Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தை அகற்றி விட்டு உள்ளக விசாரணை நடத்த தயாரா? - சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு கிழக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை முழு­மை­யாக அகற்­றி­விட்டு சாட்­சி­களை பாது­காக்கும் வகையில் உள்­ளக விசா­ர­ணையை நடத்த அரசாங்கம் தயாரா? என்று கேள்­வி­யெ­ழுப்­பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்.

வடக்கு கிழக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை முழு­மை­யாக அகற்­றி­விட்டு சாட்­சி­களை பாது­காக்கும் வகையில் உள்­ளக விசா­ர­ணையை நடத்த அரசாங்கம் தயாரா? என்று கேள்­வி­யெ­ழுப்­பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்.

   

இலங்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்கா முன்­வைத்­துள்ள பிரே­ரணை தமிழ் மக்கள் மத்­தியில் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் இலங்கை தொடர்பில் வெளி­யிட்ட அறிக்­கையில் உள்­ளகப் பொறி­முறை ஏற்­பு­டை­ய­தாக அமை­யாது என்றும் கலப்பு நீதி­மன்றம் அவ­சியம் என்றும் உள்­ளக நீதித்­துறை நம்­ப­க­ர­மாக இல்­லை­யென்றும் தெரி­வித்­தி­ருந்­தது.

ஆனால் அமெ­ரிக்கப் பிரே­ர­ணை­யானது இலங்­கையின் உள்­ளக நீதித்­து­றையின் கட்­ட­மைப்­பிற்கு அமைய உள்­ளக விசா­ர­ணையை நடத்த முடியும் என்றும் தேவை­யெனில் சர்­வ­தேச மற்றும் பொது­ந­ல­வாய உத­வி­களை பெற முடியும் என்றும் தெரி­வித்­துள்­ளது. இவ்­வாறு உள்­ளகப் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­டு­மானால் அத­னூ­டாக பல சிக்­கல்கள் ஏற்­படும். குறிப்­பாக உள்­ளகப் பொறி­மு­றையில் சாட்­சி­ய­ம­ளிக்கும் மக்­க­ளுக்கு எவ்­வாறு பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்ற கேள்வி எழு­கின்­றது. ஏற்­க­னவே காணாமல் போனோர் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழு­விற்கு சாட்­சி­ய­ம­ளித்த வடக்கு, கிழக்கு மக்­களின் சாட்­சி­யங்கள் இரா­ணு­வத்­தி­னாலும், பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ராலும் அழிக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவ்­வா­றான ஆபத்து தொடர்ந்தும் காணப்­ப­டு­கின்­றது. உள்­ளகப் பொறி­மு­றையை முன்­னெ­டுக்கும் பட்­சத்தில் இந்த பிரச்­சினை மீண்டும் உரு­வாகும். அதா­வது வடக்கு, கிழக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை முற்­றாக வெளி­யேற்­றி­விட்டும் சாட்­சி­க­ளுக்­கான பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தி­விட்டும் உள்­ளக விசா­ரணை நடத்த அர­சாங்கம் தயாரா என்ற கேள்­வியை எழுப்­ப­வேண்டி உள்­ளது. அது­மட்­டு­மன்றி ஐக்­கிய நாடு­களின் கண்­கா­ணிப்பு அலு­வ­ல­கங்கள் வடக்கு, கிழக்கு முழு­வதும் அமைக்­கப்­ப­டுமா? இவ்­வா­றான விட­யங்­க­ளுக்கு பதி­ல­ளித்­து­விட்டு இவ்­வா­றான விட­யங்­களை உறு­திப்­ப­டுத்­தி­விட்டு உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுத்தால் அது நம்­ப­க­ர­மா­ன­தாக அமையும் என கூறலாம். ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் இவ்­வாறு நம்­ப­க­ர­மாக உள்­ளகப் பொறி­முறை இடம் பெறும் சாத்­தி­ய­மில்லை. மேலும் கடந்த ஐ.நா. மனித உரிமை விசா­ர­ணை­யின்­போது வெளி­நா­டு­களில் வசிக்கும் பலர் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் தற்­போது இலங்­கையில் உள்­ளக விசாரணை நடத்தப்படுமானால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அதில் எவ்வாறு சாட்சியமளிக்க முடியும்? உள்ளகப் பொறிமுறை செயற்பாட்டில் ஈடுபடும் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று சாட்சியங்களை திரட்ட தயாரா? இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன. எனவேதான் நாம் கூறிய இந்த விடயங்கள் இல்லாத உள்ளகப் பொறிமுறை முன்னேற்றகரமாக அமையாது என்று நாங்கள் கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=141344&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசாரணைகளின் போது மண்டையன் குழுவினால் அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கோரக் கொலைகளும் விசாரிக்கப்படவேண்டும். அதற்கு மண்டையன் தயாரா?

சுரேசு ... உப்படி சவுன்ட் விடுகிறதற்கு முன்னுக்கு ... இதயங்களால் ஒன்று பட்டு விட்டுட்டம் என்றவரையும், சிங்கக்கொடி தாங்கிய தாத்தாவையும், மரம் பழுத்திட்டுது வவ்வாலே வா வா என்று  காலா காலமாக தேர்தல் காலங்களிலை கூப்பிடுகிறவரையும் கேட்டுப்போடு ... விடுங்கோ! ... அவையள் இனி கேட்கக்கூடும் உந்த விசாரணை எல்லாம் தேவையோ? ... என்று!!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடந்த தேர்தலில்  மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர்.
ஆகவே நீங்கள் இப்படிக் கேட்கக்கூடாது என்று பலர் முணுமுணுப்பது என்
காதில் கேட்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட சித்தாத்தனை விசாரிக்க தேவை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட சித்தாத்தனை விசாரிக்க தேவை இல்லையா?

சித்தார்த்தனை மட்டுமல்ல அப்பாவிப் பொதுமக்கள் மேல் வெறியாட்டம் நிகழ்த்திய எவரையுமே தப்பவிடக்கூடாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.