Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் வீராங்கனை பாலியல் சோதனையில் தோல்வி

Featured Replies

_42363087_santhisafp203.jpg

தோஹாவில் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஒருவர், ஆணா, பெண்ணா என்று அறிவதற்கான பாலியல் சோதனையில் தோல்வியடைந்ததால், அவரது பதக்கம் மீளப்பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

800 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய சாந்தி சௌந்திரராஜன் எனப்படும் தமிழகத்தைச் சேர்ந்த இந்த வீராங்கனையின் திறன் குறித்து, ஏனைய போட்டியாளர்களும், விளையாட்டு அதிகாரிகளும் கேள்வியெழுப்பியதை அடுத்து, அவர் மருத்துவர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

சாந்தி, ஒரு பெண்ணுக்கான பாலியல் நடத்தைகளைக் கொண்டிருக்கவில்லை என்று சோதனை முடிவுகள் கூறுகின்றன.

சாந்தியிடம் செய்யப்பட்ட பாலின சோதனையில், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஹார்மோன் அளவு சாந்தியிடம் இல்லை என்று தெரியவந்திருப்பதாகவும், இதனால் அவரிடமிருந்து பதக்கத்தைத் திரும்பப் பெற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய பின்னணியில், தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த பரிசுப்பணம் அவருக்கு அளிக்கப்படுமா என்கிற கேள்வி

20061218162655santhi152c.jpg

ஆனால் அவருக்கு அறிவித்திருந்த பரிசுத்தொகை திட்டமிட்டபடி வழங்கப்பட்டதாக அறிவித்தார் தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான்.

சாந்தியிடம் செய்யப்பட்ட பாலின சோதனை முடிவுகள் பற்றி தமிழக அரசுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கையிலிருந்து சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த குடும்பத்தில் பிறந்த மூத்த பெண்ணான சாந்தி, செங்கல் சூளையில் வேலை செய்யும் தினக்கூலி பெற்றோரின் வறுமைசூழலில் ஒருவேளை கஞ்சி குடித்து, விடாமுயற்சியால் ஓடி, சர்வதேச சாதனை படைத்ததாக, அவரை கடந்த ஒரு வாரமாக தமிழக, இந்திய ஊடகங்கள் பாராட்டி மகிழ்ந்தன. ஆனால் அவர் தமிழ்நாட்டுக்கு திரும்பிய வேளை, அந்த சந்தோஷம் மறைந்து சர்ச்சைக்கு பதில்சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்.

20061218162005santhi152b.jpg

இந்த சர்ச்சை குறித்து இது வரை இந்திய தடகள சங்கத்திற்கோ அல்லது தமிழ்நாடு தடகள சங்கத்திற்கோ எந்த வகையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை என அகில இந்திய தடகள சங்கத்தின் துணைத் தலைவர் வால்டர் தேவாரம் கூறுகிறார்.

அவ்வாறு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கிடைக்க பெற்றால் பிறகு அவரால் மகளிர் பிரிவில் பங்குபெற முடியாது எனவும் அவர் கூறுகிறார். மேல் முறையீடு செய்வது தனிப்பட்ட வீரர் வீராங்கனையின் பொறுப்பு எனவும், சங்கத்திற்கு அதில் எந்த பொறுப்பும் கிடையாது என்றும் கூறினார் தேவாரம்.

இந்த வருடம் கொரியாவிலும், இலங்கையிலும் இரண்டு சர்வதேச போட்டிகளில் அவர் பங்கு பெற்றிருந்தாலும், இவ்வாறான பிரச்சினை ஏதும் எழவில்லை எனவும் கூறும் தேவாரம், ஒரு போட்டியில் பங்குபெற ஒரு வீராங்கனை வரும் போது அவர் ஆணா அல்லது பெண்ணா என்று பார்ப்பது ஒழுங்கற்ற செயல் எனவும் அவர் மேலும் கூறினார்.

20061218161920santhi152a.jpg

1986 வரை பாலியல் தொடர்பான சோதனை நடத்தப்பட்டன எனவும், அது பெண்மைக்கு இழுக்கு எனக் கருதப்பட்டதால், அதன் பிறகு அந்தச் சோதனை நடத்தப்படுவதில்லை எனக் கூறுகிறார் தோஹா போட்டிகளுக்கு தொழிற்நுட்ப நடுவராக சென்றிருந்த சி.கே.வல்சன். போட்டியில் பங்கு பெற்ற யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பெண்மை குறித்த இந்த பாலியல் சோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். ஆனால் சாந்தி விடயத்தில் அவ்வாறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தம்மால் உறுதியாக் கூறமுடியும் எனவும் மேலும் கூறினார் வல்சன்.

அறிவியல் ரீதியாக ஹார்மோன்களின் அளவின் அடிப்படையிலேயே ஆணா பெண்ணா எனத் தீர்மானிக்கப்படும் எனக் கூறுகிறார் விளையாட்டு மருத்துவ வல்லுநர் டாகடர். கண்ணன் புகழேந்தி.

