Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த தீடீர் திருமலை விஐயம்.

Featured Replies

சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த தீடீர் திருமலை விஐயம்.

சிறீலங்கா ஜனாதிபதி தீடீர் விஐயமாக திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இன்று பகல் ஷிராந்தி ராஜபக்ஷ, தனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஸ, கடற்படைத்தளபதி வசந்த கர்ணணகொட ஆகியோருடன் திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்திற்கு சென்ற ஜனாதிபதிக்கு கடற்படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறீலங்கா கடற்படையில் இணைந்த ராஜபக்ஷவின் புதல்வல் யோசித்த ராஜபக்ஷ திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்தில் பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

www.pathivu.com

மகிந்தய் திருகோணமலை காம்ப்புக்கு போனது, மோன் கவனமாய் இருக்கிறானோ எண்டு பாக்கத்தானாம்.

mr_122706_02.jpg

mr_122706_03.jpg

mr_122706_04.jpg

mr_122706_01.jpg

mr_122706_05.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மோனோ அல்லது தானோ முதல் மேலே போறதெண்டு பாப்பம். அடேயப்பா,கப்பலிலேயெல்லோ சிங்கன்

வந்து பார்த்தவராம்.

அவர் பாதுகாப்புச்சபை கூட்டத்தையெல்லோ துண்டாக்கின தலைநகரத்தில் நடத்தியுள்ளார்.இவன் தமிழனையோ அல்லது உலக நாட்டையோ எமாற்றவில்லை.சிங்களவன்களை நல்லாத்தான் ஏமாற்றுகிறான்.

  • தொடங்கியவர்

(மேலதிக இணைப்பு)சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபையை திருமலையில் கூட்டிய மகிந்த

சிறிலங்காவின் வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் தேசிய பாதுகாப்புச் சபை திருகோணமலை கடற்படைத் தலைமையகத்தில் கூடியது.

இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நாட்டின் முப்படைகளின் தளபதியான அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமை வகித்தார்.

அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, விமாப்படைத்தளபதி றொசான் குணதிலக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சகப் போச்சாளர் கேகெலிய ரம்புக்வெல ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு விமானப்படையின் உலங்குவானூர்தி மூலம் நேற்று புதன்கிழமை திடீரெனச் சென்ற மகிந்தவை அண்மையில் அங்கு பயிற்சியை ஆரம்பித்துள்ள அவரது இரண்டாவது புதல்வர் ஜோசித ராஜபக்ச மரியாதை செலுத்தி வரவேற்றார்.

கடற்படையின் பாதுகாப்பு எற்பாடுகளை கேட்டறிந்த மகிந்த, தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தை அங்கு கூட்டினார். அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய மகிந்த, வழமைபோல நாடு பிளவுபட தான் அனுமதிக்கப்போவதில்லை எனக்கூறியதுடன் கடற்படையின் முக்கியத்துவம் குறித்து பேசியதுடன் அதனைக் கட்டியெழுப்ப சிங்கள பெற்றோர் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரச தலைவராக மகிந்த பதவியேற்ற பின்னர் திருகோணமலைக்கு சென்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

வடக்கு-கிழக்கு மாகாணங்களை மூன்று கூறுகளாக பிரிக்கும் திட்டத்தை மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மோகன் விஜயவிக்கிரம அறிவித்த பின்னர் மகிந்த திருகோணமலைக்கு சென்றிருக்கிறார்.

மகிந்தவின் வரவை முன்னிட்டு இராணுவத்தினரும், கடற்படையினரும் தமிழ் மக்கள் செறிவாக வாழும் நகரப் பகுதிகளில் வீடு வீடாக சோதனைகளை நடத்தினர்.

ஈருளிகள், கார்கள், உந்துருளிகள் மற்றும் பாரஊர்தி வாகனங்களை நகர வீதிகளில் நிறுத்துவதற்கு தடை விதித்திருந்தனர்.

