Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம்"

Featured Replies

"தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம்"

151227155334_tamil_people_council_tamil_

தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று அந்த அமைப்பின் இணைத்தலைவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் இயக்கம் என்றும் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதற்கோ அல்லது தேர்தல்களில் போட்டியிடுவதற்கோ அதற்கு எண்ணமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வு ஞாயிறன்று யாழ் பொது நூலக மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் பேரவையின் முதலாவது கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைவாக ஓர் அரசியல் தீர்வு காண்பதற்குரிய வரைபைத் தயார் செய்வதற்காக 15 பேர் கொண்ட உபகுழுவொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.

கூட்டம் நடைபெற்றதன் பின்னர் செய்தியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது கடந்த கூட்டத்திலே செய்தியாளர்களுக்கு உரிய தகவல்கள் வழங்காமைக்காக அமைப்பாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் பேரவை தொடர்பாகவும், அதனுடைய செயற்பாடுகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்பதற்கு போதிய அவகாசத்தை வழங்கி, அவற்றுக்குரிய விளக்கமும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கொடுக்கப்பட்டது.

அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள உபகுழு குறித்து விளக்கமளித்த பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராகிய டாக்டர் பி.லக்ஸ்மன், கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

அதேவேளை, இந்த உபகுழுவுக்கு துறைசார்ந்த ஆலோசனைகள வழங்குவதற்காக துறைசார் நிபுணர்களைக் கொண்ட ஆலோசனை குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளதாக லக்ஸ்மன் தெரிவித்தார்.

அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் அபிலாகள், கருத்துக்கள் அடங்கிய தீர்வுத் திட்ட ஆலோசனைகள் , புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுவதற்காக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று இணைத்தலைவர்களில் மற்றுமொருவராகிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

http://www.bbc.com/tamil/global/2015/12/151227_tamilpeoplecouncil

திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.ஆனாலும் அரசியலுக்கு தேர்தல் வேளையில் பயன்படப் போவதைத் தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Iraivan said:

திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.ஆனாலும் அரசியலுக்கு தேர்தல் வேளையில் பயன்படப் போவதைத் தடுக்க முடியாது.

அப்படி பயன்பட்டாலும் ... எதிர்க்கடை  தானே ...
தங்களுடைய வேலைகளை ஒழுங்காக செய்தால் ஏன் இப்படி பயந்து நடுங்குகினம் .......அதனை விட்டு தொடர்ந்து மக்கள் தலையில்  சாணி அரைத்தால்....? இப்படி விபரீதமானவைகளை சந்திக்க தான் வேண்டும் .

17 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்படி பயன்பட்டாலும் ... எதிர்க்கடை  தானே ...
தங்களுடைய வேலைகளை ஒழுங்காக செய்தால் ஏன் இப்படி பயந்து நடுங்குகினம் .......அதனை விட்டு தொடர்ந்து மக்கள் தலையில்  சாணி அரைத்தால்....? இப்படி விபரீதமானவைகளை சந்திக்க தான் வேண்டும் .

மக்கள் பேரவை எதைச் சாதிக்கப் போகிறது என்பதே கேள்வி. இவர்களும் சாணி சேகரிக்கத் தொடங்கிவிட்டார்கள். வருகின்ற தேர்தலில் தலையில் தப்புவார்கள். எதிர்பார்த்திருக்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Iraivan said:

மக்கள் பேரவை எதைச் சாதிக்கப் போகிறது என்பதே கேள்வி. இவர்களும் சாணி சேகரிக்கத் தொடங்கிவிட்டார்கள். வருகின்ற தேர்தலில் தலையில் தப்புவார்கள். எதிர்பார்த்திருக்கலாம்.
 
ஏற்கனவே செய்துமுடித்த நல்ல அனுபவம் கஜே கோஸ்டிக்கு இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Iraivan said:

மக்கள் பேரவை எதைச் சாதிக்கப் போகிறது என்பதே கேள்வி. இவர்களும் சாணி சேகரிக்கத் தொடங்கிவிட்டார்கள். வருகின்ற தேர்தலில் தலையில் தப்புவார்கள். எதிர்பார்த்திருக்கலாம்.
 
