Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றி இல்லாத யுத்தமா? தோல்வி இல்லாத சமாதானமா?

Featured Replies

  • தொடங்கியவர்

நீர் குறிப்பிடுவது போல் அரசின் மீதான புலிகளின் குற்றச்சாட்டையோ, அல்லது அரசு சொல்லும் புலிகள் மீதான குற்றச்சாட்டையோ இருசாராரும் மற்றவர்களுக்கு எதிராக சொல்லிக்கொண்டிருக்காலாம். ஆனால் நான் குறிப்பிட்ட சர்வதேச சமூகம் இந்த இருசாராரின் கருத்துகளை விட தமது கருத்திலேயே தீவிரமாகவும் உறுதியாகவும் செயல்படுகிறது.

உதாரணத்துக்கு International Crisis Group அண்மையில் வெளியிட்ட அறிக்கையை வாசித்து பாரும், 2002 இல் தொடங்கிய அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுகள் தோல்விக்கு போனதற்கான பெரும் பொறுப்பை புலிகள் மீதுதான் சர்வதேச சமூகம் சுமத்தியுள்ளது.

இங்கு நீரும் நானும் 'குத்திமுறுஞ்சு' பிரயோசினம் எதுவும் இல்லை.

  • Replies 62
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2002 இல் தொடங்கிய அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுகள் தோல்விக்கு போனதற்கான பெரும் பொறுப்பை புலிகள் மீதுதான் சர்வதேச சமூகம் சுமத்தியுள்ளது என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டு உமது கருத்துகளை நடமுறைக்கு சாத்தியமானவையா என்பதையும் உளசுத்தியுடன் சிந்தித்து இங்கு எழுதினால் நல்லது. மக்கள் அழிவு குறித்து அக்கரை கொள்ளாத எந்த அரசியல் அமைப்பும் நின்று நிலைக்காது. சும்மா உட்டோப்பியன் கருத்துகளை எடுத்து வீச வேண்டாம்.

ஒரு வித அடிப்படையும் அற்ற கதையிது. ஏதோ புலிகளில் கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கமாகவே படுகின்றது.

சமாதான முயற்சியில் புலிகளின் மீது மட்டும் தனியே சர்வதேசம் சொல்லவில்லை. இலங்கையரசையும் கடுமையாகச் சாடியிருக்கின்றது. மற்றும்படி சர்வதேசம் என்பது நீதிபதி போலப் படம் காட்டுவதையும் பிரமிப்பதையும் தவிர்ப்பது நல்லது.

இன்றைக்கு கொழும்பு நிலமைகளைப் பார்த்தாலே தெரியும். பொருட்களின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கின்றன என்று. மசகு எண்ணையின் விலை சர்வதேசமட்டத்தில் குறையும்போது, இலங்கையரசு விலை அதிகரிக்க முயற்சிக்கின்றது என்பது, அதன் மீது உலக நாடுகள் எவ்வளவு தூரம் பொருளாதார அழுத்தத்தைக் கொடுக்கின்றன என்பதற்க நல்ல சான்று. இந்த சமயத்தில் மகிந்த வாய்விட்டு அழ முடியாத நிலமையில் தான் இருக்கின்றார்.

உமது கருத்துக்கள் முதலில் நடைமுறைக்குச் சாத்தியமா எனச் சிந்திப்பது நல்லது. இது வரைக்கும் சிங்கள அரசால் எந்தத் தீர்வுகள் பரிந்துரை செய்யப்பட்டன என்றும் அதற்கு எவ்வளவு தூரம் சாத்தியமானதானது என்பதையும் நீர் தருவீராக இருந்தால் உம் நடைமுறைக் கணக்குக்கு பதில் எழுதலாம். அதைத் தான் தலைவரும் சொன்னார். " எமக்கு தமிழீழத்தைத் தவிர எந்தத் தீர்வையும் இலங்கையரசு விட்டு வைக்கவில்லை" என்று. நீர் எனி வரும் காலத்தில் இத் தலைப்பில் குப்பை கொட்டுவராக இருந்தால் எந்தத் தீர்வு தமிழனுக்கு சிங்கள அரசு பரிந்துரை செய்தது என்றும், அது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதையும் விளக்க வேண்டும்.

கேவலம். கிராமிய அடிப்படையிலான சிரானைக் கூடத் தரமறுத்த சிங்கள தேசம் தீர்வு தரும் என்று பூச்சுத்துகின்றீரா? தமிழீழத்தை நாமாகவா கேட்டோம். சிங்கள தேசம் தானே தன் வன்முறைகால் எமக்கு அதை ஏற்படுத்தியது!

  • கருத்துக்கள உறவுகள்

நீர் குறிப்பிடுவது போல் அரசின் மீதான புலிகளின் குற்றச்சாட்டையோ, அல்லது அரசு சொல்லும் புலிகள் மீதான குற்றச்சாட்டையோ இருசாராரும் மற்றவர்களுக்கு எதிராக சொல்லிக்கொண்டிருக்காலாம். ஆனால் நான் குறிப்பிட்ட சர்வதேச சமூகம் இந்த இருசாராரின் கருத்துகளை விட தமது கருத்திலேயே தீவிரமாகவும் உறுதியாகவும் செயல்படுகிறது.

உதாரணத்துக்கு International Crisis Group அண்மையில் வெளியிட்ட அறிக்கையை வாசித்து பாரும், 2002 இல் தொடங்கிய அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுகள் தோல்விக்கு போனதற்கான பெரும் பொறுப்பை புலிகள் மீதுதான் சர்வதேச சமூகம் சுமத்தியுள்ளது.

இங்கு நீரும் நானும் 'குத்திமுறுஞ்சு' பிரயோசினம் எதுவும் இல்லை.

இந்த இணையத்தை வைத்தா சர்வதேசம் பற்றிய எண்ணப்பாட்டை நீர் கொண்டிருக்கின்றீர். இதற்கு மேலும் பதிலளிக்க நீர் தகுதியுடையவாரா என அஞ்ச வேண்டியிருக்கின்றது.

உம்மிடம் ஒரு கேள்வி! சர்வதேசம், சர்வதேசம் என்று நீர் சொல்லுவது என்ன அர்த்ததில் என்று அறிந்து கொள்ள முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நீரும் நானும் 'குத்திமுறுஞ்சு' பிரயோசினம் எதுவும் இல்லை.

உமக்கே விளங்குதல்லே.. பிறகு ஏன் சர்வதேச நாடுகளின் அபிப்பிராயத்தைப் பற்றிக் கவலைப்படுவான்?

சர்வதேச நாடுகள் புலிகளை ஒரு விடுதலை இயக்கமாக அங்கீகரிக்கவில்லை; அத்துடன் புலிகள் பலமாக இருப்பதையும் விரும்பவில்லை. சர்வதேசம் வேண்டுவதெல்லாம் புலிகள் பலவீனப்படவேண்டும்; தீர்வு என்ற போர்வையில் எதையாவது திணித்துத் தமிழரின் போராட்டத்தைக் கைவிடப் பண்ணவேண்டும்.. சமாதான முன்னெடுப்புக்கள் நடைபெறுவது அதற்காகத்தான்.. எனினும் சிங்கள அரசினால் சிங்களக் கடும்போக்காளர்களை எதிர்த்து உருப்படியான ஒரு தீர்வை முன்வைக்கமுடியாது. இதைத் தெளிவாகப் புரிந்தாலே போதும்..

