Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

 

ஆண் : கொக்கர கொக்கரக்கோ
ஏ விடிய கொக்கரக்கோ இருந்த
இருட்டெல்லாம் இனி மேலே
கொக்கரக்கோ

ஆண் : கொக்கர கொக்கரக்கோ
சேவல் கொக்கரக்கோ சேவல்
கூவக்குள்ளே பெட்டை கோழி
கொக்கரக்கோ

ஆண் : சங்கு சக்கரம் போல
மனசு சுத்துற வேளை
சுறாங்கனிக்க மாலு கெண்ணா
வா அதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
விலகி போகுது சோகம்
நீ வா ஆஆ ஆஆ


வெள்ளிமணி கொலுசுக்குள்ள
துள்ளுகிற மனசுக்குள்ள
சந்தோசம் நிலைச்சிருக்க
சாமிகிட்ட கேட்டிருக்கேன்

பெண் : எல்லோரும் அருகிருக்க
பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட
ஆண்டவனை பாத்திருக்கேன்

ஆண் : எண்ணம் இருந்தா
எதுவும் நடக்கும் தன்னால
ஏ நீ துணிஞ்சா உலகம்
உனக்கு பின்னால

பெண் : குத்துவிளக்கா
சிரிச்சா சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச
மனச இப்போது

ஆண் : நம்ம பக்கம்
காத்து வீசுறத பாத்து
நல்லவங்களை சேர்த்து
நீ போடு தினம் கூத்து

பெண் : கந்தனுக்கு வள்ளிய
போல கண்ணனுக்கு ராதைய
போல ஆசைகொண்ட
உயிருக்கெல்லாம்
துணையிருக்கு பூமியில

ஆண் : கண்ணுக்குள்ள
கண்ணன் இருக்க
நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
யாருக்குள்ள யாரு இருக்கா
தெரிஞ்சவங்க யாருமில்லை

பெண் : றெக்கை கட்டி
பறக்கும் பறக்கும் வெள்ளாடு
வெக்க பட்டு மறைக்கும்
மறைக்கும் நெஞ்சோடு

ஆண் : ஹே சிட்டுகுருவி
சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு
கொட்டும் அருவி குதிக்கும்
குதிக்கும் என்னோடு

பெண் : சிட்டான் சிட்டான்
சிடுக்கு இப்ப உள்ளதெல்லாம்
நமக்கு கெட்டத தான் ஒதுக்கு
இனி நம்ம கிட்ட கெழக்கு........!

--- கொக்கர கொக்கரக்கோ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

ஆண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே…

ஆண் : வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
பெண் : நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே

அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே

பெண் : எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே

பெண் : பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
ஆண் : பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே

என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்

ஆண் : மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்.......!

--- இந்த மான்  உந்தன் சொந்த மான் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : கோடைக்கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
ஆண் : சுகம் கோடி காணட்டும்

ஆண் : இவைகள் இளமாலை பூக்களே
ஆண் : புதுச்சோலை பூக்களே
 

ஆண் : வானில் போகும் மேகம் இங்கே
யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம்
யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ

ஆண் : திருநாளும் கூடட்டும்
சுகம் தேடி ஆடட்டும்

ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும்
நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும்
இன்பம் இங்கே என்றதே

ஆண் : வெண்மலை அருவி
பன்னீர் தூவி
பொன்மலை அழகின்
சுகம் ஏற்காதோ

ஆண் : இவை யாவும் பாடங்கள்
இனிதான வேதங்கள்.......!
 

--- கோடைக்கால காற்றே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : நான் பாடும்
மௌன ராகம் என்
காதல் ராணி இன்னும்

ஆண் : நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

ஆண் : கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்

ஆண் : உன்னைக் கண்டு
தென்றலும் நின்று
போனதுண்டு உன்னைக்
காண வெண்ணிலா வந்து
போவதுண்டு

ஆண் : ஏன் தேவி
இன்று நீ என்னைக்
கொல்கிறாய் முள்
மீது ஏனடி தூங்கச்
சொல்கிறாய்

ஆண் : உன்னைத்
தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்
தானே தேடுது

ஆண் : கண்கள் என்னும்
சோலையில் காதல்
வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு
தான் சாபம் என்று
கண்டேன்

ஆண் : என் சாபம்
தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே

ஆண் : பூவும் வீழ்ந்து
போனது காம்பு என்ன
வாழ்வது

ஆண் : காலம் என்னைக்
கேள்வி கேட்குது கேள்வி
இன்று கேலியாகிப் போனது.......!