இதுவரை கூத்தமைப்பு எதை சாதித்திருக்கிறது என்று கூறிவிட்டு மக்கள் பேரவையை நோக்கி கேள்வி எழுப்புங்கள் .....
சும் வால்களின் பதிலே இதற்க்கு பொருத்தமாக இருக்கும் .....பேரவை சாதிக்காவிடினும் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வரை கொண்டு போய்  விடாது....(இந்தப்பதில் எங்கேயோ கேட்ட ஞாபகமாய் இருக்கவேண்டுமே ....! ) 
ஏனென்றால் தமிழருக்கு சேவை செய்பவர்களை ஒரே தராசில் வைக்க வேண்டும் .....

Edited by அக்னியஷ்த்ரா

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இதுவரை கூத்தமைப்பு எதை சாதித்திருக்கிறது என்று கூறிவிட்டு மக்கள் பேரவையை நோக்கி கேள்வி எழுப்புங்கள் .....
சும் வால்களின் பதிலே இதற்க்கு பொருத்தமாக இருக்கும் .....பேரவை சாதிக்காவிடினும் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வரை கொண்டு போய்  விடாது....(இந்தப்பதில் எங்கேயோ கேட்ட ஞாபகமாய் இருக்கவேண்டுமே ....! ) 
ஏனென்றால் தமிழருக்கு சேவை செய்பவர்களை ஒரே தராசில் வைக்க வேண்டும் .....

அப்படி கூறிவிட முடியாது. முள்ளிவாய்க்கால் வரை செல்ல விசிலடித்தவர்கள் தான் இப்ப பேரவைக்கும் விசிலடிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தெனாலி said:

அப்படி கூறிவிட முடியாது. முள்ளிவாய்க்கால் வரை செல்ல விசிலடித்தவர்கள் தான் இப்ப பேரவைக்கும் விசிலடிக்கிறார்கள். 

விசிலடித்தால் முள்ளிவாய்க்கால் வரை போகுமா என்ன ....... ஆயுதங்கள் மௌனித்தவுடன் எல்லாமே முடிந்து போய்விட்டது ...சம வலு என்பதே அற்றுப்போய் ....சிங்களவன் கிள்ளிக்கூட போடமாட்டானா  என்னும் நிலையில் தான் சிங்கி அடிக்கிறோம். இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு வாய்ப்பே இல்லை கூத்தமைப்பின் (முக்கியமாக மாவையின் போராட்டம் வெடிக்கும் உறுமல் வறுவல்களே இப்போது எடுபடுகுதில்லை) இந்த நிலையில் இப்போது வந்த பேரவை என்னதான் உசுப்பேத்தினாலும் மக்களிட்டை எடுபடாது  .....கூடிய வரையில் இந்த மாதிரி இரத்த திலகமிடும் உசுப்பேத்தல்களை கூத்தமைப்பே வைத்துக்கொள்வது நல்லது    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தெனாலி said:

அப்படி கூறிவிட முடியாது. முள்ளிவாய்க்கால் வரை செல்ல விசிலடித்தவர்கள் தான் இப்ப பேரவைக்கும் விசிலடிக்கிறார்கள். 

ஓ! விக்கி குறூப்புக்கும் விடிலடிக்கிறது எங்கட விசில் குஞ்சுகள் தானா! <_<

12 hours ago, அக்னியஷ்த்ரா said:

இதுவரை கூத்தமைப்பு எதை சாதித்திருக்கிறது என்று கூறிவிட்டு மக்கள் பேரவையை நோக்கி கேள்வி எழுப்புங்கள் .....
சும் வால்களின் பதிலே இதற்க்கு பொருத்தமாக இருக்கும் .....பேரவை சாதிக்காவிடினும் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வரை கொண்டு போய்  விடாது....(இந்தப்பதில் எங்கேயோ கேட்ட ஞாபகமாய் இருக்கவேண்டுமே ....! ) 
ஏனென்றால் தமிழருக்கு சேவை செய்பவர்களை ஒரே தராசில் வைக்க வேண்டும் .....

