Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் கயிறுவிட்ட வைரமுத்து!

Featured Replies

 

vairamuththuதென்னித்திய சினிமாப் பாட்டெழுதும் வைரமுத்து இலங்கைக்குச் சென்று சினிமாக் கவிதைகள் பேசியமை இன்றைய தமிழ் ஊடகங்களின் தலைப்புச் செய்தி. ஈழத்துக் கவிதை மரபு ஒன்றிருந்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசும் போது கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்க கடந்து போக முடியாத காலம் ஒன்று உள்ளது. தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளை அழைத்து ஈழத்தில் கவிதை பாடவேண்டிய அவலத்துள் தமிழ்ப் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வட மாகாணசபயில் பல்தேசிய நிறுவனங்களின் ஊழலின் ஊற்றுமூலமாகத் திகழும் விவசாய அமைச்சர் ஐங்கரனேசனின் அழைப்பின் பேரில் இலங்கை சென்ற வைரமுத்து வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உழவர் பெருவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

2009 இல் வன்னிப் படுகொலைகள் நடந்துகொண்டிருந்த் வேளையில் கருணாநிதிக்காகக் கவிதைபாடிய வைரமுத்து, இன்று ஈழத் தமிழர்களின் துயரத்தை மாகா காவியமாக எழுதுவேன் என்று முல்லைத்தீவில் முழங்க அதனை தமிழ்த் தேசியக் கோமாளிகள் சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பெருமையாகப் பேசி மகிழ்கிறார்கள்.

இதற்கு நடுவே ஐங்கரனேசன் மற்றும் விக்னேஸ்வரன் அமைத்த போலி நிபுணர்குழுவால் அடிப்படை வசதிகளைக் கூட இழந்து வாழும் மக்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டமும் நடைபெற்றது. வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன், சட்டத்தரணி தேவராசா உட்படப் பலர் உரையாற்றிய இந்த நிகழ்வு அவலங்களுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தின் ஒரு பகுதி.

meetingவைரமுத்துவை அழைத்து இந்திய சினிமாக் கலாச்சாரத்தை இறக்குமதி செய்யும் ஐங்கரனேசன் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் மில்லியன்களை வாங்கிக்கொண்டு மக்களை மரணத்தின் விழிம்பிற்குள் தள்ளிய பேரழிவிற்கு எதிரான இந்த நிகழ்வில் சுன்னாகம் மக்களும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய பொறியியலாளர் சூரியசேகரம் போராட்டம் தொடரும் என்றார்.

“முகவரி அழிக்கப்பட்ட மக்களின் இரத்தத நாளங்களின் நஞ்சை உற்றிவிட்டு வன்னி மண்ணில் கவிதை அல்லவா பாடிக்கொண்டிருக்க்கிறார்கள்? கிடுகு இடுக்குகளைக் கடந்து அவர்கள் சந்தித்துக்கொள்ளும் போது கிறீசையும், ஒயிலைம் பற்றியா பேசிக்கொள்வார்கள்??”

எம்.ரி.டி வோக்கஸ் ஐக் காப்பாற்றுவதற்காக வட மாகாண சபை நடத்திய நாடகம் அம்பலப்படுத்தப்படுகிறது…

மக்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்கும் வட மாகாண சபை – மல்லாகம் நீதிமன்றத்தில் நிர்வாணமானது!

http://inioru.com/

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து முள்ளிவாய்க்காலை தடுக்கப்பாடுபடாத போது.. இன்னொரு பெரும்பாடுபட்டுக் கொண்டிருந்தது.

யார் யார் எல்லாம் கயிறு விடுறது என்று எழுதிற விவஸ்தையே இல்லாமல் போச்சு.

இதே இன்னொரு ஆட்கள்.. முள்ளிவாய்க்கால் நேரத்தில்... புலியா.. சிங்கள அரசா.. பிரபாவா.. மகிந்தவா... புலி வாந்தி பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்ததை மறந்து விட்டார்கள் போலும்.

அதை விட வைரமுத்து எவ்வளவோ மேல். இராமேஸ்வரத்தில் நேரடியாக ஈழத்தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி ஒரு எழுச்சி உரையும் ஆற்றி இருந்தார். இந்த இன்னொரு என்னத்தைப் புடுங்கினது...???! :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தேர்தல் வரப்போகுது.. திமுக அனுதாபியான வைரமுத்து இப்போது முல்லைத்தீவில் என்றால் யோசிக்க வேண்டி இருக்குது. இதை தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இசைக்கலைஞன் said:

தமிழகத்தில் தேர்தல் வரப்போகுது.. திமுக அனுதாபியான வைரமுத்து இப்போது முல்லைத்தீவில் என்றால் யோசிக்க வேண்டி இருக்குது. இதை தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக்கொள்வார்கள்.

தனிப்பட்ட வகையில் அவர் தி மு க அனுதாபியாக இருக்கலாம். ஆனாலும் அவர் தமிழீழ மண்ணில்.. தி மு க.. கருணாநிதி பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. மேலும் அவரை அழைத்தது நாம். சந்தேகப்படுவதும் நாமே...??! :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

தனிப்பட்ட வகையில் அவர் தி மு க அனுதாபியாக இருக்கலாம். ஆனாலும் அவர் தமிழீழ மண்ணில்.. தி மு க.. கருணாநிதி பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. மேலும் அவரை அழைத்தது நாம். சந்தேகப்படுவதும் நாமே...??! :rolleyes:tw_blush:

அரசியலில் இதெல்லாம் சாதாரணம். tw_blush: எமது பக்கம் இருந்து அழைப்புவிடத் தூண்டியிருப்பார்கள். தமிழகத்தில் திமுகவுக்கு இருக்கும் களங்கத்தை துடைக்கும் ஒரு முயற்சியாகவே இதனைப் பார்க்கிறேன்.

 

www.youtube.com/watch?v=uZoVWkhnB6k

Majaa Full Movie Comedy | Vadivelu Comedy Collection | Vikram | Asin | Pasupathy | Tamil Movies

 

16:41 நிமிடத்திலிருந்து பார்க்கவும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்தக் கொலைவெறி? இனியொருவுக்கு...! தவித்த வாய்க்குத் தண்ணிர் கொடுக்கத் தங்கக்கிண்ணத்தைத் தேடிவா என்று புத்திமதி... இது புத்திமதியல்ல, தமிழனுக்கு எதுவுமே கிடைத்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமெடுத்துத் தமிழினத்தில் புரையோடிப்போய் இருக்கும் ஒரு கூட்டத்தின் செயற்பாடுகள்போல் தெரிகிறது . :shocked: :(
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.