சமாதானம் ப+ச்சாண்டி காட்டும் International Crisis Group இன் அறிக்கையின் பின்னணி பற்றி நல்ல தொரு விமர்சனம்:

http://www.sangam.org/taraki/articles/2006...rt.php?uid=2114

  • தொடங்கியவர்

International Crisis Group Report குறித்து Dr. சந்திர போஸ் எழுதியுள்ள ஆய்வும் அவரது முடிவுகளும் ஒரு சாதாரண வாசிப்பு அறிவுள்ளவருக்கே தர்க்க நியாயம் உள்ளதாக தெரிய மாட்டாது. மூல அறிக்கையின் ஆய்வு முறைமை எந்தவித விஞ்ஞான பூர்வமானதோ பக்கச்சார்பற்ற ஆய்வு முடிவுகளை முன்வைத்து செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பும் சந்திர போஸ் தனது தரப்பு வாதங்களுக்கும் தான் குறிப்பிட்ட ஆய்வு முறைமையை கைகொள்ளத்தவறி விட்டார். அதனால் அரசு எப்படி தந்து பக்க நியாயங்களை சரியென வீம்புக்கு நிற்கின்றதோ அதேபோல் இவரது எதிவாதங்களும் வெறும் புலி ஆதரவுக் கோசங்களாகவே ஒரு முன்றாம் நிலை வாசகனுக்கு தென்படும்.

இதற்கு முன் கிட்டத்தட்ட 15வருடங்களாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சங்கத்தின் அறிக்கைகள், ஆய்வுகள் கடந்த 5 வருடங்களாக சர்வதேச சமூகத்தால் வெகுவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. International Crisis Group இன் பின்புலம் சாதாரண மட்டத்தில் உள்ளது அல்ல. அக்குழுவின் அறிக்கைகள் உலகின் பொருளாதார ரீதியாக பலமான நாடுகள் தமது வெளியுறவுக்கொள்கை வகுப்பதில் அதிக பாதிப்பு செலுத்துபவை.

INTERNATIONAL CRISIS GROUP BOARD OF TRUSTEES

Co-Chairs

Christopher Patten

Former European Commissioner for External Relations, Governor of Hong Kong and UK Cabinet Minister; Chancellor of Oxford University

Thomas Pickering

Former U.S. Ambassador to the UN, Russia, India, Israel, Jordan, El Salvador and Nigeria

President & CEO

Gareth Evans

Former Foreign Minister of Australia

Executive Committee

Cheryl Carolus

Former South African High Commissioner to the UK and Secretary General of the ANC

Maria Livanos Cattaui*

Former Secretary-General, International Chamber of Commerce

Yoichi Funabashi

Chief Diplomatic Correspondent & Columnist, The Asahi Shimbun, Japan

Frank Giustra

Chairman, Endeavour Financial, Canada

Stephen Solarz

Former U.S. Congressman

George Soros

Chairman, Open Society Institute

Pär Stenbäck

Former Foreign Minister of Finland

*Vice-Chair

Morton Abramowitz

Former U.S. Assistant Secretary of State and Ambassador to Turkey

Adnan Abu-Odeh

Former Political Adviser to King Abdullah II and to King Hussein and Jordan Permanent Representative to the UN

Kenneth Adelman

Former U.S. Ambassador and Director of the Arms Control and Disarmament Agency

Ersin Arioglu

Member of Parliament, Turkey; Chairman Emeritus, Yapi Merkezi Group

Shlomo Ben-Ami

Former Foreign Minister of Israel

Lakhdar Brahimi

Former Special Adviser to the UN Secretary-General and Algerian Foreign Minister

Zbigniew Brzezinski

Former U.S. National Security Advisor to the President

Kim Campbell

Former Prime Minister of Canada; Secretary General, Club of Madrid

Naresh Chandra

Former Indian Cabinet Secretary and Ambassador of India to the U.S.

Joaquim Alberto Chissano

Former President of Mozambique

Victor Chu

Chairman, First Eastern Investment Group, Hong Kong

Wesley Clark

Former NATO Supreme Allied Commander, Europe

Pat Cox

Former President of European Parliament

Uffe Ellemann-Jensen

Former Foreign Minister of Denmark

Mark Eyskens

Former Prime Minister of Belgium

Joschka Fischer

Former Foreign Minister of Germany

Leslie H. Gelb

President Emeritus of Council on Foreign Relations, U.S.

Carla Hills

Former Secretary of Housing and U.S. Trade Representative

Lena Hjelm-Wallén

Former Deputy Prime Minister and Foreign Affairs Minister, Sweden

Swanee Hunt

Chair of Inclusive Security: Women Waging Peace; former U.S. Ambassador to Austria

Anwar Ibrahim

Former Deputy Prime Minister of Malaysia

Asma Jahangir

UN Special Rapporteur on the Freedom of Religion or Belief; Chairperson, Human Rights Commission of Pakistan

Nancy Kassebaum Baker

Former U.S. Senator

James V. Kimsey

Founder and Chairman Emeritus of America Online, Inc. (AOL)

Wim Kok

Former Prime Minister of Netherlands

Ricardo Lagos

Former President of Chile

Joanne Leedom-Ackerman

Novelist and journalist, U.S.

Ayo Obe

Chair of Steering Committee of World Movement for Democracy, Nigeria

Christine Ockrent

Journalist and author, France

Victor Pinchuk

Founder of Interpipe Scientific and Industrial Production Group

Samantha Power

Author and Professor, Kennedy School of Government, Harvard

Fidel V. Ramos

Former President of Philippines

Ghassan Salamé

Former Minister, Lebanon; Professor of International Relations, Paris

Douglas Schoen

Founding Partner of Penn, Schoen & Berland Associates, U.S.

Thorvald Stoltenberg

Former Foreign Minister of Norway

Ernesto Zedillo

Former President of Mexico; Director, Yale Center for the Study of Globalization

INTERNATIONAL ADVISORY COUNCIL

Crisis Group’s International Advisory Council comprises major individual and corporate donors who contribute their advice and experience to Crisis Group on a regular basis.

Rita E. Hauser (Chair)

Elliott F. Kulick (Deputy Chair)

Marc Abramowitz

APCO Worldwide Inc.

Ed Bachrach

Patrick E. Benzie

Stanley M. Bergman and Edward J. Bergman

BHP Billiton

Harry Bookey and Pamela Bass-Bookey

John Chapman Chester

Carso Foundation

Chevron

Citigroup

Companhia Vale do Rio Doce

Richard H. Cooper

Credit Suisse

John Ehara

Equinox Partners

Konrad Fischer

Alan Griffiths

Iara Lee & George Gund III Foundation

Jewish World Watch

George Kellner

Shiv Vikram Khemka

Scott J. Lawlor

George Loening

Douglas Makepeace

McKinsey & Company

Najib A.Mikati

PT Newmont Pacific Nusantara (Mr. Robert Humberson)

Michael L. Riordan

Tilleke & Gibbins

Baron Guy Ullens de Schooten

Stanley Weiss

Westfield Group

Woodside Energy Ltd

Don Xia

Yapi Merkezi Construction and Industry Inc.

Yasuyo Yamazaki

Shinji Yazaki

Sunny Yoon

SENIOR ADVISERS

Crisis Group’s Senior Advisers are former Board Members (not presently holding national government executive office) who maintain an association with Crisis Group, and whose advice and support are called on from time to time.

