Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, arjun said:

மினக்கெட்டு எழுதியதை காணவில்லை .

கிருபன் இப்பவும் பழைய அரசியல்வாதிகள் மாதிரி மகாவம்சம் கதையுடன் நிற்கிறார் .

இந்திய -இலங்கை ஒப்பந்தம் காலத்தில் உந்த கடும் போக்காளர்கள் ,பிக்குகள் ,மகாவம்சம் எல்லாம் எங்கே போனது .

உலகம் மாறிவிட்டது 

இலங்கையில் சிங்களவர்கள் தம்மதீபக் கொள்கையுடன் வலுவாகத்தான் இருக்கின்றார்கள். புலிகளை அழித்த பின்னர் மகிந்தவால் வெற்றிவாதமாக மாற்றப்பட்டு இன்னும் வளர்த்துவிடப்பட்டிருக்கின்றது. மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் பேராசை பிடித்து நாடு முழுவதையும் தமது கைக்குள் போட்டதனாலும், தமிழர்களையும், முஸ்லிம்களையும் ஒதுக்கியதாலும்தான் தோற்றார்கள். ஆனால் மகாவம்சக் காலத்துச் சிந்தனை சிங்களவர்களிடம் இருந்து போகவில்லை.

ஒரே வருடத்தில் சிங்களப் பெரும்பான்மையினர் முற்போக்குவாதிகளாக மாறிவிட்டதாகவும் தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளை உணர்ந்துவிட்டதாகவும் படம் காட்டக் கூடாது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பிரேமதாஸ, ஜேவிபி உட்பட எதிர்ப்பு இருந்ததனால்தான் அது அமுலாக்கப்படாமல் அதிகாரமற்ற பிரிந்த வட-கிழக்கு மாகாண சபையாக வந்திருக்கு.

உலகம் மாறுவது உண்மைதான். ஆனால் தமிழர்களுக்கு தாம்பாளத்தில் ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்பது பப்பா மரத்தில் ஏற்றும் செயல்தான். 

  • Replies 66
  • Views 3.4k
  • Created
  • Last Reply

இலங்கையில் எந்த பிரச்சினையும் தீர்க்க படவில்லை.... வெள்ளை அடிக்கபட்டு இருக்கிறது...  

மகிந்த குடும்பம் மீது( போர்குற்றம் தவிர்ந்த)  உள்ள பல குற்றச்சாட்டுகளுக்கு எந்த  வழக்குகளும் இண்றுவரை பதிவாக இல்லை என்பது ஒரு உதாரணம்...

இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பிரேமதாஸ, ஜேவிபி உட்பட எதிர்ப்பு இருந்ததனால்தான் அது அமுலாக்கப்படாமல் அதிகாரமற்ற பிரிந்த வட-கிழக்கு மாகாண சபையாக வந்திருக்கு.

- தவறான தகவல் .

ஒப்பந்தம் உருவான போது இந்தியா இலங்கை தரப்பை கட்டுக்கொண்டுவருவதுதான் கஷ்டம் என்று நினைத்தது உண்மையும் அதுதான் ஆனால் பலத்தை பிரயோகித்து பல தரப்பு வாயையும் மூடவைத்தது ஒப்பந்தம் கையெழுத்து வைக்காவிட்டால் தமிழ் ஈழம் தான் தீர்வாகிவிடும் என்றும் வெருட்டினார்கள் .அதை புலிகள் குழப்பியதன் பின் அதன் கதை முடிந்துவிட்டது அதன் பின் அமுலாக்கம் என்ற கதையே இல்லை .

இப்பவும் நான் சொல்லவது சிங்களமும் மாறவில்லை தமிழர் தரப்பும் மாறவில்லை ஆனால் தீர்வை கொண்டுவருவது சர்வதேசம் தான் .அது நடந்துகொண்டு இருப்பதும் உங்களுக்கு தெரியாமல் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேச்சுவார்த்தையில் இதய சுத்தியுடன் பங்கெடுக்காத இரு தரப்புக்களும் எட்டப்படும் தீர்வை ஏற்றுக்கொண்டு செயற்படுத்துவார்கள் என்பது எந்த வகையான negotiation கற்கைநெறியில் உள்ளது?

