா?

kaluhu!!

உங்கள் கருத்துக்களின் பார்வை எனக்குப் பிடித்திருக்கிறது.

யதார்தங்கள் சில இலட்சியக் காரணிகளால் தீர்ககப்பட முடியாது.

இங்கே எத்தனைபேர் வெண்புறாவுக்கு வங்கிக் கணக்கினூடாக நிலையான வளங்கலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிடிக்காதவர்கள் அதையாவது செய்தல் பாராட்டத்தக்கது.

வேசியாடியாவது காசு சேர்த்து கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைப்போம் என்பவர்களையிட்டு நாங்கள் என்ன சொல்லமுடியும்?

எங்களுக்கு காசு சேர்க்க வேணும் ...அதுவும் உடம்பு வளையாமல் சேர்க்கோணும் ..வேற என்ன வழி?

இதில கேணல் கிட்டண்ணா வை பற்றியும் அவர் தியாகம் பற்றியும் எங்களுக் கென்ன கவலை?

சகோதரிகள் நமீதா சகீலா போன்றோரின் விபரம் தெரிந்தால் தாருங்கள்! .. வித்தியாசமாய் நினைக்காதேங்கோ..

இல்லை தொடர்ந்து காசு சேர்க்கத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனவரி 16ம் திகதி வீரகாவியமான கிட்டண்ணாவிற்கு ஜனவரி 14ம் திகதியில் அஞ்சலி கூட்டம் நடாத்த வேண்டியதன் அவசியம் என்ன..? அதுவும் சில நூறு மக்களையே உள்வாங்க கூடிய மண்டத்தில்.

யார் தலைகீழாக நின்றாலும் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெறும்.

http://www.pngalvizha.com

அந்தக்காலத்து சினிமா பாடகர் கிட்டப்பாவை தெரியும்.

ஆரப்பா இந்த கிட்டண்ணா?

அனுராதா வாற இடத்துக்குத்தான் நாங்கள் போவம்..

என்ன ஒரு பாலசுப்பிரமணியத்தை கூப்பிட்டு நிகழ்ச்சி வைக்கவா இவ்வளவு விமர்சனம். இது கூடிப்போச்சு எங்கேயோ வெண்புறாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சில பேர் முயற்சி செய்கினம் போல்தான் தெரிகிறது.

அப்ப அதே கலைஞர்களை வைத்துதானே பிரான்சில் தமிழர்புனர்வாழ்வுக்கழகம் 21.01.2007 ல் ஒரு கலை நிகழ்ச்சி செய்யப்போகிறார்கள்.

ஏன் இப்படி விதண்டாவாதம் செய்கிறீர்கள். பாலசுப்பிரமணியம் தமிழர் அறிந்த ஒரு பிரபல பாடகர். அவ்வளவுதான்.

ஏதோ சிங்கள பாடகனை கூட்டி வந்து நிகழ்ச்சி செய்வது போல் அல்லவா அலறுகிறீர்கள்.

இவ் இணையத்தளத்தை தமிழகமக்களும் பார்ப்பார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்வோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேசியாடியாவது காசு சேர்த்து கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைப்போம் என்பவர்களையிட்டு நாங்கள் என்ன சொல்லமுடியும்?

எங்களுக்கு காசு சேர்க்க வேணும் ...அதுவும் உடம்பு வளையாமல் சேர்க்கோணும் ..வேற என்ன வழி?

இதில கேணல் கிட்டண்ணா வை பற்றியும் அவர் தியாகம் பற்றியும் எங்களுக் கென்ன கவலை?

சகோதரிகள் நமீதா சகீலா போன்றோரின் விபரம் தெரிந்தால் தாருங்கள்! .. வித்தியாசமாய் நினைக்காதேங்கோ..

இல்லை தொடர்ந்து காசு சேர்க்கத்தான்.

கோவில் திருவிழாக்களுக்கு கூடத்தான் நிகழ்சிகள் மேடை ஏற்றப்படுகின்றன.

