Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா எதிர் இந்தியா ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
கோஹ்லி இரண்டு சாதனைகள்; தோனி மைல்கல் ஆனால், மெக்ஸ்வெலின் அதிரடியால் ஆஸி. வெற்றி
2016-01-17 20:32:01

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மிகக் குறைந்த (161)இன்­னிங்ஸ்­களில்  24 சதங்­க­ளையும் 7,000 ஓட்­டங்­க­ளையும் பூர்த்தி செய்து இரண்டு சாத­னை­களை விராத் கோஹ்லி நிலை­நாட்­டினார்.

14262_glen-maxwell.jpg

 

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக மெல்பேர்ன் கிரிக்கெட்  விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெற்ற மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­யின்­போது கோஹ்லி இந்த சாத­னை­களை நிலை­நாட்­டினார்.

 

ஆனால், கிளென் மெக்ஸ்­வெலின் அதி­ரடி துடுப்­பாட்டம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு 3 விக்கெட்  வெற்­றி­யையும் இப்­போ­தைக்கு 3–0 என்ற ஆட்டக் கணக்­கி­லான தொடர் வெற்­றி­யையும் ஈட்­டிக்­கொ­டுத்தது.

 

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட இந்­தியா 50 ஓவர்­களில் 6 விக்கெட்களை இழந்து 295 ஓட்­டங்­களைப் பெற்­றது. 

 

முத­லி­ரண்டு போட்­டி­களில் சதங்­களைக் குவித்த ரோஹித் ஷர்மா இப் போட்­டியில் 6 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

 

எனினும், விராத் கோஹ்லி (117), ஷிக்கர் தவான் (68), அஜின்­கியா ரஹானே (50) ஆகியோர் திற­மை­யாக துடுப்­பெ­டுத்­தாடி இந்­தி­யாவின் மொத்த எண்­ணிக்­கைக்கு வலு­சேர்த்­தனர்.

 

14262_4581571.jpgதவான், கோஹ்லி ஜோடி இரண்­டா­வது விக்ெ­கட்டில் 119 ஓட்­டங்­க­ளையும் கோஹ்லி, அஜின்­கியா ஜோடி மூன்­றா­வது விக்­கெட்டில் 109 ஓட்­டங்­க­ளையும் பகிர்ந்­தனர்.

 

பந்­து­வீச்சில் ஜோன் ஹேஸ்டிங்ஸ் 58 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்களை வீழ்த்­தினார்.

 

தனது 169ஆவது சர்­வ­தேச ஒருநாள் போட்­டியில் 161ஆவது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டிய விராத் கோஹ்லி 19 ஓட்­டங்கள் பெற்­ற­போது 7,000 ஓட்­டங்­களைப் பூர்த்­தி­செய்தார்.

 

இப் போட்­டியின் மூலம் 300ஆவது சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டியில் தலைமை வகித்த எம். எஸ். தோனி 9 பந்­துகளை எதிர்­கொண்டு அதி­ர­டி­யாக 23 ஓட்­டங்­களைக் குவித்தார்.

 

ரிக்கி பொன்டிங் (324), ஸ்டீவன் ஃப்ளெமிங் (303) ஆகிய இரு­வரே 300க்கும் மேற்­பட்ட சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் தலை­வர்­க­ளாக விளை­யா­டி­யுள்­ளனர்.

 

296 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய அவுஸ்­தி­ரே­லியா 48.5 ஓவர்­களில் 7 விக்ெகட்­களை இழந்து 296 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது. 

 

ஒரு கட்­டத்தில் 215 ஓட்­டங்­க­ளுக்கு 6 விக்­கெட்­களை இழந்து அவுஸ்­தி­ரே­லியா தடு­மாற்­றத்தை எதிர்­நோக்­கி­யது. ஆனால், கிளென் மெக்ஸ்வெல் 83 பந்­து­களில் 3 சிக்­ஸர்கள், 8 பவுண்ட்­றி­களை விளாசி 96 ஓட்­டங்­களைக் குவித்­த­துடன், 7ஆவது விக்­கெட்டில் ஜேம்ஸ் ஃபோக்­ன­ருடன் 80 ஓட்­டங்­களைப் பகிர்ந்து தனது அணியின் வெற்­றியை உறுதி செய்தார்.

 

மெக்ஸ்வெல் 96 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது சதம் குவிக்கும் நோக்கில் யாதவ் வீசிய பந்தை சுழற்றி அடித்த போதிலும் பந்து ஷிக்கர் தவானின் கைகளில் தஞ்சமடைந்ததால் அவரது எண்ணம் ஈடேறவில்லை.

 

ஷோன் மார்ஷ் (62), ஸ்டீவன் ஸ்மித் (41) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14262#sthash.z5T3QPO9.dpuf
  • Replies 53
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,அவுசில் போய் வசிக்க வேண்டும் என்ட எண்ணம் இருக்குது. ஆனால் இனி மேல் கல்யாணம் கட்டிற எண்ணம் இல்லை...இத்தனை அண்ணன்மார்[யாழில்] இருந்தும், யாருக்காவது தங்கச்சிக்கு கல்யாணம் கட்டி வைக்க வேண்டும் என்ட யோசனை இருந்ததா?...நான் அண்ணன் என்று கூப்பிடா விட்டாலும் தமிழ்சிறி மட்டும் ஒரு தடவை தனி மடலில் தொடர்பு கொண்டு மாப்பிள்ளை பார்க்கட்டுமா என கேட்டு இருந்தார். நன்றிடன் அவரை நினைவு கூறுகிறேன்.

எனக்கு உள்ள கவலையெல்லாம் நான் செத்தால் யார் எனக்கு திதி செய்யப் போகிறார்கள் என்று தான்.என் கூடப் பிறந்தவர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. நாத்திகராய் இருந்திருந்தால் உந்தக் கவலையும் வந்திருக்காது.

விளையாட்டுத் திரியை திசை திருப்பினதிற்கு நவீனனிடம் மன்னிப்பு கோருகிறேன்.

