Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆம்…நான் அரவாணிதான்: யாழ் அரவாணிகளின் இரகசிய உலகம்!

Featured Replies

 

நன்றி: Deepam News

 

‘ஊரோரம் புளியமரம்…. உலுப்பிவிட்டா சலசலக்கும்’ இப்படி பாடியபடி ஏழெட்டுப்பேர் நாணிக்கோணி வட்டமாக வளைய வருவார்கள். ஆண்களைப் போலுமிருப்பார்கள். சேலையுடுத்தியிருப்பார்கள். கன்னத்தில் போட்டுக்கொண்டு அதிகமாக வெட்கப்படுவார்கள். பார்த்து சிரிப்பதற்கென்றே திரையில் காட்டப்படும் இந்த வகையானவர்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.

ஆம்.. அரவாணிகள், திருநங்கைகள் என பல்வேறு வார்த்தைகளால் அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் பற்றியே பேசுகிறோம்.

ஆணாக பிறந்து, பெண்ணாக உணர வைத்து, போலி வாழ்க்கை வாழ முடியாமலும், சொந்த வாழ்க்கையை வெளிப்படுத்த முடியாமலும் நம்மத்தியில் அன்றாடம் செத்து செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அரவாணிகள் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்? திரையிலும், பொது இடங்களிலும் பார்த்து சிரிப்பதற்காக அல்லாமல், அவர்களும் மனிதர்கள்தான் என்ற புரிந்துணர்வு நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது?

அரவாணிகள் என்றாலே, தீண்டத்தகாதவர்கள் என்பதைப் போன்ற உணர்வுதான் பலரிடமும் உள்ளது. பாலியல் தொழில் செய்வார்கள், பிச்சை எடுப்பார்கள், திருடுவார்கள் என்பதைப் போன்ற சித்திரம்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதைக்கடந்து வாழ்க்கையை வாழத்துடிப்பதே அரவாணிகளின் கதையென்பதை அறிவோமா?

புரிந்து கொள்ளாத குடும்பம்… அங்கீகரிக்காத சமூகம் என அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அரவாணிகளின் கதையை வெளிச்சமிட்டு காட்ட களமிறங்கினோம்.
திரையிலும், கதைகளிலும் தாராளமாக உலாவும் அரவாணிகள் நமது சூழலில் அவ்வளவு இலகுவாக அடையாளம் காண முடியவில்லை. சிறிய அலைச்சலின் பின்னர் அந்த உலகத்திற்குள் நுழைந்தோம். இந்த கதையின் நாயகியை அந்த உலகத்தில் தேடிப்பிடித்தோம்.
ஈழநிலா. இதுதான் அவர் தனக்கு தானே வைத்துக் கொண்ட பெயர். பிறப்பால் சேர்ந்து கொண்ட ஆண் அடையாளங்களை ஒவ்வொன்றாக கழற்றிச் செல்லும் அவரது வாழ்க்கைப் பயணத்தில், பெற்றோர் வைத்த பெயரையும் கழற்றிவிட்டுவிட்டார். அது பற்றி அவர் பேச விரும்பவில்லை.

ஆணாக பிறந்த பெண்

பெற்றோரை பொறுத்தவரை தமக்கொரு ஆண்பிள்ளை பிறந்துள்ளது என்றே நினைத்தார்கள். எனினும், அந்தப்பிள்ளை தன்னை உணர்ந்தது ஒரு பெண்ணாக. ஆணாக பிறந்த பிள்ளை பெண்ணாக தன்னை மாற்றுவதை அங்கீகரிக்காத சமூகப்பார்வை, ஊருக்கு அஞ்சி தனக்குள்தானே தற்கொலை செய்து கொள்ள மனமில்லாத வீரியம் என்பன நேருக்குநேர் மோதும்போது வீடுகளை துறக்கிறார்கள் அரவாணிகள். இப்பொழுது பெற்றோர், உறவினர்கள் என்ற சமூக வட்டத்திலிருந்து வெளியில் வந்துவிட்டார் ஈழநிலா. உடல், உளரீதியில் முக்கால்பங்கிற்கும் அதிகமாக பெண்ணாக மாறிவிட்டார் நிலா.

