Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

பெண் : இது சங்கீத
திருநாளோ புது சந்தோஷம்
வரும் நாளோ ரதி நம் வீட்டில்
பிறந்தாளோ சிறு பூவாக
மலர்ந்தாளோ

பெண் : சின்ன சின்ன
அசைவில் சித்திரங்கள்
வரைந்தாள் முத்த மழை
கன்னம் விழ நனைந்தாளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு
நடை நடந்தாளே

பெண் : கைகளில் பொம்மைகள்
கொண்டு ஆடுவாள் கண்களை
பின்புறம் வந்து மூடுவாள்
செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்

பெண் : தோள்களில்
கண்களை மெல்ல மூடுவாள்
உறங்கும் பொழுதும் என்னை
தேடுவாள் அங்கும் இங்கும்
துள்ளி ஓடுவாள்

பெண் : பூவெல்லாம் இவள்
போல அழகில்லை பூங்காற்று
இவள் போல சுகமில்லை இது
போல சொந்தங்கள் இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள் தானே நம் தேவதை

பெண் : நடக்கும் நடையில்
ஒரு தேர்வண்ணம் சிரிக்கும்
அழகில் ஒரு கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்

பெண் : மனதில் வரைந்து
வைத்த ஓவியம் நினைவில்
நனைந்து நிற்கும் பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்

பெண் : இவள் போகும்
வழியெங்கும் பூவாவேன்
இரு பக்கம் காக்கின்ற கரையாவேன்

பெண் : இவளாடும்
பொன்னூஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற
தாயாவேன் எப்போதும் தாலாட்டுவேன்......!

--- இது சங்கீத திருநாளோ ---

  • Replies 5.9k
  • Views 341k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : { போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு } (2)

பெண் : இது போல ஒரு நாளே வர வேணாம் இனி மேலே
நொடி கூட எட்டி இருக்காத
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத

ஆண் : போன உசுரு வந்துருச்சு
உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு
இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும்
உன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே

பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல
துணை யாரு நமக்கு வெள்ளத்துல

ஆண் : உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது

பெண் : நடந்தாலே அது சுகம் தானே

ஆண் : துணையாக நானும் வருவேனே

பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே

ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே

பெண் : ஆடி அடங்கும் பூமியில
நாம வாடி வதங்க தேவையில்லை

ஆண் : ஒருவாட்டி வரும் வாழ்க்கை
துணிவோமே அதை ஏற்க

பெண் : சிாிப்போமே நந்தவனம் போல
அது போதும் இந்த உயிா் வாழ

ஆண் : போகும் வர இந்தக் காதல்
நம்ம காக்குமுன்னு நினைச்சா
விலகும் வேதனை

பெண் : போகையிலும் நாம ஒத்துமையா
போகப் போறோம்
இதுதான் பொிய சாதனை ......!

 

--- போன உசுரு வந்துருச்சு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

பெண் : மச்சான் எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்து தல பாம்பா வந்து
முத்தம் தர போற

பெண் : நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும் தான்
உன்ன நான் சந்தித்தேன்

பத்தமடை பாயில்
வந்து சொக்கி விழ போற

பெண் : வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்
சோலி தேடி போன காணாத தூரம்
கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்


பெண் : தூரமா போனது துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்

பெண் : அங்கு நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ
போதும் போதும் சொல்லாமல்
வந்து சேரும்

உத்தரத்த பாத்தே நானும் விக்கி விட போறேன்

பெண் : அட எத்தன நாள் ஏக்கமிது
பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே
துணி காயுதே

பெண் : கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்
சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்
சொல்லிக்காம வந்து என்ன சொக்க விட போற.......!

 

---மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : நெருப்பு கூத்தடிக்குது
காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

பெண் : ஹே உறக்கம் என்ன கூத்து கட்டு
ஒத்தையில கூத்து கட்டு
உழைச்சதெல்லாம் போதுமடா
விடிய விடிய கூத்து கட்டு

ஆண் : இன்னைக்கு முடிஞ்சி போச்சு
எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா
ரௌண்டா கூத்து கட்டு

ஆண் : துன்பம் இந்த துன்பம்
இது மனிதரோடு பிறந்தது
உன் கையில் ரேகை போல
அழியாமல் கூட வருவது
இதை எண்ணி சோகம் என்றால்
அட நாமும் என்று சிரிப்பது
இது என்றும் முடியாது
நம் கடைசி மூச்சில் கலந்தது

பெண் : மரம் செடிக் கொடியும் கூட
புயலில் வளைஞ்சு கிடக்குது
மறுபடி தலை தூக்கி
துன்பம் மறந்து சிரிக்குது
அட ஏறுங்க வானத்துல ஏறுங்க
நல்லா தேடுங்க
நட்சத்திரம் தேடுங்க ஓஓ…..