எனக்குத் தெரிந்தவரை win-win strategy தான் எப்போதும் conflict resolution இல் பாவிக்கவேண்டியது அழுத்தங்களைப் பிரயோகித்து lose-lose நிலையை உருவாக்கியதால்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தம் தோற்றது. வழமைபோன்று புலிகள் மீதான வெறுப்புணர்வு, புலிகள்தான் எல்லாவற்றையும் குழப்பியடித்தார்கள் என்று உங்களைச் சொல்லவைக்கின்றது.

சிங்களமும், தமிழர்களும் மாறாமல் ஒரு நிரந்தரத் தீர்வு இலங்கையின் இனப் பிரச்சினைக்கு கிட்டாது. அதனை மேற்குநாடுகள் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளன.

அவர்களால் மாற்றத்தை நேரடியாகக் கொண்டு வரமுடியாது என்பதால்தான் தமது முகவர்களாக ரணில்-மைத்திரியை சிங்களத்தின் பக்கத்திலும், சம்பந்தர்-சுமந்திரரை தமிழர்கள் பக்கத்திலும் இறக்கிவிட்டுள்ளனர். இதில் சம்பந்தர்-சுமந்திரர் தம்மால் இயன்றவரை தமிழர்களின் தேசியத்தை நலிவாக்கி தமிழர்களை "ஏதாவது" ஒரு தீர்வு நோக்கி நகர்த்துகின்றார்கள். மற்றைய பக்கத்தில் மைத்திரி-ரணில் சிங்கள மக்களின் மனநிலையை மாற்ற எந்த உருப்படியான வேலைத்திட்டத்தையும் செய்யவில்லை. அவர்களால் ஒரு அங்குலம் நகர எடுக்கும் முயற்சிகளையும் கடும்போக்கான மகிந்த குழுவினர் தடுத்துவிடுவார்கள்.

ஒரு நீர்த்துப்போன அதிகாரமுள்ள அலகுகளும், பொருளாதார முன்னேற்றம் என்ற பேய்க்காட்டலும் தமிழர்களை கட்டிப்போடப் பாவிக்கப்படுகின்றன.

இந்திய இலங்கை உடன்பாட்டை  புலிகள் குழப்பினார்கள் என்பது முழுப்பூசணிக்காயை சோத்து பாசலில் மறைக்கும் செயல்..

புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பறித்து கொண்டு மாறு இயக்கங்களை எல்லாம் ஆயுதங்களோடை நடமாட விட்ட நரித்தனத்தில் இருந்து ஆரம்பித்தது பிரச்சினை...  

புலிகளின் தளபதிகளை கைது செய்த இலங்கை படைகள் பலாலி கொண்டு வந்து இந்திய பாதுகாப்பில் விட்ட பின் . மீண்டும் விசாரணைக்கு கொழும்பு கொண்டு செல்ல அனுமதித்தை இந்திய நடுநிலை தான் ஒப்பந்ததை குழப்பியது...  இலங்கை ஜனாதிபதியால் போராளிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வளங்கப்பட்டு இருந்து....

இப்படி நடு நிலையே இல்லாமல் இருந்த இந்திய படைகள் இலங்கையில் என்ன செய்தது எண்டதை தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை... 

Edited by தயா
கருத்து சேர்க்கை..

அவர்களால் ஒரு அங்குலம் நகர எடுக்கும் முயற்சிகளையும் கடும்போக்கான மகிந்த குழுவினர் தடுத்துவிடுவார்கள். -

இந்த கருத்துடன் நான் உடன்படவில்லை .விரைவில் மகிந்தா அண்ட் கோவை சிக்கலில் மாட்ட வைத்து அவர்களளை  அரசியலில் இருந்தே அப்புறபடுத்துவதற்குத்தான்  சாத்தியம் அதிகம் .

அவரவர் சொந்த கருத்துக்கள் தானே .காலம் தான் பதில் சொல்லும் 

புலிகள் எனது மாமனா மச்சானா ?

