Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்கு வழங்கிய மற்றொரு வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டார் மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு வழங்கிய மற்றொரு வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டார் மைத்திரிD

sampoor-ms (3)யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரான அங்கஜன் இராமநாதனை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார்.

அதிபர் செயலகத்தில் வைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனக் கடிதத்தை, நேற்று வழங்கினார்.

ஏற்கனவே, யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக, பிரதிஅமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சிறிலங்கா அதிபர் நியமித்திருந்தார்.

யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கூடுதல் ஆசனங்களை வென்ற நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர பதவி, கூட்டமைப்புக்கு வழங்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

எனினும், அந்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் காப்பாற்றத் தவறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய போது, யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவி, கூட்டமைப்புக்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டதாக விசனம் வெளியிட்டிருந்தார்.

இதில், ஆறு வாக்குகளால் வெற்றி பெற்ற ஐதேக உறுப்பினருக்கு, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில், யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பின்னர், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட அங்கஜன் இராமநாதனுக்கு இணைத்தலைவர் பதவியை சிறிலங்கா அதிபர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/12/11/news/11930

எந்த ஒரு அளுத்தமும் நல்லாட்சி அரசு மீது குடுக்க முடியாத கூட்டமைப்பின் நிலைதான் இங்கை வெளிச்சமாகிறது...    இரணிலின் நரித்தனத்தில் கூட்டமைப்பு எச்சரிக்கையோடும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது... 

இதில் 2016ல்  தீர்வு கோசம் என்ன ஆகுமோ....??  கூட்டமைப்பு பலமாக இருந்தாலே ஆச்சரியம் தான்...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, காத்து said:

ரணில்  வெற்றியடைவார்

கூட்டமைப்பு தமிழரசுக்கட்சியாக சுருங்கும்.....

1 minute ago, விசுகு said:

ரணில்  வெற்றியடைவார்

கூட்டமைப்பு தமிழரசுக்கட்சியாக சுருங்கும்.....

அதுக்காக தானே இரணில்  புலம்பெயர் அமைப்புக்களை தடை நீக்கி விட்டவர்... ஊரிலை வந்து அரசியல் செய்ய சொல்லி...  அதுக்காக புலம்பெயர்ந்த முக்கியமாக இங்கிலாந்து குடிகளுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்கவும் ஏற்ப்பாடுகளும் பேச்சுக்களும் நடப்பதாக கேள்வி... ( உண்மை தன்னை இன்னும் சரிவர தெரியவில்லை) ...

இது உண்மையாக இருக்கும் பட்ச்சத்தில்  தமிழருக்கு மிக ஆபத்தான நிலையை தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...  

தமிழர் பால் அக்கறையாக போராட வந்த அமைப்புகள் இந்தியாவுக்கு யார் அதிகமாக விசுவாசம் உள்ளவர்கள் என்பதை காட்ட முயண்ற வரலாறுகள் தமிழினம் மறந்து இருக்காது,...

புலம்  பெயர் மக்களின் பலம் தெரியாமல் தமிழர்கள்

ஆனால் சிங்களம் தாயகத்தைவிட புலம் பெயர் மக்களையே பலவாறும் கவர முயல்வதையும்

சலுகைகளை வழங்குவதையும்

அரவணைப்பதையும்  வைத்து பார்க்கும் போது

சிங்களம் அதன் குறியில் சரியாகவே முன்னேறுவது புரியும்

10 minutes ago, விசுகு said:

புலம்  பெயர் மக்களின் பலம் தெரியாமல் தமிழர்கள்

ஆனால் சிங்களம் தாயகத்தைவிட புலம் பெயர் மக்களையே பலவாறும் கவர முயல்வதையும்

சலுகைகளை வழங்குவதையும்

அரவணைப்பதையும்  வைத்து பார்க்கும் போது

சிங்களம் அதன் குறியில் சரியாகவே முன்னேறுவது புரியும்

அரசியல் அறிவு இல்லாத புலிகளால் கட்டுக்கு வைத்து இருக்க முடிந்த அனைத்து தரப்பையும்  கூட்டமைப்பால் தங்களின் தலைமைக்கு கீழ் கொண்டு வர முடியாத கையறு நிலை தான் நீடிக்கிறது... இதை அரசியல் சாணக்கியம் எண்று சிலாகிக்கும் ஆக்களை நினைக்கும் போது கடுப்பாக வரும்.. 

இருக்கும் புலிகள் ஆதரவு அமைப்புகளை சேறடிப்பு மூலம் அழித்து விட்டால் தங்களுக்கு சார்பான நிலையும் அதோடு சார்பான அமைப்புக்களும் தானாக அமையும் எண்று  நினைப்பது தான் உள்ளதில் அதிக கேவலம்..