பெண் : இன்னைக்கு முடிஞ்சி போச்சு
எடுத்து மூட்ட கட்டு
ராத்திரி இருக்குதடா
ரௌண்டா கூத்து கட்டு

ஆண் : உன் கண்ணில் ஈரம் கண்டேன்
என் மனதில் எங்கோ வலிக்குது
முகம் சாய விழி மூட
இந்த நண்பன் தோள்கள் இருக்குது
இந்த வானம் அது வந்து
உன்னுடன் புன்னகைக்கு கெஞ்சுது
அதற்காக அது விண்ணில்
அடி வேடிக்கைகள் காட்டுது

பெண் : சொத்து பத்து சேர்த்தவனும்
பொகையாதான் போகுறான்
சோகத்துல சிரிப்பு வந்தால்
சொகமாக வாழுறான்
வாழ்க்கையில் வரைமுறை ஏதடி
அட காத்ததான் கட்டி வச்சது யாரடி ......!

--- நெருப்பு கூத்தடிக்குது ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : உன் பேரை
சொல்லும் போதே உள்
நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே
உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லை என்றால் என்
ஆவேன் ஓ… நெருப்போடு
வெந்தே மண் ஆவேன்

ஆண் : நீ பேரழகில் போர்
நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே
பார்வையாலே கடத்தி சென்றாய்

பெண் : நான் பெண்ணாக
பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள்
நீயே தந்தாய்

ஆண் : என் உலகம்
தனிமை காடு நீ வந்தாய்
பூக்களோடு என்னை தொடரும்
கனவுகளோடு பெண்ணே பெண்ணே

பெண் : ஓ நீ பார்க்கும்
போதே மழை ஆவேன் ஓ…

ஆண் : உன் அன்பில்
கண்ணீர் துளி ஆவேன்

ஆண் : உன் கருங்கூந்தல்
குழலாகதான் எண்ணம்
தோன்றும் உன் காதோரம்
உரையாடிதான் ஜென்மம் தீரும்

பெண் : உன் மார்போடு
சாயும் அந்த மயக்கம்
போதும் என் மனதோடு
சேர்த்து வைத்த வலிகள் தீரும்

ஆண் : உன் காதல் ஒன்றை
தவிர என் கையில் ஒன்றும்
இல்லை அதை தாண்டி ஒன்றுமே
இல்லை பெண்ணே பெண்ணே .....!
 

--- உன் பேரை சொல்லும் போதே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த

பெண் : காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி

பெண் : {அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு} (2)

பெண் : உன் பேர தினம் கூவும்
குயிலா ஆனேன் நான்
நீ பாக்க புது மாரி
ஸ்டைலா ஆனேன் நான்

பெண் : பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா
ஆனேன் நான்
மனசார உன்னோட ஃபேனா
ஆனேன் நான்

பெண் : கொஞ்சம் பார்க்கணும்
கைகள் கோர்க்கணும்
ஜோடி சேர்ந்து லவ்வர்ஸாக
ஊர சுத்தணும்
பேண்டு வாசிச்சு
கிரேண்டா மேரேஜு
கெட்டி மேளம் எங்கும் கேக்கணும் .......!

 

--- ஒரு தல காதல தந்த ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க
முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம்
அடங்காது கொஞ்சம் கடிடா

பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க
என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்
பின்னிகொள்ளடா

பெண் : ஆசை வெடிக்க
அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க
உன் வேகம் அடக்க

ஆண் : பேபி யுவர் சோ
ஹாட் அண்ட் பைன் வோவ்
வோவ் ஐ கான்ட் வெய்ட்
டு மேக் யூ மைன்

குழு : காலமும் காலமும்
காலமும் செல்ல மடிந்திடுமோ
காலமும் செல்ல மடிந்திடுமோ

பெண் : வாடா என் கழுத்தை வளைத்து
அதில் முத்தத்தை நிரப்பி
ஒரு தேடல் செய்
ஆண் : வாடி என் தசையை இறுக்கி
அதில் ஆசை முறுக்கி
ஒரு கூடல் செய்

பெண் : அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருது அடி மனம்
பெண் : கதறுது கதறுது இளமையும்
உன் மோகம் கூப்பிடுதே

ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய்

ஆண் : செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
பெண் : தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை

ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை .......!

