Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ..........!


ஆண் :
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே

ஆண் : மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது

ஆண் : ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒலியோடு நடை போடும் நீரோடையும்
ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒலியோடு நடை போடும் நீரோடையும்
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது

ஆண் : செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா…....!

--- பொன்னென்ன பூவென்ன கண்ணே ---

  • Replies 5.9k
  • Views 328.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


ஆண் : ஹே, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா
மைக்-எ கையில் எடுக்கட்டுமா

ஆண் : ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன
ஆண் : சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமானு சொன்ன
ஆண் : சாம்ப்பைங்-எ என் காதுல கேம்ப்பைங் கேட்டுது
ஆண் : டேய் மப்புல அப்படி தன ட கேட்கும்
ஸ்டார்ட் தி மியூசிக்

ஆண் : இடி இடிச்சா என் குரல் தான்
வெடி வெடிச்சா என் பாய்சு தான்
குடி மக்கதான் நம்ம கூட்டணி
பார்ட்டி விட்டு தான் போகமாட்ட நீ

ஆண் மற்றும் குழு : சத்தம் பத்தாது விசில் போடு
குத்தம் பாக்காம விசில் போடு
ரத்தம் பாத்ததும் விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் போடு…
கோட் விசில் போடு
ஆட்டோ மேட்டிக் அ விசில் போடு
ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் அடி என்னோடு

ஆண் : கொண்டாத்தான் நீ பொறந்த
காரணத்த ஏன் மறந்த
மத்த கண்ணில் சந்தோஷத்த
பாக்க தானே கண் தொறந்த

ஆண் : எதிரி ஹார்ட் நீ ஸ்டீல் பண்ணிக்கோ
உன்மேல ஏன் கோவம் பீல் பன்னிக்கோ
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ
உன் லைப் ஆ அப்பப்ப டீல் பண்ணிக்கோ

ஆண் : அந்த வானம் தேயாது
இந்த பூமி மாயாது
ஹே, லாஸ்ட் சொட்டு உள்ள வர
நம்ம பார்ட்டி ஓயாது

ஆண் : தண்ணி இல்லா ஊருக்குள்ள
குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல
கண்ணக்கட்டும் கண்ணீருல
மயிலுங்கஆட்டத்த பார்பதில்ல

ஆண் : மைகேல் ஜாக்சனா மூன் வாக்கு
மார்லன் பிராண்டோ னா டான் வாக்கு
மாற்றம் வேணும்னா கோ வாக்
குழு : உங்க பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு .........!

--- விசில் போடு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

பெண் : வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற

பெண் : வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி

விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க

பெண் : அடடா நானும் மீனைப் போல
கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது ........!

--- மாலையில் யாரோ மனதோடு பேச ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

பெண் : சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

ஆண் : கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும் ஹோய்

பெண் : கட்டுமரத் தோணி போல
கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
ஓஒ…..ஓஒ……

பெண் : பட்டுடுக்க தேவையில்ல
முத்துமணி ஆசை இல்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ
ஓஒ…..ஓஒ……

ஆண் : பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும்
தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு
தூங்காத விருந்து

பெண் : நாளும் உண்டல்லோ
அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும்
பாடும் பாட்டல்லோ ஹோ

ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா
ஆ….ஆஅ…..ஆஅ…..

ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட
மாலையிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
ஆ….ஆஅ…..ஆஅ…..

பெண் : கடலோரம் காத்து
ஒரு கவி பாடும் பாத்து
தாளாம நூலானேன்
ஆளான நான்தான்
தோளோடு நான் சேர
ஊறாதோ தேன்தான்

ஆண் : தேகம் ரெண்டல்லோ
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று
கூடும் இன்றல்லோ

பெண் : கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும் .........!

--- அந்தியில வானம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ……

ஆண் : மனதோரம் ஒரு காயம்
உன்னை எண்ணாத நாள் இல்லையே
நானாக நானும் இல்லையே

ஆண் : வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய தோள் இல்லையே
உன் போல யாரும் இல்லையே

ஆண்கள் : தீரா நதி நீதானடி
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்
நீதானடி வானில் மதி
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்

ஆண் : பாதி கானகம்
அதில் காணாமல் போனவன்
ஒரு பாவை கால் தடம்
அதை தேடாமல் தேய்ந்தவன்

ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே
துணை இல்லா நான் அன்றிலே
நாளெல்லாம் போகும் ஆனால் நான்
ஆண்கள் : உயிர் இல்லாத உடலே…

ஆண் : தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி

ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில்
உன் மன்னிப்பை கூறுவேன்
கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம்
ஆண்கள் : பிழை எல்லாமே கலைவேன்

ஆண் : நகராத கடிகாரம்
அது போல் நானும் நின்றிருந்தேன்
நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
அழகான அரிதாரம்
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா

ஆண்கள் : நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்.......!

