Jump to content

கணவாய் மீன் பொரியல்


Recommended Posts

 

தேவையான பொருட்கள்

கணவாய் மீன் - 10

இஞ்சி விழுது - 2 மேசைகரண்டி

பூண்டு விழுது - 2 மேசைகரண்டி

வெங்காயம் - 1

கறிவேப்பிலை - 15

தக்காளிப் பழம் - 1

புளி - 1 மேசைகரண்டி

எண்ணெய் - 2 மேசைகரண்டி

கொத்தமல்லி இலை - தேவையான அளவு

சீரகம் - அரை ஸ்பூன்

கடுகு - அரை ஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்

கணவாய் மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரம்மசாலத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, இவற்றை சேர்த்து நன்றாக கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்

வெங்காயம் பொரிந்து வரும் போது, தக்காளியை போட்டு வதக்கவும்.

 புளியை அரைக் கோப்பை இளஞ்சூட்டு நீரில் கரைத்து பொரிந்து வரும் கலவையுடன் கலக்கவும், இப்போது ஊறவைத்து இருந்த கணவாய் கலவையை போட்டு, கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்)

20 நிமிடங்களில் கணவாய் வெந்து விடும். சட்டியில் உள்ள நீர்த் தன்மை வற்றிய பின்பு, சிறிது நேரம் அதில் உள்ள எண்ணெயில் பொரிய விடுங்கள். பொரிந்து வரும் போது சிறிதாக வெட்டி வைத்த கொத்தமல்லி இலையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடுங்கள்

சுவையான கணவாய் மீன் பொரியல் ரெடி

http://www.lankasritechnology.com/page.php?cuttlefish

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ரெசிப்பி , பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீனா இணைப்புக்கு. எனக்கு மனைவிக்கு மிகவும் பிடித்தது கணவா பொரியல். வரும் லீவில் செய்துகொடுக்க நல்ல குறிப்பு இது.

 

நாங்கள் தமிழில் "கணவா மீன்" என்று சொல்வதில்லை. அத்துடன் "கணவாய்" என்பதும் பிழை. கணவாய் என்றால் இருபெரும் மலைகளுக்கிடையே அமைந்துள்ள பாதை. உதாரணம் கைபர் கணவாய், கடுகண்ணாவை (இலங்கை). இணையங்களில் இது தவறாக எழுதப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி

 

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

நல்ல ரெசிப்பி , பகிர்வுக்கு நன்றி சகோதரி...!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோ சுவி :)

 

3 hours ago, வாலி said:

நன்றி மீனா இணைப்புக்கு. எனக்கு மனைவிக்கு மிகவும் பிடித்தது கணவா பொரியல். வரும் லீவில் செய்துகொடுக்க நல்ல குறிப்பு இது.

 

நாங்கள் தமிழில் "கணவா மீன்" என்று சொல்வதில்லை. அத்துடன் "கணவாய்" என்பதும் பிழை. கணவாய் என்றால் இருபெரும் மலைகளுக்கிடையே அமைந்துள்ள பாதை. உதாரணம் கைபர் கணவாய், கடுகண்ணாவை (இலங்கை). இணையங்களில் இது தவறாக எழுதப்படுகின்றது.

மனைவிக்குச் சமைத்துக் குடுங்கள் வாலி..... எப்பிடி இருந்தது என்று வந்து சொல்லுங்கள் :)

 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோ வாலி!

3 hours ago, தமிழரசு said:

பகிர்வுக்கு நன்றி சகோதரி

 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோ தமிழ் :)

 

விருப்பு வாக்குகளுக்கு நன்றி சகோதரங்கள் நேசன், தமிழ், நவீன் :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பிரட்டல் அல்லோ! ஏன் பொரியல் என சொல்கிறார்கள்?... இணைப்புக்கு நன்றி மீனா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.