Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிசில் குண்டு வெடிப்பு: 129 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Paris attacker slipped into Europe with refugees

அகதிகளோடு அகதியாக, சிரியாவில் இருந்து கிரீஸ் வழியாக பாரீஸ் வந்த தீவிரவாதி.

பாரீஸ்: பாரீஸ் நகரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் சிரியாவில் இருந்து அகதியாக கிரீஸ் வழியாக ஐரோப்பா வந்துள்ளார். 
பாரீஸ் நகரின் 6 இடங்களில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடந்த படாகிளான் தியேட்டர் அருகே கிடந்த தீவிரவாதியின் உடலுக்கு அருகில் சிரியா பாஸ்போர்ட் இருந்தது. 
இந்நிலையில் அந்த நபரை அடையாளம் காணுமாறு பிரான்ஸ் அதிகாரிகள் கிரீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். தீவிரவாதி சிரியாவில் இருந்து அகதியாக கிரீஸில் உள்ள லெரோஸ் தீவுக்கு கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி வந்தது தெரிய வந்துள்ளது. 
அவர் அகதிகளோடு அகதியாக கிரீஸ் வந்து அங்கிருந்து பாரீஸுக்கு வந்துள்ளார். அவருடன் எத்தனை தீவிரவாதிகள் அகதிகள் என்ற பெயரில் கிரீஸ் வந்தனர் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. 
மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்திய 2 கார்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தவிர தாக்குதல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • Replies 61
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை பல  லட்சம் சிரிய  அகதிகள் பல்கான் வழியாக ஐரோப்பாவிற்குள் வந்துள்ளனர். இவர்களுடன் தீவிரவாதிகளும் வந்திருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது

  • தொடங்கியவர்
பாரீஸ் தியேட்டரில் தாக்குதல் நடத்திய உமர் இஸ்மாயில் முஸ்தபா யார்?
 
பாரீஸ்: பாரீஸில் உள்ள படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய உமர் இஸ்மாயில் முஸ்தபாவை சிறு சிறு குற்றங்கள் செய்தவராகத் தான் போலீசாருக்கு தெரிந்துள்ளது. பாரீஸ் நகரில் 6 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகியுள்ளனர், 352 பேர் காயம் அடைந்துள்ளனர். படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய தீவரிவாதிகளில் ஒருவர் பாரீஸை சேர்ந்த உமர் இஸ்மாயில் முஸ்தபா என்பது தெரிய வந்துள்ளது.
 
  சம்பவ இடத்தில் கிடந்த விரலை வைத்து போலீசார் உமரை அடையாளம் கண்டுள்ளனர். அவர் பாரீஸின் புறநகர் பகுதியான கோர்கோரன்னஸில் 1985ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவர் 2004ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை சிறு சிறு குற்றங்களுக்காக சிக்கியுள்ளார். ஆனால் சிறை தண்டனை விதிக்கப்படவில்லை.
 
உமர் கடந்த ஆண்டு சிரியாவுக்கு சென்று வந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உமரை அடையாளம் கண்டதும் போலீசார் அவரின் தந்தை மற்றும் அண்ணனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அவர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தினர். பாரீஸ் தாக்குதல்களில் உமருக்கு தொடர்பிருந்தது தெரிய வந்ததும் அவரின் சகோதரர் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
 
உமரின் சகோதரர் கூறுகையில் உமர் சிறு சிறு குற்றங்கள் செய்து வந்தது எனக்கு தெரியும். ஆனால் அவர் இப்படி ஒரு தாக்குதலை நடத்துவார் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் பல ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இல்லை. என் தாய்க்கு போன் செய்தேன். அவருக்கும் உமரின் நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியவில்லை என்றார். உமர் பாரீஸின் தென்மேற்கில் உள்ள லூஸ் பகுதியில் இருக்கும் மசூதிக்கு தினமும் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/omar-ismail-mostefai-petty-criminal-cold-blooded-terrorist-239881.html
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Französischer Kampfjet (Archivbild): Angriff auf Rakka

பாரிசில் தாக்குதல் நடந்து இரு நாட்களுக்கு பின் சிரியாவில் தர்மயுத்தம் நடத்த போர் விமானங்கள் புறப்பட்டு விட்டனவாம்

  • தொடங்கியவர்

பாரிஸ் தாக்குதல்கள்: புதிய வகையிலான பயங்கரவாதம்?

