Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக மசாலா

Featured Replies

  • தொடங்கியவர்

உலக மசாலா: பிளாஸ்டிக் பை காற்று விற்பனை

 
china_2791907h.jpg
 

சீனாவின் குவாண்டோங் மாகாணத்தின் மலைப் பிரதேசத்தில் ‘சுத்தமான காற்றை’ பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த மலைப் பகுதிக்கு மலையேற்றம் செய்வதற்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, காற்றை விற்பனை செய்து வருகிறார்கள்.

எதிர்பாராத விதமாக இந்தத் தொழில் சூடு பிடித்துவிட்டதுதான் ஆச்சரியம். இரண்டு விதமான பிளாஸ்டிக் பைகளில் காற்று விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பை 98 ரூபாய்க்கும் பெரிய பை 288 ரூபாய்க்கும் கிடைக்கிறது. மலையின் இதயப் பகுதியில் இருந்து இந்தச் சுத்தமான காற்றைப் பிடித்து வருவதாகச் சொல்கிறார்கள். பையைப் பிரித்து காற்றை உடனே சுவாசிக்கலாம், வீட்டுக்கு எடுத்துச் சென்றும் பயன்படுத்தலாம். காற்று விற்பனை சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை. சீனாவில் காற்று மாசு அதிகம் என்பதால், சுத்தமான காற்றை மக்கள் நாடுகிறார்கள்.

காற்றும் விற்பனைக்கு வந்துவிட்டது!

 

பிற நாட்டினரைப் போலவே ஈஸ்டர் பண்டிகை, ரஷ்ய கிறிஸ்தவர்களாலும் விரும்பிக் கொண்டாடப்படுகிறது. ஈஸ்டரின் போது முட்டைகளின் மீது கைகளால் வரைந்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்குவார்கள். 1885-ம் ஆண்டு மூன்றாம் அலெக்சாண்டர் என்ற ஜார் மன்னர், தன்னுடைய மனைவிக்கு மிகச் சிறப்பான ஈஸ்டர் முட்டை ஒன்றைப் பரிசாக வழங்க நினைத்தார். அது அவர்களின் திருமணம் நடந்து இருபதாவது ஆண்டு. அரசாங்க நகை வடிவமைப்பாளர் பீட்டர் கார்ல் ஃபேபெர்ஜை, அற்புதமான ஈஸ்டர் முட்டை உருவாக்கித் தரும்படிக் கேட்டுக்கொண்டார்.

அவரும் அழகான ஒரு வெள்ளை முட்டையை உருவாக்கினார். அந்த முட்டையைத் திறந்தால் உள்ளே தங்கத்தால் ஆன மஞ்சள் கரு. அதையும் திறந்தால், தங்கத்தால் ஆன கோழி. கோழியைத் திறந்தால் வைரத்தால் செய்யப்பட்ட சிறிய கிரீடம். அந்தக் கிரீடத்தில் மிகச் சிறிய ரூபி கல்லால் செய்யப்பட்ட ஈஸ்டர் முட்டை! இந்த முட்டை அரசியை மட்டுமல்ல, எல்லோரையும் கவர்ந்துவிட்டது. அதிலிருந்து தொடர்ந்து விதவிதமான ஈஸ்டர் முட்டைகளை உருவாக்கும்படிக் கூறிவிட்டார் மன்னர். ஒவ்வோர் ஆண்டும் பீட்டர் கார்ல் ஃபேபெர்ஜ், தன்னுடைய கற்பனை வளத்தை எல்லாம் காட்டி முட்டைகளை உருவாக்கிக் கொடுத்தார்.

ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் அற்புதமாகவும் இருந்தது. முட்டைக்குள் கோட்டையுடன் கூடிய அரண்மனை, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஓவியங்கள், இயற்கைக் காட்சிகள், கப்பல், தேவாலயம் என்று செதுக்கப்பட்டிருந்தன. எல்லாமே விலை மதிப்பு மிக்க கற்கள், உலோகங்களால் செய்யப்பட்டவை. 1913ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு முட்டையின் இன்றைய விலை சுமார் 22.5 கோடி ரூபாய். இந்த முட்டை 63 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. அலெக்சாண்டர் மறைவுக்குப் பிறகு, இந்த வழக்கத்தை அவரது மகன் இரண்டாம் நிகோலஸ் தொடர்ந்தார். 32 ஆண்டுகள் தொடர்ந்த இந்த வழக்கம், 1917ம் ஆண்டு ரஷ்யப் புரட்சிக்குப் பின் முடிவுக்கு வந்தது. ஃபேபெர்ஜின் தனித்துவம் மிக்க 50 முட்டைகளில் 43 முட்டைகள் மட்டுமே இன்று இருக்கின்றன. அவையும் உலகின் பல பகுதிகளுக்கும் சென்றுவிட்டன.

ஆஆ… ஆடம்பர முட்டைகள்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/article8404874.ece?homepage=true&relartwiz=true

  • Replies 1k
  • Views 150k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக மசாலா: எல்லைகளைப் பாதுகாக்கும் சூப்பர் உயிரினங்கள்!

 
 
ulaga_masala_2794215f.jpg
 

உலகிலேயே மிகப் பெரிய நாட்டின் எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. ஆனால் ரஷ்யர்கள், ஓநாயும் நாயும் கலந்த வோல்கோசோபி என்ற கலப்பின விலங்கின் உதவியால் எளிதாக எல்லைப் பகுதிகளைப் பாதுகாத்து வருகிறார்கள். வோல்கோசோபி ஓநாய்களைப் போல உருவமும் பலமும், நாய்களைப் போல நட்பும் கீழ்ப்படியும் தன்மையும் கொண்டது. இவற்றுக்கு நன்கு பயிற்சி அளித்து, எல்லைகளைப் பாதுகாத்து வருகிறார்கள் ரஷ்யர்கள். ஆராய்ச்சியாளர்கள் நீண்ட காலம் இப்படிப்பட்ட கலப்பின விலங்கை உருவாக்க முயற்சி செய்தார்கள். எல்லாம் தோல்வியைச் சந்தித்தன. 2000-ம் ஆண்டில்தான் ஓர் ஓநாயும் நாயும் சேர்ந்து குடும்பம் நடத்தி, கலப்பின குட்டியைப் பெற்றெடுத்தன. கடந்த 10 ஆண்டுகளில் 40 வோல்கோசோபிகள் பிறந்து விட்டன. ஒவ்வொரு வோல்கோசோபிக்கும் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, பயிற்சி அளிக்கப்படுகிறது. கண்ணி வெடிகள், வெடி குண்டுகளைக் கண்டுபிடித்தல், எதிரிகளைக் கண்காணித்தல் போன்ற மிக முக்கியமான பணிகளை வோல்கோசோபிகள் செய்கின்றன. ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் 4 நிமிடத்தில் நுகர்ந்து குற்றவாளியைக் கண்டுபிடித்து விடும். ஆனால் வோல்கோசோபி 15 முதல் 20 நொடிகளில் கண்டுபிடித்துவிடக் கூடியது. ’’நாம் என்ன நினைக்கிறோமோ, அதை மிகத் துல்லியமாகச் செய்யக்கூடியவை இந்த வோல்கோசோபிகள். வேகம், விவேகம், புத்திசாலித்தனம் நிறைந்தவை. போதைப் பொருட்களோ, குற்றவாளிகளோ, வெடிகுண்டுகளோ இவற்றிடம் இருந்து தப்ப முடியாது. நாய்களை விட 6 மடங்கு நுகரும் திறன் கொண்டவை’’ என்கிறார் ரஷ்ய ராணுவ வீரர். பல ஆண்டுகளாக ரஷ்யர்கள் இந்த வோல்கோசோபி என்ற பாதுகாப்பு ஆயுதத்தை ரகசியமாக வைத்திருந்தார்கள். தற்போதுதான் வெளியே தெரிந்திருக்கிறது.

எல்லைகளைப் பாதுகாக்கும் சூப்பர் உயிரினங்கள்!

அதிகம் சாப்பிடுபவர்களின் எதிரியாகக் கருதப்பட்டு வந்தது வெள்ளை பிரெட். இவற்றை அதிகம் சாப்பிடும்போது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த உணவு விஞ்ஞானி. இவரது பிரெட் ஊதா வண்ணத்தில் இருக்கிறது. ஸோவ் வெய்பியாவோ உருவாக்கிய ஊதா பிரெட் மிகவும் மென்மையாகவும் பிரமாதமான சுவையுடனும் இருக்கிறது. இயற்கையான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த ஊதா நிறம். திராட்சை, ப்ளூபெர்ரி, ஸ்டார்ச் நீக்கப்பட்ட கருப்பு அரிசிகளைப் பயன்படுத்தி தயாரித்திருக்கிறார். இதனால் ஆந்தோசயனின் என்ற நிறமி கிடைக்கிறது. ஊதா பிரெட்டைவிட வெள்ளை பிரெட் 20% எளிதாக ஜீரணமாகக் கூடியது. வெள்ளை பிரெட் ஜீரணமாகும்போது அதிலுள்ள சர்க்கரை நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். ஆனால் ஊதா பிரெட் ஜீரணமாக நேரம் எடுத்துக்கொள்ளும். கொஞ்சம் கொஞ்சமாக கலோரிகளை வெளிவிடும். இதனால் உடல் பருமன், இதயம் தொடர்பான பிரச்சினைகள், நரம்பு தொடர்பான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துகிறது. புற்றுநோயிலிருந்து காக்கும் ஆற்றலும் இந்த ஆந்தோசயனின் நிறமிக்கு இருக்கிறது என்கிறார் வெய்பியாவோ. விரைவில் ஊதா பிரெட் சந்தைக்கு வர இருக்கிறது.

ஊதா பிரெட்டைத் தாராளமாக வரவேற்கலாம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8413060.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: 100 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இருக்கும் மருத்துவர்

 
 
masala_2795421f.jpg
 

பாகிஸ்தானில் வசிக்கும் 43 வயது ஜான் முகமது ஒரு மருத்துவர். சொர்க்கத்தில் தனக்கு ஓர் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக 100 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார். “எனக்கு 100 குழந்தைகள் பிறக்க வேண்டும். இஸ்லாம் மதத்தில் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது என் லட்சியம்.

இந்தக் குழந்தைகளின் உதவியால் எனக்கு சொர்க்கத்தில் நிச்சயம் ஓர் இடம் கிடைக்கும். இதுவரை 14 ஆண் குழந்தைகளும் 21 பெண் குழந்தைகளும் பிறந்திருக்கிறார்கள். 2 குழந்தைகள் பிறந்து சில வாரங்களே ஆகியிருக்கின்றன. என் லட்சியத்துக்காக நான் நான்காவது திருமணம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன். குழந்தைகளோடு சேர்த்து மொத்தம் 39 பேரும் 12 அறைகள் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கிறோம். எனக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. அதனால் குழந்தைகள் கேட்பதை உடனே வாங்கிக் கொடுத்துவிட முடிகிறது.

ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இடையே நான் வித்தியாசம் எல்லாம் பார்ப்பதில்லை. எல்லா குழந்தைகளையும் நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன். என்னால் 35 குழந்தைகளின் பெயர்களையும் சொல்ல முடியும். ஒவ்வொருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பது வரை அறிந்து வைத்திருக்கிறேன். நான் க்ளினிக்கில் இருந்து திரும்பும்போது 15 குழந்தைகளாவது ஓடி வந்து என்னைக் கட்டிக்கொள்வார்கள். அந்த சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. ஓய்வு நேரங்களில் குழந்தைகளோடு விளையாடுவேன். இந்த வாழ்க்கை வாழ நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்’’ என்கிறார் ஜான் முகம்மது.

