Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமாவே அதிர்ச்சி : கடிகாரம் கண்டுபிடித்த முஸ்லிம் மாணவனை வெடிகுண்டு செய்ததாக கைது செய்த போலீஸ்!

Featured Replies

ஒபாமாவே அதிர்ச்சி : கடிகாரம் கண்டுபிடித்த முஸ்லிம் மாணவனை வெடிகுண்டு செய்ததாக கைது செய்த போலீஸ்!

 

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது.

body_vc3.jpgமாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் நடந்தது. அகமது முகமது அவரது முழுப்பெயர் .அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்கில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அகமது நாசா அமைப்பின் சின்னம் பொறித்த டி-ஷர்ட்டை விரும்பி அணிபவர். புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற இலக்கு கொண்டவர்.கடந்த சில தினங்களுக்கு முன் அகமது, வீட்டிலேயே உருவாக்கி மின்னணு கடிகாரத்தை பள்ளிக்கு கொண்டு வந்து தனது வகுப்பு ஆசிரியரிடம் மிகுந்த ஆர்வத்துடன் காண்பித்திருக்கிறார்.இந்த தொழில்நுட்ப சாகசத்திற்காக ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

ஆனால், ஒரு சின்ன சூட்கேசில் இருந்த அந்த அமைப்பை பார்த்ததும் பள்ளி ஆசிரியருக்கு சந்தேகம் தான் உண்டானது. இதற்குள் இன்னொரு ஆசிரியர் இது பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அன்று மாலையே அகமது கைது செய்யப்பட்டார். பள்ளியில் இருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் வெடிகுண்டாக இருக்கலாம் எனும் சந்தேகமே இதற்கு காரணம். நிச்சயமாக இந்த சந்தேகத்தின் பின்னே அகமதுவின் பெயரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

14 வயது பள்ளி மாணவர் அறிவியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்காக பாராட்டி ஊக்குவிக்கப்படுவதற்கு பதில் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்பட்ட சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த சம்பவம் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அகம்து அவரது இஸ்லாமிய மத பின்னணி காரணமாகவே இந்த சந்தேகத்திற்கு இலக்காகி இருக்கிறார் என்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மத்த்தை சேர்ந்த எல்லோரையும் தீவிரவாத கண்ணோட்டத்தில் பார்க்கும் தட்டையான மனநிலையின் வெளிப்பாடாக இந்த சம்பவம் அமைந்திருப்பதாக பலரும் விமர்சித்தனர்.

இந்த கைது பற்றி நாளிதழ்களில் வெளியான செய்தி ,அமெரிக்காவில் நிலவும் சார்பு நிலை பற்றிய விவாதத்தை தீவிரமாக்கியது.

body_vc1.jpg


நடந்த சம்பவம் மாணவர் அகமதுவிற்கு அதர்சியாக இருந்திருக்கும். அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து ஆதங்கத்துடன் விளக்கம் அளித்தனர்.

ஆனால் இதற்குள் அகமதுவுக்கு ஆதரவு குவியத்துவங்கியது.இணையத்தில் பலரும் அகமதுவுக்கு நேர்ந்த கதி குறித்து அதிர்ச்சி தெரிவித்தனர். பள்ளி மாணவனின் ஆர்வத்தை பார்க்காமல் அவனது மத பின்னணியில் கவனம் செலுத்து சந்தேக்கிக்கும் போக்கை பலரும் கடுமையாக குறை கூறினர். இந்த நிலைக்கு இலக்கான அப்பாவி மாணவர் அகமதுவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் #IStandWithAhmed எனும் ஹாஷ்டேகை உருவாக்கி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.இணையவாசிகள் மட்டும் அல்லாமல் விஞ்ஞானிகள் உள்ளிட்டோரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

body_vc2.jpg



இளம் கண்டுபிடிப்பாளராக அகமதுவை ஊக்குவிப்பதற்கு பதில் ஒரு பள்ளி மாணவரை தீவிரவாதியாக பார்ப்பது சரியா எனும் விதமாக பலரும் கேள்வி எழுப்பினர். வெள்ளை மாணவர் ஒருவர் இது போல செய்திருந்தால் பாராட்டி இருப்பீர்கள் அல்லவா என்பது போலவும் சிலர் ஆவேசமாக கேட்டிருந்தனர்.
டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களில் இப்படி ஆதரவு குவிந்த நிலையில். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்தில் , அகமதுவின் கடிகார கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளதோடு வெள்ளை மாளிகைக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதே போல பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜக்கர்பர்கும், மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக் நிறுவன தலைமையகத்தில அவரை வரவேற்க தயராக இருப்பதாக கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் அக்மதுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதரவு பெருகி வருகிறது.

