Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!! 
Peter October 17, 2015 Canada

கனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் காட்டுமிராண்டித்தனமான மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம்.

இளவயதுத் திருமணம், சுண்ணத்துக் கல்யாணம் என்கிற சடங்குகளை இலக்குவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொலைபேசி கொட்லைன் தொடர்பான அறிவித்தலை விடுத்த குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாந்தர் அவர்கள் “கனேடியர்கள் தங்களின் கலாச்சார வலுக்களிற்காக துணிந்து செயற்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த தொலைபேசி கொட்லைன் தமிழர்களிற்கு பெரிய தலையிடியைக் கொண்டு வந்துள்ளது. தமிழர்கள் தங்களர் மூதாதையர் செய்து வந்த மதச்சடங்கான பூப்புனித நீராட்டு விழாவினை கொண்டாடுவது இப்போது சிக்கலிற்குள்ளாகியுள்ளதா என்ற குழப்பத்தில் பலரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த விழா ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் நடைபெறும் ஒரு சமய சம்பிரதாயமாக இருந்தாலும், இது குறித்த தெளிவற்ற நிலை மற்றைய இனத்தவர்களிடையே இருப்பதால் அவர்கள் இந்த பெண் குழந்தைகளைப் தாங்கள் பாதுகாப்பதாக எண்ணி பொலிசாருக்கு அறிவிக்கக்கூடிய நிலை தோன்றியுள்ளது.

குறிப்பாக இவ்வாறான பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாமல் தவிர்க்கும் போது ஆசிரியர்களே வீடுகளிற்கு தொலைபேசி அழைத்து பிள்ளைகளை ஒரு வாரம், இரு வாரம் என வீட்டில் நிறுத்தாமல் அடுத்தடுத்த நாளே பாடசாலைக்கு அனுப்புமாறு நிர்ப்பந்திக்கிற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.

அத்தோடு ஏன் அந்தச் சிறுமியை மணப்பெண் போன்ற கோலத்தில் அல ங்கரிக்கிறீர்கள் என்ற கேள்வியை வேற்றினத்தவர்கள் பலரும் கேட்டிருக்கின்றனர். பல்லக்கில் தூக்குதல், ஊஞ்சலில் வைத்து ஆட்டுதல், கேக் வெட்டுதல் என்ற பலதும் அவர்களை குழப்பிப் போட்டுள்ளது.

பூப்புனித நீராட்டு விழா கொண்டாடுவதற்கான அடிப்படைக் காரணங்கள் முன்னைய காலங்களில் இரண்டிருந்தன. முதலாவதாக நூற்றாண்டிற்கு முன்பு ஒருவர் வாழும் காலம் 50 வயதாகவோ அல்லது 55 வயதாகவோ இருந்தது. எனவே இப் பெண்பிள்ளைகளின் அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா, அப்பம்மா போன்றவர்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு முன்பே இறந்து விடக்கூடிய சூழ்நிலை இருந்ததால்,

அந்தப் பெண் பிள்ளையை மணக் கோல உடையில் மங்களகரமாக தாங்கள் பார்த்து மகிழ்வதற்காகவும், இரண்டாவதாக தங்கள் வீட்டிலுள்ள பெண் வயதிற்கு வந்து விட்டால் இன்னமும் எட்டு ஒன்பது ஆண்டுகளில் அவளிற்கு மணமகன் பார்க்க வேண்டும் என்பதை ஊருக்கு அறிவிப்பதாகவும் இருந்தது.

இப்போதும் பூப்புனித விழா மேற்படி இருகாரணங்களும் இல்லாமல் உற்றார், உறவினர் பெற்றோரின் ஒன்றுகூடலிற்காகவும், அந்தப் பெண்பிள்ளையை சிறுமி என்ற நிலையிலிருந்து இளவயது பெண்பிள்ளைகள் சமுதாயத்தில் இணைப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

ஆதிகாலத்திலோ அல்லது இப்போதோ இந்த விழாவிற்கு எந்தவித தப்பான அர்த்தமும் கற்பிக்க முடியாது. ஆனால் அயலவருக்கும், அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவருக்கும், அல்லது விழா மண்டபங்களில் வேலை செய்யும் வேற்றினத்தவருக்கும் ஏன் இதனைச் செய்கின்றோம் என்ற உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Puberty
அதுபோலவே நீங்கள் உங்கள் கணணி, தொலைபேசி ஊடக அனுப்பும் செய்திகளும், பேஸ்புக், ருவிட்டர், இன்ஸ்ராகிராம், வட்சாப், வைபர், ஸ்கைப் ஊடக கதைப்பவை, பரிமாறுபவை என்பன இப்போதுள்ள என்ற C51 சட்டத்தின் பிரகாரம் உங்களிற்குத் தெரியாமலே கண்காணிக்க முடியும்.