16 நவம்பர் 2015
Bookmark and Share
 

 

பாரிஸ் தாக்குதல்கள்: புதிய வகையிலான பயங்கரவாதம்? தமிழில் குளோபல் தமிழ்செய்திகள்:-



பாரிசில் இடம்பெற்றுள்ள தொடர்ச்சியான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிபிரயோகங்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளும் பிரான்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

எட்டு தற்கொலைகுண்டுதாரிகளுடன் சேர்த்து 135ற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள நிலையில், 2004 இல் ஸ்பெயினில் புகையிரதத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற மிகமோசமான பயங்கரவாத தாக்குதலாக இது காணப்படுகின்றது.


இவ்வாறான பேரழிவுகளை உண்டாக்ககூடிய தாக்குதல்களை கட்டுப்படுத்த கூடிய வல்லமை மேற்குலகின் பாதுகாப்பு படையினருக்கு உள்ளதா என்ற கேள்வியும் பாரிஸ் தாக்குதலிற்கு பின்னர் எழுந்துள்ளது.


பிரான்ஸ் ஜனாதிபதி  ஐஎஸ் அமைப்பு மேற்கொண்ட யுத்தம் என இந்த தாக்குதலை வர்ணித்துள்ளார்.


 பாரிசில் இந்த தாக்குதல் ஏன் இடம்பெற்றது?

ஜனவரி மாதத்தில் சார்லிஹெப்டோவின், பெண்பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பேரங்காடி  ஆகியவற்றின் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் பாரிஸ் உயர்ந்தபட்ச உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது, இந்த தாக்குதல்களுடன் தொடர்பு பட்டிருந்த அமெடி கௌலிபலி ஐஎஸ் அமைப்பின் உத்தரவின் பேரிலேயே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


கடந்த பல வருடங்களாக பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள வீடமைப்பு திட்டங்களும், ஏனைய நகரங்களும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளை நிலங்களாக காணப்பட்டன, பெருமளவு வேலை வாய்ப்பின்மையும்,புறக்கணிப்பும் காணப்படும் பகுதிகளை சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட இளவயது இஸ்லாமியர்களிற்கு ஜிகாத் ஓரு கவர்ச்சிகரமான விடயமாக காணப்பட்டது.


சிரியாவிலும், ஈராக்கிலும் போராடுவதற்காக 500ற்கும் மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் பிரான்சிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், இது ஏனைய மேற்குலகநாடுகளை விட அதிகமான எண்ணிக்கையாகும்.


ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளில் இணைந்துள்ள பிரான்ஸ் விமானங்கள் பல வெற்றிகரமான தாக்குதல்களை ஈராக்கிலும் சிரியாவிலும் மேற்கொண்டுள்ளது.

வெள்ளிகிழமை இலக்குவைக்கப்பட்ட பகுதிகள் எதனை உணர்த்துகின்றன அவை கடுமையான பாதுகாப்பில்லாத, பொதுமக்கள் அதிகமாக காணப்படும் பகுதிகள்,- நோக்கம், எவ்வளவு பொதுமக்களை கொலைசெய்ய முடியுமோ அவ்வளவு பேரைகொல்வது.


ஜேர்மனிக்கும்-பிரான்சிற்கும் இடையில் உதைபந்தாட்டப் போட்டி நடந்துகொண்டிருந்த மைதானம் நிச்சயமாக  வாய்ப்புகள் அதிகம் கூடிய  ஓரு இலக்கு-


எனினும் அருகில் உள்ள உணவகத்தில் மூன்று தற்கொலை குண்டுதாரிகள் தங்களை வெடிக்கவைத்ததே  வழமைக்கு மாறான விடயமாக காணப்படுகின்றது,பிரான்ஸ் இவ்வாறன தொடர்குண்டு வெடிப்புகளை முன்னர் சந்தித்ததில்லை.


இதன்பின்னர் பட்டகிளான் இசையரங்கில் இடம்பெற்ற தாக்குதல்- மீண்டும் தற்கொலை குண்டுதாரிகளால மேற்கொள்ளப்பட்டது, கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பிரான்சின் இளம்வயதினரை இலக்குவைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இசைநிகழ்வொன்றின் போது இடம்பெற்ற இந்த தாக்குதலில் 80 ற்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.


