Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானக் கொள்வனவு; இலங்கைக்கு இந்தியா அழுத்தம்

Featured Replies

விமானக் கொள்வனவு; இலங்கைக்கு இந்தியா அழுத்தம்
 
விமானக் கொள்வனவு; இலங்கைக்கு இந்தியா அழுத்தம்
பாகிஸ்தானுடன் போர் விமானக் கொள்வனவில் ஈடுபடுவது தொடர்பில் இலங்கை, இந்தியாவிடம் இருந்து அதிகமான அழுத்தத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தானின் ஜே.எப் 17 ரக போர் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை ஏற்கனவே உடன்பாட்டை எட்டியுள்ளது.முன்னாள் விமானப்படை தளபதி ஜெயலத் வீரக்கொடி பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக இருந்தபோது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.ஒற்றை இயந்திரம் பன்மைத்துவ போரியல் தன்மையில் சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் இந்த விமானத்தை தயாரித்துள்ளது. இதன் பெறுமதி 500 மில்லியன் டொலர்களாகும்.
 
எனினும், இதற்கு பதிலாக தம்மிடம் உள்ள போர் விமானங்களை கொள்வனவு செய்யுமாறு இந்தியா, இலங்கையை வலியுறுத்திவருகிறது.
 
இந்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டொவால், குறித்த பாகிஸ்தானிய விமானக் கொள்வனவு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணிலிடமும் இந்தியாவின் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
 
இதேவேளை, இந்தியாவிடம் இருந்து போர்க்கப்பல் ஒன்றை கொள்வனவு செய்ய இலங்கை விருப்பத்தை வெளியிட்டுள்ளது.எவ்வாறாயினும் இலங்கை, பாகிஸ்தானின் விமானத்தை கொள்வனவு செய்தால், அது இந்திய பாகிஸ்தான் உறவில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்
பாகிஸ்தானின் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை தீர்மானிக்குமானால் அது மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரித்துள்ளார். ஜேஎவ் போர்விமானங்கள் பத்தினை கொள்வனவு செய்வது தொடர்பாக இலங்கை விமானப்படைக்கும் பாகிஸ்தான் விமானப்படைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு குறித்து இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக முக்கிய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை தீர்மானிக்குமானால் அது மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரித்துள்ளார். ஜேஎவ் போர்விமானங்கள் பத்தினை கொள்வனவு செய்வது தொடர்பாக இலங்கை விமானப்படைக்கும் பாகிஸ்தான் விமானப்படைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாடு குறித்து இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக முக்கிய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

   

முன்னாள் விமானப்படை தளபதி ஜயலத் வீரக்கொடி பாகிஸ்தானின் தூதுவராக பணியாற்றிய காலப்பகுதியில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரியவருகின்றது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்டுத்தயாரிப்பான இந்த வகை விமானங்கள் வான்வெளி கண்காணிப்பு மற்றும் தாக்குதல், விமானங்களை இடைமறித்தல் போன்றவற்றை சிறப்பாக மேற்கொள்ள கூடியவை. இதேவேளை இந்த உடன்படிக்கை குறித்து இந்திய தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இந்தியாவின் கரிசனைகளை பிரதமரிற்கும் ஜனாதிபதிக்கும் நேரடியாக தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர் இந்த விடயம் குறித்த இந்தியாவின் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கை தீர்மானிக்குமானால் அது மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை இலங்கை இந்தியாவிடமிருந்து மூன்று கடற்படை கப்பல்களை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. எனினும் இதனை நிராகரித்துள்ள இந்தியா போர்விமானங்கள் குறித்த தனது உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளது. இதன் பின்னர் இலங்கை பாதுகாப்பு அமைச்சு இந்தியாவிடமிருந்து அதே ரகவிமானங்களை கொள்வனவு செய்வதற்கு அல்லது அல்லது வேறு விமானங்களை கொள்வனவு செய்ய தயார் என அறிவித்தள்ளது.

எனினும் இது குறித்து தெளிவான பதிலை அளிக்காத இந்தியா விமானங்களை கொள்வனவு செய்வதற்கான கடனுதவியை வழங்க தான் தயார் எனவும் எனினும் இலங்கை பாகிஸ்தானை தவிரவேறு எந்த நாட்டிலிருந்தும் விமானங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=146392&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.