அரவாணிகளின் உலகத்தில் உள்ள பிரதான இரண்டு சாவல்களில் முதலாவது வீடுகளை துறப்பது. தாம் யார் என்பதை அவர்கள் உணரும் சமயத்தில், வீட்டில்… சமூகத்தில் அதனை புரிந்து கொள்ளும் பக்குவம் இருப்பதில்லை. வேரைப்பிடுங்கிக் கொள்ளும் சவால் முதலாவது. இப்படி வெளியேறும் அரவாணிகள் தமக்குள் ஒரு பிணைப்பை எற்படுத்தி புதியதொரு குடும்பத் தொகுதியாக வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.

எனினும், தற்போது நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் உள்ளது. அரவாணிகளின் நலனை கவனிப்பதற்கென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒரு பிரிவு உள்ளது. அதுதவிர, சில தன்னார்வ அமைப்புக்களும் இயங்குகின்றன.

ஆண்கள் கல்லூரியில் படித்த பெண்

இந்தப்பகுதிக்காக வேறும் பல அரவாணிகளுடனும் நாம் பேசினோம். நாம் பேசிய அனைவரிடமும் கடந்தகாலம் துயர்நிறைந்த, வலிமிகுந்த காலமாக மனதில் படிந்துள்ளது. பலரிடம் ஒருவித வன்மம் குடிகொண்டுள்ளது. அவர்கள் தம்மை உணர்ந்து கொள்ளத் தொடங்கும் போது, வீடுகளில் அதற்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதனை மீறி தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும்போது, அவர்கள் மீது பல்வேறு கொடுமைகள் வீடுகளில் பிரயோகிக்கப்படுகிறது. வீட்டு கொடுமைகள் பெரும்பாலும் சமூகத்திற்கு அஞ்சியவையே. ஆணாக இருந்தவர் பெண் அடையாளங்களுடன் பகிரங்கமாக திரிவது குடும்பத்திற்கு அவமானமென வீடுகளில் கருதுகிறார்கள். இதனாலேயே என்ன வழியிலாவது அவர்களின் உணர்வுகளை அடக்கிவிட முயல்கிறார்கள்.

IMG_3522அந்தக்கொடுமைகளை சகிக்க முடியாமல் அவர்கள் வீடுகளைவிட்டு வெளியில் செல்கிறார்கள். இந்தக்காலமே வன்மமாக அவர்கள் மனதில் படிந்துள்ளது.

வெளிப்படுத்த முடியாத உணர்வுகள்… இயல்பற்ற இளமைக்காலம்… படைப்பை மீறிய உணர்வுகள்… உணர்வுகளை முடக்க எத்தனிக்கும் வீட்டுசூழல் என அத்தனை கசப்பான காலத்தையும் கடந்தே வந்திருக்கிறார் நிலா. வெறும் 23 வயதுதான் இப்போது நிலாவிற்கு. அதற்குள் எத்தனை கசப்பு, போராட்டங்களை கடந்து வந்திருக்கிறார் என்பதை பேசும்போது புரிந்து கொள்ள முடிந்தது.

‘நான் கல்விகற்றது யாழ் நகரத்தில் உள்ள பிரபல்யமான கிறிஸ்தவ ஆண்கள் பாடசாலையான சென்.பற்றிக்சில். இங்கு எனது வகுப்பில் என்னைப் போல ஆறு நண்பர்கள் ஒரே வகுப்பில் கல்வி கற்றார்கள். அவர்கள் படிப்படியாக பாடசாலையில் இருந்து இடைவிலகி விட்டனர். இறுதியில் உயர்தரப் பரிட்சைக்கு என்னுடன் இன்னும் ஒருவர் தோற்றியிருந்தார்’ என ஒரு கனவைப் போல கடந்த காலத்தை மீட்டினார் நிலா.

பாடசாலை காலம் முழுவதும் ஒரு ஆணாகவே அவர் இருந்தார். சில கலவையான எண்ணங்கள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தாலும், தன்னுள்ளான மாற்றங்களை அவர் அறிந்து கொள்ளவில்லை. பாடசாலைக்காலத்தின் பின்னர்தான் மூன்றாம் பாலினம் தொடர்பான தெளிவு தன்னுள் ஏற்பட்டதாக நிலா கூறுகிறார். தன்னைப் போன்ற இன்னும் பலர் இருக்கும் தகவல் கிடைத்து, மெதுமெதுவாக அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர்களுடனான அறிமுகத்தின் பின்னரே தன்னுள் இருந்த கலவையான எண்ணங்கள் பெண் என்ற மையத்தை நோக்கி குவிந்ததாக சொல்கிறார்.

