Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணம் ஆற்றாமைகளிலிருந்து இன்னமும் மீளவில்லை : வடக்கு முதல்வர் தெரிவிப்பு

Featured Replies

வடமாகாணம் ஆற்றாமைகளிலிருந்து இன்னமும் மீளவில்லை : வடக்கு முதல்வர் தெரிவிப்பு

எமது வடமாகாணம் அவலங்களிலும், ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

 

தேசிய பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது வடமாகாணம் அதன் அவலங்களிலும் ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீங்கப்படவில்லை, தனியார் காணிகளும் மக்கள் நலம் சார்ந்த கட்டிடங்களும் விடுவிக்கப்படவில்லை, காணமற்போனார் விபரங்களை அவர்களின் சுற்றத்தார் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். முன்னால் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னமும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை, மாகாணத்தின் அலுவல்களில் மத்திய அரசாங்கத்தின் தலையீடு குறைந்தபாடில்லை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படவில்லை, மீனவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை, விதவைகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படவில்லை. இவ்வாறு போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவல நிலையைப் பட்டியல் இட்டுக் கூறிக் கொண்டே போக முடியும்.

 

எம்மால் பதவிக்குக் கொண்டு வரப்பட்ட இந்த அரசாங்கம் ஜனநாயக சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எனினும் மூன்று விடயங்கள் இன்று மிக முக்கிய நிலையைப் பெற்றுள்ளன.

 

ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் மாற்றம் ஏற்படுத்தல், தமிழ் மக்களின் பிரச்சினையை ஐ.நா. உரிமை சாசனங்களின் அடிப்படையில் நிரந்தரமாகத் தீர்த்து வைத்தல், போர்க்குற்ற விசாரணைகளை 2015 செப்ரெம்பர் மாத ஐ.நா. இணைந்த பிரேரணையின் அடிப்படையில் முறையாக நடத்துவித்து நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியனவையே அவை. இவற்றை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது எமக்குத் தெரிந்ததே. ஆனால் எவ்வாறான அரசியல் மாற்றம் நடைபெறும், எவ்வாறான தீர்வு எமக்குக் கிடைக்கும், போர்க் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவார்களா என்பதில் எமக்கு மயக்கநிலையே இருந்து வருகின்றது.

 

தென்ஆபிரிக்காவில் இப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் தீர்க்க வேண்டியிருந்த போது அவற்றை அரசியல் ரீதியாகத் தீர்த்து விட்டே “உண்மை  மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை” அமைத்தார்கள். இங்கு 67 வருடகால பிரச்சினைகள் தொடர்ந்திருக்கும் போதே இப்பேர்ப்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்.

 

மக்களின் மனமாற்றம் அவசியம் என்பதை நாங்கள் உணர்கின்றோம். ஆனால் உண்மையில் எமது மக்களில் பெரும்பான்மையினர் தைப்பொங்கல் நாளில் விழாக் கொண்டாடும் மனோநிலையில் இல்லை என்பதே யதார்த்தம்.

 

எடுக்கக் கூடிய பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியவர்கள் எடுக்காது இருப்பதால் இந்த மனோநிலைக்குள் நாங்கள் அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கின்றோம்.  அவற்றை எடுக்க எமது மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நிலையை கொழும்பில் இருந்து உணர முடியாது.

 

என்னைப் போல் கொழும்பில்  பிறந்து வாழ்ந்து விட்டு இங்கு வந்து சாதாரண மக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் போதுதான் அவர்களின் அவலங்கள், ஆற்றாமைகள், சிந்தனைகள், சினங்கள் யாவையும் புரிவன. என்னை என் கட்சியின் ஒரு பகுதியினரும் ஊடகங்களூடாக மூளை சலவை செய்யப்பட்டுள்ள வடஇதென்னிலங்கையின் ஒரு பகுதியினரும்  ஒரு தீவிர போக்குடையவர் என்கின்றார்கள். என்னைப் பொறுத்த வரையில் நான் தீவிரவாதியல்ல. எம் மக்களின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் ஒருவன் நான்.