ஒரு மருத்துவர் இப்படிச் செய்யலாமா?

சீனாவின் ஷாங்காய் நகரில் இருக்கும் ஒரு நிறுவனம், அலுவலகத்துக்கு செல்லப் பிராணிகளை அழைத்து வர ஊழியர்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ஸாவோ கோங்சோங் கூறும்போது, “ஊழியர்களை உற்சாகப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பெரும்பாலான ஊழியர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பது தெரிய வந்தது. அவர்களிடம் விவாதித்தேன். எல்லோருக்கும் பிடித்துவிட்டது. ஆனாலும் இது சரியா என்று எனக்குள் சின்ன சந்தேகம் இருந்தது. செல்லப் பிராணிகளை அனுமதித்த பிறகு, கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் அளவுக்கு அதிகமான உற்சாகத்தில் இருக்கிறார்கள். வேலையின் தரமும் உயர்ந்திருக்கிறது.

என் முயற்சி வெற்றி பெற்றதில் திருப்தியாக இருக்கிறேன். நாய்கள், பூனைகள், கினியா பன்றிகள் என்று எங்கள் அலுவலகமே களைகட்டுகிறது” என்றார். “வீட்டில் என் பூனை என்ன செய்கிறதோ என்ற டென்ஷன் இப்போது இல்லை. வேலை தொடர்பான மன அழுத்தம் காணாமல் போய்விட்டது. அலுவலகம் வருவது இப்பொழுதெல்லாம் அலுப்பூட்டும் விஷயமாக இல்லை. எல்லா நாட்களும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் ஓர் ஊழியர். ஸாவோவின் யோசனையை மற்ற நிறுவனங்களும் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இனி செல்லப் பிராணிகளும் அலுவலகம் கிளம்ப வேண்டும்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-100-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article8416771.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: கால்கள் இல்லாமல், 16 வருடங்களாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்!

 
 
masala_2797070f.jpg
 

சீனாவின் சோங்க்விங் மாகாணத்தில் வாடியன் கிராமத்தில் வசிக்கிறார் 37 வயது லி ஜுஹாங். இரண்டு கால்களையும் விபத்தில் இழந்த லி, 16 வருடங்களாக மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். 4 வயதில் ஒரு ட்ரக் கால்களில் ஏறியதில், இரண்டு கால் களையும் இழந்துவிட்டார் லி. உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாகி விட்டது. 4 ஆண்டுகள் அமைதியாக முடங்கிக் கிடந்தவர், 8 வயதில் நகர முயற்சி செய்தார். இரண்டு கைகளுக்கும் இரண்டு நாற்காலி களை வைத்துக்கொண்டு, நகர ஆரம்பித்தார். நகர முடியாதபோது நாற்காலிகளில் அமர்ந்துகொள்வார். பள்ளி செல்ல ஆரம்பித்தவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. சிறப்பாகப் படித்து, மருத்துவப் பட்டமும் பெற்றார் லி.

தனது கிராமத்திலேயே ஒரு க்ளினிக் ஆரம்பித்து, மருத்துவம் பார்த்து வருகிறார். லியின் குணத்தைப் புரிந்துகொண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த லியு ஸிங்கியான், அவரைத் திருமணம் செய்துகொண்டார். ‘’என் கணவர் எனக்குக் கால்கள் இல்லாத குறையே தெரியாதவாறு கவனித்துக்கொள்கிறார். அருகில் உள்ள கிராமங்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் என்னை அழைத்துக்கொண்டு செல்வார். இதுவரை 6 ஆயிரம் பேருக்கு மருத்துவம் செய்திருக்கிறேன். எனக்குக் கால்கள் இல்லாவிட்டாலும் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்ற முடிகிறது என்ற நிறைவே போதுமானது’’ என்கிறார் லி. கடந்த 15 ஆண்டுகளில் 24 நாற்காலிகளை நடப்பதற்குப் பயன்படுத்தியிருக்கிறார் லி. இவரது 12 வயது மகன், தன் அம்மாவைப் போலவே மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறான்.

தன்னம்பிக்கை என்பதை ’லி’ என்றும் அழைக்கலாம்!

மலேசியாவில் உள்ள டெஸ்கோ ஹைபர்மார்க்கெட்டில் ஒருவர் பொருட்களைத் திருடிக்கொண்டிருப்பதை மேனேஜர் பார்த்துவிட்டார். ஆனால் போலீஸை அழைக்காமல், அந்தத் திருடருக்கு அதே கடையில் வேலை கொடுத்தார்! 3 குழந்தைகளுக்குத் தந்தையான ஒருவர், 465 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்களை, பசியால் தவித்த தன் குழந்தைகளுக்காகத் திருடினார். ‘’என் மனைவி கடந்த வாரம் பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது, கோமாவுக்குச் சென்றுவிட்டார். 3 குழந்தைகள், மனைவியைப் பார்த்துக்கொள்வதால் என்னால் வேலைக்கும் போக முடியவில்லை. அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறோம். என் 2 வயது மகன் பசியால் மிகவும் துடித்தான். அதனால்தான் தவறு என்று தெரிந்தும் உணவுப் பொருட்களைத் திருடினேன். மேனேஜர் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.

ஆனால் என்னைத் திருடன் என்று குற்றம் சாட்டவில்லை. காவல்துறையிலும் புகார் அளிக்கவில்லை. அதற்குப் பதிலாக இந்தக் கடையிலேயே வேலை தருவதாகச் சொல்லிவிட்டார். என் மனைவியும் கோமாவில் இருந்து மீண்டு விட்டார். எனக்கு வேலையும் கிடைத்துவிட்டது. மேனேஜருக்கு எப்படி நன்றி சொல்வேன்’’ என்று நெகிழ்கிறார் அந்த மனிதர். ’’இவர் வழக்கமான திருடரைப் போல இல்லை. என் அனுபவத்தில் இவர் திருடர் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். இக்கட்டான சூழல் என்று தோன்றியது. அதனால்தான் வேலை அளித்தேன்’’ என்கிறார் டெஸ்கோ மேனேஜர் ரட்ஸுவான்.

நல்ல மனம் வாழ்க!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article8421727.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: உயிரைக் காப்பாற்றிய உள்ளங்களுக்கு நன்றி!

masala_2798408f.jpg
 

இரண்டு மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ஒருவன், குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு, தெருக்களில் எலும்பும் தோலுமாக அலைந்துகொண்டிருந்தான். டென்மார்க்கைச் சேர்ந்த அன்ஜா ரிங்கரென் லோவன் என்ற சமூக சேவகர், அந்தச் சிறுவனை அழைத்து வந்தார். மருத்துவப் பரிசோதனை செய்தபோது, சிறுவனுக்கு வயிற்றில் புழுக்கள் இருப்பதும், ரத்தச் சிவப்பு அணுக்கள் குறைந்திருப்பதும் தெரியவந்தது.

இதனால் குழந்தைக்குத் தினமும் ரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலை. அதிக செலவு பிடிக்கும் மருத்துவம். சிறுவனின் நிலையை விளக்கி, அன்ஜா நன்கொடை கோரினார். உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 6 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்தது. சிறுவனுக்கு மருத்துவம் செய்யப்பட்டது. ஹோப் என்று பெயரும் சூட்டினார்கள். எட்டே வாரங்களில் ஆரோக்கியமான குழந்தையாக மாறியிருக்கிறான் ஹோப்.

இன்று மற்ற குழந்தைகள் போல துறுதுறுவென்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான். ’’ பிறவிக் குறைபாடு ஒன்று இருப்பதால் அடுத்த வாரம் ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போகிறோம். அதற்குப் பிறகு ஹோப் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்’’ என்கிறார் அன்ஜா லோவன்.

ஓர் உயிரைக் காப்பாற்றிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி!

சீனாவைச் சேர்ந்த குவான்ஸோவ் ஏலன் என்ற சர்வதேச நிறுவனம் ஒன்று தன்னுடைய 6000 ஊழியர்களை, தென் கொரியாவுக்குச் சுற்றுப் பயணம் அழைத்துச் சென்றிருக்கிறது. 24 நகரங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 150 விமானங்களில் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள் தங்குவதற்கு 26 விடுதிகளில் 1,500 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 140 சுற்றுலாப் பேருந்துகளில் 280 சுற்றுலா வழிகாட்டிகளுடன் சுற்றிப் பார்த்தனர். இன்சியான் நகரில் ஃப்ரைட் சிக்கனும் பியரும் விருந்தாகக் கொடுக்கப்பட்டன. 6 இரவுகளும் 7 நாட்களும் கொண்ட இந்தச் சுற்றுலாவை ஊழியர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.

நம்ம ஊரிலும் இதை பாலோ பண்ணினால் எப்படி இருக்கும்!

சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கிறார் 25 வயது பீட்டர் பெர்கோவிட்ஸ். அவருக்கு ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டுக்கு வாடகை கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லை. இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீட்டைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கும் அவரிடம் பணம் இல்லை. ஓர் அறை குடியிருப்பில் வசிக்கும் நண்பரிடம் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டார். அவரும் சம்மதித்தார். ஹாலில் ஒரு மரப் பெட்டியை உருவாக்கினார் பீட்டர். அதற்குள் ஒரு படுக்கையைப் போட்டுக்கொண்டார். விளக்கு, மின் விசிறி வசதிகளையும் செய்துகொண்டார். எழுதுவதற்கும் படிப்பதற்கும் மடக்கும் மேஜையை அமைத்துக்கொண்டார். இப்போது நண்பருக்கும் தொந்தரவு இல்லை, பீட்டருக்கும் தொந்தரவு இல்லை. 1000 டாலர்கள் வாடகை கொண்ட இந்த குடியிருப்புக்கு பீட்டர் 400 டாலர்கள் கொடுக்கிறார், அவரது நண்பர் 600 டாலர்கள் கொடுக்கிறார்.

எளியவர்களுக்கு வாடகை ஒரு பூதாகரமாக மாறிவருகிறது…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article8425946.ece?homepage=true&relartwiz=true

 

  • தொடங்கியவர்

உலக மசாலா: பூனைகள் சர்கஸ்!