அவர்கள் செயற்பாடுகள் தான் அந்த காழ்ப்புணர்விற்கு காரணம் .எத்தனை ஒப்பந்தங்களை குழப்பி அடித்தார்கள் என்றும் உலகிற்கு தெரியும் .குறிப்பாக இலங்கை -இந்திய ஒப்பந்தம் சம்பந்தமாக நடந்த அனைத்தும் ஓரளவு எனக்கு தெரியும் .அந்த ஒப்பந்தம் குழம்பியதற்கு புலிகள் தான் முக்கிய காரணம் .வழக்கம் போல எதையுமே புலிகளோ அல்லது அவர்கள் ஆதரவாளர்களோ ஒப்புகொள்ளபோவதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

அர்யூன் அண்ணா தொடர்ந்து தனது கருத்துக்களை வைப்பார் என எதிர்பார்க்கின்றேன்

பார்க்கலாம்

உலகம்.. !!  இந்த சொல் சந்தைக்கு வந்து நிறைய பேர் தங்களின் ஊத்தைகளை மறைக்க சொல்லும் ஒரு சொல்லாக போனது...  அர்த்தம் தான் விளங்கி கொள்வதில்லை...

உலகமயமாதலில் இருந்து புலிகள் விலகி நிண்றார்கள் ஆதலால் தோற்று போனார்கள் எண்று  எப்போதும் சொல்ல கேப்பது தான்...   அதை நான் முற்று முழுதாக ஏற்றும் கொள்கிறேன்..

புலிகள் உலகமயமாதல் எனும் உலக சந்தையில் தங்களை விற்க முற்படாத காரணத்தால்  அழிக்கப்பட்டார்கள்.. இதில் கடாபி, சதாம் எல்லார் நிலையும் அடங்கும்... 

9 minutes ago, தயா said:

இந்திய இலங்கை உடன்பாட்டை  புலிகள் குழப்பினார்கள் என்பது முழுப்பூசணிக்காயை சோத்து பாசலில் மறைக்கும் செயல்..

புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பறித்து கொண்டு மாறு இயக்கங்களை எல்லாம் ஆயுதங்களோடை நடமாட விட்ட நரித்தனத்தில் இருந்து ஆரம்பித்தது பிரச்சினை...  

புலிகளின் தளபதிகளை கைது செய்த இலங்கை படைகள் பலாலி கொண்டு வந்து இந்திய பாதுகாப்பில் விட்ட பின் . மீண்டும் விசாரணைக்கு கொழும்பு கொண்டு செல்ல அனுமதித்தை இந்திய நடுநிலை தான் ஒப்பந்ததை குழப்பியது...  இலங்கை ஜனாதிபதியால் போராளிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வளங்கப்பட்டு இருந்து....

இப்படி நடு நிலையே இல்லாமல் இருந்த இந்திய படைகள் இலங்கையில் என்ன செய்தது எண்டதை தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை... 

இப்படித்தான் உங்களுக்கு சொல்லப்பட்டது .

புலிகளில் மட்டுமல்ல இயக்கங்களில் இருக்கும் போது அவர்களுக்கு பல விடயங்கள் சொல்லுவார்கள் அதை முழு போராளிகளும் நம்புவார்கள் .

உதாரணத்திற்கு சந்தியாரை போட்டதை முகாம்களில் இருந்த பலர் கொண்டாடினார்கள் .அவர்களுக்கு சொல்லபட்டது ஆயுதம் கப்பலை இந்தியாவிற்கு காட்டி கொடுத்தார் என்று .ஆனால் உண்மை அதுவல்ல .

புலிகளில் இருந்தவர்கள் பலர் இப்பவும் அவர்கள் சொல்லிகொடுத்தையே நம்பி அதையே திரும்ப திரும்ப சொல்லி வருகின்றார்கள் ஆனால் அவைகளில் பல உண்மையல்ல .

சிலர் உண்மையை சொல்லவும் சாட்சிகளுடன் எழுதவும் தொடங்கிவிட்டார்கள் .

