Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

புதுவித உணர்வை ஏற்படுத்தும் வியக்கவைக்கும் படங்கள்..!

...

...

...

...

...

...

...

...

 

...

 

...

...

...

...

 

...

...

 

...

...

...

...

...

...

...

...

...

...

...

 

virakesari.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

மருத்துவத் துறையின் மைல்கல் - உலக எக்ஸ்-ரே தினம் இன்று!

xray_14273.jpg

நவீன மருத்துவ முன்னேற்றத்துக்கு எக்ஸ் கதிர்களின் (X rays) கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும். மருத்துவ வரலாற்றில், இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல். விபத்து, எலும்பு முறிவு என்றால் மருத்துவர் பரிந்துரைக்கும் முதல் பரிசோதனை 'எக்ஸ்-ரே' தான். இதுதவிர, முழு உடல் பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பை கண்டறிய 'எக்ஸ்-ரே' பரிந்துரைக்கப்படும். இதனாலேயே, பெரும்பாலான மக்களிடையே மிகவும் பரிச்சயமான பரிசோதனையாக மாறிவிட்டது ‘எக்ஸ்-ரே’.

இன்றைய மருத்துவ உலகில் ‘எக்ஸ்-ரே’  பரிசோதனை கண்டுபிடிப்பானது, அதிகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நோயின் தன்மையை அறிய பெரிதும் பயன்படக் கூடியதே ‘எக்ஸ்-ரே’ கதிரியக்க முறை. உடலின் உள்ளே ஊடுருவிச் செல்லும் இந்த கதிர்கள், பாதித்த பகுதியின் தன்மையினைப் துல்லியமாக படம்பிடித்துக் காட்டும். குறிப்பாக நமது உடலில் உள்ள எலும்புகளுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு இந்த பரிசோதனை உதவும். வயிற்றில் உள்ள கட்டிகள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் கண்டறிய என பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளில் உதவுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் பெரிதும் பயன்படுகின்றன.  

மேலும் பெரிய கட்டடங்கள், இரும்புப் பாலங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதைப் பார்த்துச் சரி செய்வதற்கும் என பல செயல்பாடுகளுக்கும் இக்கதிர்கள் பயன்படுகின்றன.


இத்தகைய பெருமை வாய்ந்த ‘எக்ஸ்-ரே’  கண்டுபிடித்த நாளின் நினைவாகவும், மருத்துவப் படிமவியலின் பயன்களை அறியச் செய்தவதற்காகவும் வருடந்தோறும் உலக ‘எக்ஸ்-ரே’ தினம் கடைபிடிக்கப்படுகிறது.

‘எக்ஸ்-ரே’  கண்டுபிடிப்பு


1895-ல், குறைந்த அழுத்தத்தில் உள்ள வாயுவின் ஊடாக மின்சாரத்தை செலுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ரான்ட்ஜென் ஆய்வு செய்தார். அதே ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, இருட்டறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்ட ரான்ட்ஜென், ‘பேரியம் பிளாட்டினோ சயனைடு’ எனும் வேதிப் பொருள் தடவப்பட்ட திரையை வைத்து ஆராய்ச்சி செய்தார். அப்போது இரண்டு மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பென்சிலின் நிழல் ஒளிர்வதைக் கண்டார். உடனே பல்வேறு தடிமன்களில் பொருட்களை வைத்து அந்தக் கதிர்களை ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு தடிமனும் ஒவ்வொரு நிழலை (பிம்பத்தை) உருவாக்குகின்றன என்பதைக் கண்டறிந்தார். 'எக்ஸ்-ரே' கண்டு பிடிக்கப்பட்ட தினமான நவம்பர் 8-ம் தேதி 'எக்ஸ்-ரே' தினமாகக் கொண்டாடப்படுகிறது.


பெயர் வந்த கதை
இதற்கு எக்ஸ்-ரே என ரான்ட்ஜென் பெயரிட்ட காரணம் விசித்திரமானது. பொதுவாக, கணிதத்தில் தெரியாத ஒரு எண்ணை ‘X’ என வைத்துகொள்வது போல, இந்தக் கதிர்களின் பண்புகளை உடனடியாக அறிந்திராத நிலையில் ரான்ட்ஜென் ‘எக்ஸ்-ரே’ எனப் பெயரிட்டார். எல்லா ஒளிக்கதிர்களும் போட்டோ தகடுகளில் படியும் தன்மை கொண்டுள்ளதால், இவர் கண்டுபிடித்த கதிர்களையும் தகடுகளில் பதியவைக்க ஆசைப்பட்டார்.  அதற்காக, இக்கதிர்களை போட்டோ தகட்டில் வைத்திருந்த மனைவியின் கை மீது செலுத்திப் பார்த்தார். செலுத்தியபின் அந்தத் தகட்டிலுள்ள கருவியைப் பார்த்தார். அதில், அவரது மனைவியின் கை எலும்புகளும் அவர் அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன.  ஆக மனித உடல்களின் மெல்லிய திசுக்களின் வழியாக ஊடுருவிச் செல்லும் இக்கதிர்கள், எலும்பு போன்ற கடினமான பொருள்களின் வழியாக ஊடுருவிச் செல்லாது என்பதை கண்டறிந்தார்.
காப்புரிமை வாங்காத ரான்ட்ஜென்
தனது அரிய கண்டுபிடிப்பால் மருத்துவ உலகின் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ரான்ட்ஜென், தனது கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை கோரவில்லை. ‘எக்ஸ்-ரே ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு காப்புரிமை தேவையில்லை. அதை ரான்ட்ஜென் கதிர்கள் என்று அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என பெருந்தன்மை காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

l_shutterstock_doctor-x-ray_1200x675_151

‘எக்ஸ்-ரே’ பற்றிய தகவல்கள்


* முதன் முதலாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டவர், ரான்ட்ஜெனின் மனைவி.
* ரான்ட்ஜெனுக்கு இந்தக் கண்டுபிடிப்புக்காக 1901-ம் ஆண்டில்  உலகின் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* இக்கதிர் அடிக்கடி ஊடுருவினால் உடலுக்குப் பெரும் பாதிப்பு உண்டாகும். ரான்ட்ஜென் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். ஆனால், 'எக்ஸ்-ரே' கதிர்வீச்சு அதற்கு காரணம் அல்ல. மிகவும் பாதுகாப்பான முறையில்தான் அவர் அந்த ஆய்வை மேற்கொண்டார். ஆனால், மேரி கியூரி காரீயத் தடுப்புகள் பயன்படுத்தாததால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
* எக்ஸ்-ரே மிகவும் அவசியப்பட்டால் மட்டுமே எடுக்க வேண்டும். அதிலும் கர்ப்பிணிகளுக்கு முதல் ஏழு வாரங்களில் ‘எக்ஸ்-ரே’ எடுக்கவே கூடாது.
* குழந்தைகளுக்கு முதல் மூன்று மாதங்களில், தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர, ‘எக்ஸ்-ரே’ பரிசோதனையை மேற்கொள்ளக்கூடாது.

vikatan

பகிர்வுக்கு நன்றி நவீனன்..தொடருங்கள்......

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 09
 
 

alfi.jpg1905: பிரான்ஸில் அரசாங்கத்தையும் தேவாலயத்தையும் பிரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1906: தியோடர் ரூஸ்வெல்ட், பனாமா கால்வாய் நிர்மாணப்புப் பணிகளை பார்வையிடச் சென்றதன் மூலம் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.

1913: அமெரிக்க கனேடிய மத்திய பகுதியிலுள்ள ஏரிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 19 கப்பல்கள் அழிக்கப்பட்டதுடன் 250 இற்கும் அதிகமானோர் பலியாகினர். ஏரிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை அழிவு இதுவாகும்.

1921: விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1937: சீனாவின் ஷாங்கை பிராந்தியத்தை ஜப்பானிய துருப்புகள் கைப்பற்றின.

1953: பிரான்ஸிடமிருந்து கம்போடியா சுதந்திரம் பெற்றது.

1960: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 43 வயதான ஜோன் எவ். கென்னடி வெற்றி பெற்று, அமெரிக்க வரலாற்றில் தெரிவுசெய்யப்பட்ட மிக இளம் ஜனாதிபதியானார்.

1963: ஜப்பானிய நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 458 பேர் பலியாகியதுடன் 839 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

1989: கிழக்கு ஜேர்மனியிலிருந்து மேற்கு ஜேர்மனிக்கு மக்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த பேர்லின் சுவர் வீழ்த்தப்பட்டது.

1985: சோவியத் யூனியனைச் சேர்ந்த கெரி கஸ்பரோவ் 22 ஆவது வயதில் சக நாட்டவரான அனடோலி கார்போவை தோற்கடித்து உலகின் மிக இளம் செஸ் சம்பியனானார்.

2005: ஜோர்தான் தலைநகர் அம்மானில் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் சுமார் 60 பேர் பலி.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

லெனின் - உண்மையான புரட்சித் தலைவர்...!

maxresdefault%20%282%29_17327.jpg

லெனினுக்குத் தூக்கம் வரவில்லை. அது அவருக்கு முதல் இரவு. ஆம்! புரட்சி வெற்றி பெற்றதற்குப் பிறகு வரும் முதல் இரவு!

உண்மையில் லெனினுக்குத் தூக்கம் இல்லை. அவரும் அவருடைய நண்பர் போன்ச் - புரூயேவிச்சும்தான் இரவில் தங்கள் அறைக்கு வந்தார்கள். புரட்சி காலத்தில் லெனினோடு இருந்தவர் இவர். பிற்காலத்தில் அரசாங்க இலக்கியப் பொருட்காட்சிச் சாலையின் பொறுப்பாளராக ஆனவர். லெனின் தூங்கி விட்டாரா என்று பார்த்துவிட்டுத் தனது அறைக்கு தூங்கப் போனார் போன்ச். விளக்கை அணைத்து விட்டு லெனின் தூங்கினார். போன்விச் இதை உறுதிப்படுத்திக் கொண்டு தூங்கினார். இடையில் முழிப்புத்தட்டியது போன்விச்சுக்கு. எழுந்து பார்த்தால், லெனின் அறையில் விளக்கு எரிகிறது. லெனின் எழுதிக் கொண்டு இருந்தார். எழுதியதை அடித்தார். மீண்டும் எழுதினார். அதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க, ‘நிலங்கள் அனைத்தும் பொதுவுடமை ஆகிறது’ என்ற ஆவணம்!
‘‘சோஷலிசப் புரட்சியின் முதல்நாள் வாழ்த்துகள்” என்றபடி, ‘நிலம் பற்றிய ஆணைப் பத்திரத்தை’ அனைவருக்கும் வாசித்துக் காட்டினார் லெனின்.