  • தொடங்கியவர்

இதுக்கு எல்லாம் ஏன் மன்னிப்பு ரதி,

நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ரதி said:

அண்ணா,அவுசில் போய் வசிக்க வேண்டும் என்ட எண்ணம் இருக்குது. ஆனால் இனி மேல் கல்யாணம் கட்டிற எண்ணம் இல்லை...இத்தனை அண்ணன்மார்[யாழில்] இருந்தும், யாருக்காவது தங்கச்சிக்கு கல்யாணம் கட்டி வைக்க வேண்டும் என்ட யோசனை இருந்ததா?...நான் அண்ணன் என்று கூப்பிடா விட்டாலும் தமிழ்சிறி மட்டும் ஒரு தடவை தனி மடலில் தொடர்பு கொண்டு மாப்பிள்ளை பார்க்கட்டுமா என கேட்டு இருந்தார். நன்றிடன் அவரை நினைவு கூறுகிறேன்.

எனக்கு உள்ள கவலையெல்லாம் நான் செத்தால் யார் எனக்கு திதி செய்யப் போகிறார்கள் என்று தான்.என் கூடப் பிறந்தவர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. நாத்திகராய் இருந்திருந்தால் உந்தக் கவலையும் வந்திருக்காது.

விளையாட்டுத் திரியை திசை திருப்பினதிற்கு நவீனனிடம் மன்னிப்பு கோருகிறேன்.

என்ரை தங்கச்சிக்கு மாப்பியளை நான் தேடுறன்...சாதகத்தை அனுப்பிவிடவும். வாற மாப்பிளை எப்பிடியிருக்க வேணும் எண்டதையும் கையோடை எழுதி விடவும். 

  • தொடங்கியவர்

தலைமைத்துவம் பற்றிய கேள்விக்கு தோனி கிண்டல் பதில்

தலைமைத்துவம் பற்றிய கேள்விக்கு தோனி கிண்டல் பதில்

 

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி மூன்று விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மேக்ஸ்வெல் 83 பந்தில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்களடன் 96 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

போட்டிக்குப் பின் பேசிய இந்திய அணி தலைவர் தோனி கூறியதாவது:

”மோசமான களத்தடுப்பு காரணமாகவே இந்த போட்டியில் தோல்வியை தழுவினோம். குறைந்தது மூன்று பவுண்டரிகளையாவது எளிதாக தடுத்து இருக்க முடியும். இந்த போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

அறிமுக போட்டியில் விளையாடி ரிஷி தவன் மற்றும் குர்கிரத் ஆகியோர் சிறப்பாகவே பந்து வீச்சினர். எனினும், மற்றொரு இளம் வீரரான ஷரன் இன்று நன்றாக வீசவில்லை. இதனால் பந்து வீச்சாளர்களை மாற்றுவதில் சிரமமாக இருந்தது” என்று கூறினார்.

தோனியிடம் அவரது தலைமைத்துவம் பற்றி கேள்வி எழுப்பிய போது,

”என்னுடைய தலைமை செயல்திறன் பற்றி நான் ஆய்வு செய்தால் அதில் சொந்த விருப்பு வெறுப்புகள் இருப்பதாக குற்றசாட்டு எழும். எனவே ஒரு பொது நலன் வழக்கு மூலம் என்னுடைய தலைமை செயல் திறன் பற்றி முடிவு செய்யலாம்” என்று கிண்டலாக பதில் அளித்தார்.
  • தொடங்கியவர்

5-0 தோல்வியைத் தவிர்க்க பவுலர்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்: ரவி சாஸ்திரி

 

 
ரவி சாஸ்திரி. | கோப்புப் படம்.
ரவி சாஸ்திரி. | கோப்புப் படம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை 0-5 என்று இழக்காமலிருக்க பவுலர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வது மிக மிக அவசியம் என்று அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணி பேட்ஸ்மென்கள் சுயநலமிகளா?

இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் முறையே 309, 308, 295 என்று ரன்களை எடுத்துத் தோல்வி தழுவியுள்ள இந்திய அணி இன்னும் அதிக ஸ்கோரை எடுத்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்தே இந்திய பேட்ஸ்மென்கள் குறித்த ஒரு விமர்சனம் என்னவெனில் 31-40 ஓவர்களில் மந்தமாக ஆடுகின்றனர் என்பதே. இந்தத் தொடரிலும் இந்த ஓவர்களுக்கிடையே கடந்த 3 போட்டிகளில் முறையே 67,67, 60 என்று ரன்கள் எடுத்துள்ளனர். அதாவது இந்திய பேட்ஸ்மென்கள் சதம் நெருங்கும் நேரத்துடன் இந்த ஓவர்கள் இணைவு கொண்டுள்ளன.

பெர்த்தில் ரோஹித் சர்மா 83 ரன்களிலிருந்து சதம் எடுக்க 24 பந்துகள் எடுத்துக் கொண்டார். அதேபோல் தனது பிரிஸ்பன் சதத்திலும் 86 ரன்களிலிருந்து ரோஹித் சதம் எடுக்க 21 பந்துகளை எடுத்துக் கொண்டார். அதே போல் விராட் கோலி மெல்போர்னில் சதம் எடுக்கும் போது 38-43 ஓவர்களுக்கிடையே தனது சதத்துக்கான 16 ரன்களை எடுக்க 15 பந்துகளை எடுத்துக் கொண்டார்.

இது பற்றி ரவிசாஸ்திரியிடம் கேட்ட போது, “மைல்கல்லே முக்கியம் என்று இந்திய பேட்ஸ்மென்கள் கருதியிருந்தால் விராட் கோலி 7,000 ரன்களை விரைவில் எடுத்து சாதனை நிகழ்த்தியிருக்க முடியாது. அவர் இன்னும் 100 ஆட்டங்கள் எடுத்துக் கொண்டிருப்பார். மேலும் ரோஹித் சர்மா 264 ரன்களையோ, ஒருநாள் போட்டியில் 2 இரட்டைச் சதங்களையோ எடுத்திருக்க வாய்ப்பில்லை” என்றார்.

பவுலர்கள் நன்றாக வீச வேண்டிய அவசியம் பற்றி வலியுறுத்திய ரவி சாஸ்திரி, “அவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டால் ஆஸி. வெற்றியை நிறுத்த முடியும்.