 
 
fish_2799565f.jpg
 

பாரிஸை சேர்ந்த Airbnb என்ற நிறுவனம் ஒரு போட்டியில் வெற்றி பெறும் 3 பேருக்கு ஓர் இரவு முழுவதும் சுறாக்களுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. கண்ணாடியால் மூடப்பட்ட ஒரு படுக்கை அறையை 33 அடி ஆழம் கொண்ட ஒரு நீர்த் தொட்டியில் இறக்குவார்கள். அந்தத் தொட்டியில் 35 சுறாக்கள் வசிக்கின்றன. கண்ணாடி அறைக்குள் இருந்து விளக்கு வெளிச்சம் மூலம் சுறாக்களைக் கண்டு ரசிக்கலாம். இரவு உணவு சாப்பிடலாம். தூக்கம் வந்தால் தூங்கிவிடலாம். இந்த அறையில் 2 பேர் படுக்கக்கூடிய அளவுக்கு படுக்கை, கழிவறை போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அறை பல முறை பரிசோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 11,12,13 தேதிகளில் இந்த நீர்வாழ் உயிரினங்கள் காட்சியகம் இரவில் திறந்துவிடப்பட இருக்கிறது. இவர்களுடன் நீச்சல் வீரர், புகைப்படக்காரர், சுறா ஆர்வலர், கடல் உயிரியல் ஆய்வாளர் போன்றோர் இருப்பர். ஓர் இரவு முழுவதும் அரிய உயிரினங்களான சுறாக்களைப் பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ளலாம். அவற்றுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம். உலகின் அற்புத மான விஷயங்களில் ஒன்று கடல். கடலையும் கடல் வாழ் உயிரினங் களையும் நாம் புரிந்துகொண்டால்தான், அவற்றை நம்மால் காப்பாற்ற முடியும். அதற்காகவே இந்த போட்டியை நடத்தி, வெற்றிப் பெற்றவர் கள் சுறாக்களுடன் ஓர் இரவு தங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. ‘‘சுறாக்கள் ஆபத்தான உயிரினங்கள் என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள். சுறாக்களுடன் நாம் நீந்தினாலும் அவை நம்மைக் கண்டுகொள்வதில்லை. கொஞ்சம் கவனமாக இருந்தால் போதுமானது. சுற்றுச்சூழல் மோசமாகிக்கொண்டு வரும் இந்தக் காலத்தில் சுறாக்களைக் காப்பாற்ற வேண்டியது அவசியம்.’’ என்கிறார் இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி. 18 வயது நிரம்பிய ஆரோக்கியமானவர்கள் விண்ணப்பப் படிவத்துடன், 50 முதல் 500 வார்த்தைகளில் சுற்றுச் சூழல் குறித்து தங்கள் புரிதல்களை எழுதி அனுப்ப வேண்டும். நடுவர்களால் தேர்ந் தெடுக்கப்படுபவர்கள் ஓர் இரவு சுறாக்களுடன் தங்கலாம்! நீச்சல் தெரிவது அவசியம். இரவில் செல்ஃபி எடுப்பதற்குத் தடை. போட்டி யாளர்கள் ஜாஸ் படத்தை பார்க்காமல் வருவது நல்லது என்கிறார்கள்.

சுறாக்களுடன் ஓர் இரவு, சுவாரசியமான அனுபவம்தான்!

பிரான்ஸைச் சேர்ந்த ‘actocats’ குழுவினர் இங்கிலாந்தில் நிகழ்ச்சி களை நடத்தி வருகிறார்கள். முழுக்க முழுக்க பூனைகளை வைத்து சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 5 அடி உயர கம்பத்தில் இருந்து பூனை நேர்த்தியாகக் குதிப்பதைப் பார்த்தால் பறவை போலத் தெரிகிறது! ஒரு கயிற்றில் மிக எளிதாக நடந்து வருகின்றன. வளையத்துக்குள் மிகச் சரியாகப் பாய்ந்து வெளிவருகின்றன. சர்கஸ் கலைஞர்கள் ரோஸ்லினும் அவரது கணவர் போரிஸ்ஸோவ்வும் பூனைகளை வைத்து சர்க்கஸ் நடத்தி வருகிறார்கள். ‘’தெருக்களில் ஆதரவு அற்று திரிந்த 27 பூனைகளை வைத்துதான் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு பூனைக்கும் 6 மாதங்கள் பயிற்சி அளித்திருக்கிறோம். பூனைகளைப் பழக்குவது மிகக் கடினமான செயல். அவை சுதந்திரமாக இருக்கவே விரும்பும். வேலை செய்ய விரும்பாது. பயிற்சியின்போது பொறுமை காத்து, சின்னச் சின்ன விருந்துகள் அளித்து, தயார் செய்திருக்கிறோம்’’ என்கிறார் ரோஸ்லின்.

பூனைகள் சர்கஸ்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D/article8429110.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: பெரியவர்களே செய்ய முடியாத சாதனை!

 
masala_2801918f.jpg
 

பெரும்பாலான பெரியவர்களே செய்ய முடியாத சாதனையைச் செய்துவிட்டார் ப்ளோரிடாவைச் சேர்ந்த 9 வயது மில்லா பிஸ்ஸோட்டோ. 4 அடி உயரமும் 24 கிலோ எடையும் கொண்ட மில்லா, உடற்தகுதியில் மிகச் சிறப்பானவராகத் திகழ்கிறார். சமீபத்தில் 24 மணி நேர ‘பேட்டில் பிராக்’ என்ற உடற்தகுதி பரிசோதனையில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தப் பரிசோதனையை அமெரிக்கக் கடற்படை, ராணுவ வீரர்களுக்காக உருவாக்கியிருக்கிறது.

’’பள்ளியில் நான் சரியாக விளையாடவில்லை என்று எல்லோராலும் கிண்டல் செய்யப்பட்டேன். என்னை அதிலிருந்து மீட்பதற்காக 7 வயதில் உடற்தகுதிக்கான பயிற்சி அளிக்க ஆரம்பித்தார் என் அப்பா. நான் மற்றவர்களுக்கு உதாரணமானவளாக இருக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருந்தது. வாரத்தில் 5 நாட்கள், தினமும் 3 மணிநேரம் பயிற்சி செய்தேன். பயிற்சியின்போது பல முறை காயம் அடைந்திருக்கிறேன்.

ஒருமுறை 8 அடி உயரச் சுவற்றில் இருந்து குதிக்கும்போது கால் பிசகிவிட்டது. அதுபோன்ற தருணங்களில் என்னுடைய மன வலிமை இன்னும் அதிகமாகிவிடும். சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பயிற்சியில் இறங்கிவிட்டேன். ஓடுதல், குதித்தல், நீந்துதல், மலையேறுதல், பளு தூக்குதல் என்று 25 விதமான பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை மட்டுமே தூங்குவேன். என்னுடன் என் அப்பாவும் பயிற்சியில் ஈடுபட்டார். என் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துவிட்டது. உலகிலேயே 9 வயதில் இந்தச் பேட்டில்ஃப்ராக் சோதனையை வென்ற முதல் சிறுமி நான் என்ற சாதனையை நிகழ்த்திவிட்டேன். ஆரோக்கியமான உணவு, வலிமையான உடல், கிண்டல்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இந்த மூன்றை மட்டும் என்னிடமிருந்து கற்றுக்கொண்டால் போதும்’’ என்கிறார் மில்லா.

ரோல்மாடல் மில்லா!

ஸ்வீடனைச் சேர்ந்த ’ஸ்மார்ட் டெக்ஸ்டைல்ஸ்’ நிறுவனம், உலகிலேயே முதல் இசை மேஜை விரிப்பை உருவாக்கியிருக்கிறது! மேஜை விரிப்பில் பியானோ, ட்ரம் போன்ற படங்கள் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீது கைகளை வைத்து அழுத்தினால் இசை வெளிவருகிறது. லி குவோ, மேட்ஸ் ஜான்சன் இருவரும் சேர்ந்து இசை மேஜை விரிப்பை உருவாக்கியிருக்கிறார்கள். லி-க்கு துணிகளைப் பற்றியும் மேட்ஸுக்கு இசையைப் பற்றியும் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உண்டு. இருவரும் சேர்ந்து தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதை உருவாக்கியிருக்கிறார்கள். மேஜை விரிப்புக்குள்ளே சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் மூலமே இசை வெளிவருகிறது. எதிர்காலத்தில் இந்தத் தொழில் நுட்பத்தை ஆடைகளில் பயன்படுத்திப் பார்க்கப் போகிறோம் என்கிறார்கள் லியும் மேட்ஸும்.

மேஜை விரிப்பில் இசை!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article8436798.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: விலையைக் கேட்கும்போதே மயக்கம் வருதே...

 
salad_2808675h.jpg
 

ஜப்பானைச் சேர்ந்த உணவுக் கலைஞர் மிட்சுகி மோரியாசு, ஆரோக்கியமான உணவுகளைச் சுவையாக வழங்குவதில் வல்லவர். கடந்த ஆண்டு ‘வெஜிடிகோ சாலட்’ என்ற புதுமையான சாலட்டை அறிமுகப்படுத்தினார். இது காய்கறிக் கலவையுடன் கேக்கும் சேர்ந்த உணவு. பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் அட்டகாசமாக இருக்கிறது. வண்ணக் காய்கறி அடுக்குகளுக்கு இடையே 2 சோயாபீன் ஸ்பான்ஞ் கேக் அடுக்குகள் வைக்கப்பட்டு, மேலே டோஃபு அல்லது சீஸ் மூலம் உருவாக்கப்பட்ட க்ரீம் தடவப்பட்டிருக்கிறது. இதில் சேர்க்கப்படும் வண்ணங்கள் இயற்கையானவை. இந்த கேக்குகளைத் துண்டுகளாக்கினால் சாலட் கேக் கிடைத்துவிடும். அழகாகவும் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும் வெஜிடிகோ சாலட்டை மக்கள் விரும்பிச் சுவைக்க ஆரம்பித்துவிட்டனர். இதில் சர்க்கரை சேர்க்கப்படுவதில்லை. அதிகமான நார்ச்சத்துகள் கிடைக்கின்றன. ஒரு துண்டு வெஜிடிகோ சாலட் 433 ரூபாய்.

விலையைக் கேட்கும்போதே மயக்கம் வருதே…

துருக்கியின் உஸும்லு கிராமத்தில் திருமணம் ஆகாத ஆண்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பெண்கள் பொதுவாக கிராமத்து இளைஞர்களைத் திருமணம் செய்துகொண்டு, காலம் முழுவதும் கிராமத்திலேயே வாழ்க்கை கழிக்க விரும்புவதில்லை. அதனால் 25 வயது முதல் 45 வயது வரை ஆண்கள் திருமணம் செய்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றது. அதற்குப் பிறகு திருமணமே நடைபெறவில்லை. 400 பேர் வசித்து வந்த இந்தக் கிராமத்தில் தற்போது 233 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள். ’’இஸ்தான்புல், அங்காரா நகரங்களுக்குத் திருமணம் செய்துகொண்டு செல்லவே பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் இங்கே வசிக்கும் ஆண்களுக்கு விவசாயத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர்களால் நகருக்குக் குடிபெயர்ந்து செல்ல முடிவதில்லை. வருமானமும் வசதியும் குறைவான கிராமத்து வாழ்க்கையைவிட, நகர வாழ்க்கையைப் பெண்கள் விரும்புகிறார்கள்’’ என்கிறார் நகர மேயர் முஸ்தபா பாஸ்பிலன். பொறுத்துப் பார்த்த ஆண்கள் கோரிக்கைகளைப் பிடித்துக்கொண்டு, போராட்டத்தில் இறங்கிவிட்டனர். துருக்கி அதிபர் தங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை. குடும்பக் கட்டுப்பாட்டைக் கடுமையாக எதிர்த்து வரும் அதிபர், பெண்கள் குறைந்தது 3 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். ஆனால் போராட்டக்காரர்களோ தங்கள் மனைவி 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்கிறார்கள்.

இப்படியெல்லாம் சட்டம் போட்டா குடும்பம் நடத்த முடியும்?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87/article8457863.ece

  • தொடங்கியவர்

உலக மசாலா: செந்தாமரைகளின் கடல்!

 
 
lotus_2807459f.jpg
 

தாய்லாந்தில் உள்ள நோங் ஹான் கும்பவாபி ஏரியை, ‘செந்தாமரை களின் கடல்’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை 8 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி முழுவதும் செந்தாமரைகள் பூத்திருக்கின்றன. இந்த ஏரியில் பூத்திருக்கும் செந்தாமரைகளைக் காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். செந்தாமரைகளைப் பார்ப்பதற்கு அதிகாலை ஏற்ற நேரம். பூக்கள் முழுவதுமாக விரிந்திருக்கும்.