பயணிகள் பேரூந்துகள் சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு படையினராலும் காவல்துறையினராலும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

www.puthinam.com

இது எங்குதான் போய் முடியப்போகுதோ தெரியவில்லை. எல்லாம் நன்மைக்கென்றே இருப்போம். :lol:

ஆடும் வரை ஆட்டம்!

ஆயிரத்தில் நாட்டம்!

கூடுகின்ற கூட்டம்!

கொள்ளி வரை வருமோ!

மோன் பத்திரமாய் இருக்கிறானா என்டு பார்க்க வந்தவைகளுக்கு மற்றவையின்ட மோன்களைப் பற்றியும் கவலையிருக்குமோ? படம் நல்லாத்தான் இருக்கு. கொள்ளிவரை வருவினம் அவையல்ல நம்மடையாக்கள். அவைதான் கொள்ளி வைக்க வேண்டிவரும் கடைசியா.

ஈழத்திலிருந்து

ஜானா

திருகோணமலைக்கு கடசியாக எப்போ ஒரு சாதாரண விஜயத்திற்கு சிறீலங்கா ஜநாதிபதி வந்திருக்கிறார்? அதுவும் வரலாற்றில் முதல் தடவையாக பாதுகாப்புச் சபையை கூட்டி முப்படைகளின் தளபதிகளுடன் 2.5 மணத்தியாலங்கள் தமிழீழத்தின் தலைநகரில் ஆலோசிக்கும் அளவிற்கு தமக்கு பலம் இருக்கு தைய்ரியம் இருக்கு அதற்கு தேவையான பாதுகாப்பை நிலை நாட்டி இருக்கிறோம் என்று சிங்கள மக்கள் தமிழ் மக்கள் புலிகள் இந்தியா நோர்வே இணைத் தலமை நாடுகள் என்று எல்லோருக்கும் ஒரு செய்தியை சொல்லப்பட்டிருக்கு.

இதே திருகோணமலைத் துறைமுகத்துக்கு ஆபத்து என்று தான் ரணிலின் ஆட்சி சந்திரிக்காவால் கலைக்கப்பட்டது ஆனால் எதுவும் யதார்த்தத்தில் செய்யப்படவில்லை மகிந்த ஆட்சி ஏறும் வரை. அதன் பின்னர் எறிகணை அடிச்சு மூதூரைப் பிடிச்சுக் காட்டினாலும் இப்ப நிலமை தலைகீழாக (தற்காலிகமாக என்று தமிழர்கள் திருப்த்திப்படுவதை விட வேறு வழியில்லை) மாறிவிட்டது என்று பொன்சேக்காவும் மகிந்தவும் எல்லாருக்கும் செயலில் காட்டியிருக்கிறார்கள். மேலும் மகிந்த கடற்படையின் முக்கியத்தை எடுத்துச் சொல்ல வில்லை செயலில் காட்டியிருக்கிறார். அதுவும் தன் மகனையும் இணைத்து திருகோணமலையிலேயோ பயிற்சியும் எடுக்க வைத்துள்ளார். மொத்தத்தில் சிங்களப்படைகளையும் மக்களையும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழரின் தாயகப் பிரதேசம் என்ற கோட்பாட்டை சிதைப்பதற்குரிய முக்கியத்தையும் ஏனைய வழிகளில் பெறுமதிவாய்ந்த கேந்திர முக்கியத்துவம் உள்ள பிரதேசங்களிற்கா ஓர்மத்தோடு போராடத் தயார்ப்படுத்துகிறார்கள். மணலாற்றில் நிலை கொண்டிருக்கும் சிங்களப்படைகளும் ஓர்மத்தோடு களமாடுபவர்கள் என்பது அனுபவ பாடம். அதாவது முழு வடக்கு கிழக்கு பிரதேசங்களையும் மீட்பதற்கோ புலிகளின் கோட்டையான வன்னி பெருநிலப்பரப்பை மீட்பதற்கோ ஏ9 திறப்பது போன்ற திட்டத்திற்கோ அல்ல மிகவும் தந்திரமாக அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ளத் தயார் ஆகிறார்கள் சிங்களத்தரப்பு.