நிச்சயம் அவர்கள் பந்து வீச்சு குறித்து அவர்களுக்கே ஏமாற்றமாகவே இருக்கும். போட்டியை வெல்ல ஓரிரு பவுலர்கள் ஒழுங்காக வீசுவது மட்டும் போதாது. ஒரு அணியாக பந்து வீச வேண்டும். உலகக் கோப்பையில் அனைவரும் நன்றாக வீசியதால்தான் நாம் வெற்றி பெற முடிந்தது.

எனவே அப்படி நடந்தால் உலகின் சிறந்த அணியை வெல்லலாம். வைடுகள் போடுவதை மன்னிகக் முடியாது. இதுவரை விளையாடியதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. மெல்போர்னில் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் மீண்டும் ஆஸ்திரேலியா சிறப்பாக ஆடினர்.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பெஞ்ச்-ஸ்ட்ரெந்த் முக்கியம். மேலும் இங்கு வெவ்வேறு காலநேரத்தில் விளையாட வேண்டியுள்ளது. பெர்த்தில் விளையாடிவிட்டு விமானத்தில் பிரிஸ்பன் வந்து சேர்ந்தால் இங்கு நேரம் வித்தியாசமாக உள்ளது. மெல்போர்னும் அப்படியே. சூழ்நிலையைக் கணக்கிலெடுக்கும் போது நன்றாக விளையாடியதாகவே உணர்கிறேன்.

எதிர்காலத்தில் 15 வீரர்கள் மட்டுமல்லாமல் கூடுதல் வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டும். துணைக் கண்டத்தில் 15 வீரர்கள் போதும் ஆனால் அதற்கு வெளியே குறைந்தது 16 வீர்ர்கள் கொண்ட அணியைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஏனெனில் இங்கு காயமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே பிசிசிஐ-யிடம் இதனை நான் அறிவுறுத்துவேன். 7-8 கூடுதல் பவுலர்கள் தேவை, அதே போல் டெஸ்ட், ஒருநாள், டி20 ஸ்பெஷலிஸ்ட்கள் தேவை” என்றார் ரவிசாஸ்திரி.

http://tamil.thehindu.com/sports/50-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/article8123890.ece

 

  • தொடங்கியவர்

இந்திய பந்துவீச்சை விளாசிய ஸ்மித், மேக்ஸ்வெல்: ஆஸ்திரேலியா 348 ரன்கள் குவிப்பு

 
இன்றைய ஆட்டத்தில் வார்னர் - ஃபின்ச் | படம்: ஏபி
இன்றைய ஆட்டத்தில் வார்னர் - ஃபின்ச் | படம்: ஏபி

இந்தியா ஆஸ்திரேலியா இடையே கான்பெராவில் நடைபெற்றுவரும் 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 348 ரன்களை குவித்துள்ளது.

ஆஸி. அணியின் துவக்க வீரர்களான வார்னர், ஃபின்ச் இருவரும் ஆரம்பம் முதலே நிலைத்து ஆடி, அணி பெரிய ஸ்கோரை எட்ட அடித்தளம் அமைத்துத் தந்தனர். ஓவருக்கு 6 ரன்களுக்கு குறையாமல் அடித்து வந்த இந்த இணை பார்ட்னர்ஷிப்பில் 180 ரன்களைக் கடந்தது.

வார்னர் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டாலும், ஃபின்ச் 97 பந்துகளில் சதமடித்தார். 107 ரன்களில் அவர் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித் இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். மறுமுனையில் மார்ஷ் 33 ரன்களுக்கு வெளியேற அடுத்த மேக்ஸ்வெல் களமிறங்கினார்.வெறும் 27 பந்துகளில் ஸ்மித் அரை சதம் எட்டினார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கம்.

மேக்ஸ்வெல் தனது வழக்கமான டி20 பாணியில் விளாசித் தள்ள, ஆஸி. அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஒரு பக்கம் அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், மேக்ஸ்வெல் தனது அதிரடியை தொடர்ந்தார்.

50 ஓவர்கள் முடிவில் ஆஸி. 8 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்களைக் குவித்தது. மேக்ஸ்வெல் 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடக்கம். 50-வது ஓவரின் கடைசி பந்தில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார்.

இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தபோதிலும், 10 ஓவர்களில் அவர் 77 ரன்களை வாரி வழங்கினார்.

ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட நிலையில், இந்த ஆட்டத்தில் இந்தியா கவுரவ வெற்றியாவது பெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் 349 ரன்களை இந்தியா விரட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-348-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8128322.ece?homepage=true

  • தொடங்கியவர்

ரஹானே கையில் காயம்: 5-வது போட்டிக்கு சந்தேகம்

ரஹானே.| ராய்ட்டர்ஸ்.
ரஹானே.| ராய்ட்டர்ஸ்.

கான்பெராவில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 349 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்தி வரும் இந்திய அணிக்கு பேட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

முக்கிய வீரரான அஜிங்கிய ரஹானே ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது பீல்டிங்கில் வலது கையில் காயம் ஏற்பட்டு 4 தையல்கள் போடப்பட்டுள்ளது, இதனால் அவர் இந்திய துரத்தலில் களமிறங்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது. தேவைப்பட்டால்தான் அவர் களமிறங்குவார் என்று தெரிகிறது.

5-வது, இறுதி ஒருநாள் போட்டியிலும் ரஹானே ஆடுவது சந்தேகமாகியுள்ளது. டி20 போட்டித் தொடருக்குள் குணமாகிவிடுமா என்பது இப்போதைக்கு கூற முடியாத ஒன்றுதான்.