இப்படி பெருகும் ஆதரவு மாணவர் அகமதுவை ஹிரோவாக்கி இருக்கிறது. நிச்சயம் இந்த ஆதரவையும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் இணையம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து புகழையும் தேடித்தந்திருக்கிறது.
அகமது குடும்பத்தினர் இந்த நிகழ்வு தொடர்பாக @IStandWithAhmed எனும் பெயரில் டிவிட்டர் கணக்கு துவங்கி இந்த நிகழ்வை பதிவு செய்து வருகின்றனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=52534

  • கருத்துக்கள உறவுகள்

பெடி கெட்டித்தனம் தான்.

என்ன செய்யிறது பனமரத்துக்கு கீழ இருந்து பால் அடிச்ச கதை தான்.

வாத்திமாரிலும் பிழை சொல்ல ஏலாது. காலம் அப்படி. :rolleyes:

உண்மையில் முதலில் பார்த்த வாத்தியார் பாராட்டி இருக்கிறார். ஆனால் காதோட, ஒருத்தருக்கும் காட்டாம வைத்துக்கொள் என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்த பாட நேரத்தில் பீப், பீப் சத்தம் வர அந்த ஆசிரியர் என்ன ஏது என்று விசாரித்து தான், சங்கை மெதுவாக ஊதி விட்டார்.

எப்படியோ, இப்போது பொடிக்கு, பெரிய எதிர்காலம் நிச்சயம். :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கெட்ட வடிவில் வரும் நல்ல விடயம் .....
இப்போ பெடியன் பிரபல்யம் ஆகிவிட்டான் .....இனி ஹார்வர்ட் யுனிவேர்சிடிக்கே போய்விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெடி உச்சத்திற்கு போவதற்கு அத்திவாரம் போட்டு கொடுத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

கால நேரம் கூடினால் கடிகாரமும் ஏணியாகும்...!

  • தொடங்கியவர்

அகமதுவை ஃபேஸ்புக் அலுலகத்துக்கு அழைக்கும் மார்க்

 
 
இடது: மாணவர் அகமது | வலது: மார்க் ஸக்கர்பெர்க் | கோப்புப் படங்கள்
இடது: மாணவர் அகமது | வலது: மார்க் ஸக்கர்பெர்க் | கோப்புப் படங்கள்

கடந்த சில தினங்களாக சிறுவன் அகமது குறித்த செய்திகள் பரவலாக பேசப்படுகின்றன. அமெரிக்காவில் வசிக்கும் அகமது கைக்கடிகாரம் ஒன்றை தானே செய்து அதை எடுத்துச் சென்றதே பார்த்தற்காக கைவிலங்கிடப்பட்டவர் தான் இந்தச் சிறுவன்.

எல்லாம் 'பெயர்க்காரணம்' என சமூகவலைத்தளங்களில் பலர் கொந்தளித்துக் கொண்டிருக்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் ரத்தினச் சுருக்கமாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டு தனது ஸ்டேட்டஸை நிரூபித்துள்ளார்.

இதோ அந்த முத்தான மூன்று வரி ஸ்டேட்டஸ்:

"ஒரு கடிகாரத்தை தானே வடிவமைத்து அதை பள்ளிக்கூடத்துக்கு எடுத்துச் சென்றதற்காக கைது செய்யப்பட்ட 14 வயது, டெக்சாஸ் மாகாண சிறுவன் அகமதுவின் கதையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

தனித்திறனும், அதை செயல்படுத்தும் தீர்க்கமும் வரவேற்கத்தக்கது. அதைக் கொண்ட நபருக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமே தவிர கைவிலங்கல்ல. எதிர்காலம் அகமது போன்ற நபர்களுடையது.

அகமது, எப்போதாவது நீங்கள் ஃபேஸ்புக் அலுவலகம் வர விரும்பினீர்கள் என்றால், நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்" எனப் பதிவு செய்துள்ளார்.

யார் இந்த அகமது?

அமெரிக்காவின் வசிக்கும் சிறுவன் அகமத். இவர் தனது வீட்டிலேயே ஒரு கடிகாரத்தை செய்துள்ளார். அதை தனது வகுப்பாசிரியரிடம் காண்பிக்க வேண்டும் என்பதற்காக அக்கடிகாரத்தை டெக்சாஸில் உள்ள தனது பள்ளிக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அதனை பார்த்த ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் சந்தேகமடைந்துள்ளனர்.

மேலும், போலீஸுக்கு தகவல் தந்துள்ளனர். இதையடுத்து போலீஸார் அச்சிறுவனை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர், சிறுவன் மீது தவறு ஏதும் இல்லையென்றும் அது உண்மையிலேயே கடிகாரம் தான் எனவும் போலீஸார் தெரிவித்தார். மேலும் அகமது விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறினர்.