 

--- நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : { தங்கத் தாமரை
மகளே வா அருகே தத்தித்
தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விாிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே
உன்னாலே } (2)
 

ஆண் : செழித்த அழகில்
சிவந்து நிற்கும் செந்தேனே
என் கழுத்து வரையில் ஆசை
வந்து நின்றேனே வெறித்த
கண்ணால் கண்கள் விழுங்கும்
பெண்மானே உன் கனத்த
கூந்தலின் காட்டுக்குள்ளே
காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே உலை
ஒன்று கொதிக்க எந்த மூடி
போட்டு நான் என்னை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க

ஆண் : பறக்கும் வண்டுகள்
பூவில் கூடும் காா்காலம்
கனைக்கும் தவளை துணையைச்
சேரும் காா்காலம் பிாிந்த குயிலும்
பேடை தேடும் காா்காலம்
பிாிந்திருக்கும் உயிரை எல்லாம்
பிணைத்து வைக்கும் காா்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே
ஆசை நாகரீகம் பாா்த்தால் நடக்காது
பூஜை நெருக்கமே காதல் பாஷை .......!

 

--- தங்கத் தாமரை மகளே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பொண்ணு பார்த்ததாலே
ஆண் : ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல
பரிசம் போட்டதாலே
 

ஆண் : ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியம் பூங்கொம்பு
 

ஆண் : பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே
பித்த நாடி சத்தமாச்சு
ஆண் : மோகம் தாங்காம தேகம் தூங்காம
மொட்ட மாடி கெட்டுப்போச்சு
ஆண் : சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு
ஜோடி நான் சேரத்தான்
 

ஆண் : காதல் சங்கதி
ஆண் : கூறும் சுந்தரி
ஆண் : மாலை சூட வேளை கூட
போதை ஏற ஆசை தீர ஹோய்

ஆண் : நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும்
நம்மாளு போல ஏது
ஆண் : மாமன் நானாக பாவம் தானாக
வாசல் தேடி வந்த மாது
 

ஆண் : ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு
ஜோடி சேர்ந்தாச்சம்மா
 

ஆண் : பாலைக் காச்சுடா
ஆண் : பாயைப் போடுடா
ஆண் : வாசம் வீசும் ரோசாப் பூவை
வாங்கி வந்து தூவு தூவு ஹேய்........!

 

--- பாக்கு வெத்தல போட்டேன் பத்தல ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி ….

ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தொியாதடி

ஆண் : உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

ஆண் : காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

ஆண் : காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

ஆண் : உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஆண் : ஒரு வாா்த்தை பேசாமல் நீ பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே

ஆண் : யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

ஆண் : என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பாா்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் …….!

 

--- என் காதல் சொல்ல நேரம் இல்லை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே

பெண் : இன்று வந்த
இன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
அன்பு பொங்கவோ

பெண் : குயிலே போ
போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது
என் ராகம்

பெண் : அத்தை மகன்
கொண்டாட பித்து மனம்
திண்டாட அன்பை எண்ணி
நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ

பெண் : புத்தம் புது செண்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி
கொடுப்பேன் ஓஹோ

பெண் : மன்னவனும்
போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ
மெத்தை விரிப்பேன்

பெண் : உத்தரவு போடும்
நேரமே முத்து நகை
பெட்டகத்தை முந்தி திறப்பேன்

பெண் : மௌனம்
போனதின்று புது
கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு அது வாசல் தேடுதே

பெண் : காலம் இங்கு
கூண்டாக வந்த இன்பம்
வேம்பாக இன்று வரை
எண்ணி இருந்தேன் ஓஹோ

பெண் : பிள்ளை தந்த
ராசாவின் வெள்ளை
மனம் பாராமல் தள்ளி
வைத்து தள்ளி இருந்தேன்
 

பெண் : என் வயிற்றில்
ஆடும் தாமரை கை
அசைக்க கால் அசைக்க
காத்து வளர்ப்பேன் கற்பகத்து
போா்பதத்து பூவினை அற்புதங்கள்
செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்.......!

