Jump to content

Recommended Posts

Posted

சூப்பரான இறால் குடைமிளகாய் வறுவல்

 
அ-அ+

குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால் குடைமிளகாய் வைத்து சூப்பரான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான இறால் குடைமிளகாய் வறுவல்
 
தேவையான பொருட்கள் : 
 
இறால் - 1 கிலோ 
பச்சை குடைமிளகாய் - 2
சிவப்பு குடைமிளகாய் - 1 
வெங்காயம் - 4
பூண்டு - 6 பல்
தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன்
 மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து 
உப்புத்தூள் - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
 
201801271503272266_1_prawnscapsicumvaruval._L_styvpf.jpg
 
 
செய்முறை : 
 
இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவிக் கொண்டு தண்ணீரை ஒட்ட பிழிந்துக்கொள்ளவேண்டும். 
 
வெங்காயம், குடைமிளகாயை நறுக்கி வைக்கவேண்டும். 
 
பூண்டை நசுக்கி வைக்கவேண்டும். 
 
அடிகனமான சட்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி இறாலை போட்டு நன்கு வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். 
 
பிறகு மீதியுள்ள எண்ணெயை ஊற்றி பூண்டை முதலில் போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவேண்டும். 
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் குடைமிளகாயை கொட்டி கறிவேப்பிலையை போட்டு வதக்கவேண்டும். 
 
பிறகு அதில் தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறிவிடவேண்டும். 
 
குடைமிளகாய் பாதி வேக்காடாக இருக்கும் பொழுது, இறாலைக் கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி விடவேண்டும். 
 
ஐந்து நிமிடம் மிதமான தீயில் அடுப்பில் வைத்திருந்து நன்கு கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறவேண்டும்.
 
சூப்பரான இறால் குடைமிளகாய் வறுவல் ரெடி.

http://www.maalaimalar.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பக்கோடா சூப்பர்..... அவசரத்துக்கு உடனே செய்து பரிமாறலாம்.....!  tw_blush:

இறால் மிளகாய் வறுவல் சைட்டிஸ்சுக்கு சொல்லி வேல இல்லை.....!  tw_blush:

  • Like 1
Posted

சீஸ் - நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்

 

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சீஸ், நூடுல்ஸ் சேர்த்து சாண்ட்விச் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

சீஸ் - நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
 
தேவையான பொருட்கள் : 
 
நூடுல்ஸ்  - கால் கப், 
பிரெட் - 10 துண்டுகள், 
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், 
தக்காளி - ஒன்று, 
வெங்காயம் - ஒன்று, 
இஞ்சி - ஒரு சிறு துண்டு, 
பச்சை மிளகாய் - 2, 
கேரட் - 1 சிறியது, 
குடைமிளகாய் - பாதி, 
தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், 
சீஸ் துருவல்  - தேவையான அளவு, 
உப்பு - தேவையான அளவு.
 
201801291507199237_1_sandwosh._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
வெங்காயம், தக்காளி, இஞ்சி, குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
நூடுல்ஸை வேக வைத்து கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். 
 
அடுத்து அதில் கேரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். 
 
காய்கறி வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்துக் கலக்கவும். 
 
அடுத்து அதில் தக்காளி சாஸ் விட்டு கலக்கவும். 
 
ஒரு ஸ்லைஸ் பிரெட் எடுத்து அதன் நடுவில், 2 டேபிள்ஸ்பூன் அளவு நூடுல்ஸ் கலவையை பரவலாக வைத்து, அதன் மேல் சீஸ் தூவி, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி பரிமாறவும்.

http://www.maalaimalar.com

Posted

கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி

 
அ-அ+

சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கத்தரிக்காய் பொரியல் அருமையாக இருக்கும். இன்று இந்த பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :
 
சிறிய கத்தரிக்காய் - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 5 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
 
201801301154568396_1_Brinjalporiyal._L_styvpf.jpg
 
செய்முறை :
 
கத்திரிக்காயை நீளவாட்டில் துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போடவும். 
 
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து சிறிது ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்
 
மீண்டும் கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் கத்திரிக்காயை நீர் வடியவிட்டு எடுத்து அதில் போட்டு வதக்கவும்.
 
அடுத்து அதில் உப்பு சேர்த்துக் கலந்து மெதுவாக கிளறவும். 
 
வெந்து வரும் சமயம் அரைத்து வைத்திருக்கும் பொடியை அதனுடன் கலந்து கிளறவும். 
 
கத்தரிக்காய் பதமாக வெந்ததும் தீயை நிறுத்தி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
 
அருமையான சைடிஷ் கத்தரிக்காய் பொரியல் ரெடி. 

http://www.maalaimalar.com

Posted

சூப்பரான முருங்கைப்பூ முட்டை பொரியல்

முருங்கைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று முருங்கைப்பூ, முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான முருங்கைப்பூ முட்டை பொரியல்
 
தேவையான பொருட்கள் :
 
முருங்கைப்பூ - 2 கைப்பிடி அளவு
சீரகம் - கால் தேக்கரண்டி
முட்டை - ஒன்று
கறிவேப்பிலை - 5
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
 
201801311230447506_1_drumstickfloweregg._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
முதலில் முருங்கைப்பூவில் காம்பை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அலசி வைக்கவேண்டும். 
 
ப.மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
 
வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரியவிட்டு, பூண்டுச் சேர்த்து வதக்கவேண்டும். 
 
பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவேண்டும்.
 
பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவேண்டும். 
 
வெங்காயம் சற்று வதங்கியதும் முருங்கைப்பூவைச் சேர்த்து வதக்கவும். 
 
அத்துடன் உப்பு மற்றும்  மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவேண்டும்.
 
இப்பொழுது முருங்கைப்பூ வெந்து, சிறிது தண்ணீருடன் இருக்கும் போதே முருங்கைப்பூவை பரவலாக்கிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றவேண்டும்
 
நன்றாக கிளறிவிட்டு முட்டை வெந்து உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும். 
 
சுவையான முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார்.

http://www.maalaimalar.com

Posted

காலிஃபிளவர் பிரை செய்வது எப்படி

 

 

சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள காலிஃபிளவர் பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த பிரையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
காலிஃபிளவர் பிரை செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

காலிஃபிளவர் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - அரை டீஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்புன்
சில்லி சிக்கன் மசாலா பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

201802021507294500_1_cauliflowerfry._L_styvpf.jpg

செய்முறை :

காலிஃபிளவரை கழுவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

காடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து சீரகம், சோம்பு போட்டு தாளித்த பின்னர் காலிஃபிளவரை போட்டு வதக்கவும்.

காலிஃபிளவர் லேசாக வதங்கியதும்  மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மூடி போட்டு வேகவிடவும்.

காலிஃபிளவர் முக்கால்பாகம் வெந்ததும் சில்லி சிக்கன் மசாலா பொ, கறிவேப்பிலையச் சேர்த்து கிளறவும்.

காலிஃபிளவர் நன்றாக வெந்து மசாலா வாடை அடங்கியதும் இறக்கி பரிமாறவும்.

https://www.maalaimalar.com

Posted

சத்தான பருப்பு ரெசிப்பிகள்

 

 

தால் சாண்ட்விச்

தேவை:     கோதுமை பிரெட் - 8 ஸ்லைஸ்  வேகவைத்த பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு கலவை – 100 கிராம்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)  மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை  நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு  நெய் அல்லது வெண்ணெய், உப்பு – தேவையான அளவு.  

p101b_1517484907.jpg

செய்முறை: வேகவைத்த பருப்புக் கலவையுடன் மிளகுத்தூள், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசையவும். இதை பிரெட் ஸ்லைஸ்களின் மீது தடவவும். ஒரு பிரெட்டின் மீது மற்றொரு பிரெட்டை வைத்து அழுத்தவும். (பருப்புக் கலவை நடுவில் வர வேண்டும்). தவாவில் பிரெட் ஸ்லைஸ்களை அடுக்கி, சுற்றிலும் நெய் (அ) வெண்ணெய் சேர்த்து இருபுறமும் மொறுமொறுப்பாக டோஸ்ட் செய்து எடுக்கவும். மேலே நறுக்கிய வெங்காயம் தூவிப் பரிமாறவும்.


p101c_1517484943.jpg

டொமேட்டோ பப்பு

தேவை: முப்பருப்புக் கலவை (துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து) – 100 கிராம்  தக்காளி – 5 (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்)  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  பூண்டு - 2 பல் (தட்டவும்)  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     நெய் - ஒரு டீஸ்பூன்  கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: குக்கரில் நெய்விட்டுச் சூடாக்கி, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு பருப்புக் கலவை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 (அ) 4 விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு நன்கு மசித்துப் பரிமாறவும்.


p101d_1517484970.jpg

லெமன் தால்

தேவை:     பாசிப்பருப்பு – 100 கிராம்  தோல் சீவி துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்  பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை  எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     நெய் - ஒரு டீஸ்பூன்  கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை: பாசிப்பருப்புடன் இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு மசிக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துப் பருப்புடன் கலக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்த லெமன் தால் எல்லோருக்கும் ஏற்றது. 


p101e_1517485024.jpg

முப்பருப்பு மசாலா போண்டா

தேவை:     துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம்  பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்  நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் கலவை - அரை கப்  வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)  சமையல் சோடா - ஒரு சிட்டிகை  சோம்பு - சிறிதளவு  எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு  நெய் - 2 டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி ஊறவைத்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சமையல் சோடா, உப்பு, நெய், புதினா கலவை, பச்சை மிளகாய் - இஞ்சி  விழுது, சோம்பு, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய உருண்டைகளாக எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


p101f_1517485050.jpg

மிளகு - பூண்டு பருப்புப் பொடி

தேவை:     துவரம்பருப்பு – 100 கிராம்  மிளகு - 2 டீஸ்பூன்  பூண்டு - 4 பல் (தட்டவும்)  கறிவேப்பிலை – சிறிதளவு  பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாகச் சேர்த்து,  வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பொடியாக அரைத்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும். இரும்புச் சத்துமிக்க இந்தப் பொடியைச் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டுக் கலந்து சாப்பிடலாம்.


p101g_1517485073.jpg

துவரம்பருப்புச் சுண்டல்

தேவை:     குழையாமல் வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப்  கடுகு – ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் – ஒன்று  வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்   கறிவேப்பிலை - சிறிதளவு  தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.


p101h_1517485100.jpg

மல்டி தால் சூப்

தேவை:     கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 100 கிராம்  சர்க்கரை – ஒரு சிட்டிகை  பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று  மிளகுத்தூள், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் பருப்புகளுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், தேவையான நீர் சேர்த்துக் குழைய வேகவிட்டு இறக்கவும். ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து, இரண்டு பங்கு நீர் சேர்த்துச் சூடாக்கி, நன்கு நுரைத்து வரும்போது இறக்கவும். இதை டம்ளர் / சூப் கப்பில் ஊற்றி மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து, சிறிதளவு நெய்விட்டுப் பரிமாறவும்.


p101i_1517485123.jpg

தால் மக்னி

தேவை:  தோலுடன் கூடிய கறுப்பு உளுத்தம்பருப்பு – 200 கிராம் (8 மணி நேரம் ஊறவிடவும்)  பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்)   தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு  பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)  அரைத்த தக்காளி விழுது - ஒரு கப்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  நறுக்கிய வெங்காயம் - அரை கப்  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - தலா அரை டீஸ்பூன்  பிரியாணி இலை - 2  வெண்ணெய் – 100 கிராம்  ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப்  நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு  மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுந்துடன் பிரியாணி இலை சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும். வாணலியில் 75 கிராம் வெண்ணெய்விட்டு உருக்கி இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி விழுது, கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அரை கப் தண்ணீர், வேகவைத்த உளுந்து சேர்த்து 10-20 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். மற்றொரு வாணலியில் மீதமுள்ள வெண்ணெய்விட்டு உருக்கி, பூண்டு சேர்த்துப் பொரித்து எடுத்துச் சேர்க்கவும். மேலே ஃப்ரெஷ் க்ரீம், கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.


p101j_1517485157.jpg

மசூர் தால் - டேட்ஸ் லட்டு

தேவை:     மசூர் தால் – 100 கிராம்  பொடித்த வெல்லம் – 150 கிராம்  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை  நெய்யில் வறுத்த பேரீச்சைத் துண்டுகள் - கால் கப்  உருக்கிய நெய் - கால் கப்.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு மசூர் தால் சேர்த்துச் சிவக்க வறுத்தெடுத்து நைஸாக பொடிக்கவும். வெல்லத்துடன் பேரீச்சை சேர்த்துக் கையால் நன்கு பிசையவும். பிறகு அதனுடன் ஏலக்காய்த்தூள், அரைத்த பருப்பு, சூடான நெய் சேர்த்து, கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். இந்த லட்டு, புரதம் மற்றும் இரும்புச் சத்து மிக்கது.


p101k_1517485184.jpg

பாசிப்பருப்பு உக்காரை

தேவை:     பாசிப்பருப்பு – 200 கிராம் (வறுத்து ரவையாக உடைக்கவும்)  வெல்லம் – 250 கிராம்  நெய் – 50 கிராம்  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை  நெய்யில் வறுத்த முந்திரி - திராட்சை கலவை – 50 கிராம்.

