Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை

Featured Replies

இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை

 

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

160203165235_sri_lanka_flag_512x288_gett

 கொடியிலுள்ள சிங்கத்தின் படத்தை நீக்க கோரிக்கை

அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில் மன்னாரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெண்கள் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கென சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படக் கூடிய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த புதிய அரசியல் சாசனத்தில் வழிசெய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்ட்டுள்ளது.

160210163634_srilanka_meeting_512x288_bb

புதிய அரசியல் சாசனம் தொடர்பில், மன்னாரில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் கூட்டம்.

புதிய அரசியல் சாசனம் தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவிடம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க காத்திரமான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு, அப்படியான சம்பவங்கள் மீதான விசாரணைகளை விரைவாகவும் கௌரவமான முறையிலும் முன்னெடுக்க நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனவும் பெண்கள் அமைப்பினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் படம் ஒரு இனத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது என்றும்,அனைத்து இனங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் தேசியக் கொடியின் வடிவமைப்பு இருக்கவேண்டும் எனவும் மன்னாரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபெற்ற மகளிர் அமைப்பினர் வலியுறுத்தினர்.

அரசியலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, தேசியப் பட்டியல் நியமனத்தில் 30% இடங்கள் பெண்களுக்கு அளிக்கபப்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் அக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/02/160210_srilanka_flag?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, நவீனன் said:

இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை

 

நடக்கிற அலுவலை பாருங்கப்பா tw_lol:

போயும் போயும் சிங்களத்திடமா!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல ஐடியாதான், எதுக்கும் ஒரு ஆரம்பம் வேணும்....!

மகளிர் அணி முடியை வீசி இருக்கிறார்கள் , போனால் முடி வந்தால் மாற்றுக் கொடி....!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இது நல்ல ஐடியாதான், எதுக்கும் ஒரு ஆரம்பம் வேணும்....!

மகளிர் அணி முடியை வீசி இருக்கிறார்கள் , போனால் முடி வந்தால் மாற்றுக் கொடி....!

சிங்களம் எப்பயண்ணா ஒரு முடியோட போயிருக்கு..

அப்படியே அறுத்துக்கொண்டு தானே விட்டிருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

மகளிருக்கு வாழ்த்துகள்.சிங்களம் செய்யும் செய்யாது என்பதற்கப்பால் இதுபோன்ற கோரிக்கைகள் அவசியமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் கேட்க ஆசையாத்தான் இருக்கு...~ உண்மையிலேயே அறிவுபூர்வமான சிந்தனை.
பேயாம ...சிங்கம், புலி, கரடி குட்டி, நீர்ப்பாம்பு இப்டி எல்லா ஜந்துகளையும் போட்டு வைல்டு கிங்டொம் மாதிரி ஏதாவது பண்ணலாமா.
அதவச்சு நம்மாள் சுற்றுளா துறையில தனிறைவு அடஞ்சிருவான்.


சிங்கம் இருப்பது கம்பீரம் தான். ஒத்தக் கால்ல கத்தி புடிக்கிது தான் சிக்கலா இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.