Jump to content

""வைகறை மேகங்கள்""


Recommended Posts

தொடர்.. -47

எதிர் கவி எழுதியவர்...- வி..சரவணபவானந்தம்.

குஞ்சுக் குயில்கள்

கூவப் பழகுவதால்

குயில்களின் கீதமே

குமட்டு வதில்லை...

ஆனால்

இங்கு ஓர்

மூத்த குயிலே

முகாரி பாடுகிறது...!

ஜனநாயகக் கவிதைக்குச்

சமாதி கட்டி

அதன் மேலே

செய்யுளக்குச்

செங்கோலுடன்

ஆட்சி பீடமா...?

ஓட்டுரிமை- இங்கே

பொதுவுரிமை

சிலருக்கு

உபயோகிக்க தெரியவில்லை...

என்பதால்

உரிமையையே

மறுப்பது நியாயமா..?

தமிழ்

எட்டா தூரத்தில்

அலங்கார விளக்காய்

இருப்பதை விட

கைக்கு

எட்டும் தூரத்தில்

சமினி விளக்காய்

இருந்து விட்டு போகட்டும்...!

அதை அணைக்க

ஏன்

புயலாய் மாறுகிறீர்...??

தொடரும்...48

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதாய் தான் படித்த அழகான கவிதைகளை களத்திலே இணைத்தமைக்காய் வன்னி மைந்தனுக்கு நன்றி.

தொடரட்டும் உங்கள் பணி

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

எழில் வேந்தன்....

அக்கினிக் குழம்பைத்

துப்பி வந்த எரிமலை

சில நேரங்களில்

வெற்று மணலை

வெளியெற்றியதற்காக

எரிமலையை சந்தேகிக்கலாமா...???

பாட்டாளி வர்க்க குகனைத்

தன்

பங்காளியாகப்

பிரகடனம் செய்து கொண்ட

புதுக் கவிதை ராமனைக்

காட்டுக்கனுப்பி விட்டு

எந்தப் பாதுகையை

அரியனையில் அமர்த்த உத்தேசம்....?!

................................................................................

.

உயரத்தில் ஏறிவிட்டு

உதைப்பவர் நிறைப் பேர்

எங்கே ஏணிகளும் கூடவே

ஏறிவிடுமோ என்கிற பயத்தில்!

கைகளின் லாவகத்தைக்

கற்றக் கொண்ட உளிகள்

சுயமாகச் செதுக்க ஆரம்பிக்கும்போது

சிற்பிக்கு என் சினம் வருகிறது...?

எங்கே தான்

தகர்க்கப் பட்டுவிடுவோமோ

என்றா....???

கே.பி.ரசூல்.

தொடரும்.....!

Link to comment
Share on other sites

ஏணியை வைத்து ஏற முடியும்! ஏணியும் ஏறமுடியுமா?

உளியால் நாம் செதுக்க முடியும்! உளியே தானாய் செதுக்குமா?

சடப்பொருட்களிற்கு எப்போது உயிர் வந்தது? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.