Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய 42 பேரிடம் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய 42 பேரிடம் விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 11:59.09 AM GMT ]
refugees_002.jpg
தமிழகத்தில் முகாம்களில் தங்கியுள்ள 42 அகதிகள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பியுள்ள அகதிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வழிக்காட்டலுடனும், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடனும் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். 

அத்துடன் இவர்கள் நாடு திரும்புவதற்கான இலவச விமான பயணச்சீட்டை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நாடு திரும்பவுள்ளவர்களுக்கு மீள் சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் தலா 75 அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன், போக்குவரத்து நன்கொடையாக 19 அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாகவும், உணவு அல்லாத பண நன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 75 அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த அகதிகள் 42 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர்.

http://www.tamilwin.com/show-RUmtzBRYSWnv5C.html

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, கறுப்பி said:

தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய 42 பேரிடம் விசாரணை

விசாரணையின் போது முதலாவது கேள்வி-: பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சுபீட்ச பூமியைவிட்டு எதற்காக இந்தியாவிற்கு சென்றீர்கள்?

4 hours ago, குமாரசாமி said:

விசாரணையின் போது முதலாவது கேள்வி-: பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சுபீட்ச பூமியைவிட்டு எதற்காக இந்தியாவிற்கு சென்றீர்கள்?

முதலாவது இரணடாவது என்று ஒன்றும் இல்லை. ஒரேஒரு கேள்விதான், "இடம்பேர்ந்து போனதுக்கு உடனடி காரணம் என்ன?"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Sooravali said:

முதலாவது இரணடாவது என்று ஒன்றும் இல்லை. ஒரேஒரு கேள்விதான், "இடம்பேர்ந்து போனதுக்கு உடனடி காரணம் என்ன?"

 புலியள் தங்கடை படையிலை சேரச்சொல்லி வில்லங்கப்படுத்தினவை......சேராட்டில் அடிச்சவை

Edited by குமாரசாமி

1 hour ago, குமாரசாமி said:

 புலியள் தங்கடை படையிலை சேரச்சொல்லி வில்லங்கப்படுத்தினவை......சேராட்டில் அடிச்சவை

அப்பிடியும் இல்லையாம், வந்தவர்களை விசாரிச்சு அவர்களின் சொந்த இடம் என்ன என்று அறிந்த பிறகு வீடு கட்டி கொடுக்கவாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் இல்லையாம்... வீடு வேணும் என்றால்.. யார் யார் எந்தெந்த இந்திய.. சிங்கள அதிகாரிகளோடு படுக்கையைப் பரிமாறிக் கொள்ளத் தயார் என்ற கேள்வி தானாம்.. கேட்கப்படுவது. இதுதான் ஹிந்திய - சொறீலங்கா சர்க்கார்களின் விசாரணையின் முதன்மை அம்சமே.   :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பிய அகதிகளை பார்த்து இப்படி எல்லாம் கேள்வி கேட்க வெட்கமாயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

மக்களைப் பாத்து அல்ல.. சொறீலங்காவில் உள்ள அதிகார மையங்கள் எப்படி அவர்களை நடத்தும் என்ற கேள்விதான் இங்கு கேட்கப்படுகிறது. ஏதோ ஒன்னும் தெரியாத பாப்பா... போட்டாளாம் தாப்பா.. என்ற கதையா நீங்கள் எழுதிறது தான் கேவலமாக உள்ளது.

நாட்டில் இயல்பு நிலை திரும்பி விட்டது.. இந்தா இந்தியா வீடமைத்து தருகிறது.. போய் இருங்கள் என்று அழைத்து வந்துவிட்டு விசாரணை.. வீடமைப்பு திட்டத்தில் இணைய.. பாலியல் இலஞ்சம்.. கேட்பது தான் அதிகார மையங்களின் இயல்பு நிலையா...?!

ஏலவே இந்திய வீட்டுத்திட்டம் மீது பல மோசடிப் புகார்கள். அதில் பாலியல் இலஞ்சம் உட்பட பல அடங்கியுள்ளது. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.