‘‘இதை நான் பிரகடனம் செய்கிறேன். இதை இனி யாராலும் திரும்பப் பெற முடியாது. இந்த ஆணைப் பத்திரத்தை விவசாயிகளிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளவும் நிலப்பிரபுக்களுக்கு நிலத்தை திருப்பிக் கொடுக்கவும் எந்த ஆட்சியாலும் முடியாது. இதுதான் நமது அக்டோபர் புரட்சியின் முக்கியமான வெற்றி. நில உடைமைப் புரட்சி உடனடியாக இன்றே நிறைவேற்றப்பட்டு உறுதிப்படுத்தப்படும்” என்று அறிவித்த பிறகுதான் லெனினுக்கு லேசாக தூக்கம் வந்தது.

அன்றைய தினம் மாலையில்தான் மாறுவேடத்தைக் கலைத்து விட்டு மக்கள் மேடையில் லெனின் ஏறினார். 300 ஆண்டுகால ஜாரிஸத்தையும் ஒன்பது மாதகால கேரென்ஸ்கிஸத்தையும் வீழ்த்திவிட விதை தூவியவர் இவர்தானா என்று லெனின் முகம் பார்க்க தொழிலாளர்களும் விவசாயிகளும் படைவீரர்களும் துடித்தார்கள். லெனின் அப்போது எப்படி இருந்தார்....

lenin38_17496.jpg‘‘குள்ளமாக இருந்தார். தலை பெரிதாக இருந்தது. முடியே இல்லை. சிறிய கண்கள். மூக்கும் சிறியதுதான். வாய் பெரிதாக இருந்தது. பிடிவாதக்காரனுக்கு இருப்பது போல நாடி இருந்தது. உடையில் நாகரிகம் தெரியவில்லை. யாரோ உயரமானவருக்குத் தைத்தது போல இருந்தது அந்த உடை. அவர் அணிந்திருந்த உடையைப் பார்க்கும் பொதுமக்களுக்கு எந்த ஈர்ப்பும் தோன்றாது. பரவாயில்லை... அறிவு ஒன்றினால் பொதுமக்களின் தலைவர் ஆனவர் அவர். இந்த அபூர்வத் தலைவரை எந்த ரகத்திலும் சேர்க்க முடியாது. இவரது பேச்சில் நகைச்சுவை இல்லை. கர்ஜனைகள் இல்லை. முழக்கங்கள் இல்லை. பிடித்தால் ஒரே பிடி, அசையவே மாட்டார் என்று தெரிகிறது. ஆழ்ந்த கருத்துக்களை குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்கிறார். எந்தச் சிக்கலையும் தனித்தனியாக வெட்டி எடுத்துக் காட்டுகிறார். நடைமுறை சாதுர்யம் ஏராளமாய் இருக்கிறது. அவரது சாகச மூளைக்கு ஈடுஇல்லை. இப்படி ஒருவரைப் பார்த்ததே இல்லை” - அமெரிக்க மூளை இப்படி அளந்தது லெனினை.

உருவத்தால் அல்ல, உள்ளத்தால் உயர்ந்த தலைவனாக சோவியத்துகள் லெனினைக் கொண்டாடினார்கள். பாட்டாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள் என அனைத்து வர்க்கமும் தனது வர்க்கப் பிரதிநிதியாக லெனினைப் பார்த்தது. கம்யூனிஸ்ட் மொழியில் சொன்னால் அவர் பூர்ஷூவா வர்க்கத்தில் இருந்து வந்தார். அதுவும் ‘மிடில் க்ளாஸ்’. ‘பெட்டி பூர்ஷுவா’.

கல்வி அதிகாரிக்கு மகனாகப் பிறந்தவர் விளாடிமிர் இலியீச் உல்யானவ், லெனின் என்பது அவரது புனைப்பெயர். சைபீரியாவில் ஓடும் நதியில் மனம் பறிகொடுத்த லெனின், அதன் பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார். சட்டக் கல்வி படித்தார். சமூகம் படித்தார். படிப்பது தான் அவருக்குப் போதை தந்தது. படித்தார். படித்துக் கொண்டே இருந்தார். பிறமொழி படைப்புகளை மொழிபெயர்த்தார். எழுதினார். எழுதிக்கொண்டே இருந்தார். எழுதும் போதும், படிக்கும் போதும் தூக்கம் வந்தால் எழுந்து சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வார். தூக்கம் கலைந்ததும் மீண்டும் படிப்பார். எழுதுவார். பொதுவாக புத்தகப் புழுக்கள் புரட்சி செய்ய முடியாது என்பார்கள். வார்த்தைகளில் வடை சுடுபவர்கள் வர்க்கப் போராட்டத்துக்கு லாயக்கு வர மாட்டார்கள் என்பார்கள். ‘இவர் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கிறார். இவர் எழுத்தாளர் தான். இவர் எழுத்தால் புரட்சி வராது’ என்று சைபீரிய காவல்துறை அறிக்கை அனுப்பியது. ஆனால் இந்த இலக்கணம் மீறிய இலக்கியம் லெனின்.

மார்கஸ் எழுதிய மூலதனத்தை லெனினுக்கு முன்னால் கையில் வைத்திருந்தவர் அவரது அண்ணன் அலெக்சாண்டர். ஜார் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கைதான அலெக்சாண்டர் தூக்கிலிடப்பட்டார். அப்போது லெனினுக்கு வயது 17. அண்ணனின் போராட்டம் லெனினைக் கவனிக்க வைத்தது. அந்த தியாகம் லெனினை யோசிக்க வைத்தது. அரசுக்கு எதிராக மக்களை அணி திரட்டாமல் தனிமனிதத் தியாகங்கள் இளம்பிள்ளைவாதமாகத் தான் முடியும் என்பது லெனினுக்கு சிறுவயதிலேயே தோன்றியது. அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டக் கழகம் என்ற அமைப்பை (1895-ம் ஆண்டு) தொடங்கினார் லெனின். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். அந்த அமைப்பின் பெயரே அவரை கைது செய்ய வைத்தது.

vladimir-lenin-and-his-wife-nadezhda-kru

கிழக்கு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஒரு புரட்சியாளனாக அவர் வளர்ந்த இடம் அதுதான். படித்தார். எழுதினார். எழுதியதைத் திருத்தினார். நடைபயிற்சி செய்தார். மல்யுத்தம் கற்றுக் கொண்டார். சுவாசப் பயிற்சி மேற்கொண்டார். வேட்டையாடினார். மீன் பிடித்தார். சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொண்டார். ஏழைகளுக்கு சட்ட ஆலோசனைகள் சொன்னார். தன்னைப் போலவே சிந்தித்த குரூப்ஸ்கயாவை காதலித்தார். அவரும் அரசாங்கத்தால் கைதானபோது, அவரையும் தன்னோடு தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டார். இருவரும் இணைந்து வாழ்ந்தார்கள். சமூகத்துக்கு சேர்ந்து யோசித்தார்கள். ‘‘நாங்கள் இருவரும் சந்தித்தபோதே புரட்சிகர மார்க்சியவாதிகளாக இருந்தோம். சமூக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இரண்டுமே ஒன்றுதான் என்று நினைத்தோம்” என்று சொன்னார் குரூப்ஸ்.

இவர்கள் இருவருமே தண்டனைக் காலம் முடிந்து ரஷ்யாவுக்குள் வந்தார்கள். 1900-ம் ஆண்டின் தொடக்க ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராட்டம் ரஷ்யா முழுவதும் வேகம் எடுத்தது. வறுமை, பஞ்சம், தொழிலாளர்கள் வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை இதனைத் தூண்டியது. இதற்குக் காரணம் லெனின் தான் என்று சொல்லி நாடு கடத்தினார்கள். 1905-ம் ஆண்டில் இருந்து சுமார் 9 ஆண்டு காலம் பல்வேறு நாடுகளில் தலைமறைவாக இருந்தார் லெனின். மொத்த சோவியத் புரட்சிக்கான அடித்தளம் வெளிநாட்டில் இருந்துதான் போடப்பட்டது. சுவிட்சர்லாந்து, லண்டன், ஜெனிவா, பின்லாந்து, ஆஸ்திரியா என பல நாடுகளில் வாழ்ந்து வந்தார் லெனின். வெளிப்புறச் சக்திகளால் அல்ல, உட்புறச் சக்திகளால் மட்டும் தான் புரட்சி சாத்தியம் என்ற இலக்கணத்தையும் இந்தப் புரட்சித் தலைவர் உடைத்தார்.

தன்னுடைய சிந்தனைகள் அனைத்தும் ரஷ்யாவுக்குள் கொண்டு செல்லும் வாகனமாக பத்திரிகைகளை நினைத்தார் லெனின். ‘கட்சியை எங்கிருந்து தொடங்குவது?’ என்று கேட்டபோது, ‘ஒரு நாளிதழை உருவாக்கு, அதில் இருந்து தொடங்குவோம்’ என்றார் லெனின். அப்படி உருவானது தான், ‘தீப்பொறி’ நாளிதழ். அதன் பிறகு, ‘புதுவாழ்வு’ இதழைத் தொடக்கினார். ‘உண்மை’ இதழ் தொடங்கினார். ‘சமூக ஜனநாயகவாதி’ இதழையும் தொடங்கினார். இந்த நான்கு இதழ்களும் தான் சோவியத் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தன. இதில் பலநூறு கட்டுரைகளை லெனின் எழுதினார்.

தத்துவம், தத்துவ விமர்சனம், வரலாறு, வரலாற்று விமர்சனம், கட்சி, கட்சியின் நடைமுறை.... என்று லெனின் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொரு பாட்டாளியையும் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியையும் உருவாக்கியது. ஜார் ஆட்சியை வீழ்த்துவதைக் குறைந்தபட்ச செயல்திட்டமாகவும், அதே இடத்தில் சோசலிச அமைப்பை உருவாக்குவதை அதிகபட்சத் திட்டமாகவும் கொண்ட ரஷ்ய சமூக ஜனநாயக் கட்சியை உருவாக்கினார். இந்த லட்சியத்தை நோக்கி சோவியத்துகளை அணி திரள எழுதினார். ஆயுதப் புரட்சியால் மட்டுமே ஜாரை வீழ்த்த முடியும் என்ற முடிவுக்கு (1905-ம் ஆண்டு) வந்தார்.

iskra18_17586.jpg

‘‘ரகசிய வேலை செய்து... விரோதியைத் திடீரெனத் தள்ளிவிட்டு... அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” - இதுதான் லெனின் வகுத்துக் கொடுத்த திட்டம். பாதிக்கப்பட்ட மக்களை கோபம் கொள்ள வைத்து, உணர்த்தி, அவர்களைத் தத்துவார்த்த அடிப்படையில் வென்றெடுத்த பிறகு போராட்டக் களத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார் லெனின். ஆயுதப் போராட்டத்தையும், அரசு நிறுவனங்களைக் கைப்பற்றுவதையும் மிகமிக இறுதிக்கட்டத்தில் தான் கையில் எடுத்தார். ரஷ்ய பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது போல்ஷ்விக்குகளை தேர்தலில் போட்டியிட லெனின் அனுமதி தந்தார். மன்னரை எதிர்க்கும் அனைத்து தரப்பையும் முதலில் சேர்த்துக் கொண்டு போராடி, பின்னர் பாட்டாளிகளை மட்டும் தனியே பிரித்தெடுத்து மற்ற சக்திகளை ஒதுக்கித் தள்ளினார்.