அதனால் பகல் முழுவதும் இந்த ஏரி பரபரப்பாகவே இருக்கிறது. சிறிய கட்டுமரம், படகுகளில் செந்தாமரைகளுக்கு நடுவே சுற்றி வரலாம். புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஏரி பெரிதாக இருந்தாலும் ஒரு மீட்டர் ஆழமே கொண்டது. பாவோ நதியில் இருந்து ஏரிக்குத் தண்ணீர் வருகிறது. 5 மாதங்கள் இங்கே வரும் சுற்றுலாப் பயணிகளை வைத்தே இந்த மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது.

ஆஹா! லட்சக்கணக்கான செந்தாமரைகளின் சங்கமம்!

பூனைகள் பொதுவாகச் சுதந்திரத்தை விரும்பும் பிராணிகள். நாய்களைப் போல அவ்வளவு நெருக்கமாகவோ, விசுவாசமாகவோ இருப்பதில்லை. ரஷ்யாவின் பெல்கோர்ட் நகரில் கடந்த ஆண்டு ஒரு பூனை தன்னந்தனியே சாலையில் அமர்ந்திருப்பதை ஆஸ்டாப் ஸடுனாஸ்கி என்பவர் பார்த்தார். அடுத்தடுத்த நாட்களிலும் பூனை அதே இடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். அருகில் குடியிருந்தவர்களிடம் விசாரித்தார். அந்தப் பூனையை வளர்த்தவர், வீட்டை விற்றுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். அவர் காரில் போகும்போது இந்தப் பூனையும் காரைத் துரத்திக்கொண்டு வந்தது.

இந்த இடத்தில் கார் வேகமாக மறைந்துவிட்டது. பூனை அப்படியே நின்றுவிட்டது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் இந்த இடத்துக்கு வந்து, தன் உரிமையாளருக்காகக் காத்திருக்கிறது! அருகில் வசிக்கும் மக்கள் பூனைக்குத் தேவையான உணவுகளை வழங்குகிறார்கள். ஓராண்டு காலமாகக் காத்திருக்கும் பூனைக்கு உதவ முடிவு செய்தார் ஆஸ்டாப். பூனையைப் புகைப்படம் எடுத்து, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதுவரை பூனையைத் தேடி யாரும் வரவில்லை.

உரிமையாளரே, உங்களுக்காக ஒரு ஜீவன் காத்திருக்கிறது!

பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு ஒளி புகும் மரத்தைக் கண்டறிந்துவிட்டனர். ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த கேடிஹெச் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கண்ணாடி போல மரத்தை உருவாக்கியிருக்கிறது. கட்டிடக் கலையிலும் சூரிய சக்தியைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்திலும் இந்தக் கண்டுபிடிப்பு மிகப் பெரிய மைல் கல்லாக இருக்கும் என்கிறார்கள். ஒளி ஊடுருவும் மரம் விலை குறைவாகவும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருந்தால், கண்ணாடிகளுக்குப் பதில் இவற்றைப் பயன்படுத்தலாம். ஜன்னல்களில் பொருத்தினால் வீட்டுக்குள் வெளிச்சம் தாராளமாக வரும். மின்சாரத்தின் தேவையும் குறையும். கண்ணாடி போல அப்படியே பிம்பத்தைப் பார்க்க முடியாது. பகுதி அளவில் கண்ணாடி போல இருக்கும். மரத்தைக் கண்ணாடி போல மாற்றும் முயற்சி நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது. இந்த ஒளி புகும் மரத்தில் 80 முதல் 95 சதவீதம் ஒளி ஊடுருவ முடியும். இது கண்ணாடியை விட இரண்டு மடங்கு உறுதியானது. இன்னும் இந்தத் தொழில் நுட்பத்தை மேம்படுத்த இருக்கிறார்கள்.

அட! கண்ணாடி மரம்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article8454767.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: காருக்குள்ளே வாழ்க்கை!

 
masala_2811137f.jpg
 

அமெரிக்காவில் வசிக்கும் 26 வயது எட்வர்ட் ஜெல்ட், கடந்த ஓராண்டு காலமாக காரிலேயே வசித்து வருகிறார். வீடு இல்லாமலோ, குடும்பப் பிரச்சினை காரணமாகவோ அவர் இந்த முடிவை எடுக்கவில்லை. பெரிய நிறுவனத்தில் ரீஜினல் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிகிறார். இன்னும் திருமணம் நடக்கவில்லை. குறைந்த தேவைகளை வைத்துக்கொண்டு, நிம்மதியாக வாழ வேண்டும் என்ற கொள்கையில் இதுபோல வாழ்ந்து வருகிறார் எட்வர்ட்.

நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா முழுவதும் ஒரு சாகசப் பயணம் மேற்கொண்டேன். ஒரு பையில் உள்ள பொருட்களோடு 5 ஆயிரம் மைல்கள் சுற்றி வந்தேன். அப்போதுதான் வீடு என்பது ஆடம்பரமாகத் தோன்றியது. எளிய வாழ்க்கை வாழ முடிவு செய்தேன். வீட்டைக் காலி செய்துவிட்டு, காரில் குடி புகுந்தேன். நான் உணவு பொருட்களைச் சேகரித்து வைத்துக்கொள்வதில்லை. தேவைக்கு ஏற்ப வாங்கி, உடனே பயன்படுத்திவிடுவேன். மழைக்காலத்தில் காருக்குள் தூங்குவதற்கு வசதியாக, பின் சீட்டை படுக்கையாக மாற்றியிருக்கிறேன். ஒரு பரிசோதனை முயற்சியாகத்தான் இதை ஆரம்பித்தேன். ஆனால் இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இதிலேயே வாழ்க்கையைத் தொடர விரும்புகிறேன். இந்த வாழ்க்கையை விரும்பும் பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்வேன். வீடு இருப்பதால்தான் அளவுக்கு அதிகமான ஆசை, சேமிப்பு எல்லாம் தோன்றுகிறது. ஒரு மனிதனால் குறைந்த தேவைகளுடன் நிறைவாக வாழ முடியும்போது மற்றவை எல்லாம் ஆடம்பரம்தானே?’’ என்கிறார் எட்வர்ட்.

உங்கள் எளிய வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது எட்வர்ட்!

பிலடெல்பியாவில் ‘கான்க்ரீட் கவ்பாய்ஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள் ஒரு குழுவினர். பரபரப்பான கான்க்ரீட் சாலைகளில் கார்கள், பேருந்துகள், இரண்டு சக்கர வாகங்களுக்கு நடுவே, இவர்கள் குதிரைகளில் பயணம் மேற்கொள்கிறார்கள். குதிரை சவாரி செய்ய விரும்பும் குழந்தைகள், 5 டாலர்கள் கொடுத்தால் நீண்ட தூரம் சுற்றி வந்து, வீட்டில் இறக்கிவிடுகிறார்கள். ‘’குழந்தைகளுக்கு குதிரை ஓட்டுவதை மட்டும் நாங்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. குதிரையை அக்கறையாகக் கவனித்துக்கொள்வது எப்படி, குதிரையிடம் அன்பு, கருணையோடு பொறுப்பாக நடந்துகொள்வது எப்படி என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிறோம்.

இன்றைய குழந்தைகள் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அவர்களிடம் சக உயிரினங்கள் மீது அன்போ, அக்கறையோ அதிகம் பார்க்க முடிவதில்லை. இவர்களுக்கு விலங்குகள் பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துரைக்கிறோம்.’’ என்கிறார் மாலிக். கான்க்ரீட் கவ்பாய்ஸ் குறித்த ஒரு வீடியோ சமீபத்தில் சி.என்.என். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதற்குப் பிறகு குதிரை சவாரியை அதிகமானவர்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டனர்.

பெட்ரோல் விற்கிற விலையில் எல்லோருமே மீண்டும் குதிரை, மாடு என்றுதான் திரும்பிப் போக வேண்டுமோ?

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article8465092.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: இத்தாலியின் காஞ்சி நகரம்!

 
maslaa_2806028f.jpg
 

இத்தாலியில் உள்ள காஞ்சி நகரம், சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. குன்றின் மீது கட்டப்பட்டுள்ள வீடுகளைத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஆமையின் ஓடு போலக் காட்சி தரும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நகரம் பற்றி, இத்தாலிக்கு வெளியே யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது ஐரோப்பாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இத்தாலியின் மிக அழகிய நகரங்களில் ஒன்று காஞ்சி.

12-ம் நூற்றாண்டில் இந்த நகரம் உருவானது. 1950-ம் ஆண்டில் இங்கே 16 ஆயிரம் மக்கள் வசித்தனர். இன்று 7 ஆயிரம் பேர் நகரை விட்டுச் சென்றுவிட்டனர். கடந்த நூறு ஆண்டுகளில் அதிக அளவில் மக்கள் வெளியேறி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் ஆட்கள் இன்றி, பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. சில வீடுகளில் கழுதை, ஆடு, கோழி போன்றவை வசிக்கின்றன. வைக்கோல், இலை தழைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆள் இல்லாத வீடுகளை விற்பனை செய்ய முடிவு செய்தார் நகர மேயர்.

வீடுகளை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. இறுதியில் ஒரு யூரோவுக்கு வீடுகள் விற்கப்பட்டன. சில வீடுகள் இலவசமாகவே அளிக்கப்பட்டன. புதிதாக வீடு வாங்கியவர்கள் 3 ஆண்டுகளுக்குள் வீட்டைப் புதுப்பித்துவிட வேண்டும் என்பது சட்டம். ‘’எங்கள் மக்கள் பணத்தை விரும்பவில்லை. பயன்படாமல் பாழாகும் வீடுகள் யாருக்காவது பயன்பட்டால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள். இங்கே எஞ்சியிருப்பவர்கள் இந்த நகரை நேசிக்கிறார்கள். அதனால்தான் இப்படி வீடுகளை வழங்கி வருகிறோம்’’ என்கிறார் மேயர். காஞ்சியைத் தேடி சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால், இந்த வீடுகளை தங்கும் விடுதிகளாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள்.

மனிதர்களைத் தேடிய அதிசய நகரம்!

கருப்பு டாட்டூ, வண்ண டாட்டூகளைத் தொடர்ந்து தற்போது வெள்ளை டாட்டூகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. வெள்ளை மையை மட்டுமே பயன்படுத்தி இந்த டாட்டூ வரையப்படுகிறது. ஆனால் இந்த வெள்ளை டாட்டூவில் ஆபத்தும் அதிகம் என்கிறார்கள். அதனால் தொழில் முறை டாட்டூ கலைஞர்கள் வெள்ளை டாட்டூகளை அங்கீகரிப்பதில்லை. இதில் மயக்கம், வடு போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கறுப்பு டாட்டூவை விட வெள்ளை டாட்டூ வேகமாக மறையக் கூடியது. வெள்ளை நிறம் நாளடைவில் மஞ்சளாக மாறும்போது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. வெள்ளைத் தோலுக்கு எடுப்பாக இருக்காது என்று ஒருபக்கம் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், வெள்ளை டாட்டூ அல்ட்ரா வயலட் வெளிச்சத்தில் பார்த்தால் அத்தனை அட்டகாசமாக இருக்கும். கறுப்பை விட வெள்ளை டாட்டூ 3டி பரிமாணத்தில், தோலில் இருந்து சற்றுப் புடைத்துக்கொண்டு வெளியே தெரியும். நாம் தேர்ந்தெடுக்கும் டிசைன், தரமான டாட்டூ கலைஞர்கள் போன்றவற்றைப் பொறுத்து வெள்ளை டாட்டூ பலனைத் தரும் என்கிறார்கள். தற்போது வெள்ளை டாட்டூவுக்கு ஆதரவு குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்கிறார்கள்.