அகல கால் வைக்க வேண்டிய தேவை சிங்களவர்களிற்கு இன்று இல்லை. ஏன் என்றால் அவர்களுடைய எதிரிகளின் அடுத்த கட்ட திட்டத்தை முறையடித்தால் அதுவே அவர்களுடைய வெற்றியாகும். அதாவது இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி தமிழர் தரப்பு முடி வெடுத்தபடி உறுதியாக முன்னேறி இறுதி இலட்சியத்தை அடைவது தமிழரின் திட்டமும் வெற்றியாகவும் இருக்கும். அதற்கு தமிழர்களின் அடுத்த கட்ட நகர்வாக இருக்கப் போவது தாயகப்பிரதேசங்களை முற்றாக விடுவித்து அங்கீகாரத்திற்கான சூழலை உருவாக்கி சுதந்திர பிரகடனத்தை அறிவிப்பது என்று பரவலாக பேசப்படுகிறது அறிவிக்கப்படுகிறது. இறுதிப் போர் அங்கீகாரம் போன்றவற்றிற்கான தயார்ப்படுத்தல்கள் என்பதும் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது என்றதை சிங்களவர்களோ அல்லது அவர்களிற்கு அறிவுரை கூறுபவர்களோ அறியாதது இல்லை. எனவே இந்த நகர்வை முறையடிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமான நிர்வாக நிலை நகர்வே வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை 3 ஆக துண்டாடியது. இதை இந்தியாவை அவமதிக்கும் செயலாக நாம் பிரச்சாரப்படுத்த முனைந்தாலும் இந்தியாவின் தமிழ்த் தேசிய எதிர்ப்பு கொள்கை வகுப்பாளர்கள் உள்ளார ஆறுதல்படுத்தும் விடையமாகத்தான் இது இருக்கும். வடக்கையும் கிழக்கையும் தற்காலிகமாக இணைத்த தீர்வை இந்திய - இலங்கை உடன்படிக்கையில் உள்ளடக்கும் பொழுது உடன்படிக்கையில் வரையறுக்கும் அதிகார பரவலாக்கத் தீர்விற்கு அப்பால் தமிழர்கள் முயற்சிக்க முடியாத படி பலவீனமாக்கபடுவார்கள் என்ற திட்டத்தோடுதான் இருந்தார்கள். அதாவது இந்திய - இலங்கை உடன்படிக்கை மூலம் தமிழருக்கு வழங்கப்படும் தீர்வை தளமாக வைத்து தமிழ்த் தேசியம் மேலும் பலமடைய முடியாத படியும் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்தின் மேலதிக எழுச்சிற்கும் வழர்ச்சிக்கும் தேவை இல்லை என்ற புறச்சூழல் உருவாக்கப்படும் என்ற பாதுகாப்பு கவச பின்னணியில் தான் அந்த தீர்வை நிறைவேற்ற முயற்சிக்கப்பட்டது. ஆனால் இன்று நிலமை அவ்வாறு இல்லை என்பதால் தமிழ்த் தேசியத்தாலும் தமிழீழத்தின் தோற்றத்திலும் அச்சம் கொள்ளும் சந்தேகப்படும் இந்திய கொள்கைவகுப்பாளர்களிற்கு மகிந்த அரசின் தற்போதை நடத்தைகள் உடன்பாடான விடையமாகத்தான் இருக்கும்.