இப்படி தனது அறிவார்ந்த அனுபவத்தின் மூலமாக தியரியை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்திப் பார்த்தவர் லெனின். ‘‘அவர் பேசும்போது பேசுவது போல் இல்லை. வரலாறு ஆணையிடுவது போல் இருக்கும்” என்று கார்க்கி சொல்வது இதனால் தான். லெனின் எளிமையாகச் சொன்னார். ஆணையிடுவது போல இருந்தது. இந்த எளிமையும் இனிமையும் தான் புரட்சியின் அடையாளமாகவும் மாறியது.

1917 நவம்பர் புரட்சிக்கு சில மாதங்களே இருக்கின்றன. லெனினை அவரது நண்பர் வந்து சந்திக்கிறார். குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தி வருவதாக அவர் சொல்கிறார். ‘குழந்தைகளை ஒரே இடத்தில் அடைத்து வைக்காதீர்கள். வெளியில் அழைத்துச் செல்லுங்கள்” என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார் லெனின். கட்சி உறுப்பினர் ரயிலைச் செலுத்த ஐம்பது குழந்தைகள் வெளியில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ‘நம்மைப் பற்றி எல்லாம் லெனின் நினைக்கிறாரா?’ என்று அந்தக் குழந்தைகள் நினைத்தன. லெனின் எல்லாரையும் நினைத்தார். புரட்சிக்கு சில நாட்கள் முன்னதாக வீட்டு வேலை செய்யும் பெண்களை அழைத்து அவர்களது பிரச்னையைப் பற்றி அறிந்தார். சோவியத் புரட்சி முடிந்ததும் அரசாங்க சின்னத்தில் வாள் உருவத்தை வைத்தார்கள். ‘சோசலிசம் மலர்ந்து விட்டது. இனி இது எதற்கு?’ என்று கேட்டு நீக்கச் சொன்னார் லெனின். புரட்சியாளன் என்றால் வாள், துப்பாக்கியுடன் இருக்க வேண்டுமா என்ன? கருவியைத் தாண்டிய கனிவை வைத்திருந்தார் லெனின்.

அவரது முகத்தைப் பாருங்கள். ஆயுத எழுத்து போல இருக்கும்!

vikatan

  • தொடங்கியவர்

 

“வளர்ப்பு தந்தையை பிரிந்த கங்காரு” - காணொளி
-------------------------------------------------------------------------
ஒரு கங்காருக்கும் அதனை வளர்த்தவருக்கும் இடையே பாசமிகு பிரியாவிடை

  • தொடங்கியவர்

விலங்குகளின் விநோதத் தூக்கம்!

 

 
Desktop_3074148f.jpg
 

சிலருக்குக் கொஞ்சம் சத்தம் கேட்டாலே தூக்கம் கலைந்துவிடும். இன்னும் சிலரோ சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தால் தூங்கவே மாட்டார்கள். உண்மையில் நிம்மதிக்கும் தூக்கத்துக்கும் தொடர்பு உண்டு. உடல் உறுப்புகள், மனதின் ஓய்வுக்குத் தூக்கம் ரொம்ப முக்கியம். எனவேதான் மனிதர்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தைத் தூங்கியே கழிக்கிறார்கள். ஆனால், மனிதர்கள் தூங்குவதுபோல அல்லாமல் விலங்குகள் பலவிதமாகத் தூங்குகின்றன. பல்வேறு விலங்குகளின் தூக்கம் குறித்த சுவாரசியமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோமா?

மனிதர்களைப் போலப் பாதுகாப்பாகத் தூங்கும் சூழ்நிலை விலங்குகளுக்கு இல்லை. ஒரு விலங்குக்கு எப்போது வேண்டுமானாலும் மற்றொரு பெரிய விலங்கால் ஆபத்து வரலாம். இரைக்காக எப்போது வேண்டுமானாலும் தூக்கத்திலிருந்து அவை எழுந்து ஓடலாம். இதனால் கிடைக்கும் இடைவெளி நேரங்களில் குட்டித் தூக்கமோ, பாதி விழிப்பு; மீதி ஓய்வு என அரைத் தூக்கத்தையோ விலங்குகள் போடும்.

குதிரைகள், வரிக்குதிரைகள் நின்றபடியே தூங்கும் இயல்புடையவை. மூட்டுகளை இறுக்கிக்கொண்டு உடலின் மொத்த எடையைக் கால்களில் சுமக்கும் இயல்பு இவற்றுக்கு உண்டு. நின்று கொண்டே தூங்குவதால், கண் விழித்த வேகத்தில் குதிரைகளால் பாய்ந்து ஓட முடிகிறது.

குண்டு உடல் காரணமாகப் பெரும்பாலும் யானை படுத்து தூங்காது. வலுவான மரத்தின் மீது தலை, தும்பிக்கையைச் சாய்த்து குட்டித் தூக்கம் போடுவதையே விரும்பும். உருவத்தில் பெரியது என்பதால், அதிக உணவுக்காக அலைவதற்கும், அவற்றைச் சாப்பிடுவதற்குமே பெரும்பாலான நேரம் செலவாகும். இதனால், தினசரி சராசரியாக 4 மணி நேரமே யானை தூங்கும்.

பாம்புகளுக்குக் கண்ணில் இமைகள் இல்லை. அசையாது சுருண்டு அவை குட்டித் தூக்கம் போடும்போதும், கண்கள் திறந்து இருப்பது போலவே தெரியும். உண்மையில், உறக்கத்தின்போது பாம்புக்குத் தனது கண்ணில் உள்ள ரெட்டினா பகுதியை மட்டும் சிறிய சவ்வினால் மூடிக்கொள்ளும் வசதி உண்டு.

காண்டாமிருகம் மனிதர்களைப் போலவே தினசரி 8 மணி நேரம் தூங்கும். ஆழ்ந்த உறக்கத்தில்கூட, தனது விறைத்த காதுகள் உதவியுடன் சிறு சத்தத்தையும் உணர்ந்து உஷாராகும் இயல்பு இதற்கு உண்டு.

மிகவும் வேகமாக ஓடக்கூடிய சிறுத்தை, மரத்தின் உயரமான கிளையிலும் உடலை சாய்த்துத் தூங்கும். அப்படித் தூங்கும்போதும் கிளையிலிருந்து சிறுத்தையின் உடல் சரியாது.

உலகின் சோம்பேறி விலங்கு எனப் பெயர் பெற்றது சோம்பல் கரடி (sloth bear). இது தினமும் குறைந்தது 15 மணி நேரம் தூக்கத்தில் இருக்கும். அதன் சோம்பலான சுபாவத்தினாலும் செயல்பாடுகளாலும் விழித்திருக்கும் மிச்ச நேரத்திலும் தூங்குவது போலவே தோற்றமளிக்கும்.

பறவைகள் நீண்ட தூரம் பறக்கும்போதும் அவை அரைத் தூக்க நிலையிலேயே ஓய்வெடுக்கின்றன. பறவையினமான வாத்து எப்போதும் கூட்டமாகவே இருப்பது, வாத்துகளின் தூங்கும் முறைக்கு உதவியாக இருக்கிறது. கூட்டத்தின் ஓரத்தில் இருப்பவை, குழுவின் பாதுகாப்புக்காக இப்படி அரைத்தூக்கம் போடும். கூட்டத்தின் நடுவில் இருப்பவை பாதுகாப்பாக முழுத் தூக்கம் போடும்.

ஒரு நாளில் அதிகம் தூங்கும் சாதனை வௌவாலுக்கு உண்டு. பழுப்பு வௌவால்கள் சுமார் 20 மணி நேரம் தூங்கும். நள்ளிரவில் மட்டுமே இரைதேடிச் செல்வதால், மற்ற சமயங்களில் தலைகீழாகத் தொங்கியபடி தூங்கிக்கொண்டிருக்கும்.

உயரமான விலங்கான ஒட்டகச்சிவிங்கி அவ்வப்போது 5 அல்லது 10 நிமிடங்களாக தினமும் அதிகபட்சமாக 1 அல்லது 2 மணி நேரம் மட்டுமே தூங்கும்.

விலங்குகளில் கரடியின் குளிர்காலத் தூக்கம் ரொம்ப பிரபலமானது. உணவின்றி சுமார் 8 மாதங்கள் வரை கரடி கும்பகர்ணத் தூக்கம் போடுவதுண்டு. பாறைகளுக்கு இடையே, மரப்பொந்துகளில் எனப் பாதுகாப்பாகக் கரடிகள் தூங்கும். இந்தக் காலகட்டத்தில் கரடியின் இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம், உடல் வெப்பநிலை ஆகியவை குறைந்திருக்கும். உடலின் வளர்சிதை மாற்றமும் குறைவதால் கரடிக்குப் பசி எடுக்காது. இதனால் தனது உடல் எடையில் கால் பங்கினை இழந்து கரடி இளைத்துப்போய்விடும். மற்ற மாதங்களில் தினசரி ஒருசில மணி நேரங்கள் மட்டுமே தூங்கும். மீதி நேரம் முழுக்க இரையைத் தின்று இழந்த உடல் எடையைக் கரடி திரும்பப் பெற்றுவிடும்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
Miss Universe Singapore 2016
 

மிஸ் யூனிவர்ஸ் சிங்­கப்பூர் 2016 (Miss Universe Singapore 2016) அழ­கு­ரா­ணி­யாக செரில் சௌ தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

 

2052324.jpg

 

205231.jpg

 

2052318.jpg

 

2052322.jpg

 

அண்­மையில் நடை­பெற்ற மிஸ் யூனிவர்ஸ் சிங்­கப்பூர் யூனிவர்ஸ் 2016 போட்­டி யின் இறுதிச் சுற்றில் 15 யுவ­திகள் பங்­கு­பற்­றினர்.

