Jump to content

வஞ்சரம் மீன் பொரியல் - சன்டே ஸ்பெஷல்!


Recommended Posts

வஞ்சரம் மீன் பொரியல் - சன்டே ஸ்பெஷல்!
 
விடுமுறை நாட்களில் தான் மீனை சமைத்து சாப்பிட முடியும். சிலருக்கு மீனை பொரியல் செய்து சாப்பிடத் தான் பிடிக்கும்.
Vanjaram Fish Fry
அப்படி மீன் பொரியல் பிடிக்குமானால், வஞ்சர மீன் வாங்கி அதனை பொரியல் செய்து சாப்பிடுங்கள். இங்கு வஞ்சரம் மீன் பொரியல் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
 தேவையான பொருட்கள்:
 
வஞ்சரம் மீன் - 6-8 துண்டுகள்
 
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
 
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
 
சோள மாவு - 1 டீஸ்பூன்
 
உப்பு - தேவையான அளவு
 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு பௌலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், எலுமிச்சை சாறு, சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
 
பின்பு அதில் மீன் துண்டுகளை சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
 
பிறகு ஒரு சட்டியை  அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மீன் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதேப்போல் மீதமுள்ள மீன் துண்டுகளையும் போட்டு பொரித்து எடுத்தால், வஞ்சரம் மீன் பொரியல் ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/vanjaram-fish-fry-009664.html
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் முடியாது இண்டைக்கு கோழிதான் ...! 

பொரியல் மூண்டு துண்டுதான் கிடக்கு... மிச்சம்...!!  :)

Link to comment
Share on other sites

 

பொரியல் மூண்டு துண்டுதான் கிடக்கு... மிச்சம்...!!  :)

படத்தை போடும்போதே நினைத்தேன் நீங்கள் இந்த கேள்வியோடு வருவீர்கள் என்று:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்..சா மீன்பொரியலை பாக்க ஒரு போத்தில் கள்ளடிச்சால் எப்பிடியிருக்குமெண்டு நினைக்கிறன்..:grin:

Link to comment
Share on other sites

அதெல்லாம் முடியாது இண்டைக்கு கோழிதான் ...! 

பொரியல் மூண்டு துண்டுதான் கிடக்கு... மிச்சம்...!!  :)

மிச்சத் துண்டுகள் பொரிக்கும்போது சப்பிடாச்சு tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.