--- முதலும் நீ முடிவும் நீ ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!


ஆண் : திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி
குனிந்திருப்பாளாம்
ஒரு கூடை நிறைய பூவை தலையில்
சுமந்திருப்பாளாம்

ஆண் : சேர நாட்டு யானை தந்தம்
போலிருப்பாளாம்
நல்ல சீரக சம்பா அரிசி போல
சிரிச்சிருப்பாளாம்
சிரிச்சிருப்பாளாம்………

ஆண் : செம்பருத்தி பூவை போல
செவந்திருப்பாளாம்
நைசு சிலுக்கு துணியை போல
காற்றில் அசைந்திருப்பாளாம்

ஆண் : செப்பு சிலை போல உருண்டு
திறந்திருப்பாளாம்
நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல்
கனிந்திருப்பாளாம்

ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார்
கூறடியம்மா
அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான்
யாரடியம்மா

ஆண் : மாலை சூடும் மணமகளும்
நீதான்டியம்மா
இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா
பாரடியம்மா………..!

--- திருமணமாம் திருமணமாம் ---

  • கருத்துக்கள உறவுகள்

481910194_950114093960544_36846556869675

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நண்பர்களே..!

எல்லோரும் எப்படியுள்ளீர்கள்? சுகமா?

நீண்ட இடவெளியாகிப் போச்சுது..

61038776_1385886328230601_67679723092747

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......!

19 hours ago, ராசவன்னியன் said:

யாழ் நண்பர்களே..!

எல்லோரும் எப்படியுள்ளீர்கள்? சுகமா?

நீண்ட இடவெளியாகிப் போச்சுது..

61038776_1385886328230601_67679723092747

நண்பரே, நீங்கள் இங்கு நலமே , நாங்கள் அங்கு நலமா ........! 😂

பெண் : அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா
அலே அலே

பெண் : இந்திய பொண்ணு
தாங்கோ இத்தாலி கண்ணு
தாங்கோ நான் ஒரு மின்னல்
தாங்கோ தில் இருந்தா
வாங்கோ

பெண் : ஹே மேனியே
மேக்னட் தாங்கோ
வார்த்தையே சாக்லேட்
தாங்கோ நான் ஒரு
மின்சாரங்கோ தள்ளி
நின்னுகோங்கோ

பெண் : ரெட் ஒயின் பாட்டில்
நான் காஷ்மீர் ஆப்பிள் நான்
கோல்டன் ஏஞ்சல் நானே

பெண் : ஹா ஆடலாம்
டங்கோ டங்கோ அடிக்கலாம்
போங்கோ கோங்கோ வாழ்க்கையே
ஷார்டோ லாங்கோ வாழ்ந்து
பார்ப்போம் வாங்கோ

பெண் : பாடலாம் சாங்கோ
சாங்கோ உதடுகள் வீங்கோ
வீங்கோ வாழ்ந்தது ரைட்டோ
ராங்கோ வாழ்வோம் இனிமே
வாங்கோ

பெண் : ஓசோன் தாண்டி
நம் ஓசை போகட்டும்
வானம் கை தட்டுமே

பெண் : ஆசைகள் ஒன்னோ
ரெண்டோ அடங்கிடும் மனசும்
உண்டோ நம் விழி ரெண்டும்
விண்டோ மூடி வைப்பதேனோ

பெண் : ஓஹோ ஹோ
வானவில் பென்டு என்றோ
பிறை நிலா வென்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ

பெண் : நேற்று போயாச்சு
நாளை புதிராச்சு இன்றே
நிலையானது ...........!

--- அலேக்ரா அலேக்ரா ---

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி திரு.சுவி..

எப்படி சுகங்கள்..?

பேரப்பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்திருங்கள்..

(விருப்பப் புள்ளி ஒன்றுதான் இடமுடியுமென எனக்கு மறுக்கிறது, யாழ் களம்.)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!


ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

ஆண் : காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனி தனி
காதலின் பொன் சங்கிலி
இணைத்தது கண்மணி

ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின்
எந்த துளி மழைத் துளி
காதலில் அது போல நான்
கலந்திட்டேன் காதலி

ஆண் : திருமகள் திருப்பாதம்
பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப் பாடல்
படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

பெண் : சீதையின் காதல் அன்று
விழி வழி நுழைந்தது
கோதையின் காதல் இன்று
செவி வழி புகுந்தது

பெண் : என்னவோ என் நெஞ்சிலே
இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி
தமிழ் மெல்ல நுழைந்தது

பெண் : இசை வந்த திசை பார்த்து
மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து
உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி…

பெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி

ஆண் : அழகியே உனை போலவே
அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச் சொன்னேன்
அவிழ்ந்தது முல்லையே

ஆண் : கார்த்திகை மாதம் போனால்
கடும் மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல்
கவிதைகள் இல்லையே

ஆண் : நீயென்ன நிலவோடு
பிறந்தவளா…
பூவுக்குள் கருவாகி
வளர்ந்தவளா…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி….....!

--- அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......!

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பாா்த்தால் பாா்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

ஆண் : செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே

ஆண் : தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே
ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பாா்வை ஆளை தூக்கும்
கன்னம் பாா்த்தால்
முத்தங்களால் தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டு பாா்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்

ஆண் : அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்துவிட்டாளே

ஆண் : சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் தோள்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும்போதே
கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
கனவில் கூச்சல் போட்டாள்

ஆண் : அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளிடம் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா........!

--- துளி துளி துளி மழையாய் வந்தாளே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன

ஆண் : பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன

ஆண் : அந்த இள வயதில்
ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம்
யார் அழித்தார்

பெண் : நந்தவன கரையில்
நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற் பூவை
யார் பறித்தார்

ஆண் : காதலர் தீண்டாத
பூக்களில் தேனில்லை
பெண் : இடைவெளி தாண்டாதே
என் வசம் நானில்லை

ஆண் : பார்வைகள் புதிது
ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன

ஆண் : பனிதனில் குளித்த
பால்மலர் காண
இருபது வசந்தங்கள்
விழி வளர்த்தேன்

பெண் : பசித்தவன் அமுதம்
பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள்
இதழ் வளர்த்தேன்

ஆண் : இலை மூடும் மலராக
இதயத்தை மறைக்காதே
பெண் : மலர் கொல்லும் காற்றாக
இதயத்தை உலுக்காதே

பெண் : தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

ஆண் : பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன........!

--- தொட தொட மலர்ந்ததென்ன ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

பெண் : பார்த்த முதல்
நாளே உன்னைப் பார்த்த
முதல் நாளே காட்சிப் பிழை
போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை
போலே ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய் கடலாய் மாறி
பின் எனை இழுத்தாய் என் பதாகை
தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே

ஆண் : காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே உன் விழியில்
வழியும் பிரியங்களை பார்த்தேன்
கடந்தேன் பகல் இரவை உன் அலாதி
அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழை ஆனேன்

பெண் : காலை எழுந்ததும்
என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண்
பார்க்கும் கடைசி காட்சிக்குள்
நிற்பதும் உன்முகமே

ஆண் : என்னைப் பற்றி
எனக்கே தெரியாத பலவும்
நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல்
உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும்
என்று தவிப்பேன்

பெண் : போகின்றேன் என
நீ பல நூறு முறைகள் விடை
பெற்றும் போகாமல் இருப்பாய்
சரியென்று சரியென்று உனைப்
போகச் சொல்லி
{ கதவோரம் நானும்
நிற்க சிரிப்பாய் } (2)

ஆண் : உன் அலாதி
அன்பினில் நனைந்த
பின் நனைந்த பின்
நானும் மழை ஆனேன்

ஆண் : உன்னைமறந்து நீ
தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக் கண்டு
ரசித்தேன் தூக்கம் மறந்து
நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்

பெண் : யாரும் மானிடரே
இல்லாத இடத்தில் சிறுவீடு
கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற
வாழ்வை மரம் தோறும் செதுக்கிட
வேண்டும்

ஆண் : கண் பார்த்து
கதைக்க முடியாமல்
நானும் தவிக்கின்ற
ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்க்கும்
{ சலிக்காத ஒரு பெண்ணும்
நீ தான் } (2) ........!

--- பார்த்த முதல் நாளே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......!