பிரான்சின் சில விமர்சகர்கள் 2002 இல் மொஸ்கோவில் இடம்பெற்ற பணயக்iதிகள் சம்பவத்தை இதனுடன் ஓப்பிட்டுள்ளனர், மொஸ்கோவில் செச்னிய தீவிரவாதிகள் அந்த அரங்கில் இருந்தவர்களை பணயக்கைதிகளாக பிடித்தனர்,இந்த தாக்குதல் மற்றும் ரஸ்ய படையினரின் மீட்பு நடவடிக்கை காரணமாக 140ற்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.


வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் சுற்றுலாப்பயணிகள் காணப்படும் இடங்களில் இடம்பெறவில்லை மாறாக பாரிசின் தொழிலாளர் வர்க்கத்தினர் அதிகமாக உள்ள பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என பிரான்சின் பத்திரிகையாளர் ஓருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறிப்பிட்ட தாக்குதலிற்கு பொறுப்பேற்று விடுத்துள்ள அறிக்கையில் ஐஎஸ் வக்கிரம் மற்றும் தீமையின் தலைநகரம் என பாரிசை வர்ணித்துள்ளது. இசைநிகழ்விற்கு செல்பவர்களை புறச்சமயத்தவர்கள் என அது தெரிவித்துள்ளது.


இந்த இலக்குகள் தெரிவுசெய்யப்பட்ட விதத்தை நோக்கும்போது கலாச்சாரம் என்ற விடயம் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது தெளிவாகின்றதுஎன்கிறார்,பாதுகாப்பு கொள்கை தொடர்பிலான நிபுணர் சசாங்ஜோசி அவர்கள் வேண்டுமென்றே மக்கள்  கேளிக்கைகளில் ஈடுபடும் பகுதிகளை தெரிவு செய்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

 
ஏனயை முக்கியநகரங்களில் இடம்பெற்ற தாக்குதல் போன்றதா இது?
 
இந்த தாக்குதலை 2008 நவம்பரில்  இடம்பெற்ற மும்பாய் தாக்குதலுடனேயே ஓப்பிடமுடியும் என்பது அவரின்  கருத்து,பாக்கிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர், மும்பாய் வீதிகளில் பாரிய அச்சத்தையும் அழிவையும் அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
 
ஐரோப்பாவை பொரறுத்தவரை இந்த தாக்குதல் 2004 இன் மட்ரிட் புகையிரத குண்டுவெடிப்பு மற்றும் 2005 லண்டன் தாக்குதல்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
 
ஐரோப்பாவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் யூதர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர், ஜிகாத்தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் பலவற்றிற்கு அராபியர்கள் குறித்த இஸ்ரேலின் பகைமை உணர்வே காரணமாக தெரிவிக்கப்பட்டது.
 
எனினும் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் இலக்கை தெரிவுசெய்யும்போது தீவிரவாதிகளிடம் முன்னுரிமைக்குரிய தனியொரு இலக்கோ அல்லது தலைமைப்பீடமோ இல்லை என்பதை புலப்படுத்தியுள்ளது என்கிறார் ஜோசி.
 
ஐஎஸ் அமைப்பு தன்னால் எந்தநேரத்திலும், எங்கும்,தாக்குதலை மேற்கொள்ளகூடிய வல்லமையுள்ளதையும் எங்களால் அதனை தடுக்க முடியாது என்பதையும் காண்பிக்க முயல்கின்றது என்கிறார் பெல்ஜியத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர்,
இந்த தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்ட, நீண்ட காலம் பயிற்சியெடுக்கப்பட்ட ஓன்று என்பது அவரது கருத்து,
 
எனினும் பாரிஸ் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் மத்தியகிழக்கில் பல களங்களை கண்டவர்களாகவோ அல்லது ஆயுதநிபுணர்களாகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை என்கிறார் ஜோசி.
 
பிரான்சின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவீனமானவையா?
 