சாதாரணமாக சிறுநீர் தான் பரிசோதிக்கப்படும் எனவும் இது போன்ற சிக்கலான சூழலில் ரத்தப் பரிசோதனை அவசியம் எனவும், அதில் தான் ஹார்மோன்களின் அளவு தெரியவரும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இவ்வாறான சோதனைகளுக்கு அப்பாற்பட்டு மரபணு சோதனை நடத்தப்பட்டால் அதன் மூலம் ஒருவரது பாலியல் தன்மை உறுதியாக தெரிந்துவிடும் எனவும் அவர் கூறினார்.

20061218120152soundarajan_203_indian.jpg

எது என்னமோ- அந்த ஏழை குடும்பதின் - முயற்சியை சிறப்பித்த.....

தமிழக முதல்வருக்கு ............ நல்ல மனசுதான்.......

கொடுத்த பரிசை - நீங்களும் - திரும்ப பெறாவிட்டால்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவியார் போற இடம் பள்ளமும் திட்டியும் எண்டு ஊரிலை சொல்லுவினம் சரிதான் என்னவோ? :huh: பாவம் இயற்கை குடுத்த தண்டணைக்கு அந்தப்புள்ளை என்ன செய்யிறது :angry: ?அதுவும் தினசரி கூலி வேலை செய்யிற குடும்பமாம். :o

வறுமையோடு போராடி வாழ்ந்த சாந்தி, விளையாட்டு போட்டிகளில் போராடி வாகை சூடியிருகிறர்.விளையாட்டே சுவாசம் என்று வாழ்ந்த வந்த சாந்தியின் வாழ்க்கையில் விதி விளையாடியதா? இல்லை யாரவது சதி செய்து விளையாடினார்களா?

சாதனை புரிந்த சாந்தி அந்த மகிழ்ச்சியை முழுமையாய் அடைவதற்குள் வேதனை வந்து அவரை கவ்விகொண்டது. வட நாட்டுகாறர்கள் 'சாந்தி செளந்தர்ராஜன் Dஒக ஸ்HஆMஏ' என்று ப்ளாஷ் நியுஸ் போட்டது வேதனை தர கூடிய செய்தி. சாந்தியின் வெற்றியயை பொற்க்கமாட்டாதவர்கள் செய்த சதி தான் இத்தனைக்கும் காரணம் என்று சில தகவல்கள் கசிகின்றன. தமிழ்நாட்டுக்கு பெருமை வந்துவிடக் கூடது என்ற குறுகிய எண்ணம் என்றும் கூறபடுகிறது. கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தான் தமிழ்நாடு தடகள சங்கத்தை ஆட்டிபடைத்து கொண்டிருகிறார். அவர் செய்த சதி தான் இது என்று சொல்லபடுகிறது. தமிழ்நாடு தடகள சங்கம் பல ஆண்டுகாலமாக கேரளாவிலிருந்து வீரர், வீராங்கனைகளை வரவழைத்து தமிழ்நாட்டுக்காக ஓட வைக்கிறது. அனைத்துலக அளவில் போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தந்து ஊக்கிவிக்கிறது. ஆனால் கேரளாவில் பெரிய அளாவில் இது போன்ற ஊக்கம் இல்லை என்பதால் கேரளாகாரர்கள் தமிழ்நாடு சார்பாக போட்டிகளில் கலந்து கொள்கிரார்கள்.

சாந்தியிடம் இருந்து வெள்ளி பதக்கம் பறிக்கபட்டுவிட்டால், இறுதிப் போட்டியில் நான்காவதாக வந்த கேரள வீராங்கனை மூன்றாவதாக வந்து விட முடியும். சாந்திக்கு ஏற்பட்ட பிரச்சனை மூலம் தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு ஒரு தலை குனிவை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற குறுகிய நோக்கில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரே இத்தகைய சதியில் ஈடுபட்டதாக சொல்லபடுகிறது. சக ஓட்ட காரர் ஒருவரே சாந்தி குறித்த சந்தேகத்தை எழுப்பி புகாரும் கொடுத்திருகிறார்.

சாந்தி கடந்த 5 ஆண்டுகளாக அனைத்துலக அளவில் நடந்த போட்டிகளில் பங்கு கொண்டு பரிசுகளை வாங்கி குவித்திருகிறார். இந்திய சம்மேளனம் சாந்தி விளையாட்டுப் போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னர் அவர்க்கு மருத்டுவ பரிசோதனை நடத்தி அதன் பிறகு தான் அனுப்பி வைத்திருகிறது. இத்தனை நாள் இல்லாத பிரச்சனை இப்பொழுது ஏன் வருவானேன் என்பது தான் அதிர்ச்சியூட்டுகின்ற கேள்வியாய் உள்ளது.