சீனப்பழ மொழி ஒண்று இருக்கு ...   உயர்வான மனிதர்கள் கருத்துக்களை விவாதிப்பார்கள்..  சாதாரண மனிதர்கள் நிகழ்வுகளை விவாதிப்பார்கள்..  கேடு கெட்டவர்கள் தனிநபர்கள் செயற்பாடுகளை பற்றி விவாதிப்பார்கள்...  நீங்கள் இன்னும் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பது புரியலாம்...

இங்கை பிரச்சினை   கருத்துருவாக்கமே... 

இந்திய அரசு இலங்கைக்கு வந்தது அரசியல்  தரகு வேலைக்கே...  இந்த தரகு வேலைக்கு மிக முக்கியம் நடுநிலை...   அந்த நடு நிலை இந்தியாவால் பேணப்பட்டதா., இல்லையா...??  கேள்வி இது மட்டும் தான்.. !! 

திலீபன் அண்ணாவின் ஐந்து அம்ச கோரிக்கைகளை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்...

 

"திலீபன் அண்ணாவின் ஐந்து அம்ச கோரிக்கைகளை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்... "

எவ்வளவு குழந்தைதனமாக சிந்திக்கின்றீர்கள்  .இந்தியாவிற்கு திலீபன் யார் ? அவர் உண்ணாவிரதம் பற்றி அவர்களுக்கு என்ன அக்கறை .

அது தெரிந்தும் உங்கள் போன்றவர்களுக்கு புலிகள் அரங்கேற்றிய நாடகம் அது .

"புலிகள் உலகமயமாதல் எனும் உலக சந்தையில் தங்களை விற்க முற்படாத காரணத்தால்  அழிக்கப்பட்டார்கள்.. இதில் கடாபி, சதாம் எல்லார் நிலையும் அடங்கும் "

இது அதைவிட பகிடி .

இந்தியாவுக்கு திலீபன் யாரும் கிடையாது...  ஆனால் புலிகளுக்கு திலீபன் அரசியல் தலைமை...   திலீபனின் கோரிக்கை புலிகளின் கோரிக்கை...  அந்த 12 நாட்களும் திலீபனின் கோரிக்கையை ஆதரித்த மக்களை நீங்கள் நல்லுர் வீதியிலை கனவிலையும் கண்டு இருக்க மாட்டீர்கள்... 

இந்திய தரகு வேலைக்கு புலிகள்  இலங்கை அரசுக்கு சமமான தரப்பு..   இந்த விளாங்காய் விளங்காமத்தான் அரசியல் தெரியாது எண்டு இங்கை  மற்றவர்களை திட்டுறீர்களோ...? 

திலீபனே இந்தியாவுக்கு யார் எண்றால் தமிழ் மக்கள் யார் எண்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது...   இந்த அடிப்படை புரியாத நிலையில்  இன்னும் காலத்தை ஓட்டும் கேவலம் தான் இங்கை யாழுக்கை  நடக்கிறது போல...

ஒரு வேளை இந்தியா சொல்லுறதுக்கு தலையாட்டி கொண்டு இருந்து இருக்க வேணும் எண்டு அண்ணை அரசியல் பாடம் சொல்ல வாறியளோ...?  நம்ப காரணம் இருக்கு...? 

உலக மயமாதல் பற்றி ..  அர்சுண் அறிவை பெருக்கிறது மிக நல்லது...

Edited by தயா
எழுத்து பிழை

 அந்த 12 நாட்களும் திலீபனின் கோரிக்கையை ஆதரித்த மக்களை நீங்கள் நல்லுர் வீதியிலை கனவிலையும் கண்டு இருக்க மாட்டீர்கள்... 

நாடகத்தின் கிளைமாக்ஸ் 

டெல்கியில் இப்படி ஒன்று நடப்பதே பலருக்கு தெரியாது .அவர்களுக்கு அக்கறையும் இல்லை .

இந்தியா சொல்லுகின்றதை தலையாட்ட தேவையில்லை என்றால் பயிற்சி இடமும் ,பயிற்சியும் ,ஆயுதமும் பணமும் வாங்கிருக்ககூடாது 

இந்தியா வைத்த தீர்வு அளவிற்கு இனி ஒன்று கிடைப்பது கஷ்டம் அது அப்பவே எங்களுக்கு விளங்கியது அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் இருந்த  வித்தியாசம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, arjun said:

 அந்த 12 நாட்களும் திலீபனின் கோரிக்கையை ஆதரித்த மக்களை நீங்கள் நல்லுர் வீதியிலை கனவிலையும் கண்டு இருக்க மாட்டீர்கள்... 