ரஹானேவுக்கு பதிலாக மணிஷ் பாண்டே பீல்டிங் செய்தார் கடைசியாக மேக்ஸ்வெல்லுக்கு ஒரு அபாரமான டைவிங் கேட்சையும் பிடித்தார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்து இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்தனர். புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா என்று ஒருவரும் சரியாக வீசவில்லை, இதனால் வார்னர் (93), ஏரோன் பிஞ்ச் (107) அபாரமாக தொடங்கி 29.3 ஓவர்களில் 187 ரன்கள் தொடக்கம் கொடுத்தனர். மிட்செல் மார்ஷ்தான் அதிரடி ரன் குவிப்பை சற்றே மந்தமாக்கினார் அவர் 42 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க கேப்டன் ஸ்மித் அதிரடி முறையில் 29 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் கடைசியில் கிளென் மேக்ஸ்வெல் விதம் விதமான ஷாட்களை ஆடி 20 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 41 ரன்கள் விளாசினார், இசாந்த் சர்மாவின் கடைசி ஓவரை புரட்டி எடுத்து ஒரு சிக்சர் 3 பவுண்டரிகளை விளாசினார். இசாந்த் சர்மா 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஷ் குமார் 8 ஓவர்களில் 69 ரன்களுக்கு விக்கெட் இல்லை. உமேஷ் யாதவ் 67 ரன்கள் கொடுத்து 3 விக்கெட். ரிஷி தவண் சிக்கனமாக வீசி 9 ஓவர்களில் 53 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்தார் ஆனால் விக்கெட்டுகள் இல்லை.

ஆஸ்திரேலியா 348 ரன்கள் குவிக்க இந்தியா தற்போது 27 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது, ஷிகர் தவண் 88 ரன்களுடனும், கோலி 80 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், இந்தியாவுக்கு வெற்றிக்குத் தேவை ஓவருக்கு 5.91 ரன்களே.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8129788.ece?homepage=true

Australia 348/8 (50 ov)
India 323 (49.2 ov)
Australia won by 25 runs
  • தொடங்கியவர்

12509687_1042796845782977_78994242911373

  • தொடங்கியவர்
மொத்த பழியையும் நானே சுமக்கிறேன்.. பேட்டிங்கில் சொதப்பிவிட்டு தியாகி போல பேசும் டோணி
 
 
 கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று, 4வது போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் டோணி தெரிவித்தார்.
 
349 என்ற வெற்றி இலக்கை விரட்டிச் சென்ற இந்திய அணி, விராட் கோஹ்லி மற்றும் ஷிகர்தவான் ஆகியோர் சதத்தோடு நல்ல நிலையில் இருந்தது. ஆனால் தவான் அவுட்டான பிறகு உள்ளே வந்த டோணியோ 3 பந்துகளில் டக்-அவுட் ஆனார். இதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

போட்டிக்கு பிறகு டோணி கூறியது: இந்த போட்டியில் தோற்றதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது விக்கெட் வீழ்ந்த பிறகுதான், பிற விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிந்தன. போட்டியை நான்தான் முடித்து வைத்திருக்க வேண்டும்.

இளம் வீரர்கள் அதைச் செய்வது கஷ்டம் என்பதை நானும் உணர்ந்துள்ளேன். இந்த போட்டியின் மூலம், இளம் வீரர்கள் முக்கிய கட்டத்தில் எப்படி ஆட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா வெற்றி பெற சிறப்பான வாய்ப்பு இருந்தும் தோற்றுள்ளோம்.

பேட்ஸ்மேன்கள் இன்னும் கூடுதலாக ரன் எடுத்திருக்க வேண்டும். நான் கோபப்படவில்லை, ஆனால் ஏமாற்றம் அடைந்துள்ளேன். இவ்வாறு டோணி தெரிவித்தார்

  • தொடங்கியவர்

அதிரடி விரட்டலுக்குப் பின் அதிர்ச்சி சரிவு: ஆஸி.யிடம் மீண்டும் அடங்கிய இந்திய அணி

 

 
 
  • 2-வது விக்கெட்டுக்காக 212 ரன்களை 29 ஓவர்களில் சேர்த்து சதம் விளாசிய தவண், கோலி ஜோடி. | படம்:ஏ.எஃப்.பி.
    2-வது விக்கெட்டுக்காக 212 ரன்களை 29 ஓவர்களில் சேர்த்து சதம் விளாசிய தவண், கோலி ஜோடி. | படம்:ஏ.எஃப்.பி.
  • சதமடித்த ஏரோன் பிஞ்ச். | படம்: ஏ.எஃப்.பி.
    சதமடித்த ஏரோன் பிஞ்ச். | படம்: ஏ.எஃப்.பி.

கான்பெராவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் எளிதாக வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்து மடமடவென சரிந்து இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி தழுவியது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 4-0 என்று முன்னிலை பெற்றது.

277/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 46 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது இந்தியா. விராட் கோலி, ஷிகர் தவண் ஆடிய விதம் ஆஸ்திரேலிய பந்துவீச்சை கேலிக்குரியதாக்கிய போதும் அவர்களில் ஒருவர் கூட இறுதி வரை நிற்காமல் கடைசியில் தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி. ஷிகர் தவண், கோலி பேட் செய்த போது ஸ்மித் கூறியது போல், “15-16 பீல்டர்கள் தேவை” என்ற அளவில் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இருவரும் இணைந்து 29 ஓவர்களில் 2-வது விக்கெட்டுக்காக 212 ரன்களைச் சேர்த்தனர்.

கடைசியில் விக்கெட்டுகள் சரிவடையும் போது ரவீந்திர ஜடேஜா ஆடியதுதான் புரியாத புதிராக இருந்தது, தான் ஸ்ட்ரைக்கை எடுத்துக் கொண்டு ஆடுவதற்குப் பதிலாக புவனேஷ் குமார், ரிஷி தவண், உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா என்று அனைவருக்கும் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக் கொடுத்த விசித்திரத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை தோனி ஆட்டம் முடிந்த பிறகு தனது விசித்திர விளக்கங்களால் அதற்கு நியாயம் கற்பிக்கலாம். 27 பந்துகளைச் சந்தித்து 24 ரன்களை எடுத்து ஜடேஜா நாட் அவுட்டாக முடிந்து போனார்.

டாஸ் வென்ற ஸ்மித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய வழக்கம் போல் இந்திய பவுலர்களுக்கு நல்ல பந்துவீச்சு என்றால் என்ன என்பது மறந்து போக ஆஸ்திரேலியா 348 ரன்கள் குவித்தது. ஏரோன் பிஞ்ச் சதம் எடுக்க, வார்னர் 93 ரன்கள் எடுத்தார். இசாந்த் சர்மா கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் விளாசலுடன் சேர்த்து 10 ஓவர்களில் 77 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேக்ஸ்வெல் கடைசியில் இறக்கப்பட்டார், மிட்செல் மார்ஷ் டவுனில் மேக்ஸ்வெல் இறங்கியிருந்தால் ஸ்கோர் எங்கு சென்றிருக்கும் என்று கணித்திருக்க முடியாது. அதேபோல் ஸ்மித்தும் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 348 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற ஸ்கோரை எட்டியது

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 38-வது ஓவரில் முடிந்த பிறகு 277/1 என்று இருந்தது. வெற்றி பெற தேவை ஓவருக்கு 5.76 ரன்களே. அதன் பிறகு கேப்டன் தோனி (0) உட்பட அனைவரும் பெவிலியன் நோக்கி அணிவகுக்க 323 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாப தோல்வி அடைந்தது.

