Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றுத் தலைமை குறித்து இந்தியாவும் பதறுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
india_flag.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக புதிய ஒரு கட்சி உருவெடுத்து விடுமோ என்ற ஏக்கம் இந்தியாவையும் தொட்டு விட்டமை தெரிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது இந்தியாவின் கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகின்றமை தெரிந்ததே.

இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எதுவும் செய்ய முடியாதென்ற முடிவில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மிகவும் உறுதியாக உள்ளார்.

அதாவது, இந்தியாவை மீறி எந்த நாட்டாலும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்துவிட முடியாது என்பதில் இரா.சம்பந்தர் கொண்டுள்ள உறுதிப்பாட்டில் நியாயம் இல்லாமலும் இல்லை.

அதற்காக எங்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்தியா சொல்வதாகவே இருக்கும் என்ற கருத்தை எச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுவிட முடியாது.

ஆக, எங்களுக்கான தீர்வு எது என்பதை நாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இந்தியாவின் உதவியைப் பெற்றுக் கொள்வது பொருத்துடையது.

அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நடைமுறைக்குச் சாத்தியமாக அமைவது அவசியம் என்பதையும் எவரும் மறந்துவிடலாகாது.

இந்நிலையில் தமிழர்களின் உரிமை என்ற விடயத்தில் இந்தியாவின் வகிபங்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையாது என்று வாதிடுவோரும் உளர்.

எதுவாயினும் இந்தியாவின் ஒத்துழைப்புடனும் ஆசியுடனும் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைய நினைப்பதே ஒரேவழி என்ற நிலைமை தவிர்க்க முடியாததாகி உள்ளது.

அதற்காக எங்களுக்கு எந்த வகையிலும் உதவாத தீர்வுகளை ஏற்றுக் கொள்ளுவதென்பது, நோய் தீர்க்காத மருந்தை தொடர்ந்து உட்கொள்வதற்கு சமனானதாகும் என்பதையும் கூறித்தானாக வேண்டும்

இவை ஒருபுறம் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள ஒற்றுமையீனங்கள் உடனடியாக சரிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகத் தீவிரமாக இருப்பது தெரிகிறது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சிங்ஹா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வடக்கின் முதல் வர் விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்தார்.

இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை என்பதை அவர் வலியுறுத்தியிருந்தமை தெரிந்ததே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை என்பதற்கு ஊடாக வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ் வரன் அவர்களையும் கூட்டமைப்பின் தலைமையையும் ஒரு சமரசத்துக்குக் கொண்டு வருவது சிங்ஹாவின் யாழ்ப்பாண விஜயத்துக்கான நோக்கத்தில் ஒன்று எனக் கூறிக் கொள்ளலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கின் முதல்வருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருக்கும் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் இந்தியாவின் கட்டுப்பாட்டை மீறி புதியதொரு பரிமாணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இத்தகையதொரு சந்தர்ப்பம் 13வது திருத்தச் சட்டமூலத்தை அமுல்படுத்துதல் என்ற இந்தியாவின் நினைப்பை பாதிக்கும் என்று இந்திய இராஜதந்திரம் கருதுகின்றது.

இந்நிலையிலேயே இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்ஹா வடக்கின் முதல்வரைச் சந்தித்து கூட்டமைப்புக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முற்பட்டார் என்று கூறிக்கொள்ளலாம்.

http://www.tamilwin.com/show-RUmtzCSXSWls4A.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பங்கு இல்லாமல் ஈழத்தமிழர்களுக்கு ஒரு தீர்வு வந்துவிடாது. இங்கு இந்தியா என்பது வெறும் நிலமல்ல. மாறாக, அந்த நிலத்தில் வாழக்கூடிய 125 கோடி மக்களின் அரசியல் பலத்தை கைப்பற்றும் அரசியல்வாதிகளை பின்னி நின்று இயக்கிவாறு கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள்.