நாடகத்தின் கிளைமாக்ஸ் 

டெல்கியில் இப்படி ஒன்று நடப்பதே பலருக்கு தெரியாது .அவர்களுக்கு அக்கறையும் இல்லை .

அப்போ

தமது விடுதலைக்கு போராடும் மக்கள் பற்றி டில்லிக்கு அக்கறை இல்லை.....?

 

 

இந்தியா வைத்திருந்த  தீர்வு அளவுக்கு...    அப்படி என்னத்தை வைத்தது...? 

மீள் குடியேற்றம் எண்ற பெயரின்.. தமிழர் நிலம் அபகரிப்பு... காவல் நிலையங்கள் எண்ற பெயரில் சிங்கள படைகள் மீள் வருகை குவிப்பு...   ஊர்காவற்படையினருக்கு ஆயுத பயிற்சி, இப்படி நிறைய இருந்தது எங்களுக்கும் தெரியும்...  

பொலீஸ் அதிகாரம் இல்லை,  காணி அதிகாரம் இல்லை , மத்திய அரசை தாண்டி  நிதி தனியான கையாள்கை இல்லை... 13 வது திருத்த சட்டம் இல்லை,   அப்படி நிகழ்ந்தாலும் பொதுசன வாக்கெடுப்பு,  இப்போ இருக்கிறது போலவே   இப்படி ஒரு மாகானசபை , உள்ளூர் சபை...    

தயவு செய்து சொல்லுங்கோ அப்படி இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கு என்ன தந்தது...?  இப்ப இருக்கிறதை விட அதிகமாக...? 

காலில் விழுந்து கெஞ்சுகிறேன்..  உங்கட அரசியல் ஞானத்திலை எங்களுக்கும் கொஞ்சம் பிழிஞ்சு விடுங்கோ..

( இந்தியாவுக்கு  லாபமற்ற முறையான  ஈடு பாடு ஏதும் இல்லை அதிலும் ஈழத் தமிழ் மக்கள் ஒரு பொருட்டே இல்லை எண்று நீங்கள் சொன்னதை கவனத்தில் வைத்து கொள்கிறேன்...) 

Edited by தயா
பிழை திருத்தம்

7 minutes ago, விசுகு said:

அப்போ

தமது விடுதலைக்கு போராடும் மக்கள் பற்றி டில்லிக்கு அக்கறை இல்லை.....?

 

நாடகம் பற்றி 

1 minute ago, arjun said:

நாடகம் பற்றி 

அப்ப இந்தியா மிகவும் ஈடு பாட்டோடை தமிழ் மக்களின் நலனில் அக்கறைகாக இந்தது எண்டு சொல்லவாறியள்...  

காஸ்மீரகத்தில் , நாகலாந்தில் ,  அசாமில் , வங்காளதேசத்தில் ,  பூட்டானில் , நேபாளத்தில் ,  மிக முக்கியமாக  மாலை தீவில் எல்லாம் இந்தியா இப்பிடிதான்..

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, arjun said:

நாடகம் பற்றி 

அப்படியே வைத்துக்கொண்டாலும்

காந்தியின் நாடகத்துக்கு பிரித்தானியா மதிப்புக்கொடுத்ததே...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தெனாலி said:

மகிந்தவுக்கு சிங்களன் ஆதரவு தெரிவிப்பது அதிசயம் இல்லை..ஆனால் மகிந்த இவ்வளவு கொடுமைகள் செய்த பின்னரும் மறுபடியும் அவன் வரட்டும்..இன்னும் கொஞ்சம் தாயக தமிழரை கொடுமைப்படுத்தினால் அதை வைச்சு நாங்கள் வெளிநாட்டில காரியம் சாதிக்கலாம் என்று கேவலமாக சிந்தித்த பு.பெ தேசிய தூண்களை என்னவென்று சொல்வது? 