 

ஐம்பத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டத்தரணியாகப் பதவியேற்ற நான் உச்ச நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றிய பின் இன்று எமது மக்களின் வழக்கைக் கையேற்றிருக்கின்றேன். தேர்தல் காலங்களில்த்தான் 2013ல் எனது வழக்குக் கோப்பு எனக்குத் தரப்பட்டது. அது தான் எமது தேர்தல் விஞ்ஞாபனம். அதன் அடிப்படையில்த்தான் நான் என் வழக்கைக் கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றேன்.

 

எமது மக்களின் மனோ நிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம், எமது 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னெடுக்கும் வண்ணம் எனது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தேர்தலில் ஒன்றைக் கூறி நடைமுறையில் இன்னொன்றிற்கு உடன்படுவதாக இருந்தால் நாங்கள் மக்களின் புதியதொரு ஆணையைப் பெற வேண்டும்.

 

அவ்வாறு பெறாதவிடத்து என்னை ஆற்றுப்படுத்திய அந்த ஆவணத்தின் அடிப்படையிலேயே எனது நடவடிக்கைகளைக் கொண்டு போக வேண்டும். அதையே நான் செய்துகொண்டும்  வருகின்றேன். எனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை உரித்துக்களை, அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முன்வராவிட்டால் அதனைச் சுட்டிக் காட்டாது என்னால் இருக்க முடியாது.

 

67 வருடங்களாக நாங்கள் எமது மக்களின் உரிமைகளை புறக்கணித்து வந்துள்ளோம். பேச்சுவார்த்தை, உடன்படிக்கைகளில் தருவதாகக் கூறியவை எவையும் இன்னமுந் தந்தபாடில்லை. தந்திருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

 

எனினும் எமது மத ரீதியான ஐக்கியமும் ஒன்றிணைப்பும் மென்மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வர நான் வாழ்த்துகின்றேன். அதே நேரத்தில் எமது மக்களின் ஆழ வேரூன்றியிருக்கும் பிரச்சினைகளை உரிமைகளின் அடிப்படையில்  தீர்க்க யாவரும் முன்வர வேண்டும் என்றார்.

http://onlineuthayan.com/news/6922

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

வடமாகாணம் ஆற்றாமைகளிலிருந்து இன்னமும் மீளவில்லை : வடக்கு முதல்வர் தெரிவிப்பு

எமது வடமாகாணம் அவலங்களிலும், ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

 

உண்மையும் அதுதான்.
உள்ள இடம் முழுக்க வெளிச்சம்...
கடும் கறுப்பிலை புத்தம் புது றோட்டு...
எங்கை பார்த்தாலும் புது பெயின்ற் அடிச்ச வீடுகளும்....மதில்களும்..
கொழும்பு போய் வர பஸ் இருக்கு...ரயின் இருக்கு....
தமிழ் படம் ஓடுது....
நெருப்புபெட்டிக்கு தட்டுப்பாடில்லை..
பெற்றோலுக்கு தட்டுப்பாடில்லை.... எண்டு குத்தியாட்டம் போடுறவைக்கு விக்கியர் சொல்லுறது கொஞ்சப்பேருக்கு வேப்பண்ணை குடிச்சமாதிரித்தான் இருக்கும்.:cool:

முப்பது வருடங்களாக எவ்வளவு கஷ்டப்பட்டு அழித்ததை உடனே திருத்த பார்க்கினம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டணியின்ரை சோடினை சொப்பனங்கள் தான் ஈழத்தமிழனை இந்த அழிவு நிலைக்கு கொண்டு வந்தது.

அது மீண்டும் தொடர்கின்றது.

அதனை வேரோடு அறுத்து புதிய அரசியல் உதயத்திற்கு வழி அமைக்க வேண்டும். சிங்களவனோடு கொஞ்சிக்குலாவி இன்றும் அரசியல் பிழைப்பு நடத்துபவர்களை அடி அத்திவாரம் இல்லாமல் அழிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

67 வருடங்களாக நாங்கள் எமது மக்களின் உரிமைகளை புறக்கணித்து வந்துள்ளோம். பேச்சுவார்த்தை, உடன்படிக்கைகளில் தருவதாகக் கூறியவை எவையும் இன்னமுந் தந்தபாடில்லை. தந்திருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

 

http://onlineuthayan.com/news/6922

ஆயுதம் தூக்க வேண்டி வந்தது ஏன் என்று இப்போ தெரிகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/16/2016 at 7:39 PM, arjun said:

முப்பது வருடங்களாக எவ்வளவு கஷ்டப்பட்டு அழித்ததை உடனே திருத்த பார்க்கினம் .

