Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டநபர் தமிழகத்தில் உயிருடன் இருப்பதாக தகவல்?

Featured Replies

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டநபர் தமிழகத்தில் உயிருடன் இருப்பதாக தகவல்?

 

 

 



இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்பட்ட சென்னை சாரதியொருவர் தமிழகத்தில் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

41 வயதான பூமிதுரை என்ற சென்னை டாக்ஸி சாரதியொருவர், அண்மையில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் உயிரிழந்த அவரது சடலம் திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்டதாகவும் இலங்கை இந்திய ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த நபரின் உயிரிழப்பினை உறுதி செய்வதற்கான ஆதாரமாக, சென்னை சாரதிகள் சங்கத்தில் வழங்கப்படும் விசேட அடையாள அட்டை காண்பிக்கப்பட்டது.

எனினும், குறித்த நபர் தற்போது உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட சடலத்தின் ஆள் அடையாளம் குறித்து தமிழகத்தின் க்யூ பிரிபு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த நபருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்குமா என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் சென்னை வெள்ளத்தில் உயிரிழக்கவில்லை எனவும், ராமேஸ்வரம் பகுதியில் இந்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சடலம் இலங்கைக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் தமிழக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

டாக்ஸி சாரதிகள் சங்கத்தில் தாம் அடையாள அட்டைக்காக விண்ணப்பம் செய்த போதிலும் தமக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை என பூமிதுரை தெரிவித்துள்ளார்.

தாம் உயிரிழந்து விட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சி அளித்தாகவும் தமது பெயரிலான அடையாள அட்டை ஒன்றை வேறும் ஒர் நபர் எவ்வாறு நீண்ட காலமாக பயன்படுத்தினார் என்பது புரியவில்லை எனவும் பூமிதுரை தெரிவித்துள்ளார்.

திருகோணமலை  கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலமொன்றுடன் காணப்பட்ட வாகனசாரதி அனுமதிப்பத்திரத்திற்கு சொந்தமான சென்னையை சேர்ந்த பூமிதுரை உயிருடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 கோயம்புத்தூரின் பூசரிபாளையத்தை சேர்ந்த 41 வயதான தனியார் பஸ் சாரதியான இவர் உயிருடன் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து திருகோணமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பான மர்மம் அதிகரித்துள்ளது.


தமிழ்நாட்டில் தீவிரவாதநடவடிக்கைகளை கண்காணித்து வரும் கியு பிரிவு பொலிஸார், இந்த சடலத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.அந்த சடலம் விடுதலைப்புலிகள்இயக்க உறுப்பினர் ஒருவருடையதாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


குறிப்பிட்ட நபர் நிச்சயமாக சென்னை வெள்த்தில் பலியாகவில்லை,அவர் அங்கிருந்து அடித்து செல்லப்படவுமில்லை, என தெரிவித்துள்ள கியு பிரிவு அதிகாரியொருவர் அவர்மீனவர் இல்லை என்பதை அறிந்துள்ளோம் ஆனால் அவர் இராமேஸ்வரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம்,கடலில் அவர் இலங்கைக்கு அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் நாங்கள் இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.


தன்னை பற்றிய தகவல்கள் பரவுவதை அறிந்ததும்,பூமிதுரை டிசம்பர் 7 ம்திகதி இரவு சென்னைபொலிஸ் ஆணையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்,தான் உயிருடன் உள்ளதை தெரிவித்துள்ளார்.முன்னதாக பொலிஸார் அந்த வாகனசாரதி அனுமதிப்பத்திரத்தில் காணப்பட்ட சூளைமேடு முகவரிற்கு சென்றபோதிலும் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.


இதேவளை மாநிலஅரசாங்கம் இந்த விடயத்தில் இராஜதந்திரரீதியில் தொடர்புகொள்ளாத பட்சத்தில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என கியு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலத்தை இலங்கை கடற்படையினர் மருத்துவமனையில் ஓப்படைத்துள்ளனர்.


இதேவேளை இரண்டு வருடங்களிற்கு முன்னர் தான் சென்னை டாக்சி சங்கத்தின் அடையாள அட்டையொன்றிற்கு விண்ணப்பித்த போதிலும் தனக்கு இதுவரை அது கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்,குறிப்பிட்ட சங்கம் திமுகவின் கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்சங்கமொன்றின் கீழ செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


அந்த நபர் யார் என்பதும் அவரிடம் எனது அடையாள அட்டை எவ்வாறுகிடைத்தது என்பதும் எனக்கு தெரியாது,அந்த சங்கம் புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளமை எனக்கு தெரியும்,நான் விலகிய பின்னர் எனது அடையாள அட்டையை வேறு ஒருவரிற்கு அவர்கள் வழங்கியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட சங்கத்தின் தலைவரும் தாங்கள் புதிய அடையாள அட்டையை வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


நான்எனது அடையாளஅட்டை உடல் ஓன்றிற்கு அருகில் காணப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்,அந்த அமைப்பு தற்போது செயற்படாததால் அந்த அடையாளஅட்டைக்கு பெறுமதி எதுவும் இல்லை,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126772/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அறிவதற்குமுன் எழும் சந்தேகங்கள் அனைத்தையும் புலிகளாகப் பார்ப்பது! சிறீலங்கனுக்கும், இந்தியனுக்கும் கைவந்த கலையாகிவிட்டது!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.