Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் சமந்தா

Featured Replies

8036.jpg

அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சமந்தா பவர், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இலங்கையை அவதானித்துக் கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.

சர்வதேச நாடுகள் எந்தளவு தூரம் இலங்கையைக் கவனிக்கின்றன என்பதும் சர்வதேசம் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்தது? என்பதும் தமிழ் மக்கள் தெரியாதவர்கள் அல்ல. 
சர்வதேசம் எங்களைக் காப்பாற்றும் என்று நம்பி அழிந்து போன ஓர் இனத்திடம் வந்து, அமெரிக்க அதிபர் இலங்கையை அவதானித்துக் கொண்டிருக்கிறார். இலங்கைத் தமிழ் மக்களுக்கு அமெரிக்கா உதவும் எனக் கூறியுள்ளார். 

இலங்கைக்கும் கூடவே யாழ்ப்பாணத்துக்கும் வருகின்ற வெளிநாட்டுத் தூதுவர்களின் நோக்கம் என்ன? அவர்களுக்கு இங்கு யாருடன் தொடர்பு என்பதெல்லாம் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். 
எங்களை நம்ப வைத்தே நாசமறுத்த சர்வதேசத்தை இனியும் நம்புவது தமிழ் மக்களின் அழிவுக்கு வழிவகுக்குமேயன்றி வேறு எதுவும் நடக்காது. 

அவர்களைப் பொறுத்தவரை நாங்கள் ஆய்வு கூடத் தவளைகள். அவர்கள் ஆய்வாளர்கள். எங்களை வெட்டிப் பரிசோதித்து கற்றறிந்து செல்வது அவர்களின் வேலை. இதற்காக அவர்கள் ஆலாவர்ணம் செய்வார்கள். தமிழ் அரசியல் தலைமையில் தமக்கு உதவக் கூடியவர்களை தம் பக்கம் வைத்துக் கொண்டு தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவர்.

ஜெனிவாவில் அண்மையில் நடந்த மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சர்வதேச விசாரணையை இல்லாது செய்த அமெரிக்கா, இலங்கையை எப்படி? எங்ஙனம்? அவதானிக்கிறது, அதனால் தமிழர்களுக்கு என்ன இலாபம் என்ற கேள்விகளைக் கேட்பதற்கு முடியவில்லை. அந்தளவிற்கு தமிழ் அரசியல் தலைமையைப் பிரித்து வைத்து காரியத்தை நடத்திச் செல்கின்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்குச் சென்று அங்கு அமைக்கப்பட்ட கட்டிடத்தைத் திறந்து வைத்தார். 
அமெரிக்கப் பிரதிநிதி ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு வந்து முஸ்லிம் கல்லூரிக் கட்டிடத்தைத் திறந்து வைத்தது மட்டுமன்றி அங்கு உரையாற்றும் போது 25 வருடங்களுக்கு முன், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு நடந்தது என்ற பொருள் படக் கூறியுள்ளார். 

உலகில் இருக்கக்கூடிய முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் நடத்தி அந்த நாடுகளை  அழித்தொழிக்கும் அலுவலைச் செய்து வரும் அமெரிக்காவின் செயலை உலக நாடுகள் கண்டிக்க; யாழ்ப்பாணத்துக்கு வந்த சமந்தா பவர் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு நடந்தது எனக் கூறுவது எதற்கானது? யாரைக் காப்பாற்றுவதற்கானது? 

ஆக, யாழ்ப்பாணம் வந்த சமந்தா பவர் வன்னியில் நடந்த தமிழின அழிப்புப் பற்றிக் கூறாமல் முஸ்லிம் இனச் சுத்திகரிப்புப் பற்றி கூறியதற்குள் மிகப் பெரும் உள்நோக்கம் உள்ளது.
இது குறித்து தமிழ்-முஸ்லிம் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இனச்சுத்திகரிப்பு என்று சமந்தா பவர் ஏன்? சொன்னார் என்பதை அவசரமாக ஆராய்வது தமிழ் -முஸ்லிம் மக்களின் உறவைப் பாதுகாப்பதற்கு அவசியமானதாகும்.  

http://www.valampurii.lk/valampurii/content.php?id=8036&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

ஆக, யாழ்ப்பாணம் வந்த சமந்தா பவர் வன்னியில் நடந்த தமிழின அழிப்புப் பற்றிக் கூறாமல் முஸ்லிம் இனச் சுத்திகரிப்புப் பற்றி கூறியதற்குள் மிகப் பெரும் உள்நோக்கம் உள்ளது.

 

இந்தியா பாலம் போடப்போயினம் என்ற பயத்தில் இப்படி சொல்லியிருக‌லாம்......எங்கன்ட் பிரதிநிதி இனசுத்திகரிப்பு நடந்தது என்று சொல்லும் பொழுது அமேரிக்க அம்மையார் சொல்லுவது பெரிய விடயமே..

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் இன அழிப்புச் செய்யப்பட்டதை சொன்னால்.. அதை கொப்பி பண்ண ஆயிரம் ஆதாரம் வேணும். இனச் சுத்திகரிப்புன்னு ஒற்றையாள் சொன்னால்..(இவையே அவருக்கும் எடுத்துக் கொடுத்திருப்பினம் போல).. அதை வழிமொழிய அமெரிக்காவுக்கு ஒரு ஆதாரமும் தேவையில்லை.

அமெரிக்காவுக்கு மோதல்களும்.. பிளவுகளும்.. சண்டைகளும்.. சச்சரவுகளும்.. இன அழிப்புகளும்.. சுத்திகரிப்புகளும்.. கைவந்த கலை. இவை இல்லையேல்.. அது எப்படி தன்னை பெரிய சண்டியனாகக் காட்டிக்கொண்டு உலகம் பூரா நடப்புக்காட்ட முடியும்.

அமெரிக்காவின் போக்கிரித்தனம்.. சிரியாவில் அப்பட்டமாகவே தெரிஞ்சிட்டே..!:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டார்கள் என்று சுமத்திரனே சமந்தாபவருக்குச் சொல்லியிருப்பார் போல.

  • கருத்துக்கள உறவுகள்

ரிசாட் சில தினங்களுக்கு முன்பு தமிழர்களும் முஸ்லீம்களும் பிட்டும்
தேங்காய் பூவும் போல் என் கூறியதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
 
இணைப்பை வாசிக்க‌

http://www.jaffnamuslim.com/2015/11/blog-post_410.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.