இந்த உணர்வுமாற்றத்துடன் நீண்டநாட்களாக தனக்குள்ளாகவே அவர் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். இந்த மாற்றம் பற்றி வீட்டில் பேச முடியாத நிலையிருந்துள்ளது. கல்வியறிவில்லாத பெற்றோர் அதனை எவ்வாறு அணுகுவார்கள், அவர்களால் புரிந்து கொள்ள முடியுமா என்பதில் நிலா குழப்பத்துடன் இருந்துள்ளார். இறுதியில் மாமாவிற்கு விடயத்தை சொல்லலாமென நினைத்தார். அவரால் தன்னை புரிந்து கொள்ள முடியுமென நம்பினார். ‘என்னை ஒரு பெண்ணாக உணர்கிறேன். இப்பொழுதிருக்கும் வெளியடையாளங்களை துறந்து புதிய அடையாளங்களை தேடப்போகிறேன்’ என ஏழு பக்கங்கள் கொண்ட கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்தக்கடிதமும் கிணற்றில் போட்ட கல்லானது. புரிந்துகொள்வார் என நிலா நம்பிய மாமா எதுபற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மௌனமாக இருந்துவிட்டார்.

பாதிரியாருக்கு படித்த பெண்

க.பொ.த உயர்தரத்தில் நிலா தேறியிருந்தார். பல்கலைகழக கலைப்பீடத்திற்கு தேர்வாகியிருந்தார். எனினும், தான் யார் என்பதை உணர்ந்துகொள்ளாத குழப்பத்தால் பல்கலைகழக வாய்ப்பை உதறிவிட்டார்.

இந்த மனப்போராட்டத்தில் நிலா ஒரு முடிவிற்கு வந்தார். மனதிற்குள் ஏற்பட்ட குழப்பங்களை தீர்த்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக ஆன்மீகத்தை நாடினார். இடைப்பட்ட நாளில் மனதில் தோன்றிய குழப்பங்;களை ஆன்மீகம் தீர்த்து வைக்குமென அவர் நம்பினார். கிறிஸ்தவ மிசனரியின் இணைந்து கல்வி பயில தொடங்கினார்.

ஆன்மீகமும் அவரது மனக்குழப்பத்தை தீர்க்கவில்லை. சக ஆண் நண்பர்களுக்கு மத்தியில் அசௌகரியத்தை உணர்ந்தார். தன்னால் அவர்களுடன்; வழ முடியாது என்ற முடிவிற்கு வந்தார். அங்கு இருந்த காலத்தில் ஆண்கள் அனைவரும் ஒன்றாக குளிக்கும் போதோ, உடைமாற்றும் இடத்தில் நிற்கும் போதோ மிகவும் கூச்சமான தன்மையை உணர்ந்ததாக கூறுகிறார். இன்னொரு விடயத்திலும் அவர் வேறுபட்டிருந்தார். இரவில் தூக்கும் போது அவர்கள் சாறம் உடுத்திருப்பார்கள். ஆனால் தான் பெண்கள் அணியும் பாவாடையின் தன்மையை ஒத்த காற்சட்டையையே அணிந்ததாகவும், அங்கிருந்த நாட்களில் ஆட்களின் முன்னால் மேற்சட்டையை கழற்றியதும் இல்லை என்றார்.

‘எமக்கு பொறுப்பாக இருந்த அருட்தந்தை எனது உணர்வுகளை புரிந்து கொண்டார். நான் யார் என்பதை அவரால் புரிய முடிந்தது. எனது குடும்பத்துடன் தொடர்பு கொண்டு வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு பணித்தார். இதன்படி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட வைத்தியர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றேன். என்னை பரிசோதித்த வைத்தியர், எனக்குள் எந்தவிதமான ஹோர்மோன் மாற்றமும் இல்லையென்றும், நான்தான் பெண்ணாக வாழ ஆசைப்படுவதாகவும் கூறினார். மனவன ஆலோசனை சிகிச்சைகளிற்கு சென்றால் மட்டும் போதுமானதென்றார்’