இல்லை என்கின்றனர் ஜோசியும், பெல்ஜியம் நிபுணரும்,
உங்களால் இலகுவாக இலக்குவைக்கப்படக்கூடிய அனைத்து பகுதிகளையும் பாதுகாக்க முடியாது,என்கிறார் ஜோசி, பிரான்ஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது அதனால் இந்த தாக்குதலை தடுத்திருக்க முடியுமா  என தற்போது கூற முடியாது சிறிதுநாட்கள் பிடிக்கும் என்கிறார் பெல்ஜியம் நிபுணர்,
 
ஐஎஸ் அமைப்பு தாக்குதல்களை பிரான்சிற்கு வெளியே ஓருங்கிணைத்ததா அல்லது பிரான்சிற்குள் உள்ள ஐஎஸ் அமைப்பினால் கவரப்பட்ட இஸ்லாமியர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டனரா என்பது முக்கியமான கேள்வியாக காணப்படுகின்றது,
 
பாரிஸ் தாக்குதல் ஈராக் மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியே என உ.பி. அமைச்சர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் பாரிஸ் தாக்குதல் பற்றி கூறுகையில், தீவிரவாத தாக்குதல்கள் எங்கு நடந்தாலும் வன்மையாக கண்டிக்கத்தக்கதுதான்.

ஆனால் இத்தகைய தீவிரவாத தாக்குதல்களுக்கான அடிப்படை காரணம் என்ன என்பதையும் நாம் உணர வேண்டும்.

அமெரிக்காவும் அதன் மேற்குலக நட்பு நாடுகளும் சிரியா, லிபியா, ஈராக், ஆப்கானில் தங்களது சுயநலத்துக்காக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன.

அந்நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டன.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றனர்.

எனவே, சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பதிலடி தான் இந்த பாரிஸ் தாக்குதலை என பேசியுள்ளார்.

தற்போது இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

  • தொடங்கியவர்
பாரீஸில் தாக்குதல் நடத்திய மேலும் 2 தீவிரவாதிகளின் அடையாளம் கண்டுபிடிப்பு
 
பாரீஸ்: பாரீஸில் தாக்குதல் நடத்திய மேலும் 2 தற்கொலைப்படை தீவிரவாதிகளின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அதில் ஒருவருக்கு ஏற்கனவே தீவிரவாத வழக்கில் தொடர்புள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர். அதில் படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி பாரீஸை சேர்ந்த உமர் இஸ்மாயில் முஸ்தபா என்பது தெரிய வந்தது.
 
இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்திய மேலும் 2 தீவிரவாதிகளின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் சிரியாவைச் சேர்ந்த அகமது அல் முகமது மற்றொருவர் பாரீஸை சேர்ந்த சாமி அமீமோர். படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய அமீமோர் 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பாரீஸின் புறநகர் பகுதியான டிரான்சியில் பிறந்தவர்.
 
அவருக்கு ஏற்கனவே தீவிரவாத வழக்கில் தொடர்பு இருந்துள்ளது. அவரது குடும்பத்தார் 3 பேரை போலீசார் இன்று தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அகமது அல் முகமது உடலின் அருகே சிரியா பாஸ்போர்ட் கிடந்தது. விசாரணையில் முகமது சிரியாவில் இருந்து அகதிகளோடு அகதியாக கடந்த அக்டோபர் மாதம் கிரீஸ் வந்தது தெரிய வந்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/2-more-paris-attackers-identified-say-french-prosecutors-239952.html
On 11/15/2015, 10:40:29, Nathamuni said:

புதிதாக எதுவும் இல்லை.

இது ஜெருசலதினை முஸ்லிம்கள் கையில் இருந்து மீட்க, கிறிஸ்தவர்கள் அன்று பல நூறாண்டுகளாக நடாத்திய சிலுவை யுத்தத்தின் தொடர்ச்சி தான்.

சரியாக ஆய்வு செய்தால், இது மதச் சண்டையே தான். நீள்கிறது, இன்னும்....

இது இலகுவில் முடியாது.

12 hours ago, குமாரசாமி said:

Französischer Kampfjet (Archivbild): Angriff auf Rakka

பாரிசில் தாக்குதல் நடந்து இரு நாட்களுக்கு பின் சிரியாவில் தர்மயுத்தம் நடத்த போர் விமானங்கள் புறப்பட்டு விட்டனவாம்

எல்லாம் சரிதான் சும்மா பதில் தாக்குதல் எண்டு சொல்லலாம் தானே எதுக்கு தர்மயுத்தம் என்றொரு அடைமொழி?