ரோஹித், தவண், கோலி அதிரடி:

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதல் ஓவரில் ஸ்பின்னர் நேதன் லயனை வீசச் செய்தார், மறு முனையில் ரிச்சர்ட்சன். இதில் லயனை ரோஹித் மிட்விக்கெட்டில் பெரிய சிக்ஸ் ஒன்றை அடிக்க ஷிகர் தவண் கவர் திசையில் கேட்ச் போன்று ஒரு பவுண்டரி அடித்தார். தவண் ரிச்சர்ட்ஸனை ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்து பிறகு கவரில் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார்.

8-வது ஓவரில் ரோஹித் ஆவேசம் பூண்டார். ரிச்சர்ட்ஸனை 2 பெரிய சிக்சர்களை அடித்தார். ஸ்கொயர் லெக்கில் ஒன்று, மிட்விக்கெட்டில் ஒன்று, பிறகு ஒரு சாதாரண லெக் திசை பந்து பவுண்டரிக்குப் பறந்தது. 25 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா கேன் ரிச்சர்ட்ஸன் வீசிய லெக் திசை பந்தை தொட்டு சாதாரண பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் ஸ்கோர் 8 ஓவர்களில் 65/1 என்று அபாரத் தொடக்கம் கண்டது இந்தியா.

அப்போது முதல் விராட் கோலி, ஷிகர் தவண் ரன் விகிதத்தை சற்றும் தளரவிடாமல் ஓவருக்கு 7 ரன்களுக்கும் மேல் ரன் விகிதம் இருக்குமாறு பராமரித்து ஆடினர். விராட் கோலி, ஜேம்ஸ் பாக்னரை இரண்டு பவுண்டரிகள் அடித்து பவுண்டரி கணக்கைத் தொடங்கினார். அதன் பிறகு அவர் கிரீசில் நின்று ஆடிய பந்துகள் குறைவுதான். ஷிகர் தவண் ஹேஸ்டிங்ஸ் பந்தை பாயிண்டில் அடித்த சிக்ஸ் நம்பமுடியாத ஒரு ஷாட்டாகும். மேலேறி வந்து ஷார்ட் பிட்ச் பந்தை எகிறி இருகால்களும் காற்றில் இருக்க சுழற்றிய சுழற்றில் பந்து பாயிண்டில் சிக்ஸ் ஆனது.

மீண்டும் பாக்னரை கோலி பதம் பார்த்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். தவண் 49 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுக்க கோலி 36 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்தார்.

இந்தியா 20 ஓவர்களில் 155/1 என்று நன்றாகச் சென்று கொண்டிருந்தது. கோலி தனது முதல் சிக்சரையும் பாக்னர் பந்தில்தான் அடித்தார். மேலேறி வந்து லாங் ஆனில் மிகப்பெரிய சிக்ஸ் ஆகும் அது, சுமார் 103மீ சிக்சாக அது அமைந்தது. 26-வது ஓவரில் ஸ்கோர் 200 ரன்களை எட்டியது. 26 ஓவர்கள் முடிவில் 204/1 என்று வெற்றிக்கான உறுதியுடன் சென்றனர் இருவரும். ரன் விகிதம் 7.5 என்று சென்று கொண்டிருந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சு நாலாபக்கமும் சிதறடிக்கப்பட்டது, ஸ்மித் செய்வதறியாது திகைத்தார். ஷிகர் தவண், நேதன் லயனை இரண்டு பவுண்டரிகள் அடித்து 92 பந்துகளில் சதம் கண்டார். இது மிகவும் அபாரமான இன்னிங்ஸ்.

விராட் கோலி 84-வது பந்தில் தனது 25-வது ஒருநாள் சதத்தை எட்டினார். ஸ்கோர் 37-வது ஓவரில் 274 ரன்களுக்கு ஒரு விக்கெட், வெற்றிக்குத் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 5.76.

கேப்டன் தோனி டக் அவுட்: அதிர்ச்சிச் சரிவு

38-வது ஓவரின் 2-வது பந்தில் தவண் அடித்த ஷாட்டை ஸ்மித் மிஸ் பீல்ட் செய்ய 2 ரன்கள் எடுத்தார். அதுதான் அவரது விக்கெட்டுக்குக் காரணமானது அடுத்த பந்து ஸ்லோயர் ஒன்னாக அவர் பாயிண்டில் கட் செய்து கேட்ச் கொடுத்து 113 பந்துகளில் 14 பவுண்டரி 2 சிக்சருடன் 126 ரன்களுக்கு வெளியேறினார். ஸ்மித் பீல்ட் செய்திருந்தால் ஒரு ரன்னாகியிருக்கும் கோலி ஸ்ட்ரைக்கிற்கு வந்திருப்பார் ஒருவேளை இதுதான் திருப்பு முனையோ என்று நினைத்த வேளையில் ஆமாம் என்றனர் அடுத்து களமிறங்கிய நமது கேப்டனும் சக வீரர்களும்.