 

2052325.jpg

 

2052319.jpg

 

இவர்­களில் 20 வய­தான மாணவி செரில் சௌ முத­லிடம் பெற்றார். தனிஷா கான் இரண்­டா­மி­டத்­தையும் சோன்யா பிரான்ஸன் 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.

 

2052321.jpg

 

2052317.jpg

 
 
metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14991127_10153867611535163_3005253037253

14938337_10153867611375163_1650630852420

15039584_10153867611020163_1608765238756

14991082_10153867610985163_2218115930562

15016310_10153867611125163_2000955061725

14940048_10153867610775163_9464240854899

 

15016152_10153867611320163_6202165971030

14991418_10153867611395163_1314552047845

15032184_10153867611595163_7584784612157

15036382_10153867611580163_7782612161599

15025665_10153867612265163_7678153144372

 

பெங்களூர் கோயிலில் பட்டுச்சேலையில் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே (புகைப்படத் தொகுப்பு)

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுவதற்காக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே பெங்களூரில் உள்ள ஸ்ரீ சோமேஷ்வர கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பிரத்யேக புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு.

BBC

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

நவம்பர் - 10

 

1444 : ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்டோமான் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.

 

846varalaru-NRaviraj2.jpg1520 : டென்மார்க் மன்னன் இரண்டாம் கிறிஸ்டியன், சுவீடனை முற்றுகையிட்டபோது ஸ்டொக் ஹோம் நகரில் பலரைக் கொன்றான்.

 

1674 : ஆங்கிலேய -டச்சு போரை யடுத்து, வெஸ்ட்மின்ஸ்டர் உடன் பாட்டின் படி, அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட "புதியத் நெதர்லாந்து" பிராந்தியதை இங்கிலாந்திடம் நெதர் லாந்து  ஒப்படைத்தது.

 

1847 : ஸ்டீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் உயிரிழந்தனர்.

 

1871 : காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின் நாடுகாண் பயணி, டேவிட் லிவிங்ஸ்ட னைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.

 

1928 : ஹிரொ ஹிட்டோ, ஜப்பானின் 124 ஆவது மன்னரானார்.

 

1970 : சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனா கோட்" எனப்படும் தானியங்கி ஊர் தியைக் கொண்டு சென்றது.

 

1971 : கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.

 

1972 : பேர்மிங்ஹாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு ஹவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.

 

1983 : மைக்ரோசொப்ட் விண்டோஸ் 1.0 பதிப்பை பில்கேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.

 

1995 : நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ-வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.

 

1999 : பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

 

2006 : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

2007 : மலேஷியாவில் தேர்தல் மறுசீரமைப்பை வலியுறுத்தி சுமார் 40,000 பேர் ஊர்வலம் சென்றனர்.

 

2008 : செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்ஸ் விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்த சந்தேகம்லாம் உங்களுக்கும் இருக்கா? சரி பண்ணிடலாம் வாங்க! #MorningMotivation

சந்தேகம்

நம்மில் பலருக்கும் சின்னச் சின்ன சந்தேகங்கள், கேள்விகள் பல மனசுக்குள் ஓடும். அதற்கு சரியான விடையோ காரணமோ தேடாமல், அந்த கேள்விகள் நம்மை ஆட்கொள்ள விட்டுவிடுவோம். கொஞ்சம் யோசித்தால், அந்தப் பிரச்னையை எளிதில் முடித்துவிடலாம். அப்படி சில கேள்விகளும், அதன் பின்னணிகளும் இதோ...

நான் போன் பண்ணினேன். அவன்/அவள்/அவர் எடுக்கல. நான் மெசேஜ்/வாட்ஸ்அப் பண்ணினேன். பார்த்துட்டான்/ர். ரிப்ளை பண்ல’ 

எந்த ஒரு விஷயத்திலும் உங்கள் கோணத்திலிருந்து பார்த்துப் பெரிதாக நினைக்காதீர்கள். உங்கள் பாஸுக்கு / மனைவிக்கு / காதலிக்கு ஃபோன் செய்கிறீர்கள். அவர் எடுக்கவில்லை. ‘இதுவாக இருக்குமோ.. அதுவாக இருக்குமோ’ என்று பதற்றத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள் சிலர். தேவையே இல்லை. ஃபோன் வைத்திருக்கும் இடத்திலிருந்து அவர் தூரத்தில் இருக்கலாம், சைலன்ஸில் இருக்கலாம் என்று பல காரணங்கள் இருக்கும் என்று எண்ணி அமைதியாக இருங்கள். ஒரு ஃபோனை எடுக்காததோ, மறுமொழி அளிக்காததோ ஒன்றும் அத்தனை பெரிய குற்றமல்ல / அவமானப்படுத்தும் செயல் அல்ல என்று உணருங்கள்.

’நான் பேசிட்டிருக்கும்போது அவன்/அவள்/அவர் கவனிக்கறதே இல்லை’

இன்றிலிருந்து ஏழு நாள் எடுத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு/அவளுக்கு/அவருக்கு என்ன பிடிக்கும் என்பதை கவனிக்க ஆரம்பியுங்கள். என்ன பேசினால் அவர் உற்று கவனிக்கிறார் என்பதை நீங்கள் உற்று கவனித்து மனதில் பதியுங்கள். அது சம்பந்தப்பட்ட விஷயங்களை அவரோடு அதிகம் பகிருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர் உங்களுடன் உரையாடும் நேரம் அதிகமாவதை உணர்வீர்கள். அதைவிடவும் முக்கியமாக ஒன்று உண்டு. அவர் உங்களிடம் பேசும்போது, நீங்கள் உற்று கவனியுங்கள். 50% மாற்றம் அங்கிருந்தே ஆரம்பமாகும்.

’ஃப்ரெண்ட்ஸ் நாலு பேர் இருக்கறப்ப ஒருத்தன் மட்டும் போனையே பார்த்துட்டிருப்பான்’

இன்றைய தேதியில் அலுவலகம் / உறவினர்கள் / நண்பர்கள் என்று பலரும் கூடிப் பேசும்போது பெரும்பாலும் பலரும் எதிர்கொள்ளும் சூழல் இது. அடிக்கடி ஒன்று கூடும் நண்பர்கள் பேசிவைத்துக் கொண்டு ஒரு விளையாட்டு விளையாடுங்கள். ‘நாம நாலு பேரும் உட்கார்ந்திருக்கும்போது போன் பாக்கெட்லதான் வெச்சுக்கணும். போன் வந்தா எடுத்துப் பார்த்து, முக்கியம்னா பேசலாம். மத்தபடி போனை எடுக்கக்கூடாது. அப்டி எடுத்தா அன்றைய தேநீருக்கான காசு அவன்தான் கொடுக்கணும்’

இதை ஆரம்பித்துப் பாருங்கள். இரண்டு மாற்றங்கள் உறுதி. ஒன்று போனை எடுப்பது குறையும். இரண்டு, சீக்கிரம் காபி, டீ சாப்பிட்டுவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.

’காலைல விஷ் பண்ணினா எங்க பாஸ் திரும்ப விஷ் பண்றதே இல்லை’

அதுனால என்ன ப்ரோ? முகம் முழுக்கப் புன்னகையோட தினமும் விஷ் பண்ணுங்க. உங்க மேனேஜர், உங்க சூப்பர்வைஸர், உங்க பாஸ்னு அதிகாரிகள், அலுவலர்கள் யாரை எதிரில் பார்த்தாலும் சிரிச்சுட்டே விஷ் பண்ணுங்க. தினமும். 21 நாள் இடைவெளி இல்லாம இதைப் பண்ணிப்பாருங்க. லீவு நாள் கணக்கில்ல. மத்தபடி தொடர்ந்து ஆஃபீஸ் போற நாட்கள்னு கணக்கு வெச்சுட்டு 21 நாள் இதை தொடர்ச்சியா பண்ணுங்க. அப்டி ஒருநாள் எதிர்ல அவர் வர்றப்ப மறந்துட்டீங்கன்னா, மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிங்க. அப்பறமா உங்களைப் பார்த்ததும் அவங்களே ஆட்டோமேடிக்கா விஷ் பண்ணுவாங்க. இன்னொண்ணு, நீங்களும் உங்களுடன் பணிபுரியறவங்கள பார்த்து மறக்காம விஷ் பண்றது.  

என் கருத்தை என் ஃப்ரெண்ட்ஸ் ஏத்துக்கவே மாட்டீங்கறாங்க.

கவலைப்படாதீங்க. மொதல்ல உங்க கருத்தை ஏத்துக்கணும்னு நெனைக்காம.. புரிஞ்சுக்கணும்னு நெனைக்கறது நல்லது.  குழுவுல பேசறப்ப பேச்சை பாஸிடிவா ஆரம்பிங்க. ‘இல்ல...’ - இந்த வார்த்தைல ஆரம்பிக்காம, ‘ஆமா..’ இந்த வார்த்தைல ஆரம்பிங்க. அப்பறம் மாற்றத்தை நீங்களே உணர்வீங்க. ஃப்ரெண்ட் சொல்றதுக்கு எதிர்கருத்து சொல்றதா இருந்தாலும் ‘ஆமா’வுல ஆரம்பிக்கலாம். உதாரணத்துக்கு..

‘கபாலில ரஜினி நடிப்பு பிடிக்கவே இல்ல மச்சி எனக்கு’

‘இல்ல.. நல்லாத்தான் நடிச்சிருந்தாரு.. நீ சொல்றது எனக்கு உடன்பாடில்ல’ - இப்படி சொல்றதுக்கு பதிலா ‘ஆமா.. கரெக்ட்தான். வேற சிலரும் சொல்லிருந்தாங்க. ஆனா மகளைத் தேடற காட்சில நல்லாதானே நடிச்சிருந்தாரு.. அதுவுமில்லாம...’ இப்படி கொண்டு போனா கடைசில உங்க கருத்தை அவர் ஏத்துக்கறாங்களோ இல்லையோ.. புரிஞ்சுப்பாங்க! 

‘டீமா போனா ஒருத்தன் மட்டும் எப்பவுமே பில்லுக்கு காசு கொடுக்காமயே டபாய்க்கறான்!’

எல்லா ஃப்ரெண்ட்ஸ் க்ரூப்லயும் அப்டி ஒருத்தன் இருப்பார் பாஸ். அவரை ஏத்துக்க முயற்சி பண்ணுங்க. அப்டி இல்லைன்னா,‘சுழற்சி முறை டீ டைம்’ ஃபாலோ பண்ணுங்க. இன்னைக்கு அவர், நாளைக்கு இவர்.. இப்படி. ஆரம்பத்துல அவர் போங்கு காட்டினாலும் எப்டியும் ஒரு கட்டத்துல டீமுக்குள்ள ஐக்கியமாகிடுவார்.