எங்குமே தர்மம் இல்லை, வெறும் யுத்தம்தான் மிச்சம்.

  • தொடங்கியவர்

பாரிஸ் தாக்குதல்:முக்கிய சூத்திரதாரி அடையாளம்?

 

 

தீவிர தேடுதல் நடவடிக்கையில் பெல்ஜியம் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
AP தீவிர தேடுதல் நடவடிக்கையில் பெல்ஜியம் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

பாரிஸ் தாக்குதல் விசாரணைகள், மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டு பிரஜை ஒருவரை மையப்படுத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

பாரிஸ் தாக்குதல்கள் தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகள், மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டு பிரஜை ஒருவரை மையப்படுத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

 

அப்தல்ஹமீத் அபாவுத் எனும் 27 வயதான இந்த நபர், பிரசல்ஸ் நகரில் இரண்டு தாக்குதாளிகள் தங்கியிருந்த அதே பகுதியில் தங்கியிருந்தார் எனவும் கூறப்படுகிறது.

சந்தேகத்துகுரிய இந்த நபர் தற்போது சிரியாவில் ஐ எஸ் அமைப்பில் உள்ளார் என பாதுகாப்பு அதிகாரிகள் நம்புகிறார்கள்.

இதனிடையே மேலும் இரண்டு தாக்குதலாளிகளை பிரெஞ்ச் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

பேட்டக்லா(ன்) இசை அரங்கில் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகளில் சமி அமிமூரும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு, தீவிரவாத சதித்திட்டம் ஒன்று தொடர்பாக முறையாக விசாரணைகளுக்கு அந்த நபர் உட்படுத்தப்பட்டிருந்தார்.

பிரான்ஸின் தேசிய விளையாட்டு அரங்கில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய நபர் அஹ்மட் அல் மொஹ்மட் என்று நம்பப்படுகிறது.

அவரது உடலுக்கு அருகில் கிடைத்த கடவுச் சீட்டு, அவருடையது என உறுதியானால் அவர் சிரியாவில் 1990ஆம் பிறந்தவர் என்பது தெரியவரும்.

http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/article7884401.ece

2j2ydqa.png

  • தொடங்கியவர்

பாரிஸ் தாக்குதல்: 24 பேர் இதுவரை கைது

 
பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ்
AFP பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ்

பாரிஸ் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்ச் உள்துறை அமைச்சர் பெய்நார் காசநோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

நாடு முழுவதும் 168 இடங்களில் காவல்துறையினர் முற்றுகையிட்டு முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுகளுக்கு அப்பாற்பட்டு கலாஷ்னிகோவ், தானியங்கித் பிஸ்டல்கள், ராக்கெட் ஏவும் கருவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் காசநோவ் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத ஜிகாதி அமைப்பில் உள்ளவர்களிடம், அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி விசாரணைகள் நடைபெற்று வருவதாக பிரெஞ்ச் அரசாங்கம் கூறுகிறது.

தமது நாட்டின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு எதிரானத் தாக்குதல்கள் காத்திரமாகவும் முழுமையானதுமாக இருக்கும் எனவும் பிரான்ஸின் உள்துறை அமைச்சர் காசநோவ் வலியுறுத்தியுள்ளார்.

http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7884400.ece

  • கருத்துக்கள உறவுகள்

மனித உயிர்கள் மதிக்கப் பட வேண்டியவை என்டாலும் மேற்குலகில் இருப்பவர்களுக்கும் இரத்தம்,வலி/வேதனை என்டால் என்ன என்று தெரிய வேண்டும். மேற்குலகில் பிறந்தால் அவர்கள் ஒன்றும் தேவ தூதர்கள் இல்லை...இறந்தது அப்பாவிச் சனங்கள் என்டாலும் இதே மக்கள் தான் தமது நாட்டு அரசு வேறு நாடுகளில் போய் தேவையில்லாமல் யுத்தம் புரிய அனுமதி கொடுத்து உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாமே அரசியல்...இங்கு பொதுமக்களின் பங்கு எள்ளளவும் இல்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.