Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்! - என்கிறார் சந்திரிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதேபோல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதேபோல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

   

தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதித் தீர்வு என்பது, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் தீர்வாகும். இதன்மூலம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியும். எனது அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்க யோசனையில் இருந்து தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உதலாகம அறிக்கை வரை அனைத்து யோசனைகள் குறித்தும் அவதானம் செலுத்தி இந்த இறுதித் தீர்மானத்தை வௌியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த அவரது நிலைப்பாடு என்ன என இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சந்திரிக்கா, இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதேபோல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=146045&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள்  விடுதலைப்புலிகளுக்கு தண்டனை என்றால்.. சந்திரிக்காவும் செம்மணி.. நவாலி.. நாகர்கோவில்.. புதுக்குடியிருப்பு.. பெரியமடு.. உதயன் மீதான விமானக் குண்டுவீச்சு உட்பட பல போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதே நீதிமன்றில் மகிந்தவுக்கு சமாந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும். முன்னாள் புலிகளையும் சர்வதேச நீதிமன்றம் மட்டும் விசாரிச்சு தண்டனை அளிக்கலாம். சொறீலங்கா அவர்களை விசாரிக்கவும் தண்டனை அளிக்கவும் எந்தத் தகுதியும் கொண்டதல்ல. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கை எல்லாரும் எங்டை சனம் உட்பட புலியளுக்குத்தான் தண்டனை குடுக்கிறதிலை முன்னுக்கு நிக்கினம். அவையின்ரை வண்டவாளங்களை ஒருக்காலும் நினைச்சுப்பாக்கேல்லை போலை கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

 முன்னாள் புலிகளுக்கு தண்டனை,  இராணுவத்தினருக்கும் விடுதலை   கொடுப்பதற்கு  முன், புலிகளை உருவாக்கியவர்களுக்கும், இராணுவத்தை வழிநடத்தியவர்களுக்கும் தண்டனை அளித்து, அதற்கான காரணிகளை நிவர்த்தி செய்வதன் மூலம்  எதிர் காலத்தில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் உருவாகாது தடுக்கலாம். அல்லது புலிகளையும், இராணுவத்தினரையும் நோக்கி கையை காட்டிப்போட்டு அதே பிரச்சனைகள் தொடரும், வேறொரு பெயரில், வடிவில். எலியை விட்டுப்போட்டு வாலைப்பிடிச்சு தொங்குதுகள்.

6 hours ago, குமாரசாமி said:

உங்கை எல்லாரும் எங்டை சனம் உட்பட புலியளுக்குத்தான் தண்டனை குடுக்கிறதிலை முன்னுக்கு நிக்கினம். அவையின்ரை வண்டவாளங்களை ஒருக்காலும் நினைச்சுப்பாக்கேல்லை போலை கிடக்கு

கேட்டா தங்களுக்கு அறிவு வளர்ந்துட்டுதாம்? மே.உ.வின் காலுக்க விழுந்துகிடந்து அவையின்டை நடவடிக்கைகளை கூர்ந்து பாக்கினமாம்? சொறிலங்கா அரசாங்கமே விடுதலைப்புலிகள் இல்லையென்றாப்பிறகு.......இல்லாதவைக்கு புதுசாக்கொணர்ந்து தண்டனை குடுக்கவேணுமாம் . இப்படி எங்கட ஆக்கள்ட தொலைநோக்கு பார்வை அமோகமாய் இருக்கண்ணை.

இதில முக்கிய குறிப்பென்னவென்றால்.........ஆசிரியர் பரீட்சையும் எழுதி பேப்பரும் திருத்துவதென்றால் எங்கைபோய் முட்டுவது.   

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணையில்  இவரும் விசாரிக்கப்பட வேண்டும். தான் தப்பி விட்டார் என்ற இறுமாப்பில் இப்படி ஒரு அறிக்கை விட்டு பெரிய ஆளாகப் பார்க்கிறார் இந்த இனவாதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.