இதுவரை காலமும் புலிகளின் வெற்றி தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிறீலங்கா அரசு முழுமையாக ஆதிக்கம் செலுத்த முடியாது தமிழர் தாயகப் பிரதேசங்களில் சில இடங்களிலாவது சிறீலங்கா தனது இறமையை இழந்துவிட்டது என்று காட்டுவதன் மூலமாக இருந்தது. அதாவது 2001 ஆம் ஆண்டில் இருந்து தமிழர் தாயகப் பிரதேசத்தின் 70 வீதமான பகுதிகளை கட்டுபாட்டில் வைத்திருப்பதன் மூலம் அப்பிரதேசங்களில் யதார்த்தத்தில் சிறீலங்கா தனது இறமையை நிலை நாட்ட முடியவில்லை புலிகளிடம் இழந்துவிட்டது என்பதன் மூலம் புலிகள் சிறு கரந்தடி குழு அல்ல பயங்கரவாதிகள் அல்ல பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மக்கள் ஆதரவுத கொண்ட படைகள், நிர்வாக அலகுகள் கொண்ட கட்டமைப்பை கொண்டவர்கள் போன்றவை நிரூபிக்கப்பட்டது. இவ்வாறு சிறீலங்கா சர்வதேச மட்டத்தில் சந்திரிக்கா காலத்தில் முன்வைத்த நிலைப்பாட்டை முறையடித்ததன் மூலமாக தமிழர் தரப்பு வெற்றி பெற்றுக் கொண்டது. ஆனால் அடுத்த கட்ட நகர்வுகளிற்கு தமிழர் தரப்பு தான் சர்வதேச மட்டத்தில் தாயகம் தேசியம் சம்பந்தமாக தமது நிலைப்பாடுகளை முன்வைக்கிறார்கள். அதை முழுதாக யதார்த்தத்தில் நிலை நிறுத்தி நிறைவேற்றுவதில் தான் தமிழர் தரப்பினதும் புலிகளினதும் வெற்றி உள்ளது. அதன் ஒரு பகுதியை முறை அடித்தாலே சிங்களத் தரப்பின் வெற்றியாக மாற்றம் அடையும் அபாயம் உண்டு. அதாவது இந்த முறை சிங்களம் தாமாக நிலை நிறுத்த எதையும் முயலவில்லை தேவையும் இல்லை. இழுத்தடிக்கப்படும் தீர்வு அற்ற அரசியல் வெறுமையில் இருந்து மீளுவதற்கான போராட்டத்தின் இறுதிக்கட்டம் என்ற அர்த்தத்தில் முன்னெடுப்பு (initiatives) என்பது முற்று முழுக்க தமிழர் பக்கம் வந்துவிட்டது. தமிழர் தரப்பு நிலை நிறுத்த இருப்பதன் சில முக்கிய பகுதிகளை ஆவது முறையடிக்க தயாராகிறது சிங்கள தேசம். எனவே தமிழரின் வெற்றி என்பது இனி சந்திரிகா காலத்து கள நிலை போல் இராணுவ வலுச் சமநிலை மூலம் கிடைக்காது. தமிழர்கள் இராணுவ மேலாதிக்கத்தை பெற்றால் மட்டுமே நாம் முன்வைக்கும் நிலைப்பாடுகளை முற்று முழுதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் அதன் மூலம் இறுதி இலட்சியத்தை அடைந்து வெற்றி பெறலாம் அடுத்த கட்ட நகர்வுகளில். அதாவது சிறீலங்கா படைகளோடான இராணுவ வலுச்சம நிலை என்பது எமது தோல்விக்கு சமன். சிறீலாங்கா படைகளை விட மிகவும் தெளிவான கணிசமான அளவில் இராணுவ மேலாண்மையை பெற்றால் மட்டுமே நாம் தோல்வியை தவிர்க்கலாம். இதற்கு நாம் தயாரா?

எல்லோரையும் போல் பொறுத்திருந்து பாரும்.... :lol:

மஹிந்த புதல்வர் - கடற்படையில் இணைந்து - ஒரு 15 வருடமாவது இருக்குமா?

சும்மாதான் -கேட்டன்...

இல்ல- சீருடை ஏதோ - பிராந்திய கட்டளை தளபதி - ரேஞ்ஜ் ல இருக்கே- அதுதான்!!

தோள் பட்டையை கவனித்தா தெரியுது அவர் cadet ஆகத்தான் இருக்கிறார் என்று. எந்தப் படைகளிற்கும் சீருடையில் 2 வகையாவது குறைந்தபட்சம் இருக்கு. விசேட மற்றும் அதிகாரபூர்வ நிகழ்வுகளிற்குரியது (offical ceremonies) என்று ஒன்று. இது எப்பவும் எடுப்பாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அடுத்தது களத்திற்கும் எனை காலப்பகுதிக்கும். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சீருடைகள் இருக்கலாம் தேவைகளை பொறுத்து.

