Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எக்நெலிகொடவை கொலை செய்ய உத்தரவிட்ட கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய நபர் விரைவில் கைது

Featured Replies

எக்நெலிகொடவை கொலை செய்ய உத்தரவிட்ட கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய நபர் விரைவில் கைது


லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை கொலை செய்யுமாறு உத்தரவிட்ட கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் பலம்பொருந்திய முக்கியஸ்தர் ஒரவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.


எக்நெலிகொட தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த கொலை தொடர்பில் இராணுத்தின் மேலும் சில உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஏற்கனவே இரண்டு இராணுவ கேர்ணல்கள் உள்ளிட்ட 11 உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


கடந்த அரசாங்கத்தில் மிகவும் விசேடமான அதிகாரங்களைக் கொண்ட அதி முக்கியஸ்தர் ஒருவரே, எக்நெலிகொடவை கொலை செய்யுமாறு உத்தரவிட்டடதாக விசாரணைகிளன் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.


பாதுகாப்பு அமைச்சின் அதி உயர் பதவியொன்றை வகித்த சிவில் அதிகாரியொருவரே இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக அந்த அந்த தகவலில் மறைமுகமாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.


இதேவேளை, எக்நெலிகொட கொலை தொடர்பிலான விசாரணைகளை கிடப்பில் போடுவதற்கு பல்வேறு தரப்புக்கள் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125007/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அடி ஆத்தி....கோத்த வுக்குகே ஆப்பா!

  • கருத்துக்கள உறவுகள்

அடி ஆத்தி....கோத்த வுக்குகே ஆப்பா!

மகிந்தவின் ஆள் இவா வனசுந்தர என்ற ஜட்ஜ் அம்மா சுப்பிரிம் கோட்டில் இருந்து, கைதை தடை பண்ணி போட்ட ஓடர் இருக்குதே... 

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய ஆட்சிப்பீடத்துக்கு நன்றாகத்தெரியும் இந்த ராஜபக்சாக்கள் எப்பவுமே தங்களுக்கு தொண்டையில் சிக்கிய முள் என்று. விழுங்கவும் முடியாது, கக்கவும் முடியாது. அவசரப்பட்டு காரியத்தில் இறங்கினால், இராணுவத்திலும், மக்களிடையும் உள்ள பாரிய ஆதரவைக்கொண்டு தமது பதவிக்கே ஆபத்து வைத்து விடுவார்கள்.ஆகவே இப்படியான கொலைகளை விசாரிப்பதன் மூலம் குற்றவாளிகள் கொடுக்கும் தகவல்கள் இந்த ராஜாக்களை மக்களிடையே தோலுரிக்கும். தமிழ் அரசியல் வாதிகளின் கொலைகள் விசாரிக்கப் படுவதன் காரணம் சர்வதேசத்திடம் "எங்களை நம்புங்கள் நாங்கள் எல்லாம் நீதியா நடக்கிறோம், நாங்களே நடந்தவற்றை விசாரிக்கிறோம்." என்ற ஆணையை பெறுவதற்கும், எக்னெலிகொட வழக்கு ஓரளவு ராஜபக்சாக்களின் ஆதரவாளர்களை அவர்களிடம் இருந்து ஒதுக்கவும், ஒதுங்கவும் செய்யும். அதன் பின் அவர்களை இலகுவாக தாங்கள் விரித்த  வலையில் விழுத்தி, தங்கள் வழியிலிருந்து அகற்றி ஓட, ஓட விரட்டுவதற்காக போடப்படும் படங்கள். இராணுவத்தை அடக்க இலங்கையிலுள்ள எந்த அரசாங்கத்தாலும் முடியாது. பாதிக்கப்பட்ட எம்மினத்துக்கு விடிவு என்பது வெறும் கானல் நீரே. அவனவன் தன் கல்லாப் பெட்டியையே பாக்கிறான்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.