தமிழர்கள் குறிப்பாகப் பயன்படுத்தும் “இப்ப வந்தனென்டா கொண்டு விட்டுடுவன்” , “அவனைக் கொல்லவேணும்” “ஒரு ஆள் இப்ப என்னட்டை அடி வேண்டிச் சாகப் போறார் (அல்லது போறா) ” என்ற வார்த்தைகளிற்கு உண்மையான அர்த்தம் ஏதுமில்லை. ஆனால் அவற்றை உளவுபார்ப்பவர்கள் மொழி பெயர்த்தால் மேற்படி நபர் கொலைக் குற்றச்சாட்டில் உள்ளே செல்லும் அபாயமும் உள்ளது.

கனடா பழைய கனடாவாக இல்லை. கண்சவேட்டிவ் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டங்களில் பாரிய தளர்வுகளைத் தாங்கள் ஏற்படுத்தப்படுத்துவோம் என அறிவித்துள்ளன.

சிங்களவர்களும் கொண்டாடுகிறார்கள்: Puberty1

Puberty1

http://www.cbc.ca/news/politics/canada-election-2015-barbaric-cultural-practices-law-1.3254118

- See more at: http://www.canadamirror.com/canada/50816.html#sthash.rH4rb02e.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

கனடாமிர்ர் நல்லாத் தான் ரீல் விட்டிருக்கிறது. வெள்ளை f**k you என்று கத்தினால் உள் அர்த்தம் இல்லையோ?

பிள்ளை சம்மதித்தால் பூப்புனித நீராட்டுவிழாவை கொண்டாடுவதில் தப்பில்லை. உதை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
பூப்புனித நீராட்டு விழா கொண்டாடுவதற்கான அடிப்படைக் காரணங்கள் முன்னைய காலங்களில் இரண்டிருந்தன. முதலாவதாக நூற்றாண்டிற்கு முன்பு ஒருவர் வாழும் காலம் 50 வயதாகவோ அல்லது 55 வயதாகவோ இருந்தது. எனவே இப் பெண்பிள்ளைகளின் அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா, அப்பம்மா போன்றவர்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு முன்பே இறந்து விடக்கூடிய சூழ்நிலை இருந்ததால்,
 
அந்தப் பெண் பிள்ளையை மணக் கோல உடையில் மங்களகரமாக தாங்கள் பார்த்து மகிழ்வதற்காகவும், இரண்டாவதாக தங்கள் வீட்டிலுள்ள பெண் வயதிற்கு வந்து விட்டால் இன்னமும் எட்டு ஒன்பது ஆண்டுகளில் அவளிற்கு மணமகன் பார்க்க வேண்டும் என்பதை ஊருக்கு அறிவிப்பதாகவும் இருந்தது.

 இதை எழுதியவர் சூப்பர் அறிவாளியாக இருக்க வேண்டும் . உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது. <_<

  • கருத்துக்கள உறவுகள்

என் மகள் உடலுறவுக்கு தயாராகி விட்டாள் என்று ஊருக்குச் சொல்லும் காட்டுமிராண்டிக் கூத்து இது.

ஆனால் இதை சட்டப் படி ஒன்றும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உடலமைப்பியலின்படி (அனட்டமி),  உடலுறவுக்கு பூப்பு அவசியமில்லையென நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையாளர் பரபரப்பு செய்தி வெளியிடுவதாக ஒண்ணுமே இல்லாத விசயத்தை வைத்து அலம்பரை பண்ணுகிறார்.

இந்த பூப்புனித நீராட்டு விழா என்பது தமிழருக்கு மாத்திரம் பொதுவானது அல்ல. இந்தியா முதல், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், உட்பட்ட பல நாடுகளில் காணப் படுகின்றது.

