Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை உருவாக்குவதற்கான சித்தாந்தம் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை! : ஜனாதிபதி தெரிவிப்பு

Featured Replies

தமிழீழத்தை உருவாக்குவதற்கான சித்தாந்தம் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை! : ஜனாதிபதி தெரிவிப்பு!
 
 
தமிழீழத்தை உருவாக்குவதற்கான சித்தாந்தம் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை! : ஜனாதிபதி தெரிவிப்பு!
புலிப்பயங்கரவாதம் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டபோதும் இந்த நாட்டில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான அவர்களது சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போர் ரீதியில் தோல்வியடைந்த பயங்கரவாதிகளை சித்தாந்த ரீதியாக தோல்வியடையச் செய்யும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு புதிய அரசு பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார். 
 
இந்தப் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்போது, நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுவிழக்கச் செய்து இராணுவ வீரர்களை பலவீனமடையச் செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின் போது குறுகிய அரசியல் நோக்கங்கள் கொண்டவர்களின் குற்றச்சாட்டுக்களை அரசு வன்மையாக நிராகரிப்பதாகவும் கூறினார். 
 
அத்திடிய மிஹிந்து செத் மெதுறவில் நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத்தினர் தாம் பிறந்த நாட்டுக்காக மேற்கொண்ட சேவைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக 15 மில்லியன் ரூபா செலவில் அனைத்து வசதிகளுடன் இந்த நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
 
புதிய அரசு ஒருபோதும் தேசிய பாதுகாப்புக்காக தனது பொறுப்பைப் புறந்தள்ளுவதற்கோ, தாமதப்படுத்துவதற்கோ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனை முன்னரிலும் பார்க்க மிகவும் வலுவான முறையில் நடைமுறைப்படுத்துவது எமது நோக்கமாக உள்ளது. 
 
நாட்டுக்கு வெளியே உள்ள புலிப் பயங்கரவாதிகள் காணும் ஈழநாடு தொடர்பான கனவை உடைத்தெறிவதற்கு சர்வதேசத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களும் இன்று இலங்கைக்குக் கிடைத்துள்ளன.
 
தாய்நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுக்கும் நாட்டுக்கு வெளியில் இருந்து செயற்படும் சகலவிதமான செயற்பாடுகளையும் இல்லாதொழிப்பதற்கு புதிய அரசு பாடுபடுகின்றது. 
 
போரின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் சில சம்பவங்கள் காரணமாக இலங்கையின் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சந்தர்ப்பங்கள்இ தொழில்நுட்ப உதவிகள் ஆகியவற்றை பெரும்பாலான உலக நாடுகள் நிறுத்தியிருந்தன. 
 
இருப்பினும், நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அந்நாட்டு அரச தலைவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வாய்ப்புக்கள் மீண்டும் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்குக் கிடைத்துள்ளன. 
 
இந்நாட்டில் மீண்டும் போர் ஏற்படுவதைத் தவிர்த்து நாட்டில் நிலையான சமாதானத்தை நிலவச் செய்வதே அன்று போர்க்களத்தில் உயிரைத் தியாகம் செய்த, உடல் உறுப்புக்களை இழந்த அனைத்து இராணுவத்தினருக்காகவும் அரசினால் வழங்கப்படும் அதி உயர்ந்த பாராட்டாகும் என்று தெரிவித்தார். 
 
இதன்போது இராணுவத்தினருக்காக காணி உறுதிகள், பகுதியளவு பூர்த்தியடைந்த வீட்டு உரிமைப்பத்திரங்கள் ஆகியவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார். 
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் சிரேஸ்ட பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, நவீனன் said:
இராணுவத்தினர் தாம் பிறந்த நாட்டுக்காக மேற்கொண்ட சேவைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக 15 மில்லியன் ரூபா செலவில் அனைத்து வசதிகளுடன் இந்த நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
 

மாற்றுகருத்து மாணிக்கங்களும் இங்கே நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

மாற்றுகருத்து மாணிக்கங்களும் இங்கே நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அவர்களும் நீச்சல் தடாகத்தில் நீந்தலாமாம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை உருவாக்குவதற்கான சித்தாந்தம் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை! : ஜனாதிபதி தெரிவிப்பு

 

உண்மை

அதற்கான காரணங்களை நீங்களும் இன்னும் நீக்கவில்லையே....

எனவே

தமிழருக்கு வேறுவழி...??????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.