இருந்தாலும் வைத்தியரின் கருத்தை நிலா முழுதுமாக ஏற்கவில்லை. வேறுசில நண்பர்களின் IMG_3675உதவியுடன், யாழ் போதனா வைத்தியசாலையின் சிரேஸ்ட சுகாhதாரப் பரிசோதகரும் உளவள ஆலோசகருமான நக்கீரனின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்தியர் கபிலனிடம் தனது பிரச்சினைகள் தொடர்பாக பேசினார். நிலாவின் நிலைமையைப் புரிந்து கொண்ட அவர் நிலா முழுமையான பெண்ணாக மாறுவதற்கான சிகிச்சையைப் பெற்று தருவதாக தெரிவித்தார். அவரது வழிகாட்டலும், ஒத்தாசையும் நிலாவை புதிய உலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

‘நான் புதிதாக என்னை உணரத் தொடங்கியபோது, வீட்டுக்காரருக்கு அது பிரச்சனையாக இருந்தது. பல தடவைகள் வீட்டு அங்கத்தவர்களால் துன்புறுத்தப்பட்டேன். பெரிய ரீப்பை முதல் காற்றும் பம் வரை எல்லாப்பொருட்களாலும் என்னை அடித்தார்கள். எனது உடலில் உள்ள தழும்புகள், அடையாளங்கள் அரவாணிகள் சந்திக்கும் வீட்டு வன்முறையை சொல்லிக் கொண்டேயிருக்கும்’ என்கிறார்.

வாழ்வே ஒரு பெரும் கொடுமையாக மாற, வீட்டைவிட்டு எங்காவது கண்காணாத இடத்திற்கு தப்பிச் செல்வதற்கு முடிவு செய்தார். அவரைப் போலவே வீட்டில் கொடுமைகளை சந்தித்த இன்னொரு தோழியும் கூட கிளம்பினார். தனது கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை விற்றும், வீட்டில் சிறு செலவிற்கு கொடுக்கப்படும் சொற்ப பணத்தை சேமித்தும் இந்தியா செல்ல திட்டமிட்டார்.

அப்பொழுதுதான் இலங்கைச்சட்டங்கள் குறுக்கே வந்தன. நிலா பார்வைக்கு ஒரு பெண். அணிந்திருந்த ஆடைகளும் பெண்களாடைகள். ஆனால் ஆவணங்களோ, அவரை ஒரு ஆணாக அடையாளப்படுத்தின. வீட்டு நடைமுறைகள் மட்டுமல்ல, நாட்டு சட்டதிட்டங்களும் அரவாணிகளை வஞ்சித்தன. (இந்தக்கட்டுரை தீபம் வாரஇதழிலிருந்து நன்றியுடன் பிரசுரமாகிறது) அரவாணிகள் பற்றி இலங்கை சட்டங்களில் எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அதிகாரிகளின் பார்வையில் ஆணொருவர் பெண் வேடமிட்டுள்ளார். ஆள்மாறாட்ட சட்டத்தின் கீழ் கைதானார். விசாரணை, தடுத்து வைப்பு என அலைக்கழிவான வாழ்க்கை. இந்திய கனவும் அத்துடன் கலைந்தது.

அவமான ஆண்குறி

அரவாணிகளின் வாழ்க்கையில் உள்ள பிரதான சவால் இதுவரை பேசிய எதுவுமில்லை. வீட்டிலிருந்து வெளியேறுவதோ, தனித்து வாழும் சிரமம் இவைகள் அனைத்தையும் விட அவர்களின் பிரதான சிக்கல் வேறு. எதையும் மாற்றிவிடலாம். சில அடையாளங்கள் கெட்ட கனவாக உடம்பில் ஒட்டியிருக்கும். ஆம். அரவாணிகளின் உடலில் கெட்ட கனவாக சேர்ந்திருப்பது ஆணுறுப்பு.

தமது உடலில் அது ஒட்டியிருக்கிறது என உணரும், நினைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அசௌகரியத்தை உணர்வதாக கூறுகிறார்கள் அரவாணிகள். அவர்கள் வெளிப்படுத்த நினைக்கும் உணர்விற்கு நேர்எதிரான தோற்றத்தை கொடுப்பது அது. அதனால் அரவாணிகளின் வாழ்வின் தலையாய இலட்சியமாக இருப்பது ஆணுறுப்பை உடலிலிருந்து அகற்றுவதே.
அதனை அகற்றாமல், அவர்கள் பெண்கள் என்ற அடையாளத்தை பெற இலங்கைச்சட்டங்கள் அனுமதிப்பதில்லை. மூன்றாம் பாலினத்தவர் பற்றிய சட்ட ஏற்பாடுகளும் கிடையாது. சட்டத்தை பொறுத்தவரை அவர்கள் ஆண்கள். பெண்கள் என்ற அங்கீகாரத்தை சட்டரீதியாக பெறுவதென்றால் ஆணுறுப்பை உடலிலிருந்து அவர்கள் அகற்றித்தான் ஆக வேண்டும்.