பெண் :
சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் சுட்டீக
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக
காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

ஆண் : சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விழியால் சுட்டீக
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக
என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

பெண் : பொம்பள உசுரு
போக போக நோக
இந்திரன் மகனே
இன்ப தொல்ல வாழ்க

ஆண் : அடி காதல் தேர்தலில்
கட்டில் சின்னத்தில்
வெற்றி பெற்று நீ வாழ்க

ஆண் : என் காது கடிக்கும்
காது கடிக்கும் பல்லுக்கு
காயம் கொடுக்கும்
காயம் கொடுக்கும் வளவிக்கு
மார்பு மிதிக்கும்
மார்பு மிதிக்கும் காலுக்கு
முத்தம் தருவேன்

பெண் : என் உசுர குடிக்கும்
உசுர குடிக்கும் உதட்டுக்கு
மனசை கெடுக்கும்
மனசை கெடுக்கும் கண்ணுக்கு
கன்னம் கீறும்
கன்னம் கீறும் நகத்துக்கு
முத்தம் இடுவேன்

ஆண் : அடி தும்மும் பொழுதிலும்
இம்மி அளவிலும் பிரியாதீக
பெண் : உம்ம தேவை தீர்ந்ததும்
போர்வை போர்த்தியே உறங்காதீக

ஆண் : இனி கண் தூங்கலாம்
கைகள் தூங்காதுக
பெண் : ஒரு தாலிக்கு முன்னால
தாலாட்டு வைக்காதீக

பெண் : நான் தழுவும்போது
தழுவும்போது நழுவுறேன்
தயிருபோல தயிருபோல
ஒரையிறேன்
கயிறு மேல கயிறு போட்டு
ஹையோ கடையிறீக

ஆண் : நான் மயங்கி மயங்கி
மயங்கி மயங்கி கெரங்கவும்
மயக்கம் தெளிஞ்சு
மயக்கம் தெளிஞ்சு எழும்பவும்
ஒத்தை பூவில் நெத்தி பொட்டில்
ஹையோ அடிக்கிரீக

பெண் : உச்சி வெயிலில
குச்சி ஐஸ போல் உருகாதீக
ஆண் : தண்ணி பந்தலே
தாகம் எடுக்கையில் எரியாதீக

பெண் : எல்லை தாண்டாதிக
என்னை தூண்டாதிக
ஆண் : என் வாயோடு வாய் வெக்க
வக்கீலு வெக்காதீக .......!

--- சுத்தி சுத்தி வந்தீக ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ............!



பெண் : மலா்களே
மலா்களே இது என்ன
கனவா மலைகளே
மலைகளே இது என்ன
நினைவா உருகியதே
எனதுள்ளம் பெருகியதே
விழிவெள்ளம் விண்ணோடும்
நீதான் மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா………

பெண் : மேகம் திறந்து
கொண்டு மண்ணில்
இறங்கி வந்து மாா்பில்
ஒளிந்து கொள்ள வா வா…..

ஆண் : மாா்பில் ஒளிந்து
கொண்டால் மாறன் அம்பு
வரும் கூந்தலில் ஒளிந்து
கொள்ள வரவா

பெண் : என் கூந்தல்
தேவன் தூங்கும் பள்ளி
அறையா அறையா மலா்
சூடும் வயதில் என்னை
மறந்து போவதுதான் முறையா

ஆண் : நினைக்காத
நேரமில்லை காதல்
ரதியே ரதியே உன்
பேரை சொன்னால்
போதும் நின்று வழி
விடும் காதல் நதியே

பெண் : என் சுவாசம்
உன் மூச்சில் உன்
வாா்த்தை என் பேச்சில்

ஆண் : ஐந்தாறு நூற்றாண்டு
வாழ்வோம் என் வாழ்வே வா

ஆண் : பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்

பெண் : நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

ஆண் : வாழ்வோடு
வளா்பிறைதானே
வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே
இளைந்து கொண்டது இந்த
உறவே

பெண் : உறங்காத நேரம்
கூட உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல
உறைந்து போனதுதான் உறவே

ஆண் : மறக்காது உன்
ராகம் மாிக்காது என் தேகம்

பெண் : உனக்காக
உயிா் வாழ்வேன்
வா என் வாழ்வே வா .........!