--- தீப்பிடிக்க தீப்பிடிக்க ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் உன்மேல்
நானும் நானும் புள்ள காதல்
வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் என் உசுருக்குள்ள
கூடு கட்டி காதல் வளர்த்தேன்

ஆண் : யே இதயத்தின்
உள்ள பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு
வளர்த்தேன் இன்று அதில்
பூவாய் நீயே தான் பூத்தவுடனே
காதல் வளர்த்தேன்

ஆண் : ஏ புள்ள புள்ள
உன்னை எங்க புடிச்சேன்
ஏ புள்ள புள்ள அதை கண்டு
புடிச்சேன் ஏ புள்ள புள்ள
உன்னை கண்ணில் புடிச்சேன்
ஏ புள்ள புள்ள உன்னை நெஞ்சில்
விதைச்சேன் ஏ புள்ள…

ஆண் : பூவின் முகவரி
காற்று அறியுமே என்னை
உன் மனம் அறியாதா பூட்டி
வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா

ஆண் : பல கோடி
பெண்கள் தான் பூமியிலே
வாழலாம் ஒரு பார்வையால்
மனதை பறித்து சென்றவள் நீயடி

ஆண் : உனக்கெனவே
காத்திருந்தாலே கால்
அடியில் வேர்களும்
முளைக்கும் காதலில்
வழியும் இன்பம் தானே 

ஆண் : தந்தை அன்பு
அது பிறக்கும் வரை
தாயின் அன்பு அது
வளரும் வரை தோழி
ஒருத்தி வந்து தரும்
அன்போ உயிரோடு
வாழும் வரை

ஆண் : உன்னை தவிர
இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே
ஓய்வெடுப்பேன் உனது
சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான்
உயிர்த்தெழுவேன்

ஆண் : உன் முகத்தை
பார்க்கவே என் விழிகள்
வாழுதே பிரியும் நேரத்தில்
பார்வை இழக்கிறேன் நானடி

ஆண் : உடல் பொருள்
ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன்
பெண்ணே உன் அருகில்
வாழ்ந்தால் போதும்
கண்ணே கண்ணே

ஆண் : உனது பேரெழுதி
பக்கத்துல எனது பேரை
நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாம
கொடை புடிச்சேன் மழை
விட்டும் நான் நனைஞ்சேன் .......!

--- காதல் வளர்த்தேன் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : அடி நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி
ஒன்னு நீயா திருந்து
இல்ல தாரேன் மருந்து
அடி உன்னைதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண் : கட்டு கட்டா புத்தகத்த
சுமக்கவில்ல நானடி
ஆனாலும்தான் கெட்ட வழி
போனதில்ல நானடி
வெள்ள மனம் பிள்ள குணம்
உள்ள ஆளு நானடி
என்ன பத்தி ஊருக்குள்ளே
நீயும் கொஞ்சம் கேளடி

ஆண் : படிப்பு ஒன்னே வாழ்க்கையா
பாசம் அன்பு இல்லையா
படிப்பில்லாமல் வாழ்க்கையில்
உயர்ந்த மேதை இல்லையா

ஆண் : உன்னை கண் போலதான்
வச்சி காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண் : ஊருக்குள்ளே நூறு பொண்ணு
என் நெனப்பில் ஏங்குது
அத்தனையும் தள்ளி வச்சு
உன் நெனப்பில் ஏங்குறேன்
காசு பணம் சீர்வரிசை
கேட்கவில்ல நானடி
ஆசைபட்ட பாவத்துக்கு
அல்லி தர்பார் ஏனடி

ஆண் : மயக்கம் என்ன பூங்கொடி
மாமன் தோள சேரடி
நடந்ததெல்லாம் கனவென
மறந்து மாலை சூடலாம்

ஆண் : உன்ன கண் போலதான்
வச்சு காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன் .......!

--- நான் புடிச்ச கிளியே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண் : வளர் கூந்தலின் மணம் சுகம்
இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில்
புது ராகம் பாடவா

பெண் : மடி கொண்ட தேனை மனம் கொள்ள
வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல்
களிக்கின்ற கலைஞன் எங்கே

ஆண் : கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாடவா

பெண் : உனக்காகவே கனிந்தது
மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது
கலைக் கோயில் மல்லிகை

ஆண் : இனிக்கின்ற காலம் தொடராதோ
இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ
இனியெந்தன் வாழ்வும் உனது

பெண் : தொடர்கவே வளர்கவே
இது ஒரு காவியம்.......!