எல்லா அரவாணிகளதும் இலட்சியமாக இது இருந்தாலும் அது இலேசான காரியமல்ல. சிகிச்சையில் ஆணுறுப்பை அகற்றி, பெண் என்ற சட்டரீதியான அங்கீகாரத்துடன் யாழில் இருப்பது மூன்றேமுன்றே பேர்தான். அவர்களில் இருவர்தான் இப்பொழுது இருக்கிறார்கள். ஆனாலும், யாழில் மட்டும் கிட்டத்தட்ட நூறுபேர் வரையான அரவாணிகள் தற்போது இனம்காணப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு இரவு தூங்கச்செல்லும்போதும் நிலா கடவுளிடம் தவறாமல் வேண்டிக் கொள்வாராம். ‘விடிந்து எழும்போது பெண்ணாக மாற வேண்டும் என. இப்படியே நினைத்து நினைத்து இப்பொழுது தனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாமல்ப் போய் விட்டதென்கிறார்.
இப்பொழுது நிலா சுதந்திரமான வாழ்வை வாழ்வதாக கூறுகிறார். அரவாணிகள் தொடர்பான தன்னார்வ நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஆரவாணிகளின் உரிமைக்காக பாடுபடுவதே தனது இலட்சியமென்றும் கூறுகிறார். நிலா தனது வாழ்வை அடிப்படையாக கொண்டு எழுதிய ‘மூன்றாம் பாலின் முகம்’ என்ற நாவல் விரைவில் வெளியாகவுள்ளது.

புதிய தாய்

வீடுகளிலிருந்து வெளியேறும் அரவாணிகள் குழுக்களாக இணைகிறார்கள். அப்பொழுது தமக்கிடையில் புதிய உறவுமுறையொன்றை கட்டமைத்து கொள்கிறார்கள். இளைய அரவாணியொருவர், கட்டாயமாக மூத்த அரவாணியொருவரின் மகளாகியே தீரவேண்டும்.
தத்தெடுத்த தாய், வேறு அரவாணிகளையும் தத்தெடுத்திருப்பாரேயானால் அவர்கள் அக்கா, தங்கைகளாவார்கள்.

மூடிய, இறுக்கமான யாழ்ப்பாண சமூகத்தின் போலியான திரைகளை கிழித்துக் கொண்டு வெளிவந்திருக்கிறார் நிலா. ஆரவாணிகள் பற்றிய பிழையான சமூக மதிப்பீடுகளிற்கு அரவாணிகளின் நடத்தையும் ஒரு காரணமாகிவிட்டது. அந்த நடத்தைக்கு காரணம்- அவர்களின் உரிமைகளை முறையாக அங்கீகரித்து, சமமாக பார்க்காத தன்மையே.
அரவாணிகள் என்றாலே பிழையாக விளங்கிக் கொள்ளும் நமது சமூகத்தின் முகத்திலறைந்தாற்போல முன்னுதாரணமாக விளங்கும் பலருள் ஒருவரே நிலா. தனது சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழும் நிலாவிற்கு ஒரு சலூட் அடிக்கலாம்தானே!

###

IMG_3744திரு பு. நக்கீரன்
சிரேஸ்ட சுகாதார பரிசோதகர்,உளவள ஆலோசகர்
யாழ் போதனா வைத்திய சாலை
யாழ்ப்பாணத்தில் உள்ள 80 க்கும் அதிகமான அரவாணிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருகிறேன். சமூகத்தில் அவர்கள் முறையான அங்கீகாரத்துடன் வாழ யாழ் போதனா வைத்தியசாலையில் பாலியல் நடத்தைகள் தொடர்பான ஆலோசனை மையம் மூலம் உதவுகிறோம். அதுதவிரஇ சக வாழ்வுக்கான பயணம் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பையும் நடத்தி வருகிறேன். அவர்களின் சுகாதாரம்இ உளரீதியிலான ஆரோக்கியத்திற்கு ஆதரவாக செயற்படுகிறோம்.