வெள்ளையோ, கருப்போ ஆபத்து இல்லாமல் இருந்தால் சரி.

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8450645.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: மழை வருவதை காட்டிக் கொடுக்கும் குடை!

 
 
masala_2812413f.jpg
 

மழை வருவதை அரை மணி நேரத்துக்கு முன்பே சொல்லிவிடும் குடையை உருவாக்கியிருக்கிறது பிரான்ஸ் நிறுவனம் வெஸ்ஸூ. இதன் பெயர் ‘ஊம்ப்ரெல்லா’. ஸ்மார்ட் போனில் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துகொண்டு, ஊம்ப்ரெல்லாவை இயக்க வேண்டும். வானிலை மாற்றங்கள் மட்டுமின்றி, வீட்டிலோ, வெளியிலோ குடையை மறந்து வைத்துவிட்டு வருவதைக்கூட இந்த ஆப் காட்டிக் கொடுத்துவிடும். இரண்டு விதங்களில் இந்தக் குடைகள் கிடைக்கின்றன.

3.1 அடி உயரம் கொண்ட வளைந்த கைப்பிடி கொண்ட குடை க்ளாஸிக். 0.8 அடி உயரம் கொண்ட நேரான கைப்பிடி கொண்ட குடை மாடர்ன். இந்தக் குடையைச் ’சிறிய வானிலை மையம்’ என்கிறார்கள். குடையில் இருக்கும் சென்சார்கள் நேரம், வெளிச்சம், ஈரப்பதம், அழுத்தம், வெப்பநிலை போன்றவற்றைப் பதிவு செய்து, அடுத்து அரை மணி நேரத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதைச் சொல்லிவிடுகிறது. குடையை மறந்துவிட்டுக் கிளம்பினாலோ, வேறு எங்கோ குடையை வைத்துவிட்டுக் கிளம்பினாலோ, ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் குடை இருக்கும் இடத்தை நமக்கு போன் காட்டிக் கொடுத்துவிடும். ‘’வானிலைக்கு ஏற்ப இந்தக் குடையின் வண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கும். இதுதான் ஊம்ப்ரெல்லாவின் தனிச் சிறப்பு’’ என்கிறார் டிசைனர் அலெக்சாண்டர். ஆன்லைன் வர்த்தகத்தில் ஊம்ப்ரெல்லா பிரமாதமான வரவேற்பைப் பெற்றுவிட்டது. கடைகளில் இனிமேல்தான் விற்பனைக்கு வர இருக்கிறது. ஒரு குடையின் விலை சுமார் 6 ஆயிரம் ரூபாய்.

அடடா! மழை வருவது இனி மயிலுக்கு மட்டுமல்ல, குடைக்கும் தெரியும்!

உக்ரைனில் வெலிகயா கோபன்யா கிராமம் ‘இரட்டையர்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. 4 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் 61 ஜோடி இரட்டையர்கள் வாழ்கிறார்கள். இந்தக் கிராமம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது. 2004-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 2, 3 ஜோடி இரட்டையர்கள் இங்கே பிறந்துகொண்டே இருக்கிறார்கள். ‘’எங்கள் கிராமத்தில் இரட்டையர்கள் பிறப்பது சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு இல்லை. மிக வயதான 3 ஜோடி பாட்டிகள் இங்கே வசித்து வருகிறார்கள். அவர்களுக்கும் முந்தைய தலைமுறைகளில்கூட இரட்டையர்கள் கணிசமாக இருந்ததாகச் சொல்கிறார்கள்’’ என்கிறார் கவுன்சிலர் மர்யானா சவ்கா. இந்த நிலத்தில் மட்டும் அதிக அளவில் இரட்டையர்கள் பிறப்பதற்குக் காரணம், இந்த ஊர்த் தண்ணீர் என்கிறார்கள்.

உக்ரைன் விஞ்ஞானிகள் தண்ணீரைப் பரிசோதித்துப் பார்த்ததில், அப்படி எந்தச் சிறப்பும் இந்தத் தண்ணீருக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தினமும் வெளியூர் ஆட்கள் இங்கே வந்து தண்ணீரைப் பிடித்துச் செல்கிறார்கள். வசந்த காலத்தில் கோன்ஸ்டானின் என்பவர் 50 கி.மீ. தூரத்தில் இருந்து வந்து, தண்ணீரைப் பல டிரம்களில் எடுத்துச் சென்று, விற்றுவிடுகிறார்! தண்ணீர் மூலம் குழந்தை பிறக்கிறதோ, இல்லையோ இந்தப் பகுதியிலேயே மிக சுத்தமான, சுவையான தண்ணீர் இது என்கிறார்கள்.

உணவு, மருந்து போன்ற காரணங்களால் இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88/article8470353.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ரோபோ அழகி!

 
masala_2804443f.jpg
 

ஹாங்காங்கைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் ரிக்கி மா, ரூ.33 லட்சம் செலவில் ஆளுயர ரோபோ ஒன்றை வீட்டிலேயே உருவாக்கியிருக்கிறார். இது அமெரிக்க நடிகை ஸ்கார்லட் ஜோஹான்சன் போல இருக்கிறது. தலை, கை, கால் ஆகிய குறிப்பிட்ட பாகங்களை அசைப்பதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

“சிறுவயதிலேயே ரோபோ மீது ஆர்வம் அதிகம். நானே ஒரு ரோபோவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முறையாக எந்த படிப்பையும் மேற்கொள்ளவில்லை. ஆர்வத்தால் நானே தேடிப் படித்து இந்த ரோபோவை உருவாக்கி இருக்கிறேன். நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று ரோபோவிடம் சொன்னால் சிரிக்கும், வெட்கப்படும், ‘ஹி..ஹி.. நன்றி’ என்று சொல்லும்.

அதுபோல புரோகிராமை உருவாக்கியிருக்கிறேன். இந்த ரோபோவுக்குக் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து, இதை இன்னும் பெரிய அளவில் செய்ய முடியுமா என்று யோசிப்பேன்” என்கிறார் ரிக்கி. தன்னுடைய அனுபவங்களைப் புத்தகமாகவும் எழுத இருக்கிறார்.

அழகான ரோபோ!

அமெரிக்காவின் 12 வயதான நாய் லூகா, 6 ஆண்டுகள் அந்நாட்டு ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறது. வெடிகுண்டுகளை முகர்ந்து பார்த்து, தகவல் தெரிவிப்பதில் லூகா நிபுணர். பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. 2012-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு குண்டு வெடித்தது. அதில் மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் லூகா தன் முன்னங்கால்களில் ஒன்றை இழந்தது. பலத்த காயமடைந்த லூகாவுக்கு ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு, மீண்டும் 3 கால்களில் நடக்க ஆரம்பித்துவிட்டது. தற்போது கலிபோர்னியாவில் இருந்து லண்டனுக்கு பிடிஎஸ்ஏ டிக்கின் மெடல் பெறுவதற்காக வந்திருக்கிறது. “லூகா மிகவும் புத்திசாலியானவள்.

வேலை இல்லாத நேரங்களில் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துவாள். இராக்கிலும் வேலை செய்திருக்கிறாள்லூகா. விபத்துக்குப் பிறகும் அதே உறுதி, தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறாள். லூகாவுக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் லூகாவின் உரிமையாளர் கன்னெரி வில்லிங்ஹாம். டிக்கின் மெடல் பெறும் 67-வது விலங்கு லுகா. 1943-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விருதை, இதுவரை 31 நாய்கள், இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற 32 புறாக்கள், 3 குதிரைகள், ஒரு பூனை ஆகியவை பெற்றிருக்கின்றன.

விருது பெற்ற லூகாவுக்கு வாழ்த்துகள்!

நிலநடுக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக ஒரு படுக்கையை உருவாக்கியிருக்கிறார் வாங் வென்ஸி. தூங்கும்போது நிலநடுக்கம் வந்தால் அதை உணர்ந்து, தப்பிச் செல்வதற்கு கால அவகாசம் இருக்காது. வீட்டில் இந்தப் படுக்கை இருந்தால், அதைத் திறந்து படுத்துக்கொள்ளலாம். அதற்குள் காற்று, தேவையான தண்ணீர், உணவுப் பொருட்கள், மெகாபோன், தீயணைப்புக் கருவி போன்றவை வைக்கப்பட்டிருக்கின்றன. நிலநடுக்கம் நிகழ்ந்து, மீட்கப்படும் வரை இந்தப் படுக்கை உயிரைக் காப்பாற்றி விடும். “நான் பல நிலநடுக்கங்களைச் சந்தித்து இருக்கிறேன். ஏராளமான உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்திருக்கிறேன். இயற்கை பேரிடர்களை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் அதில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். அதற்காகவே இந்தப் படுக்கை” என்கிறார் 66 வயது வாங் வென்ஸி.

உயிரைக் காக்கும் கண்டுபிடிப்பு!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF/article8445026.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: தனி மனிதர் உருவாக்கிய அற்புதம்!

 
masala_2815128f.jpg
 

அமெரிக்காவில் வசித்த எம்.சி. டேவிஸ் மிகப் பெரிய தொழிலதிபராகவும் சூதாட்டக்காரராகவும் இருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினார். ஏற்கெனவே அழிந்து வரும் காடுகளைப் பாதுகாக்கவும் புதிய காடுகளை உருவாக்கவும் ஆரம்பித்தார். இதற்காகத் தன் சொத்தில் இருந்து 9 கோடி டாலர்களைச் செலவு செய்தார். ஆயிரக்கணக்கான நிலங்களை ஃப்ளோரிடாவில் வாங்கினார்.

பைன் மரங்களை வளர்த்தார். மரங்கள் ஓரளவு வளர ஆரம்பித்த பிறகு விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றைக் கொண்டு வந்து காட்டுக்குள் விட்டார். வெளவால்களைக் காப்பதற்கு செயற்கை குகைகளை அமைத்தார். நீர்நிலைகளை உருவாக்கி, கடல் ஆமைகளை வளர்த்தார். 20 ஆண்டுகளில் 53 ஆயிரம் ஏக்கரில் காடுகளை வளர்த்திருந்தார் டேவிஸ்.

இயற்கையான காடுகளைப் போலவே புற்கள், மணற்குன்றுகள், சமவெளிகள், கழிமுகங்கள் எல்லாம் இந்தக் காட்டில் உருவாகிவிட்டன. அழிந்து வரக்கூடிய கடல் ஆமைகள் உட்பட 360 உயிரினங்கள் தற்போது வசித்து வருகின்றன. கடந்த ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் டேவிஸ். இனி தான் பிழைக்க முடியாது என்று தெரிந்தவுடன், மருத்துவமனையை விட்டு வெளியேறினார். தான் அமைத்த பைன் மரக் காட்டுக்குள் வந்து தற்கொலை செய்துகொண்டார் டேவிஸ்.

சுற்றுச்சூழலைக் காக்கும் தன்னுடைய 300 ஆண்டுகாலத் திட்டத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்து வைத்துவிட்டார் டேவிஸ். தான் செய்த விஷயங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளாததால், அவர் இருக்கும்போது அவரது சாதனை வெளியே தெரியவில்லை. அவர் மறைந்த பிறகு, அமெரிக்கா முழுவதும் பேசப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சூழலியலாளர்கள், பள்ளி மாணவர்கள் என்று ஏராளமானவர்கள் இந்தக் காடுகளுக்கு வந்து செல்கிறார்கள்.

தனி மனிதர் உருவாக்கிய அற்புதம்!