நீண்ட நாட்களுக்கு பின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய கள நிலை அரசியல், போரியல் சூழல் என்பன பற்றி மிகச் சுருக்கமாக ஆய்வுக்கண்ணோட்டம் ஒன்றை வாசித்த உணர்வு ஏற்பட்டது.

தோள் பட்டையை கவனித்தா தெரியுது அவர் cadet ஆகத்தான் இருக்கிறார் என்று. எந்தப் படைகளிற்கும் சீருடையில் 2 வகையாவது குறைந்தபட்சம் இருக்கு. விசேட மற்றும் அதிகாரபூர்வ நிகழ்வுகளிற்குரியது (offical ceremonies) என்று ஒன்று. இது எப்பவும் எடுப்பாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அடுத்தது களத்திற்கும் எனை காலப்பகுதிக்கும். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சீருடைகள் இருக்கலாம் தேவைகளை பொறுத்து.

அறிந்து கொள்ள நினைச்சதெல்லாம்.............புதிதாய

போரில் வெற்றி என்பது இராணுவ மேலாத்திக்கத்தால் தான் வரும்.ஆகவே நாம் தயாரா என்பதை நாம் போரிடத் தயாரா என்பதாகவே எடுக்க வேண்டும்.இனி அடுத்த கட்ட நகர்வுகள் எந்தத் தளத்திலும் அடுத்து உருவாக இருக்கும் கள நிலவரத்தில் இருந்து தான் என்பதே அரசியல் யதார்த்தம்.இங்கே எமக்கு இருக்கும் ஒரே வழியும் அது தான் என்பதைத் தான் தேசியத் தலைவரின் மாவீரர் உரையும் கூறியது.ஆகவே இனிப்பேச்சுவார்த்தை என்பது சாத்தியம் அற்றதாகி விடுகிறது.

இங்கே நாம் தயாரா என்றால், எமது தலமை தயாரா? ஆமாம் தலமை தயார்.

எமது மக்கள் தயாரா ,ஆம் எமது மக்கள் தயார்.

எமது போராளிகள் தயாரா, ஆமாம் அவர்களும் தயார்.

இங்கே இதற்கு தயாராக இல்லாதவர்கள் யார்?

புலத்தில் சர்வதேச அரசுகளுக்குக் காவடி எடுக்கும் நக்கித் தின்னிகள், காட்டிக் கொடுக்கும் சுய பிழைப்புக்கள்.போராட்டட்தின் பால் தெளிவற்ற ஊசலாட்டக்காரர்.தமது பாட்டைப் பாத்துக்கொண்டிருக்கும் புலத் தமிழர்கள் இவர்கள் தான் போராட இன்னும் தயாரில்லை.இவர்களை நோக்கியே இந்தக்கேள்வி கேட்கப் படுவதாகவே எனக்குப் படுகிறது.

சமாதானம் இதனை நல்ல அலசல் என்று கூறி உள்ளார்.குருக்ஸ் வந்து தான் இதற்கு மேலும் விளக்கம் அழிக்க வேணும்.

உண்மைதான் குரூக்ஸ்........ :rolleyes::rolleyes::blink:

ஆனால் குரூக்ஸ்.... நாம் குறைந்த எண்ணிக்கையில் இருந்து கொண்டு சிங்களவனை பயங்கரமா பயப்புடுத்தலாம்.. :lol::lol::lol:

அவ்வளவு பெரிசா ஆர்மியை கட்டினாலும்........ எப்படி பராமரிப்பது? :blink::(:(

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ மேலாண்மை என்பது எண்ணிக்கையில் தங்கி இல்லை. சிங்களப் படைகள் தங்களால் சமர்களிலோ, போரிலோ வெல்லமுடியாது என்று புறமுதுகிட்டு ஓடுவதில்தான் தங்கியுள்ளது. :lol:

எந்த இராணுவ மேலாண்மையும் பொருளாதாரப் பின் புலமில்லாது சாத்தியம் இல்லை.தமிழரின் பொருளாதரப் பின் புலம் இருப்பது புலத்தில்.இதுவே தற்போதைய நிலை.இதில் இருந்து மீள களத்தில் இந்தப்பொருளாதரப்பின் பின் புலம் கட்டி அமைக்கப்பட வேண்டும்.இதற்கு கேந்திர ரீதியான துறைமுகங்கள் விமான நிலையங்கள் மற்றும் நிறுவனக்கள் அவசியம் இவற்றை நிறுவ இராணுவ வலிமை வேண்டும்.இது தீடீரெனத் தோன்றி விடாது.

அனைவரின் ஒருங்கு பட்ட உழைப்பினாலையே சாத்தியப்படும்.இந்த உழைப்பிற்கு போராட்டத்தின் நோக்கம் பற்றிய தெளிவு வேண்டும்.அதனடைப்படையிலையே இந்த நம்பிக்கையைக் கட்டி எழுப்பலாம்.ஆனால் இங்கே சமாதானம் என்பவர் செய்வது இந்த ஒருங்கு படுதலைச் சிதறடித்து போராட்டப் பாதை பற்றிய சந்தேகங்களை விதைப்பது.இதன்மூலாம் புலத் தமிழர்களின் ஆதரவை திட்ட மிட்ட ரீதியில் இல்லாது செய்வது, இதன்மூலம் தலமைக்கு சமரசம் செய்யும் வண்ணம் நெருக்குதல்களைக் கொடுப்பது.

ஒரு கைத்துப்பாகியுடன் போராட்டம் தொடங்கிய காலத்தில் நாம் இராணுவ வலுச் சம நிலையை அடைவோம் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.ஆனால் அந்த நிலையை நாம் எவரது உதவியும் இன்றியே எட்டினோம்.அதே போல் இராணுவ மேலாதிக்கத்தையும் நாம் எமது ஒருங்கு பட்ட செயற்பாடுகளின் மூலம் ஏற்படுத்துவோம்.இதன் மூலம் தான் நாம் எமது தேசத்தை நிர்மாணிக்கமுடியும்.எமது இராணுவ பலத்தைத் தக்க வைக்கக் கூடிய பொருளாதாரத்தையும் இதன்மூலம் தான் கட்டி எழுப்ப முடியும்.அனைவரின் ஒருங்கு பட்ட உழைப்பும் ஆதரவுமே இன்றைய தேவை.அதனையே தலைவர் தனது மாவீரர் உரையிலும் புலத் தமிழர்களிடம் இருந்து கோரி இருந்தார்.

நான் எப்பொழுதும் விமர்சிப்பது புலம்பெயர்ந்தவர்களைத்தான். அவர்களை விமர்சிக்கும் அருகதையும் ஈடுபாடும் தகவல்களும் தான் என்னிடம் இருக்கு. இங்கு நாம் தயாரா என்று கேட்டது புலம்பெயர்ந்தவர்களை நோக்கியே.

குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

இருக்கிறவர்களை - குழப்பி விட்டதில்

இடையில் வந்த சிலர் - வெற்றிதான் பெற்றிட்டாங்க!

நடக்கட்டும் ராஜா- உங்க ராச்சியம்- நமக்கொரு கவலயில்லே! :lol:

பலம் ஒன்றே எங்கள் இருப்பை உறுதி செய்யும். பலமுள்ளவன் என்ன செய்தாலும்?

போரில் வெற்றி என்பது இராணுவ மேலாத்திக்கத்தால் தான் வரும்.ஆகவே நாம் தயாரா என்பதை நாம் போரிடத் தயாரா என்பதாகவே எடுக்க வேண்டும்.இனி அடுத்த கட்ட நகர்வுகள் எந்தத் தளத்திலும் அடுத்து உருவாக இருக்கும் கள நிலவரத்தில் இருந்து தான் என்பதே அரசியல் யதார்த்தம்.இங்கே எமக்கு இருக்கும் ஒரே வழியும் அது தான் என்பதைத் தான் தேசியத் தலைவரின் மாவீரர் உரையும் கூறியது.ஆகவே இனிப்பேச்சுவார்த்தை என்பது சாத்தியம் அற்றதாகி விடுகிறது.