--- மலா்களே மலா்களே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு உயிரே
உயிரே என்னை உன்னோடு
கலந்துவிடு நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு
கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்துவிடு

ஆண் : என் சுவாசக் காற்று
வரும்பாதை பாா்த்து
உயிா்தாங்கி நானிருப்பேன்
மலா்கொண்ட பெண்மை வாராமல்
போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிா் போகும் போனாலும்
துயாில்லை கண்ணே அதற்காகவா
பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது
பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான்
வாடினேன் முதலா முடிவா அதை உன்
கையில் கொடுத்துவிட்டேன்

பெண் : உயிரே உயிரே இன்று
உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என்
வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன்
நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன்
கண்ணோடு கறைந்துவிட்டேன்

ஆண் : காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்துவிடு காலம்
தடுத்தால் என்னை மண்ணோடு
கலந்துவிடு உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு நினைவே
நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

பெண் : ஓா் பாா்வை பாா்த்தே
உயிா்தந்த பெண்மை வாராமல்
போய்விடுமா ஒரு கண்ணில்
கொஞ்சம் வலிவந்த போது மறு
கண்ணும் தூங்கிடுமா நான்
கரும்பாறை பலதாண்டி வேராக
வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக
வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

பெண் : மழைபோல் மழைபோல்
வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம்போல் மனம்போல் உந்தன்
ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே
உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு
நிறைந்துவிட்டேன்..........!

--- உயிரே உயிரே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .........!

ஆண் : ஆஆஆ ஆஆஆ
ஹ்ம்ம் ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா ஏழை
காதல் வாழுமோ இருளும்
ஒளியும் சேருமோ நீயோர்
ஓரம் நான் ஓர் ஓரம் கானல்
நீரால் தாகம் தீராது

பெண் : இணைந்திடாது
போவதோ வானம் பூமி
ஆவதோ காலம் சிறிது
காதல் மனது தேவன்
நீதான் போனால் விடாது

ஆண் : தேடும் கண்களே
தேம்பும் நெஞ்சமே வீடும்
பொய்யடி வாழ்வும்
பொய்யடி

பெண் : அன்பு கொண்ட
கண்களும் ஆசை கொண்ட
நெஞ்சமும் ஆணையிட்டு
மாறுமோ பெண்மை தாங்குமோ

ஆண் : ராஜ மங்கை
கண்களே என்றும்
என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர்
பாவி அல்லவோ

பெண் : எதனாலும் ஒரு
நாளும் மறையாது
பிரேமையும்
ஆண் : எரித்தாலும்
மரித்தாலும் விலகாத
பாசமோ

பெண் : கன்னி மானும்
உன்னுடன் கலந்ததென்ன
பாவமோ காதல் என்ன
காற்றிலே குலைந்து
போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ
ஓ நீ வா வா

பெண் : காளிதாசன் ஏடுகள்
கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது
பாவம் அல்லவே

ஆண் : ஷாஜகானின்
காதலி தாஜ்மஹால்
பூங்கிளி பாசம் வைத்த
பாவம்தான் சாவும் வந்தது

பெண் : இறந்தாலே இறவாது
விளைகின்ற பிரேமையே
ஆண் : அடி நீயே பலியாக
வருகின்ற பெண்மையே

பெண் : விழியில் பூக்கும்
நேசமாய் புனிதமான
பந்தமாய் பேசும் இந்த
பாசமே இன்று வெற்றி
கொள்ளுமே இளங்கன்னி
உன்னுடன் கூட வா வா

ஆண் : ஏக்கம் என்ன
பைங்கிளி என்னை
வந்து சேரடி
பெண் : நெஞ்சிரண்டு
நாளும் பாட காவல்
தாண்டி பூவை இங்காட

பெண் : காதல் கீர்த்தனம்
காணும் மங்களம்
பிரேமை நாடகம்
பெண்மை ஆடிடும் ........!

--- ஓ பிரியா பிரியா ---

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,

அடுத்த வேளை உணவை அயல் வீட்டுக்காரர் கொண்டுவந்திருப்பார், இல்லை என்றால் ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,

பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..

வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...

படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,..

சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,..

ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார்.

மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்..

இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர்,

தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்..

கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்..

அடுத்து வரும் நாட்களில்

நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,..

உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும்,

ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு,

உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும்.

இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர்,

ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார்,

அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர்,

அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்,

ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும்,

மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும், ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும்,

திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும்,

வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்..

நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்,

இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.

கண்மூடித் திறக்கும் நொடியில்

வருடங்கள் பல ஓடியிருக்கும்,

உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்,

உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய், அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்..

மறு பிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்..

மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி, பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும்,

இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்..?

உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்த போவதும் இல்லை.

வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள்.......

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!

