Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தை மாத்திரம் தண்டிக்க முடியாது! - மெக்ஸ்வல் பரணகம

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகளின் போது இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலவே விடுதலைப் புலிகள் மீதும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய வெறுமனே இராணுவத்தை மாத்திரம் தண்டிக்க முடியாது என காணாமல்போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.

'இறுதி யுத்தத்தின் போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் அதில் ஒரு கட்டமாகவே இந்த காணாமல்போனோர் தொடர்பில் கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. கடந்த காலத்தில் இருந்தே நாம் இந்த விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். வடக்கு கிழக்கு பகுதிகளில் நாம் தொடர்ச்சியாக எமது விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அதேபோல் மீண்டும் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இந்த விசாரணைகளின் போது சுமார் 23 ஆயிரம் முறைப்பாடுகள் வரை யில் நாம் பெற்றுள்ளோம். இந்த முறைப்பாடுகளில் இராணுவம் மீது பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளதைப் போலவே விடுதலைப் புலிகள் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆகவே இந்த வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொள்வதாயின் இரண்டு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை மை ஏற்படும்.

எனினும் இன்று விடுதலை புலிகள் இல்லாத காரணத்தினால் அவர்களை எவ்வாறு தண்டிப்பது? அதேபோல் இராணுவம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தீர்க்கமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். குற்றம்சுமத்தப்பட்டுள்ள காரணத்தினால் ஒட்டுமொத்த இராணுவத்தையும் விசாரிக்க முடியாது. ஆகவே இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அதேபோல் எமது ஆணைக்குழு அண்மையில் ஐ.நா. அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் இந்த சந்திப்பின் போது எமது ஆணைக்குழுவை கலைப்பது தொடர்பில் அவர்கள் எந்த கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. ஆனால் அண்மையில் அவர்களின் அறிக்கை ஒன்றில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறு இருப்பினும் ஆணைக்குழுவை கலைப்பது தொடர்பில் அரசாங்கம் எந்த கருத்துக்களையும் இதுவரையில் விடுக்கவில்லை. எனவே விசாரணைகள் மேலும் தொடரும் என அவர் குறிப்பிட்டார் .

http://www.seithy.com/breifNews.php?newsID=147993&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் இராணுவத்தால் மட்டும் காணாமல் போகச்செய்யப்பட்டு இருப்பார்களானால் இராணுவத்தை மட்டும் விசாரிக்கலாம். ஆனால் இராணுவம் ஊள்ளிட்ட வேறு ஆயுதக் குழுக்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக அறியவருகின்து. எனவே அக்குழுக்களும் கட்டாயம் விசாரிக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இன்று விடுதலை புலிகள் இல்லாத காரணத்தினால் அவர்களை எவ்வாறு தண்டிப்பது?

கேள்வியையும் கேட்டு விடையையும் சொல்லி விட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கேள்வியையும் கேட்டு விடையையும் சொல்லி விட்டீர்கள்.

நல்ல காலம்.. விசாரணைக்குழு தலைவரே சொன்னது. இல்ல.. இப்ப இங்க ஒரு குலாம் கூடி நின்று கூவி இருக்கும். புலியை தண்டித்தால் தான் எங்கள் அபிமான சிங்கள இராணுவத்தை தண்டிக்க எங்கள் சிறீலங்கா மாதாவின் புதல்வர்கள் புதல்விகளான.. சிங்கள.. தமிழ்.. முஸ்லீம் மக்கள் அனுமதிப்பினம் என்று. :rolleyes:

இராணுவத்தோடு சேர்த்து அதன் உபரிக் குழுக்கள்.. தமிழ் ஒட்டுக்குழுக்கள்.. சிங்கள ஊர்காவல் படை.. முஸ்லீம் ஊர்காவல் படை.. ஜிகாத் படை இவற்றையும் தண்டிப்பது அவசியம். போர் குற்றத்தில்.. மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் இவர்களுக்கு பெரும் பங்குள்ளது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, nunavilan said:

கேள்வியையும் கேட்டு விடையையும் சொல்லி விட்டீர்கள்.