அதன் பிறகு நடந்தது சுத்த குழப்படியே. ரஹானே காயமடைந்த பின்னடைவு ஒரு புறம் இருக்க, அடுத்து களமிறங்கிய தோனி, ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்றாலும் புல்டாஸை லாங் ஆனில் தட்டிவிட்டு உயிரை வெறுத்து சிங்கிள் ஓடும் அவர், ஓவருக்கு 5.76 ரன்களே தேவைப்படும் நிலையில் அதே ஹேஸ்டிங்ஸ் ஓவரில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான லெக் கட்டர் பந்தை தட்டி விட்டு ஒரு ரன் எடுப்பதை விடுத்து சற்றே மேலேறி வந்து ஏதோ ஷாட்டை ஆட முயன்று பந்து மட்டையின் விளிம்பில் பட்டு வேடிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இவர் ஆட்டமிழந்த சில பந்துகள் கழித்து கோலி, 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 106 ரன்கள் எடுத்த நிலையில் ரிச்சர்ட்ஸன் வீசிய பந்து ஸ்லோ என்று அவராகவே நினைத்து மிட் ஆபில் தூக்கி அடிக்க வேண்டிய பந்தை செக் செய்தார் மிட் ஆஃபின் கையில் பந்து சரணடைந்தது. தோனி அவுட் ஆன பிறகாவது சற்று நிதானித்திருக்கலாம் கோலி, உடனடியாக அப்படியொரு ஷாட்டை தேர்வு செய்தது பல கேள்விகளை எழுப்புகிறது.

அதே போல் புதுமுக வீரர் குர்கீரத், லயன் பந்தை லாங் ஆஃபில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தே ஒரு பெரிய ஸ்வீப் ஆடப்போய் கேட்ச் கொடுத்தார். இதுவும் பொறுப்பற்ற ஷாட் என்பதை விட கேள்விகளை எழுப்பும் ஷாட் என்றே தோன்றுகிறது.

வலது கையில் 4 தையலுடன் இறங்க நிர்பந்திக்கப்பட்ட ரஹானே 2 ரன்களில் ஸ்லிப்பில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ரிச்சர்ட்சன் பந்தில் அவுட் ஆனார். ரிஷி தவணும் அந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் வந்த நிலையில் ரிச்சர்ட்சன் பந்தை கவர் திசையில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து பொறுப்பற்ற முறையில் வெளியேறினார்.

புவனேஷ் குமார் பவுலிங்கில் கொடுத்த ரன்கள் பற்றிய குற்றவுணர்வின்றி 2 ரன்களில் வெளியேறினார். உமேஷ் யாதவ், இசாந்த் சர்மாவுக்குத்தான் ஜடேஜா ஸ்ட்ரைக் கொடுத்துக் கொண்டேயிருந்தாரே. இருவரும் அவுட் ஆக, ஜடேஜா மட்டும் 24 நாட் அவுட். இந்தியா 49.2 ஓவர்களில் 323 ரன்களுக்குச் சுருண்டது.

கேன் ரிச்சர்ட்சன் 6 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தவர் கடைசியில் 10 ஓவர்கள் 1 மெய்டனுடன் 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article8130261.ece?homepage=true

 

இன்றைய மாட்ச் பார்க்கும்போது என்றும் இல்லாத ஒரு சந்தேகம் வந்தது .

வேணுமென்றே தான் இந்தியா வெல்லாமல் விட்டது அப்படியே கண் கூடாக தெரிந்தது .

தோனியை கிரிக்கெட் உலகை விட்டே விரட்டவேண்டும் .

  • தொடங்கியவர்

அர்யுன் நான் மட்ச் பார்க்கவில்லை. ஆனால் இடைக்கிடை எனது  மொபைலில் ஸ்கோர் பார்த்து கொண்டு இருந்தேன். 

அப்படி பார்த்தபோது கடைசியாக 15 ஓவரில் 90 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. அதாவது ஒரு பந்துக்கு ஒரு ஓட்டம் தேவை.

கோலியும் தவானுமே அதை செய்திருந்திருக்கலாம்.

துடுப்பாட்ட வரிசை மாற்றியதுக்கு காரணம் ரகானே காயப்பட்டு தையல் போட்டதால் அவரை பட்டிங் செய்ய வராமலே போட்டியை முடிக்க யோசித்து இருக்கலாம்.

15 minutes ago, நவீனன் said:

அர்யுன் நான் மட்ச் பார்க்கவில்லை. ஆனால் இடைக்கிடை எனது  மொபைலில் ஸ்கோர் பார்த்து கொண்டு இருந்தேன். 

அப்படி பார்த்தபோது கடைசியாக 15 ஓவரில் 90 ஓட்டங்கள் தேவையாக இருந்தது. அதாவது ஒரு பந்துக்கு ஒரு ஓட்டம் தேவை.

கோலியும் தவானுமே அதை செய்திருந்திருக்கலாம்.

துடுப்பாட்ட வரிசை மாற்றியதுக்கு காரணம் ரகானே காயப்பட்டு தையல் போட்டதால் அவரை பட்டிங் செய்ய வராமலே போட்டியை முடிக்க யோசித்து இருக்கலாம்.

காலை ஐந்து மணிக்கு நான் மாட்ச் பார்க்கதொடங்கும் போது தவான் நூறு தாண்டியிருந்தார் கோலி தொண்ணுறில் இருந்தார் .மிக இலகுவாக தாண்டகூடிய இலக்கு .பின்னர் வரியையாக அவுட் ஆகினார்கள் அத்தனை அவுட்டுக்ளுமே soft dismissals  .

  • தொடங்கியவர்

என்னுடைய விக்கெட்தான் திருப்பு முனை: தோல்விக்கு பொறுப்பேற்கும் தோனி

 
தோனி. | படம்: ஏ.பி.
தோனி. | படம்: ஏ.பி.

கான்பெராவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணி தோல்வியுற்றதற்குக் காரணம் தான் ரன் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறியதுதான் என்று இந்திய அணியின் கேப்டன் தோனி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தவண் அவுட் ஆகும் போது 277/2 என்ற நிலையில் அதே ஓவரில் தோனி அவுட் ஆக, சிறிது நேரத்துக்கெல்லாம் கோலியும் அவுட் ஆக இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இது குறித்து தோனி கூறியதாவது:

என்னுடைய விக்கெட்தான் திருப்பு முனையாகிவிட்டது. என்னுடைய ரோல் என்ன? அந்த நிலையிலிருந்து அணியை இறுதி வரை நின்று வெற்றிக்கு இட்டுச் செல்வதுதான். எனவே அந்தத் தருணத்தில் என்னுடைய விக்கெட் திருப்பு முனையானது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம், ஆனால் என்னுடைய அவுட் மிக முக்கியமானதாகப் போய்விட்டது. ஆட்டத்தை வெற்றிக்கான முடிவை நோக்கி கொண்டு செல்வது என்னுடைய பொறுப்புதான்.