எனவே அந்த நிகழச்சியில் தராதரம் தேவை இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே எழுதிய கருத்துக்களைப் படித்தபோது களிப்பும், கவலையும் மாறிமாறி வந்தன. சில பாடகர்கள் ஈழத்து தாயகப் பாடல்கள் என்றாலே தூர ஓடுவார்கள். இங்கு வரவிருக்கும் பாடகர்கள் பாடிய தாயகப்பாடல்களை நானும் கேட்டிருக்கின்றேன். அப்படியிருக்கும்போது வரவிருக்கும் பாடகர்களைத் தாக்கிக் கருத்தெழுதுவதைப் படிக்க மனம் சோருகின்றது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் இங்கு வரவிருக்கும் பாடகர் ஸ்ரீநிவாசை தற்செயலாகச் சந்தித்து வணக்கம் கூறியவுடன் அவர் மிகவும் அக்கறையுடன் கேட்ட முதல் கேள்வி ~இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சனை எப்படி இருக்கின்றது?" என்பதுதான். அவர்களுக்கு தமது உணர்வில் இருக்கும் ஈழத்தமிழர்களைப் பற்றிய ஆதங்கத்தை ஊர்வலங்களில் சென்றுதான் வெளிக்காட்டவேண்டும் என்றில்லை என்பது எனது கருத்து.

எம்மில் எத்தனைபேர் இப்படியான ஊர்வலங்களில் கலந்துகொள்கிறார்கள்? பணம் கொடுக்கிறார்கள்? அப்படிச் செய்யாதவர்களுக்கு தமிழுணர்வு இல்லையென்று அர்த்தமா? இல்லை! தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சேவைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. அப்படியிருக்கும்போது இப்படியான மனம் நோகக்கூடிய கருத்துக்களை எழுதாமல் விடுவதுதான் சிறந்தது.

ஹரோவில் இருக்கும் இந்த மண்டபம் சுனாமி நிதிசேகரிப்பின்போது இலவசமாகவே வழங்கப்பட்டது. அதேபோல் இப்போதும் இருக்கலாம் அல்லவா? வரவிருக்கும் பாடகர்களும் இலவசமாகவே பாடலாம் அல்லவா?

நான் சொல்லவந்ததை குறுக்ஸ் சொல்லிவிட்டார் சும்மா முதலைக்கண்ணீர் வடிக்கதீர்கள் கிட்டண்ணாவுக்கு 14ம் திகதி அஞ்சலி செய்யக்காரணம் ஜாயிற்றுக்கிழமை என்பதாலே செவ்வாய் கிழமை எல்லாம் சுயலநல நோக்கத்தோடு ஒழுங்கு செய்யப்படுகிறது என்பது தெளிவு பல மாதங்களுக்கு முன்னமே அறிவிக்கப்பட்ட இவ் நிகழ்ச்சி இதை யோசிக்காமல் கிட்டண்ணாவின் அஞ்சலிக்கூட்டத்தை அதே நேரத்துக்கு வைத்திருப்பதானது அங்கு நடக்கும் வெட்டுக்குத்தையும் காழ்புணர்சியையும் தெட்டத்தெளிவாக்கியுள்ளது கிட்டண்ணா கிட்டண்ணா என கண்ணீர் வடிப்பவர்களே அவர் விரகாவியமான 16 திகதி அதாவது செவ்வாய்கிழமை அந்த நிகழ்வை ஒழுங்கு செய்யுங்களேன் உங்களின் வசதிக்கு ஏற்ப ஒரு மாவீரனின் வீரமரணத்தை இழிவாக்கி அதை இங்கு கொண்டுவந்து போட்டு வீண் விதண்டாவாதங்கள் செய்து உங்கள் காழ்புணர்சியை வெண்புறா மீதும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் மீதும் கொட்டாதீர்கள் இதை நான் தமிழர் புனர்வாழ்வுகழக அங்கத்துவன் என்ற ரீதியில் சொல்கின்றேன்

mi7 நீங்கள் யாரேன லண்டன் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினர் சொன்னார்கள் நீங்கள் ஏன் காழ்புணர்சியை அவர்கள் மீது கொட்டுகிறீர்கல் எனவும் சொன்னார்கள் சும்மா முற்போக்குவாதியாக உம்மை நீர் காட்டி யாரையும் ஏமாத்த வேண்டாம் அனைத்து சம்பவங்களையும் இங்கு எழுதுவேன்