சயிக்கிள் காரர்கள் பிரிந்தபோய் எதைச் சாதிக்க முடியாதிருக்கிறார்களோ, அப்படித்தான் இந்தப் பேரவை நிலையும். அதுவும் டக்ளஸ், கருணாவையும் கூட்டுச் சேர்க்கப் போகிறார்களாம். என்ன கொடும அக்னியஷ்த்ரா இது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Iraivan said:

சயிக்கிள் காரர்கள் பிரிந்தபோய் எதைச் சாதிக்க முடியாதிருக்கிறார்களோ, அப்படித்தான் இந்தப் பேரவை நிலையும். அதுவும் டக்ளஸ், கருணாவையும் கூட்டுச் சேர்க்கப் போகிறார்களாம். என்ன கொடும அக்னியஷ்த்ரா இது.

எல்லாம் கொஞ்ச காலத்திற்க்கு தான் ...... கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூத்தமைப்பு வென்றாலும் கூடியபட்சம் இரண்டு ஆசன வாக்குகளை  கணிசமாக இழந்துவிட்டனர். (இது ஒரு வகையில் ஓட்டை சைக்கிளின் சாதிப்புதான் ,அவர்கள் ஒன்றும் செய்திருக்காவிட்டாலும் அவர்களாலும் உரிமை கொண்டாட முடியும் ,சம்பூர் காணி விடுவிப்பு போன்று).....ஆகவே கூத்தமைப்பிட்கு ஏழரை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது
 வென்ற காலம் தொட்டு கூத்தமைப்பிட்கு ஆதரவு பெருகவில்லை எதிர்ப்பு மட்டுமே வலுக்கிறது... அந்த வகையில் சும் தனது சேவைகளை சரியாக செய்கிறார்....அதிக நம்பிக்கை இருந்தால் கூத்தமைப்பு உறுப்பினர்கள் ஏன் இப்படி பயந்து போய் இரகசிய சந்திப்பு ,மூடிய அறையில் விவாதம் என்றெல்லாம் ஓடித்திரிகிரார்கள் .....இன்னும் பேரவை அரசியல் செய்வதை பற்றி எதுவும் கதைக்கவில்லை , டன்கிலஸ் ,கருணாவையும் சேர்க்கவில்லை. சேர்த்தாலும் பேரவை  அரசியலில் ஈடுபடாதவரை அதனால் எதுவும் நடந்து விடாது (தமிழருக்கு சேவை செய்பவர்களை ஒரே தராசில் வைக்க வேண்டும்  )
கூத்தமைப்பு இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் அவர்களது வேலையை பார்ப்பது நல்லது ......நாளை கழித்து மறுநாள் 2016 
 
எதிரிகள், துரோகிகள் கூட்டோடு உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஒருபோதும் இணையாது என்று அந்த இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று முன்தினம் ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற ரெலோ அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தி தமிழ் மக்கள் பேரவையைப் பலப்படுத்தும் நோக்குடன் சில உள்ளூர் தமிழ் ஊடகங்கள் தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் தமிழினத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகங்கள் ஆகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிளை பிரபாகரன் மனதார விரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒருபோதும் சிதைக்க முடியாது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் தனது கொள்கை கோட்பாடுகளில் இருந்து விலகாமல் தமிழ் மக்களின் உரிமைக்காக தீர்வுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும்.” என்றுள்ளார்.

இதனிடையே, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்தவர்களும், தேசியப் பட்டியல் மூலம் தமக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைக்காதவர்களும் சேர்ந்தே தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியுள்ளார்கள். இந்த அமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” என்று ரெலோவின் உப தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்

http://www.puthinamnews.com/?p=63089

தமிழ் மக்கள் பேரவைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையை வடக்கு மாகாண சபையோடு இணைத்து நோக்கும் கருத்து நிலையொன்று காணப்படுகின்றது. எனினும், குறித்த அமைப்போடு வடக்கு மாகாண சபைக்கு சம்பந்தமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinamnews.com/?p=63089

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Iraivan said:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிளை பிரபாகரன் மனதார விரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒருபோதும் சிதைக்க முடியாது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் தனது கொள்கை கோட்பாடுகளில் இருந்து விலகாமல் தமிழ் மக்களின் உரிமைக்காக தீர்வுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும்.” என்றுள்ளார்

