Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கம்

Featured Replies

இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கம்

 

இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளது, தமது நாட்டுக்கும் இதர உலகத்துக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது என அதிபர் ஹஸன் ரௌஹானி கூறியுள்ளார்.

160116223252_iran_acuerdo_624x351_epa_no
 இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

சர்வதேச அணுசகதி கண்கணிப்பு அமைப்பு, இரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை மட்டுபடுத்தியுள்ளது என்பதை உறுதிசெய்த பிறகு, அது தொடர்பில் இரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன.

இதன் பிறகு நாட்டின் நாடாளுமன்றத்தின் உரையாற்றியபோதே அதிபர் ரௌஹானி இதைத் தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாடு குறித்து அனைவரும் மகிழ்கின்றனர் எனக் கூறும் இரானிய அதிபர், தமது பிராந்தியத்தில் போரை விரும்பும் சிலர் மட்டுமே இதை எதிர்த்துள்ளனர் எனக் கூறுகிறார்.

இஸ்ரேலும், அமெரிக்க நாடளுமன்றத்தில் உள்ள கடும்போக்கு சிந்தனையாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அச்சுறுத்தல் இப்போது குறைந்துள்ளது என்றாலும், தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/01/160117_iran_iaea

  • தொடங்கியவர்

இரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கத்தல் அரபு நாடுகளில் அதிர்வலைகள்

இரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்ட பிறகு, சவுதி அரேபியப் பங்குச் சந்தை ஏழு சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

150902063825_iran_stock_exchange_512x288
அரபு உலகில் பல நாடுகளில் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது

அரபு உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தையான சவுதி அரேபியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி பல நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் மற்றும் துபாய் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சியே காணப்பட்டன.

இதனிடையே இரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாளொன்றுக்கு ஐந்து லட்சம் பாரல்கள் அதிகரிக்க தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது.

160115114730_iran_oil_ap_512x288_ap_nocrஇரானின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்கவுள்ளது

அப்படி இரான் தனது நாளாந்த எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்குமானால், உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறைய வழி வகுக்கும்.

கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரு பாரல் கச்சா எண்ணெய் இப்போது 29 டாலர்கள் அளவுக்கு குறைந்துள்ளது.

நாற்பது ஆண்டுகளாக இரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, இரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்கவுள்ளது.

எண்ணெய் ஏற்றுமதி மீதிருந்த தடை காரணமாக இரானுக்கு இதுவரை 160 பில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/global/2016/01/160117_gulfstockmarket

  • கருத்துக்கள உறவுகள்

கச்சா எண்ணெய் விலகுறையுதா! அச்சா!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, karu said:

கச்சா எண்ணெய் விலகுறையுதா! அச்சா!

 

காருக்கு பெற்றோல் அடிச்சு கனகாலம் போலை கிடக்கு...tw_lol:

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளில் அல்ல.. சவுதியில் இஸ்ரேலில்.. அதிர்வலைகள் என்று வரனும். அதற்கு பரிகாரமாக.. ஏவுகணை பரிசோதனையை கணக்குக்காட்டி புதிய தடைகள் அமுலாம்.

Iran: US imposes new sanctions over missile test

http://www.bbc.co.uk/news/world-us-canada-35338901

அமெரிக்கன் கேம் பிளே பண்ணிக்கிட்டு திரியுறான். இவங்க அதை தூக்கிப்பிடிச்சுக்கிட்டு திரியுறாங்க. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 18/01/2016 at 1:06 AM, குமாரசாமி said:

காருக்கு பெற்றோல் அடிச்சு கனகாலம் போலை கிடக்கு...tw_lol:

ஒரு பதினைஞ்சு நாளாய் அடிக்கயில்ல.    இன்னும் அரைவாசி கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.