இப்படி உங்களுக்கு பிரச்னை என தோன்றும் விஷயங்களை கேள்விகளாக எழுதி பாருங்கள். அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்ற பதிலையும் யோசியுங்கள். நீண்ட நாள் இருக்கும் பிரச்னைகளில் ஒன்றையாவது இன்று முடித்துவிடுங்கள். வாழ்க்கை நம் வசமாவது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கும். அந்த 'கொஞ்சம்' இன்றும் நடக்க வாழ்த்துகள்

vikatan

  • தொடங்கியவர்

தில்லானா மோகனாம்பாளை திரைக்குத் தந்த கொத்தமங்கலம் சுப்பு! பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

kothamangalam%20subbu%20left_11435.jpgவிஞர், சிறந்த எழுத்தாளர், சினிமா கதை வசனகர்த்தா, இயக்குநர் கொத்தமங்கலம் சுப்புவின் பிறந்தநாள் இன்று. இலக்கியவாதிகள் பொதுவாக சினிமாவில் சோபிப்பதில்லை என்ற அரதப்பழசான குற்றச்சாட்டு இன்றளவும் திரையுலகில் உண்டு. அதைத் தகர்த்த முன்னோடிகளில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களின் ஆதாரமாக இயங்கியவர் சுப்பு.

அங்கு ஜெமினி பட இலாகாவிலும், வாசன் அவர்கள் நடத்திய ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதும் எழுத்தாளராகவும், ஜெமினி படங்களில் நடிக்கும் நடிகராகவும் இப்படிப் பல துறைகளிலும் பிரகாசித்தவர் சுப்பு.

கொத்தமங்கலம் சுப்பு என்கிற சுப்பிரமணியன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கன்னாரியேந்தல் எனும் கிராமத்தில் 1910-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி பிறந்தார். இளம் வயதில் தாயாரை இழக்கநேர்ந்ததால் தந்தை மகாலிங்க ஐயரின் கட்டுப்பாட்டில் வளர்ந்தார் சுப்பு. இயல்பாக கலை விஷயங்களில் ஈடுபாடு இருந்ததால் எட்டாம் வகுப்புவரை மட்டுமே படிக்க முடிந்தது. மகனை பொறுப்பானவனாக ஆக்க உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துவைத்தார் தந்தை. பின்னர் ஒரு மரக்கடையில் வேலைக்குச் சேர்ந்து பணிபுரிந்த சுப்புவுக்கு கவனம் முழுவதும்  நாடகம், நடிப்பு, பாடல் புனைவது, என்ற விஷயங்களிலேயே இருந்தது. வியாபாரத்தில் துளியும் கவனமில்லை. ஒருமுடிவாக காரைக்குடி அருகே இயங்கிவந்த நாடகக் குழு ஒன்றில் இணைந்தார். நாடக குழுவின் நாடகங்கள் பலவற்றில் நடிக்கத்துவங்கினார்.

தென்னிந்திய திரைப்படத்தொழில் மும்முரமாக வளர்ச்சியடைந்துகொண்டிருந்த நாடக அனுபவம் பட வாய்ப்புகளை பெற்றுத்தந்தது சுப்புவுக்கு. 1936-ல் ‘சந்திரமோகனா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகன் எம்.கே.ராதாவின் தோழன் வேணுகோபால் என்ற கதாபாத்திரத்தில் முதன்முதலாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் சுப்பு. அக்காலகட்டத்தில் 'பட்டினத்தார்' 'மைனர் ராஜாமணி", "அநாதைப் பெண்" போன்ற படங்களில் தலைகாட்டத்துவங்கினார். அதுவரை படத்தில் அவரது சுப்ரமணியன் என்ற அவரது நிஜப்பெயரே இடம்பெற்றது. 1939-ல் திருநீலகண்டர் படத்தில்தான் முதன்முதலாக கொத்தமங்கலம் சுப்பு என்ற பெயர் இடம்பெற்றது. இந்த பெயர் காரணம் சுவாரஸ்யமானது. சுப்பு நாடகங்களிலும் படங்களிலும் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த காலத்தில் கொத்தமங்கலம் சீனு என்பவர் திரைப்படத் துறையில் புகழ்பெற்றிருந்தார். அவர்தான் சுப்புவை அன்றைய பிரபல இயக்குநர் டைரக்டர் கே.சுப்பிரமணியத்திடம் அறிமுகம் செய்து வைத்தவர். அதிலிருந்து கொத்தமங்கலம் சுப்பு என்றே அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து கே.சுப்ரமணியத்தின் "பக்த சேதா , "கச்ச தேவயானி" உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1941-ல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கே.சுப்பிரமணியத்தின் சினிமா ஸ்டுடியோ முழுவதுமாக எரிந்துவிட நட்டத்தை சமாளிக்க தனது மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத்தை எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு விற்றார் சுப்ரமணியம். அப்போது சுப்ரமணியத்தால் 'சிறந்த கலைஞர், பன்முக திறன் மிக்கவர்' என்ற அறிமுகத்துடன் எஸ்.எஸ்.வாசனிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார் சுப்பு.

கொத்தமங்கலம் சுப்புவின் திறமையை பல விஷயங்களில் நேரில் கண்ட வாசன் அவரை தன்னுடனேயே பணிபுரியக் கேட்டுக்கொண்டார்.
இந்த காலகட்டத்துக்குள் மைனர் ராஜாமணி, அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்தசக்குபாய், அடங்காப்பிடாரி, சுகுணசரசா, பக்த சேதா, சூர்ய புத்ரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், பக்த நாரதர், தாசி அபரஞ்சி, போன்ற படங்களில் நடித்துமுடித்தார்.

kothamangalam%20subbu%20600%201_11201.jp

ஜெமினியில் சுப்புவின் கொடி பறக்க ஆரம்பித்தது. ஜெமினியில் அவருக்கு அளிக்கப்பட்ட  ஊதியம்  மாதம் 300 ரூபாய். கொஞ்சநாளில் வாசனின் பிரியமான நண்பராகவும் ஆகிப்போன சுப்பு, ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்காற்றினார். ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது.

ஜெமினியில் நடிகர், கதாசிரியர், இயக்குநராக, கதை வசனகர்த்தா கவிஞர் என தன் பன்முக திறமையுடன் இயங்கி திரையுலகில் புகழ்பெற்றார் சுப்பு. ஜெமினியில் நான்கு படங்களை இயக்கிய சுப்பு, ஏழு படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். அவரது பல நுாறு பாடல்கள் மக்களால் பெரிதும் பேசப்பட்டது.

ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார் கொத்தமங்கலம் சுப்புவுக்கு பெரும்புகழ் அளித்தது. சினிமாவையே பார்த்திராத, அதன் மீதுவெறுப்பு கொண்ட ராஜாஜி விரும்பி பார்த்த திரைப்படம் ஔவையார் திரைப்படம். அத்தனை சிறப்பான முறையில் வாசனின் எண்ணத்துக்கு திரையில் உயிர்கொடுத்திருந்தார் படத்தை இயக்கிய கொத்தமங்கலம் சுப்பு. படத்தின் திரைக்கதை, பாடல், இயக்கம் அனைத்தும் அவரே. 1954-ல் ஔவையார் படக்குழுவினருக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட ராஜாஜி, பக்தவத்சலம் “தமிழ் உலகுக்கு கொத்தமங்கலம் சுப்புவும் வாசனும் செய்த சேவையை யாராலும் மறக்கமுடியாது” என பாராட்டித்தள்ளினர்.

இப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு நடித்தும் இருந்தார். மனைவிக்கு பயந்தவரான அந்த கதாபாத்திரத்தின் சேஷ்டைகள் ரசிகர்களை சிரிக்கவைத்தது.

kothamangalam%20subbu%2023_11417.jpg

திரையுலகிலிருந்து விலகியிருந்த நடிகை கே.பி சுந்தராம்பாளை ஔவையாராக நடிக்க வைத்து ஹாலிவுட் படத்துக்கு இணையான பிரமாண்ட காட்சியமைப்புகளுடன் வெளியான ஔவையார் படம் இன்றைக்கும் ஜெமினியின் மாஸ்டர் பீஸ் என்றால் மிகையாகாது.
ஜெமினியின் ‘கண்ணம்மா என் காதலி’ திரைப்படம் கொத்தமங்கலம் சுப்புவுக்கு நற்பெயருடன் வாழ்க்கைத் துணையையும் தந்தது. ஆம்...1945-ல் வெளியான இந்த படத்தின் கதாநாயகி நடிகை எம்.எஸ்.சுந்தரிபாய் கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் திருமணம் செய்து கொண்டார்.

கொத்தமங்கலம் சுப்புவுக்கு புகழை தந்த படங்களில் முக்கியமானது,‘மிஸ். மாலினி’ பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் மிஸ்டர் சம்பத் என்கிற நாவலை ஜெமினி நிறுவனத்தார் திரைப்படமாகத் தயாரித்து 1947-ல் வெளியிட்டனர். இப்படத்தில் ‘சம்பத்’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார் கொத்தமங்கலம் சுப்பு. இப்படத்தில் இன்னுமொரு சிறப்பு ஜெமினி ஸ்டுடியோ அலுவலகத்தில் பணியாற்றிய அழகான ஒரு ஊழியர் ஒரு காட்சியில் நடித்திருந்தது. அவர்தான் பின்னாளில் காதல் மன்னன் என திரையுலகில் புகழ்பெற்ற ஜெமினி கணேசன்.

இரண்டாவது உலகப் போர் முடிந்து நாட்டில் பஞ்சம் நிலவிய இப்படம் வெளியான காலகட்டத்தில் ரேஷன் கடை அமலில் இருந்தது. உணவுத் தேவையில் கட்டுப்பாட்டை கொண்டுவந்த இந்த அவலத்தை கிண்டல் செய்து பாடல் எழுதியிருந்தார் கொத்தமங்கலம் சுப்பு...
‘காலையில எழுந்திரிச்சு
கட்டையோட அழுவணும்’
‘சக்கரைக்குக் கியூவில போய்
சாஞ்சுகிட்டு நிக்கணும்
சண்ட போட்டு பத்து பலம்
சாக்கட மண் வாங்கணும்’- என்ற அந்தப்பாடல் அன்றைக்கு மக்கள் மத்தியில் வெகு பிரபலமாயிற்று. தொடர்ந்து ‘ஞான சௌந்தரி’ யில் வசனம் எழுதியிருந்தார். இதையடுத்து வி.நாகையா நடித்த ‘சக்ரதாரி’ என்கிற படத்தில் பாடல்களை எழுதியிருந்தார்.