செய்முறை: பாசிப்பருப்பு ரவையுடன் சுடுநீர் சேர்த்து நன்கு பிசைந்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பிறகு உதிர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, இதைக் கொதிக்கவிட்டு ஏலக்காய்த்தூள், நெய், உதிர்த்த பாசிப்பருப்பு கலவை சேர்த்து நன்கு கிளறி இறக்கி மூடி வைக்கவும். அரை மணி கழித்து எடுத்தால், பொலபொலவென்று இருக்கும். இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து பரிமாறவும். இது இரண்டு நாள்கள் வரை நன்றாக இருக்கும்.


p101l_1517485213.jpg

கீரை - தால் கொழுக்கட்டை

தேவை:     துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம்  காய்ந்த மிளகாய் - 6  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய அரைக்கீரை, அகத்திக்கீரை, பருப்புக்கீரை கலவை - ஒரு கப்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்  கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: பருப்பு வகைகளுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு, கீரை வகைகள், வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்துப் பிசையவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து, பருப்புக் கலவையுடன் கலக்கவும். பிறகு, சிறிய உருண்டைகளாக்கி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கீரை வகைகளில் இரும்புச் சத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


p101m_1517485243.jpg

தால் ஃபிங்கர் ஃப்ரை

தேவை:     துவரம்பருப்பு - 50 கிராம்  அரிசி - ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 4  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  உருளைக்கிழங்கு – 4 (தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும்)  எண்ணெய் - 250 கிராம்  பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்புடன் காய்ந்த மிளகாய், அரிசி சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துப் புரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டுச் சிவக்க பொரித்தெடுக்கவும்.


p101n_1517485325.jpg

தால் ஸ்டஃப்டு பராத்தா

தேவை:     கடலைப்பருப்பு – 100 கிராம் (வேகவிடவும்)  பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

மேல் மாவுக்கு: கோதுமை மாவு – 200 கிராம்  நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசையவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம்.

பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


p101o_1517485355.jpg

ஸ்வீட் அண்டு சோர் பாசிப்பருப்பு சாலட்

தேவை:     பாசிப்பருப்பு – 100 கிராம் (ஊறவிடவும்)  தேங்காய்த் துருவல் - கால் கப்  நறுக்கிய கொத்தமல்லித்தழை  பச்சை மிளகாய் - சிறிதளவு  குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் - கால் கப்  எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்  சர்க்கரை - ஒரு சிட்டிகை  தேன் - ஒரு டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     நெய் - ஒரு டீஸ்பூன்  கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் குடமிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும். பிறகு, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, ஸ்வீட் கார்ன் முத்துகள், சர்க்கரை, தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


p101p_1517485381.jpg

பாலக் தால்

தேவை:     கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 200 கிராம்  பாலக்கீரை - ஒரு கட்டு (நறுக்கவும்)  சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு  பூண்டு – 2 (பொடியாக நறுக்கவும்)  சீரகம் - கால் டீஸ்பூன்  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  நெய் - ஒரு டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பருப்பு வகைகளைக் குழைய வேகவிடவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி சீரகம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பாலக்கீரை, உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, வேகவைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். அபரிமிதமான இரும்புச் சத்துள்ள இந்த பாலக் தால் அனைவருக்கும் ஏற்றது.


p101q_1517485407.jpg

பாசிப்பருப்பு பக்கோடா

தேவை:     பாசிப்பருப்பு – 200 கிராம்  பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்)  தோல் சீவி துருவிய இஞ்சி - சிறிதளவு  வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பைக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுப் பருப்புக் கலவையைச் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

இதை டீயுடன் சாப்பிடலாம் அல்லது மோர்க்குழம்பில் போட்டு ஊறவிட்டுப் பரிமாறலாம்.


p101r_1517485441.jpg

மல்டி தால் வெஜ் மிக்ஸ்

தேவை:     துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, மசூர் பருப்பு தலா - 25 கிராம்  நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு கலவை - ஒரு கப்  வேகவைத்த பச்சைப் பட்டாணி – சிறிதளவு  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்  கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: குக்கரில் பருப்பு வகைகளுடன் நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி சேர்த்துக் குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், வேகவைத்த கலவை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். காய்கறிகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்துகொடுப்பது நல்ல பலன் தரும்.


p101s_1517485467.jpg

தால் கிச்சடி

தேவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா 50 கிராம்  அரிசி – 150 கிராம்  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை  பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்)  வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)  நெய் – 100 கிராம்  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     பட்டை, லவங்கம், மராத்தி மொக்கு, ஏலக்காய் - தலா 2  சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பருப்பு வகைகளுடன் அரிசி சேர்த்துக் களையவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் நெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அரிசி - பருப்பு கலவை, மூன்று பங்கு தண்ணீர்விட்டு மூடி, 4 - 5 விசில்விட்டு இறக்கவும். சற்று ஆறியபின் திறந்து கிளறி, சூடாகப் பரிமாறவும்.


p101t_1517485503.jpg

மிக்ஸ்டு தால் பிளெய்ன் கறி

தேவை:     துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 100 கிராம்  காய்ந்த மிளகாய் - 4  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்  கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை: பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவிட்டுக் களைந்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் அரைத்த பருப்புக் கலவை, மஞ்சள்தூள் சேர்த்து உதிர் உதிராகக் கிளறி இறக்கவும்.


p101v_1517485543.jpg

பாசிப்பருப்பு - கடலைப்பருப்பு பண்டிகை பாயசம்

தேவை:     பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம்  வெல்லம் - 200 கிராம்  தேங்காய்ப்பால், காய்ச்சிய பால் - தலா அரை கப்  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை  நெய்யில் வறுத்த முந்திரி  திராட்சை – சிறிதளவு.

செய்முறை: பருப்பு வகைகளைக் களைந்து குழைய வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலைக் கொதிக்கவிட்டு வேகவைத்த பருப்புக் கலவை, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். அத்துடன் முந்திரி, திராட்சை, பால், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


p101w_1517485575.jpg

உடனடி உளுத்தம்பருப்பு பச்சடி

தேவை:     உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  தயிர் - கால் கப்  பெருங்காயம் – சிறிதளவு  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:     நெய் - அரை டீஸ்பூன்  கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி ஊறவைத்து உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், தயிர் சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து அரைத்த கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


p101x_1517485611.jpg

நியூட்ரி தால் இட்லி

தேவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம்  பச்சரிசி – 50 கிராம்  துருவிய கேரட், கோஸ் கலவை - கால் கப்  பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்  பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)  நெய் - 2 டீஸ்பூன்  மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியுடன் பருப்பு வகைகளைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதனுடன் கேரட், கோஸ், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு - சீரகத்தூள், நெய் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


p101y_1517485642.jpg

துவரம்பருப்பு - கறிவேப்பிலை துவையல்

தேவை:     துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்  காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2  கறிவேப்பிலை - 2 ஆர்க்கு  தேங்காய்த் துருவல் - கால் கப்  புளி - நெல்லிக்காய் அளவு  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  கடலை எண்ணெய் – சிறிதளவு  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துச் சிவக்க வறுத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டுத் துவையலாக அரைத்து எடுக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்தத் துவையலை அடிக்கடி பயன்படுத்துவது அனைவரின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.


p101z_1517485670.jpg

தால் பேஸ்கட் 
 
தேவை:     கடலைப்பருப்பு, பச்சரிசி - தலா 100 கிராம்  துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்  சீரகம் - கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை: கடலைப்பருப்பு, பச்சரிசி, துவரம்பருப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் உப்பு, சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். மீதமுள்ள எண்ணெயைக் கடாயில் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு குழிக்கரண்டியில் எண்ணெய் தடவி, எலுமிச்சை அளவு மாவு எடுத்து, கரண்டியின் உட்புறமாகக் கூடைபோல பரப்பி, அப்படியே கரண்டியுடன் சூடான எண்ணெயில் விடவும். சிறிது நேரத்தில் கரண்டி, கூடை இரண்டும் தனித்தனியே பிரிந்து வரும். சற்றே சிவந்தவுடன் எடுத்துவிடவும்.

இது 15 நாள்களுக்கு நன்றாக இருக்கும். விருப்பப்பட்டால், தால் பேஸ்கட்டில் சுண்டல், வறுத்த வேர்க்கடலை போட்டுப் பரிமாறலாம்.


p101z1_1517485698.jpg

உளுத்தம்பருப்பு - கீரை வடை

தேவை:     உளுத்தம்பருப்பு – 100 கிராம்  நறுக்கிய கீரை - 2 கைப்பிடியளவு  சோம்பு - சிறிதளவு  பச்சை மிளகாய் – 3 (நசுக்கவும்)  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை 15 நிமிடங்கள் ஊறவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி, ஊறிய உளுத்தம்பருப்பைக் களைந்து சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அதனுடன் உப்பு, சோம்பு சேர்க்கவும். பிறகு வெங்காயம், கீரை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். மாவை வடைகளாகத் தட்டி நடுவே துளையிட்டு சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்த கீரை வடை, அனைவரும் விரும்பி உண்ணும் வடையாகவும் அமையும்.


p101z2_1517485733.jpg

`பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது பழமொழி. கல்யாண விருந்தில் மட்டுமல்லாமல், அன்றாட வீட்டுச் சமையலிலும் பருப்பு இன்றியமையாத பொருளாக அங்கம்வகிக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாகப் பருப்பு மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல் இயக்கத்துக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து, சைவ உணவு உண்பவர்களுக்குப் பருப்பிலிருந்தே பெருமளவுக்குக் கிடைக்கிறது. மேலும், பருப்பு வகைகளிலிருந்து வைட்டமின், இரும்புச் சத்து, நார்ச் சத்து, கால்சியம், பொட்டாசியம், ஃபோலிக் ஆசிட் போன்றவற்றையும் பெறலாம்.

பொதுவாக, பருப்பில் சாம்பார், ரசம், வடை, துவையல், பாயசம், சுண்டல் போன்றவற்றைச் செய்வது வழக்கம். இந்த இணைப்பிதழில் பருப்பை வைத்து, வழக்கமான ரெசிப்பிகளுடன் சூப், சாண்ட்விச், சாலட், ஃபிங்கர் ஃப்ரை, தால் பாஸ்கெட் என்று கலந்துகட்டி உணவு வகைகள் தயாரித்து அளித்து அசத்துகிறார் சமையல் கலைஞர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன். இவற்றை யெல்லாம் செய்து பரிமாறி... குடும்பம், உறவு, நட்பு வட்டத்தில் நீங்கள் `சமையல் சக்கரவர்த்தினி’யாக வலம்வர வாழ்த்துகள்!

https://www.vikatan.com

Posted

சுண்டியிழுக்கும் சுவையில் கமகம ரசம்!

கிச்சன் பேஸிக்ஸ்விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள், வீடியோ:  லக்ஷ்மி வெங்கடேஷ்

 

யாரிக்கும்போதே அற்புதமான மணம் பரவி, நாசியில் நுழைந்து, நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி, பசியாற வரவேற்கும் உணவு வகைகளில் ரசத்துக்கு முக்கிய இடமுண்டு. சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடும்போது பசி தணிக்கும் ரசம், அப்படியே சாப்பிட்டாலும் அசத்தும். `தென்னாட்டு சூப்’ என்ற செல்லப் பெயர்கொண்ட ரசத்தில் பல வகைகள் உண்டு. ரசம் தயாரிப்பதில் ரசப்பொடி ஒரு முக்கிய அங்கம்வகிக்கிறது. சில ரசப்பொடிகள் செய்யும் விதம், ரசம் செய்யும் முறை இங்கே... 

p15a_1517826904.jpg

ரசம் செய்யும் முறை...

முதலில் புளியைக் கரைத்து, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பொடியாக நறுக்கிய தக்காளியை நன்கு பிழிந்து, மசித்துச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பருப்பு சேர்ப்பதாக இருந்தால், பருப்பைத் தண்ணீரில் கரைத்துச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்த பின் ரசப்பொடி, பெருங்காயம் சேர்த்து நுரைத்து வந்தவுடன் உப்பு சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். பிறகு கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைச் சேர்த்து மூடி வைக்கவும்.

விதம்விதமாக ரசப்பொடி தயாரிக்க...

தேவையானவை: 

p15b_1517826933.jpg

செய்முறை: வாணலியில், ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் மிளகாயை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் இதர பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மிதமான சூட்டில் கறுகாமல் வறுக்கவும். ஆறியபின் கொரகொரப்பாகப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து உபயோகப்படுத்தவும்.

(அல்லது)

எல்லாப் பொருள்களையும் வெயிலில் நன்கு  காயவைத்துக் கொரகொரப்பாகப் பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து உபயோகப்படுத்தவும்.  

ஸ்பெஷல் ரசப்பொடி வகைகள் 

மைசூர் ரசப்பொடி


தேவையானவை:

* காஷ்மீரி மிளகாய் - 15 (அ) 20

* தனியா (மல்லி) - அரை கப்

* மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்

* சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்

* வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

* கடுகு - ஒரு டீஸ்பூன்

* பெருங்காயம் - அரை டீஸ்பூன்

* கொப்பரைத் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

* எண்ணெய் – 2 டீஸ்பூன்    p15c_1517827013.jpg

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கொப்பரைத் துருவல் ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். மைசூர் ரசம் செய்யும்போது இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: ஃப்ரிட்ஜில் வைத்து, கைப்படாமல் உபயோகித்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.


p15d_1517827056.jpg

உடுப்பி ரசப்பொடி

தேவையானவை:

* காஷ்மீர் மிளகாய் - இரண்டரை கப்

* தனியா (மல்லி) -  ஒரு கப்

* சீரகம் -  கால் கப்  

* வெந்தயம் - 3 டேபிள்ஸ்பூன்

* கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்  

* பெருங்காயம் - அரை டீஸ்பூன்

* கறிவேப்பிலை - 3 ஆர்க்கு

* தேங்காய் எண்ணெய் -  3 டீஸ்பூன்  p15f_1517827080.jpg

செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, மிளகாயைச் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டுச் சூடாக்கி தனியா, சீரகம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும் (தனியா, கறிவேப்பிலையை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்). ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். உடுப்பி ரசப்பொடி தயார். இந்தப் பொடி ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.

p15e_1517827105.jpg

ஆந்திரா ரசப்பொடி

தேவையானவை:

* காய்ந்த மிளகாய் - 2 கப்

* தனியா (மல்லி) - ஒரு கப்

* சீரகம் -  அரை கப்  

* வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்

* மிளகு - 2 டேபிள்ஸ்பூன்

* கட்டிப் பெருங்காயம் - அரை டீஸ்பூன்

* கறிவேப்பிலை - தேவையான அளவு

* எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான சூட்டில் கறுகாமல் வறுத்து எடுக்கவும். ஆறியபின் வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். ஆந்திரா ரசப்பொடி தயார்.

https://www.vikatan.com

Posted

சத்து நிறைந்த முள்ளங்கி - பூசணி சப்பாத்தி

 

 
 

பொதுவாக காய்கறிகளை இப்படி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும் போது வயிறு நிரம்பி இருப்பதுடன் உடல் எடையும் குறையும்.