முஸ்லிம் மக்களிடையே காணப் படும், சுன்னத்துக் கலியாணம், ஆபிரிக்காவின் சில நாடுகளின் பெண்ணுறுப்பு சிதைக்கும் (FGM) பழக்க வழக்கம் போன்றவை குழந்தைகளை உடல் ரீதியாக துன்புறுத்துவதால் அவை குறித்து அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கின்றன.

குறிப்பிட்ட டெலிபோன் hotline கூட இந்த காரணமாகவே அமைக்கப் பட்டு உள்ளன.

எமது பூப்புனித நீராட்டு விழா என்பது பெண் குழந்தைகளை எவ்வகையிலும் துன் புறத்த வில்லை என்பது முக்கியமானது.

அரசாங்கம் அது குறித்து ஆய்வு செய்து, எமது சமூகத் தலைவர்களுடன் கலந்து ஒரு முடிவு எடுத்து தடை செய்தால் மட்டுமே டெலிபோன் hotline காரர் இது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

சும்மா நடவடிக்கை எடுக்கிறோம் என்று, அரசு சொல்லாத விசயத்தில் மூக்கினை நுழைத்தால், கடைசியில் நஷ்ட ஈடு கோடிக் கணக்கில் கொடுக்க வேண்டி வரும். சம்பத்தப் பட்டவரும் வேலை இழப்பர். நம்ம மாதிரி ஒருத்தரிடம், இந்த வேலை நடந்தால், சொல்லி வேலை இல்லை. கொஞ்சம் துட்டு பார்த்திரலாம்.:grin:

கனடா மிரரின் உந்த அலம்பரையினால் பத்திரிகை நம்பகத் தன்மை குறைகிறதே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கரு,

பூப்படைய முன் உடலுறவு கொள்ளலாம்.

ஆனால் பூப்புத்தான் உடலுறவுக்குத் தயார் என்பதற்கான சமிக்ஞை என நம் கலாச்சாரம் கருதுகிறது.

 

Make circumcision வைத்திய ரீதியாய் செய்யப்படும் போது அதுக்கு சட்டச் சிக்கல் வராது. முந்தோலை மட்டும் அனஸ்தீசியா கொடுத்து விட்டு நீக்குவதால் ஒரு பெரிய பின்விளைவுமில்லை. கூடவே இதில் தொற்றுக்கள் பலவும் குறையும்.

ஆனால் FGM அப்படியில்லை. கிளிட்டை வெட்டி நீக்கியே விடுவார்கள் பாதகர்கள். எனவேதான் அது கிரிமினல் குற்றம்.

சாமத்தியம் சும்மா ஜுஜுபி இதுக்குப் போய் போலீசு நேரவிரயம் செய்யாது.

ஆனால் பெண்பார்க்கும் சடங்கு போல் இது ஒரு காட்டுமிராண்டித்தனமே.

  • கருத்துக்கள உறவுகள்

கரு,

பூப்படைய முன் உடலுறவு கொள்ளலாம்.

ஆனால் பூப்புத்தான் உடலுறவுக்குத் தயார் என்பதற்கான சமிக்ஞை என நம் கலாச்சாரம் கருதுகிறது.

 

Make circumcision வைத்திய ரீதியாய் செய்யப்படும் போது அதுக்கு சட்டச் சிக்கல் வராது. முந்தோலை மட்டும் அனஸ்தீசியா கொடுத்து விட்டு நீக்குவதால் ஒரு பெரிய பின்விளைவுமில்லை. கூடவே இதில் தொற்றுக்கள் பலவும் குறையும்.

ஆனால் FGM அப்படியில்லை. கிளிட்டை வெட்டி நீக்கியே விடுவார்கள் பாதகர்கள். எனவேதான் அது கிரிமினல் குற்றம்.

சாமத்தியம் சும்மா ஜுஜுபி இதுக்குப் போய் போலீசு நேரவிரயம் செய்யாது.

ஆனால் பெண்பார்க்கும் சடங்கு போல் இது ஒரு காட்டுமிராண்டித்தனமே.