இந்த ஆண்டில் ஜெமினியின் ‘சந்திரலேகா’ வெளியாகி அதன் வெற்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அசைத்துப்பார்த்தது. இப்படத்தில் மூன்று வசனகர்த்தாக்களில் கொத்தமங்கலம் சுப்புவும் ஒருவர்.

kothamangalam%20subbu_11240.jpg

எம்.கே.ராதா இரட்டை வேடத்தில் நடித்த ஜெமினியின் சிறந்த படங்களில் ஒன்றான ‘அபூர்வ சகோதரர்கள்’ அன்றைக்கு பேசப்பட்ட படம். ‘கார்சிகன் பிரதர்ஸ்’ என்கிற ஆங்கில நாவலான இந்தப்படத்தில் சுப்பு சில பாடல்களை இயற்றியிருந்தார். இது ஜெமினியின் மகத்தான வெற்றிப்படங்களில் ஒன்று. 1949-ல் வெளிவந்தது.

1951 இல் ‘சம்சாரம்’ படத்திலும் சுப்பு உருக்கமான பாடல்களை எழுதியிருந்தார். ‘அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே’ என்கிற இப்படப்பாடல் தமிழ்நாட்டின் பிச்சைக்காரர்களை திரும்பத் திரும்ப தியேட்டருக்கு அழைத்துவந்தது எனலாம். 1955-ல் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘வள்ளியின் செல்வன்’ படத்தினை இயக்கியிருந்தார் சுப்பு. ஜெமினியின் வெற்றிப்படங்களில் ஒன்று இது.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்துக்குப் பிறகு ஜெமினி நிறுவனத்திலிருந்து சற்று விலகி விகடனில் எழுத ஆரம்பித்தார். கலைமணி என்ற பெயரில் அவர் எழுதிய கதைகள் வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. விகடனின் அவரது மாஸ்டர் பீஸ் ‘தில்லானா மோகனாம்பாள்’. அது வெளிவந்த காலத்தில் ஆனந்தவிகடன் பரபரப்பான விற்பனையானது. திரையுலகில் அவரது அத்தனை புகழையும் இந்த ஒற்றை நாவல் அவருக்கு அளித்தது.

தொடர்ந்து விகடனில் அவர் எழுதிய‘ராவ் பகதூர் சிங்காரம்’ என்னும் ஒரு தொடரும் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இவை பின்னாளில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. இதில் ‘தில்லானா மோகனாம்பாள்’ நாவலைவிடவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தயாரிப்பின்போது நிகழ்ந்த ஓர் சம்பவம் வாசன் மற்றும் சுப்புவின் அரிய குணத்தை பறைசாற்றியது.

vasan%203%20600%203_11124.jpg

கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே  தயாரிக்க இருந்த நிலையில்,  இயக்குநர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தைக் கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூகப் படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்  வாசன்.

உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது. ஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார். இங்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடவேண்டும்.

வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு. சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என்.

ஆனால் அதை வாங்க மறுத்த சுப்பு,  "நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கான செக் வந்தது. அதனால் நீங்கள் எனக்கு தனியே எதுவும் தரவேண்டாம்“ என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என்.

kothamangalam%20subbu%20asdf_11380.jpgஎழுத்தாளரின் மதிப்பை உணர்ந்து சினிமா உரிமை கொடுத்த பின் கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளருக்கான சன்மானத்தை கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது, தனக்குரிய பணம் வந்த தகவலை மறைக்காமல் இவ்வளவு பெரிய தொகையை வாங்க மறுத்த சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துபோனார் ஏ.பி. என்.

1960-ல் ‘இரும்புத்திரை’ ஏவிஎம் நிறுவனத்தாரின் ‘களத்தூர் கண்ணம்மா’ 1965-ல் 'படித்த மனைவி' உள்ளிட்ட சில படத்துக்கு வசனம் எழுதினார். சில படங்களில் தலைகாட்டினார்.

1970-க்குப்பிறகு முற்றாக திரையுலகில் இருந்து விலகினார். 1967-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1971-ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து கொத்தமங்கலம் சுப்புவை கவுரவித்தது.

வில்லுப்பாட்டில் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்த கொத்தமங்கலம் சுப்பு பின்னாளில் காந்திமகான் கதையை இவர் வில்லுப்பாட்டு மூலமாக தமிழகம் முழுவதும் நடத்தினார்.

 

கொத்தமங்கலம் சுப்பு பங்கேற்ற படங்கள்....

1.அனாதைப்பெண்- நடிப்பு 1938 
2. அதிர்ஷ்டம்- நடிப்பு 1939
3. சாந்த சக்குபாய் -வசனம், நடிப்பு 1939
4. அடங்காப்பிடாரி -நடிப்பு 1939 
5. சுகுண சரசா -நடிப்பு 1939 
6. பக்த சேதா -நடிப்பு 1940
7. சூர்ய புத்ரி- நடிப்பு 1941
8. மதனகாமராஜன் -நடிப்பு 1941
9. நந்தனார் - நடிப்பு (ஜெமினி) 1942
10. பக்த நாரதர் -நடிப்பு 1942
 11. தாசி அபரஞ்சி - கதை, வசனம், பாடல், நடிப்பு (ஜெமினி) 1944
12.  கண்ணம்மா என் காதலி- வசனம், இயக்கம் (ஜெமினி) 1945
13. மிஸ் மாலினி- வசனம், இயக்கம் (ஜெமினி) 1947
14. ஞான சௌந்தரி -வசனம் (கூட்டாக) 1948 
15.  சந்திரலேகா- வசனம் (கூட்டாக) (ஜெமினி) 
16. அபூர்வ சகோதரர்கள்- பாடல் (ஜெமினி) 1949
17. சம்சாரம் -பாடல் (ஜெமினி) 1951
 18. மூன்று பிள்ளைகள் -பாடல் (ஜெமினி) 1952 
19. ஔவையார்- திரைக்கதை, பாடல், இயக்கம், நடிப்பு (ஜெமினி) 1953
20. வள்ளியின் செல்வன்- திரைக்கதை, நடிப்பு, இயக்கம் (ஜெமினி) 1955
21. வஞ்சிக்கோட்டை வாலிபன் -வசன பாடல், நடிப்பு (ஜெமினி) 1958
22. இரும்புத் திரை -வசனம், பாடல் (ஜெமினி) 1960
 23. களத்தூர் கண்ணம்மா -பாடல் (ஏவிஎம்) 1960
24. படித்த மனைவி வசனம் -(கூட்டாக) 1965
25. தில்லானா மோகனாம்பாள் -கதை 1968
26. விளையாட்டுப் பிள்ளை 1970
27. சக்ரதாரி பாடல் (ஜெமினி) 1948

kothamangalam%20subbu%203_11236.jpg

 

திரையுலகிலிருந்து முற்றாக விலகி ஓய்விருந்த கொத்தமங்கலம் சுப்பு, 1974-ம் ஆண்டு பிப்ரவரி 15 ந்தேதி தனது 63 வயதில் மறைந்தார். தமிழ்த் திரையுலகின் ஆரம்ப கால வளர்ச்சியில் பங்களிப்பு செய்த திரையுலக முன்னோடிகளில் கொத்தமங்கலம் சுப்புவுக்கு தனியிடம் உண்டு.

vikatan

  • தொடங்கியவர்
மிஸ்டர் போல்ஸ்கி ஆணழகர் தெரிவு
 

போலந்தின் தேசிய ஆணழகர் போட்­டியில் ஜேன் ட்ராட்­விக்கி முத­லிடம் பெற்­றுள்ளார்.

 

205473.jpg

 

205471.jpg

 

205472.jpg

 

மிஸ்டர் போல்ஸ்கி எனும் இப்­ போட்­டியின் இறு­திச் ­சுற்று அண்­மையில் நடை­பெற்­றது.

 

205474.jpg

 

205475.jpg

 

205477.jpg

 

14 பேர் இதில் பங்­கு­பற்­றினர். இவர்­களில் ஜேட் ட்ராட்­விக்கி வெற்றி பெற்று மிஸ்டர் போல்ஸ்கி 2016 பட்­டத்தை வென்றார்.

 

2054866.jpg

 

2054814925281_1205894546115421_884351573

 

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

p32a.jpg

சினிமா ரசிகர்களை தித்திக்க வைக்கும் திரிலோக சுந்தரிகள்!

மல்லுவுட் பாரீஸ் லஷ்மி

நிஜமாகவே பாரீஸில் பிறந்த பாலாடைக்கட்டி. குடும்பத்தில் அனைவருமே இசைக்கலைஞர்கள். அம்மணி கிளாசிக்கல், ஹிப் ஹாப், பாலே, ஜாஸ் என எக்கச்சக்க  இசை வகைகளில் பட்டையைக் கிளப்புவார். இந்தியாவில் ஏகப்பட்ட கோயில்களில் நாட்டியாஞ்சலி நடத்தியிருக்கிறார். அப்போது இந்திய மண் மிகவும் பிடித்துவிட, இங்கேயே செட்டிலாகிவிட்டார். ‘பிக் பி', ‘பெங்களூர் டேஸ்’, ‘சால்ட் மாங்கோ ட்ரீ’, ‘ஒலாப்பிப்பீ’ என இப்போது இவர் இல்லாமல் படங்கள் ரிலீஸ் ஆவதே இல்லை. சொந்தமாக வைக்கத்தில் நாட்டியப்பள்ளி வைத்திருக்கிறார். # சகலகலாவல்லிதான்!

டோலிவுட் வாமிகா ஹப்பி

p32b.jpg

பஞ்சாபில் பிறந்த கோதுமை அல்வா. சின்ன வயதிலிருந்தே நடிகை ஆக வேண்டும் என்பதுதான் ஆசை, லட்சியம் எல்லாம். எட்டு வயதிலேயே சின்னத்திரையில் எட்டு வைத்தார். அதன் பின் ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்க கபக்கென கேட்ச் செய்து ‘ஜப் வீ மெட்’, ‘பிட்டூ பாஸ்’, ‘இஷ்க் பிராண்டி’ என லைன் போட்டுத் திறமை காட்டினார். உடனே கொத்திக்கொண்டு பறந்தார்கள் மனவாடுகள். அங்கிருந்து தங்கத் தமிழ்நாட்டுப் பிரவேசம். செல்வராகவனின் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் வாமிகாதான் நாயகி. இவரின் லேட்டஸ்ட் ரவுண்ட் மலையாளத்தில். கன்னடத்தை மட்டும் ஏன் பாக்கி வைக்கணும்? # எங்கிருந்தாலும் வாழ்க!