 
சத்து நிறைந்த முள்ளங்கி - பூசணி சப்பாத்தி
 
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்,
முள்ளங்கி துருவல் - கால் கப்,
பூசணி துருவல் - அரை கப்,
பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி விழுது - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

201802180951508825_1_Radishpumpkinchapati._L_styvpf.jpg

செய்முறை:

முள்ளங்கி துருவலை லேசாக பிழிந்து கொள்ளவும்.

பூசணி துருவலை நன்றாக பிழிந்து கொள்ளவும்.

கோதுமை மாவுடன் முள்ளங்கி துருவல், பூசணி துருவல், பச்சைமிளகாய் விழுது, கொத்தமல்லி விழுது, இஞ்சி விழுது,சீரகத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இந்த மாவை சிறிது எடுத்து சிறிய சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போடவும்.

மிதமான தீயில் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும்.

சூப்பரான முள்ளங்கி - பூசணி சப்பாத்தி ரெடி.

இதற்கு தால் அல்லது தயிர் பச்சடியைத் தொட்டுக் கொள்ளலாம்.
Posted

எடையைக் குறைக்கும் சிறுதானியங்கள்!

 
 

ஜெ.கலைவாணி - படங்கள்: தே.அசோக்குமார்

 

113p1_1516882716.jpg

சிறுதானிய உணவே நம் பாரம்பர்ய உணவுமுறை. அது மட்டுமல்ல... சிறுதானியங்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் அளிக்கும். எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இனிமை சேர்க்கும். நல்லவை எல்லாம் அள்ளித்தரும்.

 

 இனிவரும் காலம் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய சிறு தானியங்களுக்குப் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த அளவு மக்களிடத்தில் சிறுதானியங்களின் சிறப்பு பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. இந்த ஆர்வத்துக்குச் சுவை சேர்க்கும் அருமையான, துல்லியமான மில்லெட் ரெசிபிகள் நம் கைவசம் இருந்தால்தானே சமையலறை கமகமக்கும்? அதற்கான ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி. எளிமையாகச் செய்யக்கூடிய இந்த உணவுகளுக்கு ஏராளமான பலன் உண்டு.

113p3_1516882698.jpg

தினை - பச்சைப்பயறு ஊத்தப்பம்

தேவையானவை:

 தினை அரிசி - அரை கப்
 முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப்
 காய்ந்த மிளகாய் - நான்கு
 இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது)
 பெருங்காயம் - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
 வெங்காயம் - 2 (நறுக்கியது)
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு
 துருவிய கேரட் - அரை கப்

செய்முறை:

தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். முளைகட்டியப் பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை வார்க்கவும். தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும். சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.


113p4_1516882750.jpg

கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை

தேவையானவை:

 கேழ்வரகு சேமியா - ஒரு கப்
 கொள்ளு மாவு - அரை கப்
 கடலைப்பருப்பு - அரை கப்
 வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
 பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
 உப்பு - தேவையான அளவு
 கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது)
 இஞ்சி - ஒரு சிறிய துண்டு (நறுக்கியது)

செய்முறை:

கேழ்வரகு சேமியாவை மூன்று நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். கொள்ளுவை வறுத்து மாவாக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். ஊறிய முழுப் பருப்பை ஒரு டீஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலை மாவுடன் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொள்ளு மாவு ஊறிய கடலைப்பருப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் விட்டு வடை மாவுப் பதத்துக்குக் கலந்து கேழ்வரகு சேமியாவைச் சேர்த்து வடையாகத் தட்டி, வாணலியில் எண்ணெய்விட்டு வடையைப் போட்டு முறுகலாகப் பொன்னிறத்துடன் வறுத்து எடுக்க, சுவையான கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை ரெடி.

குறிப்பு:

இஞ்சி - பூண்டு விழுது சேர்த்தும் செய்யலாம்.


113p5_1516882769.jpg

வரகு - கம்பங்களி

தேவையானவை:

 வரகரிசி - கால் கப்
 கம்பு மாவு - 2 கப்
 தண்ணீர், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வரகரிசியைத் தண்ணீரில் வேகவிடவும். முக்கால்வாசி வெந்து வரும்போது அதில் உப்பு மற்றும் கம்பு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளற வேண்டும். மாவு கட்டியாக ஆகாதவாறு கிளறி, தேவைப்பட்டால் சுடுநீர் சிறிது சேர்த்து, கரண்டியால் கிளறி பின் கைகளில் சுடச்சுட உருட்டினால், களி ரெடி. இதற்குக் காரக் குழம்பு, கீரைக் குழம்பு தொட்டுக்கொள்ள ஏற்றது. களியைப் பொறுத்தவரை சுடச்சுடச் சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய், வெங்காயப் பச்சடி மற்றும் மொச்சைக்குழம்புடன் சாப்பிட மிகவும் ஏற்றது. உடல் பலமடையும். வியாதிகள் அண்டாது.


113p6_1516882786.jpg

கம்பு - பீர்க்கங்காய்த் துவையல்

தேவையானவை:

 கம்பு - கால் கப்
 பீர்க்கங்காய்த் தோல் - ஒரு கப் (நறுக்கியது)
 காய்ந்த மிளகாய் - ஐந்து
 உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன்
 இஞ்சி - ஒரு சிறிய துண்டு
 புளி - பெரிய நெல்லி அளவு
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 தேங்காய் - இரண்டு துண்டுகள்

செய்முறை:

கம்பு தானியத்தை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் உளுத்தம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு பீர்க்கங்காய்த் தோல், காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய், உப்பு ஆகியவற்றை வறுத்து ஐந்து நிமிடங்கள் ஆறவைக்கவும். இத்துடன் புளியையும் சேர்த்து வறுத்து மொத்தமாக எடுத்து உப்புச் சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்க, சுவையான

கம்பு - பீர்க்கங்காய்த் துவையல் ரெடி.


113p7_1516882800.jpg

அப்பளக்கூட்டுக் கம்பு ஊறல்

தேவையானவை:

 கம்பு மாவு - அரை கப்
 சோள மாவு - அரை கப்
 சமையல் சோடா - ஒரு சிட்டிகை
 தயிர் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

பாத்திரத்தில் கம்பு மாவு, சோள மாவு, சமையல் சோடா, தயிர், உப்பு, கொத்துமல்லித்தழை சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து உருட்டி இரண்டு அளவாகப் பிரித்து இட்லித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின்பு இதை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். சிறு சிறு வட்டமாக நறுக்கி, தோசைக்கல்லில் எண்ணெய்விட்டுச் சிவக்க வைத்து எடுத்துக்கொள்ளவும். அல்லது வட்டமாக நறுக்கிய கம்பு கட்லெட்டை வாணலியில் எண்ணெய்விட்டுப் பொரித்தும் எடுத்துக்கொண்டு அப்பளக்கூட்டுடன் சாப்பிடலாம்.

அப்பளக்கூட்டு செய்ய தேவையானவை:

 கடலைப்பருப்பு - அரை கப்
 பெருங்காயம் - அரை டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
 தண்ணீர் - ஒரு கப்
 சுட்ட அப்பளம் - 8
 சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

குக்கரில் கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து, நான்கு விசில் விட்டு இறக்கவும். சோம்புத்தூள் சேர்த்து, தேவைக்கேற்ற அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவந்ததும் உப்பு சேர்க்கவும். கொத்துமல்லித்தழை தூவி, அதில் அப்பளத்தை உடைத்துப்போட்டுக் கிளறி, கம்பு வறுவலின் மீது வைத்துப் பரிமாறவும். கம்பு ஃப்ரை செய்யாமலும் அப்பளக்கூட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.


113p8_1516882826.jpg

குதிரைவாலி - பாசிப்பருப்புக் கஞ்சி

தேவையானவை:

 குதிரைவாலி - ஒரு கப்
 பாசிப்பருப்பு - அரை கப்
 கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - ஒன்று (தாளிக்க)
 கறிவேப்பிலை - இரண்டு ஈர்க்கு
 எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
 மிளகு - ஒரு டீஸ்பூன் (பொடித்தது)
 பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

பாசிப்பருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வேகும்போது, குதிரைவாலி அரிசியைச் சேர்த்துக் குழைய வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கஞ்சியில் ஊற்றவும். ஊறுகாய் மற்றும் துவையலுடன் பரிமாறவும். பசி நேரத்துக்கு ஏற்ற சிறந்த கஞ்சி இது. காரத்துக்குக் காய்ந்த மிளகாயைத் தவிர்த்துவிட்டு, மிளகு ஒன்றிரண்டாகப் பொடித்துச் சேர்த்துக் கொள்ளலாம்.


113p9_1516882843.jpg

கம்பு - பச்சைப்பயறு - வெல்ல மசியல்

தேவையானவை:

 கம்பு - அரை கப்
 பச்சைப்பயறு - அரை கப்
 துருவிய வெல்லம் - அரை கப்
 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப்பயறையும் கம்பையும் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ளவும். மறுநாள் அதை குக்கரில் வைத்துக் குறைவாகத் தண்ணீர்விட்டு, நான்கு முதல் ஐந்து விசில் வரை அடி பிடிக்காமல் வேகவைக்கவும். பிறகு குக்கர் மூடியை ரிலீஸ் செய்துவிட்டுத் தண்ணீரை வடித்து, பருப்பை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, அதில் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மசித்துக்கொள்ளவும். இதை ஃபிரிட்ஜில் வைத்து தினமும் சாப்பிடலாம். நான்கு நாள்கள் வரை கெடாமல் இருக்கும்.


113p10_1516882857.jpg

பனிவரகு - மஷ்ரூம் - டொமேட்டோ சூப்

தேவையானவை:

 பனிவரகு - கால் கப் (வேகவைத்தது)
 கார்ன் மாவு - 2 டீஸ்பூன்
 தக்காளிச் சாறு - ஒரு கப்
 கொத்தமல்லி - அரை கப் (நறுக்கியது)
 மஷ்ரூம் - 10 (நறுக்கியது)
 பூண்டு - 10 பல்
 நெய் - 2 தேக்கரண்டி
 சோயா சாஸ் - அரை டீஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு
 உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

மஷ்ரூமைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். பூண்டுப் பல்லைத் தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். மிளகைப் பொடி செய்துகொள்ளவும். வாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும் பட்டை சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். சோயா சாஸ் விடவும். வேகவைத்த மஷ்ரூமை இதில் புரட்டி எடுக்கவும். தக்காளிச் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிடவும். பின், மூன்று கப் நீர் விட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வேகவைத்த பனிவரகைச் சேர்க்கவும். மஷ்ரூம் வெந்ததும் கார்ன் மாவை நீரில் கரைத்து ஊற்றவும். மிளகைத் தூவி ஒரு கொதிவிட்டுக் கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி எடுக்கவும். சுவையான சூப் தயார்.


113p11_1516882872.jpg

சோளம் - கோதுமை அல்வா

தேவையானவை:

 கோதுமை மாவு - ஒரு கப்
 சோள மாவு - அரை கப்
 வெல்லம் - ஒரு கப்
 முந்திரி, திராட்சை - தலா ஒரு டீஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்
 நெய் - கால் கப்

செய்முறை:

வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் கோதுமை மாவு, சோள மாவை நெய்விட்டு தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் இரண்டு மாவையும் ஒன்றாகச் சேர்த்து, கரைத்து வைத்த வெல்லத் தண்ணீரை மாவில் ஊற்றி, வேகமாகக் கிளறிக் கொண்டே இருக்கவும். நெய்விட்டு கிளற கிளற அல்வா பதத்தில் சுருண்டுவரும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி கிளறி இறக்கி வைத்துப் பரிமாறவும்.


113p12_1516882888.jpg

சாமை - பச்சைப்பயறு - நல்லெண்ணெய் சாதம்

தேவையானவை:

 சாமை சாதம் - 2 கப்
 பச்சைப்பயறு - கால் கிலோ
 தக்காளி - 2 (அரைத்த ஜூஸ்)
 வெங்காயம் - 2 (நறுக்கியது)
 கறிவேப்பிலை - ஒரு கொத்து
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:

 பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், மராத்தி மொக்கு, கிராம்பு - தலா 2
 நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சைப்பயறை வாணலியில் இட்டு, பொன்னிறமாக வறுத்து குக்கரில் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு நான்கு முதல் ஐந்து விசில் வரை நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிக்க வேண்டியதைச் சேர்த்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்துக் கிளறி, சோம்புத்தூள், மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். ஒரு கொதிவந்ததும், வேகவைத்த பயறை மட்டும் சேர்த்து கரண்டியால் மசித்துக் கிளறிவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறவும். வேகவைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். சாமையை 10 நிமிடம் ஊறவைத்து, பின் சாதமாக வடித்து ஆறவிடவும். இலையில் சாமை சாதத்தை வைத்துச் சூடான பச்சைப்பயறு மசாலாவைச் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடவும்.

https://www.vikatan.com/

Posted

சத்து மாவு - முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு

 
அ-அ+

சத்து மாவு - முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. உடலுக்கு தேவையான பலத்தை தரவல்லது. இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
சத்து மாவு - முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு
 
தேவையான பொருட்கள் :

சத்து மாவு - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
உப்பு - சிட்டிகை,
முளைக்கட்டிய பச்சைப்பயறு - கால் கப்,
நேந்திரன் பழத் துண்டுகள் - ஒரு கப்.

201802211022411071_1_greengramputtu._L_styvpf.jpg

செய்முறை :

வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.

வறுத்த மாவில் உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து உதிரியாக புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

அதனுடன் பயறு சேர்த்து கலக்கவும்.

கலந்த மாவை இட்லி தட்டில் பரத்தி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

அதனுடன் தேங்காய்த் துருவல், நேந்திரன் பழத்துண்டுகள் சேர்த்து கலக்கவும்.