கோசான்,

சுண்ணத்து கலியாணம் கூட தடை செய்யப் பட்ட ஒன்று தான். ஒன்றுமறியாக் குழந்தைகளை உடல் ரீதியாக துன்புறுத்துவதால் இதுவும் பாதகமான ஒன்று தான்.

நமது பூப்புனித விழா காட்டு மிராண்டித் தனமானாலும், கொடுத்த பணத்தினை வாங்கும் அல்லது பணம் சேகரிக்கும் ஒரு நிகழ்வாகையினால் இன்னும் நடக்கின்றது. 

மேலும் சிலருக்கு தமது வசதியினை விளம்பும் ஒரு விழா.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

இல்லை ஆண் பிள்ளைகளுக்கு செய்யப்படும் சுன்னா தடை செய்யப்படவில்லை.

ஆதாரம் கீழே:

http://www.nhs.uk/conditions/Circumcision/Pages/Introduction.aspx
  

http://www.theguardian.com/law/2011/jun/15/male-circumcision-ban-health-religion-debate
 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை தல,

மருத்துவ காரணங்களுக்காக மட்டும்: பல காரணங்கள் உண்டு. 

கலாச்சார, சமய காரணங்களுக்காக என்றால் தடை உண்டு. எனினும் FGM போல் outright தடை இல்லை.

தனது GP surgery யில், இரகசியமாக இதை செய்த டாக்டர் (வெள்ளை: ஆச்சரியம்) சில வருடங்களுக்கு முன் தண்டனை பெற்றார்.

NHS ல் செய்ய முடியாது. ஆனால் பணம் இருந்தால் அனுமதியுடன் தனியார் ஆஸ்பத்திரியில் செய்யலாம்.

வேண்டுமானால் சொல்லுங்கள். உங்களுக்கு எண்டால், பாக்குவெட்டியா, கத்தியா என்ற உங்கள் செலக்சனை வைச்சு நல்ல டிஸ்கவுன்ட் வாங்கித் தரலாம். :grin:

 

Edited by Nathamuni

என் மகள் உடலுறவுக்கு தயாராகி விட்டாள் என்று ஊருக்குச் சொல்லும் காட்டுமிராண்டிக் கூத்து இது.

ஆனால் இதை சட்டப் படி ஒன்றும் செய்ய முடியாது.

கோச்சான்,

உங்களிடம் ஒரு கேள்வி.....

திருமணம் உடலுறவுக்காக மட்டுமா நடைபெறுகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

மன்னிக்கவும் உங்கள் தகவல் பிழையானது. நான் மேலே தந்த NHS தளத்திலே இதுக்கு விளக்கம் உண்டு. சமய நம்பிக்கையில் செய்யப் படும் சுன்னத்துக்கு NHS funding கிடையாது ஆனால் தடை இல்லை.

நீங்கள் சொல்லும் படி பார்த்தார் கிட்டத்தட்ட யூகேயின் 10% மக்கள் ( முஸ்லீம், யூதர்) கோட்டுக்கு இழுக்கப் பட வேண்டும்.

சட்டம் FGM ஐயும் சுன்னா வையும் ஒன்றாக பார்பதில்லை. அதுதான் சரியும் கூட.

சர்வே,

திருமணம் செய்ய பல காரணம் இருக்கு அதில் ஒன்று உடலுறவுக்கான லைசன்ஸ். ஆனா லைசன்ஸ் இல்லாமலும் வண்டி ஓட்டத்தான் செய்கிறார்கள். ஆனால் ஒரு பாபிகியு பார்ட்டியில் என் மகள்/மகன் லைசன்ஸ் இல்லாமலே ஓட்டுகிறார்கள் என்று எந்த பெற்றோரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. எல்லாத்துக்கும் பிறகு ஓமம் வளர்த்து "கன்னிகாதானம்" செய்துதான் தாலி ஏறுகிறது.

ஆக இப்படி பல சமூக சால்ஜாய்ப்புக்களுக்கு திருமணம் தேவைப்படுகிறது.

இவை ஏதும் பூப்பு விழாவுக்கு இல்லை.