உங்கள் கருத்துக்கள் யாவும் விதண்டாவாமே வெளிப்படையாக இயங்குபவரை விட மறைமுகமாக இயங்குபவர் பலர் அதில் நடிகர் சத்தியராஜ் உதாரணம்

உங்களுக்கு தெரியாவிடின் சும்ம இருங்கள் ஒருவரின் முயற்சியில் மன்ணல்லி போடாதீர்கள் ஆடிற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டும் என்பதுபோல எமது சனத்தீட இருந்து இப்படித்தான் கறக்கலாம் என்டால் கறந்தால் சரி இந்தப்பணம் சொகுசு வாழ்வுக்கு செல்லவில்லை என்பதை மனதில் வையுங்கள் அப்பாவிகளின் நிவாரணத்துக்கே செல்கிறது யார் அரிசி குத்தினாலும் பறுவாயில்லை எமக்கு எம் அரிசி குத்துப்பட்டால் காணும்

உண்டியல் குலுக்குதலை பற்றி ஒருவர் கூறினார் என்னிடம் இந்த உண்டியல் குலுக்கலை பற்றி சொல்லாதீர்கள் உண்டியல் குலுக்கி நொந்தவன் நான் எங்கட சனத்திடம் என் கண் முன் நடந்த சம்பவம் இது கேளுங்கள் சுனாமி காலத்தில் ஒரு தமிழரின் வீட்ட போனோம் அப்போது அங்க ஒரு சின்னப்பையன் கதவை திரந்தான் அப்ப நாம் அப்பாவை கூப்பிட சொன்னோம் பெரியவர் வந்தார் 1 டொலர் போட்டார் போட்டுட்டு எம் கண்முன்னாலேயே அந்தப்பையனுக்கு செம அடி கண்ட கண்ட நாய் வந்தா எல்லாம் கதவு திறக்கிறேஇயோ என கேட்டு இப்படிப்பட்ட எம் சனம் இருக்கையில் உண்டியல் பணம் என்படது எட்டாகனிதான் அதனால் தான் சொன்னேன் ஆடிற மாட்டை ஆடித்தான் கறக்கவேண்டுமென

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mi7 நீங்கள் யாரேன லண்டன் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினர் சொன்னார்கள் நீங்கள் ஏன் காழ்புணர்சியை அவர்கள் மீது கொட்டுகிறீர்கல் எனவும் சொன்னார்கள் சும்மா முற்போக்குவாதியாக உம்மை நீர் காட்டி யாரையும் ஏமாத்த வேண்டாம் அனைத்து சம்பவங்களையும் இங்கு எழுதுவேன்

தயவு செய்து அந்த அனைத்து சம்பவங்களையும் எழுதுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா வணக்கமுங்கோ ஒரு விடயம் எனக்கு விழங்கேல்லை யாராவதுபுரிய வையுங்க ஒரு பிறந்த நாளாயினும் சரி ஒரு நினைவு நாளாயினும் சரி எந்த வொரு நிகழ்வுமே அந்த நிகழ்வு நாளில் அல்லது அந்த நாள் கடந்த பின்னர் வசதியா வேறொரு நாளில்கொண்டாட படுவதுதான் உலக வழைமை ஆனால் 16 ந்திகதிமரணித்த கிட்டண்ணாவிற்கு அவர் மரணித்த நாளை விட இரண்டு நாளிற்கு முதலே நினைவு நாள் கொண்டாடுவது அந்தமாவவீரனை மட்டுமல்ல அவன் தியாகங்கள் ஏன் மாவீரர்களையே அவமான படுத்தி கேலிகூத்தடுவது போல இல்லையா????? அப்படியானால் இனி வரும் காலத்தில் மாவீரர் நாளையும் அந்த நாளிற்கு முதலே ஓகஸ்ற் மாத கோடை விடுமுறையில் வசதியான ஒரு ஞாயிற்று கிழைமை கொண்டாட போகிறீர்களா?? யாராவது தெரிந்தவங்கள் சொல்லங்கய்யா

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி முடியும் சாத்திரி சார். நிகழ்வுகக்கு பின்தானே கொண்டாட்டங்கள் செய்யலாம்.