கடலைக் கறியுடன் பரிமாறலாம்.

https://www.maalaimalar.com

  • 2 weeks later...
Posted

சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி

 
அ-அ+

சூடான சாதத்தில் மீன் குருமா சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

(வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்)

வாழை மீன் - 3
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 20
வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
புளிப்பு மாங்காய் - 1
கொத்தமல்லி - ஒரு கையளவு

201803031424440036_1_meenkurma._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

வாழை மீனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

தேங்காயுடன் சோம்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் மாங்காய், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் மீன் போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான மீன் குருமா ரெடி.

https://www.maalaimalar.com/

Posted

காலிஃப்ளவர் கோரிஸன்ட்ஸ்

 

 

p44a_1520070671.jpg

தேவையானவை:

மைதா மாவு – ஒரு கப்
காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

ஃபில்லிங் செய்ய:

காலிஃப்ளவர் துருவல் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – அரை கப்
ஸ்வீட் கார்ன் முத்துகள் – ஒரு டீஸ்பூன்
ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் பால், பேக்கிங் பவுடர், உப்பு, சிறிதளவு வெண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருக்கி, ஃபில்லிங் செய்ய கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

மாவை உருண்டைகளாக்கவும். ஓர் உருண்டையைப் பெரிய வட்டமாகத் தேய்க்கவும். அதன்மீது சிறிதளவு வெண்ணெய் தடவி மைதா தூவவும். இதன் ஒரு பாதியை மையப் பகுதியை நோக்கி மடிக்கவும். இரண்டாவது பகுதியையும் அதேபோல் மடிக்கவும். வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக, இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாகக் கிடைமட்டமாக (horizantal) மடிக்கவும். இப்போது சதுர வடிவம் கிடைக்கும். பிறகு, மீண்டும் இதைப் பெரிய சதுரமாகத் தேய்த்து, குறுக்காக வெட்டி மெல்லிய முக்கோண வடிவத் துண்டுகளாக்கவும்.அதன் அகலமான ஓரத்தில் சிறிதளவு ஃபில்லிங்கை வைத்துப் பிறை நிலா வடிவில் உருட்டி, ஓரங்களை லேசாக வளைத்து நிலா வடிவில் செய்யவும். இதேபோல் எல்லா உருண்டைகளையும் செய்துகொள்ளவும். இவற்றை வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் இடைவெளிவிட்டு அடுக்கவும். பிறகு 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவன் (oven) உள்வைத்து 20 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். மேலே சிறிதளவு வெண்ணெய் தடவி, தக்காளி சாஸ் அல்லது மயோனைஸுடன் பரிமாறவும்.

https://www.vikatan.com

Posted

சாதத்திற்கு அருமையான நண்டு வறுவல்

தோசை, இட்லி, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சாதத்திற்கு அருமையான நண்டு வறுவல்
 
தேவையான பொருட்கள் :

நண்டு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 மஞ்சள் தூள் - சி
றிதளவு

வதக்கி அரைக்க:

பூண்டு பல் - 10
மிளகு - 2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

201803101458295396_1_crabvaruval._L_styvpf.jpg

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.

அடுத்து அதில் நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியாகி நண்டுடன் சேர்ந்ததும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான நண்டு வறுவல் ரெடி.

https://www.maalaimalar.com

Posted

ஆஹா... என்ன ருசி!

திவ்யா

 

சுவைமிக்க பிரியாணியாக இருந்தாலும் அதற்கு சைட் டிஷ்ஷாக வெங்காயப் பச்சடி தேவைப்படுகிறது. அதேபோல புரோட்டாவுக்குக் குருமா, சப்பாத்திக்கு தால், இடியாப்பத்துக்குத் தேங்காய்ப்பால், காரக் குழம்புக்குப் பொரியல், சாம்பாருக்கு வறுவல், மோர் சாதத்துக்கு மிளகாய் வற்றல் என்று குறிப்பிட்ட காம்பினேஷனுடன் சாப்பிட்டுப் பழகிவிட்டோம் நாம்.  

p89a_1519802319.jpg

இந்த ரசனைக்கேற்ப பிரட்டல், வதக்கல், கூட்டு, வறுவல், மசாலா என்று ருசி அள்ளும் சைட் டிஷ் ரெசிப்பிகளைச் சுவைக்கத் தூண்டும் படங்களுடன் அளித்திருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த சமையல் கலைஞர் திவ்யா.

p89b_1519802346.jpg

காலிஃப்ளவர் முட்டை பிரட்டல்

தேவையானவை:

காலிஃப்ளவர் - மீடியம் சைஸ் காலிஃப்ளவரில் பாதி (சிறிய பூக்களாக நறுக்கவும்)
முட்டை - ஒன்று
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சீரகம்  - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை -  சிறிதளவு
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - ஒன்று (சிறியது)
அன்னாசி மொட்டு - ஒன்று
கல்பாசி - ஒரு சிட்டிகை அல்லது ஒரு சிறிய இலை
எண்ணெய் - 6 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க:

தேங்காய் - 2 இன்ச் நீளத் துண்டு
பட்டை  - ஒன்று (சிறியது)
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்    

p89c_1519802377.jpg

செய்முறை:

மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். முட்டையை உடைத்து ஊற்றிச் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும். தண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள், காலிஃப்ளவர் பூக்களைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு இறக்கி, நீரை வடிகட்டி, பூக்களைத் தனியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, சீரகம், அன்னாசி மொட்டு, கல்பாசி சேர்த்து வதக்கவும். அதனுடன்  கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு காலிஃப்ளவர் பூக்கள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு ஓரமாக வாணலியில் ஒதுக்கிவிட்டு, நடுவில் சிறிதளவு எண்ணெய்விட்டு உடைத்த முட்டையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். முட்டை முக்கால்வாசி வெந்ததும் காலிஃப்ளவர் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
இது, பொடிமாஸ் போல இருக்கும். முட்டை இல்லாமலும் செய்யலாம்.


p89d_1519802407.jpg

கத்திரிக்காய் வதக்கல்

தேவையானவை:

கத்திரிக்காய் - 5 (நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
எண்ணெய் - 6 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மூடி போட்டுக் குறைந்த தீயில் ௭ட்டு நிமிடங்கள் நன்றாக வேகவிடவும்.  நடுநடுவே திறந்து கிளறிவிடவும். (இல்லையெனில் கருகிப்போய்விடும்). நன்றாகச் சுருள வதங்கியதும் இறக்கிப் பரிமாறவும்.


p89e_1519802427.jpg

புடலங்காய் - தேங்காய்ப்பால் கூட்டு

தேவையானவை:

புடலங்காய்  -  ஒன்று (தோல் சீவி, விதை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்)
தோலுரித்த சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கவும்)
முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப்
இரண்டாவது தேங்காய்ப்பால் – ஒன்றரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சிறிய பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், புடலங்காய் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இரண்டாவது தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து மூடி வேகவிடவும். காய் நன்கு வெந்த பிறகு முதல் தேங்காய்ப்பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும். தேங்காய்ப்பால் வற்றியதும் இறக்கவும்.


p89f_1519802450.jpg

பனீர் - கேப்ஸிகம் புர்ஜி

தேவையானவை:

பனீர் - 100 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்  - 2 (பொடியாக நறுக்கவும்)
தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்  
பூண்டு  - 2  பல் (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்  
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்  
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்  
சீரகத்தூள் - கால் டீஸ்பூன் (விரும்பினால்)
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சீரகம் - ஒரு டீஸ்பூன்  
எண்ணெய் - 2 டீஸ்பூன்  
நெய் - 2 டீஸ்பூன் (விரும்பினால்)
உப்பு - அரை டீஸ்பூன்

செய்முறை: 

வீட்டில் செய்த பனீராக இருந்தால் விரல்களால் நன்கு பிசையவும். கடையில் வாங்கிய பனீராக இருந்தால் வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்துத் துருவவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு  வெங்காயம், தக்காளி, குடமிளகாய் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு பனீர், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.


p89g_1519802483.jpg

புடலங்காய் - பாசிப்பருப்புக் கூட்டு

தேவையானவை:

புடலங்காய் - 200  கிராம்  (தோல் சீவி, விதை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்)
பாசிப்பருப்பு - 2 கைப்பிடி அளவு
தோலுரித்த சின்ன வெங்காயம் - 5
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய்  - ஒன்று
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - முக்கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  
உப்பு -  தேவையான அளவு

செய்முறை:

தக்காளியுடன் வெங்காயம், அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு எடுக்கவும். (விழுதாக அரைக்கக் கூடாது). குக்கரில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர்விட்டுக் குழைவாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், மீதமுள்ள சீரகத்தை  தாளிக்கவும். அதனுடன் அரைத்த தக்காளி - வெங்காயக் கலவையைச் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, புடலங்காய் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். புடலங்காய் வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, கலவை கெட்டியானதும் இறக்கவும்.


p89h_1519802523.jpg

உருளைக்கிழங்கு - தேங்காய்ப்பால் மசாலா

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 3 (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்)
நறுக்கிய வெங்காயம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தேங்காய்ப்பால் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - முக்கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பட்டை -  2 சிறிய துண்டு
கடுகு - அரை டீஸ்பூன்
எண்ணெய் -  5 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பட்டை, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும் (தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து, அடுப்பை  சிறு தீயில் வைத்து வேகவிடவும். தேங்காய்ப்பால் நன்கு வற்றியதும் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.


p89i_1519802542.jpg

வெண்டைக்காய் கிரிஸ்பி ஃப்ரை

தேவையானவை:

வெண்டைக்காய் - 300 கிராம்
அரிசி மாவு - அரை கப்
சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - 2 டீஸ்பூன் மிளகுத்தூள் அல்லது
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காயை ஈரத் துணியால் துணியால் துடைத்து வைக்கவும். பிறகு ஒரு இன்ச் துண்டுகளாக்கவும். வெண்டைக்காயுடன் அரிசி மாவு,  சாட் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு,  சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாகப் புரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


p89j_1519802567.jpg

உருளை 65

தேவையானவை:

உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்)
மைதா மாவு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை  டீஸ்பூன்
சீரகத்தூள் - முக்கால் டீஸ்பூன்  
கரம் மசாலாத்தூள்  - கால் டீஸ்பூன்  
சிவப்பு ஃபுட் கலர் - 2 சிட்டிகை (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், சிவப்பு கலர், உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும், அதனுடன் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


p89k_1519802600.jpg

சிறு உருளை - மிளகு வறுவல்

தேவையானவை:

சிறிய உருளைக்கிழங்கு - 200 கிராம்
மிளகுத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
மிளகு  - அரை டீஸ்பூன்  (ஒன்றிரண்டாகத் தட்டவும்)
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (நசுக்கவும்)
பூண்டு - 2 பல் (தட்டவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 8 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு கழுவி, சிறிய க்யூப்ஸ் அல்லது துண்டுகளாக வெட்டவும். தோலை உரிக்கத் தேவை இல்லை (விருப்பப்பட்டால் உரித்துக்கொள்ளலாம்). பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். (இப்படிச் செய்வதால் வறுத்த உருளைக்கிழங்கு மொறுமொறுப்பாக இருக்கும்). வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு துண்டுகள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து வெந்த பிறகு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் புரட்டி இறக்கவும்.


p89l_1519802621.jpg

வெண்டைக்காய் புளிக்கூட்டு

தேவையானவை:

வெண்டைக்காய் - 10
தோலுரித்த சின்ன வெங்காயம்  - 5 (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம்  - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - ஒரு பல் (சிறியது)
இஞ்சி -  பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் சேர்க்கலாம்)
சீரகம் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காயைச் சுத்தம் செய்து ஒரு இன்ச் துண்டுகளாக்கவும். புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவைத்து, நீர் ஓரளவு வற்றியதும் இறக்கவும். 

https://www.vikatan.com/

Posted

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லெட் பன்னகோட்டா

 

குழந்தைகளுக்கு சாக்லெட் பன்னகோட்டா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த சாக்லெட் பன்னகோட்டாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லெட் பன்னகோட்டா
 
தேவையான பொருட்கள் :

ஃப்ரெஷ் கிரீம் - 1 கப்,
பால் - 50 மி.லி.,
தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்,
சைனா கிராஸ் - 1 கிராம்,
குக்கிங் சாக்லெட் - 100 கிராம்,
சர்க்கரை - 50 கிராம்,
வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்.

201803141212229212_1_chocolatepannacotta._L_styvpf.jpg

செய்முறை :

குக்கிங் சாக்லெட்டை பொடியான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு சைனா கிராஸ் சேர்க்கவும். 

சைனா கிராஸ் தண்ணீருடன் நன்கு கலந்து கரையும் நிலைக்கு வரும் வரை கொதிக்க விடவும். 

இன்னொரு கடாயில் கிரீம், பால், சர்க்கரை சேர்த்து மிதமான தீயில், இந்தக் கலவை கரையும் வரை கொதிக்க வைக்கவும். 

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் இத்துடன் நறுக்கிய சாக்லெட், வெனிலா எசென்ஸ் இரண்டையும் கலந்து சாக்லெட் முழுவதுமாக உருகும் வரை கைவிடாமல் கலக்கவும். 

திக்கான பதம் வந்தவுடன் இந்த கலவையை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி 5 மணி நேரம் குளிர வைக்கவும்.

சூப்பரான சாக்லெட் பன்னகோட்டா ரெடி.

https://www.maalaimalar.com

Posted

சுக்கு மிளகுக் குழம்பு செய்வது எப்படி

 

வயிற்று உபாதைகளுக்கு இந்த சுக்கு மிளகுக் குழம்பை அடிக்கடி செய்து சாப்பிடலாம். சூடான சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

சுக்கு மிளகுக் குழம்பு செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

மிளகு - 1 டீஸ்பூன்
சுக்கு - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
தனியா - 1 டீஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

201803151212466320_1_SukkuMilagukuzhambu._L_styvpf.jpg

செய்முறை :

புளியை கரைத்து கொள்ளவும்.

மிளகு, சுக்கு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, தனியா ஆகியவற்றைச் சிறிதளவு எண்ணெயில் தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். 

நன்றாக ஆறியதும் அவற்றுடன் பூண்டு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். 

கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கரைத்த புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

புளிக்கரைசல் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேருங்கள். 

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துத் தளதளவெனக் கொதிக்கவிடுங்கள். 

குழம்பில் எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும்போது இறக்கி சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கவும்.

சூப்பரான சுக்கு மிளகுக் குழம்பு ரெடி.

https://www.maalaimalar.com

Posted

 

p119c_1519387654.jpg

லகம் முழுக்க விரும்பி ருசிக்கப்படும் அசைவ உணவு சிக்கன். மசாலா, கறி, வறுவல் என வீட்டிலும், விதம்விதமான ஃப்ரைடு உணவுகளாக ஹோட்டல்களிலும் சிக்கனைப் பலர் சுவைத்திருக்கலாம். 

 

இங்கு, ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ் அழகிய படங்களுடன் வழங்கியிருக்கும் சிக்கன் ரெசிப்பிகளோ முற்றிலும் வித்தியாசமானவை. மீண்டும் மீண்டும் செய்யத்தூண்டும் வசீகரத்தன்மை வாய்ந்தவை. பல நாடுகளில் புகழ்பெற்ற அசத்தலான சிக்கன் ரெசிப்பிகளை இனி நம் வீட்டிலும் செய்யலாமே. 

சிக்கன் ரிசாட்டோ

தேவையானவை:

வெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்
நறுக்கிய சிக்கன் துண்டுகள் – அரை கப்
ஆர்போரியோ அரிசி – அரை கப்
வெள்ளை ஒயின் – ஒரு கப்
சிக்கன் ஸ்டாக் – 2 கப்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
பார்மேசன் சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
பேசில் இலைகள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு 

p119e_1519387743.jpg

செய்முறை:

வாணலியில் 2 டீஸ்பூன் வெண்ணெய்விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து வதக்கவும். பிறகு ஆர்போரியோ அரிசி, அரை கப் ஒயின் சேர்த்து வேக விடவும். பிறகு மீதமுள்ள ஒயின் சேர்த்து வேகவிடவும். பிறகு, இதேபோல சிக்கன் ஸ்டாக் அரை அரை கப்பாகச் சேர்த்து வேகவிடவும். இறுதியாக உப்பு, சீஸ், மிளகுத்தூள், மீதமுள்ள வெண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே பேசில் இலைகளைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.


p119d_1519387807.jpg

தாய் பேசில் சிக்கன் ஃப்ரை

தேவையானவை:

பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கவும்)
ஃப்ரெஷ் சிவப்பு மிளகாய் (காயவைக்காதது) - 3
சிக்கன் துண்டுகள் – அரை கப்
ஃபிஷ் சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
தாய் பேசில் இலைகள் – கைப்பிடி அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் சிவப்பு மிளகாய்த் துண்டுகள், சிக்கன் துண்டுகள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு, சோயா சாஸ், ஃபிஷ் சாஸ், உப்பு, பாதியளவு பேசில் இலைகள் சேர்த்து வதக்கவும். சிக்கன் நன்கு வெந்த பிறகு மீதமுள்ள பேசில் இலைகள் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.


p119f_1519387836.jpg

கிரிஸ்பி ஹனி சிக்கன்

தேவையானவை:

சிக்கன் நெஞ்சுக்கறி – கால் கிலோ (நீளவாக்கில் துண்டுகளாக்கவும்)
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
ஃபைவ் ஸ்பைஸ் பவுடர் – ஒரு டீஸ்பூன் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
ரெட் சில்லி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
முட்டை – ஒன்று
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) 4 – 5 டேபிள்ஸ்பூன்
வறுத்த எள் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

ஹனி சாஸ் செய்ய:

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் – 3
தேன் – 3 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
ஃபைவ் ஸ்பைஸ் பவுடர் – ஒரு டீஸ்பூன் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் துண்டுகளுடன் சோயா சாஸ், ஸ்பைஸ் பவுடர், உடைத்த முட்டை, ரெட் சில்லி பேஸ்ட், உப்பு சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் மூடி ஊறவிடவும். இதனுடன் சோள மாவு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு சிக்கன் துண்டுகளைச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் தேன், சோயா சாஸ், ஃபைவ் ஸ்பைஸ் பவுடர், உப்பு சேர்த்துக் கிளறவும். சாஸ் கலவை கெட்டியானவுடன் பொரித்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்துக் கலக்கவும். மேலே வறுத்த எள் தூவி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: அன்னாசி மொட்டு, மிளகு, கிராம்பு, பட்டை, பெருஞ்சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பவுடராக அரைத்து எடுத்தால் ஃபைவ் ஸ்பைஸ் பவுடர் ரெடி!


p119g_1519387930.jpg

சிக்கன் ரஸெல்லா

தேவையானவை ஊறவைக்க:

சிக்கன் – 300 கிராம்
வெங்காய விழுது, தயிர் – அரை கப்
இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

கிரேவி செய்ய:

பட்டை – சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் – தலா 2
பிரியாணி இலை, மிளகு – 4
வெங்காய விழுது – அரை கப்
கேவ்ரா வாட்டர் – சில துளிகள்
வெங்காய வில்லைகள் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

அரைக்க:

முந்திரி – 6 அல்லது 7
கசகசா – அரை டீஸ்பூன்

செய்முறை:

ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வெங்காய வில்லைகள், காய்ந்த மிளகாயைச் சிறிதளவு எண்ணெயில் வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, ஊறவைத்த சிக்கன், சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்த பிறகு அரைத்த விழுது, கேவ்ரா வாட்டர் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். மேலே வறுத்த வெங்காய வில்லைகள், மிளகாய் சேர்த்துச் சூடான சாதத்துடன் பரிமாறவும். ரொட்டி, புல்கா, நாண் போன்றவற்றுடனும் பரிமாறலாம்.


p119h_1519387957.jpg

வியட்நாம் ஜிஞ்சர் சிக்கன்

தேவையானவை ஊறவைக்க:

சிக்கன் – கால் கிலோ (துண்டுகளாக்கவும்)
பூண்டு -  5 பல் (பொடியாக நறுக்கவும்)
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்)
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
சிக்கன் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன்
ஃபிஷ் சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மெல்லியதாக நறுக்கிய இஞ்சித் துண்டுகள் – கால் கப்
உப்பு – தேவையான அளவு

கறி செய்ய:

எண்ணெய், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிதளவு

அலங்கரிக்க:

மெல்லியதாக நறுக்கிய இஞ்சித் துண்டுகள் – சிறிதளவு

செய்முறை:

ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சர்க்கரை சேர்த்துக் கரையவிடவும். சர்க்கரை கேரமலைஸ் ஆனதும் (பழுப்பு நிறமானதும்) ஊறவைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் நன்கு வெந்த பிறகு இஞ்சித் துண்டுகளைச் சேர்த்து அலங்கரித்துச் சூடான சாதத்துடன் பரிமாறவும்.


p119i_1519387983.jpg

பார்சி சிக்கன் கறி

தேவையானவை:


சிக்கன் – கால் கிலோ
பச்சை மிளகாய் – 4
வெங்காயம், தக்காளி – ஒன்று
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மசாலா கலவைக்கு :

இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
பட்டைத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

உருளை சிப்ஸ் செய்ய:

உருளைக்கிழங்கு – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கைத் தோல் சீவி கழுவி, கேரட் துருவலில் துருவவும். பிறகு தண்ணீரில் அலசி, பேப்பர் டவலில் போட்டு அரை மணி நேரம் ஈரம் போக உலரவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு நன்கு உலர்ந்த உருளைத் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்தெடுக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இதுவே உருளைக்கிழங்கு சிப்ஸ். மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்துக் கிளறி, பிறகு தக்காளி விழுது, மசாலா கலவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேகவிட்டு இறக்கவும். மேலே உருளைக்கிழங்கு சிப்ஸ் கலவையைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.


p119j_1519388011.jpg

சிக்கன் வித் வெண்டைக்காய்

தேவையானவை:


சிக்கன் துண்டுகள் – கால் கிலோ
வெண்டைக்காய் – 10 (சிறிய துண்டுகளாக்கவும்)
வெங்காயம் – ஒன்று (மெல்லியதாக நறுக்கவும்)
பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் துண்டுகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு சிக்கன் துண்டுகளைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவைக்கவும். பிறகு வெண்டைக்காய், தக்காளி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு மீண்டும் நன்கு வேகவிட்டு இறக்கவும். சூடான சாதத்துடன்  பரிமாறவும்.


p119k_1519388042.jpg

சிக்கன் ஸக்யூட்டி (Chicken Xacuti)

தேவையானவை:

சிக்கன் – 300 கிராம் (சிறிய துண்டுகளாக்கவும்)

மசாலா செய்ய:

மல்லி (தனியா) – ஒரு டேபிள்ஸ்பூன்
அன்னாசி மொட்டு – ஒன்று
பட்டை – சிறிய துண்டு
ஏலக்காய் - 2
ஜாதிபத்ரி – ஒன்று
கசகசா, சீரகம் – ஒரு டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
கிராம்பு – 3
காய்ந்த மிளகாய் – 10
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
பெருஞ்சீரகம், வெந்தயம் – அரை டீஸ்பூன்

கறி செய்ய:

எண்ணெய் - 2/3 டேபிள்ஸ்பூன்
பிரியாணி இலை – 2
ஏலக்காய் - 2
கிராம்பு - ஒன்று
பட்டை – சிறிய துண்டு
அன்னாசி மொட்டு – ஒன்று
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
உப்பு – தேவையான அளவு

ஊறவைத்து அரைக்க:

பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லித்தழை – கைப்பிடி அளவு
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

அரைக்க:

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – கால் கப்

செய்முறை:

ஊறவைத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சிறிது நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை விழுதாக அரைத்து எடுக்கவும். வெறும் வாணலியில் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருள்களை வறுத்து பவுடராக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை, அன்னாசி மொட்டு சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்துக் கிளறி, தக்காளி சேர்த்து வதக்கவும். ஊறவைத்த சிக்கன், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, 2 - 3 டேபிள்ஸ்பூன் அரைத்த மசாலா பவுடர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்ததும், அரைத்த தேங்காய் – முந்திரி விழுது சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


p119l_1519388076.jpg

ஆப்பிள் அண்டு சிக்கன் சாலட்

தேவையானவை: 


எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் – கால் கிலோ 
ஆப்பிள் – 2 (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்)
வெள்ளரிக்காய் – 2 (சதுர துண்டுகளாக்கவும்)
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – அரை கப்
கறி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
புதினா இலைகள் – சிறிதளவு
ஆரஞ்சுப் பழச்சாறு – அரை கப்
மயோனைஸ் – ஒரு கப்
ஃப்ரெஷ் க்ரீம் – அரை கப்
மிளகுத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
முட்டை கோஸ் இலைகள் அல்லது லெட்யூஸ் இலைகள் – சிறிதளவு (பரிமாற)
  
செய்முறை:

ஒரு டீஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாற்றைத் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள ஆரஞ்சு பழச்சாற்றுடன் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் கறி மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, இறக்கி ஆறவிடவும். ஒரு பவுலில் வேகவைத்த சிக்கன் துண்டுகளுடன் ஆப்பிள் துண்டுகள், வெள்ளரிக்காய் துண்டுகள், வெங்காயக் கலவை சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பவுலில் மயோனைஸுடன் ஃப்ரெஷ் க்ரீம், தனியாக எடுத்து வைத்த ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாறு சேர்த்துக் கலக்கவும்.

சிக்கன் - ஆப்பிள் கலவையுடன், மயோனைஸ் கலவை, புதினா இலைகள், மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். முட்டைகோஸ் இலைகள் அல்லது லெட்யூஸ் இலைகளில் இந்த சாலடைப் போட்டுப் பரிமாறவும். 

https://www.vikatan.com

Posted

வேர்கடலை - தேங்காய் சாதம் செய்வது எப்படி

 

தேங்காய் சாதம் செய்யும் பொழுது அதில் வேர்க்கடலையை வறுத்து சேர்த்தால் சூப்பராக இருக்கும். வேர்கடலை - தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
வேர்கடலை - தேங்காய் சாதம் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

தேங்காய் துருவல் - கால் கப்
வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
வேர்கடலை - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லி - சிறிது
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய், நெய் - தாளிக்க
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப

201803231506493950_1_peanutcoconutrice._L_styvpf.jpg

செய்முறை :

உதிரியாக வடித்த சாதத்தை தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர்  பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தை தாளித்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

சுவையான வேர்கடலை - தேங்காய் சாதம் தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு வறுவல், புதினா துவையல் சூப்பராக இருக்கும்.

https://www.maalaimalar.com

Posted

30 வகை டேஸ்ட்டி & ஹெல்த்தி டூ இன் ஒன் சமையல்

 
 

 

 

கறிவேப்பிலைப் பச்சடி

தேவை:  ஆய்ந்த கறிவேப்பிலை - 2 கப்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  புளி - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு. 
வறுக்க:  எள் - ஒரு டேபிள்ஸ்பூன்  வெந்தயம் - அரை டீஸ்பூன்  கடலைப் பருப்பு, கறுப்பு உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்  தனியா (மல்லி) - 2 டேபிள்ஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  எண்ணெய் - ஒரு டீஸ்பூன். தாளிக்க:  நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை இலைகள் - 6  காய்ந்த மிளகாய் - ஒன்று  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  பூண்டு - 3 பல் (தோலுடன் தட்டவும்)  கடுகு - ஒரு டீஸ்பூன்.   

p101b_1521282642.jpg

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும் வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் கறிவேப்பிலையைச் சேர்த்து மொறுமொறுப்பாக வறுக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, புளி சேர்த்து வறுத்து இறக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் அரைத்த பொடி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வதக்கி இறக்கவும். கறிவேப்பிலைப் பச்சடி தயார். இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

குறிப்பு: கறிவேப்பிலையில் இரும்புச் சத்து உள்ளது. தலைமுடி வளர்ச்சிக்கும், தலைமுடி கருமைக்கும் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதற்கும் கறிவேப்பிலைப் பச்சடி உதவும். வாரத்தில் இரு முறையாவது இந்தக் கறிவேப்பிலைப் பச்சடியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


p101c_1521282716.jpg

தக்காளி தால்

தேவை:   தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)  குழைய வேகவைத்த பாசிப்பருப்பு - 8 டேபிள்ஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  சாம்பார் வெங்காயம் - 6 (நறுக்கவும்)  பூண்டு - 3 பல் (நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)  கடுகு - ஒரு டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்   பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.  இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து மேலும் வதக்கி, ஒரு கப் நீர்விட்டு நன்கு வேகவிடவும். பிறகு, வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து  ஒரு கொதிவந்ததும் இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி நன்றாகக் கலக்கிவிடவும். சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிடலாம். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும் இந்தத் தக்காளி தால் ஏற்றது.