டோக்கியோவில் உலகின் முதல் முள்ளெலி கஃபே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. முள்ளெலி ஜப்பானைத் தாயகமாகக் கொண்ட விலங்கு அல்ல. ஆனாலும் ஜப்பானியர்கள் முள்ளெலிகளைச் செல்லப் பிராணியாக வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் விதவிதமான 30 முள்ளெலிகளை ஹாரி கஃபேயில் வைத்திருக்கிறார்கள். சாப்பிட வருகிறவர்கள் முள்ளெலிகளுடன் பல மணி நேரம் செலவிடலாம். கைகளில் வைத்து விளையாடலாம். முட்கள் இருந்தாலும் முறையாகக் கையாண்டால் ஆபத்து இல்லை என்பதால், விரும்பி வருகிறார்கள்.

ஒருவேளை முள்ளெலியை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பினால், 600 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ’’ஜப்பானில் இருக்கும் பூனை கஃபே, முயல் கஃபே போன்றவற்றைப் பார்த்துதான் இதை ஆரம்பித்திருக்கிறோம். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது. ஆனால் இப்போது கஃபேக்குள் நுழைவதற்கு வரிசையில் காத்திருக்கிறார்கள். முள்ளெலிகளும் மனிதர்களுடன் எளிதில் அன்பாகப் பழகிவிடுகின்றன. மனிதர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது’’ என்கிறார் மிஸுகி முரட்டா.

மன அழுத்தம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள்…!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article8478507.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் பாட்டி

 
masala_2816448f.jpg
 

போலந்தைச் சேர்ந்த 81 வயது பெண்மணி மிச்சலினா போரோவ்ஸ்கி. Subaru WRX STI என்ற ஸ்போர்ட்ஸ் காரை, அநாயாசமாக ஓட்டிச் செல்கிறார். தினம்தோறும் ஸ்போர்ட்ஸ் காரை வேகமாக ஓட்டிச் செல்லும் மிச்சலினாவைக் கண்டு ஆச்சரியப்படாதவர்களே இல்லை. ’’எனக்குச் சின்ன வயதில் இருந்தே கார்களின் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. ஹோண்டா, ஓபல், பி.எம்.டபிள்யு, மஸ்டா என்று பல கார்களை என் வாழ்க்கையில் பயன்படுத்தியிருக்கிறேன்.

லேட்டஸ்ட் ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டிச் செல்ல வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. ஓய்வு பெற்ற பிறகு கிடைத்த பணத்தை எல்லாம் சேர்த்து, 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினேன். 34 லட்சம் ரூபாய். விரைவிலேயே இந்த காருக்கும் எனக்கும் அப்படி ஒரு நட்பு உருவாகிவிட்டது. இந்த காரின் சத்தம் எனக்கு இனிமையாகக் கேட்கும். இன்று இந்த கார்தான் என் ஆன்மா என்று சொல்லும் அளவுக்கு எனக்கு நெருக்கமாகிவிட்டது. ஒரு வருஷத்துக்கு 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் கி.மீ. தூரம் வரை பயணிப்பேன். என்னுடைய வயதுக்கு இது சாதாரணமான விஷயம் இல்லை.

இந்த காரை பராமரிப்பதும் எளிது. தொந்தரவே கொடுக்காத வண்டி இது. நான் வேகமாக கார் ஓட்டுவதையும், வீடியோ கேம்ஸ் விளையாடுவதையும் பார்க்கும் மக்கள், நான் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்று நினைக்கிறார்கள். அதனால் எனக்கொன்றும் வருத்தமில்லை. என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்கிறார் மிச்சலினா.

ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும் சூப்பர் பாட்டி!

 

அமெரிக்காவின் டலாஸ் பகுதி பள்ளிகளில் 30 ஆண்டுகளாகக் காவலர் பணியைச் செய்து வந்தார் கிஃப்லிப் டெகில். இவர் வேலை செய்த அனைத்துப் பள்ளிகளும் வசதியானவர்கள் படித்த பெண்கள் பள்ளிகள். டெகில் ஓய்வு பெறும்போது முன்னாள் மாணவிகள் சேர்ந்து, 1 கோடியே 24 லட்சம் ரூபாயை அன்பளிப்பாக வழங்கினர். டெகில் ஓய்வு பெறும் செய்தி 2005-ம் ஆண்டு படிப்பை முடித்த மாணவிகளுக்குத் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் டெகிலுக்குப் பரிசளிக்க முடிவெடுத்தனர்.

விரைவில் பல மாணவிகளுக்கும் தகவல் பரவியது. மற்ற ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவிகளும் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவிகளும் தாங்களும் அன்பளிப்பு வழங்குகிறோம் என்று ஆர்வத்துடன் முன்வந்தனர். தகவல் தொடர்பு சாதனங்களில் தகவல் பரவ, மேலும் மேலும் நன்கொடைகள் குவிந்தன. குறுகிய காலத்துக்குள் 1 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி சேர்ந்துவிட்டது. ஏப்ரல் 11 அன்று, பழைய மாணவிகள் 200 பேர் பள்ளிக்கு வந்தனர். நன்கொடை அளித்தனர். “இவர் எங்களுக்கு நிறையக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

கருணையும் மரியாதையும் இவரைப் பார்த்தே மாணவிகள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மாணவிகள் இவ்வளவு அன்பைக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு முற்றிலும் தகுதியானவர் டெகில்’’ என்கிறார் தலைமை ஆசிரியர் லிஸா லீ.

ஆஹா! எவ்வளவு அன்பான உலகம் இது!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article8482763.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலகின் ஒரே மைக்ரோ சிற்பி!

masala_2817567f.jpg
 

பிரான்ஸைச் சேர்ந்த மைக்கேல் ஃப்ளாமண்ட், தன்னுடைய பேக்கரியை ஒரு யூரோவுக்கு விற்பனை செய்திருக்கிறார்! ஜெரோம் ஆகன்ட் வறுமையில் வாடுபவர். மைக்கேலின் உயிரைக் காப்பாற்றியதால், அவருக்கு இந்த பேக்கரி வழங்கப்பட்டிருக்கிறது. மைக்கேல் இப்படி ஒரு பேக்கரியையே கொடுக்கும் அளவுக்குப் பரந்த மனம் படைத்தவரல்ல. ஆனால் தினமும் தன் பேக்கரிக்கு வரும் ஜெரோமுக்கு ஒரு கப் காபியை இரக்கப்பட்டுக் கொடுப்பார். டிசம்பர் மாதம் வழக்கம் போல ஜெரோம் காபிக்காக பேக்கரிக்கு வந்தார். ஏதோ வாடை உள்ளிருந்து வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கார்பன் மோனாக்சைடு வெளியேறி, மைக்கேல் மயங்கி விழுந்திருந்தார். இன்னொரு பக்கம் நெருப்பு வேகமாகப் பரவ ஆரம்பித்திருந்தது. ஜெரோம் உடனே செயலில் இறங்கினார். மைக்கேலை வெளியில் அழைத்து வந்தார். அவசர உதவிக்கு போன் செய்தார். பற்றி எரியும் நெருப்பை அணைத்தார். ’’ஜெரோம் மட்டும் அன்று இல்லாவிட்டால், நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். கார்பன் மோனாக்சைடு வெளியேறியது என் நாசிக்குத் தெரியவே இல்லை. மருத்துவமனையில் 12 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. ஆனாலும் உயிருடன் இருப்பது ஆறுதலாக இருக்கிறது. மீண்டும் பேக்கரியைத் திறந்தேன். ஜெரோமை வேலைக்குச் சேர்த்தேன். பிரமாதமாக வேலை செய்தார். நான் சொல்வதை அப்படியே கேட்டுக்கொள்வார். அதனால்தான் ஒரு யூரோவைப் பெற்றுக்கொண்டு இந்த பேக்கரியை ஜெரோமுக்குக் கொடுத்துவிட்டேன். ஒரு திறமையாளரிடம் என் பேக்கரியைக் கொடுத்திருக்கிறேன் என்ற சந்தோஷம் மீதி வாழ்நாளுக்கும் போதும். தினமும் சில மணி நேரம் இங்கே நான் பணிபுரிய ஜெரோமிடம் அனுமதி வாங்கியிருக்கிறேன்’’ என்கிறார் மைக்கேல்.

ஒரு யூரோவுக்கு ஒரு பேக்கரி கொடுத்த வள்ளல் மைக்கேல்!

பிரிட்டனைச் சேர்ந்த கிரஹாம் ஷார்ட் மிகச் சிறிய நுணுக்கமான வடிவங்களைச் செதுக்குவதில் நிபுணர். இவரது மைக்ரோ சிற்பங் களை வெறும் கண்களால் காண முடியாது. லென்ஸ் மூலம் மட்டுமே பார்த்து, ரசிக்க முடியும். ஊசி முனை அளவு தங்கத்தில் கூட அற்புதமாகத் தன் திறமையைக் காட்டி விடுகிறார்! இரவு நேரங்களில்தான் வாகனங்களின் சத்தம் குறைவாக இருக்கும் என்பதால், கண் விழித்து வேலை செய்கிறார். ஸ்டெதஸ்கோப்பைக் காதில் வைத்து, தன்னுடைய இதயத் துடிப்பை உற்றுக் கவனிக்கிறார். 20 நிமிடங்களுக்குப் பிறகு இதயம் மெதுவாகத் துடிக்க ஆரம்பிக்கும்போது தன் வேலையை ஆரம்பிக்கிறார். அதிகாலை 6 மணி வரை வேலை செய்கிறார். ஒரு சிற்பத்தை முடிக்க இப்படித் தொடர்ந்து 4 இரவுகள் வரை வேலை செய்வார். ’’என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்த உலகில் என் னைப் போல இன்னொருவர் இருக்க முடியாது’’ என்கிறார் கிரஹாம். இந்த வயதில் இவ்வளவு நுணுக்கமாகச் சிற்பத்தை உருவாக்க முடி யுமா என்று பலரும் ஆராய்ந்தபோதுதான், கிரஹாம் மாத்திரைகளை உட்கொள்வது தெரிய வந்தது. இப்படி மருந்துகளை எடுத்துக்கொள் ளும்போது இதயம் 1 நிமிடத்துக்கு 20 தடவை மட்டுமே துடிக்கிறது. ஆனாலும் கிரஹாம் ஒரு சாதனையாளர் என்பதில் சந்தேகமே இல்லை!

உலகின் ஒரே மைக்ரோ சிற்பி!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article8486067.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

உலக மசாலா: உதாரண மனிதர்!

 
maslaa_2803099f.jpg
 

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியைச் சேர்ந்த 35 வயது டெரெக் மிட்செல், 247 கிலோ எடை கொண்டவராக இருந்தார். தன்னுடைய அளவுக்கு அதிகமான உடல் எடையை வைத்துக்கொண்டு, கடந்த ஆண்டு 5 கி.மீ. ஓட்டப் பந்தயத்தில் 21 தடவை கலந்துகொண்டிருக்கிறார். 10 கி.மீ. ஓட்டப் பந்தயத்தில் 2 முறை பங்கேற்று இருக்கிறார். ‘’என்னுடைய சகோதரிதான் என் சாப்பாட்டுப் பழக்கத்தை மாற்றினார். என்னைக் கட்டாயப்படுத்தி உடற்பயிற்சி செய்ய வைத்தார். 5 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளவும் வைத்தார். முதல் ஓட்டத்தில் கலந்துகொண்ட பிறகு எனக்கே ஆர்வம் அதிகரித்துவிட்டது.