இவர்கள் ஆணாகப் பிறந்து பொண்ணாக மாற்றம் அடைந்தாலும் சட்டரீதியில் இவர்கள் ஆண்களே. வீடுகளில் வாழ முடியாமல் வெளியுலகத்திற்கு வரும் இவர்களின் வாழ்க்கை பெரும் சோதனையானது. முக்கியமாக உளரீதியான பிரச்சினைகள். இதனைத் தீர்க்க அவர்கள் முதலில் தம்மைப்போல் உள்ள அரவாணிகளைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அவர்களுடன் நட்பை ஏற்படுத்தி காலப்போக்கில் அனைவரும் ஒரே குடும்பம் என்று மனதளவில் ஒன்றித்து வாழ ஆரம்பிக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்திலே அவர்களுக்கு இன்னொரு பிரச்சினை ஆரம்பமாகின்றது.

அது தான் பொருளாதார பிரச்சினை. இவர்களுக்கு உதவ யாருமே இல்லை. வேலை வழங்கவும் தயாராக இல்லை. வாழ்க்கைச் செலவை எவ்வாறு ஈடுகட்டுவதென்ற கேள்வி எழுகிறது. இதனைத் தீர்ததுக் கொள்ள வேலை வாய்ப்புக்களைத் தேடி பல இடங்களுக்கு அலைகிறார்கள். சில இடங்களில் மட்டுமே இவர்களுக்கு வேலை கிடைக்கிறது.

இவர்களில் பெரும்பாலாணவர்கள் அடிப்படையில் கல்வியறிவு இல்லாதவர்களாக காணப்படுவதனால் தம்மை பாதுகாக்க முடியாத நிலை உருவாகின்றது. வேலை செய்யும் இடங்களில் இவர்களுடன் பலர் தவறாக நடக்க முற்படுகிறார்கள். இங்கு இவர்களது அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. சட்ட உதவியை நாடி பொலிசில் முறையிட சென்றால் இவர்கள் ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும். இப்படி இருந்தால் ஆள்மாறாட்ட வழக்கில் இவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

இப்படி தமக்கு சமூகத்தில் இழைக்கப்படும் வன்முறைகளில் இருந்து. தப்பிக்கவும் தமக்கான வருமானங்களை உழைக்கவும் இவர்கள் பல குற்றச்செயல்களை செய்ய ஆரம்பிக்கிறார்கள். சிலர் போதைப்பொருட்களுக்கும் அடிமையாகின்றார்கள்.

இவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், விழிப்புணர்வு, ஆலோசனை சேவைகளை பல அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது வழங்குகின்றன. அதில் heart to heart நிறுவனம் முக்கியமானது.

இப்பொழுது அரவாணிகள் தொடர்பான விழிப்புணர்வு இலங்கையில் அதிகரித்து செல்கிறது. எண்ணற்ற விழிப்புணர்வுகள் ஆலோசனைகள் என்று செய்தாலும் அவர்களில் சிலர் தம்மை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் நிற்கிறார்கள்.

பாலியல் தொழிலில் ஈடுபடுதல், களவு எடுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் அரவாணிகளில் ஒருபகுதியினர் மீது உள்ளது. அதேபோல, வேலை தேடி வருபவர்களில் சிலர் கிடைக்கும் வேலைகளை சரியாக செய்வதில்லை. உணவகங்கள், காமன்ஸ்கள்இ குழந்தை பராமரிப்பு என் இவர்களுக்கு கொடுத்த வேலைகளை இவர்கள் தமக்கு உகந்தது அல்ல என தட்டிக்கழிக்கின்றனர்.

இவர்களுக்கு மருத்துவசெலவிற்கு மாத்திரம் மாதாந்தம் 4000 ரூபாவிற்கு மேல் தேவைப்படுகிறது. இவர்கள் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ மாறவேண்டுமானால் அதற்கான ஓமோன்களை பெற்றுக் கொள்ளவே இந்த செலவு ஏற்படுகிறது.

இந்த செலவுகளை நிவர்த்தி செய்ய இவர்களில் பலர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். உலகம் முழுவதும் அதிகளவிலான எயிட்ஸ் தொற்றுக்கு இவர்களே காரணமாக இருக்கிறார்கள். கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட 19 எயிட்ஸ் நோயாளிகளில்  அரவாணிகளும் அடக்கம்.

பொதுவாக மனிதனின் பாலியல் நடத்தைகள் ஐந்து வகைப்படும்

1. ஆண் பெண் உறவு
கிட்டத்தட்ட சனத்தொகையில் 75 வீதமானவர்கள் இவர்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஆணை விரும்பும் ஆணாகவோஇ பெண்ணை விரும்பும் பெண்ணாகவோ இருக்கமாட்டார்கள். இவர்களே ஆரோக்கியமான சந்தியினரை உருவாக்குகிறார்கள்.

