Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக உறவுகளுக்கு உதவி புரிவது தொடர்பான எண்ணத்தில் வடக்கு மாகாண சபை பிளவு பட்டு உள்ளதா ?

Featured Replies

தமிழக உறவுகளுக்கு உதவி புரிவது தொடர்பான எண்ணத்தில் வடக்கு மாகாண சபை பிளவு பட்டு உள்ளதா ?

 

 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழக மக்களுக்கு உதவும் நோக்குடன் வடமாகாண சபையினால் நிதியம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
 
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
 
வடமாகாண சபை பேரவைக்கட்டட த்தில் நடைபெற்ற அக் கலந்துரையாடலிலையே நிதியம் ஆரம்பிப்பதாக முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
 
அக் கலந்துரையாடல் தொடர்பில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கருத்து தெரிவிக்கையில்,
 
வெள்ள பாதிப்பினால் உயிர்களை இழந்து சொத்துக்களை இழந்துள்ள தமிழக மக்களுக்கு வடமாகாண சபை சார்பிலும் வடமாகாண மக்கள் சார்பிலும் அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.அவர்களின் உணர்வுகளோடும் பங்கு கொள்கின்றோம்.
 
பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு உதவும் முகமாக நிதியம் ஒன்றினை உருவாக்கி மாகாண சபை உறுப்பினர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள் , வங்கி துறையினர் , வர்த்தக துறையினர் , தனியார் துறையினர் , கூட்டுறவு துறையினர் , என பல்வேறு துறை சார்ந்தவர்களின் பங்களிப்பினை பெற்று எதிர்வரும் 21ம் திகதி யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் கையளிக்க உள்ளோம்.
 
நிதியத்திற்கான வங்கி கணக்கினை நாளைய தினம் (திங்கள் கிழமை ) ஆரம்பிக்க உள்ளோம். அந்த கணக்கு இலக்கத்திற்கு நேரடியாகவோ பேரவை ஊடாகவோ பங்களிப்பினை எதிர்வரும் 20ம் திகதி வரை வழங்கலாம்.
 
கணக்கு இலக்கத்தினை ஊடகங்கள் வாயிலாக அறிவிப்போம், புலம் பெயர் உறவுகளும் தங்களால் ஆனா வகையில் உதவ வேண்டும் என அவர்களிடமும் அன்பான வேண்டு கோளை விடுவிக்கின்றோம் என தெரிவித்தார்.
 
 
15 உறுப்பினர்களே கலந்து கொண்டனர்.
 
தமிழக மக்களுக்கு உதவுவது தொடர்பாக வடமாகாண சபை பேரவை க்கட்டடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் 38 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்களே கலந்து கொண்டனர்.
 
இக் கலந்துரையாடலில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் , எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா உறுப்பினர்களான பா.கஜதீபன் து.ரவிகரன் , வை.தவநாதன் , க.சிவநேசன் , இ. இந்திரராஜா , கே.சயந்தன் , விந்தன் கனகரட்னம் , பி.நடராஜா  , அ. பரம்சோதி , சு.பசுபதிப்பிள்ளை சி.அகிலதாஸ்,  ப.அரியரட்ணம் , எம்.தியாகராஜா ஆகியோரே கலந்து கொண்டனர்.
 
 யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 உறுப்பினர்களில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் உட்பட ஒன்பது உறுப்பினர்கள் சமூகம் அளிக்காத நிலையில், 7 உறுப்பினர்களும் , கிளிநொச்சியை பிரதிநிதித்துவ படுத்தும் நான்கு உறுப்பினர்களில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவ தவிர ஏனைய 3 உறுப்பினர்களும்,  
 
முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநித்துவ படுத்தும் 5 உறுப்பினர்களில் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உட்பட மூன்று உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில் இருவர் சமூகம் அளித்து இருந்தனர்.
 
வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் 7 உறுப்பினர்களில் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட நால்வர்  சமூகமளிக்காத நிலையில் மூவர் சமூகம் அளித்து இருந்தனர். 
 
மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் ஆறு உறுப்பினர்களில்  மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ் வரன் உட்பட ஆறு உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை.
 
முதலமைச்சர், அமைச்சர்கள் தன்னிச்சையாக முடிவு.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார்கள் என மாகாண சபை உறுப்பினர்கள் குற்றசாட்டினை முன் வைத்துள்ளார்கள்.
 
தமிழக உறவுகளுக்கு உதவுவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (இன்றையதினம்) நடாத்த உள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் அழைப்பு விடுத்து இருந்தார்.
 
அவைத்தலைவர் அழைப்பு விடுத்து சில மணி நேரத்தில் வடமாகாண  முதலமைச்சர் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அனுதாபம் தெரிவித்து அறிக்கை விட்டதுடன் சனிக்கிழமை (நேற்றைய தினம்) அமைச்சரவை கூட்டம் நாடத்தப்பட்டு அதில் தமிழக மக்களுக்கு உதவுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
 
அதன் பிரகாரம் சனிக்கிழமை (நேற்றைய தினம்) முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. 
 
