Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.வந்தார் எதிர்க்கட்சித் தலைவர்

Featured Replies

யாழ்.வந்தார் எதிர்க்கட்சித் தலைவர்
யாழ்.வந்தார் எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு முதற்தடவையாக, வருகை தந்து முதல் நிகழ்வாக தந்தை செல்வா சதுக்கத்திற்கு  சென்று  மலரஞ்சலி செலுத்தினார்.

இன்று காலை 8.30 மணியளவில் துரையப்பா மைதானத்திற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் யாழ்-கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம்,வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இரண்டாவது நிகழ்வாக இன்று புனித பத்திரிசியார் கல்லூரியில் தமிழ்த்தினவிழா. இதில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                 

                 

                 

http://onlineuthayan.com/news/730

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி தலைவர் அப்படியே.... நாக விகாரைக்கும் போய், புத்த பிக்குகளிடம் ஆசி வாங்குவது நல்லது.musik

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன் ஐயா நாளை காந்தி அடிகளாரின் பிறந்த தின நிகழ்வுக்கு கலந்து கொள்வதற்காக இந்திய துணைத்தூதரின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணம் வந்துள்ளார். ஆனால் ஐயாவுக்கு கடந்த 26ம் திகதி ஈழத்தில் இருந்து அகிம்சைப் போராட்டாத்தால் உயிர் துறந்து இந்தியாவின் அகிம்சை முகமூடியை கிழிதெறிந்து வீரமரணம் அடைந்த தியாகி திலீபனின் நினைவு ஏனோ வரவில்லை!!!

  • தொடங்கியவர்

முதல் முறையாக யாழிற்கு சென்ற எதிர்க் கட்சித் தலைவர்

 

இலங்கை அரசாங்கத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன்  பதவியேற்ற பின்னர் இன்று  வியாழக்கிழமை முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

r.sampanthan_7.jpg
 யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த எதிர் கட்சித் தலைவர் இரா .சம்பந்தன் முற்றவெளியில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதன் போது எதிர்க் கட்சித் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

தந்தை எதனைக் கூறினாரோ அதனை உரிய முறையில் அரசாங்கம் வழங்குமாக இருந்தால் அந்த தீர்வை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதன் போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவன் , வட மாகாண சபையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் , உறுப்பினர் எஸ். பரம்சோதி , யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் பெ.கனகசபாபதி, நிர்வாக செயலாளர், எக்ஸ். குலநாயகம்  மற்றும் வலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினர் த.நடனேந்திரன், சிக்கனகடனுதவு கூட்டுறவுச்சங்கதத்தின் தலைவர் சி. இலகுநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

sam.jpg

sdf%20%282%29.jpg

sfs%29.jpg

sf%29.jpg

 

http://www.virakesari.lk/articles/2015/10/01/முதல்-முறையாக-யாழிற்கு-சென்ற-எதிர்க்-கட்சித்-தலைவர்

 

பக்கத்தில தான் விஜெயின் புலி படம் ஓடுது அப்பிடியே பாத்திட்டு போறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

sdf%20%282%29.jpg

 

 

 

 

தந்தை செல்வா தமிழ் ஈழம்தான் ஈழதமிழருக்கு ஒரே முடிவு என்று முடிவை கொண்டவர்.
அதனால் தமிழ் இளைஞர்களை தூண்டி 
பிரபாகரன் போன்ற பயங்கரவாதிகள் உருவாக பிள்ளையார் சுழி போட்டவர்.

எமது எதிர்கட்சி தலீவரு அவருக்கு அஞ்சலி நாடகம் செய்து 
எமது இறையாண்மையை கெடுக்க பார்க்கும் செயலை 
இலங்கை தமிழனாக வன்மையாக கண்டிக்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.