--- ஒரு வானவில் போலே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

 

 

ஆண் : மானூத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே

குழு : தாய்மாமன் சீர்
சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு
கொண்டு தாராண்டி

குழு : சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே

ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு
நாக்கு சொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா

குழு : மேலு காலு வலிச்சா
வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா

ஆண் : பச்ச ஒடம்புக்காரி
பாத்து நடக்கச்சொல்லுங்க
குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத்
தூக்கிக் கொடுக்கச்சொல்லு

ஆண் : மச்சான திண்ணையில
போத்திப் படுக்கச்சொல்லு

ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா
அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா
ஏப்பம் வந்து சேருமுன்னு
குழு : காராம்பசு ஓட்டி
வாராண்டி தாய் மாமன்

ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா
வெலக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி
தாராண்டி தாய் மாமன்

குழு : பச்ச ஒடம்புக்காரி
பாத்து நடக்கச்சொல்லுங்க
ஆண் : ஈ எறும்பு அண்டாம
எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி
கட்டி இருக்கச்சொல்லு..ஹா..ஹா.......!

--- மானூத்து மந்தையில ---

(எனது அறிவு குறைந்ததற்கு  நான் சின்னனில நிறைய ஆட்டுப்பால் குடிச்சதும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று இப்ப தெரியுது).

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : அம்மா அம்மா… எந்தன் ஆருயிரே….
கண்ணின் மணியே… தெய்வம் நீயே…
 

ஆண் : பூவிழி ஓரம் ஓர் துளி நீரும்
நீ வடித்தால் மனம் தாங்காது

ஆண் : பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும்
நான் துடிப்பேன் வலி தாளாது

ஆண் : பத்து மாசம் சுமந்து
பட்ட பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க
அள்ளிக்கையில் எடுத்த
தாயும் நீயே…
தவமிருந்தாயே…
வாடுதம்மா பிள்ளையே…….
வாட்டுவதோ.. என்னை நீ..யே.

ஆண் : பாதைகள் மாறி ஓடிய கன்றை
தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா

ஆண் : கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால்
தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா

ஆண் : நல்ல காலம் பிறக்க
உன்னை நானும் அறிந்தேன்
உந்தன் கண்கள் திறக்க
இங்கு பாடல் படித்தேன்

ஆண் : போதும் போதும்… பிரிந்தது போதும்….
வாடுதம்மா பிள்ளையே…

வாட்டுவதோ என்னை நீ..யே…....!

 

--- அம்மா அம்மா… எந்தன் ஆருயிரே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : { ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன் } (3)

ஆண் : பூக்களில் உன்னால்
சத்தம் அடி மௌனத்தில்
உன்னால் யுத்தம் இதைத்
தாங்குமா என் நெஞ்சம்….
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

ஆண் : உண்மையும் பொய்மையும்
பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்
பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும்
ஒன்றுதான்

ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும்
கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்

ஆண் : இரவினைத் திரட்டி
ஓ… ஆ… இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள்
செய்தாரோ…..

ஆண் : விண்மீன் விண்மீன்
கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கைரேகை செய்தானோ….

ஆண் : வாடைக் காற்று
பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்
தோள் செய்தானோ ஆனால்
பெண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ .......!

--- ஒரு பொய்யாவது சொல் கண்ணே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : கையளவு
நெஞ்சத்தில கடல்அளவு
ஆச மச்சான் அளவு ஏதும்
இல்ல அதுதான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல
சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்

பெண் : சொய் சொய்
சொய் சொய்

பெண் : வானளவு விட்டத்துல்ல
வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை
அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும்
வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

பெண் : ஏடலவு எண்ணத்துல
எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அதுதான்
ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு
நன்மை செஞ்சாலே அதுவே
போதும் மச்சான்

பெண் : நாடளவு கஷ்டத்துல
நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோடே இல்ல அதுதான்
நேசம் மச்சான் நாம மாண்டு
போனாலும் தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்

பெண் : சொய் சொய்
சொய் சொய்......!