Martti Ahtisaari

(Chairman Emeritus)

Diego Arria

Paddy Ashdown

Zainab Bangura

Christoph Bertram

Jorge Castañeda

Alain Destexhe

Marika Fahlen

Stanley Fischer

Malcolm Fraser

Bronislaw Geremek

I.K. Gujral

Max Jakobson

Todung Mulya Lubis

Allan J. MacEachen

Barbara McDougall

Matthew McHugh

George J. Mitchell

(Chairman Emeritus)

Surin Pitsuwan

Cyril Ramaphosa

George Robertson

Michel Rocard

Volker Ruehe

Mohamed Sahnoun

Salim A. Salim

William Taylor

Leo Tindemans

Ed van Thijn

Shirley Williams

Grigory Yavlinski

Uta Zapf

International Crisis Group இது தமிழ் நாட்டில் இருக்கும் திருமாவளவனின் கட்சி போன்றது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்பப் பெரீய ஆக்களாக்காத்தான் இருக்கீனம்.. ஆனா அவங்க தங்க சாய்மனைக் கதிரைக்கு அங்கால போயிருக்க மாட்டாங்களே..

தவறு யார் பக்கம் என்ற தரவுகளை யாருங்க கொடுத்தது?

  • தொடங்கியவர்

ரொம்பப் பெரீய ஆக்களாக்காத்தான் இருக்கீனம்.. ஆனா அவங்க தங்க சாய்மனைக் கதிரைக்கு அங்கால போயிருக்க மாட்டாங்களே..

தவறு யார் பக்கம் என்ற தரவுகளை யாருங்க கொடுத்தது?

கிறிஸ் பற்றன் சாய்மனைக் கதிரை ஆளில்லை. 2003/4 இல் வன்னி போய் வந்தவர்.

சரி சமாதானம் அண்ணை இப்ப புலிகள் என்ன செய்ய வேணும் தமி ழ் மக்கள் என்ன செய்ய வேணும் எண்டு சொல்லுங்கோ? இப்ப உந்தப் பிரச்சினைக்கு உங்கட தீர்வு என்ன? அதை குடுக்க சிறிலங்காவும் மகிந்தரும் ரெடியாமோ ,ஒருக்காக்கேட்டுச் சொல்லுங்கோ?சும்மா ஒழிச்சு மறைச்சு விளையாடாமா நேரடியா வாங்கோவன் கருத்தாடுவம்.

சும்மா உது பிழை அது பிழை எண்டு, விசைப்பலகையில் தட்டலாம், முதலில உம்மை நோக்கிக் கேட்டகப்பட்ட கேள்விகளுக்கு விடை வேணும்.சும்மா உந்த சர்வதேசம், பெரிய ஆக்கள் எங்கிற பம்மாத்துக் கதையள் வேண்டாம்.உமக்கு அவை பெருயவையா இருக்கலாம், எல்லோருக்கும் அல்ல.உமக்கு ஊசலாட்டம் இல்லை நக்கிப் பிழைக்கும் பண்புகள் இருக்கலாம் அதற்காக எல்லோருக்கும் அவ்வாறல்ல.

தமிழ் மக்களின் தலிவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக உம்மைப்போன்றவர்களிடம் தமிழ் மக்கள் தங்கள் போராட்டத்தையோ தமது எதிர்காலத்தியோ ஒப்படைக்கவில்லை.உந்தச் சர்வதேசம் எம் மக்களைப் பாதுகாக்கவில்லை இனியும் பாதுகாக்கப்போவதில்லை.உந்த சரவ்தேசத்திடம் நாம் எந்த நியாயத்தையும் எதிர்பார்க்கவும் இல்லை.அவை தமக்கே உரிய நலங்களில் இருந்தே செயற்படும் என்பது வரலாற்றில் எங்கு பார்த்தாலும் இருக்கும் வெட்ட வெளிச்சமான விடயம்.இதைப் புரிந்து கொள்ள பெரிய அரசியல் அறிவு வேண்டியதில்லை.மிகச்சாதராணமா

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ் பற்றன் சாய்மனைக் கதிரை ஆளில்லை. 2003/4 இல் வன்னி போய் வந்தவர்.

இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே நாடுகளினதும், மற்றும் இந்தியாவினதும் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தங்களின் பொருளாதார நலன்களுக்காக இலங்கையில் அமைதியைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் (தமிழர்கள் மேலுள்ள பாசத்தால் அல்ல). அவர்கள் கொண்டுவர/திணிக்க முயற்சிக்கும் தீர்வு தமிழர்களுக்குச் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் வழங்க மாட்டா. அபிவிருத்தி என்ற போர்வையில் குறுகிய கால அமைதியை தமிழர் தலைமை நாடினால், தமிழ்த் தேசியமும், தமிழர் தாயகமும் இல்லாமல் போய்விடும் (புத்தளம் போன மாதிரி அம்பாறையும், திருகோணமலையும் இன்னும் 5 வருடங்களுக்குள் சிங்கள மயமாகி விடும்).

எனவே அரசியல் மற்றும் ஆயுத பலத்திலும் தமிழர் மேலாண்மை செலுத்தவேண்டும். சிங்கள அரசு, இந்தியா, சர்வதேச நாடுகள் என்பன தமிழீழம் ஒன்றுதான் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை ஒத்துக்கொள்ளும் நிலையை உருவாக்கவேண்டும். சிங்கள அரசின் சில நடவடிக்கைகள் இதற்கு உதவுகின்றன. எனினும் தமிழர்களின் அரசியல் பிரச்சாரம் போதாத நிலையில் உள்ளது. இராணுவ ரீதியிலும் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சவால்களை வெல்ல பிரமிப்பிலும், சாகஸங்களிலும் மட்டும் நம்பிக்கை வைக்காது செய்யவேண்டிய கடைமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்....

அய்யா சமாதானம்

Dr Chandra Bose எழுதியது விமர்சனம் எமது போராட்டத்தின் வரலாற்ற அறிந்தவரின் (அதாவது எமது நியாயங்கள் ஏற்கனவே பல தடவை நிறுவப்பட்டிருப்பதால் அவற்றை மீள நிறுவ வேண்டி தேவை இல்லை என்ற) நிலையில் இருந்து எழுதியுள்ளார். மற்றும்படி ஒரு தமிழ் தேசியத்தை நேசிப்பவரின் நிலைப்பாட்டில் என்பது கொஞ்சம் வெளிப்படையாக தெரிகிறது எனலாம். அவர் ICG அறிக்கையின் பக்கச்சார்பான உள் நோக்கம் கொண்ட பகுதிகளை மிகவும் அழகாக பிரித்தெடுத்து காட்டுகிறார். அவர் விமர்சனம் வாசிக்கக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழர் தரப்பு பிரதிநியாயங்களை வாதிட அதில் முயலவில்லை. ஏன் என்றால் அவை தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பவர்கள் தான் HRW, ICG போன்றவர்கள். அவர்கள் முன்னணி சர்வதேச சக்திகளின் உள்நோக்கங்களிற்கு வெள்ளை பூசி நியாயம் கற்பிக்க என உருவாக்கப்பட்ட நிழல் அமைப்புகள். இவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்ப்பது எமது தவறு. இந்த உண்மையை அவர் தெளிவுபடுத்துகிறார் தனது விமர்சனம் மூலம்.