குறிப்பு: தக்காளிக்கு உடல் எடையைக் குறைப்பதில் பங்கு உண்டு. சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். சிறுநீரகங்களில் கல் சேருவதைத் தடுக்கிறது.


p101d_1521282741.jpg

பிண்டி மசாலா

தேவை:  வெண்டைக்காய் - 200 கிராம் (ஒரு இன்ச் நீள துண்டுகளாக்கவும்)  பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  தயிர் - கால் கப்  ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன்  சீரகம், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்  சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - 25 கிராம்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேங்காய்த் துருவலுடன் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, தனியாக வைக்கவும். அதே வாணலியில் சீரகம், இஞ்சி - பூண்டு விழுது, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தயிர், ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் வறுத்த வெண்டைக்காய் சேர்த்து 2 கொதிவிட்டு இறக்கவும். இது சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

குறிப்பு: வெண்டைக்காய் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும்.


p101e_1521282764.jpg

கேரட் லட்டு

தேவை: கேரட் துருவல் - 4 கப்  தேங்காய்த் துருவல் - ஒரு கப்  சர்க்கரை - 2 கப்  நெய் - 6 டேபிள்ஸ்பூன்  ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  முந்திரி, பாதாம் - தலா 10  பாசிப்பருப்பு - 10 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பைச் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பவுடராக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் பாதாம், முந்திரி சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அதே வாணலியில் நெய்யை ஊற்றி கேரட் துருவலைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளறி, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போடவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நன்கு ஆறியதும் பாசிப்பருப்பு மாவு,  பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு லட்டுகளாகப் பிடிக்கவும். மற்ற லட்டுகள் மாதிரி இது நீண்ட நாள்கள் இருக்காது. விரைவிலேயே பயன்படுத்திவிட வேண்டும்.

குறிப்பு: கேரட் பிரகாசமான பார்வைக்கு வழிவகுப்பதுடன் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.


p101f_1521282785.jpg

புதினா தவா கட்லெட்

தேவை: புதினா இலைகள் - 2 கப்  குழைவாக வேகவைத்த சாதம் - ஒரு கப்  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  கொத்தமல்லி இலைகள் - அரை கப்  சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - 4 டேபிள்ஸ்பூன்  கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  ஓமம் - ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)  எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினாவுடன் கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். சாதத்தை நன்கு மசிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, கேரட் துருவல், ஓமம், பெருங்காயத்தூள், சோள மாவு சேர்த்துப் பிசையவும். பிறகு விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாகத் தட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கட்லெட்டுகளை அடுக்கி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை.

குறிப்பு: வாய் துர்நாற்றத்தைப் போக்குவதுடன் பற்கள் மற்றும் ஈறுகளின் உறுதிக்கும் உதவுகிறது. தொண்டையில் தொற்று ஏற்பட்டால் நீக்கி மீண்டும் வராமல் தடுக்கும்.


p101g_1521282805.jpg

பொன்னாங்கண்ணிக்கீரை ரசம்

தேவை:  சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கப்  புளிக்கரைசல் - கால் கப்  தக்காளி - பாதியளவு (பொடியாக நறுக்கவும்)  பூண்டு - 2 பல் (தட்டவும்)  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்  உப்பு -
தேவையான அளவு. வறுக்க:  துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்  காய்ந்த மிளகாய் - ஒன்று  மிளகு, தனியா (மல்லி) - தலா ஒரு டீஸ்பூன்  சீரகம் - அரை டீஸ்பூன். தாளிக்க:  கடுகு - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு   எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் வறுக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்தெடுக்கவும். புளிக்கரைசலுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், பொன்னாங் கண்ணிக்கீரையைச் சேர்த்து வேகவிடவும். கீரை அரை வேக்காடு பதத்தில் வெந்த பிறகு தக்காளி, பூண்டு சேர்த்து வேகவிடவும். பிறகு, பொடித்த பொடியைத் தூவி, நுரை வரும்போது இறக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். இதை டம்ளரில் ஊற்றிக் குடிக்கலாம்; சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம்.

குறிப்பு: இதைத் தொடர்ந்து 45 நாள்கள் சாப்பிட்டு வர... தோல் பளபளப்பாகும். நல்ல நிறம் கிடைக்கும். கண்களும் நல்ல ஒளியுடன் மின்னும்.


p101h_1521282833.jpg

மணத்தக்காளிக்கீரை தண்ணிச்சாறு

தேவை: நறுக்கிய மணத்தக்காளிக்கீரை - 2 கப்  தேங்காய்ப்பால் - அரை கப்  பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்  மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்  நெய் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நெய்விட்டு உருக்கி மிளகு - சீரகத்தூள் சேர்த்து வறுக்கவும். இரண்டு கப் தண்ணீருடன் உப்பு, வெங்காயம், மணத்தக்காளிக்கீரை சேர்த்து வேகவிடவும். அதனுடன் வறுத்த மிளகு - சீரகத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து இரண்டு கொதிவிட்டு இறக்கவும். இதுவே மணத்தக்காளிக்கீரை தண்ணிச்சாறு. பாத்திரத்தில் மணத்தக்காளிக்கீரைத் தண்ணிச்சாற்றை ஊற்றவும். ஸ்பூனால் கீரையை எடுத்து நன்றாக மென்று சாப்பிட்ட பிறகு சாற்றைக் குடிக்கவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம்.

குறிப்பு: இதைத் தொடர்ந்து ஒரு வாரம் அருந்தி வர... வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.  தேங்காய்ப்பாலுக்குப் பதிலாகப் பால் சேர்த்தும் அருந்தலாம்.


p101i_1521282867.jpg

சுரைக்காய் பொரியல்

தேவை: தோல், விதை நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய சுரைக்காய் - 2 கப்  தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்  கடுகு - ஒரு டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்  கறிவேப்பிலை -  சிறிதளவு  நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம், பூண்டு, தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சுரைக்காய் சேர்த்து வதக்கி மூடி வைக்கவும். எட்டு நிமிடங்களில் வெந்துவிடும். பிறகு திறந்து, கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி இறக்கவும். இதை சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளலாம்; சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

குறிப்பு: சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. இதில் உள்ள பாஸ்பரஸ்... பற்கள், எலும்புகளுக்குப் பலம் கொடுக்கும். சுரைக்காய் பொரியலை வாரம் மூன்று முறை சாப்பிட்டால், உடல் நன்கு இளைக்கும்.


p101j_1521282892.jpg

வேர்க்கடலை சப்ஜி

தேவை: பச்சை வேர்க்கடலை - ஒரு கப்  கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)  பூண்டு - 3 பல்  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.அரைக்க:  பொட்டுக்கடலை - 3 டேபிள்ஸ்பூன்  தேங்காய்த் துருவல் - கால் கப்  பச்சை மிளகாய் - 2  தோல் சீவிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு. அலங்கரிக்க:  நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சை வேர்க்கடலையுடன் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாக அரைத்துத் தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பூண்டு, கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, அரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கொதிவிடவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்து இரண்டு கொதிவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: வேர்க்கடலை சப்ஜியை வாரம் மூன்று முறை செய்து இட்லி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிட, உடலில் சதை பிடிக்கும்.


p101k_1521282915.jpg

இளநீர் பானம்

தேவை:  வழுக்கையுடன் சேர்ந்த இளநீர் - 2  எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்  தயிர், தேன் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்  வெந்தயப்பொடி - ஒரு சிட்டிகை.

செய்முறை: இளநீரைத் தனியாக எடுத்து வைக்கவும். வழுக்கையை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும்.  இளநீருடன் அரைத்த வழுக்கை, தயிர், தேன், எலுமிச்சைச் சாறு, வெந்தயப் பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை டம்ளர்களில் ஊற்றிப் பருகவும். நிறைய நீருடன் இருந்தால் ஒரு இளநீர் போதுமானது. இந்த இளநீர் பானத்தை வெறும் வயிற்றில் பருகக் கூடாது. காலை உணவு உண்டபின்தான் பருக வேண்டும்.

குறிப்பு: தொடர்ந்து 10 நாள்கள் இந்த இளநீர் பானத்தை அருந்தி வந்தால், ஆரம்ப நிலை குடற்புண் குணமாகும்; இந்தப் பானம் இதயக்கோளாறுகள் வருவதைத் தடுக்கும்.


p101l_1521282941.jpg

கருணைக்கிழங்குத் துவையல்

தேவை:  கருணைக்கிழங்கு - 150 கிராம் (தோல் சீவி, கேரட் துருவியில் துருவவும்)  புளி - சிறிதளவு (சுண்டைக்காய் அளவு)  உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  வெங்காய வடகம் (சிறியது) - ஒன்று  பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெங்காய வடகம் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும்.  அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, கருணைக்கிழங்குத் துருவலைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். ஆறியவுடன் வறுத்த பொருள்களை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விடாமல் இரண்டு சுற்று சுற்றவும். அதனுடன் வதக்கிய கருணைக்கிழங்குத் துருவல், புளி, உப்பு தேவையான தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக  அரைத்தெடுக்கவும். (விரும்பினால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்). இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசை, உப்புமா போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

குறிப்பு: கருணைக்கிழங்கில் இரும்புச் சத்து, வைட்டமின்-சி உள்ளது.  மூலநோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்குத் துவையலைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


p101m_1521282965.jpg

முடக்கத்தான் கீரை அடை

தேவை: சுத்தம் செய்து நறுக்கிய முடக்கத்தான் கீரை - 2 கப்  புழுங்கல் அரிசி - ஒரு கப்  துவரம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்  உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 4  பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்  கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  கடுகு - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசியுடன் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு களைந்து அதனுடன் கீரை, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, கேரட் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை அடைகளாக ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாள்கள் இந்த முடக்கத்தான் கீரை அடையைச் செய்து பூண்டு சட்னியுடன் பரிமாறலாம்.

குறிப்பு: மூட்டுவலி, இடுப்புப்பிடிப்பு, முழங்கால்வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். வாய்வு தொல்லை, பித்தம் குறையும்.


p101n_1521282997.jpg

பத்தியக்குழம்பு

தேவை: முருங்கைக்காய் - ஒன்று (விரல் நீள துண்டுகளாக்கவும்)  பூண்டு - கால் கப்  மணத்தக்காளி வற்றல் - கால் கப்  கத்திரிக்காய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  புளிக்கரைசல் - கால் கப்  தட்டிய விரலி மஞ்சள் - ஒரு டீஸ்பூன்  மிளகு - 3 டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  சீரகம், தனியா (மல்லி) - தலா ஒரு டீஸ்பூன்  சிறிய வெங்காய வடகம் - ஒன்று  நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியா சேர்த்து வறுத்தெடுக்கவும். சூடாக இருக்கும்போதே அதனுடன் விரலி மஞ்சளைச் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள நல்லெண்ணெய்விட்டு பூண்டு, மணத்தக்காளி வற்றல், வெங்காய வடகம் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் புளிக்கரைசலுடன் உப்பு, முருங்கைக்காய் சேர்த்து வேகவிடவும். முருங்கைக்காய் பாதியளவு வெந்ததும் வறுத்த பூண்டு கலவை, கத்திரிக்காய், அரைத்த விழுது, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். பிரசவித்த பெண்கள் இதைக் குழைவாக வெந்த, சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து நல்லெண்ணெய்விட்டு  15 நாள்கள் சாப்பிட வேண்டும். புளியைக் குறைந்த அளவுதான் சேர்க்க வேண்டும்.

குறிப்பு: கத்திரிக்காயில் இரும்புச் சத்து, வைட்டமின்-சி உள்ளது. கத்திரிக்காய் மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.  பிரசவித்த பெண்கள் இந்தக் குழம்பைச் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்கு சுரக்கும். நல்லெண்ணெய், மஞ்சள் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.


p101o_1521283025.jpg

வாழைப்பூ ஃப்ரைடு ரைஸ்

தேவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்  பாசுமதி அரிசி (அ) பச்சரிசி - ஒரு கப்  வெங்காயம் -  ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)  மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப்  மெல்லியதாக நறுக்கிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்  மோர் - 4 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவுடன் மோர், சிறிதளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு எடுத்துத் தனியாக வைக்கவும். அரிசியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து உதிர் உதிராக வேகவிட்டு எடுக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். அதனுடன் வாழைப்பூ, சிறிதளவு உப்பு சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும். பிறகு, சாதத்தைச் சேர்த்துக் கிளறவும். வாழைப்பூ ஃப்ரைடு ரைஸ் தயார். முள்ளங்கி தயிர்ப் பச்சடியுடன் வாரத்தில் இரண்டு நாள்கள் இந்த வாழைப்பூ ஃப்ரைடு ரைஸைச் சுவைக்கலாம்.

குறிப்பு: வாழைப்பூ இரும்புச் சத்து, கால்சியம், புரதச் சத்து நிறைந்தது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். பெண்களுக்குக் கருப்பை பலம் பெற உதவும்.


p101p_1521283050.jpg

நூல்கோல் ஃப்ரைடு ரைஸ்

தேவை: நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய நூல்கோல் - ஒரு கப்  உதிர் உதிராக வேகவைத்த சாதம் - 2 கப்  நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட் (சேர்த்து) கால் கப்  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்  கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு பெரிய வெங்காயம், கேரட் சேர்த்து வதக்கி, பிறகு பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி, இறுதியில் நூல்கோலைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து எல்லா காய்களும் வதங்கியதும் (நூல்கோல் அதிகமாக வேகக் கூடாது) மிளகுத்தூள் தூவி, வெந்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் இந்த நூல்கோல் ஃப்ரைடு ரைஸ் செய்து சாப்பிடலாம். இதற்குத் தொட்டுக்கொள்ள பீன்ஸ் பொரியல் ஏற்றது.