சர்வே,

திருமணம் செய்ய பல காரணம் இருக்கு அதில் ஒன்று உடலுறவுக்கான லைசன்ஸ். ஆனா லைசன்ஸ் இல்லாமலும் வண்டி ஓட்டத்தான் செய்கிறார்கள். ஆனால் ஒரு பாபிகியு பார்ட்டியில் என் மகள்/மகன் லைசன்ஸ் இல்லாமலே ஓட்டுகிறார்கள் என்று எந்த பெற்றோரும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. எல்லாத்துக்கும் பிறகு ஓமம் வளர்த்து "கன்னிகாதானம்" செய்துதான் தாலி ஏறுகிறது.

ஆக இப்படி பல சமூக சால்ஜாய்ப்புக்களுக்கு திருமணம் தேவைப்படுகிறது.

இவை ஏதும் பூப்பு விழாவுக்கு இல்லை.

கலாச்சாரசீர்கேடுகள் புலத்தில் மட்டுமில்லை ஈழத்திலும் நடைபெறுவது மனவருத்தத்திட்கு உரியது, அந்த வகையில் உங்கள் உதாரணம் ஆகிய BBQ பார்டிகளை ஒருபுறம் வைத்துவிட்டு, இந்தத்திரிக்கு செல்வோமாயின்..............

பூப்புனிதநீராட்டு விழா என்பது வெறுமனே "என் மகள் உடலுறவுக்கு தயாராகி விட்டாள் என்று ஊருக்குச் சொல்லும் காட்டுமிராண்டிக் கூத்து" கிடையாது, மகள் திருமணத்திட்கு தயார் என அறிவிக்க செய்யப்படும் விழாவாகவே நடைபெற்று வந்தது. திருமணமும் உடலுறவும் ஒன்றல்ல, உடலுறவு திருமணத்தின் பின் ஒருபாகமே தவிர திருமணம் என்பது வாழ்வில் பல புதிய அத்தியாயங்களை திறந்து வைக்கின்றது.

இப்பொழுது திருமணம் செய்துகொள்ளும் வயது அதிகரித்துவிட்டாலும் பூப்புனிதநீராட்டு விழா என்பது எமது கலாச்சார நிகழ்வாக இருந்துவருகின்றது.

இப்பதான் எல்லாரும் லேட்டா திருமணம் செய்யினமே.....பிறகு என்ன சரிக்குறதிற்கு இந்த அறிவுப்பு என்று நீங்கள் கேட்டால்................நான் உங்களிடம் கேட்பது....

விஞ்ஞான உலகில் கடவுள் இருக்கிறார் என்று நம்புகின்றீர்களா?

திருமண வைபவங்களளை கூட பதிவுத்திருமணதுடன் முடித்துவிடலாம் அல்லவா?

 

ஒரு இனத்தின் பெயரை தக்கவைக்க அந்தஇனத்தின் கலாசார நிகழ்வுகள் இன்றியமையாதது. ஆகவே சும்மா எல்லாத்தையும் தூக்கியெறிந்து கதைக்கப்படாது. 

அதற்காக பூப்புனிதநீராட்டு விழா என்றபெயரில் கூத்தாடுபவர்களை ஆதரித்து கதைக்கவில்லை.   

  • கருத்துக்கள உறவுகள்

ஹோலண்டில் பால்பண்ணைத்அதொழில் செய்து தலையில் பால் முட்டி து}க்கிச் செல்லும் (மில்க் மேய்ட்)பெண்கள் வாழும் பிரதேசத்திற்குக் கல்விச்சுற்றுலாவொன்றை மேற்கொண்டபோது கூட்டிச் சென்றவர். சில வீடுகளின் முன் கதவுகளில் செம்பிலான இதயவடிவ அடையாளங்களைத் து}க்கியிருந்ததைக் காட்டி அந்த வீடுகளில் ஒர் பூப்படைந்த பெண் திருமணத்திற்குத் தயாராகவுள்ளாள் என்ற செய்தியைக் கூறினார்.  அப்படி அடையாளமிடுவது அங்கு சர்வ சாதாரணம்.  நமக்குத்தான் எல்லாமே விகற்பமாகப் படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

மன்னிக்கவும் உங்கள் தகவல் பிழையானது. நான் மேலே தந்த NHS தளத்திலே இதுக்கு விளக்கம் உண்டு. சமய நம்பிக்கையில் செய்யப் படும் சுன்னத்துக்கு NHS funding கிடையாது ஆனால் தடை இல்லை.