என் எடையைத் தூக்கிக்கொண்டு நான் ஓடுவது பலரையும் பாராட்ட வைத்தது. என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தினார்கள். 20-வது ஓட்டப்பந்தயத்தை நான் முடித்தபோது, 40 கிலோ குறைந்திருந்தேன். உடல் எடை அதிகம் கொண்ட மிக மெதுவான மனிதனான நான், இன்று ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கிறேன். என்னுடைய எடை குறைப்பு முயற்சியும் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் பல்வேறு பத்திரிகைகளை என்னைத் தேடி வரவழைத்துள்ளன.

ஃபேஸ்புக்கில் ஏராளமானவர்கள் என்னைப் பின் தொடர்கிறார்கள். மனிதனுக்கு ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்று நான் அறிந்துகொண்டேன். நடக்க முடிவு செய்தால் ஒவ்வொரு நாளும் தூரத்தை அதிகப்படுத்திக்கொண்டே வாருங்கள். அதற்குப் பிறகு நீங்களே நினைத்தாலும் உங்கள் முயற்சியைக் கைவிட முடியாது’’ என்கிறார் மிட்செல்.

உதாரண மனிதர் டெரெக் மிட்செல்!

பிரிட்டனைச் சேர்ந்த கலைஞர் மெலடி கேனன், குதிரைகளின் உடலில் உள்ள முடிகளை மிக அழகாகச் செதுக்கிவிடுகிறார். கடந்த 3 ஆண்டுகளாக, தனித்துவம் மிக்கத் திறமையைக் காட்டி வருகிறார். ஆரம்பத்தில் நட்சத்திரம், இதயம், பூச்சி போன்ற எளிய வடிவங்களைத்தான் குதிரைகளின் உடலில் செதுக்க ஆரம்பித்தார். அவருடைய கலையைப் பார்த்து, ஏராளமானவர்கள் பாராட்டியபோது இன்னும் அழகாகச் செதுக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார். இதற்காக குதிரையின் உடலில் படம் எல்லாம் வரைந்துகொள்வதில்லை. மனதில் உள்ள ஓவியங்களை அப்படியே குதிரையின் உடலில் செதுக்கி விடுகிறார். குதிரையின் முடிகளை வெட்டுவது அழகுக்காக மட்டுமின்றி, சிக்குப் பிடிக்காமல் இருப்பதற்கும் உதவி புரிகிறது. ஒவ்வொரு குதிரைக்கு முடிவெட்டும்போதும் ஒரு தலைப்பு வைத்துக்கொள்கிறார் மெலடி.

அதற்கு ஏற்றவாறு உடலில் முடிகளை வெட்டி, ஓவியங்களாக மாற்றி விடுகிறார். சிலர் மெலடிக்குக் கண்டனங்கள் தெரிவிக்கிறார்கள். முடியை வெட்டுவதால் குதிரையை எளிதாகப் பூச்சிகள் கடித்துவிடலாம் என்பது அவர்களின் கருத்து. ஆனால் பெரும்பாலானவர்கள் மெலடியைப் பாராட்டித் தள்ளுகிறார்கள். ’’முடி வெட்டுவதால் குதிரைக்கு ஏதாவது பாதிப்பு இருக்கும் என்பதை நான் மறுக்கிறேன். நான் முடிவெட்டும்போது குதிரைக்கு எந்தவிதத்திலும் தொல்லை கொடுப்பதில்லை. நான் முடி வெட்டி முடிக்கும் வரை குதிரைகள் மிகவும் ஒத்துழைப்பு கொடுக்கின்றன, சந்தோஷமடைகின்றன’’ என்கிறார் மெலடி.

அழகு குதிரைகள்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/article8440826.ece?ref=relatedNews

  • தொடங்கியவர்

உலக மசாலா: நாமும் ஒரு முறை வரையலாமா?

 
 
masala_2819976f.jpg
 

ஜென்லுகா ஜெமினாய் என்ற இத்தாலியர் அமெரிக்காவில் டிசைனராகப் பணிபுரிகிறார். ஒருநாள் தெருவில் வருகிறவர் களிடம் காகிதத்தையும் பென்சிலை யும் கொடுத்து, சைக்கிளை வரையும்படிக் கேட்டார். அதாவது அவர்கள் சைக்கிளைப் பார்த்து வரையக்கூடாது. நினைவில் இருப்பதை வரைய வேண்டும் என்றார். பெரும்பாலானவர்கள் சைக்கிளைப் பயன்படுத்தியிருந்தாலும் அவர்களால் முழுமையாக வரைய முடியவில்லை. “நமக்கு நன்றாகப் பழக்கமான ஒரு பொருளை நினைவுத்திறன் மூலம் வரைவது கடினமாக இருக்கிறது. இதில் 25 சதவீதம் பேர் மட்டுமே சைக்கிளைச் சரியாக வரைந்திருந்தனர். சிலர் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வரைந்திருந்தனர்.

இன்னும் பலரை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். 7 நாடுகளைச் சேர்ந்த 3 வயது குழந்தை முதல் 88 வயது முதியவர் வரை மொத்தம் 376 பேரிடம் இந்தப் பரிசோதனையை நடத்தினேன். 90 சதவீதம் பெண்கள் செயினை முன் சக்கரத்தில் இணைத்திருந்தனர். சைக்கிளைத் தவறாக வரைந்தாலும் ஆண்கள் செயினைச் சரியாக வரைந்திருந்தனர். சைக்கிள் பற்றி அனைத்தையும் அறிந்திருந்தோம். அந்த நண்பர்களிடம் சைக்கிளை வரையச் சொன்னபோது அவர்களாலும் சரியாக வரைய முடியவில்லை. தொழில்நுட்பப்படி தவறாக வரையப்பட்ட இந்த சைக்கிள்களை நிஜமாக உருவாக்கிப் பார்த்தால் என்ன என்று நினைத்தேன்.

’வெலோசிபீடியா’ என்று பெயரிட்டு, சில சைக்கிள்களை உருவாக்கியிருக்கிறேன். இதை வரைந்தவர்கள் பார்த்தால் கூட அதிர்ச்சியடைவார்கள்!’’ என்கிறார் ஜென்லுகா. லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் இதேபோன்ற பரிசோதனை நடத்தப்பட்ட போதும் மக்களால் முழுமையாக வரைய முடியவில்லை. ஒரு பொருளை நினைவுக்குக் கொண்டு வந்து வரைவது மிகக் கடினமான விஷயம் என்கிறார்கள்.

அட! நாமும் ஒரு முறை வரைந்து பார்த்தால் என்ன!

சீனாவில் வசிக்கும் லியாங் ஸியாங் பார்த்து வியக்காதவர்களே இல்லை. 61 வயதிலும் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு, 30 வயது குறைந்தவர் போல தோற்றம் தருகிறார். வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சி செய்து, லியாங் இந்த நிலையை எட்டவில்லை. ’’10 ஆண்டுகளுக்கு முன்புதான் நான் ஜிம் பக்கமே சென்றேன். அதிலிருந்து தினமும் பல மணி நேரங்கள் உடற்பயிற்சி செய்து வருகிறேன். ஆரம்பத்தில் சீன விளக்குகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தேன். ஒருகட்டத்தில் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது. வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று கார் பந்தயத்தில் கலந்துகொண்டேன். என்னுடைய உடல் தகுதி நன்றாக இருந்ததால், பாடிபில்டராக மாற முடிவு செய்தேன். உடற்பயிற்சியிலும் உணவுக் கட்டுப்பாட்டிலும் இறங்கினேன். பத்து ஆண்டுகளாகப் பயிற்சி.

ஒரு நாளைக்கு 7 தடவை சிறிதளவு உணவு. 70 சதவீதத்துக்கு மேல் வயிறு நிறையவே கூடாது. புகழ்பெற்ற டகர் ராலியில் கார் ஓட்டிச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். இதில் நான் கலந்துகொண்டால் உலகப் புகழ்பெற்றுவிடுவேன். சீனாவின் முதியவர் ஒருவர் பங்கேற்ற பந்தயமாக இது இருக்கும். 2018-ம் ஆண்டு போட்டியில் நான் கலந்துகொள்வேன். அதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறேன். பணம் என்னை வாழ வைக்கவில்லை. என் கனவுகளும் லட்சியங்களும்தான் வாழ வைக்கின்றன’’ என்கிறார் லியாங். சீனாவில் லியாங் இளைஞர்களின் ரோல்மாடலாக வலம் வருகிறார். இணையத்தில் அவரது புகைப்படங்கள் லட்சக்கணக்கில் பகிரப்பட்டு வருகின்றன. இவரை அங்கிள் லியாங் என்று அன்புடன் அழைக்கிறார்கள்.

இளமையான முதியவர்!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/article8492909.ece?homepage=true&relartwiz=true

3318321100000578-3535448-image-a-1_14604

3318321E00000578-3535448-image-a-10_1460

 

Liang Xiang, 61, from Chengdu, south China

  • தொடங்கியவர்

உலக மசாலா: உலகம் முழுவதும் ஒரே மொழி!

 
 
masala_2821143f.jpg
 

மொழி தெரியாத இடங்களுக்குப் பயணம் செய்வது மிகக் கடினமான காரியம். ஆனால் ஐகான்ஸ்பீக் இருந்தால் போதும், எந்த நாட்டுக்கும் சிரமம் இல்லாமல் சென்று வந்துவிடலாம். டி-சர்ட்டில் ஐகான்ஸ்பீக் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் காட்டி, நமக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். தண்ணீர், பாத்ரூம், கார், பைக், சைக்கிள், தங்கும் அறை, விமானம், மழை, வெப்பம், மலை, காபி, பூட்டு, போன், பாட்டு, உணவு, கேமரா, கடிகாரம், புத்தகம், மருத்துவமனை, ஏடிஎம் என்று அடிப்படை விஷயங்கள் 40 படங்களாக டி-சர்ட்டில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளன.

இதை அணிந்துகொண்டு, தேவையான விஷயத்தை படத்தில் சுட்டிக் காட்டி, தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். பாஷை புரியாதவர்களுக்கு இதன் மூலம் எளிதாக விளக்கிவிட முடியும். ஐகான்ஸ்பீக் உருவாக்கியவர்கள் ஜார்ஜ் ஹார்ன் மற்றும் ஃப்ளோரியன் நாஸ்ட். நண்பர்கள் இருவரும் 2013-ம் ஆண்டு ஆசியா முழுவதும் பயணம் சென்றனர். ’’நாங்கள் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவில்லை. குக்கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டோம். அப்போதுதான் மொழி தெரியாத கஷ்டத்தைப் புரிந்துகொண்டோம். உடனே இதற்கு ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தோம்.

மொழியால் ஏற்படும் பெரிய இடைவெளியைக் குறைப்பதற்காகப் பல விதங்களில் முயற்சி செய்து பார்த்தோம். இரண்டு ஆண்டுகளில் ஐகான்ஸ்பீக் டி-சர்ட்டை உருவாக்கிவிட்டோம்’’ என்கிறார் ஜார்ஜ் ஹார்ன். நீளக் கை, குட்டைக் கை, கை இல்லாத டி-சர்ட் என்று 3 விதங்களில் ஐகான் டி-சர்ட்கள் கிடைக்கின்றன. ஐகான்ஸ்பீக் வெப்சைட் மூலம் உலகம் முழுவதும் யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியும். ‘‘எங்கள் ஐகான்ஸ்பீக் கண்டிப்பாக எல்லோருக்கும் உதவும். அடிப்படை விஷயங்களை மட்டுமே இவற்றின் மூலம் பெறமுடியும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்’’ என்கிறார் ஃப்ளோரியன் நாஸ்ட்.