குறிப்பு: நூல்கோல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. பக்கவாதம், புற்றுநோய் வராமலும் இது தடுக்கிறது.


p101q_1521283077.jpg

கொத்தமல்லிப் புளி

தேவை: கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு  காய்ந்த மிளகாய் - 2  உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்  புளி - சிறிய நெல்லிக்காய் அளவு  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கொத்தமல்லித்தழையை வேர் நீக்கி  தழையை மட்டும் நறுக்கி, அலசி உலரவிடவும்.  வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, புளியையும் சேர்த்து வதக்கி இறக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி, பிறகு உலர்ந்த கொத்தமல்லித்தழை சேர்த்துச் சுற்றவும் (துளிகூட நீர் விடக் கூடாது). கொத்தமல்லிப் புளி தயார். ஃப்ரிட்ஜ் இல்லாதவர்களும் இதைச் செய்து வெளியில் வைத்தே மூன்று நாள்கள் வரை பயன்படுத்தலாம். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

குறிப்பு: இது சோர்வை நீக்கி, மூளை சுறுசுறுப்பாகச் செயல்பட உதவுகிறது.


p101r_1521283106.jpg

பீட்ரூட் குழிப்பணியாரம்

தேவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப்  இட்லி மாவு - 3 கப்  பொடியாக  நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்  பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்  கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு
 கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். சிறிதளவு ஆறியதும் உப்பு, கொத்தமல்லித்தழை சேர்க்கவும். இதை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து மாவைக் குழிகளில் ஊற்றி, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சட்னி (அ)   சாம்பாருடன் பரிமாறலாம்.

குறிப்பு: ரத்தம் விருத்தி அடைய பீட்ரூட் உதவுகிறது. இது இரும்புச் சத்து, கால்சியம் உட்பட பல்வேறு சத்துகளைக்கொண்டுள்ளது.


p101s_1521283141.jpg

பாதாம் மிக்ஸர்

தேவை: பாதாம்பருப்பு - 30  கெட்டி அவல் - கைப்பிடி அளவு  பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை - தலா 3 டேபிள்ஸ்பூன்  உலர் திராட்சை - 4 டேபிள்ஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  மிளகுத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்  பூண்டு - 4 பல் (தோலுடன் தட்டவும்)  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் பாதாம்பருப்பு, அவல், பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் பாதாம், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அவல் ஆகியவற்றை சேர்த்து ஒருமுறை புரட்டி அடுப்பை அணைக்கவும். மேலே மிளகுத்தூள் தூவி, உலர் திராட்சை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பாதாம் மிக்ஸர் ரெடி. இதை நான்கு நாள்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.

குறிப்பு: பாதாம்பருப்பு ஞாபக சக்தியை அதிகரிக்கும்.


p101t_1521283171.jpg

சுண்டைக்காய் கொத்சு

தேவை:  பிஞ்சு சுண்டைக்காய் - ஒரு கப் (கழுவி தட்டவும்)  புளிக்கரைசல் - கால் கப்  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  வெல்லத்தூள் - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க:  எள் - 2 டீஸ்பூன்  வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்  தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்  சீரகம், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 3  தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன். தாளிக்க:  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை: வெறும் வாணலியில் வறுக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளித்துத் தனியாக வைக்கவும். அதே வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து இரண்டு கொதிவிடவும். பிறகு வெல்லத்தூள், தாளித்த பொருள்களைச் சேர்த்து இறக்கவும். இந்தச் சுண்டைக்காய் கொத்சு இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. 

குறிப்பு: சுண்டைக்காயில் இரும்புச் சத்து, புரதம், கால்சியம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. சுண்டைக்காய் வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும்.


p101v_1521283198.jpg

மிதி பாகற்காய் அரைத்துவிட்ட சாம்பார்

தேவை:   மிதி பாகற்காய் - ஒரு கப்  புளிக்கரைசல் - கால் கப்  மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்  குழைவாக வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப்  கொத்த மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க:  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 3  தனியா (மல்லி) - 3 டேபிள்ஸ்பூன்  கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்  தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன். தாளிக்க:  கடுகு, எண்ணெய், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: வறுத்து அரைக்கக்கொடுத்துள்ளவற்றை வறுத்து விழுதாக அரைக்கவும். மிதி பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், 4 டேபிள்ஸ்பூன் புளிக்கரைசல், கால் கப் தண்ணீர் சேர்த்து அரை வேக்காடாக வேகவிட்டுத் தனியாக வைக்கவும். மீதமுள்ள புளிக்கரைசலைக் கொதிக்கவிடவும். அதனுடன் வேகவைத்த மிதி பாகற்காய் சேர்த்து நன்றாக வேகவிடவும். பிறகு, துவரம்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து இரண்டு கொதிவிடவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழையைத் தூவி பரிமாறவும். வாரத்தில் இரண்டு நாள்கள் இந்த மிதி பாகற்காய் அரைத்துவிட்ட சாம்பாரை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும்.

குறிப்பு: பாகற்காய் புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து மிக்கது. இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது; வயிற்றிலுள்ள பூச்சிகளையும் ஒழிக்கிறது.


p101w_1521283222.jpg

வாழைத்தண்டுப் பொரியல்

தேவை: நார் நீக்கிப் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒன்றரை கப்  உதிர் உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்  கெட்டியான மோர் - 2 டேபிள்ஸ்பூன்  தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்  உப்பு ­ தேவையான அளவு. தாளிக்க:  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் மோர், உப்பு, மஞ்சள்தூள், வாழைத்தண்டு சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும். வாழைத்தண்டு வெந்ததும்  பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த வாழைத்தண்டுப் பொரியலை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம். சாலட் போலவும் சாப்பிடலாம்; சாம்பார், ரசம் சாதங்களுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

குறிப்பு: வாழைத்தண்டு வைட்டமின் - ஏ மற்றும் வைட்டமின் - சி கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் சேருவதைத் தடுக்கிறது. ஆரம்ப நிலையில் உள்ள சிறுநீரகக் கற்களை வாழைத்தண்டு கரைத்துவிடும்.


p101x_1521283241.jpg

இஞ்சி ஊத்தப்பம்

தேவை: தோல் சீவி துருவிய இஞ்சி - கால் கப்  இட்லி மாவு - 2 கப்  கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா 3 டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இஞ்சித் துருவலைச் சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும். இட்லி மாவுடன் இஞ்சித் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசைக் கல்லில் மாவை ஊத்தப்பங்களாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டுத் திருப்பிப் போடாமல் வேகவைத்து எடுக்கவும். வாரத்தில் ஒருமுறை இரண்டு இஞ்சி ஊத்தப்பங்களைச் சட்னி (அ) சாம்பாருடன் சுவைக்கலாம்.

குறிப்பு: இஞ்சி சாப்பிடுவது ஜீரணத்துக்கு மிகவும் ஏற்றது. பித்தத்தையும் இஞ்சி குறைக்கிறது. இட்லி மாவிலேயே உப்பு இருப்பதால் உப்பு சேர்க்கத் தேவையில்லை. விருப்பப்பட்டால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.


p101y_1521283262.jpg

பூண்டு சூப்

தேவை: பொடியாக நறுக்கிய பூண்டு - 8 டேபிள்ஸ்பூன்  மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்  சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - ஒரு டேபிள்ஸ்பூன்  கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்  வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் கேரட் துருவல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, சோள மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். பூண்டு சூப் ரெடி. வாரம் மூன்று முறை இந்தப் பூண்டு சூப்பை அருந்தலாம்.

குறிப்பு: பூண்டு கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது.


p101z_1521283288.jpg

வெங்காயத்தாள் சப்பாத்தி

தேவை: கோதுமை மாவு - 2 கப்  வெங்காயத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்  கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  ஓமம் - அரை டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு வெங்காயத்தாள், உப்பு, கேரட் துருவல், ஓமம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் கோதுமை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி கவனமாக மசாலா பிரிந்து வராதவாறு மெதுவாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். வாரம் இருமுறை இந்த வெங்காயத்தாள் சப்பாத்தியை முள்ளங்கி தயிர்ப் பச்சடியுடன் சுவைக்கவும்.

குறிப்பு: வெங்காயத்தாள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதுடன் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சி அளிக்கிறது.


p101z1_1521283311.jpg

வாழைப்பழ மில்க்‌ஷேக்

தேவை: நன்கு பழுத்த வாழைப்பழம் - 2  துருவிய வெல்லம் - 4 டேபிள்ஸ்பூன்  காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப்  ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்  உலர்திராட்சை - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: துருவிய வெல்லத்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். அதனுடன் வாழைப்பழம், சிறிதளவு பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து அடிக்கவும். பிறகு, மீதமுள்ள பாலை ஊற்றி அடித்தெடுக்கவும். இதை டம்ளர்களில் ஊற்றி, மேலே உலர்திராட்சை தூவி அலங்கரித்துப் பருகவும். ஐஸ்கட்டிகளையும் சிறிதளவு மேலே சேர்க்கலாம். வாரம் இருமுறை இந்த வாழைப்பழ மில்க் ஷேக் பருகலாம். வாழைப்பழமாகக் கொடுத்தால் சாப்பிடாத குழந்தைகள்கூட இதை மிகவும் விரும்பி அருந்துவார்கள்.

குறிப்பு: வாழைப்பழத்தில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து அடங்கியுள்ளது. வாழைப்பழமும் உலர்திராட்சையும் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும்.


p101z2_1521283341.jpg

மிக்ஸ்டு தயிர்ப் பச்சடி

தேவை: கெட்டித் தயிர் - ஒரு கப்  ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன்  சர்க்கரை - ஒரு டீஸ்பூன்  சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்  மெல்லியதாக நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகள் - கால் கப்  மாதுளை முத்துகள் - 6 டேபிள்ஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தயிருடன் ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை, உப்பு, வெள்ளரித் துண்டுகள், மாதுளை முத்துகள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். மேலே மிளகாய்த்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறவும். வாரம் இரண்டு மூன்று முறை இந்த மிக்ஸ்டு தயிர்ப் பச்சடி செய்து சாப்பிடலாம்.

குறிப்பு: இந்தப் பச்சடி எலும்பு, நகங்களை உறுதியாக்கும். வெள்ளரிக்காயில் இரும்புச் சத்து, வைட்டமின்கள் அடங்கியுள்ளன.


p101z3_1521283365.jpg

கேழ்வரகு அடை

தேவை: கேழ்வரகு மாவு - 2 கப்  வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்  துருவிய வெல்லம் - ஒன்றரை கப்  நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்  தேங்காய்த் துருவல் - கால் கப்.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர்விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி கல், மணல் போக வடிகட்டவும். இதை மீண்டும் கொதிக்கவிட்டு தேங்காய்த் துருவல், எள், கேழ்வரகு மாவு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் மாவை நன்கு பிசையவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாகத் தட்டி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. விருப்பப்பட்டால் வெண்ணெய் தொட்டுக்கொள்ளலாம்.

குறிப்பு: இரும்புச் சத்து மிகுந்த இந்த அடையை வாரம் இருமுறை சுவைத்தால், உடல் உறுதியுடன் இருக்கும்.


p101z4_1521283391.jpg

மசாலா மோர்

தேவை: மோர் - 2 கப்  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. அரைக்க:  துருவிய வெள்ளரி - 4 டேபிள்ஸ்பூன்  துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா 2 டேபிள்ஸ்பூன்   பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன். தாளிக்க:  எண்ணெய், கடுகு - தலா அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். மோருடன் உப்பு, பெருங்காயத்தூள், அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து மோருடன் சேர்க்கவும் (விருப்பமில்லாவிட்டால் தாளிக்கத் தேவையில்லை). கோடைக்காலத்தில் இதை வாரத்தில் மூன்று முறை அருந்தலாம்.

குறிப்பு: தாகத்தையும் உடல் சூட்டையும் தணிக்கும்.


p101z5_1521283416.jpg

ஆந்திரா வெங்காய தோசை

தேவை: இட்லி மாவு - 2 கப்  சாம்பார் வெங்காயம் - ஒரு கப்  காய்ந்த மிளகாய் - 3  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: சாம்பார் வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். தவாவில் ஒரு கரண்டி இட்லி மாவை ஊற்றி, தேய்த்து அரைத்த வெங்காய விழுதை 3 டீஸ்பூன் போட்டு, தோசைத் திருப்பியால் தோசை முழுவதும் பரவலாகத் தேய்த்து ஓரங்களில் நல்லெண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவை இல்லை. வாரத்தில் மூன்று நாள்கள் ஆந்திராவின் பிரசித்தி பெற்ற இந்த தோசையைச் சாப்பிடலாம்.

குறிப்பு: வெங்காயம் நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கும்; கொழுப்பைக் குறைக்கும்; ஞாபக சக்தியை அதிகரிக்கும்.


p101z6_1521283441.jpg

கொண்டைக்கடலை - சோளம் சுண்டல்

தேவை: கொண்டைக்கடலை - ஒரு கப்  இனிப்புச் சோளம் - அரை கப்  நறுக்கிய பெரிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன்  நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்  கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  அரிசிப் பொரி - கால் கப்  எலுமிச்சைச் சாறு - ­ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவைக்கேற்ப  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்துச் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும். இனிப்புச் சோளத்தையும் வேகவைத்துத் தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, கொண்டைக்கடலை, இனிப்புச் சோளத்தை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் துருவல் சேர்க்கவும். இதனுடன் அரிசிப் பொரி, கொத்தமல்லித்தழை சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்துவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சுவைக்கவும். வாரத்தில் இரண்டு நாள்கள் இந்தச் சுண்டலைச் செய்து சுவைக்கலாம்.

