Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் திரும்பி வருவார்!

Featured Replies

பிரபாகரன் திரும்பி வருவார்!
 
பிரபாகரன் திரும்பி வருவார்!
இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி,
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கருத்தை சமீபத்தில் கூறியிருந்தீர்கள், எந்த அடிப்படையில் அப்படி கூறுகிறீர்கள்?
 
எனக்கு வந்த சில நம்பகமான தகவல்களின்படி. 2009, மே 17ம் திகதிக்கு 2 தினங்கள் முன்பே அவர் இலங்கையை விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
 
அவர் உண்மையிலேயே மரணமடைந்திருந்தால், அவரது உடலை கொழும்பில் வைத்து, சர்வதேச ஊடகத்துக்கு ராஜபக்ச காட்டியிருப்பார். ஆனால், அப்படி செய்யாமல், கொல்லப்பட்டதாகச் சொன்ன மறுநாளே அவசர அவசரமாக காட்டிய உடலை எரித்தார்.
 
இதன் மூலம் அது பிரபாகரன் உடல் அல்ல என்பது உறுதியாகிறது. இலங்கை இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனுடையது இல்லை என்று எப்படி உறுதிபட கூறுகிறீர்கள்?
 
இலங்கை இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனுடையது தானா என்பதை உறுதி செய்ய, டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என சிலர் வலியுறுத்தினர். இலங்கையில், டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கான வசதி எதுவும் கிடையாது.
 
மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி ஆவார். அவர் இறந்து விட்டார் என்று இலங்கை அரசு கூறியபோது, அவர் மீதான வழக்கை முடித்து வைக்க, அவரது இறப்புச் சான்றிதழை இந்திய அரசு கேட்டது. ஆனால், இலங்கை அரசு அதனை கொடுக்கவில்லை. 
 
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றால், எப்போது வெளியே வருவார்?
 
ஒரு சுதந்திர போராட்டத்துக்கு கால நேரத்தை முடிவு செய்ய முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு தீவுக்குள் நடக்கிற பிரச்சினை அல்ல, அது சர்வதேசம் சம்பந்தபட்டது. சர்வதேச சூழலில் தமிழர்களுக்கு ஆதரவான மாற்றங்களை இப்போது உணர முடிகிறது. எனவே, தக்க நேரத்தில் பிரபாகரன் திரும்பி வருவார் என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

வருவார்? வரமாட்டார்? என்ற தலைப்பில் இனி பட்டிமன்றம் நடந்தாலும் நட‌க்கும்.....

3 hours ago, putthan said:

வருவார்? வரமாட்டார்? என்ற தலைப்பில் இனி பட்டிமன்றம் நடந்தாலும் நட‌க்கும்.....

வந்து  ...
என்ற தலைப்பிலும் நடக்கலாம்.

திரு நெடுமாறன்

தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதுதான் யதார்த்தம். நீங்கள் தொடர்ந்து அவர் உயிரோடு இருக்கிறார் எனப் பேசிவருவது மக்களை வீணாக குழப்புவதாக இருக்கும்.

தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு உங்களிடம் உள்ள ஒரே சாட்சியம் அவரது  மெய்பாதுகாப்பாளர்
உங்களுக்குச் சொன்ன செய்தியே.

மெய்பாதுகாப்பாளர் நாட்டை விட்டு வெளியேறி தமிழகம் வரும் போது தலைவர் உயிரோடு இருந்திருக்கலாம்.

அதன் பின் என்ன நடந்த்து என்பது மெய்பாதுகாப்பாளருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே வலுவான சாட்சியம் இல்லாமல் தொடர்ந்து ஒரு பிழையான தகவலை வைத்துக் கொண்டு தலைவர் உயிரோடு இருக்கிறார் எனப் பேசுவது 
புலிகளால் ஆபத்து, விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகிறார்கள் எனப் பேசி வரும் முன்னாள் சனாதிபதி இராஜபக்சாவுக்கு அவல் கொடுத்த மாதிரி இருக்கும். 

உயிரோடு இருந்தால் அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்விக்கு உங்களது பதில் என்ன?

 

நக்கீரன்  

உந்த மெய்பாதுகாப்பாளர் அஜித். இவர் பிரித்தானியா வந்தது கிட்டர் பிரித்தனியாவில் இருந்தபோது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.