2. ஆண் + ஆண் உறவு (கோமோசெக்ஸ்)

ஆண்களின் மீது ஆண்கள் விருப்பம் கொண்டு உறவினைப் வைப்பார்கள் இவர்கள். இந்த வகைக்குள் உள்ள ஆண்கள் சமூகத்தில் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் உயர் பதவிகளிலும் உள்ளனர். குறிப்பாக ஆண்கள் ஒன்றாக சேர்ந்து உள்ள இடங்களில் இவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

எயிட்ஸ் நோய்த் தொற்றுக்கு இந்த ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களது பங்களிப்பு அதிகமாகும். இவ்வாறான 100 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனையை யாழ்ப்பாணத்தில் பெற்றுள்ளனர். இவரகளில் 50 வீதமானவர்கள் தம்மை மாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர். மீதிப் பேர் தவறான செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர்.

100 க்கும் அதிகமான ஆண்களுடம் உறவு வைத்திருந்த ஒருவர் அண்மையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

சிலர் திருமணமாகி குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்தி குழந்தைகளையும் பெற்றுள்ளனர். எனினும்இ ஓரினச்சேர்க்கையையே அதிகம் விரும்புகிறார்கள்.

3) பெண் + பெண் உறவு (லெஸ்பியன்)

பெண்கள் மீது விரும்பம் கொண்டுஇ உறவினைப் பேணும் பெண்கள் இந்த வகைக்குள் அடக்கம். இப்படி நம்மத்தியில் ஏராளமான பெண்கள் காணப்பட்டாலும் அவர்களில் ஒரு சிலரையே இனங்கானக் கூடியதாக இருக்கிறது. யாழ்பபாணத்தில் ஒருவரே இவ்வாறு இனங்காணப்பட்டு சிகிச்சை ஆலோசனைகளை பெற்று வருகின்றார்.

4) பெண்ணாக மாறிய ஆண்
இவர்கள் ஆணாகப் பிறந்தவர்கள். எனினும்இ தான் ஒரு பெண் எண்ற உணர்வில் வாழ்பவர்கள். இவர்களது நடை உடை பாவனைகள் எல்லாம் பெண்களைப் போலவே இருக்கும். இருந்தாலும் இவர்கள் ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க கூடியவர்கள்.

5) ஆணாகும் பெண்
பெண்ணாகப் பிறந்து ஆணாக தம்மைமைப் பாவனை செய்து வாழ்பவர்கள். இவர்களது உருவ அமைப்பு பொண்ணாக இருந்தாலும் ஆண் போன்ற எண்ணங்கள் உள்ளவர்கள். ஆண்களுக்கு இருக்கும் தைரியத்தினையும் தம்மில் வளர்துக்கொண்டு வாழ்பவர்களாக காணப்படுகின்றார்கள். இவர்களுக்குள் இருக்கும் பெண்மையானது கருக்கட்டலுக்கு உகந்ததாகவும் காணப்படுகிறது.

# யாழ்பாணத்தில் உள்ள அரவாணிகளில் பலர் முறையான வைத்திய ஆலோசனைகளையோ சிகிச்சைகளையோ பெற்றுக் கொள்ளாமல் தாமாகவே பல மருந்துகளை பாவிக்கிறார்கள். ஏற்கனவே முறையற்ற சிகிச்சை எடுத்த இன்னொரு அரவாணியின் சிபாரிசில் இதனை செய்கிறார். இந்தப்போக்கு வரவர அதிகமாகிக் கொண்டே செல்வதாகவும், இதனால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமென்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

#  யாழ்ப்பாண கோட்டைக்கு அண்மையில் தினமும் மாலையில் சில அரவாணிகள் முகாமிடுவார்கள். ‘500 ரூபா… 1000 ரூபா தாருங்கள். உங்களுடன் வருகிறோம்’ என ‘பேரம்’ பேசுகிறார்கள். இப்படி தினமும் உழைப்பதால்இ தன்னார்வ நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வேலைகளை விட்டு ஓடிச் செல்லும் அரவாணிகளும் உள்ளனர்.