இந்திய அரசியல் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாமல் ஈழத்தில் நிரந்தர தீர்வு என்பது சாத்தியமல்ல. உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தமிழகத்தின் பங்கு இதில் மிக முக்கியமானது.

indian-states-gdp.jpg

தமிழகத்தின் அரசியல் அதிகாரம் என்பது கடந்த 50 ஆண்டுகாலமாக தெலுங்கர்கள் (கலைஞர் குடும்பம்), மலையாளிகள் (எம்.ஜி.ஆர்.) மற்றும் கன்னடர்கள் (ஜெயா) வசம் இருந்துவிட்டதால் இந்திய அளவிலான கொள்கை முடிவுகளில் தமிழகம் எந்தப் பங்களிப்பினையும் செய்ய முடியவில்லை. காரணம், தமிழரல்லாத தலைமைகளுக்கு இவை பற்றிய அக்கறை எதுவும் இருக்கவில்லை. எம்.ஜி.ஆர். மட்டும் சற்று விதிவிலக்கானவர். அவர் இலங்கையில் பிறந்தவர் என்கிற ஒன்று காரணமாக இருக்கலாம்.

முடிவாக, ஈழத்தில் உள்ள அரசியல் தலைமை என்பது காத்திருந்து கோட்டை விடாமல், முன்கூட்டியே தமிழகத்தின் தமிழ் தேசிய அரசியலுடன் இணைந்து பயணிக்க ஆரம்பிக்க வேண்டும். அது புது டில்லியின் அழுத்தங்களுக்கு உடனடியாக அடிபணியாமல் பயணிக்க உதவிகரமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே பதட்டப்பட்டுக்கொன்டு இராமல் அனைவரும் ஏற்க கூடிய தீர்வு ஒன்றுக்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து பிரச்சனையை முடியுங்கோப்பா.(ஒரு கற்ப்பனைக்கு சிஙகளவர் தமிழருக்கு தீர்வை கொடுத்து இலங்கையில் அமைதி ஏற்படுவதை இந்தியா விரும்பாத)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

இப்படியே பதட்டப்பட்டுக்கொன்டு இராமல் அனைவரும் ஏற்க கூடிய தீர்வு ஒன்றுக்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து பிரச்சனையை முடியுங்கோப்பா.(ஒரு கற்ப்பனைக்கு சிஙகளவர் தமிழருக்கு தீர்வை கொடுத்து இலங்கையில் அமைதி ஏற்படுவதை இந்தியா விரும்பாத)

நிச்சயமாக விரும்பாது ....... சிறிலங்காவில் தொடர்ந்து பிரச்சனை இருப்பதையே இந்தியா விரும்பியது விரும்புகின்றது அதனை வைத்து பஞ்சாயத்து செய்து நாட்டமையாக இருக்கவே விரும்புகின்றது கிந்தியா. 

Edited by தமிழரசு

3 minutes ago, தமிழரசு said:

நிச்சயமாக விரும்பாது ....... சிறிலங்காவில் தொடர்ந்து பிரச்சனை இருப்பதையே இந்தியா விரும்பியது விரும்புகின்றது அதனை வைத்து பஞ்சாயத்து செய்து நாட்டமையாக இருக்கவே விரும்புகின்றது கிந்தியா. 

அப்ப ஏன் ராசா  எவ்வளோ கஷ்டப்பட்டு எத்னனையோ பேரின் உழைப்பில் ஒரு  ஒப்பந்தத்தை இரு தரப்புகளும் ஓரளவு திருப்தி படக் கூடியதாக  உருவாக்கினார்கள் .அவர்களுக்கும் அதில் ஆதாயம் இருந்ததும் உண்மை .

சும்மா உடைந்த ரெக்கோட்டை எவ்வளவு காலத்திற்கு போட்டுக்கொண்டு இருக்கபோகின்றிர்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, arjun said:

அப்ப ஏன் ராசா  எவ்வளோ கஷ்டப்பட்டு எத்னனையோ பேரின் உழைப்பில் ஒரு  ஒப்பந்தத்தை இரு தரப்புகளும் ஓரளவு திருப்தி படக் கூடியதாக  உருவாக்கினார்கள் .அவர்களுக்கும் அதில் ஆதாயம் இருந்ததும் உண்மை .