2002 உடன்படிக்கைக்குள் சென்ற காலத்தில் இருந்து எமது சவால் சர்வதேசத்தின் முழு அங்கீகாரத்தைப் பெறுவது என்பதை நோக்கியதே. சர்வதேசமும் தலையிட்டது நாம் சிறீலங்காவால் கட்டுப்படுத்த முடியாத சக்த்திகளாகி விட்டோம் எம்மை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்கே அன்றி எமது பிரச்சனைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர அல்ல. எந்தவித வெளிப்படையான அங்கீகாரங்களும் அற்ற காலத்தில் மிக முக்கியமாக தலையீடு செய்வதற்குரிய நம்பிக்கையை சர்ச்சையில் உள்ள இருதரப்பிடமும் வெல்ல வேண்டிய தேவை சர்வதேசத்திடம் இருந்த பொழுது எமது நியாயப்பாடுகளை ஏற்றுக் கொண்டதாக காட்டிக் கொணட சமிக்கைகளை தலையீட்டிற்கு பின்னரான இன்றய காலப்பகுதியோடு ஒப்பிட முடியாது. இன்று அவர்களது தேவையும் நிகழ்ச்சி நிரலும் தலையீட்டிற்கு முன்னரானது போன்றது அல்ல. எனவே இன்று எமது நியாயப்பாடுகள் எழுத்துக்களிற்கு அவர்களின் பதில் முன்னர் போல் இருந்தால் எமது நியாயப்பாடுகளை கோரிக்கைகளை அங்கீகரித்து சர்வதேசம் வெளிப்படையாக நடந்து கொணடால் அது தமிழீழம் நோக்கிய அங்கீகாரமாக அறுவடை செய்யும் நிலையில் நாம் உள்ளோம். அது சர்வதேசத்தின் தற்போதைய எதிர்பார்ப்புகளிற்கும் நிகழ்ச்சி நிரலிற்கும் முரணானது. சர்வதேசத்தின் அந்த எதிர்பார்ப்பை மாற்றி எமது இறுதி இலட்சிய எதிர்பார்ப்போடு ஒன்றிணைய வைப்பது தான் இன்று எமக்குள்ள சவால். அது பல பரிமாணங்களை கொண்டது. அவற்றை ஒற்றுமையாக எதிர் கொள்ளுவது தான் அனைத்து தமிழரதும் இன்றய கடமை. இந்தக் கடமையைத்தான் தேசிய தலைவர் செய்யச் சொல்லி கடந்த மாவீரர் தின உரையில் கேட்டுக் கொண்டார்.

எவ்வாறு இந்தியா ஆதரவளித்து உதவிகள் செய்து எமது நம்பிக்கையை பெற்று தன்னை பிரச்சனையின் ஒரு தரப்பாக புகுத்திய பின்னர் எம்மீது திரும்பி தீர்வை திணித்து எம்மை பலவீனப்படுத்தும் திட்டத்தை அரங்கேற்ற முற்பட்டதோ அது போன்ற ஒரு சவாலைத் தான் இன்று சர்வதேச மட்டத்தில் எதிர் கொள்கிறோம். அன்று எமது போராட்டத்தின் ஆரம்பநிலை வழர்ச்சிக்கு இந்தியாவின் உள் நோக்கங்களை தெரிந்து கொண்டும் ஆதரவுகளையும் உதவிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. இன்று எமது இறுதி இலட்சியமான சுதந்திர தமிழீழத்தை பனிப்போருக்கு பின்னரான கிட்டத்தட்ட ஒருதுருவ உலக ஒழுங்கில் சர்வதேச அங்கீகாரத்தோடுதான் அடையலாம். அதற்கு களமமைக்க சர்வதேசத்தின் உள்நோக்கம் தெரிந்தாலும் அவர்களது தலையீட்டை உள்வாங்குவது தேவையானது. அவர்களை உள்வாங்குவதால் கிடைக்கும் ஒரு பகுதி அங்கீகாரத்தை தளமாக கொண்டு எம்மைப் பலப்படுத்தி நிகழ்ச்சி நிரலை எமக்கு சாதகமாக்கி எமது இறுதி லட்ச்சியத்தை அடைவது பற்றித்தான் ஒரு உண்மையான தமிழ்த் தேசியவாதியின் கவனம் இருக்க வேண்டும். சர்வதேசத்தினதோ பிராந்திய சக்திகளினதோ சிங்களத்தினதோ நிகழ்ச்சி நிரலிற்கு விலைபோய் அதை விற்று மக்களை ஏமாற்றுவது தேசத்துரோகம். நீர் யாருடை நிகழ்ச்சி நிரலிற்கு உழைக்கிறீர் ?

பட்டினி போட்டு எமது மக்கள் வாட்டி வதைக்கப்பட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைகளின் மூலம் எமக்கு விடுதலை கிடைக்காது என்பது நிரூபிக்கபட்டு விட்டது. எமது மக்களை அழிப்பதுதான் சிறிலங்கா அரசின் நோக்கமாகும்.

இந்த நிலையில் நாம் எமது உறவுகளை காப்பாற்றி உரிமைகளை வென்றெடுப்பதற்கு போராளிகளாக இளைஞர்கள், யுவதிகள் அணிதிரண்ட வண்ணம் உள்ளனர். இது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் நாம் எமது பலத்தை வலுவாக்கி விரைவில் விடுதலையை வென்றெடுப்போம் என்றார் கட்டளைத் தளபதி நகுலன்.

http://www.eelampage.com/?cn=30268

அபிவிருத்தி என்ற போர்வையில் குறுகிய கால அமைதியை தமிழர் தலைமை நாடினால், தமிழ்த் தேசியமும், தமிழர் தாயகமும் இல்லாமல் போய்விடும்

மேற்கோளில் இருப்பது- கிருபன்ஸ் கருத்து....எங்கள் பக்கமுள்ளது!!

அதே வேளை - சமாதானம் - உங்களின் கருத்தும் - வெறுமனே - ஒதுக்கி தள்ளிவிட - கூடியதும் அல்ல!

சர்வதேச நெருக்கடிகளை - அல்லது அச்சுறுத்தல்களை - எப்பிடி எதிர் கொள்ளலாம் - ?

அதிலிருந்து- மீளலாம்?

எங்க பிரச்சினையை விடுங்க- பொதுவாய் - இப்பிடி ஒரு சிக்கலில் - உலகமெல்லாம் - இருப்பவர்களுக்கு -உங்கள் -ஆய்வறிக்கை என்ன தீர்வை-ஆலோசனையை - வலியுறுத்துது?-சமாதானம்? :lol:

அடக்குமுறையின் - சிக்கலில் - மாட்டிக்கொள்பவர்களெல்லாம்.....

...

செய்யகூடியது... இனி என்னவா இருக்கும்?

நீங்கள் சொல்லிய எடுத்துக்காட்டுக்களை விடுத்து - முயற்சிக்கபோனால்..?

சரணடைதலா? -ஒப்புக்கு - விட்டுக்கொடுத்தலா? - அல்லது-

ஆளுமை என்பது - ஒரு சாராருக்கே மட்டும் உரியதென்பதா?