இறைவன் கண்ணாலை தண்ணி வருகுது .....சிரிச்சோ ,அழுதோ என்று எனக்கே தெரியவில்லை.....பயங்கரவாதிகளையும் ,இனச்சுத்திகரிப்பு செய்தவர்களையும் ஏன் திரும்பத் திரும்ப  கூத்தமைப்பு கூத்தாடிகள் விக்கிறார்கள் .....தலை கிறுகிறுக்கிறது .....தங்கடை பிழைப்பிட்க்கு எந்த லெவலிட்கும் இவை போவினம் என்பதற்கு இதனை விட நல்ல உதராணம் அமையாது ...இது தான் இவயிண்ட லெவல் 

6 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அதில் சொல்லப் பட்டதில் என்ன தவறுண்டு. புலிகள் போல் தாயகத்திலிருக்கும் எந்த அமைப்பும் செயற்பட முடியாது. இன்று புலத் தமிழரும் புலிக்கொடியைக் கைவிட்டுவிட்டார்கள். ஒரு பாதுகாப்பான இடத்திலே இது நடப்பதென்பது லெவலின் மாற்றந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Iraivan said:

புலிகள் போல் தாயகத்திலிருக்கும் எந்த அமைப்பும் செயற்பட முடியாது.

எந்த செயற்பாட்டை  என்று கொஞ்சம் தெளிவாக சொன்னீர்கள் என்றால் நல்லாயிருக்கும் ......

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎28‎/‎2015 at 11:21 PM, Iraivan said:

மக்கள் பேரவை எதைச் சாதிக்கப் போகிறது என்பதே கேள்வி. இவர்களும் சாணி சேகரிக்கத் தொடங்கிவிட்டார்கள். வருகின்ற தேர்தலில் தலையில் தப்புவார்கள். எதிர்பார்த்திருக்கலாம்.
 
அப்ப இதுக்கு முதலே கொஞ்சப்பேர் சாணியடிச்சுக்கொண்டிருக்கினம் எண்டு சொல்ல வாறியளோ. சம்சும் இல்லைத்தானே. அப்பாடா  நிம்மதி.:unsure:

On ‎12‎/‎29‎/‎2015 at 8:24 PM, தெனாலி said:

அப்படி கூறிவிட முடியாது. முள்ளிவாய்க்கால் வரை செல்ல விசிலடித்தவர்கள் தான் இப்ப பேரவைக்கும் விசிலடிக்கிறார்கள். 

அப்ப உங்களுக்கு பேரவை வாறதில ஒரு பிரச்சனையும் இல்ல  விசிலடிக்கிற கூட்டத்தோடுதான் பிரச்சனை. என்னே ஒரு அரசியல் அறிவு எவ்வளவு ஆரோக்கியமான கருத்தாடல். நாடு நல்ல விளங்கும்.வாழ்க உங்கள் பணி.

12 hours ago, அக்னியஷ்த்ரா said:

இறைவன் கண்ணாலை தண்ணி வருகுது .....சிரிச்சோ ,அழுதோ என்று எனக்கே தெரியவில்லை.....பயங்கரவாதிகளையும் ,இனச்சுத்திகரிப்பு செய்தவர்களையும் ஏன் திரும்பத் திரும்ப  கூத்தமைப்பு கூத்தாடிகள் விக்கிறார்கள் .....தலை கிறுகிறுக்கிறது .....தங்கடை பிழைப்பிட்க்கு எந்த லெவலிட்கும் இவை போவினம் என்பதற்கு இதனை விட நல்ல உதராணம் அமையாது ...இது தான் இவயிண்ட லெவல் 

இதில சம்சும் வேற லெவல்

20 hours ago, அக்னியஷ்த்ரா said:

எந்த செயற்பாட்டை  என்று கொஞ்சம் தெளிவாக சொன்னீர்கள் என்றால் நல்லாயிருக்கும் ......

உங்களது மனதில் இவர்கள் இதைச் செய்வார்கள் என்று எதை நினைத்துள்ளீர்களோ, அதைத்தான் புலிகள் செயற்பட்டது போல் எவராலும் தமிழர் உரிமைக்காகச் செயற்பட முடியாது என்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.