Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்துமஸ் மரத்திற்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் தேவாலயத்தில் இடமில்லை'

Featured Replies

கிறிஸ்துமஸ் மரத்திற்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் தேவாலயத்தில் இடமில்லை'

 

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் (நத்தார் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்) கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று ஆயர்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை ஆயர்கள் மன்றத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

'கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வழிபாட்டுக்கு உரியவை அல்ல' என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தேசிய வழிபாட்டு இயக்குநர் அருட்தந்தை இக்னேஷியஸ் வர்ணகுலசிங்கம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

'கிறிஸ்துமஸ் மரங்கள் வீடுகளுக்கு உரியவை- அவை தேவாலயங்களுக்கு உரியவை அல்ல' என்றும் அருட்தந்தை வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

151126102355_christmas_tree_512x288_gett

'கிறிஸ்துமஸ் மரங்கள் வீடுகளுக்கு உரியவை, அவை ஆலயங்களின் பீடத்திற்கு வரக்கூடாது'

கிறிஸ்துமஸ் மரங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் வெவ்வேறு காரணங்களுக்காக பிற்காலத்தில் வந்தவை என்றும், வணிக காரணங்களுக்காக அவை பிரபல்யபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த விடயங்கள் கிறிஸ்தவ வழிபாட்டுக்கு முரணானவை என்றும் அருட்தந்தை தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கையில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மரங்களை வைக்கின்ற வழக்கம் நீண்டகாலமாக இருந்துவருகின்றது.

அந்த நடைமுறையை மாற்ற வேண்டியது அவசியம் என்று கத்தோலிக்க திருச்சபை கருதுவதாக அருட்தந்தை இக்னேஷியஸ் வர்ணகுலசிங்கம் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/12/151220_xmas_trees_lanka

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது வரவேற்கத் தகுந்த முடிவு. இந்த நத்தார் தாத்தாக்களையும் மரங்களையும் வீடுகளுடன் நிறுத்திக்கொள்வது நல்லது. திருச்சபை வணிக வளாகமாகிவிடக்கூடாது. நல்லதொரு பாதையில் திருச்சபை பயணிக்கத் தொடங்குவது நல்லதொரு அறிகுறி.

Edited by வாலி

  • தொடங்கியவர்
1 minute ago, வாலி said:

உண்மையில் இது வரவேற்கத் தகுந்த முடிவு. இந்த நத்தார் தாத்தாக்களையும் மரங்களையும் வீடுகளுடன் நிறுத்திக்கொள்வது நல்லது. திருச்சபை வணிக வளாகமாகிவிடக்கூடாது. நல்லதொரு பாதையில் திருச்சபை பயணிக்கத் தொடங்குவது நல்லதொரு அறிகுறி.

இந்த செய்தியை பதியும்போதே உங்களின் கருத்தை எதிர்பார்த்தேன்:)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

இந்த செய்தியை பதியும்போதே உங்களின் கருத்தை எதிர்பார்த்தேன்:)

நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.