உலகம் முழுவதும் ஒரே மொழி!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, சாதனைக்காகவும் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயது அலெஜண்ட்ரோ ஃப்ராகோசோ என்பவர், 94 மணி நேரம் தொடர்ந்து டிவி பார்த்து, புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் 92 மணி நேரம் டிவி பார்த்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். மல்டி மீடியா சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்று, இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அலெஜண்ட்ரோ போட்டியில் இறங்கியதில் இருந்து அவரது மனம், உடல் நிலை மருத்துவரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. டிவி மாரத்தான் முடிவதற்குள் இதயத் துடிப்பு அதிகரித்தது, தூக்கத்துக்காகக் கண்கள் கெஞ்சின. நல்லவேளை, அலெஜண்ட்ரோவுக்குப் பெரிய பாதிப்புகள் நிகழவில்லை. சீனாவில் 2014-ம் ஆண்டு உலகக் கால்பந்தாட்டத்தைக் காண்பதற்காக, 4 இரவுகள் தொடர்ந்து டிவி பார்த்த பலர் மாரடைப்பால் இறந்து போனார்கள்.

ஐயோ… கொடுமையான சாதனையாக இருக்கே…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/article8497515.ece?homepage=true&relartwiz=true

அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயது அலெஜண்ட்ரோ ஃப்ராகோசோ என்பவர், 94 மணி நேரம் தொடர்ந்து டிவி பார்த்து, புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

103543964-guinness.530x298.jpg?v=1460551

 

Courtesy of CyberLink

Alejandro “AJ” Fragoso during the binge-watching TV marathon

 

அவர் பார்த்த தொலைக்காட்சி தொடர்கள் 

 "Bob's Burgers","Game of Thrones", "Curb Your Enthusiasm", and "Battlestar Galactica".

இந்த போட்டியை ஒழுங்கு செய்த மென்பொருள் நிறுவனம் : CyberLink

 

@நவீனன் : பெரும்பாலும் இரண்டாவது தகவலுக்கு படங்கள் இணைப்பதில்லை. அதனால் உங்கள் செய்தில் வரும் இரண்டாவது இணைப்பு சம்பந்தமாக தேடி பார்ப்பேன். அப்போது கிடைக்கும் படங்களை உங்கள் திரியில் இணைக்கிறேன். மன்னிக்கவும் ஏதும் குறுக்கீடு என்றால். 

  • தொடங்கியவர்

உலக மசாலா: மனித இதய கேக்!

 
 
masala_2822443f.jpg
 

கேத்ரின் டே கேக் நிபுணர். விதவிதமாக மட்டுமல்ல, பலவகையான உருவங்களிலும் கேக்குகளை செய்து, எல்லோரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிடுவார். கேக் தயாரிப்பது பற்றி பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார். சமீபத்தில் நியூயார்க் நகரில் தன்னுடைய கேக்குகளைக் காட்சிக்கு வைத்திருந்தார் கேத்ரின். புறா, கடல்வாழ் உயிரினங்கள், மனிதத் தலைகள், குழந்தைகள், தேன்கூடு, ரோஸ்ட் செய்யப்பட்ட வான்கோழி, பயமுறுத்தும் லாம்ப்ரே, மனித மூளை, ரத்தம் வடிந்தபடி மனித இதயம் என்று ஏராளமான உருவங்களில் கேக்குகள் அணிவகுத்திருந்தன.

இதில் பெரும்பாலான கேக்குகள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தன. “மனித உறுப்புகள் மீது எனக்கு அளவற்ற ஆர்வம். அதனால்தான் அந்த உறுப்புகளை கேக்குகளில் கொண்டு வந்திருக்கிறேன். என்ன இது என்று முகம் சுளிக்காமல், எப்படி இவ்வளவு பிரமாதமாக உருவாக்க முடிந்தது என்று பாருங்கள். அப்பொழுது ரசிக்க முடியும். இந்த உருவங்களைக் கண்டு பயந்தவர்கள் கூட, வெட்டி துண்டுகளாக்கிக் கொடுத்தபோது ஆர்வத்துடன் சாப்பிட்டனர்”’ என்கிறார் கேத்ரின்.

என்னதான் சொன்னாலும் இதை ரசிக்க முடியலை கேத்ரின்.

துணி துவைப்பதை நேசிக்கும் ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை நம்புவதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் ‘வாஷிங் மெஷின் கலெக்டர்ஸ் க்ளப்’ என்ற பெயரில் ஓர் அமைப்பையே தொடங்கி நடத்தி வருகிறார்கள். இதில் உலகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். “நான் எங்காவது பார்ட்டிகளுக்குச் சென்றால் கூட, நண்பர்களிடம் துவைப்பது பற்றிதான் பேசுவேன் துவைப்பதை சலிப்பு தரும் விஷயமாக எல்லோரும் பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் மிக மகிழ்ச்சியோடு துவைக்கிறோம்.

விதவிதமான டெக்னிக்குகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறோம். எங்கள் அமைப்பு கூடும் நாட்களில் அதிகாலை 4 மணிக்குத் துவைக்க ஆரம்பிப்போம். விதவிதமான வாஷிங் மெஷின்களையும் சேகரித்து வருகிறோம். என்னிடம் 59 வாஷிங் மெஷின்கள் இருக்கின்றன. அனைத்தும் வேலை செய்யும் விதத்தில் நன்றாக இருக்கின்றன” என்கிறார் ஜான் சார்லஸ்.

சிலாகிக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கு?

ஆசியாவின் மிக நீளமான தொங்கு பாலங்களில் ஒன்று சீனாவின் யுன்னான் மாகாணத்தில் லாங்ஜியாங் நதி மீது கட்டப்பட்டிருக்கிறது. 8 ஆயிரம் அடி நீளமும் 920 அடி உயரமும் கொண்ட மிகப் பெரிய தொங்கு பாலம் இது. 5 ஆண்டுகளில் 1,438 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனை ஓட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன. மே 1-ம் தேதி பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட இருக்கிறது. சுற்றிலும் அழகான மலைகள், கீழே நதி, விவசாய நிலங்கள் என்று பாலத்தில் நடந்து வரும்போது இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். இந்தப் பாலம் மூலம் வாகனங்கள் செல்லும் தூரம் கணிசமாகக் குறையும் என்கிறார்கள்.

கண்ணாடிப்பாலம், தொங்குபாலம் என்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்கிறது சீனா!

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/article8502880.ece

 

The Washing Machine Collectors Club ஆரம்பிக்கப்பட்டது 1980 ஆறு உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கபட்டது 

இப்போது 3000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த கழகத்தில் இருக்கிறார்கள். 

 

33553A1F00000578-3547888-Wow_The_bridge_

 

கட்டப்படும் போது எடுக்கப்பட்ட படம் 

 

2B0F219600000578-0-image-a-6_14385960667

 

LongjiangTowerTopView.jpg

 

750px-LongjiangImageClean.jpg

Edited by பகலவன்

  • தொடங்கியவர்
23 hours ago, பகலவன் said:

 

 

 

@நவீனன் : பெரும்பாலும் இரண்டாவது தகவலுக்கு படங்கள் இணைப்பதில்லை. அதனால் உங்கள் செய்தில் வரும் இரண்டாவது இணைப்பு சம்பந்தமாக தேடி பார்ப்பேன். அப்போது கிடைக்கும் படங்களை உங்கள் திரியில் இணைக்கிறேன். மன்னிக்கவும் ஏதும் குறுக்கீடு என்றால். 

தொடருங்கள் பகலவன்..

எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

நானும் நினைப்பது ஆனால் நேரம் கிடைக்க வேண்டுமே.

  • தொடங்கியவர்

உலக மசாலா: ஐயோ, பாவம் டேனியல்...

 
 
daniel_2824096f.jpg
 

ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஆண்ட்ரே எரேமீவ். இவரது நீண்ட நாள் கனவு, தன்னுடைய சமையலறை குழாயில் பியர் வரவழைக்க வேண்டும் என்பது. தன்னுடைய யோசனையைப் பலரிடம் சொன்னபோது எல்லோரும் சிரித்துவிட்டனர். ஒருநாள் அவரது குடியிருப்பின் தரைத் தளத்தில் பியர் கடை வந்தது. கடை உரிமையாளரைச் சந்தித்து தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார் ஆண்ட்ரே. முதலில் கடைக்காரர் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி ஆண்ட்ரே சொல்வதைக் கேட்ட பிறகு, சம்மதம் தெரிவித்தார். அரசாங்க அனுமதியைப் பெற்றார். ‘‘ரஷ்யாவிலேயே சொந்தமாக பியர் பைப் லைன் வைத்திருப்பவன் நான்தான் என்று நினைக்கிறேன். நான் எதிர்பார்த்ததைவிட எல்லா வேலைகளும் மிக எளிமையாக முடிந்தன. கடையில் இருந்து மெல்லிய குழாயை என் சமையலறையில் இணைத்தேன். ஒரு குழாயில் சுடு தண்ணீர். இன்னொரு குழாயில் குளிர்ந்த நீர். மூன்றாவது குழாயில் ஜில்லென்ற பியர். நினைத்த நேரத்தில் புத்தம் புது பியரைப் பருக முடிகிறது. என்னுடைய கனவு நிஜமாகிவிட்டது. இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?’’ என்கிறார் ஆண்ட்ரே. இதற்கான செலவை மட்டும் ஒருவரிடமும் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால் செலவு செய்ததற்கு ஏற்ற பலனை அனுபவித்து வருவதாகச் சொல்லி வருகிறார் ஆண்ட்ரே!

இந்த விஷயம் மட்டும் நம்ம ஆட்களுக்குத் தெரிஞ்சிடவே கூடாது…

பிரிட்டனைச் சேர்ந்த டேனியல் பென்னாக், தினமும் உருளைக்கிழங்கு சிப்ஸும் சாசேஜும்தான் இரவு உணவாக எடுத்துக்கொள்கிறார். 26 வயது டேனியல், 22 வருடங்களாக இந்த உணவு பழக்கத்தைக் கடைபிடித்து வருகிறார். இந்தப் பழக்கத்தை மாற்றுவதற்கு எத்தனையோ தடவை அவரது வீட்டில் முயற்சி செய்தும் பலன் இல்லை. ஏதோ சாப்பிட்டால் சரி என்று விட்டுவிட்டனர். ஆனால் இன்று டேனியலுக்கு உணவே ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. 4 வயதில் இரவு உணவாக எதையும் சாப்பிட மறுத்து வந்தார் டேனியல். அவரது அம்மா, உருளைக்கிழங்கு சிப்ஸையும் சாசேஜையும் கொடுத்து சாப்பிடச் சொன்னார். அன்றிலிருந்து இன்று வரை அதையே தொடர்ந்து வருகிறார் டேனியல். ‘’நான் இதுவரை காய்கறிகளைச் சாப்பிட்டதே இல்லை. அவை எப்படி இருக்கும் என்றே தெரியாது. வாழைப்பழங்களும் ஆப்பிள்களும் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவற்றைச் சாப்பிட்டால் என் உடல்நிலை மோசமாகிவிடும். ’’ என்கிறார் டேனியல். சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்தபோது, டேனியலுக்குக் குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிடும் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தாங்கள் விரும்பும் உணவு மட்டுமே பாதுகாப்பானது என்று நினைப்பார்கள். மற்றவை எல்லாம் உடலுக்குத் தீங்கானது என்று கருதுவார்கள். குழந்தையாக இருக்கும்போதே இந்தக் குறைபாட்டைப் படிப்படியாகச் சரிசெய்து இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஐயோ, பாவம் டேனியல்…

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/article8508009.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.