அழுத்தம் என்பது இப்படித்தான் செய்துவிடும். எனக்குப் பிறகு இறங்கியவர்களில் சிலர் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாதவர்கள். பெரிய ஷாட்களை ஆடலாம், அப்படி ஆடுவது சரிதான். ஆனால் இன்னும் கொஞ்சம் போட்டிகளில் இவர்கள் ஆடினால், பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவதன் அவசியத்தை உணர்வார்கள். பிட்சின் தன்மையைப் புரிந்து கொள்ளத் தொடங்கிய பிறகு பெரிய ஷாட்களை ஆடலாம்.

இளம் வீரர்கள் நிச்சயம் அனுபவத்தின் மூலம் முதிர்ச்சியடைவார்கள், இது அவர்கள் ஆடும் ஆரம்பக்கட்ட போட்டிகளே, ஆனால் அழுத்தம் என்றால் என்னவென்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

ரஹானே காயமடைந்ததும் ஒரு காரணியே. அவருக்கு கையில் தையல் போட வேண்டியதாயிற்று, மரத்துப் போகும் மருந்தும் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதனால் அவர் கைகளில் உணர்ச்சி இயல்பு நிலைக்கு திரும்புவதற்காக பின்னால் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

3-0 தோல்விக்குப் பிறகு மீண்டும் எழுச்சியுறுவது கடினம் என்றனர். ஆனால் இந்தப் போட்டியில் சாதனை வெற்றியைப் பெறும் அளவுக்கு ஆடினோம். டி20 கிரிக்கெட்டில் எப்படி ஆடுவோம் என்பதை இன்றைய ஆட்டம் அறிவிப்பதாக உள்ளது.

நிச்சயமாக நாங்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளோம். நான் அவுட் ஆவதற்கு முன்பாக பேட்டிங் சிறப்பாக இருந்தது. இது 46-47 ஓவர்களில் முடிந்திருக்க வேண்டிய போட்டி, இதை இப்படித்தான் அணுக வேண்டும், எதிர்மறைக்கூறுகளை யோசித்து அதில் மூழ்கிவிடக்கூடாது” என்றார்.

ஆட்ட நாயகன் விருது வென்ற கேன் ரிச்சர்ட்சன் கூறும்போது, கடந்த முறை இதே மைதானத்தில் இதே போன்ற ஒரு ரன் இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்காவும் இதே போன்றுதான் ஆடினர், அப்போதும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை ஒரு விக்கெட் விழுந்தால் நிச்சயம் ஏதாவது செய்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அன்று ஆம்லா விக்கெட்டுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா சரிந்து தோல்வி தழுவியது என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article8130639.ece

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் இணைப்புக்களுக்கு நன்றி, நவீனன்!

இங்கு அவுசில் ராத்திரிப் படு வெக்கை! இந்தப் போட்டியை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்த நான், இனி இந்தியா தான் வெல்லும் என்ற முடிவுடன்.. சரி..இவ்வளவு தூரம் மினக்கட்டு வந்தவங்கள்,, ஒன்றாவது வெல்லட்டும் என்று நினைத்துகொண்டு...நாயை அழைத்துக் கொண்டு 'நடைப்பயணம்' போய்த் திரும்ப வந்தால் எல்லாமே தலை கீழ்! அவுஸ்திரேலிய அணியே.. எதிர்பார்க்காத வெற்றி..!

ஆனால்  எதிரியும் பாராட்டும்.. துடுப்பாட்டம்! கோலியினதும், தவானினதும், சர்மாவினதும்... அழகிய 'ஆறுகள்'.. நாலுகள்!

எந்த விதமான அசைவுமில்லாத 'கான்பராவின்' காய்ஞ்சு போன 'பிட்ச்' !

அடுத்தது..சிட்னியில்..! சனிக்கிழமை கட்டாயம் பாருங்கள்!

இதுக்கு மட்டும்.. நான் .. இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ணுவதாக முடிவு செய்திருக்கிறேன்!

பெரிய மனசு என்று ஒன்றும் இல்லை!

'பாவம்'  .. இவ்வளவு தூரம் மினக்கெட்டு வந்தவங்கள்.. என்ற அனுதாபம் தான்!  

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா இந்தியா போன்ற நாடுகள் தோத்தால் உடனே வேணும் என்று தோற்றார்கள் என்று சொல்வீர்களா?

47 minutes ago, ரதி said:

அர்ஜீன் அண்ணா இந்தியா போன்ற நாடுகள் தோத்தால் உடனே வேணும் என்று தோற்றார்கள் என்று சொல்வீர்களா?

புங்கை எழுதிய கருத்தையும் வாசியுங்கோ .

நம்பமுடியாமல் தோற்றார்கள் 277/2 என்ற நிலையில் இருந்து 349 ரன்களை எட்டமுடியாமல் போவது அதிசயம் தான் .ஓவர்கள் தாரளாமாக இருந்தது .ஆஸி பந்துவீச்சாளர்களும் பலர் புதியவர்கள் மிக திறமாக பந்து வீசினார்கள் என்றும் சொல்லமுடியாது எனவே தான் வேணும் என்று தோற்றார்கள் போல தோன்றியது .

நித்திரை குழம்பிய கோபமும் கொஞ்சம் .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா, இப்படி எத்தனையோ மட்ச்களில் நடந்திருக்குது. இலங்கையணி கூட இப்படி தோத்திருக்குது...இந்தியா இப்படி நீங்கள் சொல்கிற மாதிரி வேணும் என தோற்பதற்கு ஒரே காரணம் தான் இருக்குது.அது தோணியை கப்டன் பதவியில் இருந்து தூக்குவதற்கு ஆகத் தான் இருக்கும். ஆனால் இந்த மட்ச்களில் எல்லாம் ஹோலி நன்றாகத் தான் விளையாடுகின்றார். ஆகவே நீங்கள் சொன்ன காரணம் அடிபட்டு போய் விடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளையாட்டு திரியில் யாரது மாப்பிள்ளை பார்க்கிற வேலை யெல்லாம் செய்வது 

தாத்தா நானும் வெயிட்டிங் ???