சாண்டல்வுட் ஐஸ்வர்யா நாக்

p32c.jpg

பெங்களூரில் பிறந்த பெப்பரோனி பீட்ஸா. மாடலாகக் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் முதன்முதலில் ஹீரோயின் ஆனபோது வயது 16. ஆனாலும் வயதுக்கு மீறிய திறமை என முதல் படத்திலேயே பாராட்டு மழை குவிய, சூடு பிடித்தது மார்க்கெட். அதன் பின் ஆண்டுக்கு இரண்டு படங்கள் என்று வரிசையாக 12 படங்களில் மளமளவென நடித்தார். ஒரு சின்ன பிரேக். அம்மணியின் ரிட்டன்ஸுக்காகக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.  # நாங்களும்தான்!

vikatan

  • தொடங்கியவர்

அதிரடி மாடல் இப்போது அமெரிக்காவின் முதல் பெண்மணி! வெல்கம் மிசஸ் ட்ரம்ப்! #flotus

melania%203_18289.jpg

திபராக இருப்பவரின் மனைவியை அமெரிக்காவின் முதல் பெண்மணி என்று அழைப்பது அமெரிக்கர்களின் மரபு. அதன்படி இதுவரை 'அமெரிக்காவின் முதல் பெண்மணி' என்ற கௌரவத்தில் இருந்த மிச்சல் ஒபாமாவின் ஸ்தானம், இனி புதிய அதிபரான டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப்க்கு !

அமெரிக்காவின் புதிய முதல் பெண்மணியான மெலானியா, ஒரு  மாடல். அதனாலோ என்னவோ அவர் மீது விமர்சனங்கள் எழுவது தொடர்கதை. 

மெலானியா தன் 16 வயதில் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல ஏற்ற இறக்கங்கள் கொண்டதாக அமைந்தது அந்தப் பயணம். தடாலென பிரெஞ்ச் இதழில் நிர்வாண போஸ் கொடுத்து, தனது மார்கெட்டை பிடித்துக்கொண்டார். பொதுவாக ஒருமுறை நிர்வாண போஸ் கொடுத்துவிட்டால், 'ஆபாச நட்சத்திரம்' என்ற முத்திரை குத்தப்படும். ஆனால் மெலானியாவுக்கு அப்படி நடக்கவில்லை. அவர் மாடல் அழகியாகவே வலம்வந்தார். 

1998ல் அமெரிக்காவில் நடந்த ஒரு பார்ட்டியில், டிரம்பின் அறிமுகம் கிடைத்தது மெலானியாவுக்கு. விரைவில் அவரின் காதலியானார். இனி அவர் நிவாரண போஸ் கொடுக்கமாட்டார் என மாடல் உலகம் நினைத்துக்கொண்டு இருந்தபோது, பிரிட்டிஷ் இதழின் அட்டைப் படத்துக்கு நிர்வாண போஸ் கொடுத்தார் மெலானியா. 

melania_18178.jpg
'உங்களது பாய்ஃப்ரெண்ட் ஜனாதிபதியானால், உங்களது ரோல் என்னவாக இருக்கும்?' என்ற கேள்வியை மெலானியாவிடம்,  1999ல் ஒரு பிரபல பத்திரிகை கேட்டபோது அவரின் பதில்...
“அமெரிக்காவின் முன்னாள் 'முதல் பெண்மணி'களான ஜாக்கி கென்னடி, பெட்டி ஃபோர்டு போல, அந்த அந்தஸ்தின் பாரம்பர்யங்களைப் பின்பற்றுவேன்!” 

டிரம்பின் மூன்றாவது மனைவியாக பிரமாண்டாக திருமணம் செய்துகொண்ட மெலனியா, 2006ல் ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயானார்.  டிரம்ப் குறித்த மோசமான பாலியல் சர்ச்சை கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாகவே பதிலளிப்பார் மெலானியா. 

''என் கணவருக்கு நான் பலமுறை அறிவுரை வழங்கியிருக்கிறேன். அவரின் பக்கம் இருப்பதால், அவர் சொல்வது அனைத்துக்கும் நான் சரி என்று சொல்லுவதில்லை. எனக்கு சரி என்று தோணுவதை மட்டுமே செய்வேன். காரணம், நான் எப்போதும் நானாகவே இருக்கிறேன். ஓர் உறவில் சுயத்தை இழக்காமல் இருப்பதுதான் முக்கியம் என நம்புகிறேன்" என்பார் மெலானியா.

தேர்தல் பிரச்சார நேரத்தில் ட்ரம்புக்கு மெலானியா தயாரித்த உரையில், மிச்சல் ஒபாமா பேசிய உரையின் வசனங்கள் இருக்க, 'மிச்சல் ஒபாமாவின் வசனங்களை காப்பி அடித்துவிட்டார் மெலானியா' என சமூக வலைதளங்களில் பெரிய விமர்சனங்களுக்கு ஆளானார். 

melania%204_18501.jpg

அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியாவுக்கு பூர்விகம் அமெரிக்கா கிடையாது. ஸ்லோவேனியன் நாட்டைச் சேர்ந்தவர்.  அமெரிக்காவுக்கு டூரிஸ்ட் விசாவில் வந்து, பின்னர் அமெரிக்காவில் புரோஃபஷனல் மாடலாக வலம் வந்தவர், இனி அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்துடன் வலம் வருவார்.

முன்னர் அமெரிக்காவின் முதல் பெண்மணிகளாக இருந்த பார்பரா புஷ், கல்வித் துறையில் ஆர்வம் காட்டினார் . ஹிலாரி கிளின்டன் சுகாதார அமைப்பை சீர்திருத்துவதில் கவனம் செலுத்தினார். மிச்சேல் ஒபாமா, வளரும் குழந்தைகளின் உடல் பருமன் தவிர்ப்பது, பெண்நல மேம்பாடு போன்ற செயல்களில் ஆர்வம் காட்டினார்.  இவர்களைப்போல் மெலானியா எதில் ஆர்வம் காட்டப் போகிறார் என்று உலகம் ஆர்வமாகக் காத்திருக்கிறது. 

அதற்கு முன், 'நிர்வாண போஸ் கொடுப்பவர் மற்றும் மிச்சல் ஒபாமாவின் உரையைத் திருடியவர்’ என, மெலானியாவின் மேல் இருக்கும் இரண்டு பெரிய விமர்சனங்களை அவர் தாண்டவேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. அடுத்ததாக, முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை எவ்வாறு அவர் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நீள்கிறது..!

vkatan

  • கருத்துக்கள உறவுகள்

அம்மண அம்மணி
முதல் பெண்மணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

அம்மண அம்மணி
முதல் பெண்மணி

கிளின்டன் குடும்பத்தின் வழிகாட்டலின் பின் அம்மண அம்மணி  46வது அல்லது 47வது சனாதிபதியாகவும் வர பெரிய வாய்ப்புகள் உண்டு.

Cw6IbpAUsAIDZsp.jpg

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

15056488_1487046531311753_43578485157334

World Science Day for Peace and Development
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கிளின்டன் குடும்பத்தின் வழிகாட்டலின் பின் அம்மண அம்மணி  46வது அல்லது 47வது சனாதிபதியாகவும் வர பெரிய வாய்ப்புகள் உண்டு.

Cw6IbpAUsAIDZsp.jpg

 அமெரிக்க ஜனாதிபதியாவதென்றால் அமெரிக்காவில் பிறந்திருக்க வேண்டும். முயற்சி இருந்தால் செனற் அல்லது காங்கிரஸ் சபைக்குள் வரலாம்.

  • தொடங்கியவர்

டொனல்ட் ட்ரம்ப் டீட்டோட்லராம்!

அமெரிக்க தேர்தல் முடிவுகளை தவிடு,பொடியாக்கி உலகம் முழுவதையும் தன்னை உற்றுப்பார்க்க வைத்துள்ளார் அதிபராக பதவியேற்க உள்ள டொனல்ட் ட்ராம்ப்.  இந்நிலையில் அவரைப்பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி, அமெரிக்காவின் ரிச்சஸ்ட் அதிபர் என்ற பெயரை டொனால்ட் ட்ரம்ப் பெற்றுள்ளார். பல்வேறு வியாபாரங்களை செய்து வரும் ட்ரம்பின் மொத்த சொத்து மதிப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாம்.

trumpwillwin-notext_21403.jpg


குறிப்பாக ட்ரம்ப்பிற்கு புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்த கெட்டப் பழக்கங்களும் கிடையாதாம். அவரது சகோதரர் மதுவுக்கு அடிமையாகி இறந்ததால் ட்ரம்ப் அதன் பக்கமே செல்வதில்லையாம். இதனால் ட்ரம்ப் அமெரிக்காவின் ஆரோக்கியமான அதிபர் என்றும் பெருமிதம் கொள்கின்றனர் ட்ரம்ப்பிஸ்ட்டுகள்.

vikatan

  • தொடங்கியவர்
மோசமாக உடையணிந்த தீபிகா படுகோன்
 

இங்­கி­லாந்தை சேர்ந்த டெய்லி மெயில் நாளிதழ் எம்.­டி.வி விருது விழாவில் கலந்து கொண்ட தீபிகா படு­கோ­னேவை மோச­மாக உடை அணிந்த பிர­பலம் என தெரி­வித்­துள்­ளது.

 

பொலிவூட் நடிகை தீபிகா படு­கோனே நடித்­துள்ள ஹொலிவூட் படம் வரும் ஜன­வரி மாதம் 20 ஆம் திகதி வெளி­யா­க­வுள்­ள­து. 

 

20558Depika.jpg

 

 

இந்­நி­லையில் நெதர்­லாந்திலிருக்கும் ரோட்­டர்டாம் நகரில் நடந்த எம்­.டி.வி ஐரோப்­பிய இசை விரு­துகள் நிகழ்ச்­சியில் தீபிகா கலந்து கொண்டார்.

 

பச்சை நிற ஸ்கேர்ட் மற்றும் கறுப்பு நிறத்தில் டிசைனர் பிராலெட் அணிந்­தி­ருந்தார்.

 

மோனிஷா ஜெய்சிங் என்பவர் வடிவமைத்த கொஸ்டியூம் அணிந்து வந்தார் தீபிகா. அரைகுறையாக உருவாக்கப்பட்டிருந்த அந்த ஆடையில் அவர் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.

