Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனி செல்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜேர்மனி செல்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன
[ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2016, 06:02.47 AM GMT ]
maithri-depature-india-1.jpg
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் ஜேர்மனிக்கான நான்கு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

வரும் பெப்ரவரி 13ஆம் நாள் இந்தப் பயணம் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் ஜேர்மனிப் பயண சந்திப்புகள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு வேலைகளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும், ஜேர்மனி வெளிவிவகார அமைச்சும் ஈடுபட்டுள்ளன.

அத்துடன் சிறிலங்கா அதிபருடன் பெர்லின் செல்லவுள்ள பிரதிநிதிகள் குழு இன்னமுமும் முடிவு செய்யப்படவில்லை. எனினும், அமைச்சர் பைசர் முஸ்தபா இந்தப் பயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேனவின் பயண நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதற்காக, சில நாட்கள் முன்னதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பெர்லின் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.tamilwin.com/show-RUmuyBSbSWis4J.html

  • கருத்துக்கள உறவுகள்

அடடா, யேர்மனியில் வாழும் தமிழர்கள் பட்டிப்பொங்கலையும் பொங்கி முடித்துவிட்டனரே....... :(

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை கனடாவிலை புலியை வைத்து படங்காட்டின பூபாலபிள்ளை இப்ப நல்லாட்சிக்கு ஆதரவுவழங்க பொங்களல் விழாகொண்டாடி சும் கதாநாயகனாக்கப்பட்டார்.....ஜெர்மனியில் நல்லாட்சி ஆதரவு வழங்க .எப்பவும் பட்டிபொங்கல் (பெப்ருவரியில்) கொண்டாடலாம்தானே..மைத்திரி எப்பவும் சரம்கட்டிவரத்தயார்.....

3 minutes ago, alvayan said:

இங்கை கனடாவிலை புலியை வைத்து படங்காட்டின பூபாலபிள்ளை இப்ப நல்லாட்சிக்கு ஆதரவுவழங்க பொங்களல் விழாகொண்டாடி சும் கதாநாயகனாக்கப்பட்டார்.....ஜெர்மனியில் நல்லாட்சி ஆதரவு வழங்க .எப்பவும் பட்டிபொங்கல் (பெப்ருவரியில்) கொண்டாடலாம்தானே..மைத்திரி எப்பவும் சரம்கட்டிவரத்தயார்.....

நான் உதை சொல்ல சசி அடிக்க வாறார் .இனி சரி .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை அர்ஜுன்.....சி.டி.சி ..தொடங்கினகாலத்தில் கூட்டத்துக்கு போனேன்...அங்கு அவர்கள் அங்கத்துவப் பணத்துக்காகத்தான் இதை தொடங்கியுள்ளார்கள் என்பதை அவர்களின் பேச்சின் மூலம் உணர்ந்து அங்கத்துவன் ஆகவில்லை..ஙிப்ப அதுசரிதான் என்பது நிரூபணமாகிவிட்டது...பணத்துக்காக புலிக்கொடி தூக்கியவர்தான் இந்த பூபாலபிள்ளை என்பதைகாட்டிவிட்டார்  இனியும் மக்களை ஏமாற்றமுடியாது என்பது  விரைவில்  புரியும்...இதேநிலைதான் தமிழ் வர்த்தக சம்மேளனமும் கடைப்பிடிக்கத்தொடங்கியியிருக்கு...காசு வந்தவுடன் கனடியன் ஆகி...அதை என்ன செய்வது என்று தெரியாமல்...தடவுகினம்....பாவம் போராளிகளும் ...அவர்கள் குடும்பத்தினரும்...பொதுவ்வகச் சொல்லப்போன்னால் நம்பிகைத்துரோகிகள்.....

தலைவரின் மாவீரர் தின உரையில் இந்த போராட்டத்தை புலம்பெயர்ந்து வாழும் இளையோரிடம் ஒப்படைப்பதாக கூறினாரே தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஒப்படைப்பதாக கூறவில்லை. அவருக்கு தெரியும் இவர்கள் விலை போகக் கூடியவர்கள் என்று.- தமிழ் செல்வன் ....... CTC   யும் அடக்கம் என்பதை குறிப்பிடவில்லை....அப்ப நல்ல நடிகர் ...இந்த  சி.டி சி தலைவர்

Edited by alvayan
சேர்ப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, கறுப்பி said:
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் ஜேர்மனிக்கான நான்கு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

வரும் பெப்ரவரி 13ஆம் நாள் இந்தப் பயணம் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஞ்சையிருக்கிற சிங்களவன் மைத்திரியை போய் சந்திக்கிறானோ இல்லையோ!!!!!
எங்கடை சம்சும் கொம்பனியள் இப்பவே கோட்டு சூட்டை தூசுதட்டி அயன் பண்ண வெளிக்கிடுவினம் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

43 வருடங்களின் பின்னர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஒருவர் ஜேர்மனிக்கு விஜயம்

[ Monday,18 January 2016, 03:51:25 ]   
maithripala%20sirisena.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடுமாறு அந்நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

 

இந்நிலையில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் அடுத்தமாதம் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், இது ஸ்ரீலங்கா தலைவர் ஒருவர் 43 வருடங்களின் பின்னர் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக அமையவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி தொடக்கம் நான்கு நாட்கள் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்திற்கான பயண ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா மற்றும் ஜேர்மனிய  வெளிவிவகார அமைச்சுகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பிலான பயண முன்னேற்பாடுகளை மேற்ககொள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதிக்கு முன்னதாகவே ஜேர்மனி செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://ibctamil.com/news/index/17142

  • கருத்துக்கள உறவுகள்
On 1/17/2016 at 1:02 PM, alvayan said:

இங்கை கனடாவிலை புலியை வைத்து படங்காட்டின பூபாலபிள்ளை இப்ப நல்லாட்சிக்கு ஆதரவுவழங்க பொங்களல் விழாகொண்டாடி சும் கதாநாயகனாக்கப்பட்டார்.....ஜெர்மனியில் நல்லாட்சி ஆதரவு வழங்க .எப்பவும் பட்டிபொங்கல் (பெப்ருவரியில்) கொண்டாடலாம்தானே..மைத்திரி எப்பவும் சரம்கட்டிவரத்தயார்.....

பச்சோந்திகள் எப்போதும் பச்சோந்திகளே. காலம் அவர்களை மிக இலகுவாக இனங்காட்டி விடுகிறது. மான ரோசமுள்ள தமிழன் எப்போதும் சோரம்போகமாட்டான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.