உங்கள் -பதில் - வரும் என்ற நம்பிக்கையில்!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போர் நடக்குதோ இல்லையோ..சமாதானம் நிறைய பறிச்சுக் கொண்டு போகிறது என்பது மட்டும் நடக்கிறது. இறுதியாக சம்பூர் இந்தியாவின் நலன்களுக்காக கைமாற்றப்பட்டும் ஆகிற்று..! நேற்றுப் பிடித்த சம்பூரில் இன்று அதிரடி அபிவிருத்தி..! இதென்னவோ வொய் ஒவ் அமெரிக்காவுக்கு குத்தகைக்கு விட்ட கதைதான்...........! தமிழீழம்..பிச்சுப் பிச்சு..அப்பமாகி நிற்கிறது..! :unsure:

இறுதிப் போர் நடக்குதோ இல்லையோ..சமாதானம் நிறைய பறிச்சுக் கொண்டு போகிறது என்பது மட்டும் நடக்கிறது. இறுதியாக சம்பூர் இந்தியாவின் நலன்களுக்காக கைமாற்றப்பட்டும் ஆகிற்று..! நேற்றுப் பிடித்த சம்பூரில் இன்று அதிரடி அபிவிருத்தி..! இதென்னவோ வொய் ஒவ் அமெரிக்காவுக்கு குத்தகைக்கு விட்ட கதைதான்...........! தமிழீழம்..பிச்சுப் பிச்சு..அப்பமாகி நிற்கிறது..! :unsure:

கவலைபடதேயுங்கோ நெடுக்ஸ். அப்படியே சம்பூரை அனல் மின் நிலையத்தோட சேர்த்து அமுக்கிட மாட்டம்? <_< தமிழீழத்துக்கு எப்படியும் ஒரு அனல் மின் நிலையம் தேவை தானே? 'நடப்பவை எல்லாம் நன்மைக்கே'

Edited by mooki

  • தொடங்கியவர்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=247578

உமது தனிப்பட்ட அவதூறலை தவிர்த்து நீர் நீட்டி முழக்கி எழுதியுள்ளதில் சர்வதேச சமூகம் பற்றி விடயம் ஒன்றுதான் குறைந்த பட்சம் தேறக்கூட ஒரு அரசியல் கருத்து. அது பற்றியும் அடிப்படை தெளிவில்லாமல் கனக்க உளறியுள்ளீர். இருப்பினும் உமது கோளாறு ஓரளவுக்காவது திருந்த குறுக்காலபோவான் கீழ் எழுதியுள்ளதை மீண்டும் நீர் வாசிக்குமாறு சிபார்சு செய்கிறேன்.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=247586

கிருபன் நீர் குறிப்பிட்டது போல் புத்தளம், அம்பாறை போன மாதிரி இன்று எம்கண்முன் இந்திய அமெரிக்க மறைமுக ஒப்புதலுடன் திருகோணமலையும் போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிடும் போல் உள்ளது. அப்போதும் சிலர் கடைசி பஸ்சை தாம் தவறவிட்டதை உணராது ஏசி பஸ் வரப்போவதாக காத்திருப்பார்கள். அநியாயம் என்னவென்றால் பலர் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அன்றும் சொல்வதற்கும் செய்வதற்கும் நிறைய இருக்கும் ஏன் உல்லாசம் செல்வதற்கும் பல இடங்கள் இருக்கும் ஆனால் தாயகத்தில் வாழும் அவர்களின் நிலை என்ன?

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=247586

நீர் குறிப்பிட்ட சர்வதேச விவகாரகள் பற்றி ஓரளவு என்னால் ஒத்துக்கொள்ள முடிகிறது.

திரு திருநாவுக்கரசு சொன்னது போல் 80கள் பனிப்போர் காலகட்டம் அடுத்து 90கள் பனிப்போருக்கு பின்னான காலகட்டம் 2000கள் பனிப்போருக்கு பின் பின்னான காலகட்டம் என்பது சர்வதேச நலன் பொதுவாக ஏறக்குறைய ஒற்றைப்பரிமாணமாக தோன்றம் பெற்று நிற்கின்ற இன்றைய உலக ஒழுங்கில் அதற்கு எதிராக செயல்வினையாற்ற வல்ல சக்திகள் இரண்டு மட்டுமே உண்டு. 1.) இஸ்லாமிய அடிப்படை வாதம் 2.) லத்தீன் மற்றும் தென் அமெரிக்காவில் தோன்றம் பெற்றுள்ள புதிய இடதுசாரிய பாதிப்புள்ள ஜனநாயக சக்திகள் ஆகும். எமது போராட்டம் உறவு வைத்துக்கொள்ளக்கூடியது அல்ல என்பதை எடுத்த எடுப்பிலேயே முதலாவது சக்தியை நிராகரிக்க நீரும் நானும் விவாதிக்கவேண்டியது இல்லை. ஆனால் இரண்டாவது உடனான சாத்தியப்பாடுகள் புலிகளை பொறுத்தவரை வாய்ப்புகள் குறைவு என்றே சொல்லமுடியும்.

Counter-productive militarism பற்றி ஆழமான ஆய்வுகள் முன்னெப்போதும் செய்ததைவிட நாம் நிறைய கவனம் செலுத்த வேண்டும். 2002க்கு பின்னான புலிகளின் இராணுவ நகர்வுகள் சர்வதேச ரீதியாக எமக்கு எதிராக நிறைய அழுத்தங்களை தந்துள்ளது. மாவிலாறு, மூதூர், சம்பூர், முகமாலை, வாகரை எனத் தொடரும் அரசின் இராணுவ முன்நகர்வுகள் புலிகளின் ஆள்புல கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச எல்லைகள் ஆண்டுக்காண்டு மாறிக்கொள்ளவேண்டி இருப்பின் சர்வதேசம் குறைந்தபட்டம் ஏற்றுக்கொள்ளகூடிய புலிகளின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பை தக்கவைத்துக்கொள்ளமுடியாது. இது புலிகளின் கட்டுப்பாடு பிரதேசங்களில் இருக்கும் மக்களுக்கு பாரிய சமூக பொருளாதார உளவியல் அழுத்தத்தை அதிகரிக்கும் .இதனால் ஏற்படக்கூடிய பாரிய மக்கள் இடப்பெயர்வு ஆபத்தான படைவலுச்சம நிலையைதோற்றிவிக்கும். இதற்கு உதாரணம் தேடி வேறெங்கும் ஓடத்தேவையில்லை. வாகரை எம்கண்முன் மிகச்சிறந்த உதாரணாமாகும்.. இனி மீண்டும் 80கள் போல் கரந்தடி யுத்திகள் பயன் தராது மட்டும் அல்ல மக்களுக்கு மிக அதிக அழிவையும் எரிச்சலையும் தரக்கூடியன.

திரு திருநாவுக்கரசு கடந்த நிலவரம் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டது போல புதிய அரசியல் அணுகுமுறை இனிவரும் காலத்தின் தேவை.

சும்மா அலம்பாமா, உம்மிடம் கேக்கப்பட்ட கேள்விக்குப் பதில் என்ன?

நீர் இப்போது புலிகள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர், நீர் சொல்லும் புதிய அணுகுமுறை என்ன?

நீர் இதற்கு நேரடியாக விடை சொல்லி ஒரு ஆரோக்கியமான கருத்தாடலுக்குத் தயாராக இல்லாத விடத்து உமது கருத்தாடலின் நோக்கம் பற்றிய கேள்வி திரும்பத் திரும்ப எழுப்பப்படும்.

