Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவாலித் தாக்குதல் பெருந் தவறு; இராணுவம், அரசே முழுப் பொறுப்பு! சம்பவத்தை அறிந்தபோது கூச்சலிட்டு குமுறினேன் என்கிறார்: சந்திரிகா

Featured Replies

நவாலித் தாக்குதல் பெருந் தவறு; இராணுவம், அரசே முழுப் பொறுப்பு! சம்பவத்தை அறிந்தபோது கூச்சலிட்டு குமுறினேன் என்கிறார்: சந்திரிகா
 
நவாலித் தாக்குதல் பெருந் தவறு; இராணுவம், அரசே முழுப் பொறுப்பு! சம்பவத்தை அறிந்தபோது கூச்சலிட்டு குமுறினேன் என்கிறார்: சந்திரிகா
யாழ்.நவாலித் தேவாலயத்தின் மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதான செய்தியை அறிந்தபோது நான் இராணுவத்தினரையும் விமானப் படையினரையும் நோக்கி உரத்துக் கத்தினேன். இந்தத் தாக்குதல் ஒரு தவறு. எது எப்படியிருந்தாலும் அதற்கு விமானப் படையினரும் இராணுவத்தினரும் அரசும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
 
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். 
"உதயனு'க்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவருடனான நேர்காணல் வருமாறு,
கேள்வி:- 1995ஆம் ஆண்டு உங்களுடைய ஆட்சிக் காலத்தின்போது யாழ்.நவாலித் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்களுக்கு எப்படியாகப் பொறுப்புக்கூறப் போகின்றீர்கள்?
 
பதில்:- போரின்போது நவாலி மட்டுமன்றி மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றன. போரின்போது நிறைய விடயங்கள் இடம்பெறவதுண்டு. பதவியிலுள்ள அரசு அதற்கான பொறுப்புக்களை ஏற்கவேண்டும். இந்தச் சம்பவம் (நவாலி தேவாலயத்தின் மீதான விமானத் தாக்குதல்) தொடர்பாக அறியத்தந்த வேளையில் நான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டமொன்றில் பங்குபற்றிக்கொண்டிருந்தேன்.
 
உண்மையில் நான் இராணுவத்தரப்பினரையும் விமானப்படையினரையும் நோக்கி உரத்துக் கத்தினேன். இந்தத் தாக்குதல் ஒரு தவறு. சிறிய முகாம் போன்று விடுதலைப்புலிகள் ஒன்று கூடுமிடத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்துவதாக அவர்கள் எண்ணியிருந்தனர். அதற்கருகில் அப்படியயான்று இருந்தது. ஆனால், அவர்கள் தமது இலக்கைத் தவறவிட்டு தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர். அது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. என்ன இடம்பெற்றிருந்தாலும் விமானப்படை, இராணுவம்,அரசு அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
 
கேள்வி:- இந்த அரசுக்கு வாக்களித்தபோது தமிழ் மக்கள் பல எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவருதல், காணிகளை விடுவித்தல் போன்றவை முக்கிய இடம்பிடித்திருந்தன. அரசானது அடையாளத்திற்காக சிலரை விடுவித்துள்ளது. சில தொகுதிக் காணிகளை விடுவித்துள்ளது. ஆனால், காணிகளில் பெரும்பலானவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதுபற்றிய உங்கள் பதில் என்ன?
 
பதில்:- இது விடயத்தில் கடந்த திங்களன்று (18.01.2016) இராணுவத்தினருடன் நான் தொடர்புகொண்டு வினவியிருந்தேன். இராணுவத்தினர் வசம் யாழ்.குடாநாட்டில் 11,700 ஏக்கர் காணித்துண்டுகள் இருந்தன. இதில் 7000 ஏக்கர்களை இதுவரையில் அவர்கள் மீளவும்  உரியவர்களிடம் திரும்பக் கையளித்துள்ளனர். 
 
ஜனாதிபதியால்  அண்மையில் 700 ஏக்கர்கள் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமையே விடுவிக்கப்பட்ட கடைசித் தொகுதிக் காணிகளாகும். தற்போதைய நிலையில் இராணுவத்தினர் வசம் 4600 முதல் 4700 ஏக்கர் காணிகளே உள்ளன. இது பாதுகாப்புக் காரணங்களுக்கு அவசியமானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதிலும் 700 ஏக்கர் வரையான காணிகளை விடுவிக்க முடியும் எனத் தகவல் தரப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்கையில் 11,700 ஏக்கர்களில் இருந்து 4000 ஏக்கர்களாக இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் பரப்பளவு குறைந்துள்ளது.
 
கேள்வி:- கருணா, பிள்ளையான் போன்றவர்கள் வெளியில் இருக்கையில் இன்னமும் விடுவிக்கப்படாமலுள்ள அரசியல் கைதிகள் பற்றி?
 