 

அதேசமயம் இந்த உடைக்காக மோசமான கொஸ்டியூம் அணிந்துவந்த நடிகை பட்டியலில் அவருக்கு இடம் தரப்பட்டது.

 

தீபி­காவை அவ­ரது உடைக்­காக டெய்லி மெயில் விமர்­சித்­துள்­ள­தற்கு இந்­திய ரசி­கர்கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர். டெய்லி மெயிலுக்கு பதிலடி கொடுப்பது போன்று தீபிகாவின் உடையை பாராட்டி வருகிறார்கள்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
‘எனது கலை மூலம் செய்து காட்டுவேன்’
 
 

article_1478750843-hhkhjkhul.jpgஒரு சமயம் கொழும்பில் உலகப் பிரசித்தி பெற்ற மாய வித்தைக்காரர் பல்லாயிரம் ரசிகர்கள் மத்தியில் பலவித மாயாஜால வித்தைகளைக் காண்பித்தார். 

தன்னைக் கட்டிவைத்து அடைத்து மூடச்செய்தார். பின்னர் அவரது உதவியாளர் அவரை அழைக்க, அவரோ கூட்டத்திலிருந்த ரசிகர் மத்தியிலிருந்து எழுந்து மேடையில் ஏறினார். கூட்டத்தினர் வியப்புடன் கரகோசம் செய்தனர்.

தனது வித்தைகளை முடித்த பின்னர் மக்களிடம் இவ்வாறு சொன்னார். “இது ஒரு கலை; இப்போது பல சாமியார்கள் மக்களை ஏமாற்றுவதற்கு எதை எதையோ செய்கின்றார்கள். நான் சாமியார் அல்ல! ஆனால், இந்தச் சாமியார்கள் செய்யும் அனைத்து மோசடிகளையும் நான் அறிவேன். அவர்கள் செய்தவைகளை எனது கலை மூலம் செய்து காட்டுவேன்” என்றார்.  

இனியாவது அல்ல; எப்போதுமே தங்கள் போக்கை மக்கள் மாற்றவே மாட்டார்கள்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒரே விமானத்தில் மூன்று கால்பந்து வீரர்கள் - முடிவுக்கு வருகிறதா 100 ஆண்டு பகை?

கால்பந்து

உலகுக்கு அந்த இரு நாடுகளும் கால்பந்து வீரர்களை உற்பத்தி செய்து தருகின்றன, அவை பக்கத்து பக்கத்து நாடுகளும் கூட. பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் கால்பந்துதான் வாழ்க்கை. கால்பந்து உலகுக்கு இரு ஜாம்பவான்கள். ஒருவர் பீலே இன்னொருவர் மரடோனா. களத்தில் எப்படி இரு அணி வீரர்களும் மோதிக் கொள்கிறார்களோ அது போலவே இரு ஜாம்பவான்களும் வார்த்தைகளால் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். ஒருவர் நெய்மர்தான் சிறந்தவர் என்றால் இன்னொருவர் மெஸ்சிதான் சூப்பர் என்பார். களத்திலும் இரு அணிகளும் மோதினால் அனல் பறக்கும். இரு அணிகளும் 114 முறை மோதியுள்ளன. பிரேசில் 39 முறையும் அர்ஜென்டினா 37 முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. கால்பந்து உலகில் கிட்டத்தட்ட 100 ஆண்டு கால பகை இது.

சமீப காலமாக இந்த பகையுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அதற்கு கிளப் கால்பந்தும் ஒரு காரணம் எனக் கூறலாம்.  அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி,  பிரேசில் கேப்டன் நெய்மர் ஆகிய இருவருமே லாலீகா சாம்பியன் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருபவர்கள்.

அர்ஜென்டினா அணியின் பின்கள வீரர் ஜேவியர் மச்சரானாவும் பார்சிலோனா அணிக்காகத்தான் விளையாடுகிறார். இந்த நிலையில் பிரேசிலின் பெலோ ஹரிசான்டே நகரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில்,  பிரேசிலும் அர்ஜென்டினாவும் இன்று மோத உள்ளன. தென்அமெரிக்காவின் 'சூப்பர் கிளாசிகோ' மோதல் என்று இதனைச் சொல்வார்கள். 

இதில் கலந்துகொள்வதற்காக நெய்மர் தனக்கு சொந்தமான விமானத்தில் பார்சிலோனாவில் இருந்து பிரேசில் புறப்பட்டார். மெஸ்சியும் ஜேவியர் மச்சரானோவும் கூட அதேப் போட்டிக்கு அதே நகருக்குத்தான் வர வேண்டும் என்பது நெய்மருக்குத் தெரியும் என்பதால், தனது விமானத்திலேயே அவர்கள் இருவரையும் வந்து விடுமாறு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து மூன்று பேரும் ஒரே விமானத்தில் பெலோ ஹரிசான்டே நகருக்கு சென்றடைந்தனர். விமானத்தில் மூன்று வீரர்கள் பைலட்டுகளுடன் இருப்பது போன்ற இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

vikatan

  • தொடங்கியவர்

டொனால்டு டிரம்ப்பை அடித்து உதைக்கும் WWE வீரர்! (வீடியோ)

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள  ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை பிரபல WWE வீரர் அடித்து உதைக்கும்  வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

டொனால்டு டிரம்ப்பின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வரும் நிலையில், கடந்த 2007ம் ஆண்டு பிரபல WWE வீரர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினே டிரம்ப்பை அடித்து உதைக்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகியுள்ளது. அதில், 2007ம் ஆண்டு WWE Wrestlemania போட்டியில் டிரம்ப் ஆதரவு பெற்ற வீரர், WWE உரிமையாளர் வின்ஸ் மக்மஹோன் ஆதரவு பெற்ற வீரரை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். இருவருக்கும் இடையேயான போட்டிக்கு பிரபல WWE வீரர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் நடுவராக இருந்தார்.

 

 

 

 

டிரம்ப் ஆதரவாளர் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து சவாலில் தோல்வியடைந்த WWE உரிமையாளர் வின்ஸ் மக்மஹோனுக்கு மொட்டையடிக்க டிரம்ப் மேடையில் நின்றுக் கொண்டிருந்தார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஸ்டோன் கோல்ட், 80,000 பேர் டிரம்பிற்கு ஸ்டன்னர் போடுகிறார். இதில் நிலைகுலைந்த டிரம்ப் மேடையில் விழுந்து கிடக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

vikatan

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: நவம்பர் 11
 
 

yasserarafat.jpg1918: முதலாம் உலக யுத்தத்தின்போது பிரான்ஸின் கொம்பெய்ன் நகருக்கு வெளியே ரயில்வே வாகனமொன்றில் வைத்து ஜேர்மனிக்கும் நேசநாடுகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 11 ஆம் மாதம் 11 ஆம் திகதி 11 மணிக்கு மேற்படி யுத்தம் முடிவுற்றது.

1918: ஆஸ்திரியாவின் மன்னர் முதலாம் சார்ள்ஸ் தனது அதிகாரங்களைத் துறந்தார்.

1940: இரண்டாம் உலக யுத்தத்தன்போது பிரித்தானிய கடற்படை, வரலாற்றில் முதல் தடவையாக விமானத் தாங்கி கப்பல் மூலம் இத்தாலிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது.

1965: ரொடீஸியாவில் (தற்போதைய ஸிம்பாப்வே) வெள்ளை சிறுபான்மையின அரசு ஒரு தலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1975: அங்கோலா சுதந்திரம் பெற்றது.

1981: அன்டிகுவா- பார்புடா ஐ.நாவில் இணைந்தன.

2000: ஆஸ்திரியாவில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் பனிச்சறுக்காளர்கள் 155 பேர் பலியாகினர்.

2004: பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத் காலமானார்.

2008: ஆர்.எம்.எஸ். குயின் எலிஸபெத் கப்பல் தனது கடைசி பயணத்தை துபாய் நகரை நோக்கி ஆரம்பித்தது.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தாயின் சிகிச்சைக்காக தன்னையே விற்கத் துணிந்த பெண்!

china%20Mam_13458.jpg

த்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய், நோயால் கண்முன்னே அவதிப்படுவதைக் கண்டால் யாருக்குத்தான் கண்ணீர் வராது? எப்படியாவது தாயைக் காப்பாற்றிவிட வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்போம். அதுபோலதான் சீனாவைச் சேர்ந்த ஓர் இளம்பெண், புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் தன் தாயைக் காப்பாற்ற, தான் எடுத்த வியக்கவைக்கும் முடிவால், சீன மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறார்.

அப்படி என்ன செய்தார் தெரியுமா?!

தெற்கு சீனாவின் கவாங்ழு நகரைச் சேர்ந்தவர், 19 வயது காவோ மேங்வான் (Cao Mengyuan).  சாதாரண விவசாயக் குடும்பத்துப் பெண். விவசாய வேலைசெய்து அவரையும், அவரின் நான்கு சகோதர, சகோதரிகளையும் காப்பாற்றி வந்தார் காவோவின் தாய். 45 வயதான அவர் சருமப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக படுத்தப் படுக்கையாகிவிட்டார். இவருக்கு சிகிச்சை செய்துவரும் மருத்துவர்கள், 'உங்கள் அம்மாவைக் காப்பாற்றவேண்டும் என்றால் சுமார் 30 லட்சத்துக்கு மேல் செலவாகும்' என்று சொல்லிவிட்டனர் காவோவின் குடும்பத்தினரிடம்.

அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு போவது, யாரிடம் கேட்பது என்று குடும்பமே சோகத்தில் அழ்ந்திருக்க, ஐந்து பிள்ளைகளில் மூத்தவளான காவோ, தாயைக் காப்பாற்றும் பொறுப்பை தான் எற்றுக்கொள்வதாகக் கூறினார். என்றாலும், அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன வழி என்று தெரியாத நிலையில், தன்னைத் தானே ஆன்லைனில் விற்க முடிவெடுத்துள்ளார்.

சீனா சோஷியல் மீடியாக்களில், 'என் தாயின் சிகிச்சைக்காக ரூபாய் 30 லட்சம் அவசரமாகத் தேவைப்படுகிறது. அந்தத் தொகைக்கு மேல் தந்து உதவுபவர்களுக்கு நான் வாழ்நாள் முழுக்க அடிமையாகி சொன்னபடி நடந்துகொள்ளத் தயார்' என்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

காவோவின் இந்த தியாகம் வைரலாகப் பரவி அனுதாப அலையை ஏற்படுத்த, இதைக் கேள்விப்பட்ட ஒருவர், இப்போது காவோவுக்கு உதவ முன்வந்துள்ளார்.

அம்மாவுக்காக!.....

vikatan

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.