சும்மா உடைந்த ரெக்கோட்டை எவ்வளவு காலத்திற்கு போட்டுக்கொண்டு இருக்கபோகின்றிர்கள் 

சிறிலங்காவில் தொடர்ந்து பிரச்சனை இருக்கவேண்டும் என்று இந்தியா விரும்பியதனால்தான் அன்று பல தமிழ் இயக்கங்களை உருவாக்கியது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். 
ஒப்பந்தம் போட்டது புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட இராணுவச்சமநிலை மாற்றம்தான் காரணம் இதில் விடுதலை புலிகள் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை அதனை திணித்தார்கள் என்பது அறிந்த உண்மை.

அர்ஜுன் உங்களவுக்கு எழுத்து ஆற்றல் என்னிடம் இல்லை என்பதினை ஏற்றுக்கொள்கின்றேன் அதற்காக உண்மையை மறைக்க முயல்வது நியாயமாகுமா ? 

இந்தியா விடுதலை இயக்கங்களை உருவாக்கியது என்று சொன்னால்  எமக்கு தான் வெட்ககேடு ஏதோ நாங்கள் விடுதலை வேட்கை இல்லாதவர்கள் என்பதுபோலாகிவிடும் .

தமிழ் இயக்கங்களை இந்தியா உருவாக்கவில்லை .தலைமறைவாக இருக்க இலங்கையில் உருவாகிய இயக்கங்கள் இந்தியா சென்றன .புலிகளின் வரலாற்றை வாசித்தாலே அது விளங்கும் .எழுபதுகளிலேயே வவுனியா ,மன்னார் காடுகளில் பண்ணைகளை உருவாக்கி பயிற்சி தொடங்கிவிட்டார்கள் .

இலங்கை -விடுதலை இயக்கங்களின் பேச்சுவார்த்தை திம்பு பேச்சுவார்த்தையிலேயே தொடங்கிவிட்டது .எமது இயக்கங்களுக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் அது .ஒரு மூன்றாம் நாட்டில் தனி விமானத்தில் இயக்க பிரதிநிதிகள் இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைக்கு தாமே ஒரு தீர்வு பொதியை தயாரித்துக்கொண்டு போன பேச்சுவார்த்தை அது .அதன் தொடர்சியாக பல பேச்சுவார்த்தைகள் நடந்தது இறுதியாக வந்ததுதான் இலங்கை -இந்திய ஒப்பந்தம் .புலிகள் இதை எதிர்த்தார்கள் என்பது உண்மை ஆனால் ஆரம்பத்தில் சிங்கள அரசுகளை நம்பமுடியாது நீங்களே எங்களுக்காக அவர்களுடன் ஒப்பந்தத்தை செய்யுங்கள் என்ற உறுதி இந்தியாவிடம் கொடுக்கப்பட்டது .

இந்தியா இலங்கையை இப்படி அடிபணிய வைத்து ஒப்பந்தைதை கொண்டுவரும் என்று பிரபாகரன் நினைக்கவில்லை எனவே ஒப்பந்தம் கையெழுத்து இடப்போகிறார்கள் என்றவுடன் அதை குழப்பும் செயல்களில் இறங்கினார் .பின்னர் நடந்தது எல்லோருக்கும் தெரியும் .

இப்போ அந்த ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்கள் கிடைத்தாலே பெரியவிடயம்  என்றுதான் எல்லோரும் சொல்லுன்றார்கள் 

என்ன நடந்தது என்று தெரியாமல் புலிகளின் ஆய்வாளர்கள் எழுதும் பொய் மூட்டைகளைத்தான் இன்றும் எம்மவர் பலர் காவித்திரிகின்றார்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மட்டடும் இல்லை எல்லா நாடுகளும் இலங்கை அரசை தமது வழிக்கு கொண்டு வரவே எமது பிரச்சனைகளை பயன்படுத்தினார்கள்..லங்கை அரசு அவர்களுடன் ஒத்துப்போனால் எங்களை கை விட்டு விடுவார்கள்.இது மகிந்த இருந்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் என்பவர்க்கும் பொருந்தும்.இப்போதைய அவசர தேவை மக்களின் இருப்பை உறிதிப்படுத்துவதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.