அர்ஜுன் அண்ணா, 
நீங்கள் எழுதியதை இங்கே வந்து ஓட்டும் முன்னர் ஒரு முறை வாசித்துப்பாருங்கள்.
"முப்பது வருடங்களாக எவ்வளவு கஷ்டப்பட்டு அழித்ததை உடனே திருத்த பார்க்கினம் ....."

இந்த வசனம் ஒரு சிங்களவன் தான் சொல்லலாம். அதை நீங்கள் இங்கே வந்து தைரியமாக சொல்வது சிந்திக்கவேண்டிய ஒன்று.
 

ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்ப்பதால் வரும் பிரச்சனை இது .

அழிவு யார் செய்தாலும் அழிவுதான் கொலை யார் செய்தாலும் கொலைதான் .

எத்தனை குழந்தைகளை பலவந்தமாக பிடித்து பலி கொடுத்த போது நாட்டை விட்டு ஓடிவந்து விடுதலைக்கான வேள்வி  என்று கண்ணை மூடிக்கொண்டு இருந்த ஆட்கள் தானே .

எங்களது என்றால் நாங்களே அழிக்கலாம் எங்கட பிள்ளைகளை நாங்கள் பலியிடலாம் சிங்களவன் செய்ததால் தான் பிழை போல உள்ளது உங்கள் கருத்து .

சொந்த பிள்ளையை அடிக்ககூடாது என்று சட்டம் வைத்திருக்கும்  கனடாவில் இருந்து கொண்டு நீங்கள் இப்படி எழுதுவது இன்னும் வியப்பளிக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே அழிக்க நினைப்பவன் "30 வருஷ காலம் கஷ்டப்பட்டு" அழிக்க மாட்டான் அண்ணே.
அது தவிர நீங்கள் முதல் கைக்குண்டு எறிந்த காலத்துக்கு முதல்லே வெளிநாட்டில் வந்து சந்ததியோடு செட்டில் ஆகிவிட்டவர், எப்படி நீங்கள் உங்களுக்கு பிறகு வந்தவர்களின் (எங்கள்) அவலம் பற்றி தெரிந்த மாதிரி கதைகிறீர்கள். 

 

25 minutes ago, Sasi_varnam said:

அண்ணே அழிக்க நினைப்பவன் "30 வருஷ காலம் கஷ்டப்பட்டு" அழிக்க மாட்டான் அண்ணே.
அது தவிர நீங்கள் முதல் கைக்குண்டு எறிந்த காலத்துக்கு முதல்லே வெளிநாட்டில் வந்து சந்ததியோடு செட்டில் ஆகிவிட்டவர், எப்படி நீங்கள் உங்களுக்கு பிறகு வந்தவர்களின் (எங்கள்) அவலம் பற்றி தெரிந்த மாதிரி கதைகிறீர்கள். 

 

 

உண்மைதான் சசி ,

இவ்வளவு அவலங்களை சந்தித்தும் அவர்களை எதிர்த்து போராட போகாமல் நாட்டை விட்டு ஓடிவந்தீர்கள் ,

ஆனால் ஆனால் குண்டெறிந்த காலத்திலேயே குடும்பத்துடன் வெளிநாடு வந்துவிட்டு போராட போனேன் பாருங்கள் அதுதான் வித்தியாசம் ,

அங்கு போனபடியால்தான் போராட புறப்பட்டவர்கள் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றார்கள் என்றும் .

போராட்டம் எப்படி போய் முடியும் என்றும் கணிக்க கூடியதாகவும்  அமைந்தது .

 

Edited by arjun
எழுத்து பிழை திருத்தம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.