 

--- குயில்பாட்டு ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : பூங்காற்று
திரும்புமா என் பாட்ட
விரும்புமா பாராட்ட
மடியில் வெச்சுப் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி
கெடைக்குமா

பெண் : ராசாவே
வருத்தமா ராசாவே
வருத்தமா ஆகாயம்
சுருங்குமா ஏங்காதே
அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

ஆண் : என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன்
தூக்கத்த வாங்கல

பெண் : இந்த வேதனை
யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

ஆண் : ஏதோ என்பாட்டுக்கு
நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த
சொன்னேனடி

பெண் : சோக ராகம்
சொகம் தானே சோக
ராகம் சொகம் தானே
ஆண் : யாரது போறது
பெண் : குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா

ஆண் : உள்ள அழுகுறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷம்தான்
வெளுத்து வாங்குறேன்

பெண் : உங்க வேஷம்தான்
கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்

ஆண் : மானே என்
நெஞ்சுக்குப் பால்
வார்த்த தேனே
முன்னே என்
பார்வைக்கு வாவா பெண்ணே

பெண் : எசப் பாட்டு
படிச்சேன் நானே
ஆண் : பூங்குயில் யாரது
பெண் : கொஞ்சம் பாருங்க
பெண் குயில் நானுங்க

ஆண் : அடி நீதானா
அந்தக் குயில் யார்
வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள
காத்தாடி பறந்ததே
ஒலகமே மறந்ததே

பெண் : நான்தானே
அந்தக் குயில் தானாக
வந்தக் குயில் ஆத்தாடி
மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா........!

 

--- பூங்காற்று திரும்புமா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

ஆண் : பூங்கதவே தாள் திறவாய்

 

பெண் : நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்

ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

பெண் : பூங்கதவே தாள் திறவாய்

ஆண் : பூவாய் பெண் பாவாய்

 

ஆண் : திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்

பெண் : மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…....!

 

--- பூங்கதவே தாள் திறவாய் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

463393846_3787782898130344_6173917287769

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : அகரம் தமிழுக்கு சிகரம்
ஆக்கம் சேவைக்கு ஊக்கம்
ஆண் : இரக்கம் கருணைக்கு விளக்கம்
ஈகை நல்லவர் வழக்கம்

ஆண் : உயர்வை தருவது ஒழுக்கம்
அதை ஊரும் உலகும் மதிக்கும்

ஆண் : தவறுதல் மனிதனின் பழக்கம்
அதை உணர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்

ஆண் : நாணயம் நம்பிக்கை உழைப்பு
நம் நாளைய உலகத்தில் மதிப்பு
 

ஆண் : நாட்டையும் வீட்டையும் மதித்து
நாம் நடந்தால் உலகம் நமக்கு......!

 

--- அகரம் தமிழுக்கு சிகரம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்…ஹான்…தினம் ஆராதனை
ஹான்…ஹான்…அதில் சுகவேதனை

குழு : ஒஹ் ஹரே ராமா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

பெண் : யமுனா நதி கரையோரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
யமுனா நதி கரையோரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
குழு : பூக்கள் அங்கே வீசும் மனம்
காற்றில் வந்த காதல் ஜுரம்

பெண் : தேகம் எங்கும் தேனூருது
காமம் அவன் தேரோடுது
தேகம் எங்கும் தேனூருது
காமம் அவன் தேரோடுது
குழு : தீயில் மனம் நீராடுது
மீட்சி பெற போராடுது........!

--- ராத்திரி நேரத்து பூஜையில் ---

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.