வருசத்துக்கு வாழ்த்து சொன்னா ஒரு நன்றி கூட சொல்லத்தெரியாத சாத்திரி சார்.

கிட்டண்ணாவின் நினைவு தினத்தை ஒரு தமிழர் அமைப்பு எப்ப கொண்டாடினால் என்ன. லண்டனில் புலிகள் அமைப்பு வெளிப்படையாக இயங்குவதில்லை.

அதுக்கும் ,வெண்புறாவின் நிகழ்ச்சிக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்.

அந்த சங்கங்கள் உணர்ந்து நடந்தால் சரி

மீண்டும் கூறுகிறென்.... இது எமது இறுதி சந்தர்ப்பம் என்பதை மறக்க வேண்டாம்.

நாம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

Edited by E.Thuyawan

அரசிற்குப் பயந்து ஒதுங்குகிறார்கள் என்றும் சொல்ல முடியாது குமாரசாமி. ஏனென்றால் செஞ்சோலைப் படுகொலைகளைக் கண்டித்து ஆற்காடு வீரசாமி போன்ற அமைச்சர்களே போராட்டங்களில் கலந்து கொண்டார்கள்.

நடிகர் சத்தியராஜ், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் சீமான் (இன்னும் பலர்) போன்ற பல கலையுலகம் சார்ந்தவர்கள் இது போன்ற போராட்டங்களில் தமிழுணர்வுடன் கலந்து கொண்டனர்.

ஆனால் இவர்கள் பணம் பண்ண மட்டும் விமானம் ஏறும் கலை வியாபாரிகள்.

ஆகவே இந்த விழாவைத் தமிழுணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் புறக்கணிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியை நடத்துக்கின்ற அமைப்பைப் பற்றியோ அல்லது அவர்களது பணிகள் பற்றியோ எனக்கு எந்த விமர்சனமும் கிடையாது.

ஆனால் இந்த அமைப்பு ஏன் மானங் கெட்ட தனமாக எம்மை மதிக்காத எம் சகோதரர்களின் எம் குழந்தைகளின் அவலச் சாவைக் கண்டு கொள்ளாத கலை வியாபாரிகளை வரவழைத்து உபசரித்து எம் தமிழ் மக்களின் பணத்தை அவர்களுக்காகக் கொட்டிச் செலவழிக்க வேண்டும் என்பது தான் எனது கேள்வி

சரியான கேள்வி, உங்கள் உணர்வுகளுடன் எம்மையும் இணைத்து கொள்கிறோம்

வேசியாடியாவது காசு சேர்த்து கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைப்போம் என்பவர்களையிட்டு நாங்கள் என்ன சொல்லமுடியும்?

எங்களுக்கு காசு சேர்க்க வேணும் ...அதுவும் உடம்பு வளையாமல் சேர்க்கோணும் ..வேற என்ன வழி?

இதில கேணல் கிட்டண்ணா வை பற்றியும் அவர் தியாகம் பற்றியும் எங்களுக் கென்ன கவலை?

சகோதரிகள் நமீதா சகீலா போன்றோரின் விபரம் தெரிந்தால் தாருங்கள்! .. வித்தியாசமாய் நினைக்காதேங்கோ..

இல்லை தொடர்ந்து காசு சேர்க்கத்தான்.

வேசியாடியாவது காசு சேர்த்து கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைப்போம் என்பவர்களையிட்டு நாங்கள் என்ன சொல்லமுடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.