சட்ட ரீதியாய் இல்லாத புலியை அடிச்சு வீரவசனம் பேசுற எங்கடை சனம் இனி கோமா நிலைக்கு போவினம்.tw_grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

சட்ட ரீதியாய் இல்லாத புலியை அடிச்சு வீரவசனம் பேசுற எங்கடை சனம் இனி கோமா நிலைக்கு போவினம்.tw_grin:

உண்மையாத்தான் கேக்கிறன் அப்ப இப்ப ஒறிஜினல் புலியே இல்லையா?

புலி எண்டு சொல்லுற ஆக்கள் எல்லாம் சட்ட விரோத புலி (சட்ட ரீதியற்ற புலி) tw_blush:எங்கிறீங்க! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, வாலி said:

உண்மையாத்தான் கேக்கிறன் அப்ப இப்ப ஒறிஜினல் புலியே இல்லையா?

புலி எண்டு சொல்லுற ஆக்கள் எல்லாம் சட்ட விரோத புலி (சட்ட ரீதியற்ற புலி) tw_blush:எங்கிறீங்க! 

அங்கைதானே புலியே இல்லையெண்டு சொல்லி ஆட்சி நடத்தீனம்...... அப்பிடியெண்டால் சட்டரீதியாய் புலி இல்லையெண்டுதானே அர்த்தம் பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அங்கைதானே புலியே இல்லையெண்டு சொல்லி ஆட்சி நடத்தீனம்...... அப்பிடியெண்டால் சட்டரீதியாய் புலி இல்லையெண்டுதானே அர்த்தம் பாருங்கோ

இனி இலங்கைக்குள் எவரும் வாலாட்ட முடியாது என்று சிறு குழந்தையும் அறியும். நான் கேக்கிறது புலம்பெயர் தேசங்களில் இருந்து வாலாட்டிகிற புலிகளை. இவர்கள் சட்டரீதியான புலிகளாக இருந்தால் காணாமல் போனோர் தொடர்பாக இவர்களும் கட்டாயம் பதிலளிக்க வேண்டிவரும். இல்லை சட்ட விரோதபுலிகள் எண்டால் நான் என்னத்தைச் சொல்லுறது பெயரிலேயே இருக்குத்தானே! <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, வாலி said:

இனி இலங்கைக்குள் எவரும் வாலாட்ட முடியாது என்று சிறு குழந்தையும் அறியும். நான் கேக்கிறது புலம்பெயர் தேசங்களில் இருந்து வாலாட்டிகிற புலிகளை. இவர்கள் சட்டரீதியான புலிகளாக இருந்தால் காணாமல் போனோர் தொடர்பாக இவர்களும் கட்டாயம் பதிலளிக்க வேண்டிவரும். இல்லை சட்ட விரோதபுலிகள் எண்டால் நான் என்னத்தைச் சொல்லுறது பெயரிலேயே இருக்குத்தானே! <_<

ஒரு சில தினங்களுக்கு முதல் ஜேர்மனியில் கிட்டத்தட்ட20 வருடங்களுக்கு முன்னர் தடைசெய்யப்பட்ட குர்திஸ் ஆதரவாளர்கள் தங்கள் இனமக்கள் துருக்கிய இராணுவத்தால் /அரசால் கொலைசெய்யப்படுகின்றனர்  என்று ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர். இதில் கிட்டத்தட்ட 15000 பெருக்கு மேல் கலந்து கொண்டனர். வெற்றிகரமாகவும் முடிந்தது. ஜேர்மனிய அரச தரப்பில் எவ்வித எதிர்ப்பும் இல்லை.

இது பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை.

கனிவுகள் இருக்கும். காலத்திற்கேற்ப கனிந்து வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.