Jump to content

இறால் பிரியாணி

Recommended Posts

இறால் பிரியாணி

biriyani.jpg

தேவையானவை:
 
  • பாஸ்மதி அரிசி - அரை கிலோ
  • இறால் - கால் கிலோ
  • வெங்காயம் - கால் கிலோ
  • தக்காளி - 3
  • பச்சை மிளகாய் - 4
  • பூண்டு - 10 பற்கள்
  • இஞ்சி - 2 அங்குலத் துண்டுகள்
  • மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி அளவு
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
  • புதினா - ஒரு கைப்பிடி அளவு
  • உப்புத் தூள் - 2 தேக்கரண்டி
  • பட்டை - 2 துண்டுகள்
  • பிரிஞ்சி இலை - 2

செய்முறை: 

முதலில் பாஸ்மதி அரிசி உடன்  பிரிஞ்சி இலை சேர்த்து உதிரி உதிரியாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும். இஞ்சியுடன் பூண்டைச் சேர்த்து அரைத்து வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை தாளித்து, நீளவாட்டில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு கொத்தமல்லித் தழை மற்றும் புதினாவைப் போட்டு நன்கு கிளறவும்.

அத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புத் தூள் சேர்த்துக் கிளறவும்.

மசாலா தொக்கு பதத்திற்கு வந்தவுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறவும்.

பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைக் கொட்டி நன்றாகக் கிளறிவிட்டு இறக்கி வைக்கவும்.

சுவையான இறால் பிரியாணி தயார். இந்த பிரியாணியில் கறிவேப்பிலை சேர்த்திருப்பதால் வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தமாதிரி இருக்கு..இதில் நாலு கசுக்கொட்டையும் முந்திரி வத்தலும் இரண்டு ஏலக்காயும் போட்டால் நல்லா இருக்கும்...!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது வரை ஒரு நாளும் பிரியாணி சரி வந்ததேயில்லை.

Link to comment
Share on other sites

31 minutes ago, ரதி said:

எனக்கு இது வரை ஒரு நாளும் பிரியாணி சரி வந்ததேயில்லை.

எனக்கும் அதே தான் ரதி! 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

எனக்கு இது வரை ஒரு நாளும் பிரியாணி சரி வந்ததேயில்லை.

1 hour ago, மீனா said:

எனக்கும் அதே தான் ரதி! 

எனக்கு எப்பவுமே சரிவரும். நான்தான் வீட்டில் பிரியாணி செய்வது. இப்போது மனைவியும் கற்றுவிட்டா. ஆனால் எனது செய்முறை பழமையானது. அதாவது இறைச்சியை பொரித்து அல்லது குழம்பாக்கி சோறுமேல் வைப்பதில்லை. கலந்து அவித்து செய்துபாருங்கோ நல்லா வரும். செய்முறை கேட்காதீங்கள் அளவு தெரியாது. மனைவிதான் எப்பவும் உப்பு+தூள் போடுவா - மிகுதி நான்.

Link to comment
Share on other sites

43 minutes ago, ஜீவன் சிவா said:

செய்முறையை மட்டும் சொல்லுங்கோ ஜீவன்சிவா... அளவுகள் தெரியாட்டிப் பறுவாயில்லை... உப்பு, தூள் அதுகள் நாங்கள் போடுவம்..

நன்றி :)

இணைப்புக்கு  நன்றி சகோதரம் நவீனன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

எனக்கு எப்பவுமே சரிவரும். நான்தான் வீட்டில் பிரியாணி செய்வது. இப்போது மனைவியும் கற்றுவிட்டா. ஆனால் எனது செய்முறை பழமையானது. அதாவது இறைச்சியை பொரித்து அல்லது குழம்பாக்கி சோறுமேல் வைப்பதில்லை. கலந்து அவித்து செய்துபாருங்கோ நல்லா வரும். செய்முறை கேட்காதீங்கள் அளவு தெரியாது. மனைவிதான் எப்பவும் உப்பு+தூள் போடுவா - மிகுதி நான்.