யாரிங்கே அப்படி காரியம் சாதிக்கத் துடிக்கிறார்கள் என்று நீங்கள் பட்டியலிட்டால் நாங்களும் அவர்களை ஒதுக்கிவைப்போமே. தாயக தமிழரை கொடுமைப்படுத்தி அதில் குளிர் காய நினைக்கும் புலம்பெயர் மக்கள் யாரும் இங்கு யாழ் களத்தில் கருத்தெழுதுவதாக தோன்றவில்லை. அவர்களின் விடிவுக்காகவே நாம் போராடுகிறோம். கிடைக்கும் தீர்வு குறைந்தது தமிழ்நாடு மாநிலத்திற்கு இருக்கும் அதிகாரங்களைப்போலவாவது இருக்கவேண்டும் என்பதே எமது விருப்பமும். தாயகத்தில் இருப்பது வேறுயாரும் அல்லவே. அவர்கள் எங்கள் உறவினர்கள் நண்பர்களே. அவர்களின் துயரில் குளிர்காயுமளவுக்கு யாரும் இங்கு மனிதநேயம் அற்றவர்களில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

யாரிங்கே அப்படி காரியம் சாதிக்கத் துடிக்கிறார்கள் என்று நீங்கள் பட்டியலிட்டால் நாங்களும் அவர்களை ஒதுக்கிவைப்போமே. தாயக தமிழரை கொடுமைப்படுத்தி அதில் குளிர் காய நினைக்கும் புலம்பெயர் மக்கள் யாரும் இங்கு யாழ் களத்தில் கருத்தெழுதுவதாக தோன்றவில்லை. அவர்களின் விடிவுக்காகவே நாம் போராடுகிறோம். கிடைக்கும் தீர்வு குறைந்தது தமிழ்நாடு மாநிலத்திற்கு இருக்கும் அதிகாரங்களைப்போலவாவது இருக்கவேண்டும் என்பதே எமது விருப்பமும். தாயகத்தில் இருப்பது வேறுயாரும் அல்லவே. அவர்கள் எங்கள் உறவினர்கள் நண்பர்களே. அவர்களின் துயரில் குளிர்காயுமளவுக்கு யாரும் இங்கு மனிதநேயம் அற்றவர்களில்லை.

கருத்துக்களால் வெல்லமுடியாதவர்களின் கையாலாகாத்தனம் அது.

அவர்களின் கடைசி ஆயுதம் இது தான்.

செயலில் எதுவுமே இல்லாதவர்கள் இவர்கள் .

வெறும் வாய் மட்டும் தான் என்பதை யாழ் களம் அறியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

அமைதி என்ற சொல்லே பலர் வயிற்றில் புளியை கரைக்குது .

எதை அமைதி என்கிறீர்கள். அமைதி என்று சொல்லிக்கொண்டே ரணில் தமிழினத்தை அழிப்பதில் வல்லவன் என்பது உங்களுக்கு புரிந்திருக்க நியாயமில்லை.  அது புரிய வேற லெவெலுக்கு வரவேணும். இப்பவும் கறுப்பு வெள்ளை காலத்திலேயே இருக்குதுகள். ஐயோ ஐயோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தயா said:

தயவு செய்து சொல்லுங்கோ அப்படி இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கு என்ன தந்தது...?  இப்ப இருக்கிறதை விட அதிகமாக...? 

காலில் விழுந்து கெஞ்சுகிறேன்..  உங்கட அரசியல் ஞானத்திலை எங்களுக்கும் கொஞ்சம் பிழிஞ்சு விடுங்கோ..

( இந்தியாவுக்கு  லாபமற்ற முறையான  ஈடு பாடு ஏதும் இல்லை அதிலும் ஈழத் தமிழ் மக்கள் ஒரு பொருட்டே இல்லை எண்று நீங்கள் சொன்னதை கவனத்தில் வைத்து கொள்கிறேன்...) 