ஜப்பான், சீனா, ஆபிரிக்கா, கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்களை பார்த்தால் அதில் ஆண் யார்? பெண் யார் என்று உடனே கண்டு பிடித்துவிட முடியாது. அப்படி இருக்கும் போது நம்மீது சந்தேகம் எழ வாய்ப்பே இல்லை. இந்த சந்தேகத்தை எழுப்பியது நிச்சயம் ஒரு இந்திய மூளையாகதான் இருக்க முடியும் என்று மனம் குமுறுகிறார் முன்னாள் தேசிய தட கள வீரர் ஒருவர். ஆக சாந்தி கதை நண்டு கதை போல ஆகிவிட்டது.

ஆனாலும் பதக்கத்தை யார் கேட்டாலும் கொடுத்து விடாதே. யாராவது கேட்டால் என்னிடம் இருகிறது என்று தைரியமாக சொல் என்று சாந்திக்கு ஊக்கம் கொடுத்திருகிறார் தமிழக முதல்வர், கலைஞர் அவர்கள். மேலும் சாந்திக்கு பதினைந்து லட்ச ரூபாய் பரிசு தொகையும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்மா TVஉம் பரிசாக வழங்கினார். பரிசுகளை வழங்கியதோடு 'எது வந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன், நீ கவலைப் படாமல் போம்மா என்று சாந்திக்கு தைரியத்தையும் கூடவே வழங்கி இருகிறார் முதல்வர்.

நன்றி தமிழ் முரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்திக்கு நடந்த சதிவெண்ணெய் திரண்டு வரும்போது, தாழி உடைந்தது என்பார்கள். சாந்தி விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வாங்கிவிட்டார் என்று எல்லோரும் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அதிர்ச்சி!

பாலினச் சோதனையின் மூலம் அவர் பெற்ற பதக்கம் பறிக்கப்படும் சூழ்நிலையில், நாம் தமிழக விளையாட்டு உலகைச் சேர்ந்த பலரைச் சந்தித்தோம்.

முன்னாள் சர்வதேச உயரம் தாண்டும் வீரரும், தற்போதைய இந்திய தடகள பயிற்சியாளருமான அண்ணாவி :

‘‘வீராங்கனை சாந்தி கடந்த ஐந்து வருடங்களாக ஏசியன் டிராக் அண்ட் பீல்டு, தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி, கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டி இவை அனைத்திலும் கலந்துகொண்டு ஏகப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார். அப்பொழுது இதே ஆசிய டெக்னிக்கல் கமிட்டிதான் போட்டிகளை நடத்தியிருக்கிறது. மருத்துவப் பரிசோதனையையும்செய்திருக்கி

பெண்கள் பிரிவு, ஆண்கள் பிரிவு, வலதுகுறைந்தோருக்கான பிரிவு என்று அனைவருக்கும் விளையாட்டில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள போதும், ஒரு பெண்ணாகவிருந்தும் சாதாரண அளவிலும் பார்க்க அதிக ஒமோன் என்று கூறி அவரை நிராகரிக்கும் உலகம் அவருக்கு என ஒரு பிரிவை புதிதாக ஆரம்பிக்குமா?

ஒரு பிரிவில் எல்லோரையும்விட அதிகமாக செயற்பாடு மிக்க ஒருவரே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுகின்றார்!

ஒரு மனிதனுக்கு ஊக்கமளிப்பதாக அமையும் இந்த விளையாட்டு இவருக்கு தனிப்பட்ட வாழ்விலும் பாரிய ஊறினை செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

விளையாட்டுச்சங்கத்தினரே பின்வருபனவற்றிற்கு பதில் தாருங்கள்!

1) சாந்திக்கு விளையாட்டில் சம உரிமை வழங்கப்படுமா?

2) சாதாரண அளவு என்பது யாரால் எப்படி எவரைக் கொண்டு தீர்மாணிக்கப்படுகின்றது?

3) ஏன் அனைத்து வீரர்களும் இந்தப்பரிட்சைக்கு உட்படுத்தப்படவில்லை?

(இலங்கை வீராங்கனை சுசந்திக்காவிற்கு இப் பரிசோதனை நடத்தினால் தேறுவாரா!)

சாந்தி கொழும்பில் இடம்பெற்ற சாவ் விளையாட்டிலும் கலந்து கொண்டு வென்றார். (எத்தனையாம் இடம் என்று ஞாபகம் இல்லை)

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறவுகள்

ஆக சாந்தி எந்த குழுவில் (ஆண் குழு தான் மிச்சமாக உள்ள குழு!!!) பங்குபற்ற முடியுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியுமா?

unfair world isn't it?

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வீராங்கனையின் தகப்பனார் ஈழத்தைச் சேர்ந்தவர், தமிழ் நாட்டில் வசிப்பவர் என்று வாசித்த யாபகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.