அக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பில் இதுவரை ஊடகங்களுக்கோ தமக்கோ தெரிவிக்கப்படவில்லை அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல் படும் போது எதற்காக நாம் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இங்கு கூடி முடிவெடுக்க வேண்டும் என கோப ஆவேசமாக கலந்துரையாடளின் போது  கேள்விகளை எழுப்பி இருந்தனர். 
 
இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் முதலமைச்சர் மற்றும் நான்கு அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
எங்களுக்கு உதவி வேண்டாம்.
 
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து , இந்திய துணை தூதரகத்தை தொடர்பு கொண்டு எந்த வகையிலான உதவிகள் தேவை என கேட்கப்பட்டதாகவும், அதன் போது துணை தூதரகத்தால் உதவி பொருட்கள் எவையும் தேவையில்லை என கூறப்பட்டதாகவும் , 
 
நிதி உதவியையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் குழாமால் கேட்கப்பட்ட போது அது தொடர்பில் பரிசீலிப்பதாக துணை தூதரகத்தினால் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந் நிலையிலையே வடமாகாண சபையினால் நிதியம் ஆரம்பிக்கபட்டு அதில் சேரும் நிதியினை எதிர்வரும் 21ம் திகதி இந்திய துணை தூதரகத்தில் கையளிப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக உறவுகளுக்கு உதவுவது தொடர்பான வடமாகாண சபை கூட்டத்திற்கு சமூகம் தாரதவர்கள்

யாழ்ப்பாணம்
சி.வி.விக்னேஸ்வரன்
பொ.ஐங்கரநேசன் 
எம்.கே.சிவாஜிலிங்கம்
அனந்தி சசிதரன்
இமானுவேல் ஆர்னல்ட்
க.தர்மலிங்கம்
க.சர்வேஸ்வரன்
வே.சிவயோகன்
ச.சுகிர்தன்
வவுனியா
அன்டனி ஜெகநாதன்
ஜாஸ்தீன் ஜவாகர்
வ.கமலேஸ்வரன்

கிளிநொச்சி
த.குருகுலராஜா

வவுனியா

பா.சத்தியலிங்கம்
த.லிங்கநாதன்
அ.ஜெயதிலக்க
தர்மபால செனவிரத்ன

மன்னார்
பா.டெனிஸ்வரன்
எஸ்.குணசீலன்
அயூப் அஸ்மின்
எஸ்.சிராய்வா
எம்.ரஜீஸ்
அ.ரிப்கான்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126611/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக நிதியம் ஒன்றை ஆரம்பிக்க வடக்கு மாகாணசபை தீர்மானித்துள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டது. எனினும் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம் உட்பட 23 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக நிதியம் ஒன்றை ஆரம்பிக்க வடக்கு மாகாணசபை தீர்மானித்துள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டது. எனினும் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம் உட்பட 23 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

   

கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் பெய்த கடும் மழையால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் சென்னையில் மாத்திரம் சுமார் 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தன. 200 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்வாறு பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக வடக்கு மாகாண சபை அவசர கலந்துரையாடல் ஒன்றை இன்று காலை 10 மணிக்கு நடத்தியது.

இந்தக் கலந்துரையாடலில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்த, சொத்து அழிவுகளை சந்தித்த தமிழக மக்களுக்கு வடக்கு மாகாண மக்கள், சபையின் சார்பில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிதியம் ஒன்றை உருவாக்கி இதற்கான உதவிகளை மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள், வங்கித் துறையினர், வர்த்தக துறையினர், தனியார் துறையினர், கூட்டுறவு துறையினர் என பல்வேறு துறை சார்ந்தவர்களின் பங்களிப்புடன் எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் கையளிப்பது என முடிவு எட்டப்பட்டது.

இந்த நிதியத்துக்கான வங்கிக் கணக்கு நாளை ஆரம்பிக்கப்பட்டு ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் இந்தக் கணக்கு இலக்கத்திற்கு நேரடியாகவோ பேரவை ஊடாகவோ விரும்பியவர்கள் பங்களிப்பினை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வழங்கலாம். இதேசமயம் இந்தக் கணக்கு இலக்கத்துக்கு புலம்பெயர் உறவுகளும் தங்களாலான உதவிகளை செய்யுமாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் 38 மாகாண சபை உறுப்பினர்களில் சீ.வீ.கே.சிவஞானம், பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், கே.சயந்தன், எஸ்.தவராசா, சி.அகிலதாஸ், பி.அரியரட்ணம், வை.தவநாதன், எஸ்.பசுபதிபிள்ளை, க.சிவநேசன், து.ரவிகரன், எம்.தியாகராசா, ஆர்.இந்திரராஜா, பி.நடராஜ், அ.பரஞ்சோதி ஆகிய 15 பேரே கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன், த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட ஏனையோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

npc-aid-fund-061215-seithy%20(1).JPG

 

 

npc-aid-fund-061215-seithy%20(2).JPG

 

http://www.seithy.com/breifNews.php?newsID=146403&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.