Edited by முனிவர் ஜீ

  • தொடங்கியவர்

வொயிட் வாஷை தவிர்க்குமா இந்தியா? கடைசி போட்டியில் இந்தியா பந்துவீச்சு

 

5 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா ஆஸி அணியிடம் 4-0 என தோற்று தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் கடைசி போட்டியையும் வென்று வொயிட் வாஷ் செய்யும் முனைப்போடு ஆஸி அணி களமிறங்குகிறது. ஆறுதல் வெற்றி பெறும் நோக்கத்தில் இந்தியா களமிறங்கவுள்ளது. பேட்டிங் பலம், பலவீனமான பந்துவீச்சுடன் உள்ள இந்தியா இன்றைய போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

5th.JPG


இந்திய அணி தரப்பில் ரஹானே, புவனேஷ் குமார் நீக்கப்பட்டு பூமராஹ், மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸி அணியில் மேக்ஸ்வெல், ரிச்சர்ட்ஸன் நீக்கப்பட்டு மார்ஷ், போலந்து சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் ஓவரிலேயே இஷாந்த் ஷர்மா பின்ச் விக்கெட்டை வீழ்த்தினார்.

http://www.vikatan.com/news/sports/58011-will-india-avoid-the-white-wash-today.art

291/5  44.4 overs

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

241/3   36.4 overs

  • தொடங்கியவர்

எனக்கு என்னவோ அவுஸ்திரேலியா வேணும் என்று பல catch களை விட்டு இந்தியாவை வெல்லவிட்ட மாதிரி இருக்கு..:grin:

  • தொடங்கியவர்

இந்தியா த்ரில் வெற்றி: மனீஷ் பாண்டே அபார சதத்தால் 'ஒயிட்வாஷ்' தவிர்ப்பு

 
 
மனீஷ் பாண்டே | படம்: ஏ.எஃப்.பி
மனீஷ் பாண்டே | படம்: ஏ.எஃப்.பி

ஆஸ்திரேலியா எதிராக சிட்னியில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய வீரர் மனீஷ் பாண்டே அபார சதமடித்து இந்திய வெற்றிக்கு துணை புரிந்தார்.

அதேபோல், ரோஹித் சர்மாவின் அபார ஆட்டமும், ஆஸ்திரேலியாவிடம் 5-0 என்ற கணக்கில் இந்தியா மண்ணைக் கவ்வாமல் இருக்க உறுதுணை புரிந்தது.

இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது.

330 ரன்களை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவன், ரோஹித் சர்மா இருவரும் சிறப்பான துவக்கத்தை தந்தனர். இவர்களது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்களை எட்டியது. தொடர்ந்து ஷிகர் தவன் 42 பந்துகளில் அரை சதம் எட்டினார். ஆனால் அவரின் அதிரடி ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 78 ரன்களுகு தவன் ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த கோலி வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

களத்தில் இணைந்த ரோஹித் சர்மா, மனீஷ் பாண்டே ஜோடி, சற்று தடுமாற்றம் கண்ட ரன் சேர்ப்பை மீண்டும் சரியான தடத்துக்கு கொண்டு வந்தது. ரோஹித் சர்மா 60 பந்துகளில் அரை சதம் எட்டினார். மணீஷ் பாண்டேவும் அவ்வபோது சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசித் தள்ளினார்.

சிறப்பாக ஆடி வந்த ரோஹித் சர்மா 35-வது ஓவரில் 99 ரன்களுக்கு துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். 15 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் மீதமிருக்க 100 ரன்கள் தேவைப்பட்ட அந்த நிலையில் தோனி ஆட வந்தார். ஆனால் அவர் வழக்கத்துக்கு மாறான நிதானத்தை கடைபிடித்தார். பாண்டே 38 பந்துகளில் அரை சதம் எடுத்தார். முடிந்த வரை பாண்டே 2 ரன்கள், பவுண்டரிகள் என எடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் மறுமுனையில் தோனி ரன் சேர்க்க திணறினார்.

தேவைப்படும் சராசரி அதிகரித்துக் கொண்டே வர, ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. 3 ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 48-வது ஓவரில் தோனி தனது முதல் பவுண்டரியை அடித்தார். அதே ஓவரில் பாண்டே அடித்த பவுண்டரியோட சேர்த்து மொத்தம் 13 ரன்கள் வந்தது. 49-வது ஓவரில் 9 ரன்கள் வர கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவையாயிருந்தது.

50-வது ஓவரின் முதல் பந்து வைட் என அறிவிக்கப்பட, 2-வது பந்தை தோனி சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் இருந்த மனீஷ் பாண்டே அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பி (80 பந்துகளில்) சதத்தை எட்டினார். இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதியாக, அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.

தனது 4-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் மனீஷ் பாண்டேவின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தொடரை இழந்து 4 போட்டிகளிலும் தோல்வி கண்டிருந்த இந்தியாவுக்கு இது கௌரவ வெற்றியாக அமைந்துள்ளது.

முன்னதாக டாஸில் வென்ற இந்தியா ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்று இந்திய இளம் வீரர் பும்ரா தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட்டார். முந்தைய போட்டிகளைப் போலவே ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து அதிரடி ஆட்டத்த வெளிப்படுத்தியது. ஒரு பக்கம் ஃபின்ச், ஸ்மித், வார்னர் என ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் டேவிட் வார்னர் மும்முரமாக ரன் சேர்த்து வந்தார்.

5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிட்சல் மார்ஷ், வார்னர் ஜோடி 118 ரன்களை வெறும் 105 பந்துகளில் குவித்தது. வார்னர் 100 பந்துகளில் சதத்தை எட்டினார். மார்ஷ் 47 பந்துகளில் அரை சதம் எடுத்தார். வார்னர் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மாஷின் அதிரடி தொடர்ந்தது. வார்னருக்கு பிறகு வந்த வேட், 27 பந்துகளில் 36 ரன்களை அதிவேகமாக குவித்து விட்டு ஆட்டமிழந்தார். 50-வது ஓவரில் மார்ஷ் சதத்தை எட்டினார். இதற்கு அவர் 81 பந்துகள் மட்டுமே எடுத்துக் கொண்டார். முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்களை எடுத்தது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8145257.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

11221603_1163380907014337_58145493483817

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.