--- கையளவு நெஞ்சத்தில ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : ஒத்தையடி
பாதையிலே ஒத்தையிலே
போறவளே கரடி வந்து வழி
மறைச்சா காட்டுக்குள்ளே
என்ன செய்வ

பெண் : சிக்கி முக்கி கல்
எடுத்து சீக்கிரமா பத்த
வெச்சு நெருப்பேத்தி
வெறுப்பேத்தி கரடியை
சுட்டு தப்பி போவேன்

பெண் : பாட்டிமா சொல்லும்
பாடம் பாதியில் மறந்தே
போகும் வாழ்க்கையின்
பாடம் மட்டும் மறக்காதே

பெண் : சதுரமாய் முட்டை
இல்லை சந்தோஷமே
வாழ்க்கை இல்லை
துன்பத்திலும் ஞானம் உண்டு
மறக்காதே தைரியமே நம்
சொத்து மத்ததெல்லாம் பம்
மாத்து பயணம் போ பயணம்
போ பள்ளம் மேடு ரெண்டும்
பார்த்து ஓஹோ ஓயே

பெண் : அரைஅடி நீளம்
நாக்கு ஆறடி ஆளை
கொல்லும் ஆணவம்
கொண்டு வீணாய் ஏசாதே

பெண் : எழுத்தறிவோ இல்லை
போதும் அனுபவமே சோறு
போடும் தங்கத்த சுமந்தாலும்
பெட்ரோலில் தான் வண்டி
ஓடும் ம்ம்ம்.......!

--- ஒத்தையடி பாதையிலே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : { சாமிகிட்ட
சொல்லிப்புட்டேன்
உன்ன நெஞ்சில்
வச்சி கிட்டேன்

ஒத்தயா நீ நானும்
பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பாா்த்துக்கவே
முடியலன்னு கனவுக்குள்ளே
பாா்த்துக்கிட்டோம் } (3)

பெண் : ஒரு கோடி
புள்ளி வச்ச நான்
போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்ன
அழிச்சிருச்சு காலம் காலம்
இன்னொரு ஜென்மம் நான்
மறுபடி பொறந்து வந்து
உனக்காகக் காத்திருப்பேன்
அப்பவும் சேராமல் இருவரும்
பிரியனும்னா பொறக்காமல்
போயிடுவேன்

 

பெண் : தெப்பக் குளத்தில்
படிஞ்ச பாசி கல் எறிஞ்சா
கலையும் கலையும் நெஞ்சக்
குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும்
எரியும் நீ போன பாத மேல
சருக்காக கடந்த சுகமா
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரனமா
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே

ஆண் : மனசுக்குள்ள
பூட்டி மறச்ச அப்போ
எதுக்கு வெளியில சிரிச்ச
கனவுக்குள்ள ஓடி புடிச்ச
நெசத்துல தான் தயங்கி
நடிச்ச அடி போடி பயந்தாங்கோலி
எதுக்காக ஊமை ஜாடை நீ இருந்த
மனச அள்ளி எந்த தீயில் நானும்
போட உன்னை என்னை
கேட்டுக்கிட்டா காதல் நெஞ்ச
தட்டிச்சு .......!

--- சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!

ஆண் : போகாதே போகாதே
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிாிந்தால்
நான் இறப்பேன் உன்னோட வாழ்ந்த
காலங்கள் யாவும் கனவாய் என்னை
மூடுதடி யாா் என்று நீயும் என்னை
பாா்க்கும் போது உயிரே உயிா் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று
வைத்து உந்தன் முகம் பாா்ப்பேனடி

ஆண் : கலைந்தாலும் மேகம்
அது மீண்டும் மிதக்கும் அது
போல தானே உந்தன் காதல்
எனக்கும் நடைபாதை விளக்கா
காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை
அழிப்பதற்கு உனக்காக காத்திருப்பேன் ஓ….ஹோ
உயிரோடு பாா்த்திருப்பேன் ஓ….ஹோ

ஆண் : அழகான நேரம்
அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும்
நீதான் கொடுத்தாய் கண் தூங்கும்
நேரம் பாா்த்து கடவுள் வந்து போனது
போல் என் வாழ்வில் வந்தே ஆனாய்
ஏமாற்றம் தாங்கலையே பெண்ணை
நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே......!

--- போகாதே போகாதே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!

ஆண் : தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
தொட தொட
மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன

ஆண் : பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா
ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன

ஆண் : அந்த இள வயதில்
ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம்
யார் அழித்தார்

பெண் : நந்தவன கரையில்
நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற் பூவை
யார் பறித்தார்

ஆண் : காதலர் தீண்டாத
பூக்களில் தேனில்லை
பெண் : இடைவெளி தாண்டாதே
என் வசம் நானில்லை

ஆண் : பனிதனில் குளித்த
பால்மலர் காண
இருபது வசந்தங்கள்
விழி வளர்த்தேன்

பெண் : பசித்தவன் அமுதம்
பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள்
இதழ் வளர்த்தேன்

ஆண் : இலை மூடும் மலராக
இதயத்தை மறைக்காதே
பெண் : மலர் கொல்லும் காற்றாக
இதயத்தை உலுக்காதே....!