கோழிப்புக்கை மாதிரி காய்ச்சிப்போட்டு புரியாணியாம்!!!!  அய்யொ...அய்யொ....எங்கை போய் முட்டtw_lol:

Link to comment
Share on other sites

திண்டுக்கல் பிரியாணி

  • பாஸ்மதி அரிசி -4 டம்ளர் (1 கிலோ)
  • கோழி-1 கிலோ
  • தேங்காய் பால்-2 டம்ளர்
  • தண்ணீர்-5 டம்ளர்
  • நாட்டு தக்காளி- 4(நான்கு நான்காக நறுக்கவும்)
  • வெங்காயம்-2
  • சின்ன வெங்காயம் விழுது- 1/2 கப்
  • இஞ்சி,பூடு விழுது-4 ஸ்பூன்
  • புதினா-1 கட்டு
  • கொத்தமல்லி-1 கட்டு
  • பச்சை மிளகாய்-6
  • நெய்- 100 கிராம்
  • தயிர்- 1/2 கப்
  • எலுமிச்சை-3
  • தரமான மிளகாய் தூள்-3 ஸ்பூன்
  • பட்டை,ஏலக்காய்,கிராம்பு(வாசனை தூள்)-1 ஸ்பூன்
  • முந்திரி-10
  • உப்பு-தேவைக்கு
  • வாசனை பொருட்கள்:-
  • பட்டை-1
  • ஏலக்காய்-2
  • கிராம்பு-3
  • பிரிஞ்சி-2
  • அன்னாசி பூ-2
  • சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் வாசனை பொருட்கள் சேர்த்து கிளறவும்.
  • பின் கொத்தமல்லி,புதினா, மிளகாய் சேர்த்து சுருங்கியதும் வெங்காயம் சேர்க்கவும்.
  • பொன்னிறமாக வந்ததும் இஞ்சி,பூடு விழுது மற்றும் வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
  • மிளகாய் தூள் மற்றும் வாசனை தூள் சேர்க்கவும்.
  • தக்காளி சேர்த்து வதங்கியதும் தயிர் சேர்த்து கிளறி பின் கோழியை சேர்க்கவும்.
  • கோழியில் மசாலா ஒட்டும்படி பிரட்டி 5 நிமிடத்தில் தேங்காய் பால், தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • கோழி அரைவேக்காடாக வெந்ததும் கழுவிய அரிசியை சேர்க்கவும்.
  • கால்வாசி தண்ணீர் இருக்கும் போதே எலுமிச்சை சாறு சேர்த்து அனைத்தும் ஒன்று சேர்ந்தார் போல் ஒரு முறை கிளறிவிடவும்.
  • தம்மில் போட, கீழே சூடு காட்டிய தோசைகல்லும் மூடியின் மேல் ஆவி போகாத அளவு கனமான பாத்திரமும் அல்லது தண்ணீர் நிரப்பிய பாத்திரவும் அல்லது நெருப்பு கங்கும் வைத்து சிறுதீயில் 15 நிமிடம் வைக்கவும்.
  • 15 நிமிடங்கள் கழிந்ததும் தீயை அணைத்து தேவைபடும் போது பரிமாறலாம்.

எனது செய்முறை இதனைப் போன்றது. மேலதிகமாக வாசனைப் பொருட்களை அரைத்து தயிருடன் மஞ்சள்தூள் சேர்த்து குழைத்து இறைச்சியில் நன்கு பிரட்டி குளிர்சாதனப் பெட்டியில் 6,7 மணிநேரம் வைப்பேன். அரிசியையும் தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைப்பேன்.

இங்கு முக்கியமானது தண்ணீரின் அளவு - கொஞ்சம் கூடினாலும் குமாரசாமி அண்ணையின் கோழிப்புக்கைதான் வரும். இறைச்சி அரைவாசி அவிந்ததும் வெளியேறிய நீரை வேளியே எடுத்து அளந்து கொள்ளுங்கள். பின்னர் பசுமதி 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு வருமாறு தண்ணீரை சேருங்கள். marinate செய்த இறைச்சியுடன் அரிசி சேர்ந்து அவிவதால் சோற்றின் வாசனை, சுவை தூக்கலாக இருக்கும்.

  http://www.arusuvai.com/tamil/node/16282

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது புரியாணி...!  தேங்காய்ப் பாலும் சேர்ப்பதால் தண்ணீர் அளவைக் கொஞ்சம் குறைக்கலாம் என நினைக்கின்றேன்....!

பி.கு: கன காலத்துக்கு முன் நடந்தது. ஒரு கம்மாலையில் அப்பு ஒருவர் ஒரு அருவாளைச் செப்பனிடக் கொண்டுவந்தார், அப்போது அங்கு முதலாளி இல்லை, வேலை செய்யும் பெடியன் கேட்டான் என்னனை அப்பு என்ன விசயம். இல்லடா தம்பி இந்த அருவாள்மனை மழுங்கிப் போச்சுது திருத்தவேணும் அதுதான் அவர் வரட்டும் என்று பாக்கிறன். இஞ்சகொண்டாப்பு என்டு பொடியன் கேட்க அரை மனத்துடன் குடுக்கிறார். பொடியன் நல்ல வடிவாய் அரிவாளைக் காய்ச்சித் தட்டி அராவிக் குடுத்தான் அவருக்கு எப்பனும் திருப்தி இல்லை, ஒரு இரண்டு ருபாய் குடுத்திட்டு அதை கொண்டுபோக முதலாளியும் தின்னவேலிச் சந்தையில மரக்கறியல் வாங்கிக் கொண்டு வாரார். உடன அப்பு இஞ்சடா மோன இந்த அரிவாள உவன் பொடி தட்டி ராவினது , உது சரியோ என்டு நீரும் ஒருக்காப் பாரன.