# யாழ்பாணத்தில் உள்ள அரவாணிகளில் பலர் முறையான வைத்திய ஆலோசனைகளையோ சிகிச்சைகளையோ பெற்றுக் கொள்ளாமல் தாமாகவே பல மருந்துகளை பாவிக்கிறார்கள். ஏற்கனவே முறையற்ற சிகிச்சை எடுத்த இன்னொரு அரவாணியின் சிபாரிசில் இதனை செய்கிறார். இந்தப்போக்கு வரவர அதிகமாகிக் கொண்டே செல்வதாகவும், இதனால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமென்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

#  யாழ்ப்பாண கோட்டைக்கு அண்மையில் தினமும் மாலையில் சில அரவாணிகள் முகாமிடுவார்கள். ‘500 ரூபா… 1000 ரூபா தாருங்கள். உங்களுடன் வருகிறோம்’ என ‘பேரம்’ பேசுகிறார்கள். இப்படி தினமும் உழைப்பதால்இ தன்னார்வ நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வேலைகளை விட்டு ஓடிச் செல்லும் அரவாணிகளும் உள்ளனர்.

# யாழ்பாணத்தில் உள்ள அரவாணிகளில் பலர் முறையான வைத்திய ஆலோசனைகளையோ சிகிச்சைகளையோ பெற்றுக் கொள்ளாமல் தாமாகவே பல மருந்துகளை பாவிக்கிறார்கள். ஏற்கனவே முறையற்ற சிகிச்சை எடுத்த இன்னொரு அரவாணியின் சிபாரிசில் இதனை செய்கிறார். இந்தப்போக்கு வரவர அதிகமாகிக் கொண்டே செல்வதாகவும், இதனால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமென்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

#  யாழ்ப்பாண கோட்டைக்கு அண்மையில் தினமும் மாலையில் சில அரவாணிகள் முகாமிடுவார்கள். ‘500 ரூபா… 1000 ரூபா தாருங்கள். உங்களுடன் வருகிறோம்’ என ‘பேரம்’ பேசுகிறார்கள். இப்படி தினமும் உழைப்பதால்இ தன்னார்வ நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வேலைகளை விட்டு ஓடிச் செல்லும் அரவாணிகளும் உள்ளனர்.

# இவர்கள் பிறப்பில் இருந்து ஆண் மற்றும் பொண்ணின் உடலமைப்புக்கள் உறுப்புக்களைக் கொண்ட அர்த்தநாரீஸ்வரர்கள். வாழ்க்கையில் அதிக பிரச்சினைகளையும் போராட்டகளையும் சந்திக்கிறார்கள். இவர்களால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அடுத்த சந்ததியினரை உருவாக்க முடியாது.

# இலங்கையில் இவர்கள் ஆண் என்ற சட்ட அங்கீகாரத்தையும் பெண் என்ற சமூக அங்கீரத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள்.

 

http://www.deepamnews.com/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிழலி...! என்ன எழுதுவது என்றும் தெரியவில்லை , ஒப்புக்கு ஏதோ எழுதிப் போகவும் மனமில்லை...!!

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மை கோட்...என்ன அழகான பெண்ணாக இருக்கின்றார்...ஏன் ஆண்டவன் இப்படியான படைப்புக்களையும் படைக்கிறானோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அரவாணி என்ற பதம் ஈழத்தில் பாவிக்கப்படுகிறதா..?! அலி என்பார்கள்... இன்னும் போனால்.. ஒன்பது என்பார்கள்.

இப்ப திருநங்கைகள் என்று தானே பொதுத்தளங்களில்.. பாவிக்கினம். இந்தியாவில் கூட இவர்களின் நிலை இப்போ முன்னேறி வருகிறது. மேற்கு நாடுகள் வேறுபாடு காண முடியாத அளவுக்கு சாதாரண மனித வாழ்க்கையில் இவர்கள் இருப்பதை காணலாம். அந்த நிலை தாயகத்தில் வருவதும் நல்லது. மருத்துவ.. உளவியல்.. உளவள.. உதவிகள் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.

ஒருபால் சேர்க்கை ஆட்களை விட இவர்கள்.. உண்மையில்.. அதிகம் கருசணைக்கு உட்பட வேண்டியவர்கள் என்று சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

சமூகத்தின் .முக்கியமான ஒரு பிரச்சனை பற்றி விரிவாக எழுதியுள்ளார் .

அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது.

கூன் குருடு அலி நீங்கிப் பிறத்தல் அரிது.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.