நீங்கள் சொல்லும் படி பார்த்தார் கிட்டத்தட்ட யூகேயின் 10% மக்கள் ( முஸ்லீம், யூதர்) கோட்டுக்கு இழுக்கப் பட வேண்டும்.

சட்டம் FGM ஐயும் சுன்னா வையும் ஒன்றாக பார்பதில்லை. அதுதான் சரியும் கூட.

 

தல,  :grin:

தடை என்று சொல்வது, லோக்கல் 'வெத மாத்தையா' (பரியாரிகள்) வேலைகளுக்கு. உதாரணமாக நான் பாக்குவெட்டியை தூக்கிக் கொண்டு உங்களுக்கு உதவ வந்தால்.... அதுக்குத் தான் தடை.

நீங்கள் சொன்னது போல் NHS இதனை, மருத்துவ ரீதி இல்லாத காரணத்துக்காக செய்ய தடை உள்ளதால், காசு கட்டி பிரைவேட் ஆஸ்பத்திரியில் செய்ய முடியாத இஸ்லாமியர்கள், இந்த லோக்கல் 'வெத மாத்தையா' க்களிடம் அலுவலை முடிக்கின்றனர். இதே கதை தான் FDM க்கும்.

எந்த வித மருத்துவ தகுதிகளும் இல்லாதவர்கள் செய்யும் போது, உயிர் ஆபத்து அபாயம் உள்ளதால் தான் இந்த தடை. இதையும், FDM ஐயும் செய்ய இங்கே பல 'பரியாரிகள்' இருகின்றார்கள்.

அவர்களுக்குத் தான் தடை. ஆனால் FDM வைத்தியர்கள் கூட செய்ய முடியாத தடை.

இங்கிலாந்தில் அண்மையில், ஒரு சோமாலிய பெண்ணுக்கு, பிரசவத்தின் போது, குழந்தையைக் காக்க இலங்கை டாக்டர் செய்த உயிர் காக்கும் operation ஐ FDM என்று நீதி மன்றில் நிறுத்தி, வழக்கு தோத்தது.

http://www.theguardian.com/society/2015/feb/04/doctor-not-guilty-fgm-dhanuson-dharmasena

ஆகவே, இரண்டுமே ஒரு வகையில் இலகுவாக செய்ய முடியாத நிலையில், தமது கலாச்சாரத்தில் நம்பிக்கை வைப்பவர்கள், நான் சொன்ன லோக்கல் பரியாரி மார்களிடம் மலிவாக அதேவேளை உயிர் ஆபத்துடன் செய்து கொள்ள தடை உள்ளது.

Circumcision இக்கு FDM போல் முழுத் தடை இல்லை ஆயினும் இந்த பரியாரிகளிடம் போய் செய்து, தவறாகி, பிறகு NHS ஆஸ்பத்திரிகளுக்கு emergency இக்கு செல்லும் போது சிக்குபவர்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

உடுக்கத் துணியில்லாதவனுக்குத் 'தீபாவளி' என்பது ஒரு வரப்பிரசாதம்!

அந்த நாளைச் சொல்லியாவது..அவனுக்குப் புதுத்துணி கிடைக்கும் சாத்தியங்கள் உண்டு!

அதே போலவே.. பூப்புனித நீராட்டு விழா' என்பது ஒரு பெண்ணுக்கு.. உலகத்தில்.. பெண்ணெனக் கிடைக்கும் முதலாவது அங்கீகாரமாகின்றது!

நதி மூலம், ரிஷி மூலம் பார்ப்பது போல..எதற்காக 'உடலுறவு' வரை... ஊடுருவி ஆராயகிறார்களோ தெரியாது!

சில குடும்பங்களுக்கு ஒரு பணச்சடங்காகவும் அமைகின்றது! சில குடும்பங்களுக்கு ஒரு ஒன்று கூடலாகவும் அமைகின்றது!

ஆனால் இதற்குப் போய்.. ஏதோ தங்கள் பெண் 'நோபல்' பரிசு பெற்றுவிட்ட அளவில்...விழாவெடுப்பதோ.. பாராட்டு விழா நடத்துவதோ... பொருத்தமில்லாதது!

அது எமது இனத்தின்..விலாசம் காட்டும் குணத்தையே காட்டுகின்றது என்பது எனது கருத்து!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.