தலைவரின் மாவீரர் உரையில் இருந்து சில பகுதிகளைத் திருப்பத் தருகிறேன் அதில் உமது சந்தேகங்களுக்கான எல்லா விடைகளும் இருக்கிறது.புலிகள் இராணுவ ரீதியாக பலகீனம் அடைந்து விட்டார்கள்,அவர்கள் இப்போது இருக்கும் கட்டுப் பாட்டுப் பகுதிகளையும் இழக்கப்போகிறார்கள் என்பது தான் உமது பிரச்சாரத்தின் உட்கிடை.இப்படியான பிரச்சாரத்தை இப்போது செய்பவர்கள் இலங்கை அரசங்கமும் அதன் அடிவருடும் ஒட்டுக் குழுக்களும் அவர்களின் புலத்தில் உள்ள முகவர்களும்.உந்த ஏசி பஸ் சும்மா பஸ் என்னும் டிபிசி தேனீ பாணியிலான அரசியல் முதிர்ச்சி அற்ற அரைவேக்காட்டுக் கதைகளை அந்த அந்த தளங்களில வச்சுக் கொள்ளும்.இப்படியான அரைவேக்காட்டு கோமாளித்தனங்களுக்குத் தகுந்த பதிலடி வழங்கப் படும்.என்ன பஸ்ஸில போக வேண்டுமெண்டு பிரயாணம் செய்யப் போறவை தான் முடிவு எடுக்கமுடியும்.உம்மைப் போல புலத்தில இருந்து கொண்டு நக்கித் தின்னும் எலும்பு பொறுக்கியள் இல்ல.

இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.ஏனெனில் இதற்கான பதிலை புலிகள் களத்தில் வெகு விரைவில் அழிப்பார்கள், வழக்கம் போல நீரும் ,உமது எசமானர்களும் வாயடைத்துப் போவீர்கள் என்பது திண்ணம்.ஜெயசுக்குறு, அக்னி கெஹெல முதல் , இப்படி முன்னர் பலதடைவகள் நடந்தும் இன்னும் உங்களைப்போன்றவர்கள் வரலாற்றில் இருந்து பாடம் படிக்கத் தயாராகவில்லை என்பதில் இருந்து தெரியும் ஒரே உண்மை, உங்கள் அடிமனதில் புலிகளின் போராட்டம் தோற்க வேண்டும் என்று இருக்கிற ஒரு நப்பாசை தான் ஒழிய வேறொன்றும் இல்லை.உங்களைப்போன்றவர்கள் எழுதுவது புலிகளின் போராட்டம் அழிய வேண்டுமென்ற எண்ணக்கிடைக்கியில் இருந்து தான்.ஆனால் புலிகளின் போராட்டம் அழிந்தால் அது தமிழர்களின் அழிவாக இருக்கும் என்பதுதான் யதார்த்தம்.இதற்காகத் தான் எதோ போராட்டத்தின் மீது கவலை கொள்பவர் போல் நீர் பூசி மொழுகி எழுதும் எழுத்து.உம்மைப் போன்ற பலரைக் கண்டது எமது போராட்டாம்.

நாம் எமது போராட்டத்தின் முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம்.புலத்திலும்,களத்

ஓட்டை விழுந்த கப்பல்

  • தொடங்கியவர்

சசிதா குறிப்பிட்ட 'ஓட்டைக்கப்பல்' என்றதும், இன்று சென்னையில் இருந்து யாழ்க்குடா நாட்டுக்கு அனுப்பப்பட்ட உணவுக் கப்பலின் பின்னுள்ள அரசியல் முக்கியத்துவம் பற்றி சில விடயங்கள் குறிப்பிட வேண்டும். 1987 க்கு பின் இருபது ஆண்டுகள் கடந்து மீண்டும் இந்தியா தமிழர் தாயகத்துக்கு உணவு அனுப்புகிறது. அன்று வானத்தால் வந்து தந்தது. இன்று கடலால் வந்து தருகிறது. காலவேறுபாடு மட்டும் அல்ல பிராந்திய அரசியலில் இந்தியா முன்னை இருந்ததவிட பலமடங்கு பலம் ஆதிக்கும் செலுத்தும் சக்தியாக வளர்ந்துள்ளது. அமெரிக்க இந்திய அரசியல், பொருளாதார உறவுகள் முன்னெப்போதும் இருந்ததை விட நெருக்கமாகவும் ஆழமாகவும் உள்ளன. இந்நிலையில் இந்திய அரசின் ஒரு அமிலப்பரிசோனையாகவே இதனைக் கொள்ளவேண்டும்.

புலிகள் இந்திய உணவுக்கப்பலுக்கு அனுமதி கொடுப்பார்களாயின் தற்காலிகமாக ஒரு தடவை ஏ9 திறக்க அனுமதி மறுத்த விடயத்தில் அரசு இராஜதந்திர வெற்றி பெற்றதான நிலை ஏற்படும். அல்லது இந்திய உணவுக்கப்பலுக்கு அனுமதி மறுத்தால் அரசு பேருவகைகொள்ளகூடிய வகையில் புலிகள்-இந்திய உறவில் விரிசல் ஏற்படும்.

  • தொடங்கியவர்

Food from India heading for beleaguered Jaffna

PK Balachandran

Colombo, January 4, 2007 22:28 IST

In a politically significant move, a shipload of essential food items from India was heading towards Jaffna in north Sri Lanka on Thursday, to relieve the food shortage there.

According to the Sri Lankan Ministry of Social Welfare, the Multi-Purpose Cooperative Societies would distribute the grocery imported by the government of Sri Lanka.

The import of dhal, sugar, salt and other necessities from Chennai was arranged by the Minister of Social Welfare, KN Douglas Devananda, during his recent visit to India.

The food items would bring great relief to the 600,000 Tamils of Jaffna during the current festive season.

They had been facing a severe shortage of food and medicines after the A9 highway, linking Jaffna with South Sri Lanka, was blocked by the Sri Lankan government for security reasons at Muhamalai in August 2006.

The government of Sri Lanka wanted India to supply Jaffna, but there was reluctance on the part of India to do so directly, because of the absence of a security guarantee from the LTTE.

The LTTE had been of the view that any import of food from India would only result in the postponement of the opening of the A9 highway, which for it was also a military as well as a political necessity.

The government suggested the use of the sea route instead, but the LTTE said that it would not allow it.

However, government ships had been plying between Trincomalee and Jaffna with food.

According to the Sri Lankan military spokesman, Brig Prasad Samarsinghe, the supply of food from the south by sea, had already met 85 per cent of Jaffna's needs by the end of December 2006.

The realisation of the long-standing plan to bring food from India directly to Jaffna could be attributed to the gathering movement in Tamil Nadu to alleviate the suffering of the Tamils in Jaffna.

The Centre and the Tamil Nadu government had no option but to do all that they could to reach food to Jaffna. And the LTTE might have had no option but to allow the import.

http://www.hindustantimes.com/news/7598_18...00500020002.htm

சசிதா குறிப்பிட்ட 'ஓட்டைக்கப்பல்' என்றதும், இன்று சென்னையில் இருந்து யாழ்க்குடா நாட்டுக்கு அனுப்பப்பட்ட உணவுக் கப்பலின் பின்னுள்ள அரசியல் முக்கியத்துவம் பற்றி சில விடயங்கள் குறிப்பிட வேண்டும். 1987 க்கு பின் இருபது ஆண்டுகள் கடந்து மீண்டும் இந்தியா தமிழர் தாயகத்துக்கு உணவு அனுப்புகிறது. அன்று வானத்தால் வந்து தந்தது. இன்று கடலால் வந்து தருகிறது. காலவேறுபாடு மட்டும் அல்ல பிராந்திய அரசியலில் இந்தியா முன்னை இருந்ததவிட பலமடங்கு பலம் ஆதிக்கும் செலுத்தும் சக்தியாக வளர்ந்துள்ளது. அமெரிக்க இந்திய அரசியல், பொருளாதார உறவுகள் முன்னெப்போதும் இருந்ததை விட நெருக்கமாகவும் ஆழமாகவும் உள்ளன. இந்நிலையில் இந்திய அரசின் ஒரு அமிலப்பரிசோனையாகவே இதனைக் கொள்ளவேண்டும்.

