Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது அரசியல் பயணத்தை பூச்சியமாக்கியவர் நீங்கள்! - வாழ்த்துச் செய்தியில் சம்பந்தனை சாடிய சங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எதிர்க்கட்சித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தன்னுடைய அரசியல் பயணம் பூச்சியமானதுக்கு தாங்கள் தான் காரணமென்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தன்னுடைய அரசியல் பயணம் பூச்சியமானதுக்கு தாங்கள் தான் காரணமென்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

   

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக தெரிவானதற்கு எனது வாழ்த்துக்கள். இச்சந்தர்ப்பத்தில் எமது இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வை பெறுவதற்கும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் பூரண ஒத்துழைப்பை கொடுப்பீர்கள் என நம்புகின்றேன்.

மிக்க நட்புடனும் முற்று முழுதாக மாறுபட்ட சூழ்நிலையிலும் இப்பதவியை ஏற்றுள்ளீர்கள். பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக்க உற்சாகத்துடன் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கொடுக்கும் வரவேற்புகளைப் பார்த்து எனது மனதை மாற்றி உங்களை வாழ்த்தவும் உங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கவும் தீர்மானித்தேன்.

பிரதம மந்திரி, சத்தியப்பிரமாணம் செய்த வேளையில் முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய ஜனாதிபதியும் சமூகம் கொடுத்திருந்த நிகழ்வும், ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் 64ஆம் ஆண்டு விழாவின் போது இன்றைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் அருகருகே அமர்ந்திருந்த காட்சியையும் கண்டு நாம் இருவரும் வெட்கப்பட்டிருக்க வேண்டும். நாம் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை, பேசுவதுமில்லை. எமது மக்களை பாதிக்கும் எந்த முக்கிய விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடுவதுமில்லை. எம் இருவருக்கும் இடையில் வேறு எதுவிதகுரோதமும் இருக்கவில்லை என்றே எண்ணுகின்றேன்.

எனது நேர்மையான அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட அரசியல் பூச்சியத்துக்கு வந்ததற்கு நீங்களே காரணமாக இருந்துள்ளீர்கள். உங்கள் மீது நீண்டகாலமாக இருந்து வந்த கசப்புணர்வைப் பற்றி இச்சந்தர்ப்பத்தில் கூறுவது தப்பில்லை என எண்ணுகின்றேன். எனது இந்த கசப்புணர்வை நீக்குவதன் மூலம், உங்கள் பாதையில் குறுக்கிடக் கூடிய தடைகள் விலக வாய்ப்புண்டு. நான் ஒரு நேரடி மோதலில் தோற்றவன் அல்ல, ஓர் ஆயுதக் குழுவின் ஆதரவு உங்களுக்கு இல்லாதிருந்தால் எனது அரசியல் பயணம் வெற்றிகரமாகத் தொடர்ந்திருக்கும். மக்களும் பயன் அடைந்திருப்பார்கள்.

கௌரவமான ஓர் அரசியற் கட்சிக்கு பெரும் தீங்கும் ஏற்பட்டிருக்காது. சட்ட விரோதமான ஓர் அமைப்பின், சட்டவிரோதமாகப் பெற்ற உதவிகளாலேயே இன்றும் நீங்களும், உங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தங்கி இருக்கின்றன. அரச சார்பான இன்றைய தலைமுறையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சரித்திரத்தின் இப்பகுதியைப் பற்றி அறிந்திருக்கமாட்டார்கள். அதேபோலவே, உங்கள் நாடாளுமன்ற, உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் தெரிந்திருக்கமாட்டார்கள். ஆனால் நீங்கள் இவற்றை எல்லாம் மறந்திருக்கமாட்டீர்கள் என எண்ணுகின்றேன் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=139804&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் மாத்தையா சுழியன் புலியை சுழிச்சு,முன்னாள் போராளிக்குழுக்களை சுழிச்சு.சிங்களவனின் சுழிச்சு இன்று எத்ர்கட்சி தலைவராக் வந்துள்ளார்.........

  • கருத்துக்கள உறவுகள்

 அப்படியானால் சம்பந்தன் ஐயாவுக்கு மக்கள் வோட்டு போடவில்லையா?......
 நீங்கள் என்ன சங்கரியார் இப்பிடிச் சொல்லிப்போட்டிங்கள்? அவர் சொல்லுறார் தாங்கள் ஒருநாளும் பிரிவினையை ஆதரிக்கேல எண்டு? நீங்கள் இரண்டு பேரும் சரியான குழப்பியள்தான்   போங்கோ. இந்தப் பதவிக்குத்தான் காட்டிக்கொடுத்தோரும், கூட்டிக்கொடுத்தோரும் காவல் இருந்தவை. ஆனால் சம்பந்தர் சத்தமில்லாமல்  தட்டிக்கொண்டு போய்விட்டார். இதுக்கு வாழ்த்தாமலே இருந்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா......... சங்கரி.  கமோன்... வெல்டன்.
பங்காளிங்க.... சண்டை ஆரம்பிசுட்டாங்க.....
நமக்கு  இனி, ஜாலி தான். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா...ஆமா ஆரம்பிச்சுட்டாங்க.......:grin: 

  • கருத்துக்கள உறவுகள்

இதில்...சங்ககரி சுழிச்சுக் கொண்டு போய் விடுவார்.
சம்பந்தன்.... நடுத் தெருவில் நிற்பார்.
அப்போ.... அவருக்கு, கை கொடுக்க... தமிழ் மக்கள் இருக்க மாட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.