இங்கே நாம் தயாரா என்றால், எமது தலமை தயாரா? ஆமாம் தலமை தயார்.

எமது மக்கள் தயாரா ,ஆம் எமது மக்கள் தயார்.

எமது போராளிகள் தயாரா, ஆமாம் அவர்களும் தயார்.

இங்கே இதற்கு தயாராக இல்லாதவர்கள் யார்?

புலத்தில் சர்வதேச அரசுகளுக்குக் காவடி எடுக்கும் நக்கித் தின்னிகள், காட்டிக் கொடுக்கும் சுய பிழைப்புக்கள்.போராட்டட்தின் பால் தெளிவற்ற ஊசலாட்டக்காரர்.தமது பாட்டைப் பாத்துக்கொண்டிருக்கும் புலத் தமிழர்கள் இவர்கள் தான் போராட இன்னும் தயாரில்லை.இவர்களை நோக்கியே இந்தக்கேள்வி கேட்கப் படுவதாகவே எனக்குப் படுகிறது.

.

absolutely correct. well done!

... மணலாற்றில் நிலை கொண்டிருக்கும் சிங்களப்படைகளும் ஓர்மத்தோடு களமாடுபவர்கள் என்பது அனுபவ பாடம். அதாவது முழு வடக்கு கிழக்கு பிரதேசங்களையும் மீட்பதற்கோ புலிகளின் கோட்டையான வன்னி பெருநிலப்பரப்பை மீட்பதற்கோ ஏ9 திறப்பது போன்ற திட்டத்திற்கோ அல்ல மிகவும் தந்திரமாக அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ளத் தயார் ஆகிறார்கள் சிங்களத்தரப்பு.

...

...தமிழர்கள் இராணுவ மேலாதிக்கத்தை பெற்றால் மட்டுமே நாம் முன்வைக்கும் நிலைப்பாடுகளை முற்று முழுதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் அதன் மூலம் இறுதி இலட்சியத்தை அடைந்து வெற்றி பெறலாம் அடுத்த கட்ட நகர்வுகளில். அதாவது சிறீலங்கா படைகளோடான இராணுவ வலுச்சம நிலை என்பது எமது தோல்விக்கு சமன். சிறீலாங்கா படைகளை விட மிகவும் தெளிவான கணிசமான அளவில் இராணுவ மேலாண்மையை பெற்றால் மட்டுமே நாம் தோல்வியை தவிர்க்கலாம். இதற்கு நாம் தயாரா?

புலிகள் தாக்கத் தொடங்கினால் எந்தச் சிங்களப் படையும் தலை தெறிக்க ஓடுவார்கள் என்பதுதான் அனுபவப் பாடம். அரசியல் இராணுவ ஆய்வாளராகிய உமக்கு, கடந்த 4 வருடங்களாக ஏன் புலிகள் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கவில்லை என்பதனையோ கனரக ஆயுதங்களையோ பாவிக்கவில்லை என்பதனையோ பற்றிச் சிந்திக்க முடியாமலுள்ளதோ?

இராணுவச் சமநிலை பற்றி தேசியத் தலைவரே மாவீரர் உரையில் குறிப்பிட்டுள்ளார். உமது கூற்றுப்படி இராணுவ வலுச்சம நிலையிலுள்ள புலிகள் இப்போது தோல்வி நிலையிலா உள்ளனர் ?

இராணுவ மேலாண்மையை பெற நாம் தயாரா என்று யாரைக் கேட்கிறீர் ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அர்ப்பணிப்புத்தான் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும்: கேணல் தீபன்

http://www.eelampage.com/?cn=30274

"யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வரும்போது பிரச்சினைகளுக்கு தீர்வு வரும். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து தயாராக வேண்டும்."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.