புலிகள் இந்திய உணவுக்கப்பலுக்கு அனுமதி கொடுப்பார்களாயின் தற்காலிகமாக ஒரு தடவை ஏ9 திறக்க அனுமதி மறுத்த விடயத்தில் அரசு இராஜதந்திர வெற்றி பெற்றதான நிலை ஏற்படும். அல்லது இந்திய உணவுக்கப்பலுக்கு அனுமதி மறுத்தால் அரசு பேருவகைகொள்ளகூடிய வகையில் புலிகள்-இந்திய உறவில் விரிசல் ஏற்படும்.

மொதத்தில் புலிகளுக்குக் கிடைத்த இன்னொரு தோல்வி என்று நிறுவுவதில் உமக்கு சந்தோசம் வெளிக்கிழம்புது. கனக்க அவசரப்படாதையும் கெதியில் என்ன நட்டக்குது என்பது வெளிக்கும்.உமது நப்பாசைகள் அப்படியே வெறும் ஆசைகளாகவே இருக்கும். ரம்புக்கல சொன்ன இலங்கையின் இறையாண்மைக்கு என்ன நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

பலே! எப்போதுமே இந்தியாவுக்கும் தமிழீழத்துக்கும் பிரிவினை இருக்க வேண்டும் என்ற சிந்தனை தெளிவாகத் தெரிகின்றது. இரண்டு தரப்புமே ஒரு காலத்தில் தப்புச் செய்தனர். ஆனால் தொடர வேண்டும் என்ற நிலையில்லை.

இந்தியா நலனிற்கு எதிராக நாமும், நமது நலனுக்கு எதிராக இந்தியாவும் செய்யாத நிலையில் உறவைப் புதுப்பிபதில் தப்பில்லை. இன்றைக்கு யாழ்பாணத்துக்கு உணவு போகும் விடயத்தில் இந்தியா நேரடியான தலையீடு இல்லை. உணவுப்பொருட்கள் இந்தியாவில் இருந்து வருகின்றன என்பது மட்டும் தான் உண்மை. உணவுப் பொருட்கள் மீதான அனைத்துப் பொறுப்புக்களும் யாழ்பாண வர்த்தகர்கள் செய்கின்றாரக்ள்.

ஒரு பக்கம் யாழ்பாணத்துக்கு உணவுப் பொருள் போகுதில்லை. மக்கள் பட்டினியால் சாகினம். புலிகள் என்ன செய்கின்றார்கள் என்று கேள்வி கேட்பது. மறுபக்கம் யாழ்பாணம் உணவுப் பொருட்கள் போகாமல் தடுக்க வேணும் என்ற அட்டகாசம். ஏதோ எந்த நடவடிக்கையும் புலிகளுக்கு எதிராகவே அமைந்தால் சரி என்ற மனப்பான்மைக்கு சூப்பர்.

வெளியில் பிரிவினை, ஒற்றுமை தெரிய வேண்டுமின்றில்லை. எது நடக்கின்றதோ அது நல்லாவே நடக்கின்றது. அவ்வளவு தான்

  • தொடங்கியவர்

நான் இளவயதில் இருக்கும் போது எமது ஊரில் எம் ஜி ஆர் அல்லது சிவாஜி என்றுதான் கிரிக்கெற் விளையாடினால் என்ன கிளித்தட்டு விளையாடினால் என்ன இரு கன்னமாக பிரித்து விளையாடுவோம்.

என்ன ஒற்றுமையோ தெரியவில்லை யாழ் களத்திலும் அதே இரு பிரிவுகள் போல் இரு கன்னங்கள். ஏட்டிக்கு போட்டியாக கருதெழுதும் சிலர் தாம் மட்டும்தான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிப்பதாவும் அவர்களது கருத்துகளை கேள்விக்கு உட்படுத்துபவர்கள் விரோதிகளாகவும் உருவகப்படுத்த முனைகின்றனர். இவர்களது கருத்துகளில் உள்ள பலவீனங்கள் சுடிக்காட்டப்படும் போதெல்லாம் நான் புலிகளை பலவீனப்படுத்துவதாக பயஸ்கோப் காட்டும் இவர்கள் தமது கருத்துகள் அரசியல் அடிப்படை அறிவுக்கு கன தூரத்தில் இருப்பதை தொடர்ந்து ஏற்க மறுத்து வருகிறார்கள்.

ஏ-9 பாதையை ஒரு தடவை திறக்க அரசு கோரியதை புலிகள் சாதகமாக பார்த்திருந்தால் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்துக்கு உணவு போகும் ஒரே ஒரு தரை வழி பாதையின் கட்டுப்பாடு புலிகளின் கைகளில் இருந்திருக்கும் என்பதைதான் நான் முன்பு சுட்டிக்காடி இருந்தேன். அதற்கு நாரதரும் தூயவனும் ஏதோ எனது மனதை எக்ஸ்ரே படம்பிடித்து பார்த்து விட்டு கருத்தெழுதுவது போல் புதுப் புது புலுடாக்களை விடுகின்றார்களே அன்றி புதிய விடயங்களை எதையும் கருத்து களத்தில் முன்வைக்கவில்லை. அதற்குரிய கைச்சரக்கும் அவர்களிடம் இல்லை.

Edited by SAMATHAANAM

சமாதானம் அண்ணாச்சி கைச்சரக்கு ,எம்ஜியார், சிவாஜி என்று படம் காட்டாமா கேட்ட கேள்விக்கு எங்க உம்மட பதில்?

உமது புதிய அணுகுமுறை என்ன? அதற்காக நீர் என்ன செய்துள்ளீர்?

சரக்கு யாரிட்ட இல்லை யாரிட்ட இருக்கு எண்டு நீர் பதில் சொன்னாப்பிறகு பாப்பம்.அரசியல் கதைக்க முதலில் உமது அரசியல் நிலை என்ன என்று தெரிய வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சமாதானம்

ஏ9 பாதையைத் திறந்திருந்தால் என்று சொல்கின்றீர்கள். இதற்கு இளந்திரையன் சொன்ன பதில் ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன். 35 000 பேர் வாழ்ந்த வாகரைக்கு 130 லொறிகளே போதது என்ற நிலையிருக்கும்போது, 6 லட்சம் பேர் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக உள்ள யாழ்பாணத்திற்கு 400 லொறிகள் என்றால் அது ஒரு நாடகமே என்று புரிந்து கொள்ளாத அளவு முட்டாள்கள் அல்ல. ஒரு தடவை வேண்டாம். தொடர்ந்து திறவுங்கள் என்று தானே புலிகள் சொல்கின்றார்கள். அதை ஏற்று சிங்கள தேசம் நடக்க வேண்டியது தானே. ஒரே நாடு. தமிழ்மக்கள் ஒரே தேசத்து மக்கள் என்று சொல்லிக் கொள்கின்ற சிங்கள தேசம் ஏன் தமிழ்மக்கள் விடயத்தில் மட்டும் பாரபட்சமாக நடக்கின்றது? இவ்வாறன சிங்கள அரசோடு எவ்வாறு சேர்ந்து வாழ முடியும்?