பதில்:- கருணா பிள்ளையானை விடுவித்தது எமது தவறல்ல. மஹிந்தவே அதனைச் செய்திருந்தார். குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் சிலர் விடுவிக்கப்படவுள்ளனர். இதனைத் தவிர நூற்றுக்கும் குறைவான இன்னுமொரு தொகுதிக் கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  
 
சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படக்கூடியதாக இந்தக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அந்தக் கைதிகளை விடுவிக்க முடியும் என நான் நினைக்கவில்லை. எந்த வழக்குகளும் இல்லாமல் இருப்பவர்களை விடுவிக்கமுடியும். போர்க்குற்றங்களுக்காக இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் எனத் தமிழ் மக்களான நீங்கள் கேட்கின்றீர்கள். 
 
அப்படியானால் பிரபாகரனின் படையினர் ஏன் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படக்கூடாது எனக் கேட்கின்றேன். மக்களைக் கொன்றமைக்காகவே அவர்கள் சிறைகளில்  உள்ளனர். இராணுவத்தினரை மாத்திரம் ஏன் தண்டிக்கவேண்டும். ஏன் பிரபாகரனின் படையினர் தண்டிக்கப்படக்கூடாது.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:
சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படக்கூடியதாக இந்தக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அந்தக் கைதிகளை விடுவிக்க முடியும் என நான் நினைக்கவில்லை. எந்த வழக்குகளும் இல்லாமல் இருப்பவர்களை விடுவிக்கமுடியும். போர்க்குற்றங்களுக்காக இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் எனத் தமிழ் மக்களான நீங்கள் கேட்கின்றீர்கள். 
 
அப்படியானால் பிரபாகரனின் படையினர் ஏன் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படக்கூடாது எனக் கேட்கின்றேன். மக்களைக் கொன்றமைக்காகவே அவர்கள் சிறைகளில்  உள்ளனர். இராணுவத்தினரை மாத்திரம் ஏன் தண்டிக்கவேண்டும். ஏன் பிரபாகரனின் படையினர் தண்டிக்கப்படக்கூடாது.

அது தானே... மக்களைக் கொன்றதுக்காக பிரபாகரனை அவரின் படைகளை தண்டிக்க முடியும் என்றால்.. ஏன் மக்களைக் கொன்றதற்காக சிங்கள இராணுவம் மட்டும் தண்டிக்கப்படனும். அவர்களை வழிநடத்திய முப்படை தளபதிகள்.. அவர்களுக்கு கட்டளையிட்ட சனாதிபதிகள்... செயலாளர்கள்.. தண்டிக்கப்படவில்லை. இப்போ ஒப்புதல் வாக்குமூலமே அளிச்சிருக்கும் இந்தச் சந்திரிக்காவை யார் தண்டிப்பது....??????! பிரபாகரனுக்கும் அவரின் படைகளுக்கும் தண்டனையில் இவ்வளவு தீவிரமும் முன்னுரிமையும் இருக்க.. அவர்களை விட பல மடங்கு மக்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவத்திற்கும் சிங்கள சனாதிபதிகளுக்கும் ஏன் தண்டனையின் வேகம் இவ்வளவு மந்தமாக இருக்குது..?!

இந்தப் பதில் கேள்வியை சந்திரிக்காவிடம் ஏன் உதயன் தொடுக்கவில்லை...???! அப்படியே செம்மணி புதைகுழி விவகாரம்.. யாழ் பெரிய தேவாலயம் மீதான குண்டுத்தாக்குதல் (அதுவும் தவறு).. நாகர்கோவில் பள்ளிக்கூடம் மீதான குண்டுத்தாக்குதல்.. புதுக்குடியிருப்பு சந்தை மீதான தாக்குதல்.. பெரிய மடு அகதி முகாம் மீதான தாக்குதல்... ஏன் உதயன் மீதான விமானத்தாக்குதல்... இப்படி இவாட ஆட்சியில் நடந்ததை அடுக்கிக்கிட்டே போகலாம். இவை குறித்து இவாவின் பதில் என்ன.. அதற்கு இவாக்கு என்ன தண்டனை வழங்கப் போகினம்.. கடும் குற்றம் இழைச்ச இவா மட்டும் எப்படி பழியை இராணுவத்தில் போட்டிட்டு தப்பிக்கலாம்.. ஆனால் பிரபாகரன் மற்றும் அவரின் படையினர் மட்டும் தண்டனை அனுபவிக்கனுமோ...??! tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அழுதுகொண்டு கொஞ்சநாளைக்கு உள்ளுக்க இருக்க தயாரா சகோதரி...?

  • கருத்துக்கள உறவுகள்

போரில் எதிரிகள், ஒற்றர்கள், காட்டிக்கொடுப்போர் கொல்லப்படுவதை போர் நெறியும் ஏற்றுக்கொள்கிறது. பிரபாகரன்படை அந்த நியதிக்குள்ளே இயங்கியது. சிறீலங்கா இராணுவம் போர் நெறிகளை மீறித் தமிழன் என்ற ஒரே ஒரு காரணுத்துக்காக தமிழர்களை இனப்படுகொலை செய்தது. ஆகவே இராணுவம் அதற்குப் பொறுப்பான அரசினால் தண்டிக்கப்படவேண்டும். :rolleyes:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.