ஆண் : { நீல குயிலே
சோலை குயிலே பாடி
பறக்கும் என் பாட்டு
குயிலே } (2)

பெண் : பாடி பார்க்கலாம்
புது தேவாரம் பாடும்
பாட்டிலே நீ ஆதாரம்

பெண் : பாடும் சங்கீதம்
கண்ணே உன் மொழி
பாடாது போனால்
வாழாது ஜீவன்

பெண் : பாசம் அன்போடு
கண்டேன் உன் விழி பாராது
போனால் தாளாது நெஞ்சம்

பெண் : தாய் போல
நானும் தாலாட்டு
பாட தாளாமல் நீயும்
கண் மூட

ஆண் : தாராததெல்லாம்
தந்தாக வேண்டும் என்
அன்னை இப்போது நீ
தானம்மா

ஆண் : பூபாளம் பாடும்
என் பூந்தென்றலே இள
நெஞ்சை தூண்டும் இசை
பாட வேண்டும்

பெண் : தேடாமல் தேடும்
பொன் மீன் கண்களே திரை
போட்டதின்று திசை பார்த்து
நின்று

ஆண் : பொன் அள்ளி
தூவும் பொன் மாலை
நேரம் கண்ணே நம்
காதல் கல்யாணமே

பெண் : மாலை வந்தாலே
மார் மீதில் ஆடும் மாறாது
ஆறாது நம் காதல்
தேரோட்டம்

ஆண் : பாடி பார்க்கலாம்
புது தேவாரம் பாடும்
பாட்டிலே நீ ஆதாரம் ..........!

--- நீலக் குயிலே சோலைக் குயிலே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ...........!

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்

ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ
சோகமது நீங்காதோ .......!

--- வைகைக் கரை காற்றே நில்லு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ............!

ஆண் : அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்

பெண் : சந்திரரே வாரும்
சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

ஆண் : கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும் ஹோய்

பெண் : கட்டுமரத் தோணி போல
கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
ஓஒ…..ஓஒ……

பெண் : பட்டுடுக்க தேவையில்ல
முத்துமணி ஆசை இல்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ
ஓஒ…..ஓஒ……

ஆண் : பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும்
தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு
தூங்காத விருந்து

பெண் : நாளும் உண்டல்லோ
அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும்
பாடும் பாட்டல்லோ ஹோ

ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா
ஆ….ஆஅ…..ஆஅ…..

ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட
மாலையிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
ஆ….ஆஅ…..ஆஅ…..

பெண் : கடலோரம் காத்து
ஒரு கவி பாடும் பாத்து
தாளாம நூலானேன்
ஆளான நான்தான்
தோளோடு நான் சேர
ஊறாதோ தேன்தான்

ஆண் : தேகம் ரெண்டல்லோ
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று
கூடும் இன்றல்லோ

பெண் : கூடும் காவிரி
இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்சத் துடிக்கும் ........!

--- அந்தியில வானம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .........!

ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
என் தெய்வம் தந்த என்
தெய்வம் தந்த என் தங்கை

ஆண் : செம்மண்ணிலே
தண்ணீரை போல் உண்டான
சொந்தம் இது சிந்தாமணி
ஜோதியை போல் ஒன்றான
பந்தம் இது

ஆண் : தங்கை அல்ல
தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட
பொருள் ஆனாள்

ஆண் : கண்ணீரினால்
நீராட்டினால் என் ஆசை
தீராதம்மா முன்னூறு நாள்
தாலாட்டினால் என் பாசம்
போகாதம்மா

ஆண் : என் ஆலயம்
பொன் கோபுரம் ஏழேழு
ஜென்மங்கள் ஆனாலும்
மாறாதம்மா

ஆண் : ராஜாவை நான்
ராஜாத்திக்கு துணையாக
பார்ப்பேனம்மா தேவர்களின்
பல்லாக்கிலே ஊர்கோலம்
வைப்பேனம்மா

ஆண் : மணமங்கலம்
திருக்குங்குமம் வாழ்க
என்று பல்லாண்டு நான்
பாடுவேன் .........!

--- ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ...........!

ஆண் : நதியோரம் ம்ம்ம்ம்….
நதியோரம் நீயும் ஒரு
நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல…
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்…

பெண் : வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை
மூடுவதென்ன

பெண் : முகில்தானோ துகில்தானோ
முகில்தானோ துகில்தானோ

பெண் : சந்தனக்காடிருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா
நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல

ஆண் : தேயிலைத் தோட்டம்
நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன
நெஞ்சை அள்ளுவதென்ன

ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே
பனி தூங்கும் பசும்புல்லே

ஆண் : மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல

ஆண் : நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல…
பெண் : நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல .........!

--- நதியோரம் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.