ஒபாமாவின் சபாஷ்:

அகமதுவின் கைது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில், "அகமது, நீ தயாரித்த கடிகாரத்தை வெள்ளை மாளிகைக்கு எடுத்து வர விரும்புகிறாயா? உன்னை போன்று அறிவியலில் ஆர்வமுள்ள சிறுவர்கள் நிறைய பேரை அமெரிக்கா ஊக்குவிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/world/அகமதுவை-பேஸ்புக்-அலுலகத்துக்கு-அழைக்கும்-மார்க்/article7665019.ece?homepage=true

  • தொடங்கியவர்
  •  

கடிகாரம் கண்டுபிடித்த மாணவன் கைது: பள்ளி மாறுகிறார் அகமது முகமது!

 

மெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளியில் 9 ஆவது கிரேட் படிப்பவர் அகமது முகமது. அறிவியலிலும் ஆர்வம் கொண்ட முகமது, பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் அலராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்துள்ளார்.

ahmad.jpg

பின்னர் அதனை பள்ளிக்கு எடுத்து சென்று ஆசிரியரிடம் காட்ட,  டைம்பாம் என்று கருதி அவர் போலீசுக்கு தெரிவித்து விட்டார். இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு வந்த போலீசார் அவனை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையே போலீசார் அந்த கடிகாரத்தை ஆராய்ந்தபோது அது வெடிகுண்டு இல்லையென்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவனுக்கு பல முனைகளில் இருந்து ஆதரவுக்குரல் எழுந்தது.  இதையடுத்து அந்த மாணவன் விடுவிக்கப்பட்டான்.

விடுவிக்கப்பட்ட பின், அகமது செய்தியாளர்களிடம் பேசுகையில், இனிமேல் அந்த பள்ளியில் படிக்கப் போவதில்லை என்றும், வேறு பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளான்.

http://www.vikatan.com/news/article.php?aid=52616

  • 1 month later...
  • தொடங்கியவர்

கடிகாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் ஒபாமா

கடிகாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் ஒபாமா

 
 
 
அமெரிக்காவில் கடிகாரம் ஒன்றை செய்து பாடசாலைக்கு எடுத்து சென்றதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மாணவரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்துள்ளார்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் படிக்கும் முஸ்லிம் மாணவரான அகமது முகமது, சொந்தமாகக் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்தபோது அதை வெடிகுண்டு எனக் கூறி கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அகமது முகமதுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அவரை வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஒபாமா அழைப்புவிடுத்திருந்தார்.

இதன்படி நேற்று முன்தினம் விண்வெளி அறிஞர்களுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிக்கையில் நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்ட அகமது முகமது, அதிபர் ஒபாமாவுடன் கை குலுக்கி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
 
  • தொடங்கியவர்
அமெரிக்காவில் கடிகாரம் செய்ததால் கைது செய்யப்பட்ட மாணவர் கத்தாரில் குடியேறுகிறார்!
 

வாஷிங்டன்: கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவர் அகமது முகமது மேற்படிப்பை முன்னிட்டு குடும்பத்துடன் கத்தார் நாட்டில் குடியேற உள்ளார்.

 

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் அகமது முகமது. சூடான் வம்சாவளியைச் சேர்ந்த அகமது புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இதன் எதிரொலியாக பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக கடிகாரம் ஒன்றைச் செய்து அதனை தனது வகுப்பு ஆசிரியரிடம் பெருமையாக காட்டியுள்ளான் அகமது.

 

ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல. அதனை வெடிகுண்டு எனத் தவறுதலாக புரிந்து கொண்ட ஆசிரியர், உடனடியாக பள்ளிக்கு போலீசாரை அழைத்துள்ளார். உடனே அகமது கைது செய்யப்பட்டார்.

பின்னர் காவல் நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில், சிறுவன் மீது தவறு ஏதும் இல்லை உண்மையிலேயே அது கடிகாரம்தான் எனத் தெரியவந்ததையடுத்து அகமது விடுவிக்கப்பட்டார்.

பின்னர் அகமதுவுக்கு ஆதரவு பெருக ஜோர்டான், துருக்கி, சூடான் நாட்டுத் தலைவர்களையும் சந்தித்தார். இதையடுத்து அகமதுவுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அவரை வெள்ளை மாளிகைக்கு விருந்துக்கு வருமாறு அதிபர் ஒபாமா டுவிட்டர் வலைதளம் மூலம் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விண்வெளி அறிஞர்கள் விருந்தில் அகமது முகமது கலந்து கொண்டார்.

அப்போது, அமெரிக்க அதிபர் ஒபாமா சிறுவனை கட்டி அணைத்து சிறுது நேரம் பேசினார். இந்நிலையில், அகமது முகமதுவின் மேற்படிப்புக்காக கத்தார் நாட்டில் குடியேறப் போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அகமது கூறுகையில், கத்தாரில் உள்ள தோகா நகரத்தை தாம் அதிகமாக நேசிப்பதாகவும், இங்கு சிறந்த பள்ளிகள் இருப்பதாகவும் அதன்மூலம் தாம் கற்றுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.