Edited by காத்து
இலக்கணம்... விளக்க இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, காத்து said:

அரசியல் அறிவு இல்லாத புலிகளால் கட்டுக்கு வைத்து இருக்க முடிந்த அனைத்து தரப்பையும்  கூட்டமைப்பால் தங்களின் தலைமைக்கு கீழ் கொண்டு வர முடியாத கையறு நிலை தான் நீடிக்கிறது... இதை அரசியல் சாணக்கியம் எண்று சிலாகிக்கும் ஆக்களை நினைக்கும் போது கடுப்பாக வரும்.. 

இருக்கும் புலிகள் ஆதரவு அமைப்புகளை சேறடிப்பு மூலம் அழித்து விட்டால் தங்களுக்கு சார்பான நிலையும் அமைப்புக்களும் தானாக அமையும் எண்று  நினைப்பது தான் உள்ளதில் அதிக கேவலம்..

இதெல்லாம்  வெறும் கானல் நீர்

தியாகங்களால் கட்டப்பட்டவை அவை......

1 minute ago, விசுகு said:

இதெல்லாம்  வெறும் கானல் நீர்

தியாகங்களால் கட்டப்பட்டவை அவை......

தமிழர்கள் தியாகங்களை பெரிதாக மதிப்பதில்லை விசுகண்ணை...  காரணம் எல்லா தமிழனும் ஏதோ ஒருவகையில் தியாகம் செய்து இருக்கிறான்...  இதில் யாருடையது பெரியது சிறியது என்பது தான் பலரின் வாதமாக இருக்கிறது... 

செயல் திறண் மீதான நம்பிக்கையே எவரையும் நிலை நிறுத்துகிறது பின் தொடர செய்கிறது...  உதாரணத்துக்கு  என்னை விட நீங்கள் திறமையானவர் என்பதை எனக்கு உணர்த்தும் சமயமே நான் உங்களை தலைமையாக ஏற்று கொள்கிறேன்.. 

இருந்த அமைப்புக்களை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வெளியேற்றவும் மீண்டும் காலூண்ற விடாமல் செய்ய  புலிகளும் இப்படி மிகைப்படுத்த பட்ட செய்திகளை சொன்ன வரலாறுகள் உள்ளன...   ஆனால்  முதலில் புலிகள் தங்களை நிலை நிறுத்திய பின்னர்  செய்திகளை பரவ விட்டார்கள்... 

இங்கை இவர்கள் தலைகீழாக செய்கிறார்கள்... அதனால் தான் வெற்றி பெற முடிவதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, காத்து said:

செயல் என்பது எவருக்கும் கிடையாது

எல்லா வானத்தில் இருந்து கொட்டுமா??

காலம் பதில் தரும்

அதற்குள்........??

பாவம் புதின பலகை ,

அதைவிட பாவம் அந்த செய்தியை வாசித்து துள்ளி குதிப்பவர்கள்

சம்பந்தர் இன்று தெளிவாக இதற்கு பதில் கொடுதிருக்கின்றார்.உந்த அபிவிருத்தி சபை தலைவர் பதவி என்றும் எமக்கு தேவையில்லை நாங்கள் கேட்கவும் இல்லை .

நாங்கள் கேட்பது  அதிகாரபகிர்வு இடைகால அபிவிருத்தி அல்ல ..

எட்டாக்கனி புளீக்கும் என்பது தலைவர் சம்பந்தர் நிலைப்பாடு போலும்,..     தீர்வை விட தமிழ் மக்களுக்கு அவசியமானது அபிவிருத்தி... தமிழ் மக்களின் நிலையை மாற செய்ய கூடியதும் அதுவே...  

மாகானசபையை கையில் வைத்து இருக்கும் கூட்டமைப்பை பொம்மையாக்கி விட்டு நடுவெண் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் அபிவிருத்தியை வைத்து இருப்பது இலங்கை மாகானசபை முறைமையையே  கேலிக்குள்ளாக்குவது எண்று சம்பந்தருக்கு கட்டாயம் தெரிந்து இருக்கும்... 

ஒருவேளை வடக்கின் அபிவிருத்தியின் தலைமைத்துவம் கூட்டமைப்புக்கு கிடைத்து இருந்தால்  விக்னேஸ்வரனை பலப்படுத்துவதாக அமைந்துவிடும் எண்டு சம்பந்தர் பயப்படுகிறாரோ என்னவோ...

எதுவானாலும் அரசியல் சாணக்கியர்கள் செய்தால் சரியாக தான் இருக்கும்.. 

Edited by காத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.