அன்று ஏ9 பாதையை ஒரு தடவை திறக்கின்ற கதையை விடக் காரணம். அப்போதைய இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் சிறிலங்கா தேசம் இது குறித்து கண்டிக்கப்படலாம் என்ற அச்சத்தால் தான். பின்னர் இவ்வாறன அரசியலைச் செய்தபோது அமெரிக்கா, இவ்விடயத்துக்கு பாராட்டுத் தெரிவிப்பது போலக் கதை விட்டது.

எனவே தனது அரசியல் நாடகங்களுக்காக சாத்தியமற்ற கதைகளை சிறிலங்கா அரசு செய்கின்றபோது அதை நம்பி ஏமாறும் ஏமாளியாக, அல்லது நியாயப்படுத்தும் ஆளாக நீர் இருப்பது வேதனை தான். பூநகரிப் பாதையால் அனுப்பலாம் என்றது சிங்கள அரசு. நானும் அதைக் கூகிளில் பார்த்தேன். பல இடங்களில் பாலம் உடைந்து கடல்நீர் தெரிகின்றது. இது கூடச் சாத்தியமற்ற கதைகளை வைத்து உலகினை ஏமாற்றும் செயல்தான்.

யாழ்பாணத்துக்கு ஒரு தடவை அனுப்பும்போது செல்கின்ற வாகனங்கள் எவ்வாறு திரும்பி வரும் என்பதற்கு பதில் இல்லாத போதே தெரிந்து கொள்ள வேண்டும் எவ்வளவு தூரம் சாத்தியமற்றதை அரசியலாக்க முயல்கின்றது என்று. அதை விட சீல் வைத்த லொறிகளாம். அதில் என்னத்தைக் கொண்டு போகின்றார்கள் என்று தெரியாமல், ..... ஏன் ஆயுதத்தைக் கூடக் கொண்டு போனால் யாருக்குத் தெரியும்?

------------------------

உம்மை நாம் எக்ஸ்ரோ பிடிக்கின்றோம் என்று சொல்லி எம்மிடம் சரக்கில்லை என்று நீர் எக்ஸ்ரே பிடிக்கின்றீர். செம லொள்ளுப்பா நீர்! புதிய விடயம் கதைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இடைக்கால நிர்வாகசபை குறித்து குப்பை கொட்டுகின்றீர் என்று தெரிந்தால் அது பற்றி சீரியசாக விவாதிக்கத் தேவையில்லை. நகைச்சுவைப்பிரிவுக்கு மாத்தி விடலாமே!

----------------------------------

நீர் சொல்வது போல அணி பிரித்து இங்கே யாரும் கதைக்கவில்லை. எனக்கு என்ன தோன்றுகின்றதோ அதைச் சொல்கின்றோம். அவ்வளவே, இங்கே நாரதரும் நானும் ஒரே கருத்து என்பதற்காக எல்லா விடயங்களிலும் அல்ல. மதரீதியான கருத்துக்களில் நாங்கள் நேர் எதிரான கருத்துக்கள். எனவே கேட்ட எந்தக் கேள்விக்குமே பதில் அளிக்க முடியாவிட்டால் ஏதோ ஒரு காரணத்தைத் தேடுவது சரியல்ல.

நீங்கள் வந்த காலம் முதலே யாழ்களத்தில் இடைக்கால நிர்வாக சபை தான் சரி என்று விவாதிக்கின்றீர்கள். அவ்வாறாயின் அது எவ்வளவு தூரம் எமக்குச் சாத்தியம் என்று கேட்டோம். நீங்கள் இது வரை பதிலளிக்காமல் உம்மை நாம் தாக்குவதாக உரைக்கின்றீர்கள். நான் உங்களிடம் வந்த காலம் முதலே அவதானித்தது, தமிழீழம் தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வல்ல, கிடைக்காது என்ற மாதிரியான சிந்தனைகளை யாழ்களத்தில் விதைக்கின்ற செயற்பாடே. ஒஸ்லோப் பிரகடனம் என்ற ஒன்றே இல்லை என்று பாலா அண்ணா சொன்ன பிற்பாடும், நீங்கள் பாலா அண்ணாவின் மறைவின் போது, இவ்வாறு சொன்னீர்கள்.

....

இவரது அரசியல் வரலாற்றில் இவரின் சாதனையாக நான் கருதுவது தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்ளக்கூடிய 'ஒஸ்லோ ஒப்பந்தம்' 2002 இல் உருவாக்க மிக கடினமாக உழைத்தது மட்டுமல்ல தனது இறுதிக்கால அரசியல் நம்பிக்கையில் மிக உறுதியாகவும் இருந்தார்.

....

அப்போது அந்தச் சோகத்தில் அது பற்றிக் கதைக்க கூடாது என நினைத்தேன். ஆனால் பாருங்கள். அந்தத் துன்பமான நிகழ்வைக் கூட உங்களின் சொந்தக் கருத்தை நியாயப்படுத்துவதற்காகக் பாவிக்கின்றீர்கள் என்று.

உங்களின் கருத்துப்படி இடைக்கால நிர்வாகம் தீர்வு என்று கொள்வோம்.

அந்தத் தீர்வை நம்பித் தமிழ்மக்கள் எல்லாவற்றையும் கைவிடுகின்றார்கள். ஆனால் சிங்கள தேசம் வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கு செய்தது போல, ( சொல்லப் போனால் வடக்கு-கிழக்கு மாகாணசபையைக் கலைக்க வேண்டுமானால் தேர்தல் வைக்க வேண்டும் என்ற ஒப்பந்த விதியைக் கூட சிங்கள அரசு கடைப்பிடிக்கவில்லை) இடைக்கால நிர்வாக சபையையும் கலைக்காது என்று எப்படி நிச்சயம்?

அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தால் இப்போது எவ்வளவு தூரம் இந்தியா மாகாணசபை கலைப்பின் போது மௌனமாக இருக்கின்றதோ, அவ்வாறே உலகநாடுகளும் மௌனமாகவே இருக்காது என்று என்ன நிச்சயம்? பின்பு தமிழன் போரை ஒரு துப்பாக்கியில் இருந்து தொடங்கி 20,30 வருடம் கஸ்டப்பட்டு போராடி முடிய, திரும்பவும் உலகநாடுகள் தமிழனின் தலையில் ஒன்றைக் கட்டிவிட முயல்வார்கள். அதையும் நம்பி அடுத்த தலைமுறை ஏமாற வேண்டியது தான்.

தமிழீழம் என்பதைத் தமிழனாகத் தேடிக் கொள்ளவில்லை. அது அவனை சிங்கள தேசம் அடிமையாக்க முனைந்ததால் எழுந்தது. எனவே எமக்குத் தமிழீழம் தேவையா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு சிங்கள தேசத்தின் நடவடிக்கைகளில் தான் தங்கியுள்ளது. ஆகவே புத்திமதி சொல்ல வேண்டிய தேவை இருந்தால் அவர்களுக்குப் போய்ச் சொல்லுங்கள். தமிழீழத்தைத் தவிர, வேறு எந்தத் தீர்வையும் சிங்கள தேசம் விட்டுவைக்கவில்லை

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.