 

அண்ணை வழமைபோல் பதில் தரமாட்டார்

அத்துடன் இன்றைக்கு வெள்ளிக்கிழமை

4 minutes ago, விசுகு said:

அண்ணை வழமைபோல் பதில் தரமாட்டார்

அத்துடன் இன்றைக்கு வெள்ளிக்கிழமை

அது தெரிஞ்சதுதான்....    யாழ்கள விதியாலை மற்றய தலைப்புக்களிலை இது பற்றி கேக்க முடியாது எண்டது அவருக்கு அடிக்கடி வசதியாக போய் விடும்..

இந்தியாவை நல்லவர்கள் எண்டு இங்கை சொன்னார் இல்லை...  வேண்டு எண்டால் வேறை தலைப்பு காட்டுறன்..  கழுவி கழுவி ஊத்தி இருப்பார்....

அது சரி இண்டைக்கு சனிக்கிழமை இல்லை...?? tw_blush:

 

Edited by தயா
கருத்து சேர்க்கை..

இவ்வளவு காலமும் இலங்கை -இந்திய ஒப்பந்தம் வாசிக்காமல் இருந்தீர்களா ?

வடிவாக வரி வரியாக எழுதுகின்றேன் மகனை இறக்கி போட்டுவந்து (ஐந்து  மணித்தியாலங்கலத்திற்கு பிறகு )

இந்தியா தனது நலனை முன்னிறுத்தியே அந்த ஒப்பந்தைதை வரைந்தது .அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் எமது இயக்கங்கள் .

ஆனால் தமது நலன் கருதும்போது எம்மை பயன்படுத்தும்போது எமக்கும் ஒரு தீர்வை தர விரும்பினார்கள் .அதை அவர்கள் ஒழித்து செய்யவில்லை வெளிப்படையாக அனைத்து இயக்க தலைவர்களுக்கும் சொல்லியே செய்தார்கள்.

அதைவிட தமிழ் ஈழம் அமைப்பதை தாங்கள் என்றும் அனுமதிக்கமாட்டோம் என்பதையும் நேரே சொன்னார்கள் .சம்பந்தபட்ட பலர் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள் சித்தர் .அன்டன் மாஸ்டர் ஆகியோர் .

9 minutes ago, arjun said:

ஆனால் தமது நலன் கருதும்போது எம்மை பயன்படுத்தும்போது எமக்கும் ஒரு தீர்வை தர விரும்பினார்கள் .அதை அவர்கள் ஒழித்து செய்யவில்லை வெளிப்படையாக அனைத்து இயக்க தலைவர்களுக்கும் சொல்லியே செய்தார்கள்.

ஆக  ..  இலங்கை அரசிடம் இருந்து இந்தியாவுக்கு அடிமையாக போறது நல்லது எண்டு சொல்கிறீர்கள்....

 

வந்து விபரமாக...  மிகுதியை எழுதுங்கள் ..  வரி வரியாக ... அப்படி என்ன தர வந்தார்கள் எண்று  எங்களுக்கு தெரியாதது உங்களுக்கு தெரிந்து இருக்கிறது எண்று அறிய மிக ஆவலாக காத்து இருக்கிறேன்....  அது நாளையாக இருந்தாலும் பறவாய் இல்லை...

14 minutes ago, arjun said:

இவ்வளவு காலமும் இலங்கை -இந்திய ஒப்பந்தம் வாசிக்காமல் இருந்தீர்களா ?

உங்களுக்கு வேணும் எண்டால் கணணிக்கு முன்னாலை ஒரு பொழுது போக்கு... ஆனால் எங்களுக்கு ஒரு காலத்தில் வாழ்க்கை...   நண்றாகவே படித்து இருக்கிறோம்... 

14 minutes ago, arjun said:

அதைவிட தமிழ் ஈழம் அமைப்பதை தாங்கள் என்றும் அனுமதிக்கமாட்டோம் என்பதையும் நேரே சொன்னார்கள் .சம்பந்தபட்ட பலர் இன்றும் உயிருடன் இருக்கின்றார்கள் சித்தர் .அன்டன் மாஸ்டர் ஆகியோர் .

வரதராஜ பெருமாள் இந்திய இராணுவ காலங்களில்  தமிழீழம் பிரகடனம் செய்து , தமிழ் தேசிய இரணுவத்துக்கு ஆள் பிடிச்ச வரலாறு தெரியாது  போலகிடக்கே...  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.