 

--- தொட தொட மலர்ந்ததென்ன ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா

பெண் : அவன் வாய்
குழலில் அழகாக ….
ஆஆஆ ஆஆஆ அமுதம்
ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து

பெண் : பசு அறியும் அந்த
சிசு அறியும் பாலை மறந்து
அந்த பாம்பறியும் பசு அறியும்
அந்த சிசு அறியும் பாலை மறந்து
அந்த பாம்பறியும்

குழு : வருந்தும் உயிர்க்கு
ஒரு மருந்தாகும் இசை
அருந்தும் முகம் மலரும்
அரும்பாகும் இசையின்
பயனே இறைவன் தானே

பெண் : ஆதார சுருதி
அந்த அன்னை என்றேன்
ஆண் : அதுகேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்

பெண் : சுதிலயங்கள் தன்னை
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
ஆண் : உறவாக அமைந்த
நல்ல இசை குடும்பம்

குழு : திறந்த கதவு என்றும்
மூடாது இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது இது போல்
இல்லம் எது சொல்லு தோழி .....!

 

--- காற்றில் வரும் கீதமே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு

ஆண் : { ஒரு மரம்
அது வேறாக பொழப்புது
போலிங்கு ஆனேனே
உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே
உன்னாலே பெண்ணே
பெண்ணே } (2)

பெண் : { முதல் முற
ஒரு பிழ ஏனோ மாறி
போனேன் நானும்
உன்னவிட பூமியில
எல்லாமுமே வீணோ வீணோ } (2)

ஆண் : காலம் இங்க
தீரும் வரை காக்க
வச்சு போற ஆசை
அத தந்துப்புட்டு
ஏனோ தள்ளிப் போற
பெண் : கொல்லாம
கொல்லாம என்னக் கொல்லாத

ஆண் : { உலுக்குற உரியுற
தெனம் தெனம் பாக்கும்
போதே எனக்குள்ள
பொதையுற கேள்வி
ஏதும் கேட்காமலே } (2)

பெண் : ஆகாசமா
ஆச கூடும் உன் கூட
தான் சேர்ந்தா
வானவில்லா
வாழ்க்கை மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா

ஆண் : பெண்ணே
நீ இல்லாம ஜென்மம் தீரவில்ல.......!

--- நீ போகாத என்ன விட்டு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும்
முடியலாம் முடிவிலும்
ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

ஆண் : உன் நெஞ்சிலே
பாரம் உனக்காகவே
நானும் சுமைதாங்கியாய்
தாங்குவேன்

ஆண் : உன் கண்களின்
ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான்
மாற்றுவேன்

வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது
அழகிலே நானும்
இணையலாம்

ஆண் : வாழ்வென்பதோ
கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்

ஆண் : நீ கண்டதோ
துன்பம் இனி வாழ்வெல்லாம்
இன்பம் சுக ராகமே
ஆரம்பம்

ஆண் : நதியிலே புது
புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று
இணைந்தது இன்பம் பிறந்தது.........!

--- உறவுகள் தொடர்கதை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : உள்ளங்கள் பலவிதம் எண்ணங்கள் ஆயிரம்
உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்

ஆண் : மலையில் பிறந்த நதி கடலுக்குப் போவதேன்
மண்ணில் பிறந்த மலர் கூந்தலில் வாழ்வதேன்
எங்கோ பிறந்தவர்கள் இங்கே இணைவதேன்
பெண் : என்னவோ சொந்தமெல்லாம் கண்ணிலே தெரிவதேன்

ஆண் : கிழக்கில் ஓடும் நதி தெற்கேயும் பாயலாம்
கிளி உண்ணக் கனிந்த கனி அணிலுக்கும் போகலாம்
பெண் : நதிவழி போவது போல் மனவழி போகலாம்
ஆண் : நடக்கும் வழிகளெல்லாம் நல்வழி ஆகலாம்

பெண் : மறைத்தால் மறைவதில்லை மங்கையின் கனவுகளே
ஆண் : பிரித்தால் பிரிவதில்லை வளர்ந்திடும் உறவுகளே
ஆண் : அடித்தால் அழுவதில்லை ஆனந்த நினைவுகளே
பெண் : அன்பில் இணைந்தவர்கள் வார்த்தையில் ஊமைகளே

--- உள்ளங்கள் பலவிதம் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.