குறிப்பு: இந்தக் கொண்டைக்கடலைச் சுண்டல் சாப்பிடுவதால் வைட்டமின்-சி கூடுதலாகக் கிடைத்து, சுறுசுறுப்பாக இருக்கலாம். சோளம் பார்வைக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கிறது. கேரட் எலும்பு மெலிவடைவதைத் தடுக்கிறது.


p101z7_1521283463.jpg

உணவே மருந்து

கூந்தல் முதல் நகங்கள் வரை உள்ள அனைத்துப் பகுதிகளிலும் எந்தவிதக் கோளாறும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதும், ஒருவேளை ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்துகொள்வதும் நாம் உண்ணும் உணவில் காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்வதிலேயே அடங்கியிருக்கிறது. இவற்றில் இரும்புச் சத்து, உயிர்ச் சத்து எனப்படும் வைட்டமின்கள் உட்பட பல்வேறு சத்துகள் கொட்டிக் கிடக்கின்றன. தலைமுடி வளர்ச்சி, கண்ணுக்குக் குளிர்ச்சி, ரத்த விருத்தி, இதயத்துக்கு பலம், வயிற்றுக்கு இதம் எனப் பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடிய உணவு வகைகளை, ஆரோக்கியத்துடன் சுவையிலும் அக்கறை செலுத்தி `டூ இன் ஒன்’ ரெசிப்பிகளாகத் தயாரித்து வழங்கியிருக்கிறார் சமையல் கலைஞர் எஸ்.ராஜகுமாரி.

``உணவுகளை எண்ணெயில் பொரிக் காமல் சமைக்கும்போது முழுமையான பலன் கிடைக்கும் என்பதைக் கவனத்தில்கொண்டு இந்த ரெசிப்பிகளைத் தயாரித்துள்ளேன். இவற்றை அடிக்கடி செய்து பரிமாறினால், உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்’’ என்று உற்சாகம் பொங்க கூறுகிறார்.

 

https://www.vikatan.com

Posted

சாதத்திற்கு அருமையான முருங்கைக்காய் மசாலா

 

 

சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முருங்கைக்காய் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
சாதத்திற்கு அருமையான முருங்கைக்காய் மசாலா
 
தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 5
பூண்டு - 5 பற்கள்
பெரிய வெங்காயம் - 1
 மிளகாய் தூள் - 1 டீ
ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

தேங்காய் - 1/4 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டை - 1/2 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கறிவேப்பிலை - சிறிது

201803271501071440_1_urungakkai._L_styvpf.jpg

செய்முறை:

முதலில் முருங்கைக்காயை வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்பு பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் முருங்கைக்காய்,  மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

முருங்கைகாயானது நன்கு வெந்த பின், அதில் தேங்காய் பேஸ்ட், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், முருங்கைக்காய் மசாலா ரெடி!!!

https://www.maalaimalar.com

Posted

சாதத்திற்கு அருமையான இறால் வறுவல்

 
அ-அ+

சாதம், சப்பாத்தி, புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள இறால் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சாதத்திற்கு அருமையான இறால் வறுவல்
 
தேவையான பொருட்கள்

இறால் - 1/4 கிலோ
வெங்காயம் - 2 (பெரியது).
இஞ்சி, பூண்டு விழுது  - 2 டீஸ்பூன்
சோம்பு - ஒரு தேக்கரண்டி.
சீரகம் - ஒரு தேக்கரண்டி.
தக்காளி - 2 பழம்.
தேங்காய் - கால் மூடி (துருவியது).
உப்பு - 1 தேக்கரண்டி.
 மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி.
எண்ணெய் - 2 தேக்கர
ண்டி.
கறிவேப்பிலை - ஒரு கையளவு.
வத்தல் மிளகாய் - 20 (பெரியது)

201803281231020937_1_Shrimp._L_styvpf.jpg

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தோல், ஓடு நீக்கி இறாலை நன்கு சுத்தம் செய்து  மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

தேங்காய் துருவலையும் 15 வத்தல் மிளகாயையும் சோம்பு, சீரகத்துடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் இறாலை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.

இறாலில் மசால் பிடித்தவுடன் தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டு 5 வத்தல் மிளகாயை வெட்டிப் போட்டு கொஞ்சம் கறிவேப்பிலை தூவி தாளித்தபின் அதனை இறக்கி வைத்துள்ள இறால் வறுவலின் மேல் ஊற்றி சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.  

சூப்பரான இறால் வறுவல் ரெடி.

https://www.maalaimalar.com

Posted

பிரியமான பிரியாணியே!

 

 

ந்திய அளவில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள உணவு பிரியாணி. பண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட உணவுகளில் ஒன்றாகி விட்டது. வீட்டில் சமைப்பதைவிட ஹோட்டல் பிரியாணி வகைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம்.

p33a_1522415420.jpg

அதிலும், ‘இந்த இடத்தில், இந்தப் பிரியாணியின் சுவையே தனி’ என்கிற வகையில் பிரியாணிக்குத் தனி முத்திரையும் அளிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட பிரியாணி வகைகளுடன் துணை உணவுகளையும் வீட்டிலேயே சமைக்கும்விதமாக எளிய ரெசிப்பிகளை நமக்களிக்கிறார் மதுரை BBQ Bistro ரெஸ்டாரென்ட்டின் பொது மேலாளரும் எக்ஸிக்யூட்டிவ் செஃப்புமான அஸ்வின் நாச்சியப்பன். 

p33b_1522415453.jpg

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

தேவையானவை:

சிக்கன் துண்டுகள் – ஒரு கிலோ
சீரக சம்பா அரிசி –  ஒரு கிலோ
மிளகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
ஏலக்காய் – 4
கிராம்பு – 5
முந்திரி – 25 கிராம்
கசகசா – ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 3 கப்
வெங்காயம், தக்காளி –
தலா கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)
எலுமிச்சைப் பழம் – 2 (சாறு பிழியவும்)
நெய் – 100 கிராம்
எண்ணெய் – 100 மில்லி
சோம்பு – அரை டீஸ்பூன்
புதினா - ஒரு கட்டு (ஆயவும்)
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 4 (நீளவாக்கில் நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு  

p33c_1522415493.jpg

தாளிக்க:

பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும். மிளகுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த விழுது, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் சிக்கன், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து மசாலா போல வதக்கவும். அதனுடன் 3 கப் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவிடவும். மேலே நெய், சிறிதளவு கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து இறக்கி மூடி போடவும். தவாவைச் சூடாக்கி அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறு தீயில் 15 நிமிடங்கள் வரை `தம்’ போடவும். பிறகு மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.


p33d_1522415528.jpg

மட்டன் பிரியாணி

தேவையானவை:

மட்டன் – ஒரு கிலோ
பாசுமதி அரிசி – ஒரு கிலோ
தயிர் – ஒரு கப்
காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5 (நீளவாக்கில் நறுக்கவும்)
புதினா – ஒரு கட்டு (ஆயவும்)
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்)
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 25 கிராம்
வறுத்து அரைத்த முந்திரி விழுது - 2 டீஸ்பூன்
எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்)
வெங்காயம் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்)
தக்காளி – 150 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
தோலுரித்த சின்ன வெங்காயம் – 100 கிராம்
வாழை இலை - 2
எண்ணெய் – 100 மில்லி
நெய் – 75 மில்லி
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அலங்கரிக்க

நறுக்கிய கொத்தமல்லித்தழை, வறுத்த சின்ன வெங்காயம் – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும். மட்டனுடன் தயிர், காஷ்மீர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், முந்திரி விழுது, எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், சின்ன வெங்காயம் சேர்த்து ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டுப் பாதியளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஊறவைத்த மட்டன் கலவை சேர்த்து வதக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மிருதுவாக வேகவிடவும்.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீருடன் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவைத்து வடிக்கவும். தவாவைச் சூடாக்கி, மட்டன் பாத்திரத்தை வைத்து, வடித்த சாதம் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் நெய், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் சேர்த்து வாழை இலையால் மூடி 20 நிமிடங்கள் வரை சிறு தீயில் வேகவிட்டு இறக்கவும். அதன்மீது வறுத்த வெங்காயம், கொத்தமல்லித்தழைத் தூவி சூடாகப் பரிமாறவும்.


p33e_1522415568.jpg

வந்தவாசி கோழி வறுத்த மசாலா

தேவையானவை:

சிக்கன் – அரை கிலோ
வெங்காயம் – 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
குடமிளகாய் (பச்சை) – ஒன்று (சதுர துண்டுகளாக்கவும்)
தக்காளி – 100 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் நறுக்கவும்)
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 10 கிராம்
சோள மாவு (கார்ன் ஃப்ளார்), மைதா மாவு – தலா ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்)
சோம்புத்தூள், சீரகத்தூள், பொடித்த மிளகு – தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 6 பல் (தட்டவும்)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

அலங்கரிக்க:

வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:

சிக்கனுடன் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, பாதியளவு மிளகாய்த்தூள், சோள மாவு, மைதா மாவு சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சிக்கன் கலவையைச் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, அதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தக்காளி, காய்ந்த மிளகாய், குடமிளகாய், உப்பு, தனியாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு வறுத்த சிக்கன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சீரகத்தூள், பொடித்த மிளகு, சோம்புத்தூள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மேலே வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழைத் தூவி சூடாகப் பரிமாறவும்.


p33f_1522415609.jpg

புதுச்சேரி கேஷ்யூ கிரேவி

தேவையானவை:

பனீர் – 200 கிராம் (சதுர துண்டுகளாக்கவும்)
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 4
முந்திரி – 50 கிராம்
க்ரீம் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) –
ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 10 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பனீர் துண்டுகளை வெந்நீரில் போட்டு நன்கு அலசி எடுக்கவும். முந்திரியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து விழுதாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் உப்பு, அரைத்த முந்திரி விழுது சேர்த்து கிரேவி பதத்துக்குக் கொதிக்கவிடவும். பிறகு பனீர் துண்டுகள், க்ரீம், நெய், கொத்தமல்லித்தழைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.


p33g_1522415633.jpg

கோழி மிளகு மசாலா

தேவையானவை:

சிக்கன் – 500 கிராம்
வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது – 25 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் கலவை – 15 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மிளகு – 2 டீஸ்பூன்
தனியா (மல்லி) – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
சோம்பு – அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

தேங்காய் எண்ணெய், சோம்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு - சிறிதளவு.

செய்முறை:

வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், தனியா, கறிவேப்பிலை, மிளகு, பாதியளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து வறுத்து பவுடராக அரைத்தெடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்துத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, சிக்கன் சேர்த்து வதக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிக்கன் மிருதுவாகவும் வரை வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவிக் கிளறி இறக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லித்தழைத் தூவி சூடாகப் பரிமாறவும். 


p33h_1522415668.jpg

ஹைதராபாத் வெஜ் தம் பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி – கால் கிலோ
வெங்காயம் – 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)
தக்காளி – 100 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்)
புதினா இலைகள் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4 (நீளவாக்கில் நறுக்கவும்)
தயிர் – 2 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 10 கிராம்
எண்ணெய் – 25 மில்லி
காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர்) – கால் கிலோ
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் – சிறிதளவு
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சிறிதளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, காஷ்மீர் மிளகாய்த்தூள், தயிர் சேர்த்து வதக்கவும். அதனுடன் காய்கறிக் கலவை சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் அரிசியைச் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து வடிக்கவும், அதனுடன் வதக்கிய காய்கறிக் கலவை சேர்த்துக் கலக்கவும். பிறகு நெய், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கி மூடி போடவும். தவாவைச் சூடாக்கி அதன்மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறு தீயில் 15 நிமிடங்கள் வரை தம் போடவும். பிறகு ராய்த்தாவுடன் பிரியாணியைச் சூடாகப் பரிமாறவும்.


p33i_1522415753.jpg

சிக்கன் ஃப்ராங்கி வித் ஸ்பைஸி மயோ

தேவையானவை:

கோதுமை மாவு - 250 கிராம்
முட்டை – 2
சிக்கன் – 150 கிராம்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
வெண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி - பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
மயோனைஸ் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தொட்டுக்கொள்ள டிப் (dip) செய்ய...

மயோனைஸ், சில்லி பேஸ்ட், மிளகாய்த்தூள் - தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவில் சப்பாத்திகள் தயாரிக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் சிக்கன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து வதக்கி வேகவைக்கவும். மேலே கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும்.

தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு வெண்ணெய்விட்டு  சப்பாத்தியைச் சூடாக்கவும். முட்டையை உடைத்து நன்கு அடித்துக்கொள்ளவும். சப்பாத்தியின் மேல் சிறிதளவு அடித்த முட்டை சேர்த்து வேகவிடவும். அதன் மேல் சிறிதளவு மயோனைஸ் தடவி, சிறிதளவு மசாலா கலவை வைத்து வேகவிட்டுத் திருப்பிப்போடவும். வெந்ததும் பாய் போல சுருட்டவும். அதை பட்டர் பேப்பரில் வைத்துச் சுருட்டவும். சிக்கன் ஃப்ராங்கி தயார். `டிப்’ (dip) செய்ய கொடுத்துள்ள பொருள்களை நன்கு கலந்து `சிக்கன் ஃப்ராங்கி’க்கு தொட்டுக்கொள்ளவும்.


p33j_1522415786.jpg

பிரிஞ்சால் மசாலா

தேவையானவை:

கத்திரிக்காய் - கால் கிலோ
வறுத்த வேர்க்கடலை - 20 கிராம்
வெள்ளை எள் - 10 கிராம்
உலர் தேங்காய்த்தூள்  - 50 கிராம்
வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
எண்ணெய் - 50 மில்லி
புளி விழுது - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய்விட்டு சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய கத்திரிக்காய், தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், புளி விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். உலர் தேங்காய்த்தூள், வெள்ளை எள், வேர்க்கடலையை விழுதாக அரைத்துக் கொதிக்கும் கலவையில் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும். கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும். 

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது கொஞ்சமும் சரியில்லை நவீனன்..... இன்று  மூன்றாவது பங்குனித் திங்கள்.... பிறகு ஆத்தா வையும்....!  tw_blush:

பரிகாரம்  சைவப் பிரியாணி போடுதல்.....!

  • Haha 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.