முதலாளியும் அதை வாங்கி  ஒரு கண்ணை மூடி லெவல் பார்த்துப் போட்டு , பொடியனைப் பார்த்து டேய் என்னன்டடா செய்தனி என்டு சொல்லிப் போட்டு அந்த அரிவாள பக்கத்தில் கிடந்த கல்லில வைத்து கொண்டுவந்த சுரைக்காயால ரெண்டு குத்துக் குத்தி பின் அண்ணாந்து ஒரு கண்ணைமூடி லெவல் பார்த்து ஆ  இப்பசரியென அப்பு என்டு சொல்லிக் குடுத்தார்.

அப்புவும் நல்லகாலமடா சரியான நேரத்தில நீ வந்திட்டாய் என்டு கொட்டப் பெட்டில இருந்து ரண்டு ருபாயை முதலாளிட்டக் குடுத்திட்டு திருப்ப்தியுடன் போனார்.

பிரியாணிக்கு நானும் ஒரு கருத்துச் சொல்லாட்டில் அது அவ்வளவு நல்லாயிருக்காது...!  :)

Link to comment
Share on other sites

20 hours ago, ஜீவன் சிவா said:

நன்றி சகோதரம் ஜீவன்சிவா :)

15 hours ago, suvy said:

இது புரியாணி...!  தேங்காய்ப் பாலும் சேர்ப்பதால் தண்ணீர் அளவைக் கொஞ்சம் குறைக்கலாம் என நினைக்கின்றேன்....!

பி.கு: கன காலத்துக்கு முன் நடந்தது. ஒரு கம்மாலையில் அப்பு ஒருவர் ஒரு அருவாளைச் செப்பனிடக் கொண்டுவந்தார், அப்போது அங்கு முதலாளி இல்லை, வேலை செய்யும் பெடியன் கேட்டான் என்னனை அப்பு என்ன விசயம். இல்லடா தம்பி இந்த அருவாள்மனை மழுங்கிப் போச்சுது திருத்தவேணும் அதுதான் அவர் வரட்டும் என்று பாக்கிறன். இஞ்சகொண்டாப்பு என்டு பொடியன் கேட்க அரை மனத்துடன் குடுக்கிறார். பொடியன் நல்ல வடிவாய் அரிவாளைக் காய்ச்சித் தட்டி அராவிக் குடுத்தான் அவருக்கு எப்பனும் திருப்தி இல்லை, ஒரு இரண்டு ருபாய் குடுத்திட்டு அதை கொண்டுபோக முதலாளியும் தின்னவேலிச் சந்தையில மரக்கறியல் வாங்கிக் கொண்டு வாரார். உடன அப்பு இஞ்சடா மோன இந்த அரிவாள உவன் பொடி தட்டி ராவினது , உது சரியோ என்டு நீரும் ஒருக்காப் பாரன.

முதலாளியும் அதை வாங்கி  ஒரு கண்ணை மூடி லெவல் பார்த்துப் போட்டு , பொடியனைப் பார்த்து டேய் என்னன்டடா செய்தனி என்டு சொல்லிப் போட்டு அந்த அரிவாள பக்கத்தில் கிடந்த கல்லில வைத்து கொண்டுவந்த சுரைக்காயால ரெண்டு குத்துக் குத்தி பின் அண்ணாந்து ஒரு கண்ணைமூடி லெவல் பார்த்து ஆ  இப்பசரியென அப்பு என்டு சொல்லிக் குடுத்தார்.

அப்புவும் நல்லகாலமடா சரியான நேரத்தில நீ வந்திட்டாய் என்டு கொட்டப் பெட்டில இருந்து ரண்டு ருபாயை முதலாளிட்டக் குடுத்திட்டு திருப்ப்தியுடன் போனார்.

பிரியாணிக்கு நானும் ஒரு கருத்துச் சொல்லாட்டில் அது அவ்வளவு நல்லாயிருக்காது...:)

ம்ம்..உண்மை சகோதரம் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.